\id SNG - Biblica® Open Indian Tamil Contemporary Version \ide UTF-8 \h உன்னதப்பாட்டு \toc1 உன்னதப்பாட்டு \toc2 உன்னதப்பாட்டு \toc3 உன். \mt1 உன்னதப்பாட்டு \c 1 \p \v 1 சாலொமோனின் உன்னதப்பாட்டு. \b \sp காதலி\f + \fr 1:2 \fr*\ft முக்கிய ஆண் மற்றும் பெண் பேச்சாளர்கள் (தொடர்புடைய எபிரெய வடிவங்களின் பாலினத்தின் அடிப்படையில் முதன்மையாக அடையாளம் காணப்பட்டது) \ft*\fqa காதலன் \fqa*\ft மற்றும் \ft*\fqa காதலி \fqa*\ft என்ற முறையான தலைப்புகளால் குறிக்கப்படுகின்றன. மற்றவர்களின் வார்த்தைகள் \ft*\fqa தோழியர் என்று குறிக்கப்பட்டுள்ளன. \fqa*\ft சில நிகழ்வுகளில் பிரிவுகளும் அவைகளின் தலைப்புகளும் விவாதத்திற்குரியவை.\ft*\f* \q1 \v 2 அவர் தமது வாயின் முத்தங்களினால் என்னை முத்தமிடுவாராக; \q2 ஏனெனில் உமது அன்பு திராட்சை இரசத்தைப் பார்க்கிலும் அதிக இன்பமாயிருக்கிறது. \q1 \v 3 உமது வாசனைத் தைலங்களின் நறுமணம் இன்பம் தருகிறது; \q2 உமது பெயர் ஊற்றுண்ட வாசனைத் தைலம்போல் இருக்கிறது. \q2 கன்னியர் உம்மைக் காதலிப்பதில் ஆச்சரியம் இல்லையே! \q1 \v 4 என்னை உம்முடன் கூட்டிச்செல்லும்; நாம் விரைவாய் போய்விடுவோம். \q2 அரசன் தமது அறைக்குள் என்னைக் கொண்டுவரட்டும். \sp தோழியர் \q1 நாங்கள் உம்மில் மகிழ்ந்து களிப்படைகிறோம்; \q2 திராட்சை இரசத்தைப் பார்க்கிலும் உமது அன்பையே புகழ்வோம். \sp காதலி \q1 அவர்கள் உம்மீது காதல்கொள்வது எவ்வளவு சரியானது! \b \q1 \v 5 எருசலேமின் மங்கையரே, \q2 நான்\f + \fr 1:5 \fr*\ft அரேபியாவுடன் தொடர்புடைய இஸ்மயேல் பழங்குடியினரில் கேதரும் ஒருவர். இவர்கள் பொதுவாக கருப்பு கூடாரங்களில் வாழ்ந்தனர். இது இளம்பெண்ணின் கருப்பு தோலைக் குறிக்கிறது\ft*\f* கேதாரின் கூடாரங்களைப் போலவும், \q1 சாலொமோனின்\f + \fr 1:5 \fr*\fq சாலொமோனின் \fq*\ft அல்லது \ft*\fqa சல்மா.\fqa*\f* திரைகளைப்போலவும் \q2 கருப்பாய் இருந்தாலும் அழகாகவே இருக்கிறேன். \q1 \v 6 நான் கருப்பாய் இருக்கிறேன் என்று பார்க்கவேண்டாம்; \q2 வெயில் பட்டதினாலே நான் கருப்பாய் இருக்கிறேன். \q1 என் சகோதரர்கள்\f + \fr 1:6 \fr*\fq சகோதரர்கள் \fq*\ft அல்லது \ft*\fqa என் தாயின் மகன்கள்.\fqa*\f* என்மேல் கோபங்கொண்டு, \q2 திராட்சைத் தோட்டங்களைப் பராமரிக்க என்னை வைத்தார்கள்; \q2 அதினால் என் சொந்தத் திராட்சைத் தோட்டத்தை\f + \fr 1:6 \fr*\ft திராட்சைத் தோட்டம் இளம்பெண்ணைக் குறிக்கிறது. இந்த உருவகம் அவளது உடல் தோற்றத்தை கவனித்துக்கொள்வதற்கான அவளது திறனைக் குறிக்கிறது.\ft*\f* என்னால் கவனிக்க முடியாமல் போய்விட்டது. \q1 \v 7 என் காதலரே, உமது மந்தைகளை எங்கே மேய்க்கிறீர்? \q2 மத்தியான வேளையிலே உமது செம்மறியாடுகளை எங்கே இளைப்பாறப் பண்ணுகிறீர்? \q2 அதை எனக்குச் சொல்லும். \q1 முகத்திரையிட்ட பெண்போல்\f + \fr 1:7 \fr*\fq முகத்திரையிட்ட பெண்போல் \fq*\ft அல்லது \ft*\fqa அலைந்து திரிகிறவள் \fqa*\ft எனப்படும்.\ft*\f*, \q2 ஏன் நான் உமது தோழர்களின் மந்தைகளுக்கிடையில் இருக்கவேண்டும்? \sp தோழியர் \q1 \v 8 பெண்களுள் பேரழகியே, அதை நீ அறியாவிட்டால், \q2 செம்மறியாட்டின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து போய், \q1 மேய்ப்பர்களின் கூடாரங்களுக்கு அருகில் \q2 உன் வெள்ளாட்டுக் குட்டிகளை மேயவிடு. \sp காதலன் \q1 \v 9 என் அன்பே, நான் உன்னைப் \q2 பார்வோனின் தேர்களில் பூட்டப்பட்ட பெண் குதிரைக்கு ஒப்பிடுகிறேன். \q1 \v 10 காதணிகள் தொங்கும் உன் கன்னங்களும், \q2 நகைகள் அணிந்த உன் கழுத்தும் அழகானவை. \q1 \v 11 நாங்கள் உனக்கு வெள்ளிப் பதிக்கப்பட்ட \q2 தங்கக் காதணிகளைச் செய்வோம். \sp காதலி \q1 \v 12 அரசர் தமது பந்தியில்\f + \fr 1:12 \fr*\fq பந்தியில் \fq*\ft அல்லது \ft*\fqa படுக்கையில்.