\id PSA - Biblica® Open Indian Tamil Contemporary Version \usfm 3.0 \ide UTF-8 \h சங்கீதம் \toc1 சங்கீதம் \toc2 சங்கீதம் \toc3 சங். \mt1 சங்கீதம் \c 1 \ms பகுதி i \mr சங்கீதம் 1–41 \cl சங்கீதம் 1 \q1 \v 1-2 தீயவர்களின் அறிவுரையின்படி நடவாமல், \q2 பாவிகளின் வழியில் நில்லாமல், \q2 பரிகாசக்காரருடன் உட்காராமல், \q1 யெகோவாவினுடைய சட்டத்திலே மனமகிழ்ச்சியாயிருந்து, \q2 இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிறவர் ஆசீர்வதிக்கபட்டவர். \q1 \v 3 அப்படிப்பட்டவர் நீரோடைகளின் அருகே நாட்டப்பட்டு, \q2 பருவகாலத்தில் தன் பழங்களைக் கொடுத்து, \q1 இலை உதிராதிருக்கும் மரத்தைப்போல இருக்கிறார். \q2 அவர் செய்வதெல்லாம் செழிக்கும். \b \q1 \v 4 தீயவர்களோ அப்படியல்ல, \q2 அவர்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படும் \q2 பதரைப்போல் இருக்கிறார்கள். \q1 \v 5 ஆகையால் நியாயத்தீர்ப்பின்போது தீயவர் தப்புவதில்லை, \q2 பாவிகளுக்கு நீதிமான்களின் கூட்டத்தில் இடமுமில்லை. \b \q1 \v 6 ஏனெனில் நீதிமான்களின் வழியை யெகோவா கண்காணிக்கிறார்; \q2 தீயவர்களின் வழியோ அழிவுக்குக் கொண்டுசெல்லும். \c 2 \cl சங்கீதம் 2 \q1 \v 1 நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன? \q2 மக்கள் கூட்டம் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்? \q1 \v 2 பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள், \q2 ஆளுநர்களும் யெகோவாவுக்கு விரோதமாகவும், \q2 அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடி சொன்னதாவது: \q1 \v 3 “அவர்கள் இட்ட சங்கிலிகளை உடைத்து, \q2 அவர்கள் கட்டிய கயிறுகளை அறுத்தெறிவோம்.” \b \q1 \v 4 பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்; \q2 யெகோவா அவர்களை இகழ்கிறார். \q1 \v 5 அவர் தமது கோபத்தில் அவர்களைக் கடிந்து, \q2 தமது கடுங்கோபத்தில் அவர்களுக்குத் திகிலுண்டாகச் சொல்வதாவது: \q1 \v 6 “நான் எனது அரசனை \q2 என் பரிசுத்த மலையாகிய சீயோனில்\f + \fr 2:6 \fr*\ft அல்லது \ft*\fqa எருசலேம் பட்டணம்\fqa*\f* அமர்த்தியிருக்கிறேன்.” \p \v 7 நான் யெகோவாவின் விதிமுறையைப் பிரசித்தப்படுத்துவேன்: \q1 அவர் என்னிடம் சொன்னதாவது, “நீர் என்னுடைய மகன்; \q2 இன்று நான் உமக்குத் தந்தையானேன். \q1 \v 8 என்னிடம் கேளும், \q2 நான் நாடுகளை உம்முடைய உரிமைச் சொத்தாக்குவேன், \q2 பூமியை அதின் கடைசிவரை உமது உடைமையாக்குவேன். \q1 \v 9 நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்; \q2 மண்பாண்டத்தை உடைப்பதுபோல், \q2 நீர் அவர்களை தூள்தூளாக நொறுக்கிப்போடுவீர்.” \b \q1 \v 10 ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்; \q2 பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள். \q1 \v 11 பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள், \q2 நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள். \q1 \v 12 இறைமகனை முத்தம் செய்யுங்கள், இல்லையென்றால் அவர் கோபங்கொள்வார்; \q2 நீங்களும் உங்கள் வழியில் அழிவீர்கள்; \q1 ஏனெனில் ஒரு நொடியில் அவருடைய கோபம் பற்றியெரியும். \q2 அவரிடத்தில் தஞ்சம் புகுந்த அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். \c 3 \cl சங்கீதம் 3 \d தாவீது தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடுகையில் பாடிய சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்! \q2 எத்தனைபேர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள். \q1 \v 2 அநேகர் என்னைக்குறித்து, \q2 “இறைவன் அவனை விடுவிக்கமாட்டார்” என்று சொல்கிறார்கள்.\f + \fr 3:2 \fr*\ft எபிரெய மொழிப் பிரதிகளில் \ft*\fqa சேலா \fqa*\ft என்ற வார்த்தை இங்கும் \+xt 4\+xt* மற்றும் \+xt 8\+xt* ஆவது வசனத்தின் பின் பகுதியிலும் வருகிறது.\ft*\f* \b \q1 \v 3 ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும், \q2 என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர். \q1 \v 4 நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்; \q2 அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்குப் பதில் கொடுக்கிறார். \b \q1 \v 5 நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்; \q2 யெகோவா என்னைத் தாங்குவதால், நான் திரும்பவும் விழித்தெழுகிறேன். \q1 \v 6 எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும், \q2 நான் பயப்படமாட்டேன். \b \q1 \v 7 யெகோவாவே, எழுந்தருளும்; \q2 என் இறைவனே, என்னை விடுவியும். \q1 என் எதிரிகள் எல்லோரையும் கன்னத்தில் அடித்து, \q2 கொடியவர்களின் பற்களை உடைத்துப்போடும். \b \q1 \v 8 யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது. \q2 உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக. \c 4 \cl சங்கீதம் 4 \d கம்பியிசைக் கருவிகளுடன் பாடப்பட்டு பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 நீதியுள்ள என் இறைவனே, \q2 நான் கூப்பிடும்போது எனக்குப் பதில் தாரும். \q1 என் துயரத்திலிருந்து எனக்கு ஆறுதலைக் கொடும்; \q2 என்மேல் இரக்கமாயிருந்து என் ஜெபத்தைக் கேளும். \b \q1 \v 2 மனிதர்களே, எவ்வளவு காலத்திற்கு என் மகிமையை வெட்கமாக மாற்றுவீர்கள்? \q2 எவ்வளவு காலத்திற்கு வெறுமையானவைகளை விரும்பி, பொய்யான தெய்வங்களைத் தேடுவீர்கள்? \q1 \v 3 யெகோவா பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; \q2 நான் யெகோவாவைக் கூப்பிடும்போது அவர் செவிகொடுப்பார். \b \q1 \v 4 நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்; \q2 நீங்கள் உங்கள் படுக்கையில் இருக்கும்போது, \q2 உங்கள் இருதயங்களை ஆராய்ந்து அமைதியாயிருங்கள். \q1 \v 5 நீதியான பலிகளைச் செலுத்தி, \q2 யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள். \b \q1 \v 6 “எங்களுக்கு நன்மையைக் காட்டுகிறவன் யார்?” என்று அநேகர் கேட்கிறார்கள்; \q2 யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளி எங்கள்மேல் பிரகாசிக்கட்டும். \q1 \v 7 தானியமும் புதுத் திராட்சை இரசமும் \q2 நிறைந்திருக்கிற காலத்தின் மகிழ்ச்சியைவிட \q2 அதிக மகிழ்ச்சியினால் நீர் என் இருதயத்தை நிரப்பியிருக்கிறீர். \b \q1 \v 8 நான் படுத்து மன அமைதியுடன் உறங்குவேன்; \q2 ஏனெனில் யெகோவாவே, \q2 நீர் மட்டுமே என்னைப் பாதுகாப்பாகக் குடியிருக்கச் செய்கிறீர். \c 5 \cl சங்கீதம் 5 \d புல்லாங்குழல்களுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், \q2 என் பெருமூச்சைக் கவனியும். \q1 \v 2 உதவிக்காய் கதறும் என் சத்தத்தைக் கேளும், \q2 என் அரசனே, என் இறைவனே, \q2 உம்மிடமே நான் வேண்டுகிறேன். \b \q1 \v 3 யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்; \q2 நான் என் வேண்டுதல்களைக் காலையில் உம்முன் வைத்து, \q2 எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன். \q1 \v 4 நீர் கொடுமையானதில் மகிழ்ச்சியடையும் இறைவன் அல்ல; \q2 தீயவர் உம்முடன் குடியிருக்க முடியாது. \q1 \v 5 திமிர் பிடித்தவர்கள் \q2 உமது சமுகத்தில் நிற்கமுடியாது; \q1 அநியாயம் செய்யும் எல்லோரையும் நீர் வெறுக்கிறீர். \q2 \v 6 பொய் சொல்கிறவர்களை நீர் அழிக்கிறீர்; \q1 இரத்த வெறியரையும் வஞ்சகமுள்ள மனிதரையும் \q2 யெகோவா அருவருக்கிறார். \q1 \v 7 ஆனால் நானோ, உமது மிகுந்த உடன்படிக்கையின் அன்பினாலே \q2 உமது வீட்டிற்கு வந்து, \q1 உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கி \q2 பயபக்தியுடன் வணங்குவேன். \b \q1 \v 8 யெகோவாவே, என் எதிராளிகளின் நிமித்தம் \q2 உம்முடைய நீதியில் என்னை வழிநடத்தும்; \q2 உமது வழியை எனக்கு முன்பாக நேராக்கும். \q1 \v 9 அவர்களுடைய வாயின் வார்த்தை ஒன்றைகூட நம்பமுடியாது; \q2 அவர்களுடைய இருதயம் அழிவினால் நிரம்பியிருக்கிறது; \q1 அவர்களின் தொண்டையோ திறந்திருக்கும் சவக்குழி; \q2 அவர்கள் தங்கள் நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள். \q1 \v 10 இறைவனே, அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளியும்; \q2 அவர்களுடைய சதித்திட்டங்களினாலேயே அவர்கள் விழுந்துபோகட்டும். \q1 அவர்களுடைய அநேக பாவங்களின் நிமித்தம், அவர்களைத் துரத்திவிடும்; \q2 ஏனெனில், அவர்கள் உமக்கு விரோதமாகக் கலகம் செய்திருக்கிறார்கள். \q1 \v 11 ஆனால் உம்மிடத்தில் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்ச்சியடையட்டும்; \q2 அவர்கள் சந்தோஷத்தினால் என்றென்றும் பாடட்டும்; \q1 உமது பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் களிப்படையும்படி, \q2 அவர்களை உமது பாதுகாப்பினால் மூடிக்கொள்ளும். \b \q1 \v 12 யெகோவாவே, நீர் நிச்சயமாகவே நீதிமான்களை ஆசீர்வதிக்கிறவர்; \q2 ஒரு கேடயத்தைப் போல, உமது தயவினால் நீர் அவர்களைச் சூழ்ந்துகொள்ளுவீர். \c 6 \cl சங்கீதம் 6 \d கம்பியிசைக் கருவிகளுடன் செமினீத் என்னும் இராகத்தில் வாசிக்க இசைக்குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம் \q1 \v 1 யெகோவாவே, உமது கோபத்தில் என்னைக் கண்டியாதேயும்; \q2 உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டியாதேயும்; \q1 \v 2 யெகோவாவே, நான் சோர்ந்துபோகிறேன், என்னில் இரக்கமாயிரும்; \q2 யெகோவாவே, என் எலும்புகள் வேதனைக்குள்ளாகி இருக்கின்றன, என்னைக் குணமாக்கும். \q1 \v 3 என் ஆத்துமா துயரத்துக்குள்ளாகி இருக்கிறது. \q2 எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, இது எவ்வளவு காலத்திற்கு? \b \q1 \v 4 யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி என்னை விடுவியும்; \q2 உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என்னைக் காப்பாற்றும். \q1 \v 5 இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை. \q2 பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்? \b \q1 \v 6 நான் கலங்கியே இளைத்துப் போனேன். \b \q1 இரவு முழுவதும் என் அழுகையின் வெள்ளத்தால் நான் என் படுக்கையை நிரப்பி, \q2 நான் அதைக் கண்ணீரால் நனைக்கிறேன். \q1 \v 7 என் கண்கள் துக்கத்தால் பெலவீனமடைகின்றன; \q2 என் எல்லா பகைவரின் நிமித்தம் அவைகள் மங்குகின்றன. \b \q1 \v 8 அக்கிரம செய்கைக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; \q2 ஏனெனில் யெகோவா என் அழுகையைக் கேட்டிருக்கிறார். \q1 \v 9 இரக்கத்திற்கான என் கதறலை யெகோவா கேட்டார்; \q2 யெகோவா என் மன்றாட்டை ஏற்றுக்கொள்வார். \q1 \v 10 என்னுடைய எல்லா எதிரிகளும் வெட்கப்பட்டு மனச்சோர்வு அடைவார்கள்; \q2 அவர்கள் பின்னிட்டுத் திரும்பி திடீரென வெட்கப்பட்டுப் போவார்கள். \c 7 \cl சங்கீதம் 7 \d பென்யமீனியனான கூஷின் வார்த்தையின் நிமித்தம் தாவீது யெகோவாவுக்கு பாடிய சிகாயோன் என்னும் சங்கீதம். \q1 \v 1 என் இறைவனாகிய யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைகிறேன்; \q2 என்னைத் துரத்துகின்ற அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றி விடுவியும். \q1 \v 2 இல்லாவிட்டால், அவர்கள் சிங்கத்தைப்போல் என்னைக் கிழித்து, \q2 என்னைத் தப்புவிக்க ஒருவருமின்றித் துண்டு துண்டாக்கிப் போடுவார்கள். \b \q1 \v 3 என் இறைவனாகிய யெகோவாவே, அவர்கள் கூறுகிறதை நான் செய்திருந்து \q2 என் கைகள் குற்றமுடையதாய் இருந்தால், \q1 \v 4 என்னுடன் சமாதானமாய் இருக்கிறவனுக்கு நான் தீமை செய்திருந்தால், \q2 அல்லது காரணமின்றி என் பகைவனைக் கொள்ளையிட்டிருந்தால், \q1 \v 5 அப்பொழுது என் எதிரி என்னைப் பின்தொடர்ந்து என்னைப் பிடிக்கட்டும்; \q2 அவன் என்னைத் தரையில் தள்ளி, \q2 உயிர்போக மிதித்து தூசியிலே என்னைக் கிடக்கப்பண்ணட்டும். \b \q1 \v 6 யெகோவாவே, உம்முடைய கோபத்தில் எழும்பும்; \q2 என் எதிரிகளினுடைய கடுங்கோபத்திற்கு விரோதமாக எழுந்திடும். \q2 என் இறைவனே, விழித்தெழும்; நீதியைக் கட்டளையிடும். \q1 \v 7 எல்லா நாட்டினரும் உம்மைச் சூழ ஒன்றுசேர்த்து \q2 நீர் உன்னதத்திலிருந்து அவர்களை ஆளுகை செய்யும். \q2 \v 8 யெகோவா மக்களை நியாயந்தீர்க்கட்டும். \q1 யெகோவாவே, என்னுடைய நீதிக்குத் தக்கதாய் என்னை நியாயந்தீரும்; \q2 மகா உன்னதமானவரே, என் உத்தமத்திற்கு ஏற்ப எனக்கு நியாயம் செய்யும். \q1 \v 9 சிந்தனைகளையும் இருதயங்களையும் ஆராய்ந்தறிகிற \q2 நீதியுள்ள இறைவனே, \q1 கொடியவர்களின் வன்செயலை ஒரு முடிவுக்குக் கொண்டுவாரும்; \q2 நீதியுள்ளவர்களைப் பாதுகாப்பாய் இருக்கச் செய்யும். \b \q1 \v 10 மகா உன்னதமான இறைவனே என் கேடயம்; \q2 இருதயத்தில் நேர்மையுள்ளவர்களை விடுவிக்கிறார். \q1 \v 11 இறைவன் நீதியுள்ள நீதிபதி; \q2 அவர் நாள்தோறும் தமது கடுங்கோபத்தை வெளிப்படுத்தும் இறைவன். \q1 \v 12 கொடியவன் மனம் மாறாவிட்டால், \q2 இறைவன் தமது வாளைக் கூராக்குவார்; \q2 அவர் தமது வில்லை வளைத்து நாணேற்றுவார். \q1 \v 13 அவர் தமது பயங்கர ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்; \q2 எரிகிற அம்புகளையும் ஆயத்தமாக்குகிறார். \b \q1 \v 14 தீமையினால் நிறைந்தவர்களோ \q2 பிரச்சனையைக் கர்ப்பந்தரித்து, வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறார்கள். \q1 \v 15 மற்றவர்கள் விழும்படி குழியைத் தோண்டுகிறவர்களோ, \q2 தாங்களே அதற்குள் விழுகிறார்கள். \q1 \v 16 அவர்கள் செய்யும் தீங்கு அவர்கள் மேலேயே திரும்புகிறது; \q2 அவர்கள் வன்செயல் அவர்கள் தலைமீதே விழுகிறது. \b \q1 \v 17 யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்; \q2 மகா உன்னதமான யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன். \c 8 \cl சங்கீதம் 8 \d கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, \q2 பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு புகழ் உடையதாய் இருக்கிறது! \b \q1 நீர் வானங்களுக்கு மேலாக \q2 உமது மகிமையை வைத்திருக்கிறீர். \q1 \v 2 உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க, \q2 உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின் \q1 உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக \q2 வல்லமையை உறுதிப்படுத்தினீர். \q1 \v 3 உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் \q2 அவற்றில் நீர் பதித்து வைத்த \q1 சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி \q2 நான் சிந்திக்கும்போது, \q1 \v 4 மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும், \q2 மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்?\f + \fr 8:4 \fr*\ft எபிரெய மொழியில் \ft*\fqa மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷக்குமாரனை நீர் கவனிப்பதற்கும் அவன் எம்மாத்திரம்?\fqa*\f* \b \q1 \v 5 நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து, \q2 அவர்களை\f + \fr 8:5 \fr*\fq அவர்களை \fq*\ft அல்லது \ft*\fqa அவனை\fqa*\f* மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர். \q1 \v 6 உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்; \q2 அனைத்தையும்: \q1 \v 7 எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் \q2 காட்டு மிருகங்களையும் \q1 \v 8 ஆகாயத்துப் பறவைகளையும் \q2 கடல் மீன்களையும் \q2 கடற்பரப்பில் நீந்தும் அனைத்தையும் அவர்களுடைய பாதங்களுக்குக்கீழ் வைத்தீர். \b \q1 \v 9 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, \q2 பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது! \c 9 \cl சங்கீதம் 9 \d “மகனின் மரணம்” என்ற இராகத்தில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் நான் உம்மைத் துதிப்பேன்; \q2 உமது அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். \q1 \v 2 நான் மகிழ்ந்து உம்மில் களிகூருவேன்; \q2 மகா உன்னதமானவரே, உமது பெயருக்குத் துதி பாடுவேன். \b \q1 \v 3 என் பகைவர் திரும்பி ஓடுகிறார்கள்; \q2 அவர்கள் உமக்கு முன்பாக இடறிவிழுந்து அழிந்துபோகிறார்கள். \q1 \v 4 நீர் எனக்கு ஆதரவாய் நியாயம் செய்து, \q2 நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறீர். \q1 \v 5 நீர் நாடுகளைக் கண்டித்து, கொடியவர்களை ஒழித்துவிட்டீர்; \q2 அவர்களுடைய பெயரை என்றென்றுமாய் அழித்து விட்டீர். \q1 \v 6 முடிவற்ற அழிவு என் பகைவர்களை மேற்கொண்டு, \q2 நீர் அவர்களுடைய பட்டணங்களை முற்றிலும் அழித்துப்போட்டீர்; \q2 அவை பற்றிய ஞாபகமும் ஒழிந்துபோயிற்று. \b \q1 \v 7 யெகோவாவோ என்றென்றும் அரசாளுகிறார்; \q2 நியாயந்தீர்க்கும்படியாக தமது சிங்காசனத்தை அவர் நிலைநிறுத்தியிருக்கிறார். \q1 \v 8 அவர் உலகத்தை நீதியாய் நியாயந்தீர்பார், \q2 எல்லா மக்களையும் அவர் நீதியாய் ஆளுகை செய்வார். \q1 \v 9 ஒடுக்கப்பட்டோருக்கு யெகோவா அடைக்கலமானவர்; \q2 இக்கட்டான வேளைகளில் அவர் அரணானவர். \q1 \v 10 உமது பெயரை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைப்பார்கள்; \q2 ஏனெனில் யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் ஒருபோதும் கைவிடுவதில்லை. \b \q1 \v 11 சீயோனில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் யெகோவாவைத் துதித்துப் பாடி, \q2 அவர் செய்தவற்றை நாடுகளுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். \q1 \v 12 ஏனெனில் இரத்தம் சிந்துகிறவர்களுக்கு அவர் பதிற்செய்ய மறப்பதில்லை; \q2 அவர் துன்புற்றவர்களின் கதறுதலை அசட்டை செய்வதில்லை. \b \q1 \v 13 யெகோவாவே, என் பகைவரால் எனக்குவரும் துன்பத்தைப் பாரும்! \q2 என்மேல் இரக்கங்கொண்டு, மரண வாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடும். \q1 \v 14 அப்பொழுது நான் சீயோனின் வாசல்களில் \q2 உமது துதிகளைப் பிரசித்தப்படுத்தி, \q2 அங்கே உமது இரட்சிப்பில் களிகூருவேன். \b \q1 \v 15 நாடுகள் தாங்கள் தோண்டிய குழிகளுக்குள்ளேயே விழுந்து விட்டார்கள்; \q2 அவர்கள் மறைத்துவைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டன. \q1 \v 16 யெகோவா தமது நீதியினால் அறியப்படுகிறார்; \q2 கொடியவர்கள் தங்கள் கைகளின் செயலினாலேயே சிக்கியிருக்கிறார்கள். \q1 \v 17 கொடியவர்களும் இறைவனை மறக்கும் எல்லா நாட்டினரும் \q2 பாதாளத்திற்கே திரும்புவார்கள். \q1 \v 18 ஆனால் இறைவன் ஏழைகளை ஒருபோதும் மறக்கமாட்டார்; \q2 துன்புறுத்தப்பட்டோரின் நம்பிக்கை ஒருபோதும் அழிவதில்லை. \b \q1 \v 19 யெகோவாவே, எழுந்தருளும்; மனிதன் வெற்றி கொள்ளாதிருக்கட்டும்; \q2 நாடுகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படட்டும். \q1 \v 20 யெகோவாவே, அவர்களுக்கு பயங்கரத்தை உண்டாக்கும்; \q2 தாங்கள் மனிதர் மட்டுமே என்பதை நாடுகள் அறிந்துகொள்ளட்டும். \c 10 \cl சங்கீதம் 10 \q1 \v 1 யெகோவாவே, நீர் ஏன் தூரத்தில் நிற்கிறீர்? \q2 துன்ப நேரங்களில் நீர் ஏன் மறைந்துகொள்கிறீர்? \b \q1 \v 2 கொடுமையானவன் பெருமையினால் பலவீனமானவர்களை வேட்டையாடுகிறான்; \q2 அவன் தீட்டுகிற சதித்திட்டங்களில் அவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். \q1 \v 3 அவன் தன் இருதயத்தின் பேராசைகளைக் குறித்துப் பெருமைகொள்கிறான்; \q2 அவன் பேராசைக்காரரை வாழ்த்தி யெகோவாவை நிந்திக்கிறான். \q1 \v 4 கொடுமையானவன் தன் பெருமையின் நிமித்தம் இறைவனைத் தேடுவதில்லை; \q2 அவனுடைய சிந்தனைகளிலெல்லாம் அவருக்கு இடமேயில்லை. \q1 \v 5 அவனுடைய வழிகள் எப்பொழுதுமே செழிப்பாயிருக்கின்றன; \q2 உமது நீதிநெறிகளை அவன் ஒதுக்கி வைத்துள்ளான்; \q2 தன் பகைவர் அனைவரையும் ஏளனம் செய்கிறான். \q1 \v 6 அவன் தனக்குள்ளே, “என்னை ஒன்றும் அசைக்கப்படுவதில்லை, \q2 எனக்குத் தலைமுறை தலைமுறைதோறும் கஷ்டம் வராது” என்று சொல்லிக்கொள்கிறான். \b \q1 \v 7 அவனுடைய வாய் சாபமும் பொய்யும் கொடுமையும் நிறைந்தது; \q2 அவனுடைய நாவின்கீழே பிரச்சனையும் தீமையும் இருக்கின்றன. \q1 \v 8 அவன் கிராமங்களின் அருகே பதுங்கிக் காத்திருக்கிறான்; \q2 பதுங்கியிருந்து குற்றமற்றவனைக் கொலைசெய்கிறான். \q1 திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே கண்ணோக்கமாயிருந்து, \q2 \v 9 பதுங்கியிருக்கும் சிங்கத்தைப்போல் காத்திருக்கிறான். \q1 அவன் ஆதரவற்றோரைப் பிடிப்பதற்காக காத்திருக்கிறான்; \q2 அவன் உதவியற்றோரைப் பிடித்து தன் வலையில் இழுத்துக்கொள்கிறான். \q1 \v 10 அவனிடம் அகப்பட்டவர்கள் நசுக்கப்பட்டு நிலைகுலைந்து போகிறார்கள்; \q2 அவனுடைய பெலத்தினால் அவர்கள் வீழ்ந்துபோகிறார்கள். \q1 \v 11 “இறைவன் கண்டுகொள்ளமாட்டார்; \q2 அவர் தமது முகத்தை மறைத்து, ஒருபோதும் அதைக் காண்பதில்லை” \q2 என்று கொடுமையானவன் தனக்குள் சொல்லிக்கொள்கிறான். \b \q1 \v 12 யெகோவாவே, எழுந்தருளும்; இறைவனே, உமது கரத்தை உயர்த்தும்; \q2 ஆதரவற்றோரை மறவாதிரும். \q1 \v 13 கொடுமையானவன் இறைவனை நிந்திப்பது ஏன்? \q2 “அவர் என்னிடம் கணக்குக் கேட்பதில்லை” என்று \q2 அவன் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வது ஏன்? \q1 \v 14 ஆனாலும் இறைவனே, நீரோ பாதிக்கப்பட்டோரின் பிரச்சனையைக் காண்கிறீர்; \q2 நீர் அவர்களின் துயரங்களைக் கவனித்து, \q2 அவர்களுக்கு உதவிசெய்யக் கருத்தாய் இருக்கிறீர். \q1 பாதிக்கப்பட்டோர்கள் தம்மை உம்மிடம் ஒப்படைக்கிறார்கள்; \q2 திக்கற்றவர்களுக்கு நீரே துணையாய் இருக்கிறீர். \q1 \v 15 கொடுமையுள்ள மனிதனின் கரங்களை முறியும். \q2 தீயவனுடைய கொடுமையைக் குறித்து அவனிடம் கணக்குக் கேளும். \q2 இல்லையெனில் அதைக் கண்டுபிடிக்க முடியாது. \b \q1 \v 16 யெகோவா என்றென்றைக்கும் அரசராயிருக்கிறார்; \q2 அவருடைய நாட்டிலிருந்து பிற மக்கள் அழிந்துபோவார்கள். \q1 \v 17 யெகோவாவே, நீர் துன்பப்பட்டோரின் வாஞ்சையைக் கேட்கிறீர்; \q2 அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கதறுதலைக் கேட்கிறார். \q1 \v 18 பூமிக்குரிய மனிதன் இனி ஒருபோதும் \q2 மற்றவர்களுக்கு திகிலூட்டுபவனாய் இராதபடி, \q2 நீர் திக்கற்றவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கிறீர். \c 11 \cl சங்கீதம் 11 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன். \q2 அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்: \q2 “ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ. \q1 \v 2 பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்; \q2 நேர்மையான இருதயம் உள்ளவர்மேல் \q1 இருளிலிருந்து எய்வதற்காக \q2 தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள். \q1 \v 3 அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது, \q2 நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?” \b \q1 \v 4 யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; \q2 யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். \q1 அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்; \q2 அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன. \q1 \v 5 யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்; \q2 வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ, \q2 அவர் மனதார வெறுக்கிறார். \q1 \v 6 அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும், \q2 எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்; \q2 வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும். \b \q1 \v 7 யெகோவா நீதியுள்ளவர், \q2 அவர் நீதியை நேசிக்கிறார்; \q2 நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள். \c 12 \cl சங்கீதம் 12 \d செமினீத் என்னும் இராகத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, உதவிசெய்யும், இறை பக்தியுள்ளவர் ஒருவருமே இல்லை; \q2 மனிதருள் உண்மையுள்ளவர்கள் குறைந்துவிட்டார்கள். \q1 \v 2 ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய்ப் பேசுகிறான்; \q2 அவர்களுடைய உதடுகளால் முகஸ்துதி பேசி \q2 இருதயத்தில் வஞ்சனை வைத்திருக்கிறார்கள். \b \q1 \v 3 முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும் \q2 பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக. \q1 \v 4 “எங்கள் நாவினாலேயே நாங்கள் வெற்றி கொள்வோம்; \q2 எங்கள் சொற்களே எங்களுக்குத் துணை; எங்களுக்குத் தலைவர் யார்?” \q2 என்று அவர்கள் சொல்லுகிறார்கள். \b \q1 \v 5 “ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். \q2 இதினால் நான் இப்பொழுது எழுந்து, \q2 அவர்களைத் துன்புறுத்துவோரிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார். \q1 \v 6 யெகோவாவின் வார்த்தைகள் தூய்மையானவை. \q2 அவை களிமண் உலையில் \q2 ஏழு தரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப்போல் இருக்கின்றன. \b \q1 \v 7 யெகோவாவே, நீர் ஏழைகளாகிய அவர்களைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வீர்; \q2 கொடியவர்களிடமிருந்து எங்களை என்றென்றும் காத்துக்கொள்வீர். \q1 \v 8 இழிவான செயல்கள் மனிதர் மத்தியில் பாராட்டப்படுவதினால் \q2 கொடியவர்கள் வீம்புடன் சுற்றித் திரிகிறார்கள். \c 13 \cl சங்கீதம் 13 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, எவ்வளவு காலத்திற்கு என்னை மறந்துவிடுவீர்? \q2 எப்பொழுதுமே மறந்துவிடுவீரோ? \q2 நீர் எவ்வளவு காலத்திற்கு என்னிடமிருந்து உமது முகத்தை மறைத்துக்கொள்வீர்? \q1 \v 2 எவ்வளவு காலத்திற்கு நான் என் எண்ணங்களுடன் போராட வேண்டும்? \q2 எவ்வளவு காலத்திற்கு அனுதினமும் என் இருதயத்தில் துக்கத்தோடு இருக்கவேண்டும்? \q2 என் பகைவன் எவ்வளவு காலத்திற்கு என்னை வெற்றிகொள்வான்? \b \q1 \v 3 என் இறைவனாகிய யெகோவாவே, என்னை நோக்கிப்பாரும்; எனக்குப் பதில் கொடும். \q2 என் கண்களுக்கு ஒளியைத் தாரும்; அல்லது நான் மரணத்தில் உறங்கி விடுவேன். \q1 \v 4 அப்பொழுது என் பகைவன், “நான் அவனை மேற்கொண்டேன்” என்பான்; \q2 நான் விழும்போது என் எதிரிகளும் மகிழ்வார்கள். \b \q1 \v 5 ஆனால் நானோ, உமது உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறேன்; \q2 என் இருதயம் உமது இரட்சிப்பில் மகிழ்கிறது. \q1 \v 6 யெகோவா எனக்கு நன்மை செய்திருக்கிறார், \q2 அதினால் நான் அவருக்குத் துதி பாடுவேன். \c 14 \cl சங்கீதம் 14 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 “இறைவன் இல்லை” என்று \q2 மூடன் தன் இருதயத்தில் சொல்கிறான். \q1 அவர்கள் சீர்கெட்டவர்கள், அவர்களுடைய செயல்கள் இழிவானவை; \q2 நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை. \b \q1 \v 2 யெகோவா பரலோகத்திலிருந்து \q2 மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், \q1 அவர்களில் விவேகமுள்ளவனாவது \q2 இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார். \q1 \v 3 எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; \q2 நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, \q2 ஒருவனாகிலும் இல்லை. \b \q1 \v 4 தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? \b \q1 மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; \q2 அவர்கள் யெகோவாவை வழிபடுவதுமில்லை. \q1 \v 5 அவர்கள் அங்கே பயத்தில் நடுங்குகிறார்கள்; \q2 ஏனெனில் இறைவன் நீதிமான்களின் கூட்டத்தில் இருக்கிறார். \q1 \v 6 தீமை செய்கிறவர்களே, நீங்கள் ஏழைகளின் திட்டங்களைக் குழப்புகிறீர்கள்; \q2 ஆனால் யெகோவாவோ ஏழைகளின் தஞ்சம். \b \q1 \v 7 சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! \q2 யெகோவா தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது \q2 யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்! \c 15 \cl சங்கீதம் 15 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழ்வான்? \q2 உமது பரிசுத்த மலையில் யார் குடியிருப்பான்? \b \q1 \v 2 குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள், \q2 நீதியானதைச் செய்கிறவர்கள், \q2 உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள்; \q1 \v 3 தம் நாவினால் அவதூறு பேசாதவர்கள், \q2 தம் தோழருக்கு அநியாயம் செய்யாதவர்கள், \q2 மற்றவர்களை நிந்திக்காதவர்கள்; \q1 \v 4 இழிவானவனை அவமதிப்பவர்கள், \q2 யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களைக் கனம்பண்ணுகிறவர்கள்; \q1 ஆணையிட்டதினால் துன்பம் நேரிட்டாலும் \q2 மனதை மாற்றாதவர்கள்; \q1 \v 5 ஏழைகளுக்குத் தம் பணத்தை வட்டியின்றிக் கடனாகக் கொடுப்பவர்கள், \q2 குற்றமற்றவர்களுக்கு விரோதமாக இலஞ்சம் வாங்காதவர்கள். \b \q1 இவ்வாறு வாழ்கிறவர்கள் \q2 ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை. \c 16 \cl சங்கீதம் 16 \d மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம். \q1 \v 1 இறைவனே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும், \q2 ஏனெனில் நான் உம்மில் தஞ்சம் அடைகிறேன். \b \q1 \v 2 நான் யெகோவாவிடம், “நீரே என் யெகோவா; \q2 உம்மைத்தவிர