\fqa*\f* இருக்கையிலே \q2 எனது வாசனைத் தைலம் நறுமணம் வீசியது. \q1 \v 13 என் காதலர் எனக்கு என் மார்பகங்களுக்கிடையில் இருக்கும் \q2 வெள்ளைப்போள முடிச்சாய் இருக்கிறார். \q1 \v 14 என் காதலர் எனக்கு என்கேதி\f + \fr 1:14 \fr*\ft என்கேதி என்பது சவக்கடலின் தென்மேற்கு கரையில் ஒரு சோலை; இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் வளமான இடமாக அறியப்படுகிறது, ஏனெனில் இது ஒரு நீரூற்று மூலம் பாய்கிறது\ft*\f* ஊர் திராட்சைத் தோட்டங்களில் உள்ள, \q2 மருதாணி பூங்கொத்து போன்றவர். \sp காதலன் \q1 \v 15 என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்! \q2 ஆ, நீ எவ்வளவு அழகானவள்! \q2 உன் கண்கள் புறாக்கண்கள். \sp காதலி \q1 \v 16 என் காதலரே, நீர் எவ்வளவு அழகானவர்! \q2 ஆ, எவ்வளவு கவர்ச்சி! \q2 நமது படுக்கை பசுமையானது. \sp காதலன் \q1 \v 17 நம் வீட்டின் விட்டங்கள் கேதுரு மரத்தாலானவை, \q2 நம்முடைய மச்சு தேவதாரு மரத்தாலானவை. \c 2 \sp காதலி \q1 \v 1 நான்\f + \fr 2:1 \fr*\ft சாரோன் சமவெளி \ft*\ft என்பது \ft*\fqa பாலஸ்தீனத்தின் கடலோர சமவெளியில் உள்ள ஒரு பகுதி.\fqa*\f* சாரோனின் ரோஜாவும்\f + \fr 2:1 \fr*\fq ரோஜாவும் \fq*\ft அல்லது \ft*\fqa குங்குமப்பூவின் குடும்பத்தைச் சேர்ந்தது.\fqa*\f*, \q2 பள்ளத்தாக்குகளின் லில்லிப் பூவுமாய் இருக்கிறேன். \sp காதலன் \q1 \v 2 முட்களுக்கிடையில் லில்லிப் பூவைப்போல் \q2 கன்னியர் நடுவில் என் காதலியும் இருக்கிறாள். \sp காதலி \q1 \v 3 காட்டு மரங்கள் நடுவில் ஆப்பிள் மரத்தைப்போல், \q2 வாலிபர்களுக்குள் என் காதலரும் இருக்கிறார். \q1 அவருடைய நிழலில் நான் மகிழ்ந்திருந்தேன், \q2 அவருடைய கனி எனக்கு மிகவும் இனிமையாயிருந்தது. \q1 \v 4 அவர் என்னை விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்; \q2 என்மேல் அவருடைய அன்பு, கொடியாகப் பறந்தது. \q1 \v 5 உலர்ந்த திராட்சையினால் என்னைப் பெலப்படுத்துங்கள், \q2 ஆப்பிள் பழங்களினால் எனக்குப் புத்துயிர் கொடுங்கள், \q2 ஏனெனில் நான் காதலால் பலவீனமடைந்திருக்கிறேன். \q1 \v 6 அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது, \q2 அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது. \q1 \v 7 எருசலேமின் மங்கையரே, \q2 கலைமான்கள்மேலும் வெளியின் பெண்மான்கள்மேலும் ஆணை! \q1 காதலைத் தட்டி எழுப்பவேண்டாம், \q2 அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம். \b \q1 \v 8 கேளுங்கள்! இதோ, என் காதலரின் குரல் கேட்கிறது! \q2 இதோ, என் காதலர் வந்துவிட்டார்! \q1 மலைகளைத் தாண்டியும், \q2 குன்றுகள்மேல் தாவியும் வருகிறார். \q1 \v 9 என் காதலர் வெளிமானுக்கும், மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார். \q2 இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் பின்னே நிற்கிறார், \q1 ஜன்னல்களின் வழியாய்ப் பார்க்கிறார், \q2 கிராதியின் வழியாய் எட்டிப் பார்க்கிறார். \q1 \v 10 என் காதலர் என்னோடு பேசி, \q2 “என் அன்பே, எழுந்திரு, \q2 என் அழகே, என்னோடு வா. \q1 \v 11 இதோ பார், குளிர்க்காலம் முடிந்துவிட்டது; \q2 மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. \q1 \v 12 பூமியில் பூக்கள் பூக்கத் தொடங்கிவிட்டன; \q2 பறவைகள் பாடும் பருவம் வந்துவிட்டது, \q1 காட்டுப்புறா கூவும் \q2 சத்தமும் நம் நாட்டில் கேட்கிறது. \q1 \v 13 அத்திமரத்தில் பழங்கள் பழுத்திருக்கின்றன; \q2 திராட்சைக்கொடிகள் பூத்து நறுமணம் வீசுகின்றன. \q1 என் அன்பே, எழுந்து வா; \q2 என் அழகே, என்னோடு வா” என்று சொல்கிறார். \sp காதலன் \q1 \v 14 பாறைப் பிளவுகளில் மறைந்திருப்பவளே, \q2 கற்பாறை வெடிப்புகளில் தங்கும் என் புறாவே, \q1 உன் முகத்தை எனக்குக் காட்டு, \q2 உனது குரலை நான் கேட்கட்டும்; \q1 உன் குரல் இனிமையானது, \q2 உன் முகம் அழகானது. \q1 \v 15 நம்முடைய திராட்சைத் தோட்டங்கள் \q2 பூத்திருக்கின்றன, \q1 அவற்றைப் பாழாக்குகின்ற நரிகளையும் \q2 குள்ளநரிகளையும்\f + \fr 2:15 \fr*\fq குள்ளநரிகளையும் \fq*\ft என்பது \ft*\fqa இளம்பெண்ணின் பாசத்திற்காக போட்டியிடும் மற்ற ஆண்களைக் குறிக்கிறது.\fqa*\f* நமக்காகப் பிடியுங்கள். \sp காதலி \q1 \v 16 என் காதலர் என்னுடையவர், நான் அவருடையவள்; \q2 அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார். \q1 \v 17 என் காதலரே, பொழுது விடிவதற்குள், \q2 நிழல்கள் மறைவதற்குள் \q1 திரும்பி வாரும், \q2 குன்றுகளில் உள்ள மானைப்போலவும், \q1 மரைக்குட்டியைப் போலவும் \q2 திரும்பி வாரும். \b \c 3 \q1 \v 1 இரவு முழுவதும் என் படுக்கையில் இருந்தேன்; \q2 என் உயிர்க் காதலரை நான் தேடினேன். \q2 நான் அவரைத் தேடியும், அவரைக் காணவில்லை. \q1 \v 2 நான் இப்பொழுதே எழுந்திருப்பேன், பட்டணத்தின் வீதிகளிலும் \q2 பொது இடங்களிலும் போய்ப்பார்ப்பேன். \q1 அங்கே நான் என் உயிர்க் காதலரைத் தேடுவேன். \q2 அப்படியே நான் அவரைத் தேடினேன், ஆனாலும் அவரைக் காணவில்லை. \q1 \v 3 காவலர்கள் பட்டணத்தைச் சுற்றித் திரிகையில் \q2 என்னைக் கண்டார்கள். \q2 “என் உயிர்க் காதலரைக் கண்டீர்களா?” என்று நான் கேட்டேன். \q1 \v 4 அவர்களை நான் கடந்துசென்றதும் என் உயிர்க் காதலரை நான் கண்டேன். \q2 நான் அவரைப் பிடித்துக்கொண்டேன்; \q1 என் தாயின் வீட்டிற்கும், என்னைப் பெற்றவளின் அறைக்கும் \q2 கூட்டிக்கொண்டு போகும்வரை \q2 நான் அவரைப் போகவிடவேயில்லை. \q1 \v 5 எருசலேமின் மங்கையரே, \q2 கலைமான்கள்மேலும் வெளியின் பெண்மான்கள்மேலும் ஆணை! \q1 காதலைத் தட்டி எழுப்பவேண்டாம், \q2 அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம். \b \q1 \v 6 பாலைவனத்திலிருந்து புகைமண்டலத்தைப்போல \q2 வருகின்ற இவர் யார்? \q1 வெள்ளைப்போளம் மணக்க, சாம்பிராணி புகைய, \q2 வர்த்தகர்களின் வாசனைத் திரவியங்கள் யாவும் மணங்கமழ வருகின்ற இவர் யார்? \q1 \v 7 இதோ, சாலொமோனின் படுக்கை! \q2 இஸ்ரயேலின் மிகச்சிறந்த வீரர்களில் \q2 அறுபது வீரர்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள். \q1 \v 8 அவர்கள் எல்லோரும் வாளேந்திய வீரர்கள், \q2 அவர்கள் யுத்தத்தில் அனுபவமிக்கவர்கள், \q1 இரவின் பயங்கரத்தை எதிர்க்க \q2 தம் இடுப்பில் வாள் கொண்டுள்ளவர்கள். \q1 \v 9 சாலொமோன் அரசன் தனக்கென லெபனோனின் மரத்தினால் \q2 ஒரு பல்லக்கை செய்தார். \q1 \v 10 அதின் தூண்களை