என்னிடம் ஒரு நன்மையும் இல்லை” என்று சொன்னேன். \q1 \v 3 நாட்டிலுள்ள பரிசுத்தவான்கள், “அவர்கள் சிறந்தவர்கள் \q2 என் மகிழ்ச்சி எல்லாம் அவர்களிலேயே இருக்கின்றன.” \q1 \v 4 பிற தெய்வங்களைத் தேடி ஓடுகிறவர்களுக்கு துயரங்கள் அதிகரிக்கும். \q2 இரத்தபான காணிக்கைகளை அந்த தெய்வங்களுக்கு நான் ஊற்றமாட்டேன்; \q2 அவைகளின் பெயர்களை என் உதடுகளினால் சொல்லவு மாட்டேன். \b \q1 \v 5 யெகோவாவே, நீரே எனது சுதந்திரம், ஆசீர்வாதத்தின் பாத்திரமுமாய் இருக்கிறீர்; \q2 எனது பங்கை பாதுகாப்பானதாய் ஆக்கியிருக்கிறீர். \q1 \v 6 எனக்கான எல்லைப் பகுதிகள் இன்பமான இடங்களில் அமைந்துள்ளன; \q2 நிச்சயமாகவே மகிழ்ச்சியான உரிமைச்சொத்து எனக்கு உண்டு. \q1 \v 7 எனக்கு ஆலோசனை தருகின்ற யெகோவாவை நான் துதிப்பேன்; \q2 இரவிலும் என் இருதயம் எனக்கு அறிவைப் புகட்டுகிறது. \q1 \v 8 யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். \q2 அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படமாட்டேன். \b \q1 \v 9 ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; \q2 என் உடலும் பாதுகாப்பாய் இளைப்பாறும். \q1 \v 10 ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்; \q2 உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர். \q1 \v 11 வாழ்வின் பாதையை நான் அறியப்பண்ணினீர்; \q2 உமது சமுகத்தில் என்னை ஆனந்தத்தாலும், \q2 உமது வலதுபக்கத்தில் என்னை நித்திய இன்பங்களினாலும் நிரப்புவீர். \c 17 \cl சங்கீதம் 17 \d தாவீதின் மன்றாட்டு \q1 \v 1 யெகோவாவே, என்னுடைய நீதியான விண்ணப்பத்தைக் கேளும், \q2 என் கதறுதலுக்குச் செவிகொடும்; \q1 வஞ்சகமில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும் \q2 என் மன்றாட்டைக் கேளும். \q1 \v 2 நான் குற்றமற்றவனென்ற தீர்ப்பு உம்மிடத்திலிருந்து வரட்டும்; \q2 உமது கண்கள் நேர்மையானதைக் காணட்டும். \b \q1 \v 3 நீர் என் உள்ளத்தை ஆராய்ந்து பார்த்தாலும், \q2 இரவில் என்னைச் சோதித்தாலும், \q1 நீர் எந்தத் தீங்கையும் கண்டுபிடிக்கமாட்டீர்; \q2 என் வாயினால் நான் பாவம் செய்யமாட்டேனென்று தீர்மானித்திருக்கிறேன். \q1 \v 4 மனிதர்கள் என்னைத் தீமைசெய்ய வற்புறுத்தினாலும், \q2 உமது உதடுகளின் கட்டளையினால் வன்முறையாளர்களின் வழிகளிலிருந்து, \q2 என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். \q1 \v 5 உம்முடைய வழிகளை, என் காலடிகள் உறுதியாய்ப் பற்றிக்கொண்டன; \q2 என்னுடைய பாதங்கள் தடுமாறவில்லை. \b \q1 \v 6 இறைவனே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; \q2 ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுக்கிறவர். \q2 எனக்குச் செவிகொடுத்து என் மன்றாட்டைக் கேளும். \q1 \v 7 உம்மிடம் தஞ்சம் அடைந்தோரை, \q2 அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தினால் காப்பாற்றுகிறவரே, \q2 உமது உடன்படிக்கையின் அன்பின் அதிசயத்தைக் காண்பியும். \q1 \v 8 உமது கண்ணின் மணியைப்போல் என்னைக் காத்துக்கொள்ளும்; \q2 உமது சிறகுகளின் நிழலின்கீழ், \q1 \v 9 என்னைத் தாக்கும் கொடியவர்களிடமிருந்தும் \q2 என்னைச் சூழ்ந்துகொள்ளும் என் பகைவரிடமிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும். \b \q1 \v 10 அவர்கள் தங்கள் உணர்வற்ற இருதயங்களை கடினமாக்குகிறார்கள், \q2 அவர்களின் வாய்கள் பெருமையுடன் பேசுகின்றன. \q1 \v 11 அவர்கள் என்னைப் பின்தொடர்ந்திருக்கிறார்கள், \q2 இப்பொழுது என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். \q1 என்னைத் தரையில் விழத்தள்ளுவதற்காக \q2 அவர்களுடைய கண்கள் விழிப்பாயிருக்கின்றன. \q1 \v 12 அவர்கள் பசியால் துடித்து இரையைத் தேடுகிற சிங்கத்தைப் போலவும் \q2 மறைவில் பதுங்கியிருக்கிற பெரும் சிங்கத்தைப் போலவும் இருக்கிறார்கள். \b \q1 \v 13 யெகோவாவே, எழுந்தருளும், நீர் அவர்களை எதிர்த்து வீழ்த்திவிடும்; \q2 கொடியவர்களிடமிருந்து உமது வாளினால் என்னைத் தப்புவியும். \q1 \v 14 யெகோவாவே, இப்படிப்பட்டவர்களிடமிருந்தும், \q2 இம்மையிலேயே தங்கள் வெகுமதியைப் பெறுகிற இவ்வுலக மனிதரிடமிருந்தும், \q2 உமது கரத்தினால் என்னைக் காப்பாற்றும்; \q1 நீர் கொடியவர்களுக்கென்று வைத்திருக்கிறவைகளால் அவர்களுடைய வயிற்றை நிரப்பும்; \q2 அவர்களுடைய பிள்ளைகள் நிறைவாய்ப் பெற்றுக்கொள்ளட்டும்; \q2 மீதியானதை அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லட்டும். \b \q1 \v 15 நானோ, நீதியில் உமது முகத்தைக் காண்பேன்; \q2 நான் விழித்தெழும்போது உம்மைக் கண்டு திருப்தியடைவேன். \c 18 \cl சங்கீதம் 18 \d யெகோவாவின் பணியாளன் தாவீதின் சங்கீதம். யெகோவா அவனை எல்லாப் பகைவரின் கைகளிலிருந்தும் சவுலின் கையிலிருந்தும் விடுவித்தபோது இப்பாடலின் வார்த்தைகளை அவன் யெகோவாவுக்குப் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது. அவன் சொன்னதாவது: \q1 \v 1 யெகோவாவே, என் பெலனே, நான் உம்மை நேசிக்கிறேன். \b \q1 \v 2 யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்; \q2 என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை, \q2 என் கேடயம், என் மீட்பின் கொம்பு, என் அரணுமாயிருக்கிறார். \b \q1 \v 3 துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்; \q2 என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன். \q1 \v 4 மரணக் கயிறுகளால் நான் சிக்குண்டேன்; \q2 அழிவின் அலைகள் என்னை அமிழ்த்திவிட்டன. \q1 \v 5 பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; \q2 மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. \b \q1 \v 6 என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; \q2 என் இறைவனிடம் உதவிக்காகக் கதறினேன்; \q1 அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார்; \q2 என் அழுகுரல் அவருடைய செவிக்கு எட்டியது. \q1 \v 7 பூமி நடுங்கி அதிர்ந்து, \q2 மலைகளின் அஸ்திபாரங்கள் அசைந்தன; \q2 யெகோவா கோபமடைந்ததால் அவை நடுங்கின. \q1 \v 8 அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பிற்று; \q2 அவருடைய வாயிலிருந்து சுட்டெரிக்கும் நெருப்புப் புறப்பட்டது; \q2 நெருப்புத் தழல் அதிலிருந்து தெறித்தன. \q1 \v 9 அவர் வானங்களைப் பிரித்து, கீழே இறங்கினார்; \q2 கார்மேகங்கள் அவருடைய பாதங்களின்கீழ் இருந்தன. \q1 \v 10 அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்; \q2 அவர் காற்றின் சிறகுகளைக்கொண்டு பறந்தார். \q1 \v 11 அவர் இருளைத் தமது போர்வையாகவும், \q2 வானத்தின் இருண்ட மழைமேகங்களைத் தம்மைச் சுற்றிலும் கூடாரமாகவும் ஆக்கினார். \q1 \v 12 அவருடைய சமுகத்தின் பிரகாசத்திலிருந்து மேகங்கள் முன்னோக்கிச் சென்றன; \q2 அவற்றுடன் பனிக்கட்டி மழையும் மின்னல் கீற்றுக்களும் சென்றன. \q1 \v 13 யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்; \q2 மகா உன்னதமானவரின் குரல் எதிரொலித்தது. \q1 \v 14 அவர் தமது அம்புகளை எய்து பகைவரைச் சிதறடித்தார்; \q2 மின்னல் கீற்றுக்களை அனுப்பி, அவர்களை முறியடித்தார். \q1 \v 15 யெகோவாவே, உமது நாசியிலிருந்து வந்த மூச்சின் தாக்கத்தாலும் \q2 உமது கண்டிப்பினாலும் \q1 கடல்களின் அடிப்பரப்பு வெளிப்பட்டன; \q2 பூமியின் அஸ்திபாரங்கள் வெளியே தெரிந்தன. \b \q1 \v 16 யெகோவா என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்; \q2 ஆழமான தண்ணீரிலிருந்து என்னை வெளியே தூக்கினார். \q1 \v 17 அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும் \q2 என்னிலும் அதிக பலமான எதிரிகளிடமிருந்தும் என்னைத் தப்புவித்தார். \q1 \v 18 அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்; \q2 ஆனால் யெகோவா என் ஆதரவாயிருந்தார். \q1 \v 19 அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்; \q2 அவர் என்னில் பிரியமாய் இருந்தபடியால் என்னைத் தப்புவித்தார். \b \q1 \v 20 யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்; \q2 என் கைகளின் சுத்தத்திற்கு தக்கதாய், அவர் எனக்குப் பலனளித்திருக்கிறார். \q1 \v 21 ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்; \q2 என் இறைவனைவிட்டு விலகி நான் குற்றம் செய்யவில்லை. \q1 \v 22 அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன; \q2 அவருடைய விதிமுறைகளிலிருந்து நான் விலகவேயில்லை. \q1 \v 23 நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து, \q2 பாவத்திலிருந்து என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். \q1 \v 24 யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறும், \q2 அவருடைய பார்வையில் என் கைகளின் தூய்மைக்கு ஏற்றவாறும் \q2 எனக்குப் பலனளித்திருக்கிறார். \b \q1 \v 25 உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்; \q2 உத்தமர்களுக்கு நீர் உம்மை உத்தமராகவே காண்பிக்கிறீர். \q1 \v 26 தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்; \q2 ஆனால் கபடமுள்ளவர்களுக்கோ நீர் உம்மை விவேகமுள்ளவராய்க் காண்பிக்கிறீர். \q1 \v 27 நீர் தாழ்மையுள்ளோரைக் காப்பாற்றுகிறீர்; \q2 ஆனால் பெருமையான பார்வையுள்ளவர்களைத் தாழ்த்துகிறீர். \q1 \v 28 யெகோவாவே, நீர் என் விளக்கை எரிந்து கொண்டேயிருக்கச் செய்யும்; \q2 என் இறைவன் என் இருளை வெளிச்சமாக்குவார். \q1 \v 29 உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்; \q2 என் இறைவனுடன் ஒரு மதிலைத் தாண்டுவேன். \b \q1 \v 30 இறைவனுடைய வழி முழு நிறைவானது: \q2 யெகோவாவின் வார்த்தையோ குறைபாடற்றது; \q2 அவரிடத்தில் தஞ்சமடைவோர் அனைவருக்கும் அவர் கேடயமாயிருக்கிறார். \q1 \v 31 யெகோவாவைத்தவிர இறைவன் யார்? \q2 நமது இறைவனேயல்லாமல் வேறு கன்மலை யார்? \q1 \v 32 இறைவன் பெலத்தை எனக்கு அரைக்கச்சையாகக் கட்டி, \q2 என் வழியை குறைவற்றதாய் ஆக்குகிறார். \q1 \v 33 அவர் என் கால்களை மானின் கால்களைப் போல துரிதப்படுத்தி, \q2 உயர்ந்த இடங்களில் என்னை நிற்கப்பண்ணுகிறார். \q1 \v 34 யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்; \q2 என் கரங்களால் ஒரு வெண்கல வில்லையும் வளைக்க முடியும். \q1 \v 35 நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர், \q2 உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது; \q2 உமது உதவி என்னைப் பெரியவனாக்குகிறது. \q1 \v 36 என்னுடைய கால்கள் வழுக்காதபடி, \q2 நான் நடக்கும் பாதையை நீர் அகலமாக்குகிறீர். \b \q1 \v 37 நான் என் பகைவரை துரத்திச்சென்று, அவர்களைப் பிடித்தேன்; \q2 அவர்கள் முற்றிலும் அழியும்வரை, நான் திரும்பி வரவில்லை. \q1 \v 38 அவர்கள் எழுந்திருக்காதபடி, நான் அவர்களை முறியடித்தேன்; \q2 அவர்கள் என் காலடியில் விழுந்தார்கள். \q1 \v 39 யுத்தம் செய்வதற்கான வல்லமையை நீர் எனக்குத் தரிப்பித்தீர்; \q2 என் எதிரிகளை எனக்கு முன்பாகத் தாழ்த்தினீர். \q1 \v 40 நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்; \q2 நான் அவர்களை அழித்தேன். \q1 \v 41 அவர்கள் உதவிகேட்டு கூப்பிட்டார்கள், \q2 ஆனால் அவர்களைக் காப்பாற்ற ஒருவருமே இருக்கவில்லை; \q2 யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவரோ பதில் கொடுக்கவில்லை. \q1 \v 42 நான் அவர்களை காற்றில் கிளம்பும் தூசியைப்போல் நொறுக்கினேன்; \q2 நான் அவர்களை மிதித்து வீதியிலுள்ள சேற்றைப்போல் வெளியே வாரி எறிந்தேன். \q1 \v 43 நீர் மக்களின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவித்திருக்கிறீர்; \q2 நாடுகளுக்கு என்னைத் தலைவனாக வைத்திருக்கிறீர். \q1 நான் அறியாத மக்கள் எனக்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள். \q2 \v 44 வேறுநாட்டைச் சேர்ந்தவரும் எனக்கு முன்பாக அடங்கி ஒடுங்குகிறார்கள்; \q2 அவர்கள் என்னைக் குறித்துக் கேள்விப்பட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள். \q1 \v 45 அவர்கள் அனைவரும் மனந்தளர்ந்து, \q2 தங்கள் அரண்களிலிருந்து நடுங்கிக்கொண்டு வருகிறார்கள். \b \q1 \v 46 யெகோவா வாழ்கிறார்! என் கன்மலையானவருக்குத் துதி உண்டாவதாக! \q2 என் இரட்சகராகிய இறைவன் உயர்த்தப்படுவாராக! \q1 \v 47 எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவரே; \q2 நாடுகளை எனக்குக்கீழ் அடங்கியிருக்கச் செய்பவரும் அவரே. \q2 \v 48 என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுகிறவரும் அவரே. \q1 நீர் என் பகைவர்களுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்; \q2 என்னை என் வன்முறையாளர்களிடமிருந்து தப்புவித்தீர். \q1 \v 49 ஆகையால் யெகோவாவே, நாடுகளுக்கு மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; \q2 உமது பெயருக்குத் துதிகள் பாடுவேன். \b \q1 \v 50 யெகோவா தாம் ஏற்படுத்திய அரசனுக்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுக்கிறார்; \q2 அவர் தாம் அபிஷேகம் பண்ணின தாவீதுக்கும் \q2 அவனுடைய சந்ததிகளுக்கும் தமது உடன்படிக்கையின் அன்பை என்றைக்கும் காண்பிக்கிறார். \c 19 \cl சங்கீதம் 19 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 வானங்கள் இறைவனுடைய மகிமையை அறிவிக்கின்றன, \q2 ஆகாயங்கள் அவருடைய கரங்களின் செயலைப் பிரசித்தப்படுத்துகின்றன. \q1 \v 2 அவைகள் நாள்தோறும் பேசுகின்றன; \q2 இரவுதோறும் அறிவை வெளிப்படுத்துகின்றன. \q1 \v 3 அவைகள் சொற்கள் இல்லாமல் பேசுகின்றன; \q2 அங்கே அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. \q1 \v 4 ஆனாலும் அவைகளின் குரல் பூமியெங்கும் செல்கிறது; \q2 அவைகளின் வார்த்தைகள் உலகத்தின் கடைமுனை வரைக்கும் செல்கின்றன. \q1 யெகோவா வானங்களில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை அமைத்திருக்கிறார். \q2 \v 5 சூரியனோ, மணவறையிலிருந்து புறப்படும் ஒரு மணமகனைப் போலவும், \q2 பந்தயத்திற்காக ஓட மகிழ்ச்சியுடனிருக்கும் விளையாட்டு வீரனைப்போலவும் இருக்கிறது. \q1 \v 6 அது வானங்களின் ஒரு முனையில் உதித்து, \q2 மறுமுனைவரை சுற்றிவருகிறது. \q2 அதின் வெப்பத்திற்குத் ஒன்றும் தப்புவதில்லை. \b \q1 \v 7 யெகோவாவினுடைய சட்டம் முழு நிறைவானது, \q2 அது ஆத்துமாவுக்குப் புத்துயிரளிக்கிறது. \q1 யெகோவாவினுடைய நியமங்கள் நம்பகமானவை, \q2 அவை பேதையை ஞானியாக்குகின்றன. \q1 \v 8 யெகோவாவினுடைய ஒழுங்குவிதிகள் நியாயமானவை, \q2 அவை இருதயத்திற்கு மகிழ்வைக் கொடுக்கின்றன. \q1 யெகோவாவினுடைய கட்டளைகள் பிரகாசமானவை, \q2 அவை கண்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கின்றன. \q1 \v 9 யெகோவாவுக்குரிய பயபக்தி தூய்மையானது, \q2 அது என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 யெகோவாவினுடைய விதிமுறைகள் நிலையானவை, \q2 அவை முற்றிலும் நீதியானவை. \b \q1 \v 10 அவை தங்கத்தைவிட, \q2 சுத்தத் தங்கத்தைவிட மிகுந்த விலையுயர்ந்தவை. \q1 அவை தேனைப் பார்க்கிலும், \q2 கூட்டிலிருந்து வடியும் தெளித்தேனைப் பார்க்கிலும் இனிமையானவை. \q1 \v 11 அவைகளால் உமது அடியேன் எச்சரிப்படைகிறேன்; \q2 அவைகளைக் கைக்கொள்வதால் மிகுந்த பலனுண்டு. \q1 \v 12 தன் தவறுகளை அறிந்துணர யாரால் முடியும்? \q2 என் மறைவான குற்றங்களை எனக்கு மன்னியும். \q1 \v 13 விரும்பி செய்யும் பாவங்களிலிருந்து உமது அடியேனைக் காத்துக்கொள்ளும்; \q2 அவைகள் என்னை ஆளுகை செய்யாதிருப்பதாக. \q1 அப்பொழுது நான் குற்றமற்றவனாயும், \q2 பெரும் மீறுதல்கள் அறியாதவனாயும் இருப்பேன். \b \q1 \v 14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, \q2 என் வாயின் வார்த்தைகளும் \q2 என் இருதயத்தின் தியானமும் உமது பார்வையில் பிரியமாய் இருப்பதாக. \c 20 \cl சங்கீதம் 20 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 நீ துன்பத்தில் இருக்கும்போது யெகோவா உன் ஜெபத்திற்குப் பதில் தருவாராக; \q2 யாக்கோபின் இறைவனுடைய பெயர் உன்னைப் பாதுகாப்பதாக. \q1 \v 2 யெகோவா தமது பரிசுத்த இடத்திலிருந்து உனக்கு உதவி அனுப்பி, \q2 சீயோனிலிருந்து உனக்கு ஆதரவு வழங்குவாராக. \q1 \v 3 யெகோவா உன் பலிகளையெல்லாம் நினைவுகூர்ந்து, \q2 உனது தகனபலிகளை ஏற்றுக்கொள்வாராக. \q1 \v 4 யெகோவா உனது இருதயத்தின் வாஞ்சையை உனக்குத் தந்து, \q2 உனது திட்டங்களையெல்லாம் வெற்றிபெறச் செய்வாராக. \q1 \v 5 யெகோவா வெற்றி தரும்போது நாங்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிப்போம்; \q2 நமது இறைவனுடைய பெயரில் நாங்கள் வெற்றிக்கொடிகளை உயர்த்துவோம். \b \q1 யெகோவா உன் வேண்டுதல்கள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பாராக. \b \q1 \v 6 நான் இப்போது இதை அறிந்திருக்கிறேன்: \q2 யெகோவா தாம் அபிஷேகம் பண்ணியவனை இரட்சிக்கிறார். \q1 அவர் தமது பரிசுத்த பரலோகத்திலிருந்து \q2 தமது வலதுகரத்தின் மீட்கும் வல்லமையைக்கொண்டு, அவனுக்குப் பதில் கொடுக்கிறார். \q1 \v 7 சிலர் தேர்களிலும் சிலர் குதிரைகளிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; \q2 ஆனால் நாங்களோ, நமது இறைவனாகிய யெகோவாவினுடைய பெயரிலேயே நம்பிக்கை வைக்கிறோம். \q1 \v 8 அவர்கள் மண்டியிட்டு விழுந்தார்கள், \q2 நாங்களோ எழுந்து உறுதியாய் நிற்கிறோம். \q1 \v 9 யெகோவாவே, அரசனுக்கு வெற்றியைக் கொடும்! \q2 நாங்கள் கூப்பிடும்போது எங்களுக்குப் பதில் தாரும். \c 21 \cl சங்கீதம் 21 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, அரசன் உமது பெலத்தில் களிகூருகிறார். \q2 நீர் கொடுக்கும் வெற்றிகளில் அவருடைய மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கிறது. \b \q1 \v 2 அவருடைய இருதயத்தின் வாஞ்சையை நீர் அவருக்குக் கொடுத்திருக்கிறீர்; \q2 அவருடைய உதடுகளின் வேண்டுதலை நீர் புறக்கணிக்கவில்லை. \q1 \v 3 நிறைவான ஆசீர்வாதங்களுடன் நீர் அவரை வரவேற்று, \q2 சுத்தத் தங்கத்தினாலான மகுடத்தை நீர் அவர் தலையின்மேல் வைத்தீர். \q1 \v 4 அவர் உம்மிடம் ஆயுளைக் கேட்டார், அதை நீர் அவருக்குக் கொடுத்தீர்; \q2 அவர் என்றென்றும் வாழ, நீடித்த ஆயுளைக் கொடுத்தீர். \q1 \v 5 நீர் கொடுத்த வெற்றிகளின் மூலம் அவருடைய மகிமை பெரியதாயிருக்கிறது; \q2 நீர் அவரை மகிமையாலும் மகத்துவத்தாலும் நிரப்பியிருக்கிறீர். \q1 \v 6 நிச்சயமாகவே நீர் அவருக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறீர்; \q2 உமது சமுகத்தின் ஆனந்தத்தால், அவரை மகிழ்ச்சியாக்கினீர். \q1 \v 7 ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்; \q2 உன்னதமானவரின் உடன்படிக்கையின் அன்பினிமித்தம் \q2 அவர் அசைக்கப்படமாட்டார். \b \q1 \v 8 உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்; \q2 உமது வலதுகரம் உம்முடைய எதிரிகளைப் பிடித்துக்கொள்ளும். \q1 \v 9 நீர் வரும் நேரத்தில் \q2 அவர்களை ஒரு நெருப்புச் சூளையைப்போல் ஆக்கிவிடுவீர். \q1 யெகோவா தமது கடுங்கோபத்தில் அவர்களை அழித்துவிடுவார்; \q2 அவருடைய நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். \q1 \v 10 நீர் அவர்களுடைய சந்ததிகளைப் பூமியிலிருந்து அழிப்பீர், \q2 அவர்களுடைய சந்ததிகளை மனுக்குலத்திலிருந்து அழிப்பீர். \q1 \v 11 உமது பகைவர் உமக்கு எதிராக தீமையான சதி செய்தார்கள், \q2 பொல்லாத சதித்திட்டங்களை வகுத்தார்கள்; ஆனாலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது. \q1 \v 12 நீர் வில்லை நாணேற்றி அவர்களை குறிபார்த்து எய்யும்போது, \q2 அவர்களை புறமுதுகு காட்டப்பண்ணுவீர். \b \q1 \v 13 யெகோவாவே, உமது பெலத்தில் நீர் உயர்த்தப்பட்டிருப்பீராக; \q2 நாங்கள் உமது வல்லமையைப் பாடித் துதிப்போம். \c 22 \cl சங்கீதம் 22 \d “காலைப் பெண்மான்” என்ற இராகத்தில் பாடும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? \q2 என்னைக் காப்பாற்றாமல், \q2 நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளை நீர் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? \q1 \v 2 என் இறைவனே, நான் பகலில் கூப்பிடுகிறேன், ஆனால் நீர் பதில் தருகிறதில்லை; \q2 இரவிலும் நான் மன்றாடுகிறேன், எனக்கு அமைதியில்லை. \b \q1 \v 3 ஆனாலும் இஸ்ரயேலின் துதி சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் \q2 நீர் பரிசுத்தர். \q1 \v 4 உம்மிலேயே எங்கள் முன்னோர்கள் நம்பிக்கை வைத்தார்கள்; \q2 நம்பிக்கை வைத்த அவர்களை நீர் விடுவித்தீர். \q1 \v 5 அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிட்டார்கள், நீர் அவர்களைக் காப்பாற்றினீர்; \q2 உம்மில் நம்பிக்கை வைத்து அவர்கள் வெட்கப்பட்டுப் போகவில்லை. \b \q1 \v 6 ஆனால் நானோ ஒரு புழு, மனிதனேயல்ல; \q2 மனிதரால் பழிக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். \q1 \v 7 என்னைக் காண்பவர்கள் அனைவரும் என்னை ஏளனம் செய்கிறார்கள்; \q2 அவர்கள் தங்கள் தலைகளை அசைத்து பரியாசம்செய்கிறார்கள் \q1 \v 8 “அவன் யெகோவாவை நம்பியிருக்கிறான், \q2 யெகோவா அவனை இரட்சிக்கட்டும். \q1 அவரிலே அவன் மகிழ்ச்சியாக இருக்கிறபடியால் \q2 அவர் அவனை விடுவிக்கட்டும்” என்கிறார்கள். \b \q1 \v 9 ஆனாலும், நீரே என்னைத் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே கொண்டுவந்தவர். \q2 நான் என் தாயின் மார்பின் அணைப்பில் இருக்கும்போதே \q2 என்னை உம்மில் நம்பிக்கையாய் இருக்கப்பண்ணினீர். \q1 \v 10 நான் பிறப்பிலிருந்தே உமது பாதுகாப்பில் இருந்தேன்; \q2 நான் என் தாயின் கர்ப்பத்தில் இருந்ததுமுதல் நீரே என் இறைவனாக இருக்கிறீர். \b \q1 \v 11 நீர் என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்; \q2 ஏனென்றால் துன்பம் நெருங்கியுள்ளது, \q2 உதவிசெய்ய ஒருவருமில்லை. \b \q1 \v 12 அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன; \q2 பாசான் நாட்டு பலத்த காளைகள் என்னை வளைத்து கொள்கின்றன. \q1 \v 13 தங்கள் இரையை கிழிக்கிற கெர்ச்சிக்கும் சிங்கங்களைப் போல, \q2 அவர்கள் எனக்கு விரோதமாக தங்கள் வாய்களை விரிவாய்த் திறக்கிறார்கள். \q1 \v 14 என் பெலன் தரையில் ஊற்றப்பட்ட தண்ணீரைப்போல் இருக்கிறது; \q2 என் எலும்புகளெல்லாம் மூட்டுகளை விட்டுக் கழன்று போயின; \q1 என் இருதயம் மெழுகு போலாகி \q2 எனக்குள்ளே உருகிப் போயிற்று. \q1 \v 15 என் பெலன் ஓட்டுத்துண்டைப் போல் வறண்டுபோயிற்று; \q2 என் நாவும் மேல்வாயுடன் ஒட்டிக்கொண்டது; \q2 என்னை சவக்குழியின் தூசியில் போடுகிறீர். \b \q1 \v 16 நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன; \q2 தீயவர்களின் கூட்டம் என்னை வளைத்து கொண்டது; \q2 என் கைகளையும் என் கால்களையும் ஊடுருவக் குத்தினார்கள். \q1 \v 17 என் எலும்புகள் எல்லாவற்றையும் என்னால் எண்ண முடியும்; \q2 மக்கள் என்னை உற்றுப்பார்த்து ஏளனம் செய்து மகிழுகிறார்கள். \q1 \v 18 அவர்கள் என் அங்கிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு, \q2 என் உடைக்காக சீட்டுப் போடுகிறார்கள். \b \q1 \v 19 ஆனால் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாகாதிரும்; \q2 என் பெலனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும். \q1 \v 20 என்னை வாளுக்குத் தப்புவியும்; \q2 என் விலைமதிப்பற்ற உயிரை நாய்களின் வலிமையிலிருந்து விடுவியும். \q1 \v 21 சிங்கங்களின் வாயிலிருந்து என்னைத் தப்புவியும்; \q2 காட்டெருதுகளின் கொம்புகளிலிருந்து என்னைக் காப்பாற்றும். \b \q1 \v 22 அப்பொழுது நான் என் ஜனங்களுக்கு உம்முடைய பெயரை அறிவிப்பேன், \q2 திருச்சபையில் நான் உம்மைத் துதிப்பேன். \q1 \v 23 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; \q2 யாக்கோபின் சந்ததிகளே, நீங்கள் அனைவரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; \q2 இஸ்ரயேலின் சந்ததிகளே, நீங்கள் அவரிடத்தில் பயபக்தியாய் இருங்கள். \q1 \v 24 ஏனெனில் யெகோவா துன்புறுத்தப்பட்டவனுடைய வேதனையை, \q2 அலட்சியம் பண்ணவுமில்லை அவமதிக்கவுமில்லை. \q1 அவனிடத்திலிருந்து தமது முகத்தை மறைத்துக் கொள்ளவுமில்லை; \q2 ஆனால் அவன் உதவிகேட்டுக் கதறுகையில் அவர் செவிகொடுத்தார். \b \q1 \v 25 நீர் செய்த செயல்களுக்காக மகா சபையில் நான் உம்மைத் துதிப்பேன்; \q2 உமக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக \q2 நான் என் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன். \q1 \v 26 ஏழைகள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; \q2 யெகோவாவைத் தேடுகிறவர்கள் எல்லோரும் அவரைத் துதிப்பார்கள்; \q2 அவர்கள் இருதயங்கள் என்றும் வாழ்வதாக. \b \q1 \v 27 பூமியின் கடைசிகளெல்லாம் \q2 யெகோவாவை நினைத்து அவரிடம் திரும்பும்; \q1 நாடுகளின் குடும்பங்கள் எல்லாம் \q2 அவருக்கு முன்பாகத் தாழ்ந்து வணங்கும். \q1 \v 28 ஏனென்றால், அரசாட்சி யெகோவாவினுடையது; \q2 அவர் நாடுகளை ஆளுகை செய்கிறார். \b \q1 \v 29 பூமியிலுள்ள செல்வந்தர் அனைவரும் விருந்துண்டு யெகோவாவை வழிபடுவார்கள்; \q2 மரித்து மண்ணுக்குத் திரும்புவோரும், தன் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் \q2 அவருக்கு முன்பாக முழங்காற்படியிடுவார்கள். \q1 \v 30 பிள்ளைகள் அவரை சேவிப்பார்கள்; \q2 வருங்கால சந்ததியினருக்கு, யெகோவாவைப் பற்றிச் சொல்லப்படும். \q1 \v 31 அவர்கள் அவருடைய நீதியை, \q2 இன்னும் பிறவாமல் இருக்கும் மக்களுக்கு பிரசித்தப்படுத்துவார்கள்: \q2 அவரே இதையெல்லாம் செய்து முடித்தார்! என்பார்கள். \c 23 \cl சங்கீதம் 23 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார், எனக்கு ஒரு குறையும் ஏற்படாது. \q2 \v 2 அவர் என்னைப் பசுமையான புல்வெளிகளில் இளைப்பாறப் பண்ணுகிறார், \q1 அமைதியான நீர்நிலைகளின் அருகே என்னை வழிநடத்துகிறார். \q2 \v 3 அவர் என் ஆத்துமாவுக்கு புத்துயிர் அளிக்கிறார். \q1 தமது பெயருக்காக அவர் என்னை, \q2 நீதியின் பாதைகளில் நடத்துகிறார். \q1 \v 4 மரண நிழலின் பள்ளத்தாக்கின் வழியே \q2 நான் நடந்தாலும் \q1 நான் ஒரு தீமைக்கும் பயப்படமாட்டேன், \q2 ஏனென்றால், நீர் என்னுடன்கூட இருக்கிறீர்; \q1 உமது கோலும் உமது தடியும், \q2 எனக்கு ஆறுதல் அளிக்கின்றன. \b \q1 \v 5 என் பகைவர்களின் சமுகத்தில் \q2 நீர் எனக்கென ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணுகிறீர். \q1 நீர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; \q2 என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. \q1 \v 6 நிச்சயமாகவே என் வாழ்நாள் முழுவதும் \q2 நன்மையும் அன்பும் என்னைத் தொடர்ந்து வரும், \q1 நான் யெகோவாவினுடைய வீட்டில் \q2 என்றென்றுமாய் வாழ்வேன். \c 24 \cl சங்கீதம் 24 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் யெகோவாவினுடையவை, \q2 உலகமும் அதில் வாழும் அனைவரும் அவருடையவர்கள். \q1 \v 2 ஏனென்றால் அவர் பூமியைக் கடலின்மேல் நிறுவி, \q2 தண்ணீரின்மேல் நிலைநிறுத்தினார். \b \q1 \v 3 யெகோவாவினுடைய மலையில் ஏறத்தகுந்தவன் யார்? \q2 அவருடைய பரிசுத்த இடத்தில் நிற்கத் தகுந்தவன் யார்? \q1 \v 4 சுத்தமான கைகளுடையவனும் தூய்மையான இருதயமுடையவனும் \q2 தன் ஆத்துமாவை பொய்யானவைகளுக்கு ஒப்புக்கொடாதவனும் \q2 பொய் சத்தியம் செய்யாதவனுமே. \b \q1 \v 5 அவர்கள் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவார்கள், \q2 தங்கள் இரட்சகரான இறைவனால் நியாயத்தைப் பெறுவார்கள். \q1 \v 6 அவரைத் தேடுகிறவர்களின் சந்ததி இப்படிப்பட்டதே, \q2 யாக்கோபின் இறைவனே, உமது முகத்தைத் தேடுகிறவர்கள் இவர்களே. \b \q1 \v 7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; \q2 பூர்வீகக் கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்; \q2 மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள். \q1 \v 8 இந்த மகிமையின் அரசன் யார்? \q2 அவர் பலமும் வலிமையும் உள்ள யெகோவா, \q2 அவர் போரில் வல்லமையுள்ள யெகோவா. \q1 \v 9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; \q2 பூர்வீக கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்; \q2 மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள். \q1 \v 10 மகிமையின் அரசனான இவர் யார்? \q2 அவர் சேனைகளின் யெகோவா; \q2 அவரே மகிமையின் அரசன். \c 25 \cl சங்கீதம் 25 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, \q2 உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். \b \q1 \v 2 என் இறைவனே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன்; \q2 என்னை வெட்கப்பட விடாதேயும்; \q2 என் பகைவர் என்மேல் வெற்றிகொள்ள விடாதேயும். \q1 \v 3 உம்மில் எதிர்பார்ப்பாய் இருப்பவர்கள் யாரும், \q2 ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்; \q2 ஆனால் காரணமின்றி துரோகம் செய்பவர்கள் வெட்கமடைவார்கள். \b \q1 \v 4 யெகோவாவே, உமது வழிகளை எனக்குக் காண்பியும்; \q2 உமது பாதைகளை எனக்குப் போதியும். \q1 \v 5 உமது சத்தியத்தில் என்னை நடத்தி எனக்குப் போதியும். \q2 நீரே என் இரட்சகராகிய இறைவன், \q2 