வெள்ளியினாலும், \q2 அதின் சாய்மனையைத் தங்கத்தினாலும், \q1 உட்காருமிடத்தை இரத்தாம்பர நிற மெத்தையினாலும் செய்ய வைத்தார்; \q2 அதின் உட்புறத்தை எருசலேமின் மங்கையர் \q1 தங்கள் அன்பால் அலங்கரித்திருந்தார்கள். \v 11 சீயோனின் மகள்களே, \q2 வெளியே வாருங்கள். \q1 சாலொமோன் அரசன் மகுடம் அணிந்திருப்பதைப் பாருங்கள், \q2 அவருடைய உள்ளம் மகிழ்ச்சியுற்ற நாளான \q1 அவருடைய திருமண நாளிலேயே \q2 அந்த மகுடத்தை அவருடைய தாயார் அவருக்குச் சூட்டினாள். \c 4 \sp காதலன் \q1 \v 1 என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்! \q2 ஆ, நீ எவ்வளவு அழகானவள்; \q2 முகத்திரையின் பின்னாலுள்ள உன் கண்கள் புறாக்கண்கள்; \q1 உனது தலைமுடி கீலேயாத் மலைச்சரிவில் இருந்து இறங்கிவரும் \q2 வெள்ளாட்டு மந்தையைப் போன்றது. \q1 \v 2 உன் பற்கள் முடி கத்தரிக்கப்பட்டு, \q2 குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு மந்தையைப்போல் இருக்கின்றன. \q1 அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை, \q2 அவற்றில் எதுவும் மலடாய் அல்ல. \q1 \v 3 உன் உதடுகள் செம்பட்டு நாடா போன்றவை; \q2 உன் வாய் அழகானது. \q1 உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள் \q2 பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை. \q1 \v 4 உன் கழுத்து தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது, \q2 அடுக்கடுக்காய் ஆயிரக்கணக்கான கேடயங்கள் தொங்குகின்றன; \q1 அவைகளெல்லாம் \q2 போர் வீரர்களுடைய ஆயுதங்களே. \q1 \v 5 உனது மார்பகங்கள் இரண்டு மான்குட்டிகள் போன்றவை, \q2 அவை லில்லிகள் நடுவில் மேயும் \q2 வெளிமானின் இரட்டைக்குட்டிகள் போன்றவை. \q1 \v 6 பொழுது சாய்வதற்குள், \q2 நிழல் மறைவதற்குள், \q1 நான் வெள்ளைப்போள மலைக்கும், \q2 சாம்பிராணிக் குன்றுக்கும் விரைந்து செல்வேன். \q1 \v 7 என் அன்பே, நீ முற்றிலும் அழகானவள்; \q2 உன்னில் குறைபாடு எதுவும் இல்லை. \b \q1 \v 8 லெபனோனில் இருந்து என்னுடன் வா, என் மணமகளே, \q2 லெபனோனில் இருந்து என்னுடன் வா. \q1 அமனா மலைச் சிகரத்திலிருந்தும், \q2 சேனீர் மற்றும் எர்மோன் மலை உச்சியிலிருந்தும், \q1 சிங்கக் குகைகளிலிருந்தும், \q2 சிறுத்தைப் புலிகள் தங்கும் இடமான மலைகளிலிருந்தும் இறங்கி வா. \q1 \v 9 என் சகோதரியே, என் மணமகளே, நீ என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்; \q2 உன் கண்களின் ஒரு பார்வையினாலே, \q1 உன் கழுத்து மாலையின் ஒரு மணியினாலே \q2 என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய். \q1 \v 10 என் சகோதரியே, என் மணமகளே, உன் அன்பு எவ்வளவு இனிமையானது! \q2 உன் அன்பு திராட்சை இரசத்திலும் இன்பமானது; \q1 உனது வாசனைத் தைலத்தின் நறுமணம் \q2 எல்லாவகை வாசனைத் தைலத்தைப் பார்க்கிலும் சிறந்தது! \q1 \v 11 என் மணமகளே, உன் உதடுகள் தேன்கூட்டைப்போல் இனிமையைப் பொழிகின்றன; \q2 உன் நாவின்கீழே பாலும் தேனும் இருக்கின்றன. \q1 உன் உடைகளின் நறுமணம் \q2 லெபனோனின் நறுமணம்போல் இருக்கின்றது. \q1 \v 12 என் சகோதரியே, என் மணமகளே, நீ சுற்றி அடைக்கப்பட்ட தோட்டம், \q2 நீ பூட்டப்பட்ட நீரூற்று, முத்திரையிடப்பட்ட கிணறு. \q1 \v 13 மாதுளைத் தோட்டத்தைப்போல தளிர்த்துள்ளாய்; \q2 அங்கே சிறந்த கனிகளுண்டு, \q2 மருதோன்றிச் செடிகளும் நளதச்செடிகளும் உண்டு. \q2 \v 14 அங்கே நளதம், குங்குமம், \q2 