நாள்முழுதும் நான் உம்மையே எதிர்பார்க்கிறேன். \q1 \v 6 யெகோவாவே, உமது பெரிதான இரக்கத்தையும் அன்பையும் நினைவில்கொள்ளும், \q2 ஏனெனில் அவை பூர்வகாலமுதல் இருக்கிறதே. \q1 \v 7 என் வாலிப காலத்தின் பாவங்களையும் \q2 என் மீறுதல்களையும் நினைக்கவேண்டாம்; \q1 உமது உடன்படிக்கையின் அன்பின்படி என்னை நினைத்துக்கொள்ளும், \q2 யெகோவாவே, நீர் நல்லவர். \b \q1 \v 8 யெகோவா நல்லவரும் நேர்மையானவருமாய் இருக்கிறார்; \q2 ஆகையால் பாவிகளுக்குத் தமது வழிகளை அறிவுறுத்துகிறார். \q1 \v 9 அவர் தாழ்மையுள்ளோரை நியாயத்தில் வழிநடத்துகிறார், \q2 தமது வழியை அவர்களுக்குப் போதிக்கிறார். \q1 \v 10 யெகோவாவினுடைய உடன்படிக்கையின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு \q2 அவருடைய பாதைகளெல்லாம் உடன்படிக்கையின் அன்பும் நம்பகமுமானவைகள். \q1 \v 11 யெகோவாவே, எனது அநியாயம் பெரிதாயிருப்பினும், \q2 உமது பெயரின் நிமித்தம் அதை மன்னியும். \b \q1 \v 12 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதர் யார்? \q2 அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வழியை யெகோவா அவர்களுக்கு அறிவுறுத்துவார். \q1 \v 13 அவர்கள் தமது வாழ்நாளெல்லாம் நன்மையைப் பெறுவார்கள், \q2 அவர்களுடைய சந்ததி பூமியை தமக்கு சொந்தமாக்கிக்கொள்வார்கள். \q1 \v 14 யெகோவாவின் இரகசியம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரியது; \q2 அவர் தமது உடன்படிக்கையையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார். \q1 \v 15 என் கண்கள் எப்பொழுதும் யெகோவாவையே நோக்கியிருக்கின்றன; \q2 ஏனென்றால் என் கால்களை அவரே கண்ணியிலிருந்து விடுவிப்பார். \b \q1 \v 16 யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி, எனக்குக் கிருபையாயிரும்; \q2 நான் தனிமையிலும் துன்பத்திலும் இருக்கிறேன். \q1 \v 17 என் இருதயத்தின் துயரத்திலிருந்து நீங்கலாக்கும்; \q2 என் நெருக்கத்திலிருந்து என்னை விடுவியும். \q1 \v 18 என் துன்பத்தையும் என் துயரத்தையும் பார்த்து, \q2 என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். \q1 \v 19 என் பகைவர்கள் எப்படி பெருகியிருக்கிறார்கள் என்று பாரும்; \q2 அவர்கள் எவ்வளவு கொடூரமாக என்னை வெறுக்கிறார்கள். \b \q1 \v 20 என் உயிரைப் பாதுகாத்து, என்னைத் தப்புவியும்; \q2 உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கும் என்னை \q2 வெட்கப்பட விடாதேயும். \q1 \v 21 உத்தமமும் நேர்மையும் என்னைப் பாதுகாக்கட்டும்; \q2 ஏனெனில் என் எதிர்பார்ப்பு உம்மிலே இருக்கிறது. \b \q1 \v 22 இறைவனே, இஸ்ரயேலை \q2 அவர்களுடைய துன்பங்கள் எல்லாவற்றிலுமிருந்து மீட்டுக்கொள்ளும். \c 26 \cl சங்கீதம் 26 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, என்னை நியாயப்படுத்திக் காட்டும், \q2 ஏனெனில் நான் உத்தமமாய் நடக்கிறேன்; \q1 நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், \q2 நான் தடுமாறுவதில்லை. \q1 \v 2 யெகோவாவே, என்னைச் சோதியும், என்னைப் பரிசோதித்துப் பாரும், \q2 என் இருதயத்தையும் என் மனதையும் ஆராய்ந்து பாரும்; \q1 \v 3 ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு \q2 எப்பொழுதும் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; \q2 நான் உமது சத்தியத்தின்படியே வாழ்கிறேன். \b \q1 \v 4 ஏமாற்றுகிறவர்களோடு நான் உட்காருவதில்லை, \q2 வஞ்சகரிடத்தில் நான் சேருகிறதுமில்லை; \q1 \v 5 தீமை செய்கிறவர்களின் கூட்டத்தை நான் அருவருக்கிறேன், \q2 கொடியவர்களுடன் உட்காரவும் மறுக்கிறேன். \q1 \v 6 யெகோவாவே, நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி, \q2 உமது துதியைப் பிரசித்தப்படுத்தி, \q1 \v 7 உமது அதிசயமான செயல்களையெல்லாம் விவரித்துக்கொண்டு, \q2 உமது பீடத்தைச் சுற்றிவருகிறேன். \b \q1 \v 8 யெகோவாவே, உமது மகிமை குடியிருக்கும் இடமாகிய, \q2 நீர் வாழும் ஆலயத்தை நான் நேசிக்கிறேன். \q1 \v 9 பாவிகளோடு என் ஆத்துமாவையும், \q2 இரத்தப் பிரியரோடு என் உயிரையும் எடுத்துக் கொள்ளாதேயும். \q1 \v 10 அவர்களுடைய கைகளில் கொடுமையான சதித்திட்டங்களிருக்கின்றன; \q2 அவர்களின் வலதுகைகள் இலஞ்சங்களால் நிறைந்திருக்கின்றன. \q1 \v 11 ஆனால் நான் என் உத்தமத்திலே வாழ்வேன்; \q2 என்னை மீட்டெடுத்து என்மீது இரக்கமாயிரும். \b \q1 \v 12 என் பாதங்கள் நேர்மையான இடத்தில் நிற்கின்றன; \q2 நான் யெகோவாவை மகா சபையில் துதிப்பேன். \c 27 \cl சங்கீதம் 27 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார், \q2 நான் யாருக்குப் பயப்படுவேன்? \q1 யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார், \q2 நான் யாருக்குப் பயப்படுவேன்? \b \q1 \v 2 தீய மனிதர் என்னை விழுங்கும்படி \q2 எனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது, \q1 எனது பகைவரும் விரோதிகளுமான \q2 அவர்களே தடுமாறி விழுவார்கள். \q1 \v 3 ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும், \q2 என் இருதயம் பயப்படாது; \q1 எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும், \q2 அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன். \b \q1 \v 4 நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன், \q2 அதையே நான் தேடுகிறேன்: \q1 நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும், \q2 அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும் \q1 நான் என் வாழ்நாள் முழுவதும் \q2 யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன். \q1 \v 5 ஏனெனில் துன்ப நாளில், \q2 அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்; \q1 அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து, \q2 கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார். \b \q1 \v 6 அப்பொழுது என் தலை என்னைச் சுற்றியுள்ள \q2 பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; \q1 அவருடைய பரிசுத்த கூடாரத்திலே நான் ஆனந்த சத்தத்தோடு பலிகளையிட்டு, \q2 யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன். \b \q1 \v 7 யெகோவாவே, நான் உம்மைக் கூப்பிடும்போது என் குரலைக் கேளும்; \q2 என்னில் இரக்கமாயிருந்து, எனக்குப் பதில் தாரும். \q1 \v 8 என் இருதயம் உம்மிடத்தில், “அவர் முகத்தையே தேடு!” என்றதால், \q2 யெகோவாவே, உமது முகத்தையே நான் தேடுவேன். \q1 \v 9 உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்; \q2 கோபங்கொண்டு உமது அடியேனைத் துரத்தி விடாதேயும்; \q2 நீரே எனக்கு உதவியாய் இருந்திருக்கிறீர். \q1 என் இரட்சிப்பின் இறைவனே, \q2 என்னைப் புறக்கணிக்கவோ, கைவிடவோ வேண்டாம். \q1 \v 10 என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும், \q2 யெகோவா என்னை ஏற்றுக்கொள்வார். \q1 \v 11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; \q2 என்னைத் தீயநோக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் நிமித்தம் \q2 என்னை நேரான பாதையில் நடத்தும். \q1 \v 12 என் பகைவரின் ஆசைகளுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; \q2 ஏனெனில் பொய்ச்சாட்சி கூறுபவர்களும் \q2 என்னை குற்றஞ்சாட்டுபவர்களும் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள். \b \q1 \v 13 நானோ வாழ்வோரின் நாட்டில் \q2 யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று \q2 இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன். \q1 \v 14 யெகோவாவுக்குக் காத்திரு; \q2 பெலன்கொண்டு தைரியமாயிரு, \q2 யெகோவாவுக்கே காத்திரு. \c 28 \cl சங்கீதம் 28 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; \q2 நீர் என் கன்மலை, \q2 எனக்கு செவிகொடாமல் இருக்கவேண்டாம். \q1 நீர் மவுனமாகவே இருப்பீரானால், \q2 நான் சவக்குழியில் கிடக்கிறவர்களைப் போலாவேன். \q1 \v 2 நான் உதவிக்காக உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, \q2 நான் உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக, \q1 என் கைகளை உயர்த்தி \q2 இரக்கத்துக்காக நான் கதறுவதைக் கேளும். \b \q1 \v 3 கொடியவர்களுடனும் \q2 தீமை செய்பவர்களுடனும் என்னை இழுத்துக்கொள்ளாதேயும், \q1 அவர்கள் அயலவருடன் நட்பாகப் பேசுகிறார்கள்; \q2 ஆனால் அவர்களுடைய இருதயங்களிலோ தீங்கை வைத்திருக்கிறார்கள். \q1 \v 4 அவர்களுடைய செயல்களுக்காகவும் \q2 அவர்கள் செய்த தீமைகளுக்காகவும் அவர்களுக்குப் பதில் செய்யும்; \q1 அவர்களுடைய கைகளின் செயலுக்காக அவர்களுக்குப் பதில்செய்து, \q2 அவர்களுக்குத் தக்க தண்டனையை அவர்கள்மீது கொண்டுவாரும். \b \q1 \v 5 யெகோவாவினுடைய செயல்களுக்கும், \q2 அவருடைய கரங்கள் செய்தவற்றுக்கும் அவர்கள் மதிப்புக் கொடாதபடியால், \q1 யெகோவா அவர்களை இடித்து வீழ்த்துவார்; \q2 மீண்டும் அவர்களை ஒருபோதும் கட்டியெழுப்பமாட்டார். \b \q1 \v 6 யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்; \q2 ஏனெனில் இரக்கத்துக்கான எனது கதறலை அவர் கேட்டிருக்கிறார். \q1 \v 7 யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்; \q2 என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார். \q1 என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது; \q2 நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன். \b \q1 \v 8 யெகோவா தமது மக்களின் பெலனானவர்; \q2 தாம் அபிஷேகித்தவருக்கு இரட்சிப்பின் கோட்டையும் அவரே. \q1 \v 9 இறைவனே உமது மக்களைக் காப்பாற்றி, \q2 உமது உரிமைச்சொத்தான அவர்களை ஆசீர்வதியும்; \q2 அவர்களுடைய மேய்ப்பராயிருந்து அவர்களை என்றென்றும் தாங்கிக்கொள்ளும். \c 29 \cl சங்கீதம் 29 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்; \q2 அவருடைய மகிமைக்காகவும் வல்லமைக்காகவும் யெகோவாவை கனம்பண்ணுங்கள். \q1 \v 2 யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்; \q2 பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள். \b \q1 \v 3 யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது; \q2 மகிமையின் இறைவன் முழங்குகிறார்; \q2 பெருவெள்ளத்தின்மேல் யெகோவா முழங்குகிறார். \q1 \v 4 யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது; \q2 யெகோவாவினுடைய குரல் மாட்சிமை பொருந்தியது. \q1 \v 5 யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது; \q2 யெகோவா லெபனோனின் கேதுரு மரங்களைத் துண்டுகளாக உடைக்கிறார். \q1 \v 6 அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும், \q2 சிரியோன்\f + \fr 29:6 \fr*\ft அதாவது, எர்மோன் மலை\ft*\f* மலையை ஒரு இளம் காட்டெருதைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார். \q1 \v 7 யெகோவாவினுடைய குரல் \q2 மின்னல் கீற்றுகளுடன் பளிச்சிடுகிறது. \q1 \v 8 யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது; \q2 காதேஷின் பாலைவனத்தை யெகோவா அதிரப்பண்ணுகிறார். \q1 \v 9 யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது. \q2 காடுகளை அழித்து வெளியாக்குகிறது; \q1 அவருடைய ஆலயத்திலோ அனைவரும், “மகிமை!” என அறிவிக்கிறார்கள். \b \q1 \v 10 யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; \q2 யெகோவா என்றென்றும் அரசனாக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். \q1 \v 11 யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்; \q2 யெகோவா தமது மக்களை சமாதானத்தால் ஆசீர்வதிக்கிறார். \c 30 \cl சங்கீதம் 30 \d ஆலய பிரதிஷ்டையின் பாட்டாகிய தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன், \q2 ஏனெனில், ஆழங்களிலிருந்து நீர் என்னை வெளியே தூக்கியெடுத்தீர்; \q2 என் பகைவர் என்னைப் பழித்து மகிழ நீர் இடமளிக்கவில்லை. \q1 \v 2 என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; \q2 நீர் என்னை சுகமாக்கினீர். \q1 \v 3 யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்; \q2 குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர். \b \q1 \v 4 யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குத் துதி பாடுங்கள்; \q2 அவருடைய பரிசுத்தத்தை நினைத்து நன்றி கூறுங்கள். \q1 \v 5 அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே, \q2 ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்; \q1 இரவிலே அழுகை இருந்தாலும், \q2 காலையிலோ மகிழ்ச்சி வரும். \b \q1 \v 6 நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது, \q2 “நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்” என்று சொன்னேன். \q1 \v 7 யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது, \q2 என்னுடைய மலையை\f + \fr 30:7 \fr*\ft அதாவது, சீயோன் மலை\ft*\f* உறுதியாய் நிற்கப்பண்ணினீர்; \q1 ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது, \q2 நான் மனம்சோர்ந்து போனேன். \b \q1 \v 8 யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்; \q2 யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன். \q1 \v 9 “நான் அழிந்து \q2 குழிக்குள் போவதால் என்ன பயன்? \q1 தூசி உம்மைத் துதிக்குமோ? \q2 அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ? \q1 \v 10 யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும். \q2 யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.” \b \q1 \v 11 என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்; \q2 நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு, \q2 மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர். \q1 \v 12 ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்; \q2 என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன். \c 31 \cl சங்கீதம் 31 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்; \q2 என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; \q2 உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். \q1 \v 2 உமது செவியை எனக்குச் சாய்த்து, \q2 என்னைத் தப்புவிக்க விரைவாய் வாரும்; \q1 என் புகலிடமான கன்மலையாகவும், \q2 என்னைக் காப்பாற்றும் பலமான கோட்டையாகவும் இரும். \q1 \v 3 நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால், \q2 உமது பெயரின் நிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை வழிநடத்தும். \q1 \v 4 நீரே என் புகலிடம், \q2 ஆகையால் எனக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்ணியிலிருந்து என்னை விடுவியும். \q1 \v 5 உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்; \q2 யெகோவாவே, என் உண்மையின் இறைவனே, என்னை மீட்டுக்கொள்ளும். \b \q1 \v 6 இறைவனல்லாதவைகளைப் பற்றிக்கொள்கிறவர்களை நான் வெறுக்கிறேன்; \q2 நான் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறேன். \q1 \v 7 நான் உமது அன்பில் மகிழ்ந்து களிகூருவேன்; \q2 ஏனெனில், நீர் என் வேதனையைக் கண்டு, \q2 என் ஆத்தும துயரத்தை அறிந்திருக்கிறீர். \q1 \v 8 நீர் என்னை என் பகைவனிடத்தில் ஒப்புக்கொடாமல், \q2 விசாலமான இடத்தில் என் பாதங்களை நிறுத்தினீர். \b \q1 \v 9 யெகோவாவே, நான் துன்பத்தில் இருப்பதால், என்னில் இரக்கமாயிரும்; \q2 துக்கத்தினால் என் கண்கள் பலவீனமடைகின்றன; \q2 துயரத்தினால் என் ஆத்துமாவும் உடலும் பெலனில்லாமல் போகின்றன. \q1 \v 10 என் வாழ்க்கை வேதனையிலேயே கழிந்துபோயிற்று; \q2 அழுது புலம்பியே என் வருடங்களும் கடந்துபோயிற்று. \q1 என் துன்பத்தினால்\f + \fr 31:10 \fr*\fq துன்பத்தினால் \fq*\ft அல்லது \ft*\fqa குற்றம்\fqa*\f* என் பெலம் குன்றி, \q2 என் எலும்புகளும் பெலனற்றுப் போகின்றன. \q1 \v 11 என் பகைவர்கள் அனைவரின் நிமித்தம் \q2 நான் என் அயலாருக்கு நிந்தையாகிறேன்; \q1 என் நண்பர்களுக்கு நான் பயங்கரமானேன்; \q2 தெருவில் என்னைக் காண்பவர்கள் என்னைவிட்டு விலகி ஓடிப்போனார்கள். \q1 \v 12 நான் இறந்துவிட்ட ஒருவனைப் போல, அவர்கள் என்னை மறந்துபோனார்கள்; \q2 நான் ஓர் உடைந்த பாத்திரத்தைப் போலானேன். \q1 \v 13 அநேகர் என்னை அவதூறாய்ப் பேசுகிறதைக் கேட்கிறேன், \q2 “எல்லாப் பக்கங்களிலும் பயங்கரம் இருக்கிறது!” \q1 அவர்கள் எனக்கு விரோதமாக சூழ்ச்சிசெய்து, \q2 என் உயிரை வாங்க சதித்திட்டம் போடுகிறார்கள். \b \q1 \v 14 ஆனாலும் யெகோவாவே, நான் உம்மிலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன்; \q2 “நீரே என் இறைவன்” என்று நான் சொன்னேன். \q1 \v 15 என் நாட்கள் உமது கரங்களில் இருக்கிறது; \q2 என் பகைவரிடமிருந்தும் \q2 என்னைத் துரத்துகிறவரிடமிருந்தும் விடுவியும். \q1 \v 16 உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்; \q2 உமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைக் காப்பாற்றும். \q1 \v 17 யெகோவாவே, என்னை வெட்கப்பட விடாதேயும்; \q2 நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; \q1 கொடியவர்கள் வெட்கப்பட்டு பாதாளத்தில் \q2 மவுனமாய்க் கிடக்கட்டும். \q1 \v 18 பெருமையோடும் அகந்தையோடும், \q2 நீதிமான்களுக்கு விரோதமாய்ப் பேசும் \q2 அவர்களுடைய பொய் உதடுகள் ஊமையாகட்டும். \b \q1 \v 19 உமக்குப் பயப்படுகிறவர்களுக்காக \q2 நீர் குவித்து வைத்திருக்கும் நன்மைகள் எவ்வளவு பெரிதாயிருக்கின்றன; \q1 உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறவர்கள்மேல், \q2 மனிதர் காணும்படியாக நீர் பொழிகின்ற நன்மைகள் எவ்வளவு பெரிதாயிருக்கின்றன. \q1 \v 20 நீர் அவர்களை மனிதரின் சூழ்ச்சிகளிலிருந்து விலக்கி, \q2 உமது சமுகத்தின் அடைக்கலத்தில் மறைத்துவைக்கிறீர்; \q1 அவர்களைக் குற்றப்படுத்தும் நாவுகளுக்கு விலக்கி, \q2 உமது தங்குமிடத்தில் அவர்களை ஒளித்துவைக்கிறீர். \b \q1 \v 21 யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக, \q2 ஏனெனில் பட்டணம் முற்றுகையிடப்பட்டு நான் சிக்கலில் இருந்தபோது, \q2 அவர் தமது உடன்படிக்கை அன்பின் அதிசயத்தை எனக்குக் காண்பித்தார். \q1 \v 22 நான் அதிர்ச்சியடைந்து, \q2 “உமது பார்வையிலிருந்து அகற்றப்பட்டேன்” என்று சொன்னேன்; \q1 ஆனாலும் நான் உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, \q2 இரக்கத்திற்காக நான் கதறி அழுததை நீர் கேட்டீர். \b \q1 \v 23 யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, அவரில் அன்புகூருங்கள்! \q2 யெகோவா அவருக்கு உண்மையாய் இருப்பவர்களைப் பாதுகாக்கிறார்; \q2 ஆனால் பெருமையுள்ளவர்களுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார். \q1 \v 24 யெகோவாவை நம்பிக் காத்திருப்பவர்களே, \q2 நீங்கள் எல்லோரும் பெலன்கொண்டு தைரியமாய் இருங்கள். \c 32 \cl சங்கீதம் 32 \d மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யாருடைய மீறுதல்கள் மன்னிக்கப்பட்டதோ, \q2 யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ, \q2 அவர்கள் பாக்கியவான்கள். \q1 \v 2 யாருடைய பாவத்தைக்குறித்து, \q2 அவர்களுக்கு விரோதமாக யெகோவா கணக்கிடாதிருக்கிறாரோ, \q2 யாருடைய ஆவியில் வஞ்சனை இல்லாதிருக்கிறதோ, அவர்கள் பாக்கியவான்கள். \b \q1 \v 3 நான் என் பாவத்தைக்குறித்து மவுனமாய் இருந்தபோது, \q2 தினமும் என் அழுகையினால், \q2 என் எலும்புகள் பலவீனமாயிற்று. \q1 \v 4 இரவும் பகலும் \q2 உமது கரம் பாரமாயிருந்தது; \q1 ஆதலால், கோடைகால வெப்பத்தினால் ஈரம் வறண்டுபோகிறது போல, \q2 என் பெலன் வறண்டுபோயிற்று. \b \q1 \v 5 அதின்பின் நான் என் பாவத்தை \q2 உம்மிடத்தில் ஒத்துக்கொண்டேன்; \q1 என் அநியாயத்தையும் நான் மறைக்கவில்லை. \q2 நான், “யெகோவாவிடம் என் மீறுதல்களை அறிக்கையிடுவேன்” \q1 என்று சொன்னேன்; \q2 நீர் என் பாவத்தின் குற்றத்தை மன்னித்தீர். \b \q1 \v 6 ஆகவே பக்தியுள்ள ஒவ்வொருவரும் உம்மைக் காணத்தக்க காலத்தில் \q2 உம்மை நோக்கி மன்றாடட்டும்; \q1 பெருவெள்ளம் எழும்பும்போது \q2 நிச்சயமாய் அது அவர்களை அணுகாது. \q1 \v 7 நீர் என் மறைவிடமாயிருக்கிறீர்; \q2 நீர் என்னை இக்கட்டிலிருந்து பாதுகாத்து, \q2 மீட்பின் பாடல்களால் என்னைச் சூழ்ந்துகொள்வீர். \b \q1 \v 8 யெகோவா சொல்கிறதாவது: “நான் உனக்கு அறிவுறுத்தி, \q2 நீ போகவேண்டிய வழியை உனக்குப் போதிப்பேன்; \q2 நான் உனக்கு கரிசனையோடு ஆலோசனை சொல்லுவேன். \q1 \v 9 புத்தியில்லாத குதிரையைப் போலவோ, \q2 கோவேறு கழுதையைப் போலவோ நீ இருக்கவேண்டாம்; \q1 கடிவாளத்தினால் கட்டுப்படுத்தப்பட்டால் ஒழிய, \q2 அவை உன் கட்டுப்பாட்டின்கீழ் வருவதில்லை.” \q1 \v 10 கொடுமையானவனுக்கு வரும் கேடுகள் அநேகமானவை, \q2 ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறவனையோ, \q2 அவருடைய உடன்படிக்கையின் அன்பு சூழ்ந்துகொள்கிறது. \b \q1 \v 11 நீதிமான்களே, நீங்கள் யெகோவாவிடம் களிகூர்ந்து மகிழுங்கள்; \q2 உள்ளத்தில் உண்மையுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் துதி பாடுங்கள். \c 33 \cl சங்கீதம் 33 \q1 \v 1 நீதிமான்களே, நீங்கள் மகிழ்ச்சியுடன் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்; \q2 அவரைத் துதிப்பது நேர்மையுள்ளவர்களுக்குத் தகுதியானது. \q1 \v 2 யாழ் இசைத்து யெகோவாவைத் துதியுங்கள்; \q2 பத்து நரம்பு வீணையினால் அவருக்கு இசை பாடுங்கள். \q1 \v 3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; \q2 திறமையாக இசைத்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள். \b \q1 \v 4 யெகோவாவினுடைய வார்த்தை சத்தியமும், \q2 அவருடைய செயல்களெல்லாம் உண்மையானதுமாய் இருக்கிறது. \q1 \v 5 யெகோவா நீதியையும் நியாயத்தையும் விரும்புகிறார்; \q2 பூமி முழுவதுமே அவருடைய உடன்படிக்கையின் அன்பினால் நிறைந்திருக்கிறது. \b \q1 \v 6 யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன, \q2 அவருடைய வாயின் சுவாசத்தினால் வான்கோள்கள் யாவும் படைக்கப்பட்டன. \q1 \v 7 அவர் கடல்நீரைச் ஜாடிகளில் சேர்த்துவைக்கிறார்; \q2 ஆழத்தை களஞ்சியங்களில் வைக்கிறார். \q1 \v 8 பூமி அனைத்தும் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; \q2 உலகின் மக்கள் அனைவரும் அவரிடம் பயபக்தியாய் இருப்பார்களாக. \q1 \v 9 ஏனெனில் அவர் சொல்ல, உலகம் உண்டாயிற்று; \q2 அவர் கட்டளையிட்டார், அது உறுதியாய் நின்றது. \b \q1 \v 10 யெகோவா நாடுகளின் திட்டங்களை முறியடிக்கிறார்; \q2 அவர் மக்களின் நோக்கங்களைத் தடுக்கிறார். \q1 \v 11 ஆனால் யெகோவாவின் ஆலோசனை என்றென்றும் உறுதியாகவும், \q2 அவருடைய இருதயத்தின் நோக்கங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலைநிற்கும். \b \q1 \v 12 எந்த மக்கள் யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்டிருக்கிறார்களோ, \q2 எந்த மக்களை அவர் தமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டாரோ \q2 அவர்கள் பாக்கியவான்கள். \q1 \v 13 யெகோவா பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பார்த்து, \q2 எல்லா மனிதர்களையும் காண்கிறார்; \q1 \v 14 தமது சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும் \q2 அனைவரையும் கவனிக்கிறார். \q1 \v 15 அனைவருடைய இருதயங்களையும் உருவாக்கும் யெகோவா, \q2 அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கவனிக்கிறார். \b \q1 \v 16 எந்த ஒரு அரசனும் தனது படைபலத்தால் காப்பாற்றப்படுவதில்லை; \q2 எந்த ஒரு போர்வீரனும் தனது மிகுந்த வலிமையினால் தப்புவதுமில்லை. \q1 \v 17 விடுதலை பெறுவதற்கு குதிரையை நம்புவது வீண்; \q2 அதற்கு மிகுந்த வலிமை இருந்தபோதிலும், அதினால் காப்பாற்ற முடியாது. \q1 \v 18 யெகோவாவுக்குப் பயந்து, \q2 அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல் \q2 அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து, \q1 \v 19 மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார், \q2 பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கிறார். \b \q1 \v 20 நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; \q2 அவரே எங்களுக்கு உதவியும் எங்கள் கேடயமுமாய் இருக்கிறார். \q1 \v 21 நாங்கள் அவருடைய பரிசுத்த பெயரில் நம்பிக்கையாய் இருப்பதால் \q2 எங்கள் இருதயங்கள் அவரில் மகிழ்கின்றன. \q1 \v 22 யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே, \q2 உமது உடன்படிக்கையின் அன்பு எங்கள்மேல் இருப்பதாக. \c 34 \cl சங்கீதம் 34 \d தாவீது அபிமெலேக்கின் முன்பு பைத்தியம்போல் நடித்து, அவனால் துரத்திவிடப்படும்போது பாடின சங்கீதம். \q1 \v 1 யெகோவாவை நான் எவ்வேளையிலும் புகழ்ந்து உயர்த்துவேன்; \q2 அவருக்குரிய துதி எப்பொழுதும் என் உதடுகளில் இருக்கும். \q1 \v 2 நான் யெகோவாவுக்குள் மகிமைப்படுவேன்; \q2 ஒடுக்கப்பட்டோர் இதைக் கேட்டு மகிழட்டும். \q1 \v 3 என்னோடு சேர்ந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; \q2 நாம் ஒன்றுகூடி அவருடைய பெயரைப் புகழ்ந்து உயர்த்துவோம். \b \q1 \v 4 நான் யெகோவாவிடம் உதவி தேடினேன்; அவர் எனக்குப் பதில் தந்தார்; \q2 அவர் என்னுடைய எல்லாப் பயத்திலிருந்தும் என்னை விடுவித்தார். \q1 \v 5 அவரை நோக்கிப் பார்க்கிறவர்கள் பிரகாசமாய் இருக்கிறார்கள்; \q2 அவர்களுடைய முகங்கள் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை. \q1 \v 6 இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா செவிகொடுத்து; \q2 அவனை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றினார். \q1 \v 7 அவருக்குப் பயந்து நடக்கிறவர்களைச் சுற்றிலும் \q2 யெகோவாவின் தூதன் முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார். \b \q1 \v 8 யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; \q2 அவரிடத்தில் தஞ்சமடைகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். \q1 \v 9 யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குப் பயந்து நடங்கள்; \q2 ஏனெனில் அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு எவ்விதக் குறைவும் ஏற்படுவதில்லை. \q1 \v 10 இளம் சிங்கங்கள் பெலமிழந்து பசியாயிருக்கலாம்; \q2 ஆனால் யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடுவதில்லை. \q1 \v 11 என் பிள்ளைகளே, வாருங்கள்; வந்து எனக்குச் செவிகொடுங்கள்; \q2 யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன். \q1 \v 12 உங்களில் யாராவது வாழ்வை நேசித்து \q2 அநேக நல்ல நாட்களைக் காண விரும்பினால், \q1 \v 13 நீங்கள் உங்கள் நாவை தீமையைப் பேசுவதிலிருந்து விலக்கி, \q2 உங்கள் உதடுகளைப் பொய்ப் பேசுவதிலிருந்து காத்துக்கொள்ளுங்கள். \q1 \v 14 தீமையைவிட்டு விலகி, நன்மையைச் செய்யுங்கள்; \q2 சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடருங்கள். \b \q1 \v 15 யெகோவாவினுடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன; \q2 அவருடைய காதுகள் அவர்களுடைய கதறுதலைக் கவனமாய்க் கேட்கின்றன; \q1 \v 16 ஆனால் தீமை செய்கிறவர்களைப் பற்றிய நினைவை \q2 பூமியிலிருந்தே அகற்றிப்போடும்படி, \q2 யெகோவாவினுடைய முகம் அவர்களுக்கு விரோதமாய் இருக்கிறது. \b \q1 \v 17 நீதிமான்கள் கூப்பிடும்போது, யெகோவா அவர்களுக்குச் செவிகொடுக்கிறார்; \q2 அவர் அவர்களுடைய எல்லாத் துன்பங்களிலுமிருந்தும் அவர்களை விடுவிக்கிறார். \q1 \v 18 யெகோவா உள்ளம் உடைந்து போனவர்களுக்கு அருகே இருக்கிறார்; \q2 ஆவியில் நொந்து இருக்கிறவர்களை யெகோவா காப்பாற்றுகிறார். \b \q1 \v 19 நீதிமானுக்கு அநேக துன்பங்கள் வரலாம், \q2 ஆனாலும் அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவனை விடுவிக்கிறார். \q1 \v 20 அவர் அவனுடைய எலும்புகளையெல்லாம் பாதுகாக்கிறார்; \q2 அவற்றில் ஒன்றுகூட முறிக்கப்படாது. \b \q1 \v 21 தீமை கொடியவர்களைக் கொல்லும்; \q2 நீதிமான்களின் பகைவர்கள் குற்றவாளிகளாவார்கள். \q1 \v 22 யெகோவா தமது பணியாட்களைக் காப்பாற்றுகிறார்; \q2 அவரிடத்தில் தஞ்சம் அடைகிற யாரும் குற்றவாளியாகத் தீர்க்கப்படமாட்டான். \c 35 \cl சங்கீதம் 35 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, என்னோடு வழக்காடுகிறவர்களோடு வழக்காடி, \q2 என்னோடு போராடுகிறவர்களுடன் நீர் போராடும். \q1 \v 2 கேடயத்தையும் கவசத்தையும் எடுத்துக்கொள்ளும்; \q2 எனக்கு உதவிசெய்ய எழுந்து வாரும். \q1 \v 3 என்னைத் துரத்துகிறவர்களுக்கு எதிராக ஈட்டியையும் \q2 எறிவேலையும் நீட்டி இப்படி சொல்லும்: \q1 நீர் என் ஆத்துமாவுக்கு, \q2 “நானே உனது இரட்சிப்பு.” \b \q1 \v 4 எனது உயிரை வாங்கத் தேடுகிறவர்கள் \q2 அவமானம் அடைந்து வெட்கப்படுவார்களாக; \q1 என்னை அழிக்கச் சதிசெய்கிறவர்கள் \q2 மனம் தளர்ந்து பின்வாங்கிப் போவார்களாக. \q1 \v 5 யெகோவாவினுடைய தூதன் அவர்களைத் துரத்துவதால் \q2 காற்றிலே பறந்து போகிற பதரைப்போல் இருப்பார்களாக; \q1 \v 6 