வசம்பு, இலவங்கம், \q2 எல்லாவித நறுமண மரங்களும், \q2 வெள்ளைப்போளமும் சந்தனமும், \q2 எல்லாச் சிறந்த நறுமணச்செடிகளும் நிறைந்துள்ளது. \q1 \v 15 நீ தோட்டத்திலுள்ள நீரூற்று, \q2 ஜீவத்தண்ணீரின் கிணறு, \q2 லெபனோனிலிருந்து ஓடிவரும் நீரோடை. \sp காதலி \q1 \v 16 வாடைக்காற்றே எழும்பு, \q2 தென்றல் காற்றே வா! \q1 வாசனை நிரம்பிப் பரவும்படி \q2 என் தோட்டத்தில் வீசு. \q1 என் காதலர் தமது தோட்டத்திற்குள் வந்து \q2 அதின் சிறந்த பழங்களைச் சுவைக்கட்டும். \c 5 \sp காதலன் \q1 \v 1 என் சகோதரியே, என் மணவாளியே, நான் என் தோட்டத்திற்கு வந்துள்ளேன்; \q2 என் நறுமணப் பொருட்களுடன் என் வெள்ளைப்போளத்தையும் சேர்த்துக்கொண்டேன். \q1 என்னுடைய தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்; \q2 நான் என்னுடைய திராட்சை இரசத்தையும் என் பாலையும் குடித்தேன். \sp தோழியர் \q1 நண்பர்களே, சாப்பிடுங்கள், குடியுங்கள்; \q2 அன்பர்களே, திருப்தியாய்க் குடியுங்கள். \sp காதலி \q1 \v 2 நான் உறங்கினேன், என் இருதயமோ விழித்திருந்தது. \q2 கேளுங்கள், என் காதலர் கதவைத் தட்டுகிறார்: \q1 “என் சகோதரியே, என் அன்பே, \q2 என் புறாவே, என் உத்தமியே, கதவைத்திற. \q1 என் தலை பனியால் நனைந்திருக்கிறது, \q2 என் தலைமுடி இரவின் தூறலினால் நனைந்திருக்கிறது” என்கிறார். \q1 \v 3 நான் என் உடைகளைக் கழற்றிவிட்டேன்; \q2 அவற்றைத் திரும்பவும் நான் உடுக்க வேண்டுமோ? \q1 நான் என் கால்களைக் கழுவிவிட்டேன்; \q2 அவற்றைத் திரும்பவும் நான் அழுக்காக்க வேண்டுமோ? \q1 \v 4 என் காதலர் கதவுத் துவாரத்தின் வழியாகத் தன் கையை நுழைத்தார்; \q2 என் உள்ளம் அவரைக்காண துடித்தது. \q1 \v 5 நான் என் காதலருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன், \q2 என் கையிலிருந்து வெள்ளைப்போளம் வடிந்தது; \q1 கதவின் பிடியில் என் கைவிரல்கள் \q2 வெள்ளைப்போளத்தைச் சிந்தின. \q1 \v 6 நான் என் காதலருக்காகக் கதவைத் திறந்தேன், \q2 ஆனால் என் காதலரோ அங்கு இல்லை; அவர் போய்விட்டார். \q2 அதினால் என் உள்ளம் ஏங்கியது. \q1 நான் அவரைத் தேடினேன்; அவரைக் காணவில்லை. \q2 நான் கூப்பிட்டேன்; அவர் பதில் கொடுக்கவில்லை. \q1 \v 7 காவற்காரர்கள் பட்டணத்தைச்சுற்றி வரும்போது, \q2 என்னைக் கண்டார்கள். \q1 அவர்கள் என்னை அடித்தனர், காயப்படுத்தினர், \q2 என் மேலுடையை எடுத்துக்கொண்டார்கள்; \q2 அவர்கள் அரணைக் காவல் செய்வோர்! \q1 \v 8 எருசலேம் மங்கையரே, \q2 நான் உங்களுக்கு ஆணையிட்டுச் சொல்கிறேன்; \q1 நீங்கள் என் காதலரைக் காண்பீர்களானால் என்னத்தைச் சொல்வீர்கள்? \q2 காதலினால் மயங்கியிருக்கிறேன் என்று சொல்லுங்கள். \sp தோழியர் \q1 \v 9 பெண்களுள் பேரழகியே, \q2 உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்? \q1 நீ இவ்விதம் ஆணையிட்டுச் சொல்லும் அளவுக்கு \q2 உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்? \sp காதலி \q1 \v 10 என் காதலர் பிரகாசமான\f + \fr 5:10 \fr*\fq பிரகாசமான \fq*\ft அல்லது \ft*\fqa வலிமை உடையவர், அவருக்கு நிகரானவர் எவருமில்லை.\fqa*\f* சிவந்த தோற்றமுள்ளவர், \q2 பத்தாயிரம் பேருக்குள் அதிசிறந்தவர். \q1 \v 11 அவருடைய தலை சுத்தமான தங்கமாயிருக்கிறது; \q2 தலைமயிரோ சுருள் சுருளாகவும் \q2 காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது. \q1 \v 12 அவருடைய கண்களோ \q2 பாலில் குளித்து, \q1 நீரூற்றருகே தங்கும் புறாக்களைப்போலவும், \q2 பதிக்கப்பட்டக் கற்களைப்போலவும் இருக்கின்றன. \q1 \v 13 அவர் கன்னங்கள் நறுமணச்செடிகள் முளைக்கும் \q2 பாத்திகள்போல் இருக்கின்றன. \q1 அவருடைய உதடுகள் வெள்ளைப்போளம் \q2 வடிகின்ற லில்லிப் பூக்களைப்போல் இருக்கின்றன. \q1 \v 14 அவருடைய புயங்களோ கோமேதகம் \q2 பதித்த தங்க வளையல்களைப்போல் இருக்கின்றன. \q1 அவருடைய வயிறு நீலக்கற்களினால் அலங்கரிக்கப்பட்ட, \q2 துலக்கிய தந்தம்போல் இருக்கின்றது. \q1 \v 15 அவருடைய கால்களோ சுத்தத்தங்கத்தால் \q2 அடித்தளமிடப்பட்ட பளிங்குத் தூண்களாய் இருக்கின்றன. \q1 அவருடைய தோற்றமோ லெபனோனைப்போலவும் \q2 அது சிறந்த கேதுரு மரங்களைப் போலவும் இருக்கிறது. \q1 \v 16 அவருடைய வாய் இனிமையானது; \q2 அவர் முற்றிலும் அழகானவர். \q1 எருசலேமின் மங்கையரே, \q2 இவரே என் காதலர், இவரே என் நண்பர். \c 6 \sp தோழியர் \q1 \v 1 பெண்களுள் பேரழகியே, \q2 உன் காதலர் எங்கே போய்விட்டார்? \q1 உன் காதலர் எப்பக்கம் திரும்பிப்போனார்? \q2 சொன்னால் உன்னோடு சேர்ந்து நாங்களும் அவரைத் தேடுவோம். \sp காதலி \q1 \v 2 என் காதலர் தோட்டங்களில் மேய்வதற்கும், \q2 லில்லிப் பூக்களைச் சேர்ப்பதற்கும், \q1 நறுமணச்செடிகளின் பாத்திகளுக்கும் \q2 போயிருக்கிறார். \q1 \v 3 நான் என் காதலருக்குரியவள், என் காதலர் என்னுடையவர்; \q2 அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார். \sp காதலன் \q1 \v 4 என் அன்பே, நீ திர்சா பட்டணத்தைப்போல அழகானவள், \q2 எருசலேமைப்போல வசீகரமானவள், \q2 கொடிகள் ஏந்தும் படைகளைப்போல கம்பீரமானவள். \q1 \v 5 உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு; \q2 அவை என்னை மயக்குகின்றன. \q1 உனது தலைமுடி கீலேயாத் மலைச்சரிவில் இருந்து இறங்கிவரும் \q2 வெள்ளாட்டு மந்தையைப் போன்றது. \q1 \v 6 உனது பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு \q2 மந்தையைப்போல் இருக்கின்றன. \q1 அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை, \q2 அவற்றில் எதுவும் மலடாய் அல்ல. \q1 \v 7 உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள் \q2 பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை. \q1 \v 8 அறுபது அரசிகளும், \q2 எண்பது வைப்பாட்டிகளும்; \q2 கணக்கிடமுடியாத கன்னிப்பெண்களும் இருக்கலாம். \q1 \v 9 ஆனால் என் புறாவோ, என் உத்தமியோ ஈடு இணையற்றவள், \q2 அவள் தன் தாய்க்கு ஒரே மகள், \q2 அவள் அவளைப் பெற்றவளுக்குச் செல்லப்பிள்ளை. \q1 கன்னிப்பெண்கள் அவளைக் கண்டு வாழ்த்தினார்கள்; \q2 அரசிகளும் வைப்பாட்டிகளும் அவளைப் புகழ்ந்தார்கள். \sp தோழியர் \q1 \v 10 சந்திரனைப்போல் அழகுள்ளவளாயும், சூரியனைப்போல் ஒளியுள்ளவளாயும், \q2 அணிவகுத்து நிற்கும் நட்சத்திரங்களைப்போல் கம்பீரமானவளாயும் \q2 அதிகாலையைப்போல் தோன்றுகிற இவள் யார்? \sp காதலன் \q1 \v 11 பள்ளத்தாக்கின் புதுத் தளிர்களைப் பார்க்கவும், \q2 திராட்சைக்கொடிகள் மொட்டு விட்டிருக்கின்றனவா என்று பார்க்கவும், \q1 மாதுளை மரங்கள் பூத்திருக்கின்றனவா என்று பார்க்கவும் \q2 நான் வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன். \q1 \v 12 நான் புரிந்துகொள்ளும் முன்னமே, \q2 என் ஆசை என்னை என் மக்களின் அரச தேர்களுக்கு\f + \fr 6:12 \fr*\fq அரச தேர்களுக்கு \fq*\ft அல்லது \ft*\fqa