யெகோவாவினுடைய தூதன் அவர்களைப் பின்தொடர்வதால், \q2 அவர்களுடைய பாதை இருளாகவும், சறுக்குகிறதாகவும் இருப்பதாக. \b \q1 \v 7 காரணமின்றி அவர்கள் எனக்காக வலையை மறைத்து வைத்திருப்பதனாலும், \q2 காரணமின்றி அவர்கள் எனக்காக குழிதோண்டி இருப்பதனாலும், \q1 \v 8 அழிவு திடீரென அவர்கள்மேல் வருவதாக; \q2 அவர்கள் மறைத்துவைத்த வலை அவர்களையே சிக்கவைப்பதாக; \q2 அந்தக் குழிக்குள் அவர்களே விழுந்து அழிந்துபோவார்களாக. \q1 \v 9 அப்பொழுது என் ஆத்துமா யெகோவாவிடம் சந்தோஷப்பட்டு, \q2 அவருடைய இரட்சிப்பில் மகிழ்ச்சியடையும். \q1 \v 10 “யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? \q2 நீர் ஏழைகளை ஒடுக்குகிற வலிமையானவர்களிடம் இருந்தும், \q1 ஏழைகளையும் குறைவுள்ளோரையும் கொள்ளையிடுகிறவர்களிடம் இருந்தும் விடுவிக்கிறீர்” \q2 என்று என் முழு உள்ளமும் வியப்புடன் சொல்லும். \b \q1 \v 11 இரக்கமற்ற சாட்சிகள் முன்வருகிறார்கள்; \q2 எனக்குத் தெரியாதவைகளை அவர்கள் என்னிடத்தில் கேட்கிறார்கள். \q1 \v 12 நன்மைக்குப் பதிலாய் அவர்கள் எனக்குத் தீமை செய்து, \q2 என்னை உதவியின்றி விட்டுவிடுகிறார்கள். \q1 \v 13 ஆனாலும் அவர்கள் வியாதியாய் இருந்தபோதோ, \q2 நான் துக்கவுடை உடுத்தி உபவாசத்துடன் என்னைத் தாழ்த்தினேன். \q1 எனது மன்றாட்டுகள் பதிலளிக்கப்படாமல் என்னிடமே திரும்பிவந்தபோது, \q2 \v 14 எனது நண்பர்களைப்போலவும் சகோதரரைப் போலவும் \q2 நான் அவர்களுக்காக துக்கித்தேன்; \q1 என் தாய்க்காக அழுகிறது போல, \q2 துக்கத்தில் என் தலையை குனிந்து கொண்டேன். \q1 \v 15 ஆனால் நான் இடறியபோதோ, அவர்கள் ஒன்றுகூடி மகிழ்கிறார்கள்; \q2 நான் எதிர்பாராத வேளையில் தாக்குகிறவர்கள், எனக்கெதிராய் ஒன்றுகூடி, \q2 ஓய்வின்றி என்னை நிந்தித்தார்கள். \q1 \v 16 அவர்கள் இறை பக்தியற்றவர்களோடு சேர்ந்து பரியாசம் செய்து, \q2 என்னைப் பார்த்து பற்களைக் கடித்தார்கள். \b \q1 \v 17 யெகோவாவே, எதுவரையிலும் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்? \q2 அவர்கள் செய்யும் அழிவுகளிலிருந்து என்னையும் \q2 சிங்கங்களிடமிருந்து விலையுயர்ந்த என் உயிரையும் தப்புவியும். \q1 \v 18 அப்பொழுது மகா சபையிலே நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; \q2 மக்கள் கூட்டங்களின் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன். \q1 \v 19 காரணமின்றி என்னைப் பகைக்கிறவர்கள் \q2 என்னைப் பழித்து மகிழாமலும், \q1 காரணமின்றி என்னை வெறுக்கிறவர்கள் \q2 தவறான நோக்கத்தோடு கண் சிமிட்டாமலும் இருக்கட்டும். \q1 \v 20 அவர்கள் சமாதானமாய்ப் பேசுவதில்லை; \q2 நாட்டில் அமைதியாய் வாழ்கிறவர்களுக்கு எதிராய் \q2 வஞ்சகமாய்த் திட்டமிடுகிறார்கள். \q1 \v 21 அவர்கள் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து சொல்கிறதாவது: \q2 “ஆ! ஆ! எங்கள் கண்களாலேயே நாங்கள் இதைக் கண்டிருக்கிறோம்.” \b \q1 \v 22 யெகோவாவே, நீர் இதைக் கண்டிருக்கிறீர்; மவுனமாயிராதேயும். \q2 யெகோவாவே, என்னைவிட்டுத் தூரமாயிராதேயும். \q1 \v 23 விழித்தெழும், எழுந்து எனக்காக வழக்காடும்; \q2 என் இறைவனே, யெகோவாவே, எனக்காகப் போராடும். \q1 \v 24 என் இறைவனாகிய யெகோவாவே, உமது நீதியின் நிமித்தம் \q2 என்னை நியாயம் விசாரியும்; \q2 அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும். \q1 \v 25 “ஆ! நாங்கள் விரும்பியதே நடந்துவிட்டது!” \q2 என்று அவர்கள் சிந்திக்க விடாதேயும் அல்லது \q2 “நாங்கள் அவனை விழுங்கிவிட்டோம்” என்று அவர்கள் சொல்லவிடாதேயும். \b \q1 \v 26 என் துன்பத்தைக் குறித்து என்னைப் பழித்து மகிழ்கிறவர்கள் எல்லோரும் \q2 வெட்கமடைந்து கலங்குவார்களாக; \q1 எனக்கு மேலாகத் தங்களை உயர்த்துகிறவர்கள் எல்லோரும் வெட்கத்தாலும் \q2 அவமானத்தாலும் மூடப்படுவார்களாக. \q1 \v 27 என் நீதி நிலைநிறுத்தப்படுவதை விரும்புகிறவர்கள், \q2 சந்தோஷத்தினாலும் மகிழ்ச்சியினாலும் ஆர்ப்பரிப்பார்களாக. \q1 “தனது பணியாளனின் நலனை விரும்புகிற யெகோவா உயர்த்தப்படுவாராக” \q2 என்று அவர்கள் எப்பொழுதும் சொல்லட்டும். \b \q1 \v 28 எனது நாவு உமது நீதியை அறிவிக்கும், \q2 நாள்முழுவதும் உம்மைத் துதிக்கும். \c 36 \cl சங்கீதம் 36 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட யெகோவாவினுடைய ஊழியனாகிய தாவீதின் சங்கீதம். \q1 \v 1 இறைவனிடமிருந்து என் உள்ளத்திற்கு வந்த செய்தி: \q2 கொடியவர்களின் பாவம் அவர்களுடைய இருதயங்களில் நிலைத்திருக்கிறது; \q1 அவர்களுடைய கண்களில் \q2 இறைவனைப்பற்றிய பயம் இல்லை. \b \q1 \v 2 அவர்கள் பார்வையில் தங்களைப் பெருமையாக காணுவதால், \q2 அவர்கள் தங்களுடைய பாவத்தை உணர்வதும் இல்லை; அதை வெறுப்பதுமில்லை. \q1 \v 3 அவர்களுடைய வாயின் வார்த்தைகள் கொடுமையும் வஞ்சகமுமாய் இருக்கின்றன; \q2 அவர்கள் ஞானமாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் நிறுத்திவிட்டார்கள். \q1 \v 4 அவர்கள் தனது படுக்கையிலும் தீமையைச் சிந்திக்கிறார்கள்; \q2 பாவவழிக்கு அவர்கள் தங்களை ஒப்புவிக்கிறார்கள்; \q2 தீமையானதை விடாதிருக்கிறார்கள். \b \q1 \v 5 யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு வானங்களையும் \q2 உமது உண்மை மேகங்களையும் எட்டுகிறது. \q1 \v 6 உமது நீதி விசாலமான மலைகளைப் போன்றது, \q2 உமது நியாயம் மகா ஆழத்தைப் போன்றது. \q2 யெகோவாவே, நீரே மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். \q1 \v 7 இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பு எவ்வளவு அருமையானது! \q2 மனிதர்கள் உமது சிறகின் நிழலிலே தஞ்சம் அடைகிறார்கள். \q1 \v 8 உமது வீட்டின் செழிப்பினால் அவர்கள் நிறைவு பெருகிறார்கள்; \q2 நீர் உமது மகிழ்ச்சியின் நதியிலிருந்து அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கிறீர். \q1 \v 9 ஏனெனில், வாழ்வின் ஊற்று உம்மிடத்திலேயே இருக்கிறது; \q2 உமது ஒளியில் நாங்கள் வெளிச்சம் காண்கிறோம். \b \q1 \v 10 உம்மை அறிந்தவர்களுக்கு உமது உடன்படிக்கையின் அன்பையும் \q2 இருதயத்தில் நீதிமான்களுக்கு உமது நியாயத்தையும் வழங்கும். \q1 \v 11 அகந்தை உள்ளவர்களின் கால் எனக்கு விரோதமாய் வராதிருப்பதாக; \q2 கொடியவர்களின் கை என்னைத் துரத்தி விடாதிருப்பதாக. \q1 \v 12 தீமை செய்கிறவர்கள் எப்படி விழுந்து கிடக்கிறார்கள் என்று பாரும்! \q2 அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி, வீசி எறியப்பட்டுக் கிடக்கிறார்கள். \c 37 \cl சங்கீதம் 37 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 தீயவர்களைக் குறித்து பதற்றமடையாதே; \q2 அநியாயம் செய்பவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. \q1 \v 2 ஏனெனில் அவர்கள் புல்லைப்போல் விரைவாய் உலர்ந்து போவார்கள்; \q2 பச்சைத் தாவரத்தைப்போல் விரைவில் வாடிப்போவார்கள். \b \q1 \v 3 யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்; \q2 நாட்டில் குடியிருந்து, பாதுகாப்பாய் மேய்ச்சலில் மகிழ்ந்திரு. \q1 \v 4 யெகோவாவிடம் மனமகிழ்ச்சியாயிரு, \q2 அப்பொழுது அவர் உன் இருதயத்தின் வாஞ்சைகளை உனக்குத் தருவார். \b \q1 \v 5 யெகோவாவிடம் உன் வழியை ஒப்புவி; \q2 அவரில் நம்பிக்கையாயிரு, அப்பொழுது அவர் உனக்காக இவைகளைச் செய்வார். \q1 \v 6 அவர் உன் நீதியை காலை வெளிச்சத்தைப் போலவும், \q2 உன் நியாயத்தை பட்டப்பகலைப் போலவும் ஒளிரச் செய்வார். \b \q1 \v 7 யெகோவாவுக்கு முன்பாக அமைதியாய் இருந்து, \q2 அவருக்காகப் பொறுமையுடன் காத்திரு; \q1 மனிதர் தங்கள் வழிகளில் வெற்றி காணும்போதும் \q2 அவர்கள் தங்கள் பொல்லாத திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் நீ பதற்றமடையாதே. \b \q1 \v 8 கோபத்தை அடக்கு, கடுங்கோபத்தை விட்டுவிலகு; \q2 பதற்றமடையாதே; அது உன்னைத் தீமைக்கு மட்டுமே வழிநடத்தும். \q1 \v 9 ஏனெனில், தீயவர் முற்றிலும் அழிந்துபோவார்கள்; \q2 ஆனால் யெகோவாவிடம் எதிர்பார்ப்பாய் இருக்கிறவர்கள் \q2 நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள். \b \q1 \v 10 இன்னும் சிறிது நேரத்தில் கொடியவர்கள் இல்லாமல் போவார்கள்; \q2 நீ அவர்களைத் தேடினாலும் அவர்கள் காணப்படமாட்டார்கள். \q1 \v 11 ஆனால் சாந்தமுள்ளவர்கள், நாட்டை உரிமையாக்கிக்கொண்டு, \q2 சமாதானத்தின் செழிப்பை அனுபவிப்பார்கள். \b \q1 \v 12 கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகச் சதிசெய்து, \q2 அவர்களைப் பார்த்து பற்கடிக்கிறார்கள். \q1 \v 13 ஆனால் யெகோவா கொடியவர்களைப் பார்த்து நகைக்கிறார்; \q2 அவர்களுடைய முடிவுகாலம் வருகிறதென அவர் அறிகிறார். \b \q1 \v 14 ஏழைகளையும் எளியோரையும் வீழ்த்துவதற்கும், \q2 நேர்மையான வழியில் நடப்பவர்களை கொலைசெய்வதற்கும் \q1 கொடியவர்கள் வாளை உருவி \q2 வில்லை வளைக்கிறார்கள். \q1 \v 15 ஆனால் அவர்களுடைய வாள்கள் அவர்களுடைய இருதயங்களையே ஊடுருவக்குத்தும்; \q2 அவர்களுடைய வில்லுகளும் முறிக்கப்படும். \b \q1 \v 16 கொடியவர்களின் மிகுந்த செல்வத்தைப் பார்க்கிலும், \q2 நீதிமான்களிடம் இருக்கும் சிறிதளவே சிறந்தது. \q1 \v 17 ஏனெனில் கொடியவர்களின் பலம் உடைக்கப்படும்; \q2 நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார். \b \q1 \v 18 குற்றமற்றவர்களின் நாட்களை யெகோவா அறிந்திருக்கிறார்; \q2 அவர்களுடைய உரிமைச்சொத்து என்றும் நிலைத்திருக்கும். \q1 \v 19 அழிவு காலத்தில் அவர்கள் தளர்ந்து போகமாட்டார்கள்; \q2 பஞ்ச காலங்களிலும் நிறைவை அனுபவிப்பார்கள். \b \q1 \v 20 ஆனால் கொடியவர்களோ அழிந்துபோவார்கள், \q2 யெகோவாவின் பகைவர்கள் வயலின் பூவைப்போல் இருந்தாலும், \q2 அவர்கள் எரிந்து புகையைப்போல் இல்லாது ஒழிவார்கள். \b \q1 \v 21 கொடியவர்கள் கடன்வாங்கித் திருப்பிக்கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்; \q2 ஆனால் நீதிமான்கள் தாராள மனதுடன் கொடுக்கிறார்கள். \q1 \v 22 யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படுகிறவர்கள் \q2 நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; \q2 அவரால் சபிக்கப்படுகிறவர்களோ அழிந்துபோவார்கள். \b \q1 \v 23 ஒரு மனிதனுடைய வழியில் யெகோவா பிரியமாயிருந்தால், \q2 அவனுடைய காலடிகளை அவர் உறுதியாக்குகிறார். \q1 \v 24 அவன் இடறினாலும் விழமாட்டான்; \q2 ஏனெனில், யெகோவா தமது கரத்தினால் அவனைத் தாங்கிப் பிடிக்கிறார். \b \q1 \v 25 நான் வாலிபனாயிருந்தேன், இப்போது முதியவனாய் இருக்கிறேன்; \q2 ஆனால் நீதிமான்கள் கைவிடப்பட்டதையோ, \q2 அவர்களுடைய பிள்ளைகள் உணவுக்காக பிச்சையெடுத்ததையோ நான் ஒருபோதும் காணவில்லை. \q1 \v 26 நீதிமான் எப்பொழுதும் தாராளமாய்க் கடன் கொடுக்கிறார்கள்; \q2 அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். \b \q1 \v 27 தீமையிலிருந்து விலகி நன்மையைச் செய்; \q2 அப்பொழுது நீ என்றென்றும் நிலைத்திருப்பாய். \q1 \v 28 ஏனெனில் யெகோவா நியாயத்தில் பிரியப்படுகிறார்; \q2 தமக்கு உண்மையாய் இருப்பவர்களைக் கைவிடவுமாட்டார். \q2 அவர்கள் என்றென்றும் பாதுகாக்கப்படுவார்கள். \b \q2 ஆனால் கொடியவர்களின் சந்ததியோ அழிந்துபோம். \q1 \v 29 நீதிமான்கள் நாட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கி, \q2 அதில் என்றும் குடியிருப்பார்கள். \b \q1 \v 30 நீதிமான்களின் வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; \q2 அவர்களுடைய நாவு நியாயத்தைப் பேசும். \q1 \v 31 இறைவனின் சட்டம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது; \q2 அவர்களுடைய கால்கள் சறுக்குவதில்லை. \b \q1 \v 32 நீதிமான்களைக் கொல்லும்படி, \q2 கொடியவர்கள் அவர்களைப் பிடிக்கப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள். \q1 \v 33 ஆனால் யெகோவா, நீதிமான்களை கொடியவர்களின் கையில் விடுவதுமில்லை; \q2 நியாய்ந்தீர்க்கப்பட வரும்போது குற்றவாளிகளாக்க இடமளிப்பதுமில்லை. \b \q1 \v 34 யெகோவாவை எதிர்பார்த்திருந்து, \q2 அவருடைய வழியைக் கைக்கொள். \q1 நீ நாட்டை சொந்தமாக்கிக் கொள்ளும்படி, அவர் உன்னை உயர்த்துவார்; \q2 கொடியவர்கள் அழிந்துபோவார்கள், நீ அதைக் காண்பாய். \b \q1 \v 35 கொடியவனும் ஈவு இரக்கமற்றவனுமான ஒருவனைக் கண்டேன்; \q2 அவன் ஒரு பச்சைமரம் தனக்கேற்ற மண்ணில் செழித்திருப்பதைப் போல வளர்ந்தான். \q1 \v 36 ஆனால் அவன் விரைவாக ஒழிந்துபோனான்; \q2 நான் அவனைத் தேடியும்கூட அவனைக் காணவில்லை. \b \q1 \v 37 குற்றமற்றவனைக் கவனித்துப்பார், நேர்மையானவனை நோக்கிப்பார்; \q2 சமாதானமாய் இருக்கிற மனிதனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. \q1 \v 38 ஆனால் குற்றவாளிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; \q2 கொடியவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும். \b \q1 \v 39 நீதிமான்களின் இரட்சிப்பு யெகோவாவிடமிருந்து வரும்; \q2 கஷ்டமான காலத்தில் அவரே அவர்களின் அரணாய் இருக்கிறார். \q1 \v 40 யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை விடுவிக்கிறார்; \q2 அவர்கள் யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறபடியால், \q2 கொடியவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து இரட்சிக்கிறார். \c 38 \cl சங்கீதம் 38 \d நினைவுகூருதலுக்கான விண்ணப்பமாகிய தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே உம்முடைய கோபத்தில் என்னை சிட்சியாதேயும்; \q2 உமது கடுங்கோபத்தினால் என்னைத் தண்டியாதேயும். \q1 \v 2 உம்முடைய அம்புகள் என்னை ஊடுருவக் குத்தியிருக்கின்றன; \q2 உமது கரமோ என்மேல் பாரமாயிருக்கிறது. \q1 \v 3 உமது கடுங்கோபத்தால் என் உடலில் ஆரோக்கியமில்லை; \q2 என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை. \q1 \v 4 நான் தாங்கமுடியாத சுமையைப்போல \q2 என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் கடந்துபோயிற்று. \b \q1 \v 5 என் மதிகேட்டினால் \q2 எனக்கு ஏற்பட்ட புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. \q1 \v 6 நான் கூனிக்குறுகி மிகவும் தாழ்த்தப்பட்டுப் போனேன்; \q2 நாளெல்லாம் நான் துக்கத்தோடு திரிகிறேன். \q1 \v 7 எனக்குள் வேதனை எரிபந்தமாய் எரிகிறது; \q2 என் உடலில் சுகமே இல்லை. \q1 \v 8 நான் பலவீனமுற்று முற்றுமாய் உருக்குலைந்து போனேன்; \q2 உள்ளத்தின் வேதனையால் நான் கதறுகிறேன். \b \q1 \v 9 யெகோவாவே, என் வாஞ்சைகள் எல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; \q2 என் பெருமூச்சும் உமக்கு மறைவாயில்லை. \q1 \v 10 என் இருதயம் படபடக்கிறது, என் பெலன் குன்றிப்போகிறது; \q2 என் கண்களும்கூட ஒளியிழந்து மங்கிப்போயிற்று. \q1 \v 11 எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம், \q2 என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். \q2 என்னுடைய உறவினர்களும் என்னைவிட்டுத் தூரமாய் நிற்கிறார்கள். \q1 \v 12 என்னைக் கொல்லத் தேடுபவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; \q2 எனக்குத் தீமைசெய்யத் தேடுகிறவர்கள் என் அழிவைக் குறித்துப் பேசுகிறார்கள்; \q2 நாளெல்லாம் வஞ்சனையாய் சூழ்ச்சி செய்கிறார்கள். \b \q1 \v 13 நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், \q2 ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன். \q1 \v 14 காது காதுகேட்காதவனும், \q2 தன்னுடைய வாயினால் பதிலளிக்க முடியாதிருக்கிற மனிதனைப் போலானேன். \q1 \v 15 யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்; \q2 என் இறைவனாகிய ஆண்டவரே, நீர் எனக்கு பதில் கொடும். \q1 \v 16 “என் கால் சறுக்கும்போது, அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்; \q2 அவர்கள் என்னிமித்தம் ஏளனமாக பெருமைபாராட்ட விடாதேயும்” என்று நான் சொன்னேன். \b \q1 \v 17 நான் தடுமாறிவிழும் தருவாயில் இருக்கிறேன்; \q2 என் வேதனை எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. \q1 \v 18 என் அநியாயத்தை அறிக்கையிடுகிறேன்; \q2 என் பாவத்தினால் நான் கலங்கியிருக்கிறேன். \q1 \v 19 காரணமின்றி பலர் எனக்கு பகைவரானார்கள்; \q2 எதுவுமின்றி என்னை வெறுக்கிறவர்கள் ஏராளமாயிருக்கிறார்கள். \q1 \v 20 நான் நன்மையானதைச் செய்தபோதும், \q2 நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமை செய்பவர்கள் \q2 என்னைக் குற்றப்படுத்துகிறார்கள். \b \q1 \v 21 யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்; \q2 என் இறைவனே, என்னைவிட்டுத் தூரமாய் இருக்கவேண்டாம். \q1 \v 22 என் இரட்சகராகிய யெகோவாவே, \q2 எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும். \c 39 \cl சங்கீதம் 39 \d பாடகர் குழுத் தலைவனாகிய எதுத்தூனுக்கு ஒப்புவித்த தாவீதின் சங்கீதம். \q1 \v 1 நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து, \q2 என் நாவைப் பாவத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்வேன். \q1 கொடியவர்கள் எனக்குமுன் இருக்கும்வரை, \q2 நான் என் வாயை கடிவாளத்தால் பாதுகாப்பேன்.” \q1 \v 2 நான் பேசாமல் ஊமையாயிருந்தேன், \q2 நலமானதையும் பேசாமல் இருந்தேன். \q1 ஆனால் என் வேதனை அதிகரித்தது; \q2 \v 3 என் உள்ளம் எனக்குள்ளே அனல் கொண்டது; \q1 நான் தியானிக்கையில், அது நெருப்பாய்ப் பற்றிக்கொண்டது; \q2 அப்பொழுது என் நாவினால் இதைப் பேசினேன்: \b \q1 \v 4 “யெகோவாவே, என் வாழ்க்கையின் முடிவையும், \q2 என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும்; \q2 என் வாழ்வு இவ்வளவுதான் என்பதை எனக்குத் தெரியப்பண்ணும். \q1 \v 5 என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்; \q2 எனது ஆயுட்காலமோ உமக்கு முன்பாக இல்லாததுபோல் தோன்றுகிறது; \q1 பாதுகாப்பாய் இருப்பதுபோல தோன்றும் \q2 எல்லா மனிதரின் நிலையும் கானல்நீரைப் போன்றதே. \b \q1 \v 6 “மனிதன் வெறும் மாயையாகவே நடந்து திரிகிறான்; \q2 அவன் ஓடியோடி உழைத்து வீணாகவே அவன் செல்வத்தைச் சேர்த்துக் குவித்தாலும், \q2 அது யாரைப் போய்ச்சேரும் என அவன் அறியான். \b \q1 \v 7 “ஆனாலும் யெகோவாவே, நான் எதற்காகக் காத்திருக்கிறேன்? \q2 என் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது. \q1 \v 8 என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்; \q2 என்னை மூடரின் கேலிப் பொருளாக்காதேயும். \q1 \v 9 நான் மவுனமாயிருந்தேன்; \q2 நீரே இதைச் செய்தவராதலால், நான் என் வாயைத் திறக்கமாட்டேன். \q1 \v 10 உமது வாதையை என்னை விட்டகற்றும்; \q2 உமது கரத்தின் தாக்குதலால் நான் இளைத்துப் போனேன். \q1 \v 11 பாவத்தினிமித்தம் நீர் மனிதர்களைக் கண்டித்துத் தண்டிக்கும்போது, \q2 நீர் அவர்களுடைய செல்வத்தைப் பூச்சி அரிப்பதுபோல் கரைத்துவிடுகிறீர்; \q2 நிச்சயமாகவே எல்லா மனிதரும் கானல்நீரைப் போன்றவர்களே. \b \q1 \v 12 “யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; \q2 உதவிகேட்டு நான் கதறும் கதறுதலுக்குச் செவிகொடும்; \q2 என் அழுகையைக் கேளாமல் இருக்கவேண்டாம். \q1 என் தந்தையர்கள் எல்லோரையும் போலவே, \q2 நானும் உம்முடன் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனாகவும், \q2 குடியுரிமை அற்றவனாகவும் குடியிருக்கிறேன். \q1 \v 13 நான் இவ்விடத்தைவிட்டுப் பிரிந்து இல்லாமல் போகுமுன்னே, \q2 நான் திரும்பவும் மகிழும்படியாய், \q2 உமது கோபத்தின் பார்வையை என்னைவிட்டு அகற்றும்.” \c 40 \cl சங்கீதம் 40 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 நான் யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; \q2 அவர் என் பக்கமாய்த் திரும்பி என் கதறுதலைக் கேட்டார். \q1 \v 2 அழிவின் குழியிலிருந்தும் \q2 மண் சகதியிலிருந்தும் அவர் என்னை வெளியே தூக்கியெடுத்தார், \q1 அவர் கற்பாறைமேல் என் கால்களை நிறுத்தி, \q2 நிற்பதற்கு ஒரு உறுதியான இடத்தையும் எனக்குக் கொடுத்தார். \q1 \v 3 எங்கள் இறைவனைத் துதிக்கும் ஒரு துதியின் கீதமான \q2 புதுப்பாட்டை அவர் என் வாயிலிருந்து வரச்செய்தார். \q1 அநேகர் அதைக்கண்டு பயந்து, \q2 யெகோவாவிடம் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள். \b \q1 \v 4 பொய்யான கடவுள்களைப் பற்றிக்கொள்ளாமலும், \q2 அகந்தை உள்ளவர்களைச் சாராமலும், \q2 யெகோவாவைத் தனது நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். \q1 \v 5 என் இறைவனாகிய யெகோவாவே, \q2 நீர் எங்களுக்காக செய்துள்ள அதிசயங்களும் \q2 உம்முடைய திட்டங்களும் அநேகம். \q1 உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை; \q2 அவைகளைக் குறித்து நான் விவரிக்கப்போனால், \q2 அவை எடுத்துரைக்க முடியாதளவு ஏராளமானவைகள். \b \q1 \v 6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; \q2 தகன காணிக்கைகளும் பாவநிவாரண காணிக்கைகளும் உமக்குத் தேவையில்லை; \q2 ஆனால் நான் கேட்டுக் கீழ்ப்படிவதற்கு என் செவிகளைத் திறந்துவிட்டீர். \q1 \v 7 அப்பொழுது நான், “இதோ, நான் வருகிறேன்; \q2 புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறதே. \q1 \v 8 என் இறைவனே, நான் உமது விருப்பத்தைச் செய்ய விரும்புகிறேன்; \q2 உமது சட்டம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று சொன்னேன். \b \q1 \v 9 மகா சபையில் உமது நீதியை பிரசித்தப்படுத்துகிறேன்; \q2 யெகோவாவே, நீர் அறிந்திருக்கிறபடி \q2 நான் என் உதடுகளை மூடுவதில்லை. \q1 \v 10 நான் உமது நீதியை என் உள்ளத்தில் மறைப்பதில்லை; \q2 உமது உண்மையையும், \q1 இரட்சிப்பையும் குறித்து நான் பேசுகிறேன். \q2 உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் மகா சபைக்கு நான் மறைக்கவுமில்லை. \b \q1 \v 11 யெகோவாவே, எனக்கு இரக்கத்தைக் காட்டாமல் விடாதேயும்; \q2 உமது உடன்படிக்கையின் அன்பும் உமது உண்மையும் எப்போதும் என்னைப் பாதுகாப்பதாக. \q1 \v 12 ஏனெனில் எண்ணற்ற இன்னல்கள் என்னைச் சூழ்கின்றன; \q2 என் பாவங்கள் என்னை மூடிக்கொண்டதால், நான் பார்க்க முடியாதிருக்கிறேன். \q1 என் தலையிலுள்ள முடியைப் பார்க்கிலும், அவைகள் அதிகமானவை; \q2 அதினால் என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. \q1 \v 13 யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றும்; \q2 யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும். \b \q1 \v 14 என் உயிரை அழிக்கத் தேடுகிற யாவரும் \q2 வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக; \q1 எனது அழிவை விரும்புகிற யாவரும் \q2 அவமானமடைந்து திரும்புவார்களாக. \q1 \v 15 என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள் \q2 அவர்களுடைய வெட்கத்தினால் நிலைகுலைந்து போவார்களாக. \q1 \v 16 ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் \q2 உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; \q1 உமது இரட்சிப்பை விரும்புவோர், “யெகோவா பெரியவர்!” \q2 என்று எப்போதும் சொல்வார்களாக. \b \q1 \v 17 நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; \q2 யெகோவா என்னை நினைப்பாராக. \q1 நீரே என் துணை, நீரே என் மீட்பர்; \q2 என் இறைவனே, தாமதியாதேயும். \c 41 \cl சங்கீதம் 41 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 ஏழைகள்மீது கவனம் வைப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; \q2 துன்ப நாளில் யெகோவா அவர்களை விடுவிப்பார். \q1 \v 2 யெகோவா அவர்களைக் காப்பாற்றி அவர்களுடைய உயிரைப் பாதுகாப்பார்; \q2 அவர்கள் பூமியில் ஆசீர்வாதமாக இருப்பார்கள்; \q2 யெகோவா அவர்களுடைய பகைவர்களின் கைக்கு அவர்களை அவனை ஒப்புவிக்கமாட்டார். \q1 \v 3 அவர்களுடைய வியாதிப்படுக்கையில் யெகோவா அவர்களைத் தாங்குவார்; \q2 படுக்கையில் வியாதியாய் இருக்கும் அவர்களுக்குச் சுகத்தைக் கொடுப்பார். \b \q1 \v 4 நான், “யெகோவாவே என்மேல் இரக்கமாயிரும்; \q2 உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்திருக்கிறேன், \q2 என்னைக் குணமாக்கும்” என்று சொன்னேன். \q1 \v 5 என் பகைவர்கள் என்னைக்குறித்து தீமையானதைப் பேசி, \q2 “அவன் எப்பொழுது சாவான்? அவன் பெயர் எப்பொழுது அழியும்” என்று சொல்கிறார்கள். \q1 \v 6 அவர்களில் ஒருவன் என்னைப் பார்க்க வருகையில், \q2 தன் உள்ளத்தில் அவதூறை சேகரித்து உதட்டில் வஞ்சனையாகப் பேசுகிறான்; \q2 பின்பு அவன் வெளியே போய் அதைப் பரப்புகிறான். \b \q1 \v 7 என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு விரோதமாய் ஒன்றுகூடி, முணுமுணுத்து, \q2 அவர்கள் எனக்குப் பெருங்கேடு நினைத்து சொன்னதாவது: \q1 \v 8 “ஒரு கொடியநோய் அவனைப் பிடித்துக்கொண்டது; \q2 அவன் படுத்திருக்கிற இடத்தைவிட்டு ஒருபோதும் எழுந்திருக்கமாட்டான்.” \q1 \v 9 நான் நம்பியிருந்தவனும் \q2 அப்பத்தை என்னுடன் பகிர்ந்து சாப்பிட்டவனுமான, \q1 என் நெருங்கிய நண்பன் தன் குதிகாலை \q2 எனக்கெதிராகத் தூக்கினான். \b \q1 \v 10 ஆனாலும் யெகோவாவே, நீர் என்மேல் இரக்கமாயிரும்; \q2 நான் அவர்களுக்குப் பதிற்செய்யும்படி என்னை எழுப்பும். \q1 \v 11 என் பகைவன் என்னை மேற்கொள்ளாதபடியால், \q2 நீர் என்னில் பிரியமாய் இருக்கிறீரென்று நான் அறிகிறேன். \q1 \v 12 நீர் என் உத்தமத்தில் என்னை ஆதரித்து, \q2 உமது சமுகத்தில் எப்போதும் என்னை வைத்துக்கொள்கிறீர். \b \b \q1 \v 13 இஸ்ரயேலின் இறைவனான யெகோவாவுக்கு \q2 நித்திய நித்தியமாய் துதி உண்டாகட்டும். \qc ஆமென், ஆமென். \c 42 \ms பகுதி ii \mr சங்கீதம் 42–72 \cl சங்கீதம் 42 \d கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம். \q1 \v 1 மான் நீரோடைகளைத் தேடி ஏங்குவது போல், \q2 இறைவனே என் ஆத்துமா உம்மைத் தேடி ஏங்குகிறது. \q1 \v 2 என் ஆத்துமா இறைவனுக்காக, உயிருள்ள இறைவனுக்காக தாகம் கொள்கிறது; \q2 நான் எப்பொழுது இறைவனுடைய சமுகத்தில் வந்து நிற்பேன்? \q1 \v 3 மனிதர்களோ நாள்முழுதும் என்னைப் பார்த்து, \q2 “உன் இறைவன் எங்கே?” என்று கேட்பதால், \q1 இரவும் பகலும் \q2 என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று. \q1 \v 4 என் ஆத்துமா எனக்குள் உருகுகையில் \q2 இவைகள் என் நினைவுக்கு வருகின்றன: \q1 முந்திய நாட்களில் நான் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து, \q2 இறைவனின் வீட்டிற்கு அவர்களோடு ஊர்வலமாய் நடந்து சென்றேன்; \q1 பண்டிகை கொண்டாடும் மக்கள் கூட்டத்தின் நடுவே, \q2 மகிழ்ச்சியின் சத்தத்தோடும் துதியின் சத்தத்தோடும் நடந்து சென்றேன். \b \q1 \v 5 என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? \q2 ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்? \q1 இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு; \q2 நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக \q2 இன்னும் அவரைத் துதிப்பேன். \b \q1 \v 6 என் இறைவனே, என் ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகிறது; \q2 அதினால் நான் எர்மோன் மலைகள் இருக்கும் \q1 யோர்தான் நதி தொடங்கும் நாட்டிலிருந்தும், \q2 மீசார் மலையிலிருந்தும் உம்மை நினைவுகூருவேன். \q1 \v 7 உமது அருவிகளின் இரைச்சலினால் \q2 ஆழம் ஆழத்தைக் கூப்பிடுகிறது; \q1 உம்முடைய எல்லா அலைகளும், \q2 பேரலைகளும் எனக்கு மேலாக மோதிச் செல்கின்றன. \b \q1 \v 8 பகலில் யெகோவா தமது உடன்படிக்கையின் அன்பை எனக்குக் கொடுக்கிறார்; \q2 இரவிலோ, அவருடைய பாடல் என்னோடு இருக்கிறது; \q2 என் வாழ்வின் இறைவனை நோக்கிய மன்றாட்டாகவே அது இருக்கிறது. \b \q1 \v 9 நான் என் கன்மலையாகிய இறைவனிடம், \q2 “நீர் ஏன் என்னை மறந்து விட்டீர்? \q1 பகைவனால் ஒடுக்கப்பட்டு \q2 நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்?” என்கிறேன். \q1 \v 10 நாளெல்லாம் என் பகைவர்கள் என்னைப் பார்த்து, \q2 “உன் இறைவன் எங்கே?” \q1 என்று என்னைப் நிந்திப்பதால், \q2 என் எலும்புகள் சாவுக்கேதுவான வேதனையை அடைகின்றன. \b \q1 \v 11 என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? \q2 நீ ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்? \q1 இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு; \q2 நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக \q2 இன்னும் அவரைத் துதிப்பேன். \c 43 \cl சங்கீதம் 43 \q1 \v 1 இறைவனே, என் நீதியை மெய்ப்பித்துக் காட்டும்; \q2 இறை பக்தியற்ற நாட்டினருக்கு விரோதமாய் \q2 எனக்காக வழக்காடும், \q1 வஞ்சகமும் கொடுமையுமான மனிதரிடமிருந்து \q2 என்னைத் தப்புவியும். \q1 \v 2 ஏனெனில் நீரே என் இறைவன், என் கோட்டை. \q2 நீர் ஏன் என்னைப் புறக்கணித்துவிட்டீர்? \q1 பகைவனால் ஒடுக்கப்பட்டு, \q2 நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்? \q1 \v 3 உமது ஒளியையும் உமது உண்மையையும் அனுப்பும்; \q2 அவை எனக்கு வழிகாட்டட்டும். \q1 நீர் குடியிருக்கும் இடமான \q2 உமது பரிசுத்த மலைக்கு அவை என்னைக் கொண்டுவரட்டும். \q1 \v 4 அப்பொழுது இறைவனின் பலிபீடத்தண்டைக்குப் போவேன்; \q2 