அம்மினாதாபின் தேர்களுக்கு\fqa*\f* அழைத்துச் சென்றது. \sp தோழியர் \q1 \v 13 திரும்பி வா, திரும்பி வா, சூலமித்தியே, \q2 நாங்கள் உன்னை நன்றாய்ப் பார்க்கும்படி திரும்பி வா, திரும்பி வா! \sp காதலன் \q1 இரண்டு அணிகளின் நடனங்களைப் பார்ப்பதுபோல், \q2 நீங்கள் ஏன் சூலமித்தியை உற்றுப் பார்க்கிறீர்கள்? \b \c 7 \q1 \v 1 இளவரசனின் மகளே, \q2 பாதணி அணிந்த உன் பாதங்கள் எவ்வளவு அழகானவை! \q1 உன் தொடையின் வளைவுகள், \q2 கலைஞனின் கைவேலைப்பாடான நகைகள்போல் இருக்கின்றன. \q1 \v 2 உனது தொப்புள் \q2 ஒருபோதும் திராட்சை இரசம் குறையாத வட்டமான கிண்ணம் போன்றது. \q1 உனது வயிறோ, \q2 லில்லியினால் சூழ்ந்துள்ள கோதுமைக் குவியல் போன்றது. \q1 \v 3 உனது மார்பகங்கள் இரண்டு மான்குட்டிகள் போன்றவை, \q2 வெளிமானின் இரட்டைக்குட்டிகள் போன்றவை. \q1 \v 4 உன் கழுத்து தந்தத்தினாலான கோபுரம் போன்றது. \q1 உன் கண்கள் பத்ரபீம் வாசல் அருகேயுள்ள \q2 எஸ்போனின் குளங்களைப் போன்றவை. \q1 உன் மூக்கு தமஸ்கு பட்டணத்தை நோக்கியுள்ள \q2 லெபனோனின் கோபுரம் போன்றது. \q1 \v 5 உன் தலை கர்மேல் மலைபோல் உனக்கு முடிசூட்டுகிறது. \q2 உனது தலைமுடி அரசர்களுக்கென அலங்கரிக்கப்பட்ட இரத்தாம்பர பின்னல்போல் இருக்கிறது; \q2 அந்தப் பின்னலின் அழகில் அரசன் மயங்குகிறான். \q1 \v 6 மகிழ்ச்சி உண்டாக்கும் என் அன்பே, \q2 நீ எவ்வளவு அழகானவள், எவ்வளவு இன்பமானவள்! \q1 \v 7 உன் உயரம் பனைமரத்தின் உயரம் போன்றது, \q2 உன் மார்பகங்கள் பழக்குலைகள் போன்றது. \q1 \v 8 “நான் அந்தப் பனைமரத்தில் ஏறுவேன்; \q2 அதின் பழத்தைப் பிடித்துக்கொள்வேன்” என்றேன். \q1 உனது மார்பகங்கள் திராட்சைக் குலைகள்போல் ஆவதாக, \q2 உன் சுவாசத்தின் வாசனை ஆப்பிள்போல் மணம் கமழ்வதாக, \q2 \v 9 உனது வாயின் முத்தங்கள் திராட்சை இரசம் போன்றது. \sp காதலி \q1 அது உதடுகளுக்கும் பற்களுக்கும் இடையில் மெதுவாய் இறங்கும் \q2 இனிமையான திராட்சை இரசம்போல் இருக்கிறது. \q1 \v 10 நான் என் காதலருக்கே உரியவள், \q2 அவரின் ஆசை என்மேலேயே உள்ளது. \q1 \v 11 அன்பரே வாரும், நாம் வயல்வெளிக்குப் போய், \q2 நம் இரவைக் கிராமங்களில்\f + \fr 7:11 \fr*\fq கிராமங்களில் \fq*\ft என்பது \ft*\fqa மருதோன்றிகள் \fqa*\ft அல்லது \ft*\fqa காட்டுப் புதர்கள் மத்தியில்\fqa*\f* கழிப்போம். \q1 \v 12 அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம்; \q2 அங்கே திராட்சை துளிர்த்திருக்கிறதா என்றும், \q1 அவைகளின் மொட்டுகள் விரிந்திருக்கின்றனவா என்றும், \q2 மாதளஞ்செடிகள் பூத்திருக்கிறதா என்றும் பார்ப்போம். \q2 அங்கே என் காதலைப் பொழிவேன். \q1 \v 13 தூதாயீம்\f + \fr 7:13 \fr*\ft அக்கால கலாச்சாரத்தில் இந்த மூலிகை பாலுணர்வைத் தூண்டுவதாகவும் கருவுறுதலை ஊக்குவிப்பதாகவும் நம்பப்பட்டது. \+xt ஆதி. 30:14-16\+xt*.\ft*\f* பழங்களின் வாசனை வீசுகின்றது, \q2 புதியதும் பழையதுமான \q1 எல்லாச் சிறந்த பழங்களும் நம் வாசலருகில் உள்ளது; \q2 என் அன்பரே, உமக்கென்றே நான் அவற்றைச் சேர்த்துவைத்தேன். \b \c 8 \q1 \v 1 நீர் என் தாயின் மார்பில் பால் குடித்த \q2 என் சகோதரனாய் இருந்திருந்தால் நலமாயிருந்திருக்குமே! \q1 உம்மை வெளியில் கண்டால் \q2 நான் உம்மை முத்தம் செய்திருப்பேன்; \q2 யாரும் என்னை இகழமாட்டார்கள். \q1 \v 2 நான் உம்மை என் தாயின் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போவேன், \q2 எனக்குக்\f + \fr 8:2 \fr*\ft அல்லது \ft*\fqa அங்கே நீர் எனக்கு போதிப்பாய்\fqa*\f* கற்றுக்கொடுத்தவளிடம் கொண்டு வந்திருப்பேன். \q2 குடிப்பதற்கு வாசனையுள்ள திராட்சை இரசத்தையும் \q1 என் மாதுளம் பழச்சாற்றையும் \q2 நான் உமக்குக் குடிக்கத் தருவேன். \q1 \v 3 அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது, \q2 அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது. \q1 \v 4 எருசலேமின் மங்கையரே, ஆணையிடுகிறேன்; \q2 காதலைத் தட்டி எழுப்பவேண்டாம், \q2 அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம். \sp தோழியர் \q1 \v 5 தன் காதலர்மேல் சாய்ந்துகொண்டு \q2 பாலைவனத்திலிருந்து வருகிற இவள் யார்? \sp காதலி \q1 ஆப்பிள் மரத்தின் கீழே நான் உம்மை எழுப்பினேன்; \q2 அங்குதான் உமது தாய் உம்மைப் பெற்றெடுத்தாள், \q2 பிரசவ வேதனைப்பட்ட அவள், அங்குதான் உம்மைப் பெற்றெடுத்தாள். \q1 \v 6 என்னை உமது உள்ளத்திலும் கையிலும் \q2 முத்திரையைப்போல் பதித்துக்கொள்ளும்; \q1 ஏனெனில் காதல் மரணத்தைப்போல வலிமைமிக்கது, \q1 அதின் வைராக்கியம் \q2 பாதாளத்தைப்போல கொடியது, \q1 அது கொழுந்து விட்டெரியும் நெருப்பு, \q2 அதின் ஜூவாலை பெரிதாயிருக்கிறது. \q1 \v 7 பெருவெள்ளமும் காதலை அணைக்காது; \q2 ஆறுகள் அதை அடித்துக்கொண்டு போகாது. \q1 காதலுக்குக் கைமாறாக, \q2 ஒருவன் தனது எல்லா செல்வங்களையும் கொடுத்தாலும், \q2 அது\f + \fr 8:7 \fr*\ft அல்லது \ft*\fqa அவன்\fqa*\f* முற்றிலும் அவமதிக்கப்படும். \sp தோழியர் \q1 \v 8 எங்களுக்கு ஒரு தங்கை இருக்கிறாள், \q2 அவள் மார்பகங்கள் இன்னும் வளர்ச்சியடையவில்லை. \q1 அவளைப் பெண்பார்க்க வரும்நாளில் \q2 நம் தங்கைக்காக நாம் என்ன செய்யலாம்? \q1 \v 9 அவள் ஒரு மதில்போல கன்னிகையாயிருந்தால், \q2 அவள்மேல் வெள்ளியினால் கோபுரம் அமைப்போம். \q1 ஆனால் அவள் ஊசலாடும் கதவைப்போல ஒழுக்கமற்றவளாயிருந்தால், \q2 கேதுரு மரப்பலகைப் பதித்து அவளை மூடி மறைப்போம். \sp காதலி \q1 \v 10 நான் ஒரு மதில்போல கன்னிகைதான், \q2 என் மார்பகங்கள் கோபுரங்கள் போலிருக்கின்றன. \q1 \f + \fr 8:10 \fr*\ft அல்லது \ft*\fqa நான் முழுமையாக முதிர்ச்சியடைந்தவள் \fqa*\ft அல்லது \ft*\fqa வளர்ந்தவள் என்று அவர் நினைப்பார்\fqa*\f*அவர் என்னைப் பார்க்கும்போது \q2 அவருடைய கண்களுக்கு மகிழ்ச்சி தருபவளாவேன். \q1 \v 11 பாகால் ஆமோனில் சாலொமோனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது; \q2 அவர் தனது திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்காரருக்குக் கொடுத்திருந்தார். \q1 ஒவ்வொருவரும் அதின் பழங்களுக்கு \q2 ஆயிரம் சேக்கல்\f + \fr 8:11 \fr*\ft ஒவ்வொரு சேக்கலும் ஒரு கிராமப்புற தொழிலாளிக்கு ஒரு நாள் ஊதியத்திற்கு சமம்\ft*\f* வெள்ளிக்காசைக் கொண்டுவர வேண்டியிருந்தது. \q1 \v 12 ஆனால் என் சொந்தத் திராட்சைத் தோட்டமோ, என் முன்னே இருக்கிறது; \q2 சாலொமோனே, அந்த ஆயிரம் சேக்கல் உமக்கும், \q2 அதின் பழங்களைப் பராமரிக்கிறவர்களுக்கு இருநூறு சேக்கலும் உரியதாகும். \sp காதலன் \q1 \v 13 தோழிகள் சூழ, \q2 தோட்டத்தில் வசிப்பவளே, \q2 உன் குரலை நான் கேட்கட்டும். \sp காதலி \q1 \v 14 என் அன்பரே, இங்கே வாரும், \q2 நறுமணச்செடிகள் நிறைந்த மலைகளின்மேல், \q1 வெளிமானைப் போலவும் \q2 மரைக்குட்டியைப் போலவும் வாரும்.