என் மகிழ்ச்சியும் என் களிப்புமான இறைவனிடத்திற்குப் போவேன். \q1 இறைவனே, என் இறைவனே, \q2 யாழ் இசைத்து உம்மைத் துதிப்பேன். \b \q1 \v 5 என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்? \q2 ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்? \q1 இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு; \q2 நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக \q2 இன்னும் அவரைத் துதிப்பேன். \c 44 \cl சங்கீதம் 44 \d கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட \tl மஸ்கீல்\tl* என்னும் சங்கீதம். \q1 \v 1 இறைவனே, வெகுகாலத்திற்குமுன் \q2 எங்கள் முன்னோர்களின் நாட்களில் நீர் செய்தவற்றை \q1 அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்; \q2 அவற்றை நாங்கள் எங்கள் காதுகளால் கேட்டிருக்கிறோம். \q1 \v 2 நீர் உமது கரத்தால் நாடுகளை வெளியே துரத்தி, \q2 எங்கள் முன்னோர்களைக் குடியமர்த்தினீர்; \q1 நீர் அந்நாட்டினரை தண்டித்து, \q2 எங்கள் முன்னோரைச் செழிக்கப் பண்ணினீர். \q1 \v 3 அவர்கள் தங்கள் வாளினால் நாட்டை உடைமையாக்கவும் இல்லை, \q2 அவர்களுடைய புயத்தால் அவர்கள் வெற்றிகொள்ளவும் இல்லை; \q1 நீர் அவர்களில் பிரியம் கொள்வதினால் உமது வலதுகரமும் உமது வலிய புயமும் \q2 உமது முகத்தின் ஒளியுமே வெற்றிகொள்ளச் செய்தது. \b \q1 \v 4 இறைவனே, நீரே என் அரசன்; \q2 யாக்கோபுக்கு வெற்றியைக் கட்டளையிடுகிறவர் நீரே. \q1 \v 5 உம்மாலே நாங்கள் எங்கள் பகைவர்களை விழத்தள்ளி, \q2 உமது பெயராலே எங்கள் எதிரிகளை மிதிப்போம். \q1 \v 6 என் வில்லிலே நான் நம்பிக்கை வைக்கிறதில்லை, \q2 என் வாள் வெற்றியைக் கொடுப்பதில்லை; \q1 \v 7 ஆனால் நீரே எங்கள் பகைவர்கள்மீது வெற்றியைக் கொடுத்து, \q2 எங்கள் விரோதிகளை வெட்கப்படுத்துகிறீர். \q1 \v 8 நாங்களோ நாள்தோறும் இறைவனிலேயே பெருமை பாராட்டுகிறோம்; \q2 நாங்கள் உமது பெயரை என்றென்றும் துதிப்போம். \b \q1 \v 9 இப்பொழுதோ நீர் எங்களைப் புறக்கணித்து, சிறுமைப்படுத்திவிட்டீர்; \q2 நீர் எங்கள் இராணுவத்துடன் செல்வதுமில்லை. \q1 \v 10 எங்கள் பகைவருக்கு முன்பாக எங்களைப் பின்வாங்கச் செய்தீர்; \q2 எங்கள் விரோதிகள் எங்களைச் சூறையாடி விட்டார்கள். \q1 \v 11 செம்மறியாடுகளைப்போல் நீர் எங்களை இரையாகக் விட்டுக்கொடுத்தீர்; \q2 நாடுகளுக்கு மத்தியில் எங்களைச் சிதறடித்தீர். \q1 \v 12 நீர் உமது மக்களை மலிவாக விற்றுப் போட்டீர்; \q2 அவர்களை எவ்வித இலாபமுமின்றி விற்றுப்போட்டீரே. \b \q1 \v 13 எங்கள் அயலவருக்கு எங்களை ஒரு நிந்தையாக்கி விட்டீர்; \q2 எங்களைச் சுற்றி இருக்கிறவர்களுக்கு எங்களை இகழ்ச்சியும் ஏளனமும் ஆக்கினீர். \q1 \v 14 நீர் எங்களைப் நாடுகளுக்கு நடுவில் ஒரு பழமொழியாக ஆக்கினீர்; \q2 மக்கள் கூட்டம் எங்களைப் பார்த்து ஏளனமாய்த் தங்கள் தலையை அசைக்கிறார்கள். \q1 \v 15 நாள்தோறும் நான் அவமானத்தில் வாழ்கிறேன்; \q2 என் முகம் வெட்கத்தினால் மூடப்பட்டிருக்கிறது. \q1 \v 16 என்னை நிந்தித்துத் தூஷித்து பழிவாங்கத் துடிக்கும் \q2 பகைவர்களின் நிந்தனைகளினாலேயே வெட்கப்படுகிறேன். \b \q1 \v 17 நாங்கள் உம்மை மறவாமல் இருந்தோம்; \q2 உமது உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தோம்; \q2 ஆனாலும், இவையெல்லாம் எங்களுக்கு நடந்தன. \q1 \v 18 எங்கள் இருதயம் பின்வாங்கவுமில்லை, \q2 எங்கள் பாதங்கள் உமது வழியைவிட்டு விலகவுமில்லை. \q1 \v 19 ஆனாலும் நீர் எங்களை இடித்து, எங்கள் இடங்களை நரிகளின் உறைவிடமாக்கினீர்; \q2 காரிருளினால் எங்களை மூடினீர். \b \q1 \v 20 எங்கள் இறைவனின் பெயரை நாங்கள் மறந்திருந்தால், \q2 அல்லது வேறுநாட்டின் தெய்வமல்லாததை நோக்கி எங்கள் கைகளை நீட்டியிருந்தால், \q1 \v 21 இறைவன் அதைக் கண்டுபிடியாமல் இருந்திருப்பாரோ? \q2 அவர் இருதயத்தின் இரகசியங்களை அறிகிறவராய் இருக்கிறாரே. \q1 \v 22 ஆனாலும் உமக்காகவே நாங்கள் நாள்முழுதும் மரணத்தை சந்திக்கிறோம்; \q2 அடித்துக் கொல்லப்பட இருக்கும் செம்மறியாடுகளைப்போல் எண்ணப்படுகிறோம். \b \q1 \v 23 யெகோவாவே, எழுந்தருளும்! ஏன் நித்திரை செய்கிறீர்? \q2 விழித்துக்கொள்ளும்! எங்களை என்றென்றும் புறக்கணியாதேயும். \q1 \v 24 நீர் ஏன் உமது முகத்தை மறைத்து, \q2 எங்கள் துன்பத்தையும் நாங்கள் ஒடுக்கப்படுவதையும் மறந்துவிடுகிறீர்? \b \q1 \v 25 நாங்கள் தூசியில் தள்ளப்பட்டிருக்கிறோம்; \q2 எங்கள் உடல்கள் தரையோடு ஒட்டியிருக்கிறது. \q1 \v 26 நீர் எழுந்து எங்களுக்கு உதவிசெய்யும்; \q2 உமது உடன்படிக்கையின் அன்பினால் எங்களை மீட்டுக்கொள்ளும். \c 45 \cl சங்கீதம் 45 \d “லீலிமலர்கள்” என்ற சுருதியிலே வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட திருமணப் பாடலாகிய சங்கீதம். \q1 \v 1 அரசனைப் புகழ்ந்து, நான் கவிகளைப் பாடும்போது, \q2 அதின் உயர்வான கருப்பொருளால் என் உள்ளம் பொங்குகிறது; \q2 என் நாவு சிறந்த ஓர் எழுத்தாளனின் எழுதுகோல். \b \q1 \v 2 மனுஷரெல்லாரிலும் அழகுமிக்கவர் நீரே, \q2 இறைவன் என்றென்றுமாய் உம்மை ஆசீர்வதித்திருப்பதால், \q2 உமது உதடுகளில் கிருபை பொழிகிறது. \b \q1 \v 3 வலிமை மிகுந்தவரே, உமது வாளை எடுத்து உமது இடையில் கட்டிக்கொள்ளும்; \q2 மகிமையினாலும் மகத்துவத்தினாலும் உம்மை உடுத்திக்கொள்ளும். \q1 \v 4 உண்மையும் தாழ்மையும் நீதியும் உயர, \q2 உமது மகத்துவத்தில் வெற்றியுடன் விரைந்து வாரும்; \q2 உமது வலதுகரம் பயங்கரமான செயல்களைச் செய்யட்டும். \q1 \v 5 உமது கூர்மையான அம்புகள் அரசனின் பகைவருடைய இருதயத்திற்குள் பாயட்டும்; \q2 நாடுகள் உமது பாதத்தின்கீழ் வீழ்ச்சியடையட்டும். \q1 \v 6 இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும்; \q2 நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும். \q1 \v 7 நீர் நீதியை விரும்பி அநீதியை வெறுக்கிறீர்; \q2 ஆகையால் இறைவனே, உமது இறைவன் உம்மை மகிழ்ச்சியின் எண்ணெயால் அபிஷேகித்து, \q2 உமது தோழர்களுக்கு மேலாக உம்மை உயர்த்திவைத்தார். \q1 \v 8 உமது ஆடைகளை எல்லாம் வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கம் \q2 ஆகியவற்றின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது. \q1 யானைத் தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனைகளிலிருந்து வரும், \q2 கம்பியிசைக் கருவிகளின் இசை உம்மை மகிழ்விக்கிறது. \q1 \v 9 உமது கனம்பொருந்திய பெண்கள் நடுவில் அரச குமாரத்திகளும் இருக்கிறார்கள். \q2 அரச மணமகளோ, ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள். \b \q1 \v 10 மகளே கேள், உன் செவியைச் சாய்த்துக் கவனி: \q2 உன் மக்களையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. \q1 \v 11 அரசர் உன் அழகில் பிரியப்படுவார்; \q2 அவரே உனது யெகோவா, ஆதலால் அவரை கனம்பண்ணு. \q1 \v 12 தீரு நகர மக்கள் ஒரு வெகுமதியுடன் வருவார்கள்; \q2 செல்வந்தர் உன் தயவை நாடுவார்கள். \q1 \v 13 இளவரசி எல்லா மகிமையோடும் அவளது அறைக்குள் இருக்கிறாள்; \q2 அவளுடைய உடை தங்கச் சரிகையாயிருக்கிறது. \q1 \v 14 அவள் அலங்கார வேலைப்பாடு கொண்ட உடைகளோடு \q2 அரசனிடம் அழைத்துச் செல்லப்படுகிறாள்; \q1 அவளுடைய தோழியர்களாகிய கன்னியர்கள் \q2 அவளைத் தொடர்ந்து உம்மிடம் அழைத்து வருகிறார்கள். \q1 \v 15 அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் \q2 அவர்கள் அரசனின் அரண்மனைக்குள் வருகிறார்கள். \b \q1 \v 16 உம்முடைய மகன்கள் உமது முற்பிதாக்களின் இடத்தில் நிலைத்திருப்பார்கள்; \q2 அவர்களை நீர் நாடு முழுவதிலும் இளவரசர்களாகும்படி செய்வீர். \b \q1 \v 17 நான் எல்லா தலைமுறைகளின் நடுவிலும் \q2 உம்மைக் குறித்த நினைவுகளை நிலைபெறச் செய்வேன்; \q2 அதினால் மக்கள் கூட்டம் உம்மை என்றென்றைக்கும் துதிப்பார்கள். \c 46 \cl சங்கீதம் 46 \d அலாமோத்தில் வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாடல். \q1 \v 1 இறைவன் நமக்கு புகலிடமும் பெலனுமாய் இருக்கிறார், \q2 ஆபத்துக் காலத்தில் நம்மோடிருந்து உதவுகிறவர் அவரே. \q1 \v 2 ஆகையால் பூமி பிளவுண்டு போனாலும் \q2 மலைகள் கடலின் நடுவில் விழுந்தாலும் \q1 \v 3 கடலின் தண்ணீர் கொந்தளித்துப் பொங்கினாலும் \q2 அதின் எழுச்சியால் மலைகள் அதிர்ந்தாலும் நாம் பயப்படமாட்டோம். \b \q1 \v 4 ஒரு நதி உண்டு, அதின் நீரோடைகள் மகா உன்னதமானவர் வாசம்பண்ணும் \q2 பரிசுத்த இடமான இறைவனின் நகரத்தை மகிழ்ச்சியாக்குகின்றன. \q1 \v 5 இறைவன் அதற்குள் இருக்கிறார், அது விழுந்து போகாது; \q2 அதிகாலையில் இறைவன் அதற்கு உதவி செய்வார். \q1 \v 6 நாடுகள் குமுறி எழுகின்றார்கள், அரசுகள் விழுகின்றன; \q2 யெகோவா தன் குரலை எழுப்புகிறார், பூமி உருகுகிறது. \b \q1 \v 7 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; \q2 யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார். \b \q1 \v 8 யெகோவாவினுடைய செயல்களையும் \q2 அவர் பூமியின்மேல் கொண்டுவந்த அழிவுகளையும் வந்து பாருங்கள். \q1 \v 9 யெகோவா பூமியின் கடைசிவரை \q2 யுத்தங்களை நிறுத்துகிறார்; \q1 அவர் வில்லை முறித்து, ஈட்டியை நொறுக்குகிறார்; \q2 கேடயங்களை நெருப்பினால் எரிக்கிறார். \q1 \v 10 யெகோவா சொல்கிறார், “நீங்கள் அமைதியாய் இருந்து \q2 நானே இறைவன் என்று அறிந்துகொள்ளுங்கள். \q1 நான் நாடுகளுக்கு மத்தியில் புகழ்ந்து உயர்த்தப்படுவேன், \q2 நான் பூமியிலே புகழ்ந்து உயர்த்தப்படுவேன்.” \b \q1 \v 11 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; \q2 யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார். \c 47 \cl சங்கீதம் 47 \d கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். \q1 \v 1 நாடுகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளைத் தட்டுங்கள்; \q2 மகிழ்ச்சியின் சத்தத்துடன் ஆர்ப்பரித்து இறைவனைத் துதியுங்கள். \b \q1 \v 2 உன்னதமானவராகிய யெகோவா அச்சத்திற்கு உரியவர், \q2 அவர் பூமி முழுவதற்கும் மகா அரசர். \q1 \v 3 அவர் மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார், \q2 மக்கள் கூட்டத்தை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார். \q1 \v 4 இறைவன் தமக்கு அன்பான யாக்கோபியரை, \q2 தமது உரிமைச்சொத்தாக தேர்ந்தெடுப்பார். \b \q1 \v 5 இறைவன் மகிழ்ச்சியின் ஆரவாரத்தின் மத்தியில் எழுந்தருளினார்; \q2 யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர்த்தப்பட்டிருக்கிறார். \q1 \v 6 இறைவனுக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்; \q2 நமது அரசருக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள். \q1 \v 7 ஏனெனில் இறைவனே பூமி முழுவதற்கும் அரசராய் இருக்கிறார்; \q2 அவருக்குத் துதியின் சங்கீதத்தைப் பாடுங்கள். \b \q1 \v 8 இறைவன் நாடுகளுக்கு மேலாக ஆளுகை செய்கிறார்; \q2 அவர் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார். \q1 \v 9 மக்களின் தலைவர்கள், \q2 ஆபிரகாமின் இறைவனுடைய மக்களாக ஒன்றுகூடுகிறார்கள். \q1 ஏனெனில் பூமியின் அரசர்கள் இறைவனுக்கே உரியவர்கள்; \q2 அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார். \c 48 \cl சங்கீதம் 48 \d கோராகியரின் சங்கீதப் பாட்டு. \q1 \v 1 யெகோவா மிகவும் பெரியவர், \q2 நமது இறைவனுடைய நகரத்தில், அவருடைய பரிசுத்த மலையில் \q2 அவர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். \b \q1 \v 2 சீயோன் மலை தன் கம்பீரத்தில் அழகாய், \q2 முழு பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது, \q1 வடதிசையின் மிக உயர்ந்த மேடுகளைப் போல இருக்கிற அது \q2 மகா அரசரின் நகரம். \q1 \v 3 இறைவன் அதின் கோட்டைப் பட்டணங்களில் வீற்றிருந்து, \q2 அவர்தாமே அதின் கோட்டை எனக் காண்பிக்கிறார். \b \q1 \v 4 அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து \q2 முன்னேறி வந்தபோது, \q1 \v 5 சீயோன் மலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, \q2 திகிலடைந்து தப்பி ஓடினார்கள். \q1 \v 6 அங்கே நடுக்கம் அவர்களைப் பிடித்தது; \q2 பிரசவிக்கும் பெண்ணுக்கு உண்டாகுவதைப் போன்ற வேதனை அவர்களைப் பிடித்தது. \q1 \v 7 யெகோவாவே, நீர் கிழக்குக் காற்றினால், \q2 தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறீர். \b \q1 \v 8 நாம் கேள்விப்பட்டது போலவே, \q2 சேனைகளின் இறைவனுடைய பட்டணத்தில், \q1 நம்முடைய யெகோவாவின் பட்டணத்தில் \q2 நாம் கண்டும் இருக்கிறோம்: \q1 இறைவன் அந்தப் பட்டணத்திற்கு \q2 என்றென்றைக்கும் பாதுகாப்பு கொடுக்கிறார். \b \q1 \v 9 இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பைக்குறித்து, \q2 உமது ஆலயத்தில் நாங்கள் தியானிக்கிறோம். \q1 \v 10 இறைவனே, உமது பெயரைப் போலவே \q2 உமது துதியும் பூமியின் கடைசிவரை எட்டுகிறது; \q2 உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது. \q1 \v 11 உமது நியாயத்தீர்ப்பின் நிமித்தம் \q2 சீயோன் மலை களிகூருகிறது, \q2 யூதாவின் கிராமங்கள் மகிழ்கிறது. \b \q1 \v 12 சீயோனைச் சுற்றி உலாவுங்கள்; \q2 அதின் கோபுரங்களைக் கணக்கிடுங்கள். \q1 \v 13 அவற்றைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு \q2 நீங்கள் சொல்லும்படி, \q1 அதின் காவல் அரண்களை நன்றாய் கவனியுங்கள்; \q2 கோட்டைப் பட்டணங்களைப் பார்வையிடுங்கள். \b \q1 \v 14 ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்; \q2 மரணம் வரையும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருப்பார். \c 49 \cl சங்கீதம் 49 \d கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். \q1 \v 1 மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள், \q2 இந்த உலகத்தில் வாழ்கிறவர்களே, \q1 \v 2 தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வந்தரே, ஏழைகளே, \q2 எல்லோரும் ஒருமித்துச் செவிகொடுங்கள்: \q1 \v 3 என் வாய் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசும்; \q2 என் இருதயத்திலிருந்து வரும் தியானம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும். \q1 \v 4 நான் பழமொழிக்கு என் செவியைச் சாய்ப்பேன்; \q2 விடுகதையை யாழ் இசைத்து விவரிப்பேன்: \b \q1 \v 5 தீங்கு நாட்கள் வரும்போதும், \q2 கொடிய ஏமாற்றுக்காருடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போதும் \q2 நான் ஏன் பயப்படவேண்டும்? \q1 \v 6 அவர்கள் தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைத்து, \q2 தங்கள் மிகுதியான உடைமைகளில் பெருமை பாராட்டுகிறார்கள். \q1 \v 7 ஒருவனாலும் இன்னொருவனுடைய உயிரை மீட்கமுடியாது; \q2 அவனுக்கான மீட்பின் பதிலீட்டை இறைவனுக்குக் கொடுக்கவும் முடியாது. \q1 \v 8 ஏனெனில் உயிருக்கான மீட்பின் பதிலீடு விலையுயர்ந்தது; \q2 எந்த விலை கொடுத்தும் மீட்கமுடியாது. \q1 \v 9 அவர்கள் அழிவைக் காணாமல் \q2 என்றென்றும் வாழும்படி எப்படிப்பட்ட விலையும் கொடுக்க முடியாது. \q1 \v 10 ஞானிகள் சாவதையும், \q2 மூடரும் புத்தியற்றவர்களும் அழிவதையும் எல்லோராலும் காணமுடியும்; \q2 அவர்கள் தங்கள் செல்வத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வதைக் காணலாம். \q1 \v 11 தங்கள் பெயர்களையே அவர்கள் நிலங்களுக்கு வைத்தாலும், \q2 அவர்களுடைய கல்லறைகளே என்றென்றைக்கும் அவர்கள் வீடாகவும் \q2 முடிவற்ற தலைமுறைகளுக்கு அவர்களுடைய தங்குமிடமாகவும் நிலைத்திருக்கும். \b \q1 \v 12 ஆனாலும் மக்கள் நன்மதிப்பிலே நிலைத்திருக்கிறதில்லை; \q2 அவர்கள் அழிந்துபோகும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள். \b \q1 \v 13 தங்களிலேயே நம்பிக்கை வைக்கிறவர்களின் முடிவு இதுவே; \q2 இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பின்பற்றுகிறவர்களின் நிலையும் அதுவே. \q1 \v 14 அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; \q2 மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும். \q2 நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்; \q1 அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல், \q2 கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும். \q1 \v 15 ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; \q2 அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார். \q1 \v 16 பிறர் செல்வந்தர்களாகி, \q2 அவர்கள் வீட்டின் செழிப்பு அதிகரிக்கும்போது, திடுக்கிடாதே; \q1 \v 17 ஏனெனில் அவர்கள் சாகும்போது, தம்முடன் ஒன்றையும் கொண்டுபோகமாட்டார்கள்; \q2 அவர்களுடைய செழிப்பும் அவர்களைப் பின்தொடராது. \q1 \v 18 அவர்கள் உயிரோடிருந்தபோது, \q2 தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணினார்கள். \q2 அவர்கள் செழிப்படைந்து இருக்கும்போது மனிதர் அவர்களைப் புகழ்ந்தார்கள். \q1 \v 19 ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே மரிப்பார்கள்; \q2 வாழ்வின் ஒளியை இனி ஒருபோதும் காணமாட்டார்கள். \b \q1 \v 20 செல்வந்தராயிருந்தும் அறிவு இல்லாதிருந்தால் \q2 அவர்கள் அழிந்துபோகும் மிருகத்தைப் போல் இருக்கிறார்கள். \c 50 \cl சங்கீதம் 50 \d ஆசாபின் சங்கீதம். \q1 \v 1 வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவா பேசுகிறார், \q2 அவர் சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து, \q2 அது மறையும் இடம் வரையுமுள்ள முழு உலகத்தையும் அழைக்கிறார். \q1 \v 2 பூரண அழகுள்ள சீயோனிலிருந்து \q2 இறைவன் பிரகாசிக்கிறார். \q1 \v 3 நம்முடைய இறைவன் வருகிறார், \q2 அவர் மவுனமாய் இருக்கமாட்டார்; \q1 அவருக்கு முன்னாக நெருப்பு சுட்டெரித்துச் செல்கிறது; \q2 அவரைச் சுற்றிப் புயல் சீற்றத்துடன் வீசுகிறது. \q1 \v 4 அவர் தமது மக்களை நியாயந்தீர்க்கும்படியாக, \q2 மேலேயுள்ள வானங்களையும் பூமியையும் அழைத்துச் சொல்கிறார்: \q1 \v 5 “பலியினால் என்னுடன் உடன்படிக்கை செய்த, \q2 பரிசுத்தவான்களை ஒன்றுகூட்டுங்கள்.” \q1 \v 6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கின்றன; \q2 அவர் நியாதிபதியாகிய இறைவன். \b \q1 \v 7 “என் மக்களே, கேளுங்கள், நான் பேசுவேன்; \q2 இஸ்ரயேலே, நான் உனக்கு விரோதமாகச் சாட்சி கூறுவேன்: \q2 நான் இறைவன், நானே உங்கள் இறைவன். \q1 \v 8 எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கும் உங்கள் பலிகளுக்காகவோ, \q2 அல்லது உங்கள் தகன காணிக்கைகளுக்காகவோ நான் உங்களைக் கண்டிக்கவில்லை. \q1 \v 9 உங்கள் வீட்டிலிலுள்ள காளைகளோ, \q2 உங்கள் தொழுவத்திலுள்ள வெள்ளாடுகளோ எனக்கு வேண்டியதில்லை. \q1 \v 10 ஏனெனில் காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் \q2 ஆயிரக்கணக்கான குன்றுகளிலுள்ள ஆடுமாடுகளும் என்னுடையவைகள். \q1 \v 11 மலைகளிலுள்ள ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்; \q2 வயல்வெளிகளிலுள்ள உயிரினங்களும் என்னுடையவைகள். \q1 \v 12 நான் பசியாயிருந்தால் உங்களிடம் சொல்லமாட்டேன்; \q2 ஏனெனில் உலகமும் அதிலுள்ள யாவும் என்னுடையவைகள். \q1 \v 13 நான் காளைகளின் இறைச்சியை உண்டு, \q2 ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தைக் குடிப்பேனோ? \b \q1 \v 14 “நீங்கள் இறைவனாகிய எனக்கு உங்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிடுங்கள்; \q2 மகா உன்னதமான இறைவனாகிய எனக்கு உங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுங்கள். \q1 \v 15 துன்ப நாளில் என்னை நோக்கி மன்றாடிக் கூப்பிடுங்கள், \q2 நான் உங்களை விடுவிப்பேன்; நீங்கள் என்னை மகிமைப்படுத்துவீர்கள்.” \p \v 16 கொடியவர்களுக்கு இறைவன் சொல்கிறதாவது: \q1 “என் சட்டங்களைக் கூறுவதற்கும், \q2 என் உடன்படிக்கையை உங்கள் உதடுகளினால் உச்சரிப்பதற்கும் \q2 உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? \q1 \v 17 என்னுடைய அறிவுறுத்தலை வெறுத்து, \q2 என் வார்த்தைகளை உங்களுக்குப் பின்னாக எறிந்துவிடுகிறீர்கள். \q1 \v 18 நீங்கள் திருடனைக் காணும்போது அவனோடு சேர்ந்துகொள்கிறீர்கள்; \q2 விபசாரக்காரருடனும் நீங்கள் பங்குகொள்கிறீர்கள். \q1 \v 19 நீங்கள் உங்கள் வாயைத் தீமைக்காக பயன்படுத்துகிறீர்கள்; \q2 உங்கள் நாவை வஞ்சகத்தைப் பேசப் பயன்படுத்துகிறீர்கள். \q1 \v 20 நீங்கள் உங்கள் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசுகிறீர்கள்; \q2 இடைவிடாமல் உங்கள் சகோதரனையே தூற்றுகிறீர்கள். \q1 \v 21 இவற்றை நீங்கள் செய்தபோது நான் மவுனமாய் இருந்தேன்; \q2 நானும் உங்களைப்போலவே இருப்பேன் என்று நினைத்தீர்கள். \q1 ஆனால் நான் உங்களைக் கடிந்துகொண்டு, \q2 உங்கள் கண்களுக்கு முன்பாகவே உங்களைக் குற்றஞ்சாட்டுவேன். \b \q1 \v 22 “இறைவனை மறக்கிறவர்களே, இதைக் கவனியுங்கள்; \q2 இல்லாவிட்டால் நான் உங்களை முற்றிலும் தண்டித்துப் போடுவேன்; \q2 ஒருவரும் உங்களைத் தப்புவிக்கமாட்டார்கள். \q1 \v 23 நன்றி பலியைச் செலுத்துகிறவன் என்னைக் கனம்பண்ணுகிறான்; \q2 இறைவனாகிய என் இரட்சிப்பை நான் குற்றமற்றவனுக்குக் காண்பிப்பேன்.” \c 51 \cl சங்கீதம் 51 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். தாவீது பத்சேபாளுடன் விபசாரம் செய்தபின், இறைவாக்கினன் நாத்தான் அவனிடம் வந்து, அவன் பாவத்தை உணர்த்திய பின்பு பாடிய சங்கீதம். \q1 \v 1 இறைவனே, உமது அன்பின் நிமித்தம் \q2 எனக்கு இரக்கம் காட்டும், \q1 உமது பெரிதான கருணையின் நிமித்தம் \q2 என் மீறுதல்களை நீக்கிவிடும். \q1 \v 2 என் அநியாயங்கள் எல்லாவற்றையும் நீர் கழுவி, \q2 என் பாவத்திலிருந்து என்னைச் சுத்தமாக்கும். \b \q1 \v 3 என் மீறுதல்களை நான் அறிவேன்; \q2 என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. \q1 \v 4 உமக்கு எதிராக, உமக்கு எதிராக மட்டுமே நான் பாவம் செய்தேன்; \q2 உமது பார்வையில் தீமையானதைச் செய்திருக்கிறேன்; \q1 ஆதலால், உம்முடைய தீர்ப்பில் நீர் சரியானவர், \q2 உம்முடைய நியாய விசாரணையில் நீர் நீதியானவராயிருக்கிறீர். \q1 \v 5 நிச்சயமாகவே நான் பிறந்ததிலிருந்து பாவியாயிருக்கிறேன்; \q2 என் தாய் என்னைக் கர்ப்பந்தரித்ததில் இருந்தே நான் பாவியாய் இருக்கிறேன். \q1 \v 6 ஆனாலும், நான் கருப்பையிலிருந்தே உண்மையாயிருக்க நீர் விரும்புகிறீர்; \q2 அந்த மறைவான இடத்திலிருந்தே நீர் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். \b \q1 \v 7 ஈசோப்புத் தளையினால் என்னைச் சுத்தப்படுத்தும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; \q2 என்னைக் கழுவும், அப்பொழுது நான் வெண்பனியைப் பார்க்கிலும் வெண்மையாவேன். \q1 \v 8 நான் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கேட்கும்படிச் செய்யும்; \q2 நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூரட்டும். \q1 \v 9 என் பாவங்களைக் காணாதபடி உமது முகத்தை மறைத்து, \q2 என் எல்லா அநியாயத்தையும் நீக்கிவிடும். \b \q1 \v 10 இறைவனே, தூய்மையான இருதயத்தை என்னில் படைத்து, \q2 நிலையான ஆவியை எனக்குள் புதுப்பியும். \q1 \v 11 உமது சமுகத்தில் இருந்து என்னைத் தள்ளிவிட வேண்டாம், \q2 உமது பரிசுத்த ஆவியானவரை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளவும் வேண்டாம். \q1 \v 12 உமது இரட்சிப்பின் மகிழ்ச்சியைத் எனக்குத் திரும்பத்தாரும்; \q2 விரும்பி நடக்கும் ஆவியை தந்து என்னைத் தாங்கும். \b \q1 \v 13 அப்பொழுது நான் குற்றம் செய்கிறவர்களுக்கு உமது வழிகளைப் போதிப்பேன்; \q2 பாவிகள் உம்மிடம் மனந்திரும்புவார்கள். \q1 \v 14 இறைவனே, இரத்தப்பழியிலிருந்து என்னை விடுவியும்; \q2 நீர் என்னை இரட்சிக்கும் இறைவன். \q2 எனது நாவு உமது நீதியைப் பாடும். \q1 \v 15 யெகோவாவே, என் உதடுகளைத் திறந்தருளும்; \q2 அதினால் என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். \q1 \v 16 நீர் பலியை விரும்புவதில்லை, விரும்பினால் நான் அதைக் கொண்டுவருவேன்; \q2 தகன காணிக்கையிலும் நீர் மகிழ்வதில்லை. \q1 \v 17 இறைவனுக்கு உகந்த பலி உடைந்த ஆவிதான்; \q2 இறைவனே, குற்றத்தை உணர்ந்து உடைந்த இதயத்தை \q2 நீர் புறக்கணிக்கமாட்டீர். \b \q1 \v 18 உமது தயவின்படி சீயோனுக்கு நன்மை செய்யும்; \q2 எருசலேமின் மதில்களைக் கட்டும். \q1 \v 19 அப்பொழுது முழு தகன காணிக்கைகளிலும், \q2 சர்வாங்க தகன காணிக்கையான நீதி பலிகளிலும் நீர் மகிழ்ச்சியடைவீர்; \q2 உமது பலிபீடத்தின்மேல் காளைகளை அர்ப்பணிப்பார்கள். \c 52 \cl சங்கீதம் 52 \d தாவீது அகிமெலேக்கின் வீட்டிற்கு சென்றான் என்று ஏதோமியனாகிய தோவேக்கு வந்து சவுலுக்கு சொன்னபோது பாடிய மஸ்கீல் என்னும் சங்கீதம். \q1 \v 1 பலவானே, ஏன் தீமையைப்பற்றி பெருமை பாராட்டுகிறாய்? \q2 இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பு \q2 எந்நாளும் உள்ளது. \q1 \v 2 வஞ்சகம் செய்கிறவனே, \q2 உன் நாவு அழிவை ஏற்படுத்த சதி செய்கிறது; \q2 அது தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கிறது. \q1 \v 3 நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையையும் \q2 உண்மை பேசுவதைவிட பொய்யையும் விரும்புகிறாய். \q1 \v 4 வஞ்சக நாவே, \q2 நீ அனைத்துத் தீங்கான வார்த்தைகளை விரும்புகிறாய்! \b \q1 \v 5 இறைவன் உன்னை நிச்சயமாகவே நித்திய அழிவுக்குள்ளாக்குவார்: \q2 அவர் உன்னை உன் கூடாரத்திலிருந்து விலக்கி, \q2 வாழ்வோரின் நாட்டிலிருந்து உன்னை வேரோடு எடுத்துப் போடுவார். \q1 \v 6 இதைக்கண்டு நீதிமான்கள் பயப்படுவார்கள்; \q2 அவர்கள் அவனைப் பார்த்து சிரித்து, \q1 \v 7 “இதோ பாருங்கள், \q2 இவன் இறைவனைத் தன் அரணாகக் கொள்ளாதவன்; \q1 தன் மிகுந்த செல்வத்தில் நம்பிக்கை வைத்து, \q2 தன்னுடைய அக்கிரமத்தில் பலத்துக்கொண்ட மனிதன்!” என்பார்கள். \b \q1 \v 8 ஆனால் நானோ, செழித்து வளரும் ஒலிவமரத்தைப் போல் \q2 இறைவனின் ஆலயத்தில் இருக்கிறேன்; \q1 நான் இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பில் \q2 எப்பொழுதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். \q1 \v 9 நீர் எனக்குச் செய்தவற்றிற்காக உமது பரிசுத்தவான்களுக்கு முன்பாக \q2 நான் உம்மை என்றென்றும் துதிப்பேன், \q1 உம்முடைய பெயரில் நான் எதிர்பார்ப்பை வைப்பேன்; \q2 இறைவனே உமது பெயர் நல்லது. \c 53 \cl சங்கீதம் 53 \d மகலாத் என்னும் பாணியில் வாசிக்கப்படும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம். \q1 \v 1 மூடன் தன் இருதயத்தில், “இறைவன் இல்லை” என்று சொல்கிறான். \q2 அவர்கள் சீர்கெட்டவர்கள்; \q1 அவர்களுடைய வழிகள் இழிவானவை; \q2 அவர்களில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை. \b \q1 \v 2 இறைவன் பரலோகத்திலிருந்து \q2 மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், \q1 அவர்களில் விவேகமுள்ளவனாவது \q2 இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார். \q1 \v 3 எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; \q2 நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, \q2 ஒருவனாகிலும் இல்லை. \b \q1 \v 4 தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? \b \q1 மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; \q2 அவர்கள் இறைவனை வழிபடுவதுமில்லை. \q1 \v 5 பயப்படுவதற்கு எதுவுமில்லாத இடத்திலே, \q2 அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள். \q1 உன்னைத் தாக்கியவர்களின் எலும்புகளை இறைவன் சிதறடித்தார்; \q2 இறைவன் அவர்களைப் புறக்கணித்தபடியால், நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். \b \q1 \v 6 சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! \q2 இறைவன் தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, \q2 யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்! \c 54 \cl சங்கீதம் 54 \d தாவீது தங்களிடம் ஒளிந்திருக்கிறான் என்று சீப்பூரார் சவுலுக்கு சொன்னபோது, கம்பியிசைக் கருவிகளுடன் தாவீது பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம். \q1 \v 1 இறைவனே, உமது பெயரால் என்னைக் காப்பாற்றும், \q2 உமது வல்லமையால் எனக்கு நியாயம் செய்யும். \q1 \v 2 இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; \q2 என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும். \b \q1 \v 3 தற்பெருமையுள்ளவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்; \q2 இறைவனை மதியாத, ஈவு இரக்கமற்ற மனிதர் \q2 என் உயிரை வாங்கத் தேடுகிறார்கள். \b \q1 \v 4 நிச்சயமாக இறைவனே எனக்கு உதவுபவர்; \q2 யெகோவாவே என்னை ஆதரிக்கிறவர். \b \q1 \v 5 எனக்குத் தீமை செய்கிறவர்கள் மேலேயே அவர்களுடைய தீமை திரும்பட்டும்; \q2 உமது உண்மையின் நிமித்தம் அவர்களை தண்டித்துவிடும். \b \q1 \v 6 நான் உமக்கு சுயவிருப்பக் காணிக்கையைப் பலியிடுவேன்; \q2 யெகோவாவே, நான் உமது பெயரைத் துதிப்பேன், ஏனெனில் அது நல்லது. \q1 \v 7 நீர் என்னை என்னுடைய எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்தீர்; \q2 என் கண்கள் என் எதிரிகளின் வீழ்ச்சியைப் பார்த்தன. \c 55 \cl சங்கீதம் 55 \d கம்பியிசைக் கருவிகளுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்குப் ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம். \q1 \v 1 இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; \q2 என் வேண்டுதலை அசட்டை பண்ணாதிரும். \q2 \v 2 எனக்குச் செவிகொடுத்து, எனக்குப் பதில் தாரும்; \q1 என் சிந்தனைகள் என்னைக் கலங்கப்பண்ணுகின்றன; நான் மிகவும் கலக்கமடைந்துள்ளேன். \q2 \v 3 எதிரியின் வார்த்தையினாலும் \q2 கொடியவர்களின் அழுத்தத்தினாலும் கலக்கமடைந்துள்ளேன்; \q1 அவர்கள் என்மேல் வேதனையைக் கொண்டுவந்து, \q2 கோபத்தில் என்னை பகைக்கிறார்கள். \b \q1 \v 4 என் இருதயம் எனக்குள்ளே கடுந்துயரப்படுகிறது; \q2 மரணபயம் என்னைத் தாக்குகின்றன. \q1 \v 5 பயமும் நடுக்கமும் என்னைப் பற்றிக்கொண்டன; \q2 பயங்கரம் என்னை மூடிக்கொண்டது. \q1 \v 6 நானோ, “புறாவின் சிறகுகள் எனக்கு இருந்திருந்தால்! \q2 பறந்துபோய் இளைப்பாறுவேன். \q1 \v 7 நான் தொலைவில் தப்பிப்போய் \q2 பாலைவனத்தில் தங்குவேன். \q1 \v 8 கடும் காற்றுக்கும் புயலுக்கும் \q2 தப்பிக்கும்படி விரைந்து செல்வேன்” என்றேன். \b \q1 \v 9 யெகோவாவே, அவர்களுக்கு குழப்பத்தை உண்டுபண்ணி, \q2 அவர்களுடைய பேச்சிலும் பிளவுண்டாக்கும்; \q2 ஏனெனில், நான் வன்முறையையும் போராட்டத்தையுமே பட்டணத்தில் காண்கிறேன். \q1 \v 10 அவர்கள் இரவும் பகலும் பட்டண மதில்களின்மேல் பதுங்கித் திரிகிறார்கள்; \q2 கொடுமையும் பிரச்சனையும் அதனுள்ளே காணப்படுகின்றன. \q1 \v 11 பேரழிவு பட்டணத்தின் நடுவே இருக்கிறது; \q2 அச்சுறுத்தல்களும் பொய்களும் அதின் வீதிகளைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. \b \q1 \v 12 என்னை நிந்திப்பவன் என் பகைவனல்ல; \q2 அப்படியிருந்தால், அதை நான் சகித்துக்கொள்ளலாம்; \q1 எனக்கு விரோதமாக ஒரு எதிரி எழும்பியிருந்தால், \q2 நான் அவனிடமிருந்து மறைந்துகொள்வேன். \q1 \v 13 ஆனால் எதிர்த்தவன் என்னைப்போன்ற மனிதனும், \q2 எனக்கு அறிமுகமான, என் நெருங்கிய நண்பனுமே. \q1 \v 14 நாங்கள் ஒன்றுகூடி \q2 இனிய ஆலோசனைபண்ணி, \q1 மக்கள் கூட்டத்துடன் \q2 இறைவனின் ஆலயத்திற்குச் சென்றோம். \b \q1 \v 15 மரணம் என் எதிரிகளைத் திடீரெனப் பற்றிக்கொள்ளட்டும்; \q2 தீமை அவர்கள் மத்தியில் குடியிருப்பதால், \q2 அவர்கள் உயிருடன் பாதாளத்தில் இறங்குவார்களாக. \b \q1 \v 16 நானோ இறைவனை நோக்கிக் கூப்பிடுகிறேன்; \q2 யெகோவா என்னைக் காப்பாற்றுவார். \q1 \v 17 மாலையிலும் காலையிலும் \q2 மத்தியான வேளையிலும் நான் துயரத்தால் முறையிடுவேன்; \q2 அவர் என் குரலைக் கேட்பார். \q1 \v 18 பலர் என்னை எதிர்த்தபோதும், \q2 எனக்கு விரோதமாய் நடத்தப்படும் யுத்தத்தில் இருந்து \q2 அவர் என்னைத் தீங்கின்றி மீட்டுக்கொண்டார். \q1 \v 19 சிங்காசனத்தில் என்றென்றும் அமர்ந்திருக்கும் இறைவன் கேட்டு, \q2 அவர்களைத் தாழ்த்திவிடுவார்; \q1 அவர்கள் இறைவனுக்குப் பயப்படவும் இல்லை, \q2 ஒருபோதும் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளவுமில்லை. \b \q1 \v 20 என் தோழன் தனது நண்பர்களைத் தாக்குகிறான்; \q2 அவன் தன் உடன்படிக்கையையும் மீறுகிறான். \q1 \v 21 அவனுடைய பேச்சு வெண்ணெயைப் போல் மிருதுவானது, \q2 ஆனாலும் அவனுடைய இருதயத்தில் யுத்தம் மறைந்திருக்கிறது; \q1 அவனுடைய வார்த்தைகள் எண்ணெயைப் பார்க்கிலும் மென்மையானவை, \q2 ஆனாலும் அவை கூர்மையான வாள்களைப்போல் இருக்கின்றன. \b \q1 \v 22 உங்கள் கவலைகளை யெகோவாமேல் வைத்து விடுங்கள்; \q2 அவர் உங்களைத் தாங்குவார்; \q1 நீதிமான்களை அவர் \q2 ஒருபோதும் விழுந்துபோக விடமாட்டார். \q1 \v 23 ஆனால் இறைவனே, நீரோ கொடுமையானவனை \q2 அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; \q1 இரத்த வெறியரும் ஏமாற்றுக்காரர்களும் \q2 தங்கள் ஆயுளின் பாதிநாட்கள்கூட உயிர் வாழமாட்டார்கள். \b \q1 ஆனால் என்னைப் பொறுத்தவரையில், நான் உம்மிடத்திலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன். \c 56 \cl சங்கீதம் 56 \d பெலிஸ்தியர் தாவீதை காத் ஊரில் பிடித்தபோது, “தொலைவில் உள்ள கருவாலி மரத்தில் வாழும் மெளன மாடப்புறா” என்ற இசையில் தாவீது பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட \tl மிக்தாம்\tl* என்னும் தாவீதின் சங்கீதம். \q1 \v 1 இறைவனே, என்மேல் இரக்கமாயிரும், \q2 மனிதன் என்னை தாக்குகிறான்; \q2 நாள்தோறும் போர்செய்து என்னை அடக்குகிறான். \q1 \v 2 என் பகைவர்கள் நாள்தோறும் என்னை அழுத்துகிறார்கள்; \q2 அநேகர் தங்கள் பெருமையோடு என்னை எதிர்த்துப் போரிடுகிறார்கள். \b \q1 \v 3 நான் பயப்படும் நாளில், உம்மை நம்புவேன். \q2 \v 4 நான் இறைவனுடைய வார்த்தைகளைப் புகழ்வேன்; \q1 அவரை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன். \q2 அழிவுக்குரிய மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்? \b \q1 \v 5 எப்பொழுதும் அவர்கள் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; \q2 அவர்களின் திட்டங்கள் அனைத்தும் எனக்குத் தீமை செய்வதற்கே. \q1 \v 6 அவர்கள் ஒன்றுகூடி பதுங்கி இருக்கிறார்கள், \q2 என் உயிரைப் பறிக்க விருப்பம் உள்ளவர்களாய் \q2 மறைந்திருந்து என் காலடிகளைக் கவனிக்கிறார்கள். \q1 \v 7 அவர்கள் அக்கிரமங்களின் நிமித்தம் அவர்களைத் தப்பவிடாதேயும்; \q2 இறைவனே, உமது கோபத்தில் மக்கள் கூட்டத்தைக் கீழே வீழ்த்திவிடும். \b \q1 \v 8 நீர் என் அலைச்சலை கணக்கில் வைத்திருக்கிறீர்; \q2 என் கண்ணீரை உமது தோற்குடுவையில் சேர்த்து வைத்திருக்கிறீர்; \q2 அவை உமது பதிவேட்டில் இருக்கிறது அல்லவா? \q1 \v 9 நான் உம்மிடம் உதவிக்கேட்டு கூப்பிடும்போது, \q2 என் பகைவர் புறமுதுகிட்டு ஓடுவார்கள்; \q2 அதினால் இறைவன் என்னுடன் இருக்கிறார் என அறிந்துகொள்வேன். \b \q1 \v 10 நான் இறைவனுடைய வார்த்தையைப் புகழ்வேன்; \q2 யெகோவாவினுடைய வார்த்தையைப் புகழ்வேன். \q1 \v 11 நான் இறைவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; \q2 மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்? \b \q1 \v 12 இறைவனே, நான் உமக்கு நேர்த்திக் கடன்களைச் செய்திருக்கிறேன்; \q2 நன்றிக் காணிக்கைகளை நான் உமக்குச் செலுத்துவேன். \q1 \v 13 ஏனெனில், நீர் என்னை மரணத்திலிருந்து மீட்டுக்கொண்டீர், \q2 என் கால்களை இடறாமல் காத்துக்கொண்டீர்; \q1 இதினால் நான் இறைவனுக்கு முன்பாக \q2 வாழ்வின் வெளிச்சத்தில் நடப்பேன். \c 57 \cl சங்கீதம் 57 \d தாவீது சவுலிடமிருந்து தப்பிக் குகைக்குள் ஒளிந்துகொண்டிருந்தபோது, “அழிக்காதே” என்ற இசையில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட \tl மிக்தாம்\tl* என்னும் தாவீதின் சங்கீதம். \q1 \v 1 என்மேல் இரக்கமாயிரும், இறைவனே, என்மேல் இரக்கமாயிரும், \q2 என் ஆத்துமா உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறது. \q1 பேரழிவு கடந்து செல்லுமளவும், \q2 நான் உமது சிறகுகளின் நிழலில் புகலிடம் கொள்வேன். \b \q1 \v 2 எனக்காக யாவையும் செய்து முடிக்கும், \q2 மகா உன்னதமானவரான இறைவனை நோக்கி நான் கூப்பிடுவேன். \q1 \v 3 அவர் பரலோகத்திலிருந்து உதவி அனுப்பி என்னைக் காப்பாற்றுவார், \q2 என்னைத் தாக்குகிறவர்களைக் கடிந்துகொள்வார்; \q2 இறைவன் தமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் அனுப்புவார். \b \q1 \v 4 நான் சிங்கங்களின் நடுவில் இருக்கிறேன்; \q2 என்னை எதிர்க்கும் மனுமக்களின் மத்தியில் இருக்கிறேன்; \q1 அவர்களுடைய பற்கள் ஈட்டிகளும் அம்புகளுமாய் இருக்கிறது; \q2 அவர்களின் நாவுகளோ கூர்மையான வாள்கள். \b \q1 \v 5 இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; \q2 உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக. \b \q1 \v 6 என் கால்களுக்கு அவர்கள் வலையை விரித்தார்கள்; \q2 துயரத்தினால் நான் சோர்ந்து போனேன். \q1 அவர்கள் என் பாதையில் ஒரு குழியைத் தோண்டினார்கள்; \q2 அதற்குள் அவர்களே விழுந்து போனார்கள். \b \q1 \v 7 என் இருதயம் உறுதியாயிருக்கிறது, \q2 இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; \q2 நான் இசையமைத்துப் பாடுவேன். \q1 \v 8 என் ஆத்துமாவே, விழித்தெழும்பு! \q2 யாழே, வீணையே, விழித்தெழுங்கள்! \q2 நான் அதிகாலையில் விழித்தெழுவேன். \b \q1 \v 9 ஆண்டவரே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; \q2 மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன். \q1 \v 10 ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களை எட்டுகிறது; \q2 உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது. \b \q1 \v 11 இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; \q2 உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக. \c 58 \cl சங்கீதம் 58 \d “அழிக்காதே” என்ற இசையில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட \tl மிக்தாம்\tl* என்னும் தாவீதின் சங்கீதம். \q1 \v 1 ஆளுநர்களே, உண்மையிலேயே நீங்கள் நீதியைத்தான் பேசுகிறீர்களோ? \q2 மனிதர் மத்தியில் நியாயமாய்த் தீர்ப்பு செய்கிறீர்களோ? \q1 \v 2 இல்லை, நீங்கள் உங்கள் இருதயத்தில் அநீதியையே திட்டமிடுகிறீர்கள்; \q2 உங்கள் கைகள் பூமியின்மேல் வன்முறையைப் பரப்புகிறது. \b \q1 \v 3 கொடியவர்கள் பிறப்பிலிருந்தே வழிதப்பிப் போகிறார்கள்; \q2 அவர்கள் கர்ப்பத்திலிருந்தே பொய்களைப் பேசுகிறார்கள். \q1 \v 4 அவர்களுடைய நச்சுத்தன்மை ஒரு பாம்பின் நஞ்சைப்போல் இருக்கிறது; \q2 அவர்கள் காதை அடைத்துக்கொள்கிற செவிட்டு நாகம்போல இருக்கிறார்கள். \q1 \v 5 இந்த நாகபாம்போ, பாம்பாட்டி எவ்வளவு திறமையாய் ஊதினாலும் \q2 அவனுடைய இசைக்குக் கவனம் செலுத்தாது. \b \q1 \v 6 இறைவனே, அவர்களுடைய வாயிலுள்ள பற்களை உடைத்துப்போடும்; \q2 யெகோவாவே, அந்த சிங்கங்களின் கடைவாய்ப் பற்களைப் பிடுங்கிப்போடும். \q1 \v 7 ஓடிப்போகும் தண்ணீரைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்; \q2 அவர்கள் தங்கள் வில்லை இழுக்கும்போது, அவர்களுடைய அம்புகள் முறிந்து போகட்டும். \q1 \v 8 நகரும்போதே கரைந்து போகும் நத்தையைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்; \q2 ஒரு பெண்ணின் வயிற்றில் சிதைந்த கருவைப்போல, \q2 சூரியனை அவர்கள் பார்க்காமல் போகட்டும். \b \q1 \v 9 முட்செடிகள் எரிந்து பானை அதின் சூட்டை உணருவதற்கு முன்பதாகவே, \q2 பச்சையானதையும் எரிந்துபோனதையும் சுழற்காற்று வாரியதைப்போல \q2 கொடியவர்களை வாரிக்கொள்ளும். \q1 \v 10 அவர்கள் பழிவாங்கப்படும்போது நீதிமான்கள் மகிழ்வார்கள்; \q2 கொடியவர்களின் உயிர் நீதிமான்களின் பாதபடியில் இருக்கும். \q1 \v 11 அப்பொழுது மனிதர், \q2 “நிச்சயமாகவே நீதிமான்களுக்கு வெற்றி உண்டென்றும் \q2 பூமியை நியாயந்தீர்க்கும் இறைவன் உண்டு” என்றும் சொல்வார்கள். \c 59 \cl சங்கீதம் 59 \d தாவீதின் வீட்டின் அருகே காத்திருந்து அவனை கொல்வதற்கு சவுல் ஆட்களை அனுப்பியபோது, “அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கத் தாவீது பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் சங்கீதம். \q1 \v 1 இறைவனே, பகைவர்களிடமிருந்து என்னை விடுவியும்; \q2 எனக்கெதிராக எழும்புகிறவர்களிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ளும். \q1 \v 2 தீமை செய்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்; \q2 என்னைக் கொல்ல முயற்சிக்கும் வெறியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். \b \q1 \v 3 அவர்கள் எப்படி எனக்காகப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள் என்று பாரும்! \q2 யெகோவாவே, நான் குற்றமோ பாவமோ செய்யாதிருக்க, \q2 சிலர் பயங்கரமானச் சதியை எனக்கெதிராகச் செய்கிறார்கள். \q1 \v 4 நான் ஒரு தவறும் செய்யவில்லை; \q2 இருந்தும் என்னைத் தாக்குவதற்கு அவர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள். \q2 எனக்கு உதவிசெய்ய எழுந்தருளும்; எனது நிலைமையைப் பாரும்! \q1 \v 5 சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, \q2 இஸ்ரயேலின் இறைவனே, \q1 இந்த எல்லா மக்களையும் தண்டிப்பதற்காக எழுந்தருளும்; \q2 கொடுமையான துரோகிகளுக்கு இரக்கம் காட்டாதிரும். \b \q1 \v 6 மாலையிலே அவர்கள் \q2 நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்; \q2 நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள். \q1 \v 7 அவர்கள் வாய் திறந்து என்னத்தைப் பேசுகிறார்கள் என்று பாரும்; \q2 அவர்கள் தங்கள் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் வாள் போன்றவை, \q2 அவர்கள், “நாங்கள் சொல்வதை கேட்கிறவர் யார்?” என்று கூறுகிறார்கள். \q1 \v 8 ஆனால் யெகோவாவே, நீரோ அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறீர்; \q2 அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கிறீர். \b \q1 \v 9 நீர் என் பெலன், உமக்காக நான் காத்திருக்கிறேன்; \q2 இறைவனே, நீரே என் கோட்டை, \q2 \v 10 நான் சார்ந்திருக்கும் இறைவன். \b \q1 தமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைச் சந்திப்பார். \q2 என் பகைவர்களின் வீழ்ச்சியை பார்க்கும்படி செய்வார். \q1 \v 11 எங்கள் கேடயமான யெகோவாவே, அவர்களை ஒரேயடியாய் அழிக்கவேண்டாம்; \q2 அப்படியானால், என் மக்கள் அதைப்பற்றி மறந்துவிடுவார்கள். \q1 உமது வல்லமையினால் நிலையற்றவர்களாக்கி, \q2 அவர்களைத் தாழ்த்திவிடும். \q1 \v 12 அவர்களுடைய உதடுகளின் பேச்சு, \q2 அவர்களுடைய வாயின் பாவமாயிருக்கிறது; \q2 அவர்கள் சொல்லும் சாபமும் பொய்யும், \q1 அவர்களை பெருமையில் சிக்கவைப்பதாக. \q2 \v 13 உமது கோபத்தால் அவர்களை தண்டித்துவிடும்; \q2 அவர்கள் இல்லாமல் போகும்வரை அவர்களை தண்டித்துவிடும். \q1 அப்பொழுது இறைவன், \q2 யாக்கோபின்மேல் ஆளுகை செய்கிறார் என்று \q2 பூமியின் எல்லைகள்வரை எல்லோரும் அறிந்துகொள்வார்கள். \b \q1 \v 14 மாலையிலே அவர்கள் \q2 நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்; \q2 நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள். \q1 \v 15 உணவுக்காக அவர்கள் அலைந்து திரிகிறார்கள்; \q2 திருப்தியடையாவிட்டால் முறுமுறுத்துக் கொண்டே இரவைக் கடக்கிறார்கள். \q1 \v 16 ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்; \q2 காலையிலே உமது உடன்படிக்கையின் அன்பை குறித்துப் பாடுவேன்; \q1 ஏனெனில் நீரே எனது கோட்டையும் \q2 துன்பகாலங்களில் என் புகலிடமுமாய் இருக்கிறீர். \b \q1 \v 17 என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்; \q2 இறைவனே, நீரே என் கோட்டையும், \q2 என் அன்பான இறைவனுமாயிருக்கிறீர். \c 60 \cl சங்கீதம் 60 \d ஆராம் நகராயிம், ஆராம் சேபா என்ற அரசுகளோடு தாவீது போர் செய்கையில் யோவாப் உப்புப் பள்ளத்தாக்கில் பன்னீராயிரம் ஏதோமியரை வெற்றிக்கொண்டபோது, “உடன்படிக்கையின் லீலிமலர்” என்ற இசையில் மிக்தாம் என்னும் சங்கீதத்தை போதனையாக தாவீது பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். \q1 \v 1 இறைவனே, நீர் எங்களைப் புறக்கணித்துவிட்டீர், எங்களை சிதறடித்துவிட்டீர்; \q2 நீர் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடம் திரும்பி வாரும். \q1 \v 2 நீர் நாட்டை அதிரப்பண்ணி, அதைப் பிளந்து விட்டீர்; \q2 அசைந்து கொண்டிருக்கும் அந்த வெடிப்புகளைச் சரிப்படுத்தும். \q1 \v 3 கடினமான காரியங்களை நீர் உமது மக்களை காணச்செய்தீர்; \q2 தடுமாறச் செய்யும் திராட்சை இரசத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்திருக்கிறீர். \q1 \v 4 ஆனால் உமக்குப் பயந்து நடக்கிறவர்கள், \q2 வில்லுக்கு தப்பித்துக் கொள்ளுமாறு ஒரு கொடியை உயர்த்தினீர். \b \q1 \v 5 நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, \q2 உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும். \q1 \v 6 இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: \q2 “நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்; \q2 சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன். \q1 \v 7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; \q2 எப்பிராயீம் என் தலைக்கவசம், \q2 யூதா என் செங்கோல். \q1 \v 8 மோவாப் என் கழுவும் பாத்திரம், \q2 நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்; \q2 நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.” \b \q1 \v 9 அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? \q2 யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்? \q1 \v 10 இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், \q2 எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா? \q1 \v 11 பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; \q2 ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது. \q1 \v 12 இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; \q2 அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார். \c 61 \cl சங்கீதம் 61 \d கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 என் இறைவனே, என் கதறுதலைக் கேளும், \q2 என் மன்றாட்டுக்குச் செவிகொடும். \b \q1 \v 2 பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; \q2 என் இருதயம் சோர்ந்து போகையில் உம்மைக் கூப்பிடுகிறேன்; \q2 என்னைப் பார்க்கிலும் உயரமான கற்பாறையினிடத்திற்கு என்னை வழிநடத்தும். \q1 \v 3 நீரே என் புகலிடமாய் இருக்கிறீர்; \q2 பகைவருக்கு எதிரான பலமுள்ள கோபுரமாய் இருக்கிறீர். \b \q1 \v 4 நான் என்றென்றும் உமது கூடாரத்தில் குடியிருப்பேன்; \q2 உமது சிறகுகளின் அடைக்கலத்தில் தஞ்சமடைவேன். \q1 \v 5 இறைவனே, நீர் என் நேர்த்திக்கடன்களைக் கேட்டிருக்கிறீர்; \q2 உமது பெயருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரிய உரிமைச்சொத்தை \q2 நீர் எனக்குத் தந்திருக்கிறீர். \b \q1 \v 6 அரசனின் வாழ்நாட்களை அதிகமாக்கும்; \q2 அவனுடைய வருடங்களை தலைமுறை தலைமுறைகளாக அதிகமாக்கும். \q1 \v 7 இறைவனின் சமுகத்தில் அவன் என்றைக்கும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பானாக; \q2 அவனைப் பாதுகாப்பதற்காக உமது உடன்படிக்கையின் அன்பையும் \q2 உண்மையையும் நியமித்தருளும். \b \q1 \v 8 அப்பொழுது நான் என்றென்றைக்கும் உமது பெயருக்குத் துதி பாடுவேன்; \q2 நாள்தோறும் எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன். \c 62 \cl சங்கீதம் 62 \d எதுத்தூன் என்னும் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 என் ஆத்துமா இறைவனில் இளைப்பாறுகிறது; \q2 என் இரட்சிப்பு அவரால் வருகிறது. \q1 \v 2 அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் கோட்டையுமாய் இருக்கிறார்; \q2 நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன். \b \q1 \v 3 எவ்வளவு காலத்திற்கு நீங்கள் என்னைத் தாக்குவீர்கள்? \q2 நீங்கள் எல்லோரும் என்னைத் தூக்கி எறிந்துவிடுவீர்களா? \q2 நான் சாய்ந்த சுவரைப் போலவும் தள்ளப்பட்ட வேலியைப் போலவும் இருக்கிறேன். \q1 \v 4 என்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து என்னைத் தள்ளி வீழ்த்துவதற்கு \q2 அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள், \q2 அவர்கள் பொய்களில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்; \q1 அவர்கள் தங்கள் வாய்களினால் ஆசீர்வதிக்கிறார்கள், \q2 ஆனால் தங்களுடைய இருதயங்களிலோ சபிக்கிறார்கள். \b \q1 \v 5 ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு; \q2 என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது. \q1 \v 6 அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் \q2 என் கோட்டையுமாயிருக்கிறார்; நான் அசைக்கப்படமாட்டேன். \q1 \v 7 என் இரட்சிப்பும் என் கனமும் இறைவனிடத்தில் இருக்கிறது; \q2 இறைவன் என் பலமான கன்மலையும் என் புகலிடமுமாய் இருக்கிறார். \q1 \v 8 மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; \q2 உங்கள் இருதயங்களின் பாரங்களை அவரிடத்தில் இறக்கி வையுங்கள்; \q2 இறைவனே நமது புகலிடம். \b \q1 \v 9 கீழ்க்குடி மனிதர் வெறும் சுவாசமே, \q2 உயர்குடி மனிதர் வெறும் பொய்யே; \q1 தராசில் நிறுக்கப்பட்டால் அவர்கள் ஒன்றுமில்லை; \q2 அவர்கள் சுவாசத்திலும் லேசானவர்கள். \q1 \v 10 பயமுறுத்தி பறித்தெடுப்பதில் நம்பிக்கை வைக்காதே; \q2 களவாடிய பொருட்களைக் குறித்துப் பெருமைகொள்ளாதே; \q1 உனது செல்வங்கள் அதிகரித்தாலும், \q2 உன் இருதயத்தை அவைகளின்மேல் வைக்காதே. \b \q1 \v 11 இறைவன் ஒருமுறை பேசினார், \q2 நான் இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்: \q1 “இறைவனே, வல்லமை உமக்கே உரியது, \q2 \v 12 ஆண்டவரே, உடன்படிக்கையின் அன்பும் உம்முடையது”; \q1 நிச்சயமாகவே, “நீர் ஒவ்வொருவருக்கும் \q2 அவனவன் செய்ததற்குத் தக்கதாக பலனளிப்பீர்.” \c 63 \cl சங்கீதம் 63 \d தாவீதின் சங்கீதம். யூதாவின் வனாந்திரத்திலிருக்கும்போது பாடியது. \q1 \v 1 இறைவனே, நீரே என் இறைவன், \q2 நான் ஆர்வத்துடன் உம்மைத் தேடுகிறேன்; \q1 தண்ணீரில்லாமல் வறண்டதும், \q2 காய்ந்ததுமான நிலத்திலே \q1 என் ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, \q2 என் உடலோ உமக்காக ஏங்குகிறது. \b \q1 \v 2 பரிசுத்த இடத்தில் நான் உம்மைக் கண்டேன்; \q2 உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டறிந்தேன். \q1 \v 3 உமது உடன்படிக்கையின் அன்பு உயிரைப் பார்க்கிலும் சிறந்தது; \q2 ஆகையால் என் உதடுகள் உம்மை மகிமைப்படுத்தும். \q1 \v 4 நான் உயிருடன் இருக்கும்வரை உம்மைத் துதிப்பேன்; \q2 ஜெபத்தில் உமது பெயரைச் சொல்லி என் கைகளை உயர்த்துவேன். \q1 \v 5 அறுசுவை உணவுகளால் திருப்தியடைவது போல, என் ஆத்துமா திருப்தியடையும்; \q2 என் வாய் களிப்புள்ள உதடுகளினால் பாடி, உம்மைத் துதிக்கும். \b \q1 \v 6 என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்; \q2 இராக்காலங்களில் உம்மை தியானம் செய்கிறேன். \q1 \v 7 நீரே என் உதவியாயிருப்பதால், \q2 உமது சிறகுகளின் நிழலிலே நான் மகிழ்ச்சியுடன் பாடுவேன். \q1 \v 8 நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்; \q2 உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. \b \q1 \v 9 என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் \q2 பூமியின் ஆழங்களில் இறங்குவார்கள். \q1 \v 10 அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; \q2 நரிகளுக்கு இரையாவார்கள். \b \q1 \v 11 ஆனால் அரசன் இறைவனில் மகிழ்வான்; \q2 இறைவனுடைய பெயரில் சத்தியம்பண்ணுகிற யாவரும் அவரில் மேன்மைபாராட்டுவார்கள்; \q2 பொய்யர்களுடைய வாய்களோ மூடப்படும். \c 64 \cl சங்கீதம் 64 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 இறைவனே, நான் முறையிடும் என் குரலுக்குச் செவிகொடும்; \q2 பகைவனின் பயமுறுத்தலிலிருந்து என் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும். \b \q1 \v 2 கொடியவர்களின் சதியிலிருந்தும், \q2 ஆரவாரிக்கும் தீயவர்களின் கூட்டத்திலிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும். \q1 \v 3 அவர்கள் தங்களுடைய நாவுகளை வாள்களைப்போல் கூராக்குகிறார்கள்; \q2 தங்கள் சொற்களைப் பயங்கரமான அம்புகளைப்போல் எய்கிறார்கள். \q1 \v 4 அவர்கள் மறைவிலிருந்து குற்றமற்றவன்மேல் எய்கிறார்கள்; \q2 அவர்கள் பயமின்றி திடீரென அவன்மேல் எய்கிறார்கள். \b \q1 \v 5 தீமையான திட்டமிடுவதில் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள்; \q2 தங்கள் கண்ணிகளை மறைத்து வைப்பதுபற்றி பேசிக்கொள்கிறார்கள்; \q2 “நாம் என்ன செய்கிறோம் என்பதை யார் காணுவார்கள்?” என்கிறார்கள். \q1 \v 6 அவர்கள் அநீதி செய்ய சதிசெய்து, \q2 “நாங்கள் ஒரு சிறந்த திட்டத்தை வகுத்துள்ளோம்!” என்கிறார்கள். \q2 நிச்சயமாகவே மனிதனின் மனமும் இருதயமும் ஆழமானவை. \b \q1 \v 7 ஆனால் இறைவன் அவர்களை அம்புகளால் எய்து தாக்குவார்; \q2 உடனே அவர்கள் அடித்து வீழ்த்தப்படுவார்கள். \q1 \v 8 இறைவன் அவர்களுடைய நாவுகளையே அவர்களுக்கெதிராக திரும்பப்பண்ணி, \q2 அவர்களை அழிவுக்குள்ளாக்குவார்; \q2 அவர்களைப் பார்ப்போர் அனைவரும் தங்கள் தலைகளை அசைத்துக் கேலி செய்வார்கள். \q1 \v 9 எல்லா மனிதரும் பயப்படுவார்கள்; \q2 இறைவனின் செயல்களை அவர்கள் அறிவித்து, \q2 அவர் செய்தவற்றைப்பற்றி சிந்திப்பார்கள். \b \q1 \v 10 நீதிமான்கள் யெகோவாவிடம் மகிழ்ந்து, \q2 அவரிடத்தில் தஞ்சம் அடைவார்கள்; \q2 இருதயத்தில் நீதியுள்ளோர் அனைவரும் அவரைப் புகழ்வார்கள்! \c 65 \cl சங்கீதம் 65 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 இறைவனே, சீயோனிலே துதி உமக்காகக் காத்திருக்கிறது; \q2 எங்கள் நேர்த்திக்கடன்கள் உமக்கென்றே நிறைவேற்றப்படும். \q1 \v 2 மன்றாட்டைக் கேட்கிறவர் நீரே, \q2 மனிதர் அனைவரும் உம்மிடம் வருவார்கள். \q1 \v 3 நாங்கள் பாவங்களில் மூழ்கியிருக்கையில், \q2 எங்கள் மீறுதல்களை நீர் மன்னித்தீர். \q1 \v 4 உமது ஆலய முற்றங்களில் வாழும்படியாக, \q2 நீர் தெரிந்தெடுத்து சேர்த்துக்கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். \q1 நாங்கள் உமது பரிசுத்த ஆலயமாகிய \q2 உம்முடைய வீட்டின் நன்மைகளால் நிரப்பப்பட்டிருக்கிறோம். \b \q1 \v 5 எங்கள் இரட்சகராகிய இறைவனே, \q2 உம்முடைய அற்புதமான மற்றும் நேர்மையான செயல்களால் \q2 நீர் எங்களுக்குப் பதில் தருகிறீர்; \q1 பூமியின் கடைசிகளில் உள்ளவர்களுக்கும் \q2 தூரத்திலுள்ள கடல்களில் உள்ளவர்களுக்கும் நீரே நம்பிக்கையாயிருக்கிறீர். \q1 \v 6 நீரே பெலனைத் தரித்துக்கொண்டு, \q2 உமது வல்லமையால் மலைகளை உருவாக்கினீர். \q1 \v 7 கடல்களின் இரைச்சலையும் \q2 அலைகளின் இரைச்சலையும் அமைதிப்படுத்தி, \q2 மக்கள் கூட்டத்தின் கலகத்தையும் அடக்கினீர். \q1 \v 8 பூமியின் கடைசிகளில் வாழ்பவர்களும் \q2 உம்முடைய அதிசயங்களைக் குறித்துப் பயப்படுகிறார்கள். \q1 விடியும் திசையிலிருந்தும் மாலைமங்கும் திசையிலிருந்தும் \q2 நீர் மகிழ்ச்சியின் பாடல்களைத் தொனிக்கப் பண்ணுகிறீர். \b \q1 \v 9 நிலத்தைக் கவனித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; \q2 நீர் அதைச் செழிப்பாக்குகிறீர்; \q1 மக்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி, \q2 இறைவனின் நீரோடைகள் தண்ணீரால் நிறைந்திருக்கின்றன; \q2 இவ்விதமாகவே நீர் அதை ஏற்படுத்தியிருக்கிறீர். \q1 \v 10 நீர் அதின் வரப்புகளை நனைத்து, அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து, \q2 மழையினால் அதை மென்மையாக்கி, அதின் பயிர்களை ஆசீர்வதிக்கிறீர். \q1 \v 11 வருடத்தை உமது நன்மையின் நிறைவினால் முடிசூட்டுகிறீர்; \q2 நீர் செல்லும் இடமெல்லாம் வளம் நிரம்பி வழிகின்றது. \q1 \v 12 பாலைவனத்திலும்கூட புல்வெளிகள் நிறைந்து இருக்கின்றன; \q2 குன்றுகள் மகிழ்ச்சியினால் மூடப்பட்டுள்ளன. \q1 \v 13 புற்தரைகள் மந்தைகளினால் நிரம்பியுள்ளன; \q2 பள்ளத்தாக்குகள் தானியத்தைப் போர்வைபோல் கொண்டிருக்கின்றன; \q2 அவை சந்தோஷத்தால் ஆர்ப்பரித்துப் பாடுகின்றன. \c 66 \cl சங்கீதம் 66 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு. \q1 \v 1 பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன் \q2 இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்! \q1 \v 2 அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்; \q2 அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள். \q1 \v 3 இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை! \q2 உமது வல்லமை பெரிதானது; \q2 அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள். \q1 \v 4 பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்; \q2 அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள், \q2 அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்.” \b \q1 \v 5 இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்; \q2 மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை. \q1 \v 6 அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்; \q2 மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்; \q2 வாருங்கள், அவரில் களிகூருவோம். \q1 \v 7 அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; \q2 அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன; \q2 கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும். \b \q1 \v 8 எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்; \q2 அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக. \q1 \v 9 அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்; \q2 நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார். \q1 \v 10 இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்; \q2 வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர். \q1 \v 11 எங்களைச் சிறைபிடித்து, \q2 எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர். \q1 \v 12 மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்; \q2 நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம், \q2 ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர். \b \q1 \v 13 நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்; \q2 எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன். \q1 \v 14 நான் துன்பத்திலிருந்தபோது \q2 என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன். \q1 \v 15 நான் கொழுத்த மிருகங்களையும் \q2 செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்; \q2 நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன். \b \q1 \v 16 இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்; \q2 அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். \q1 \v 17 நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; \q2 அவருடைய துதி என் நாவில் இருந்தது. \q1 \v 18 என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால், \q2 யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்; \q1 \v 19 இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து, \q2 என் மன்றாட்டின் குரலைக் கேட்டார். \q1 \v 20 என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், \q2 என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த \q2 இறைவனுக்குத் துதி உண்டாகட்டும். \c 67 \cl சங்கீதம் 67 \d கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். \q1 \v 1 இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக; \q2 அவர் தமது முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்வாராக. \q1 \v 2 இறைவனே, உமது வழிகள் பூமியிலும், \q2 உமது இரட்சிப்பு எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் அறியப்படும். \b \q1 \v 3 இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; \q2 எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. \q1 \v 4 நீர் மக்கள் கூட்டத்தை நீதியாய் ஆட்சிசெய்து, \q2 பூமியின் நாடுகளுக்கு வழிகாட்டுவதால், \q2 மக்கள் மகிழ்ந்து களிப்புடன் பாடுவார்களாக. \q1 \v 5 இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; \q2 எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. \b \q1 \v 6 அப்பொழுது நிலம் விளைச்சலைக் கொடுக்கும்; \q2 இறைவனாகிய எங்கள் இறைவனே எங்களை ஆசீர்வதிப்பார். \q1 \v 7 இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்; \q2 ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள். \c 68 \cl சங்கீதம் 68 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதமாகிய பாட்டு. \q1 \v 1 இறைவன் எழுந்திருப்பாராக, அவருடைய பகைவர் சிதறடிக்கப்படுவார்களாக; \q2 அவருடைய எதிரிகள் அவருக்கு முன்பாகப் பயந்து ஓடுவார்களாக. \q1 \v 2 காற்றினால் புகை அடித்துச் செல்லப்படுகிறது போல, நீர் அவர்களை ஊதிவிடும்; \q2 நெருப்பின் முன்னே மெழுகு உருகுவது போல, \q2 இறைவனுக்கு முன்பாகக் கொடியவர்கள் அழிவார்களாக. \q1 \v 3 ஆனால் நீதிமான்கள் மகிழ்ந்து \q2 இறைவனுக்கு முன்பாகக் களிகூருவார்களாக; \q2 அவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்வார்களாக. \b \q1 \v 4 இறைவனைப் பாடுங்கள், அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள்; \q2 மேகங்களில் ஏறிப் போகிறவரை புகழ்ந்து உயர்த்துங்கள்; \q2 யெகோவா என்பது அவருடைய பெயர்; அவருக்கு முன்பாகக் களிகூருங்கள். \q1 \v 5 இறைவன் தமது பரிசுத்த வாழ்விடத்தில் \q2 தகப்பன் இல்லாதவர்களுக்குத் தகப்பனாகவும் \q2 விதவைகளுக்கு பாதுகாவலராகவும் இருக்கிறார். \q1 \v 6 இறைவன் தனிமையானவர்களுக்கு குடும்பத்தை ஏற்படுத்துகிறார்; \q2 சிறைக் கைதிகளை விடுவித்து, செழிப்பான வாழ்வுக்குள் நடத்திச் செல்கிறார்; \q2 கலகக்காரரோ வெயிலால் வறண்ட நாட்டில் வாழ்கிறார்கள். \b \q1 \v 7 இறைவனே, நீர் உமது மக்களுக்கு முன்பாகச் சென்று, \q2 அவர்களைப் பாலைவனத்தின் வழியே அணிவகுத்து வருகையில், \q1 \v 8 சீனாய் மலையின் இறைவனுக்குமுன், \q2 இஸ்ரயேலின் இறைவனுக்குமுன் \q2 பூமி அதிர்ந்து, வானங்கள் மழையைப் பொழிந்தன. \q1 \v 9 இறைவனே, நீர் நிறைவான மழையைக் கொடுத்தீர்; \q2 இளைத்துப்போன உமது உரிமைச்சொத்திற்கு நீர் புத்துயிர் அளித்தீர். \q1 \v 10 உமது மக்கள் அதில் குடியமர்ந்தார்கள்; \q2 இறைவனே, உமது நிறைவான நன்மையிலிருந்து ஏழைகளுக்கு வழங்கினீர். \b \q1 \v 11 யெகோவா வார்த்தையை அறிவித்தார்; \q2 அதைப் பிரசித்தப்படுத்தியதோ பெரிய கூட்டம்: \q1 \v 12 “இராணுவத்தையுடைய அரசர்கள் ஓடினார்கள்; \q2 வீட்டிலிருந்த பெண்கள் கொள்ளைப்பொருட்களைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். \q1 \v 13 நீங்கள் ஆட்டு மந்தைகளின் மத்தியில் படுத்திருந்தபோதிலும், \q2 வெள்ளியினால் மூடப்பட்ட புறாச்சிறகுகளையும் \q2 பசும்பொன்னினால் அலங்கரிக்கப்பட்ட இறகுகளையும் கண்டுபிடிப்பீர்கள்.” \q1 \v 14 எல்லாம் வல்லவர் நாட்டின் அரசர்களைச் சிதறடித்தது \q2 சல்மோன் மலையில் பனிமழை பெய்ததுபோல இருந்தது. \b \q1 \v 15 பாசான் மலை இறைவனுடைய மலை; \q2 பாசான் மலை சிகரங்களையுடைய மலை. \q1 \v 16 சிகரங்களையுடைய மலையே, ஏன் சீயோன் மலையின்மேல் பொறாமைப்படுகிறீர்கள்? \q2 அங்குதான் இறைவன் தாம் ஆளும்படி விரும்பினார்; \q2 அங்குதான் என்றென்றும் யெகோவா குடியிருப்பார். \q1 \v 17 இறைவனின் தேர்கள் பத்தாயிரங்களும், \q2 ஆயிரம் ஆயிரங்களுமாய் இருக்கின்றன; \q2 யெகோவா சீனாய் மலையிலிருந்து அவருடைய பரிசுத்த இடத்திற்கு வந்தார். \q1 \v 18 நீர் மேலே ஏறிச்சென்றபோது, \q2 சிறைப்பட்ட அநேகரை உம்மோடு எடுத்துச்சென்றீர்; \q1 மனிதரிடமிருந்தும் கலகக்காரரிடமிருந்தும் நீர் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டீர்; \q2 இறைவனாகிய யெகோவாவின் வாழ்விடம் அதுவே. \b \q1 \v 19 தினந்தோறும் நம் பாரங்களைச் சுமக்கிற நமது இரட்சகரும் \q2 இறைவனுமான யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். \q1 \v 20 நம்முடைய இறைவன் காப்பாற்றுகிற இறைவன்; \q2 வல்லமையுள்ள யெகோவா மரணத்திலிருந்து நம்மை தப்புவிக்கிறார். \q1 \v 21 இறைவன் நிச்சயமாகவே தமது பகைவர்களின் தலைகளை உடைப்பார்; \q2 தங்கள் பாவங்களில் தொடர்கிறவர்களின் முடியுள்ள \q2 உச்சந்தலைகளை அவர் நொறுக்கிப்போடுவார். \q1 \v 22 யெகோவா கூறுவதாவது, “நான் அவர்களைப் பாசானிலிருந்து கொண்டுவருவேன்; \q2 நான் அவர்களைக் கடலின் ஆழங்களிலிருந்தும் கொண்டுவருவேன், \q1 \v 23 அப்பொழுது உங்கள் எதிரிகளின் இரத்தம் உங்கள் பாதங்களில் பதியும்; \q2 உங்கள் நாய்களும் தங்கள் பங்கிற்கு நாவினால் நக்கும்.” \b \q1 \v 24 என் இறைவனும் என் அரசனுமானவர், \q2 பரிசுத்த இடத்திற்குள் உமது ஊர்வலம் போவதை, இறைவனே அனைவரும் கண்டனர். \q1 \v 25 முன்னால் பாடகரும், அவர்களுக்குப் பின்னால் இசைக் கலைஞர்களும் போகிறார்கள்; \q2 அவர்களுடன் இளம்பெண்கள் தம்புராவை வாசித்துக்கொண்டு போகிறார்கள். \q1 \v 26 மகா சபையில் இறைவனைத் துதியுங்கள். \q2 இஸ்ரயேலின் சபையிலே யெகோவாவைத் துதியுங்கள்; \q1 \v 27 சிறிய கோத்திரமாகிய பென்யமீன் அவர்களை வழிநடத்துகிறான்; \q2 பின்பு யூதா கோத்திரப் பிரபுக்களின் பெருங்கூட்டமும், \q2 செபுலோன், நப்தலி கோத்திரப் பிரபுக்களும் அங்கே இருக்கிறார்கள். \b \q1 \v 28 இறைவனே, உமது வல்லமையை கட்டளையிடும்; \q2 எங்கள் இறைவனே, முன்பு நீர் செயலாற்றியதுபோல \q2 உமது பலத்தை எங்களுக்குக் காண்பியும். \q1 \v 29 எருசலேமில் இருக்கும் உமது ஆலயத்திற்காக \q2 அரசர்கள் உமக்கு நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். \q1 \v 30 நாணல்களின் நடுவிலுள்ள விலங்கினங்களைக் கடிந்துகொள்ளும்; \q2 கன்றுகளோடுள்ள காளைகள் கூட்டத்தைப் போன்ற மக்களைக் கடிந்துகொள்ளும்; \q1 அவர்கள் வெள்ளி அன்பளிப்புகளுடன் உமக்கு முன்பாகப் பணிந்துகொள்ளட்டும்; \q2 யுத்தத்தில் மகிழ்கிற மக்களைச் சிதறடியும். \q1 \v 31 எகிப்திலிருந்து அரச தூதுவர்கள் வருவார்கள்; \q2 எத்தியோப்பியர் இறைவனிடத்தில் தங்களை சமர்ப்பிப்பார்கள். \b \q1 \v 32 பூமியின் அரசுகளே, இறைவனைப் பாடுங்கள்; \q2 யெகோவாவுக்குத் துதி பாடுங்கள். \q1 \v 33 வானங்களில் பூர்வீக வானங்களில் ஏறிச் செல்கிறவரை, \q2 வல்லமையுள்ள சத்தத்துடன் முழங்குகிறவரைப் பாடுங்கள். \q1 \v 34 இறைவனுடைய வல்லமையை அறிவியுங்கள்; \q2 அவருடைய மகத்துவம் இஸ்ரயேலின் மேலாக இருக்கிறது; \q2 அவருடைய வல்லமை ஆகாயங்களில் இருக்கிறது. \q1 \v 35 இறைவனே, நீர் உமது பரிசுத்த இடத்தில் பிரமிக்கத்தக்கவராய் இருக்கிறீர்; \q2 இஸ்ரயேலின் இறைவன் தமது மக்களுக்கு பெலனையும் வல்லமையையும், கொடுக்கிறார். \b \q1 இறைவனுக்குத் துதி உண்டாவதாக! \c 69 \cl சங்கீதம் 69 \d “லீலிமலர்” என்ற இசையில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 இறைவனே, என்னைக் காப்பாற்றும்; \q2 வெள்ளம் என் கழுத்துமட்டும் வந்துவிட்டது. \q1 \v 2 கால் ஊன்ற முடியாத சேறு நிறைந்த ஆழங்களில் நான் அமிழ்ந்திருக்கிறேன்; \q2 ஆழமான வெள்ளத்தில் \q1 நான் அகப்பட்டு விட்டேன்; \q2 வெள்ளம் என்னை மூடுகிறது. \q1 \v 3 சத்தமிட்டுக் கூப்பிட்டு நான் களைத்துப் போனேன்; \q2 என் தொண்டையும் வறண்டுபோயிற்று; \q1 என் இறைவனைத் தேடி \q2 என் கண்கள் மங்கிப்போயின. \q1 \v 4 காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறவர்கள் \q2 என் தலைமுடியைவிட அதிகமாய் இருக்கிறார்கள்; \q1 அநேகர் காரணமில்லாமல் எனக்குப் பகைவர்களாய் இருக்கிறார்கள்; \q2 அவர்கள் என்னை அழிக்கத் தேடுகிறார்கள். \q1 நான் திருடாததைத் திருப்பிக் கொடுக்க \q2 கட்டாயப்படுத்தப்படுகிறேன். \b \q1 \v 5 இறைவனே, என் புத்தியீனத்தை நீர் அறிந்திருக்கிறீர்; \q2 என் குற்றம் உமக்கு மறைக்கப்பட்டிருக்கவில்லை. \b \q1 \v 6 சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவரே, \q2 உமக்காகக் காத்திருக்கிறவர்கள் \q2 என் நிமித்தம் அவமானம் அடையாதிருப்பார்களாக; \q1 இஸ்ரயேலின் இறைவனே, \q2 உம்மைத் தேடுகிறவர்கள் \q2 என் நிமித்தம் வெட்கம் அடையாதிருப்பார்களாக. \q1 \v 7 உமக்காக நான் நிந்தையை சகித்திருக்கிறேன்; \q2 வெட்கம் என் முகத்தை மூடியிருக்கிறது \q1 \v 8 நான் என் சகோதரர்களுக்கு வேறுநாட்டைச் சேர்ந்தவனாகவும் \q2 என் சொந்தத் தாயின் மகன்களுக்கு அறியாதவனாகவும் இருக்கிறேன். \q1 \v 9 ஏனெனில் உமது ஆலயத்தைப் பற்றிய வைராக்கியம் என்னை எரித்துவிடுகிறது; \q2 உம்மை இகழ்கிறவர்களின் இகழ்ச்சி என்மேல் விழுகிறது. \q1 \v 10 நான் அழுது உபவாசித்தபோது, \q2 அவர்கள் என்னை நிந்தித்தார்கள். \q1 \v 11 நான் துக்கவுடை உடுத்தும் போது, \q2 அவர்களுக்குப் பழமொழியானேன். \q1 \v 12 நகர வாசலில் அமர்ந்திருக்கிறவர்கள் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள்; \q2 நான் குடிகாரரின் பாடலாக இருக்கிறேன். \b \q1 \v 13 ஆனாலும் யெகோவாவே, உம்முடைய தயவின் காலத்திலே, \q2 நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; \q1 இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் \q2 நிச்சயமான உமது மீட்பைத் தந்து பதிலளியும். \q1 \v 14 சேற்றிலிருந்து என்னைத் தப்புவியும், \q2 என்னை மூழ்கிப்போக விடாதேயும்; \q1 என்னை வெறுக்கிறவர்களிடம் இருந்தும் \q2 ஆழ்கடலினின்றும் என்னை விடுவியும். \q1 \v 15 வெள்ளப்பெருக்கு என்னை மூடிக்கொள்ள விடாதேயும்; \q2 ஆழங்கள் என்னை விழுங்க விடாதேயும்; \q2 சவக்குழி என்மீது தன் வாயை மூடிக்கொள்ள விடாதேயும். \b \q1 \v 16 யெகோவாவே, எனக்குப் பதில் தாரும், உமது உடன்படிக்கையின் அன்பு நல்லது; \q2 உமது பெரிதான இரக்கத்தால் என்னிடம் திரும்பும். \q1 \v 17 உமது முகத்தை அடியேனுக்கு மறையாதிரும், \q2 விரைவாய் எனக்குப் பதில் தாரும்; நான் துயரத்தில் இருக்கிறேன். \q1 \v 18 என்னருகே வந்து என்னைத் தப்புவியும்; \q2 என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும். \b \q1 \v 19 என் நிந்தையும் என் அவமானமும் என் இழிவும் உமக்குத் தெரியும்; \q2 என் பகைவர் எல்லோருமே உமக்கு முன்பாக இருக்கிறார்கள். \q1 \v 20 நிந்தை என் உள்ளத்தை நொறுக்கியதால் \q2 நான் களைத்துப் போனேன். \q1 நான் அனுதாபத்தைத் தேடினேன், அது கிடைக்கவில்லை; \q2 ஆறுதல்படுத்துகிறவர்களைத் தேடினேன், ஆனால் ஒருவரையும் நான் காணவில்லை. \q1 \v 21 அவர்கள் என் உணவில் கசப்பான நஞ்சைக் கொடுத்தார்கள்; \q2 என் தாகத்துக்குக் குடிக்க எனக்கு காடியைக் கொடுத்தார்கள். \b \q1 \v 22 அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும் \q2 அவர்களுடைய செல்வம் அவர்களுக்குப் பொறியாயும் இருப்பதாக. \q1 \v 23 அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருளடையட்டும், \q2 அவர்களுடைய முதுகுகள் என்றென்றுமாக கூனிப்போகட்டும். \q1 \v 24 உமது கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்; \q2 உமது சினம் அவர்களைப் பின்தொடர்வதாக. \q1 \v 25 அவர்களுடைய இருப்பிடங்கள் பாழடைவதாக; \q2 அவர்களுடைய கூடாரங்களில் யாரும் குடியேறாதிருப்பார்களாக. \q1 \v 26 ஏனெனில் நீர் அடித்தவர்களை அவர்கள் துன்புறுத்தி, \q2 நீர் காயப்படுத்தியவர்களின் வேதனையைக் குறித்து தூற்றிப் பேசுகிறார்கள். \q1 \v 27 அவர்களுடைய அநீதியின்மேல் அநீதியை சுமத்தும்; \q2 அவர்கள் உமது இரட்சிப்பில் பங்குபெற இடமளியாதேயும். \q1 \v 28 வாழ்வின் புத்தகத்திலிருந்து அவர்கள் நீக்கப்பட்டுப் போவார்களாக; \q2 நீதிமான்களின் பெயர்ப்பட்டியலில் அவர்கள் சேர்க்கப்படாதிருப்பார்களாக. \b \q1 \v 29 நான் வருத்தத்திலும் துன்பத்திலும் இருக்கிறேன்; \q2 இறைவனே, உமது இரட்சிப்பு என்னைப் பாதுகாப்பதாக. \b \q1 \v 30 நான் இறைவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து, \q2 நன்றி செலுத்தி அவரை மகிமைப்படுத்துவேன். \q1 \v 31 காணிக்கையாகக் கொடுக்கும் \q2 கொம்பும், விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட, \q2 மகிமைப்படுத்துவதே யெகோவாவுக்கு அதிக மகிழ்வைக் கொடுக்கும். \q1 \v 32 இதைக்கண்டு ஏழைகள் மகிழ்ச்சியடைவார்கள்; \q2 இறைவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழ்வடைவதாக! \q1 \v 33 யெகோவா தேவையுள்ளோருக்குச் செவிகொடுக்கிறார்; \q2 சிறைப்பட்ட தமது மக்களை அவர் இழிவாகக் கருதுவதில்லை. \b \q1 \v 34 வானமும் பூமியும் அவரைத் துதிக்கட்டும்; \q2 கடலும் அவற்றில் வாழும் அனைத்தும் அவரைத் துதிக்கட்டும். \q1 \v 35 இறைவன் சீயோனை மீட்டு, \q2 யூதாவின் பட்டணங்களை மீண்டும் கட்டுவார்; \q1 அப்பொழுது அவருடைய மக்கள் அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள். \q2 \v 36 அவருடைய பணியாளரின் பிள்ளைகள் அதை உரிமைச்சொத்தாகப் பெறுவார்கள்; \q2 அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அங்கே குடியிருப்பார்கள். \c 70 \cl சங்கீதம் 70 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 இறைவனே, என்னைக் காப்பாற்ற விரைவாய் வாரும்; \q2 யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும். \b \q1 \v 2 என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் \q2 வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக; \q1 எனது அழிவை விரும்புகிற யாவரும் \q2 அவமானமடைந்து திரும்புவார்களாக. \q1 \v 3 என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள், \q2 அவர்களுடைய வெட்கத்தினால் திரும்புவார்களாக. \q1 \v 4 ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் \q2 உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; \q1 உமது இரட்சிப்பை விரும்புவோர், \q2 “இறைவன் பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக. \b \q1 \v 5 நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; \q2 இறைவனே, என்னிடம் விரைந்து வாரும். \q1 நீரே என் துணை, நீரே என் மீட்பர்; \q2 யெகோவாவே, தாமதியாதேயும். \c 71 \cl சங்கீதம் 71 \q1 \v 1 யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்; \q2 என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும். \q1 \v 2 உமது நீதியின் நிமித்தம் என்னை விடுவித்து, என்னை மீட்டுக்கொள்ளும்; \q2 உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னைக் காப்பாற்றும். \q1 \v 3 நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க \q2 என் புகலிடமான கன்மலையாய் இரும்; \q1 நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால், \q2 என்னைக் காப்பாற்றக் கட்டளையிடும். \q1 \v 4 என் இறைவனே, என்னைக் கொடியவன் கையிலிருந்து விடுவியும்; \q2 தீமையும் கொடூரமும் நிறைந்த மனிதரின் பிடியிலிருந்தும் விடுவியும். \b \q1 \v 5 ஆண்டவராகிய யெகோவாவே, நீரே என் எதிர்பார்ப்பு; \q2 என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை. \q1 \v 6 நான் பிறந்ததுமுதல் உம்மைச் சார்ந்திருக்கிறேன்; \q2 என் தாயின் கருப்பையிலிருந்து என்னைப் பராமரித்தவர் நீரே; \q2 நான் என்றென்றும் உம்மைத் துதிப்பேன். \q1 \v 7 நான் அநேகருக்கு வியப்புக்குரிய எடுத்துக்காட்டாய் இருக்கிறேன்; \q2 நீரே என் பலமுள்ள புகலிடம். \q1 \v 8 நாள்முழுவதும் உம்முடைய மகத்துவத்தை அறிவித்து, \q2 என் வாய் உமது துதியினால் நிறைந்திருக்கிறது. \b \q1 \v 9 நான் முதியவனாகும்போது, என்னைத் தள்ளிவிடாதேயும்; \q2 என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாதேயும். \q1 \v 10 ஏனெனில் என் பகைவர் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; \q2 என்னைக் கொலைசெய்யக் காத்திருக்கிறவர்கள் ஒன்றுகூடி சதி செய்கிறார்கள். \q1 \v 11 அவர்கள், “இறைவன் அவனைக் கைவிட்டுவிட்டார்; \q2 அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்; \q2 அவனை விடுவிக்கிறவர் யாருமே இல்லை” என்கிறார்கள். \q1 \v 12 இறைவனே, என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; \q2 என் இறைவனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்; \q1 \v 13 என்மீது குற்றம் சுமத்துகிறவர்கள் வெட்கத்தால் அழிந்துபோவார்களாக; \q2 எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள், \q2 ஏளனத்தாலும் அவமானத்தாலும் மூடப்படுவார்களாக. \b \q1 \v 14 நானோ எப்பொழுதுமே எதிர்பார்ப்புடனே இருப்பேன்; \q2 நான் மேன்மேலும் உம்மைத் துதிப்பேன். \b \q1 \v 15 எப்பொழுதும் என் வாய் உமது நீதியைப்பற்றிச் சொல்லும்; \q2 உமது இரட்சிப்பின் செயல்களை நான் அறியாதிருந்த போதிலும், \q2 அதைப்பற்றி நாள்தோறும் என் வாய் சொல்லும். \q1 \v 16 ஆண்டவராகிய யெகோவாவே, நான் உமது வல்லமையான செயல்களை எடுத்துச்சொல்வேன்; \q2 நான் உம்முடைய நீதியை மட்டுமே பிரசித்தம் பண்ணுவேன். \q1 \v 17 இறைவனே, என் இளமையிலிருந்தே நீர் எனக்குப் போதித்திருக்கிறீர்; \q2 நான் உமது அற்புதமான செயல்களை இன்றுவரை அறிவித்து வருகிறேன். \q1 \v 18 இறைவனே, வரப்போகும் எல்லோருக்கும் அடுத்த தலைமுறைக்கும் \q2 உமது ஆற்றலையும் உம்முடைய வல்லமையையும் அறிவிக்குமளவும் \q1 நான் முதிர்வயதாகும்போதும் என் தலைமுடி நரைக்கும்போதும், \q2 என்னைக் கைவிடாதேயும். \b \q1 \v 19 பெரிய காரியங்களைச் செய்த இறைவனே, \q2 உமது நீதி ஆகாயங்களை எட்டுகிறது; \q2 இறைவனே, உம்மைப்போல் யாருண்டு? \q1 \v 20 நீர் என்னை அநேக கசப்பான \q2 துன்பங்களையும் காணச் செய்திருந்தாலும் \q2 என் வாழ்வை மீண்டும் புதுப்பிப்பீர்; \q1 பூமியின் ஆழங்களில் இருந்து \q2 நீர் என்னை மறுபடியும் மேலே கொண்டுவருவீர். \q1 \v 21 நீர் என் மேன்மையைப் பெருகப்பண்ணி, \q2 மீண்டும் என்னைத் தேற்றுவீர். \b \q1 \v 22 என் இறைவனே, நான் உமது உண்மையைப் பற்றி \q2 வீணை இசைத்து உம்மைத் துதிப்பேன்; \q1 இஸ்ரயேலின் பரிசுத்தரே, \q2 யாழ் இசைத்து நான் உமக்குத் துதி பாடுவேன். \q1 \v 23 உம்மால் மீட்கப்பட்ட நான் \q2 உமக்குத் துதிபாடும்போது, \q2 என் உதடுகளும் கம்பீரித்து மகிழும். \q1 \v 24 என் நாவு நாள்முழுவதும் \q2 உமது நீதியின் செயல்களைப் பற்றிச் சொல்லும்; \q1 ஏனெனில் எனக்குத் தீங்குசெய்ய விரும்பியவர்கள் \q2 வெட்கத்திற்கும் கலக்கத்திற்கும் உள்ளானார்கள். \c 72 \cl சங்கீதம் 72 \d சாலொமோனின் சங்கீதம். \q1 \v 1 இறைவனே, அரசனுக்கு உமது நியாயமான தீர்ப்பையும் \q2 இளவரசனுக்கு உமது நீதியையும் கொடும். \q1 \v 2 அப்பொழுது அவர் உமது மக்களை நீதியோடும், \q2 துன்பப்பட்ட உம்முடையவர்களை நேர்மை தவறாமலும் நியாயந்தீர்ப்பார். \b \q1 \v 3 மலைகள் அனைவருக்கும் செழிப்பை உண்டாக்கட்டும், \q2 குன்றுகள் நீதியின் பலனைக் கொண்டுவரட்டும். \q1 \v 4 மக்கள் மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களை அவர் பாதுகாத்து, \q2 ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாற்றட்டும்; \q2 ஒடுக்குவோரை அவர் நொறுக்கிப்போடட்டும். \q1 \v 5 சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும், \q2 தலைமுறை தலைமுறையாக அவர்கள் உமக்குப் பயந்திருப்பார்கள். \q1 \v 6 அரசர் புல்வெட்டப்பட்ட வயலின்மேல் பொழியும் மழையைப்போலவும், \q2 பூமியை நீர்ப்பாய்ச்சும் மழைத்தூறலைப் போலவும் \q2 அரசரின் ஆட்சி புத்துணர்ச்சி அடையட்டும். \q1 \v 7 அவருடைய நாட்களில் நீதிமான்கள் செழிப்பார்கள்; \q2 சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். \b \q1 \v 8 ஒரு கடலில் இருந்து மறுகடல் வரைக்கும், \q2 நதிதொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அரசர் ஆளுகை செய்யட்டும். \q1 \v 9 பாலைவன வாசிகள் அவருக்குமுன் பணிவார்கள்; \q2 அவருடைய பகைவர்கள் மண்ணை நக்குவார்கள். \q1 \v 10 தர்ஷீசு மற்றும் தூரத்து தீவுகளின் அரசர்கள் \q2 அவருக்கு காணிக்கைகளைக் கொண்டுவரட்டும்; \q1 ஷேபாவும், சேபாவின் அரசர்களும் \q2 அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கட்டும். \q1 \v 11 எல்லா அரசர்களும் அவரை வணங்கட்டும்; \q2 எல்லா நாடுகளும் அவருக்குப் பணிவிடை செய்யட்டும். \b \q1 \v 12 ஏனெனில் கதறுகின்ற ஏழைகளையும் \q2 உதவி செய்வாரின்றித் தவிக்கும் எளியோரையும் அவர் விடுவிப்பார். \q1 \v 13 பலவீனருக்கும் எளியோருக்கும் அவர் அனுதாபங்காட்டி, \q2 எளியோரை மரணத்திலிருந்து காப்பாற்றுவார். \q1 \v 14 அவர்களை ஒடுக்குதலுக்கும் வன்செயலுக்கும் தப்புவிப்பார்; \q2 ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கை அவருடைய பார்வையில் விலையுயர்ந்ததாய் இருக்கும். \b \q1 \v 15 அவர் நீடித்து வாழ்வாராக! \q2 சேபாவின் தங்கம் அவருக்குக் கொடுக்கப்படுவதாக; \q1 மக்கள் எக்காலத்திலும் அவருக்காக மன்றாடி, \q2 நாள்தோறும் அவரை ஆசீர்வதிப்பார்களாக. \q1 \v 16 நாட்டிலே தானியம் மிகுதியாக விளையட்டும்; \q2 குன்றுகளின் உச்சியில் தானியக்கதிர்கள் அசையட்டும்; \q1 அதின் உற்பத்தி லெபனோனைப்போல செழிக்கட்டும்; \q2 அதின் பட்டணத்தார் வெளியின் புல்லைப்போல் செழித்து வளருவார்களாக. \q1 \v 17 அவருடைய பெயர் என்றும் நிலைத்திருப்பதாக; \q2 சூரியன் உள்ளமட்டும் அது தொடர்ந்திருப்பதாக. \b \q1 எல்லா நாடுகளும் அவர்மூலம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்; \q2 அவர்கள் அவரை ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று அழைப்பார்கள். \b \b \q1 \v 18 இஸ்ரயேலின் இறைவனாயிருக்கிற, யெகோவாவாகிய இறைவனுக்குத் துதி உண்டாவதாக; \q2 அவர் அதிசயமான செயல்களைச் செய்கிறார். \q1 \v 19 அவருடைய மகத்துவமான பெயர் என்றென்றும் துதிக்கப்படுவதாக; \q2 பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிரம்புவதாக. \qc ஆமென், ஆமென். \b \b \q1 \v 20 ஈசாயின் மகன் தாவீதின் மன்றாட்டுகள் இத்துடன் நிறைவுபெறுகின்றன. \c 73 \ms பகுதி iii \mr சங்கீதம் 73–89 \cl சங்கீதம் 73 \d ஆசாபின் சங்கீதம். \q1 \v 1 நிச்சயமாகவே, இருதயத்தில் சுத்தமுள்ள இஸ்ரயேலருக்கு, \q2 இறைவன் நல்லவராயிருக்கிறார். \b \q1 \v 2 ஆனால் நானோ, என் கால்கள் சறுக்கி, \q2 என் காலடிகள் இடறி விழப்போனேன். \q1 \v 3 பெருமையுள்ளவர்களைக் குறித்துப் பொறாமை கொண்டேன்; \q2 கொடியவர்களின் வளமான வாழ்வை நான் கண்டேன். \b \q1 \v 4 அவர்களுக்கு சாகும்வரை வேதனைகளே இல்லை; \q2 அவர்களுடைய உடல்கள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கின்றன. \q1 \v 5 அவர்கள் சாதாரண மனிதர்களைப்போல துன்பப்படுவதில்லை; \q2 மனிதருக்கு வரும் நோய்களினாலும் அவர்கள் பீடிக்கப்படுவதில்லை. \q1 \v 6 ஆதலால் பெருமை அவர்களுடைய கழுத்துச் சங்கிலியாய் இருக்கிறது; \q2 அவர்கள் வன்முறையை உடையாகக் கொண்டிருக்கிறார்கள். \q1 \v 7 அவர்களுடைய இருதயம் கொழுப்பினால் புடைத்து அநியாயம் வெளியே வருகிறது; \q2 அவர்கள் மனதிலிருந்து எழும் தீமையான எண்ணங்களுக்கு அளவேயில்லை. \q1 \v 8 அவர்கள் ஏளனம் செய்து, தீமையானதைப் பேசுகிறார்கள்; \q2 அகங்காரத்தில் ஒடுக்கப்போவதாகப் பயமுறுத்துகிறார்கள். \q1 \v 9 அவர்களுடைய வாயின் வார்த்தைகள் வானமட்டும் எட்டுகிறது; \q2 அவர்களுடைய நாவின் சொற்கள் பூமியெங்கும் சுற்றித்திரிகிறது. \q1 \v 10 ஆகையால் மக்களும் அவர்களிடமாய்த் திரும்பி, \q2 அவர்களின் சொற்களைத் தண்ணீரைப்போல் குடிக்கிறார்கள். \q1 \v 11 அவர்கள், “இறைவன் எப்படி அறிவார்? \q2 மகா உன்னதமானவருக்கு இவற்றைப் பற்றிய அறிவு உண்டோ?” என்கிறார்கள். \b \q1 \v 12 கொடியவர்கள் எப்பொழுதும் சிந்தனை அற்றவர்களாகவும், \q2 செல்வத்தினால் பெருகுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். \b \q1 \v 13 உண்மையில், நான் வீணாகவே என் இருதயத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டேன்; \q2 வீணாகவே குற்றமற்றவனாய் என் கைகளைக் கழுவிக் கொண்டேன். \q1 \v 14 நாளெல்லாம் நான் பாதிக்கப்பட்டேன்; \q2 காலைதோறும் நான் கண்டிக்கப்பட்டேன். \b \q1 \v 15 இவ்வாறு பேசியிருந்தால், \q2 நான் உமது பிள்ளைகளுக்கு துரோகம் செய்திருப்பேன். \q1 \v 16 இவற்றையெல்லாம் விளங்கிக்கொள்ள நான் முயன்றபோது, \q2 அது எனக்குக் கடினமாய் இருந்தது. \q1 \v 17 ஆனால் நான் இறைவனின் பரிசுத்த இடத்திற்குள் நுழைந்த பின்புதான், \q2 நான் அவர்களுடைய இறுதிமுடிவை அறிந்துகொண்டேன். \b \q1 \v 18 நிச்சயமாகவே, நீர் அவர்களைச் சறுக்கலான நிலத்தில் நிறுத்துகிறீர்; \q2 நீர் அவர்களை சேதமடைந்து போகவிடுகிறீர். \q1 \v 19 அவர்கள் சீக்கிரமாய் அழிந்துபோகிறார்கள்; \q2 திடீரென வரும் பயங்கரங்களால் முழுமையாக அழிந்துபோகிறார்கள்! \q1 \v 20 விழித்தெழுகிறவனின் கனவு கலைவதுபோல், \q2 யெகோவாவே, நீர் எழும்பும்போது, \q2 அவர்களை கற்பனைக் காட்சியென்று இகழ்வீர். \b \q1 \v 21 என் இருதயம் கசந்தது, \q2 என் உள்ளம் குத்தப்பட்டது. \q1 \v 22 நான் ஒன்றும் அறியாத மூடனானேன்; \q2 நான் உமக்கு முன்பாக விலங்கைப்போல நடந்துகொண்டேன். \b \q1 \v 23 ஆனாலும், நான் எப்பொழுதும் உம்முடனே இருக்கிறேன்; \q2 நீர் என் வலதுகையை பிடித்துக்கொள்கிறீர். \q1 \v 24 நீர் உமது ஆலோசனையினால் எனக்கு வழிகாட்டுகிறீர்; \q2 பின்பு நீர் என்னை உமது மகிமைக்குள் எடுத்துக்கொள்வீர். \q1 \v 25 பரலோகத்தில் உம்மையன்றி எனக்கு யார் உண்டு? \q2 பூமியிலும் உம்மைத்தவிர எனக்கு வேறொரு விருப்பமில்லை. \q1 \v 26 என் உடலும் உள்ளமும் சோர்ந்துபோயிற்று; \q2 ஆனால் இறைவனே என்றென்றைக்கும் நீரே என் இருதயத்தின் பெலனும் \q2 எனக்குரியவருமாய் இருக்கிறார். \b \q1 \v 27 உம்மைவிட்டுத் தூரமாகிறவர்கள் அழிவார்கள்; \q2 உமக்கு உண்மையற்றவர்களை நீர் தண்டிப்பீர். \q1 \v 28 ஆனால் என்னைப் பொறுத்தவரை, இறைவனுக்கு அருகில் இருப்பதே எனக்கு நலம்; \q2 ஆண்டவராகிய யெகோவாவை நான் என் புகலிடமாக்கிக் கொண்டேன்; \q2 உமது செயல்களையெல்லாம் நான் விவரிப்பேன். \c 74 \cl சங்கீதம் 74 \d மஸ்கீல் என்னும் ஆசாபின் சங்கீதம். \q1 \v 1 இறைவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் புறக்கணித்துவிட்டீர்? \q2 உமது கோபம் உமது மேய்ச்சல் நிலத்தின் செம்மறியாடுகளுக்கு விரோதமாக ஏன் புகைகிறது? \q1 \v 2 நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்துக்கொண்ட உமது மக்களையும், \q2 நீர் மீட்டுக்கொண்ட உமது உரிமைச்சொத்தான கோத்திரத்தையும் நினைவிற்கொள்ளும்; \q2 உமது தங்குமிடமான சீயோன் மலையையும் நினைவிற்கொள்ளும். \q1 \v 3 என்றென்றும் பாழாய்க்கிடக்கும் இடங்களைப் பாரும்; \q2 எதிரி பரிசுத்த இடத்திற்குள் அனைத்தையும் பாழாக்கிவிட்டான். \b \q1 \v 4 நீர் எங்களைச் சந்தித்த இடத்திலே, உமது எதிரிகள் கர்ஜித்தார்கள்; \q2 அவர்கள் தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டினார்கள். \q1 \v 5 அடர்ந்த காட்டில் மரங்களை வெட்டுவதற்கு \q2 கோடாரிகளைக் கையாளும் மனிதரைப்போல் அவர்கள் நடந்துகொண்டார்கள். \q1 \v 6 அவர்கள் தங்கள் கோடாரிகளாலும், \q2 கைக்கோடரிகளாலும் சித்திரவேலைகள் எல்லாவற்றையும் அழித்தார்கள். \q1 \v 7 அவர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துத் தரைமட்டமாக்கினார்கள்; \q2 அவர்கள் உமது பெயருக்குரிய தங்குமிடத்தை அசுத்தமாக்கினார்கள். \q1 \v 8 அவர்கள் தங்கள் இருதயங்களில், \q2 “நாங்கள் அவர்களை அடியோடு அழித்துவிடுவோம்!” என்றார்கள்; \q2 நாட்டில் இறைவனை வழிபட்ட எல்லா இடங்களையும் அவர்கள் எரித்துப்போட்டார்கள். \b \q1 \v 9 எங்களுக்கு நீர் செய்த அற்புத அடையாளங்கள் எதையும் நாங்கள் காணவில்லை; \q2 இறைவாக்கினரும் இல்லை; \q2 இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் எங்களில் யாருக்கும் தெரியாது. \q1 \v 10 இறைவனே, பகைவன் எவ்வளவு காலத்துக்கு உம்மை நிந்திப்பான்? \q2 எதிரி உமது பெயரை என்றென்றும் உதறித் தள்ளிவிடுவானோ? \q1 \v 11 நீர் ஏன் உமது கரத்தை, உமது வலது கரத்தை மடக்கிக் கொள்கிறீர்? \q2 மறைந்திருக்கும் உமது கையை நீட்டி அவர்களை அழித்துப்போடும். \b \q1 \v 12 ஆனால் பூர்வகாலத்திலிருந்து இறைவனே நீரே என் அரசர்; \q2 அவர் பூமியின்மேல் இரட்சிப்பைச் செய்துவருகிறார். \b \q1 \v 13 உமது வல்லமையினால் கடலை இரண்டாகப் பிளந்தவர் நீரே; \q2 நீரே கடலிலுள்ள இராட்சத விலங்கின் தலைகளையும் உடைத்தீர். \q1 \v 14 லிவியாதான் தலைகளை நசுக்கி, \q2 அதைப் பாலைவனப் பிராணிகளுக்கு உணவாகக் கொடுத்தவரும் நீரே. \q1 \v 15 ஊற்றுகளையும் நீரோடைகளையும் திறந்தவர் நீரே; \q2 எப்பொழுதும் நிரம்பி வழிந்தோடும் ஆறுகளை வற்றப் பண்ணினவரும் நீரே. \q1 \v 16 பகல் உம்முடையது, இரவும் உம்முடையதே; \q2 சூரியனையும் சந்திரனையும் நிலைப்படுத்தியவர் நீரே. \q1 \v 17 பூமியின் சகல எல்லைகளையும் அமைத்தவர் நீரே; \q2 நீரே கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் ஏற்படுத்தினீர். \b \q1 \v 18 யெகோவாவே, பகைவன் எவ்வளவாய் உம்மை ஏளனம் செய்தான் என்பதையும், \q2 மூடர்கள் உமது பெயரை எப்படி நிந்தித்தார்கள் என்பதையும் நினைவிற்கொள்ளும். \q1 \v 19 உமது புறாவின் உயிரை காட்டு மிருகங்களுக்கு ஒப்புக்கொடாதிரும்; \q2 துன்புறுத்தப்பட்ட உமது மக்களின் வாழ்வை என்றென்றும் மறவாதிரும். \q1 \v 20 உமது உடன்படிக்கையை நினைவிற்கொள்ளும்; \q2 ஏனெனில் வன்முறையின் இருப்பிடங்கள் நாட்டின் இருண்ட பகுதிகளை நிரப்புகின்றன. \q1 \v 21 ஒடுக்கப்பட்டவர்கள் அவமானத்துடன் பின்னடைய விடாதிரும்; \q2 ஏழைகளும் எளியவர்களும் உமது பெயரைத் துதிப்பார்களாக. \q1 \v 22 இறைவனே, எழுந்தருளும்; உமது சார்பாக நீரே வாதாடும்; \q2 நாள்தோறும் மூடர்கள் உம்மை எவ்வளவாய் நிந்திக்கிறார்கள் என்பதை நினைவிற்கொள்ளும். \q1 \v 23 உமது விரோதிகளின் கூக்குரலையும், \q2 தொடர்ந்தெழும் உமது பகைவரின் ஆரவாரத்தையும் அசட்டை பண்ணாதிரும். \c 75 \cl சங்கீதம் 75 \d “அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம். \q1 \v 1 இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்; \q2 உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; \q2 மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள். \b \q1 \v 2 இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு, \q2 நீதியாய் நியாயந்தீர்பேன். \q1 \v 3 பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது; \q2 நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன். \q1 \v 4 அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும், \q2 கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார். \q1 \v 5 உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்; \q2 தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார். ” \b \q1 \v 6 கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ, \q2 அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது. \q1 \v 7 ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே: \q2 அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார். \q1 \v 8 யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும் \q2 காரசாரமான நுரைக்கின்ற திராட்சை இரசம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது; \q1 அவர் அதை ஊற்றுகிறார்; \q2 பூமியின் கொடியவர்கள் எல்லோரும் அதைக் கடைசிவரைக் குடிக்கிறார்கள். \b \q1 \v 9 நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்; \q2 நான் யாக்கோபின் இறைவனுக்குத் துதி பாடுவேன். \q1 \v 10 “கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்; \q2 ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்” \q2 என்று இறைவன் சொல்கிறார். \c 76 \cl சங்கீதம் 76 \d கம்பியிசைக் கருவிகளுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டாகிய ஆசாபின் சங்கீதம். \q1 \v 1 யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்; \q2 இஸ்ரயேலில் அவருடைய பெயர் பெரியது. \q1 \v 2 அவருடைய கூடாரம் சாலேமில்\f + \fr 76:2 \fr*\fq சாலேமில் \fq*\ft என்பதற்கு இதற்கு இன்னொரு பெயர் \ft*\fqa எருசலேம்.\fqa*\f* இருக்கிறது; \q2 அவருடைய தங்குமிடம் சீயோனில் இருக்கிறது. \q1 \v 3 அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும், \q2 கேடயங்களையும், வாள்களையும், போராயுதங்களையும் உடைத்தார். \b \q1 \v 4 நீர் ஒளியுள்ளவராய்த் துலங்குகிறீர்; \q2 வேட்டையாடும் மலைகளைப் பார்க்கிலும் அதிக கம்பீரமுடையவராய் இருக்கிறீர். \q1 \v 5 வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு, \q2 அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்; \q1 போர்வீரரில் ஒருவனும் தன் கைகளை \q2 உயர்த்த முடியாமலிருக்கிறான். \q1 \v 6 யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில் \q2 குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன. \b \q1 \v 7 நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்; \q2 நீர் கோபமாய் இருக்கும்போது உம்முன் யாரால் நிற்கமுடியும்? \q1 \v 8 நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்; \q2 பூமி பயந்து அமைதியாய் இருந்தது. \q1 \v 9 இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக \q2 நீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர். \q1 \v 10 நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம் \q2 உமக்குத் துதியைக் கொண்டுவருகிறது; \q2 உமது கடுங்கோபத்திற்குத் தப்பி மீந்தவர்களை நீர் அடக்குவீர். \b \q1 \v 11 உங்கள் யெகோவாவாகிய இறைவனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்து, \q2 அவைகளை நிறைவேற்றுங்கள். \q1 அவரைச் சுற்றியிருக்கிற நாடுகளெல்லாம் பயப்படத்தக்கவரான \q2 அவருக்கே அன்பளிப்புகளைக் கொண்டுவரட்டும். \q1 \v 12 அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்; \q2 பூமியின் அரசர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள். \c 77 \cl சங்கீதம் 77 \d பாடகர் குழுத் தலைவன் எதுத்தூனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம். \q1 \v 1 நான் உதவிக்காக இறைவனை நோக்கி அழுதேன்; \q2 எனக்குச் செவிகொடுக்கும்படியாக நான் இறைவனை நோக்கி அழுதேன். \q1 \v 2 நான் துன்பத்தில் இருந்தபோது ஆண்டவரைத் தேடினேன்; \q2 இரவில் என் கைகளைத் தளராமல் உயர்த்தினேன், \q2 என் ஆத்துமாவோ ஆறுதலடைய மறுத்தது. \b \q1 \v 3 இறைவனே, உம்மை நான் நினைவுகூர்ந்தேன், நான் புலம்பினேன்; \q2 நான் தியானித்தேன், என் ஆவியோ சோர்ந்துபோயிற்று. \q1 \v 4 நீர் என் கண்களை மூடாதபடி தடுத்தீர்; \q2 நான் பேசமுடியாதபடி மிகவும் கஷ்டப்பட்டேன். \q1 \v 5 முந்தின நாட்களையும், \q2 கடந்துபோன வருடங்களைப்பற்றியும் நான் நினைத்தேன்; \q1 \v 6 நான் இரவில் என் பாடல்களை நினைவுகூர்ந்தேன். \q2 என் இருதயம் தியானித்தது, என் ஆவியோ இப்படி விசாரணை செய்தது: \b \q1 \v 7 “யெகோவா என்றென்றும் புறக்கணிப்பாரோ? \q2 அவர் மீண்டும் ஒருபோதும் தயவு காண்பிக்கமாட்டாரோ? \q1 \v 8 அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் ஒழிந்துபோயிற்றோ? \q2 அவருடைய வாக்குத்தத்தம் தலைமுறை தலைமுறைக்கும் அற்றுப்போயிற்றோ? \q1 \v 9 இறைவன் தயைசெய்ய மறந்துவிட்டாரோ? \q2 அவர் தமது கோபத்தில் இரக்கங்காட்ட மறுத்துவிட்டாரோ?” \b \q1 \v 10 அப்பொழுது நான்: “மகா உன்னதமானவரின் வலதுகரம், \q2 எனக்காக செயலாற்றுகிறது, \q1 \v 11 யெகோவாவின் செயல்களை நான் நினைவுகூருவேன்; \q2 ஆம், முற்காலத்தில் நீர் செய்த அற்புதங்களை நான் நினைவிற்கொள்வேன். \q1 \v 12 உமது செய்கைகளையெல்லாம் நான் தியானிப்பேன்; \q2 உமது வல்லமையான செயல்களை நான் சிந்திப்பேன்” என்றேன். \b \q1 \v 13 இறைவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை; \q2 நம்முடைய இறைவனைப்போல் பெரிய தெய்வம் யார்? \q1 \v 14 அற்புதங்களைச் செய்கிற இறைவன் நீரே; \q2 நீர் மக்கள் மத்தியில் உமது வல்லமையை வெளிப்படுத்துகிறீர். \q1 \v 15 உமது வல்லமையுள்ள புயத்தினால் \q2 யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் சந்ததியான உமது மக்களை நீர் மீட்டுக்கொண்டீர். \b \q1 \v 16 இறைவனே, சமுத்திரம் உம்மைக் கண்டது, \q2 சமுத்திரம் உம்மைக் கண்டு தத்தளித்தது; \q2 மகா ஆழங்களும் நடுங்கின. \q1 \v 17 மேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன, \q2 ஆகாயங்கள் முழங்கி அதிர்ந்தன; \q2 உமது அம்புகள் அங்கும் இங்கும் மின்னிப் பாய்ந்தன. \q1 \v 18 உமது இடியொலி சுழற்காற்றில் கேட்டது, \q2 உமது மின்னல் உலகத்திற்கு வெளிச்சம் கொடுத்தது; \q2 பூமி நடுங்கி அதிர்ந்தது. \q1 \v 19 உமது பாதை கடலிலும், \q2 உமது வழி பெருவெள்ளத்திலும் இருந்தது; \q2 ஆனாலும் உமது அடிச்சுவடுகள் காணப்படவில்லை. \b \q1 \v 20 மோசே, ஆரோன் என்பவர்களுடைய கையினால் \q2 நீர் உமது மக்களை ஒரு மந்தையைப்போல் நடத்தினீர். \c 78 \cl சங்கீதம் 78 \d மஸ்கீல் என்னும் ஆசாபின் சங்கீதம். \q1 \v 1 என் மக்களே, என் போதனையைக் கேளுங்கள்; \q2 என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். \q1 \v 2 நான் என் வாயைத் திறந்து உவமைகளால் பேசுவேன்; \q2 நான் முற்காலத்து மறைபொருட்களை எடுத்துச்சொல்வேன். \q1 \v 3 நாங்கள் கேட்டதையும் அறிந்ததையும் \q2 எங்கள் முற்பிதாக்கள் எங்களுக்குச் சொன்னார்கள். \q1 \v 4 நாங்கள் எங்கள் பிள்ளைகளிடமிருந்து அவைகளை மறைக்கமாட்டோம்; \q2 யெகோவாவின் புகழத்தக்கச் செயல்களையும், \q1 அவருடைய வல்லமையையும், \q2 அவர் செய்த அதிசயங்களையும் அடுத்துவரும் தலைமுறையினருக்குச் சொல்வோம். \q1 \v 5 அவர் யாக்கோபுக்கு நியமங்களை ஆணையிட்டு, \q2 இஸ்ரயேலிலே சட்டத்தை நிலைநாட்டி, \q1 அவற்றைத் தமது பிள்ளைகளுக்குப் போதிக்கும்படி, \q2 நமது முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். \q1 \v 6 அடுத்த தலைமுறையினர் உமது சட்டத்தை அறிந்துகொள்வார்கள்; \q2 இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகளும் அறிந்துகொள்வார்கள், \q2 அவர்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பார்கள். \q1 \v 7 அதினால் அவர்கள் இறைவனில் தங்கள் நம்பிக்கையை வைத்து, \q2 அவருடைய செயல்களை மறவாமல், \q2 அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவார்கள். \q1 \v 8 அவர்கள் தங்கள் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்; \q2 ஏனெனில் அவர்களுடைய முற்பிதாக்கள் பிடிவாதமும் கலகமும் உள்ள தலைமுறையினராயும் \q1 நேர்மையற்ற இருதயமுள்ளவர்களாகவும், \q2 அவர்களுடைய ஆவி இறைவனிடம் உண்மையற்றதாய் இருந்தது. \b \q1 \v 9 எப்பிராயீமின் மனிதர்கள் வில்லேந்தியவர்களாய் இருந்தபோதிலும், \q2 யுத்தநாளிலே புறமுதுகு காட்டி ஓடினார்கள்; \q1 \v 10 அவர்கள் இறைவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமல், \q2 அவருடைய சட்டத்தின்படி வாழ மறுத்தார்கள். \q1 \v 11 அவர்கள் அவருடைய செயல்களையும், \q2 அவர் தங்களுக்குச் செய்த அதிசயங்களையும் மறந்தார்கள். \q1 \v 12 அவர் சோவான் பிரதேசத்திலே எகிப்து நாட்டில், \q2 அவர்களுடைய முற்பிதாக்களுக்கு முன்பாக அற்புதங்களைச் செய்தார். \q1 \v 13 அவர் கடலைப் பிரித்து அதற்குள் அவர்களை நடத்தினார்; \q2 அவர் தண்ணீரை ஒரு சுவர்போல் உறுதியாய் நிற்கச்செய்தார். \q1 \v 14 அவர் பகலில் மேகத்தினாலும், \q2 இரவு முழுவதும் நெருப்பு வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார். \q1 \v 15 அவர் பாலைவனத்திலே கற்பாறைகளைப் பிளந்து, \q2 கடலளவு நிறைவான தண்ணீரை அவர் குடிக்கக் கொடுத்தார். \q1 \v 16 அவர் கற்பாறை வெடிப்புகளிலிருந்து நீரோடைகளை வருவித்து, \q2 தண்ணீரை ஆறுகளைப்போல் பாயும்படி செய்தார். \b \q1 \v 17 ஆனாலும் அவர்களோ அவருக்கு விரோதமாய் தொடர்ந்து பாவம் செய்தார்கள்; \q2 மகா உன்னதமானவருக்கு விரோதமாய்ப் பாலைவனத்தில் கலகம் செய்தார்கள். \q1 \v 18 அவர்கள் தாம் ஆசைப்பட்ட உணவைக் கேட்டு, \q2 வேண்டுமென்றே இறைவனைச் சோதித்தார்கள். \q1 \v 19 அவர்கள் இறைவனுக்கு விரோதமாய்ப் பேசி, \q2 “பாலைவனத்தில் விருந்தளிக்க \q2 இறைவனால் முடியுமோ? \q1 \v 20 ஆம், அவர் கற்பாறையை அடித்தபோது, \q2 தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது, \q2 நீரோடைகள் நிரம்பி வழிந்தன, \q1 ஆனால் உணவையும் அவரால் கொடுக்க முடியுமோ? \q2 தமது மக்களுக்கு இறைச்சியைக் கொடுக்கவும் அவரால் முடியுமோ?” என்றார்கள். \q1 \v 21 யெகோவா அவைகளைக் கேட்டபோது, மிகுந்த கோபமடைந்தார்; \q2 அவருடைய நெருப்பு யாக்கோபுக்கு விரோதமாய்ப் பற்றியெரிந்தது; \q2 அவருடைய கடுங்கோபம் இஸ்ரயேலுக்கு விரோதமாய் எழும்பியது. \q1 \v 22 ஏனெனில் அவர்கள் இறைவனை விசுவாசிக்கவுமில்லை, \q2 அவருடைய மீட்பில் நம்பிக்கை வைக்கவுமில்லை. \q1 \v 23 ஆனாலும் அவர் மேலேயுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டார்; \q2 வானங்களின் கதவுகளைத் திறந்தார். \q1 \v 24 அவர் மக்கள் உண்பதற்காக மன்னாவைப் பொழியப்பண்ணினார்; \q2 பரலோகத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். \q1 \v 25 இறைவனுடைய தூதர்களின் உணவை மனிதர்கள் சாப்பிட்டார்கள்; \q2 அவர்கள் வேண்டியமட்டும் உண்ணுவதற்குத் தேவையான உணவை \q2 இறைவன் அவர்களுக்கு அனுப்பினார். \q1 \v 26 அவர் வானங்களிலிருந்து கீழ்க்காற்றை வீசப்பண்ணினார்; \q2 தம் வல்லமையினால் தென்காற்றை வழிநடத்தினார். \q1 \v 27 அவர் இறைச்சியை அவர்கள்மேல் தூசியைப்போல் திரளாய் பொழியச் செய்தார், \q2 பறக்கும் பறவைகளை கடற்கரை மணலைப்போல் பொழியச் செய்தார். \q1 \v 28 அவர் அவற்றை அவர்களுடைய முகாமின் நடுவிலும், \q2 அவர்களுடைய கூடாரங்களைச் சுற்றிலும் விழச்செய்தார். \q1 \v 29 அவர்கள் திருப்தியடையுமட்டும் சாப்பிட்டார்கள்; \q2 அவர்கள் எதை ஆசைப்பட்டார்களோ அதையே அவர்களுக்குக் கொடுத்தார். \q1 \v 30 ஆனாலும் அவர்கள் ஆசைப்பட்ட உணவைச் சாப்பிட்டு முடிக்குமுன், \q2 அது அவர்களுடைய வாய்களில் இருக்கும்போதே, \q1 \v 31 இறைவனுடைய கோபம் அவர்களுக்கு விரோதமாய் எழுந்தது; \q2 அவர் அவர்கள் மத்தியிலுள்ள பலமானவர்களைக் அழித்து, \q2 இஸ்ரயேலின் இளைஞர்களை வீழ்த்தினார். \b \q1 \v 32 இவைகளெல்லாம் ஏற்பட்டபோதிலும், \q2 அவர்கள் தொடர்ந்து பாவம் செய்துகொண்டே இருந்தார்கள்; \q2 அவருடைய அதிசயங்களைக் கண்டும் அவர்கள் அவரை நம்பவில்லை. \q1 \v 33 ஆகவே அவர் அவர்களுடைய நாட்களைப் பயனற்றதாயும், \q2 அவர்களுடைய வருடங்களைப் பயங்கரமானதாயும் முடியப்பண்ணினார். \q1 \v 34 இறைவன் அவர்களில் பலரை அழிக்கும்போதெல்லாம் அவர்கள் அவரைத் தேடினார்கள்; \q2 ஆர்வத்தோடு அவரிடம் திரும்பி வந்தார்கள். \q1 \v 35 இறைவன் தங்கள் கன்மலையாய் இருந்தார் என்றும், \q2 மகா உன்னதமான இறைவன் தங்கள் மீட்பராய் இருந்தார் என்றும் நினைவில் கொண்டார்கள். \q1 \v 36 ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவரைப் புகழ்ந்து, \q2 தங்கள் நாவினால் பொய் சொன்னார்கள். \q1 \v 37 அவர்களுடைய இருதயங்கள் அவரிடத்தில் உறுதியாய் இருக்கவில்லை; \q2 அவர்கள் அவருடைய உடன்படிக்கைக்கு உண்மையாய் இருந்ததுமில்லை. \q1 \v 38 ஆகிலும் அவர் இரக்கம் உள்ளவராகவே இருந்தார்; \q2 அவர் அவர்களை அழித்துவிடாமல் \q2 அவர்களுடைய அநியாயங்களை மன்னித்தார். \q1 அவர் அநேகமுறை கோபங்கொள்ளவில்லை, \q2 அவர் தமது கடுங்கோபத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. \q1 \v 39 அவர்கள் மனிதர்கள் மட்டுமே என்பதையும், \q2 அவர்கள் ஒருபோதும் திரும்பிவராத காற்று என்பதையும் அவர் நினைவிற்கொண்டார். \b \q1 \v 40 அவர்கள் எத்தனை முறை பாலைவனத்திலே அவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள்; \q2 பாழ்நிலத்திலே அவரைத் துக்கப்படுத்தினார்கள். \q1 \v 41 அவர்கள் திரும்பத்திரும்ப இறைவனைச் சோதித்தார்கள்; \q2 அவர்கள் இஸ்ரயேலின் பரிசுத்தரை வேதனைப்படுத்தினார்கள். \q1 \v 42 அவர்கள் அவருடைய வல்லமையையும், \q2 ஒடுக்கியவனிடமிருந்து அவர் தங்களை மீட்ட நாளையும் நினைவில்கொள்ளவில்லை. \q1 \v 43 அந்நாளில் எகிப்திலே அவர் அடையாளங்களையும், \q2 சோவான் பிரதேசத்தில் அற்புதங்களையும் செய்தார். \q1 \v 44 அவர் அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாறப்பண்ணினார்; \q2 அவர்களுடைய நீரோடைகளிலிருந்து அவர்களால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. \q1 \v 45 அவர் பறக்கும் வண்டு கூட்டங்களை அனுப்பினார், அவைகள் அவர்களை தாக்கின. \q2 அவர் தவளைகளை அனுப்பினார், அவைகள் அவர்களைப் பாழாக்கின. \q1 \v 46 அவர் அவர்களுடைய பயிர்களைப் பச்சைப் புழுக்களுக்கும், \q2 அவர்களுடைய விளைச்சல்களை வெட்டுக்கிளிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார். \q1 \v 47 அவர் அவர்களுடைய திராட்சைக் கொடிகளை பனிக்கட்டி மழையாலும், \q2 அவர்களுடைய காட்டத்தி மரங்களை கல்மழையாலும் அழித்தார். \q1 \v 48 அவர் அவர்களுடைய மாடுகளை பனிக்கட்டி மழைக்கும், \q2 அவர்களுடைய மந்தை மிருகங்களை மின்னல் தாக்கத்திற்கும் ஒப்புக்கொடுத்தார். \q1 \v 49 அவர் தமது கடுங்கோபத்தையும், \q2 சினத்தையும், எதிர்ப்பையும், \q2 இன்னலையும் அழிவின் தூதர் கூட்டமாக அவர்கள்மேல் கட்டவிழ்த்தார். \q1 \v 50 அவர் தமது கோபத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியை அமைத்தார்; \q2 அவர் அவர்களை மரணத்திலிருந்து தப்பவிடாமல், \q2 கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார். \q1 \v 51 அவர் எகிப்தின் எல்லா மூத்த மகன்களையும் \q2 காமின் கூடாரங்களில்\f + \fr 78:51 \fr*\fq காமின் கூடாரங்களில் \fq*\ft என்பது \ft*\fqa எகிப்தைப் பற்றி பேசும் ஒரு வழியாகும்.\fqa*\f* அவர்களுக்கு பிறந்த மூத்த மகன்களையும் அழித்தார். \q1 \v 52 ஆனால் அவர் தமது மக்களை செம்மறியாடுகளைப்போல் வெளியே கொண்டுவந்து, \q2 அவர்களை மந்தையைப்போல் பாலைவனத்தின் வழியே, \q1 \v 53 பாதுகாப்பாய் அவர்களை அழைத்துச் சென்றபடியால், \q2 அவர்கள் பயப்படாதிருந்தார்கள்; \q2 ஆனால் அவர்களுடைய பகைவர்களையோ, கடல் மூடிப்போட்டது. \q1 \v 54 இறைவன் தமது பரிசுத்த நாட்டின் எல்லைக்கு, \q2 தமது வலதுகரத்தினால் கைப்பற்றியிருந்த மலைநாட்டிற்கு, அவர்களைக் கொண்டுவந்தார். \q1 \v 55 அவர் அவர்களுக்கு முன்பாகப் பிற நாட்டு மக்களைத் துரத்தி, \q2 அவர்களுடைய நிலங்களைப் பங்கிட்டு சொத்துரிமையாகப் பிரித்துக் கொடுத்தார்; \q2 அவர் இஸ்ரயேலின் கோத்திரங்களை அவர்களுடைய வீடுகளில் குடியமர்த்தினார். \b \q1 \v 56 ஆனால், அவர்களோ இறைவனைச் சோதித்து, \q2 உன்னதமானவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள்; \q2 அவர்கள் அவருடைய நியமங்களைக் கைக்கொள்ளவில்லை. \q1 \v 57 அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே வழிதவறி, துரோகம் செய்தார்கள்; \q2 இலக்குத் தவறும் வில்லைப்போல் நம்பமுடியாதவர்களாய் இருந்தார்கள். \q1 \v 58 அவர்கள் தங்கள் வழிபாட்டு மேடைகளால் அவருக்குக் கோபமூட்டினார்கள்; \q2 அவர்கள் தங்களுடைய இறைவனல்லாதவைகளால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள். \q1 \v 59 இறைவன் அவற்றைக் கேட்டபோது மிகவும் கோபங்கொண்டார்; \q2 அவர் இஸ்ரயேலரை முழுமையாகப் புறக்கணித்தார். \q1 \v 60 மனிதர் மத்தியில் தாம் அமைத்திருந்த கூடாரமாகிய \q2 சீலோவின் இறைசமுகக் கூடாரத்தைவிட்டு அகன்றார். \q1 \v 61 அவர் தமது வல்லமையின் உடன்படிக்கைப் பெட்டியைச் சிறைப்பட்டுப் போகச்செய்து, \q2 தமது மகிமையைப் பகைவரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார். \q1 \v 62 அவர் தமது மக்களை வாளுக்கு ஒப்புக்கொடுத்தார்; \q2 அவர் தமது உரிமைச்சொத்தான அவர்கள்மீது மிகவும் கோபங்கொண்டார். \q1 \v 63 அவர்களுடைய இளைஞரை நெருப்பு சுட்டெரித்தது; \q2 அவர்களுடைய இளம்பெண்களுக்குத் திருமணப் பாடல்கள் இல்லாமல் போனது. \q1 \v 64 அவர்களுடைய ஆசாரியர்கள் வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள்; \q2 அவர்களுடைய விதவைகளினால் அழவும் முடியவில்லை. \b \q1 \v 65 அதின்பின் யெகோவா நித்திரையிலிருந்து எழும்புவது போலவும், \q2 போர்வீரன் மதுமயக்கத்திலிருந்து எழும்புவது போலவும் விழித்தெழுந்தார். \q1 \v 66 அவர் தமது பகைவர்களை விரட்டிப் பின்வாங்கச் செய்தார்; \q2 அவர்களை நித்திய வெட்கத்திற்கு உள்ளாக்கினார். \q1 \v 67 அவர் யோசேப்பின் வம்சங்களைப் புறக்கணித்தார்; \q2 எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளவில்லை. \q1 \v 68 ஆனால் அவர் யூதா கோத்திரத்தையும், \q2 தாம் நேசித்த சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார். \q1 \v 69 அவர் தாம் வாழும் தமது பரிசுத்த இடத்தை உயர்ந்த வானங்களைப் போலவும், \q2 நித்தியமாய் தாம் நிலைப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார். \q1 \v 70 அவர் தமது அடியானாகிய தாவீதைத் தெரிந்தெடுத்து, \q2 அவனை செம்மறியாட்டுத் தொழுவங்களிலிருந்து கொண்டுவந்தார். \q1 \v 71 ஆடுகளை மேய்ப்பதைவிட்டுத் தமது மக்களாகிய யாக்கோபுக்கும், \q2 தமது உரிமைச்சொத்தான இஸ்ரயேலுக்கும் \q2 மேய்ப்பனாக இருக்கும்படியாக அவனைக் கொண்டுவந்தார். \q1 \v 72 தாவீது அவர்களை தன் இருதயத்தின் உத்தமத்தோடு மேய்த்தான்; \q2 கைத்திறமையால் அவர்களை வழிநடத்தினான். \c 79 \cl சங்கீதம் 79 \d ஆசாபின் சங்கீதம். \q1 \v 1 இறைவனே, பிற நாட்டு மக்கள் உமது உரிமைச்சொத்தின்மேல் படையெடுத்தார்கள்; \q2 அவர்கள் உமது பரிசுத்த ஆலயத்தை அசுத்தப்படுத்திவிட்டார்கள், \q2 அவர்கள் எருசலேமை இடித்துக் கற்குவியலாக்கிவிட்டார்கள். \q1 \v 2 அவர்கள் உமது பணியாளர்களின் இறந்த உடல்களை \q2 ஆகாயத்துப் பறவைகளுக்கு இரையாக்கி, \q2 உமது பரிசுத்தவான்களின் சதையை காட்டு மிருகங்களுக்குக் கொடுத்துள்ளார்கள். \q1 \v 3 அவர்கள் எருசலேம் முழுவதையும் சுற்றிலும், \q2 இரத்தத்தைத் தண்ணீரைப்போல் ஊற்றிவிட்டார்கள்; \q2 அங்கு இறந்தோரைப் புதைக்க ஒருவரும் இல்லை. \q1 \v 4 நாங்கள் எங்கள் அயலாரின் நிந்தனைக்கும், \q2 எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்திற்கும் கேலிக்கும் உரியவர்களாய் இருக்கிறோம். \b \q1 \v 5 யெகோவாவே, எதுவரைக்கும் எங்கள்மேல் கோபமாய் இருப்பீர்? \q2 எப்பொழுதுமே கோபமாய் இருப்பீரோ? \q2 உமது சினம் எவ்வளவு காலத்திற்கு நெருப்பைப்போல் எரியும்? \q1 \v 6 உம்மை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகள்மேலும், \q2 உமது பெயரைச் சொல்லி வழிபடாத \q1 அரசுகள் மேலும் \q2 உமது கடுங்கோபத்தை ஊற்றும். \q1 \v 7 ஏனெனில் அவர்கள் யாக்கோபை விழுங்கி, \q2 அவனுடைய சொந்த நாட்டை அழித்துப்போட்டார்கள். \b \q1 \v 8 எங்கள் முன்னோரின் பாவங்களை எங்களுக்கு விரோதமாய் நினைவில் கொள்ளாதேயும்; \q2 உமது இரக்கம் எங்களை விரைவாய் சந்திப்பதாக; \q2 ஏனெனில் நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டு இருக்கிறோம். \q1 \v 9 எங்கள் இரட்சகராகிய இறைவனே, \q2 உமது பெயரின் மகிமையின் நிமித்தம் எங்களுக்கு உதவிசெய்யும்; \q1 உமது பெயரின் நிமித்தம் \q2 எங்களை மீட்டு, எங்கள் பாவங்களை மன்னியும். \q1 \v 10 “அவர்களுடைய இறைவன் எங்கே?” \q2 என்று பிற நாட்டு மக்கள் ஏன் சொல்லவேண்டும்? \b \q1 சிந்தப்பட்ட உமது ஊழியரின் இரத்தத்திற்காக நீர் பழிவாங்குகிறீர் என்பதை, \q2 எங்கள் கண்களுக்கு முன்பாக பிற நாட்டு மக்கள் மத்தியில் தெரியும்படிச் செய்யும். \q1 \v 11 சிறைக் கைதிகளின் பெருமூச்சைக் கேளும்; \q2 மரணத் தீர்ப்புக்கு உள்ளானவர்களை உமது புயத்தின் பலத்தால் பாதுகாத்துக்கொள்ளும். \q1 \v 12 யெகோவாவே, எங்கள் அயலார் உம்மேல் வாரியெறிந்த நிந்தனையை \q2 அவர்களுடைய மடியில் ஏழுமடங்காகத் திரும்பக்கொடும். \q1 \v 13 அப்பொழுது உமது மக்களும் உமது நிலத்தின் செம்மறியாடுகளுமாகிய நாங்கள் \q2 என்றென்றும் உம்மைத் துதிப்போம்; \q1 தலைமுறை தலைமுறையாக \q2 நாங்கள் உமது துதியைச் சொல்வோம். \c 80 \cl சங்கீதம் 80 \d “உடன்படிக்கையின் லீலிமலர்” என்ற இசையில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம். \q1 \v 1 இஸ்ரயேலின் மேய்ப்பரே, யோசேப்பை மந்தைபோல் நடத்திச் செல்கிறவரே, \q2 எங்களுக்குச் செவிகொடும். \q1 கேருபீன்களுக்கு இடையில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே, \q2 \v 2 எப்பிராயீம், பென்யமீன், மனாசே கோத்திரங்களுக்கு முன்பாக பிரகாசியும். \q1 உமது வல்லமையை எழச்செய்து, \q2 எங்களை இரட்சிக்க வாரும். \b \q1 \v 3 இறைவனே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்; \q2 உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும். \q2 அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். \b \q1 \v 4 சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, \q2 உமது மக்கள் மன்றாடும்போது \q2 எவ்வளவு காலத்திற்கு கோபங்கொண்டிருப்பீர்? \q1 \v 5 நீர் அவர்களுக்குக் கண்ணீரை உணவாகக் கொடுத்தீர்; \q2 நீர் அவர்களை நிறைய கண்ணீரைப் பருகும்படிச் செய்தீர். \q1 \v 6 நீர் எங்களை அயலாருக்கிடையே கேலிப் பொருளாக்கினீர்; \q2 எங்கள் பகைவர் எங்களை ஏளனம் செய்யவிட்டீர். \b \q1 \v 7 சேனைகளின் இறைவனே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்; \q2 நாங்கள் இரட்சிக்கப்படும்படி \q2 உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும். \b \q1 \v 8 நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக் கொடியைக் கொண்டுவந்தீர்; \q2 பிற நாட்டு மக்களைத் துரத்திவிட்டு அதை நாட்டினீர். \q1 \v 9 நீர் அந்த திராட்சைக் கொடிக்காக நிலத்தைச் சுத்தப்படுத்தினீர்; \q2 அது வேர்விட்டு நாடெங்கும் படர்ந்தது. \q1 \v 10 அதின் நிழலால் மலைகள் மூடப்பட்டன; \q2 அதின் கிளைகளால் வலிமையான கேதுரு மரங்களும் மூடப்பட்டன. \q1 \v 11 அது தன் கிளைகளை மத்திய தரைக்கடல் வரைக்கும், \q2 தன் தளிர்களை நதி\f + \fr 80:11 \fr*\ft அதாவது, ஐப்பிராத்து\ft*\f* வரைக்கும் பரப்பியது. \b \q1 \v 12 நீர் ஏன் அதின் மதில்களைத் தகர்த்துப்போட்டீர்? \q2 அதைக் கடந்துபோகிற எல்லாருமே இப்போது அதின் பழங்களைப் பறிக்கிறார்களே. \q1 \v 13 காட்டுப் பன்றிகள் அதை அழிக்கின்றன; \q2 வயல்வெளியின் உயிரினங்கள் அதில் மேய்கின்றன. \q1 \v 14 சேனைகளின் இறைவனே, எங்களிடம் திரும்பி வாரும், \q2 பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பாரும், \q1 இந்தத் திராட்சைக் கொடியைக் கவனியும், \q2 \v 15 உமது வலதுகரம் நாட்டிய வேரையும், \q2 உமக்காகவே நீர் வளர்த்தெடுத்த உமது மகனையும் காத்துக்கொள்ளும். \b \q1 \v 16 உமது திராட்சைக்கொடி வெட்டப்பட்டு, நெருப்பினால் எரிக்கப்பட்டது; \q2 உமது முகத்தின் கண்டிப்பான பார்வையினால் உமது மக்கள் அழிகிறார்கள். \q1 \v 17 உமது கரத்தை உமது வலதுபக்கத்திலுள்ள மனிதன்மேல், \q2 உமக்காகவே நீர் வளர்த்தெடுத்த மானிடமகன்மேல் அமரச்செய்யும். \q1 \v 18 அப்பொழுது நாங்கள் உம்மைவிட்டு விலகமாட்டோம்; \q2 எங்களை உயிர்ப்பியும், நாங்கள் உமது பெயரைச் சொல்லி வழிபடுவோம். \b \q1 \v 19 சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, \q2 எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்; \q1 நாங்கள் இரட்சிக்கப்படும்படி \q2 உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும். \c 81 \cl சங்கீதம் 81 \d கித்தீத் என்னும் இசையில் வாசிக்கும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம். \q1 \v 1 நம்முடைய பெலனாகிய இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுங்கள், \q2 யாக்கோபின் இறைவனை சத்தமிட்டு ஆர்ப்பரியுங்கள். \q1 \v 2 இசையைத் தொடங்குங்கள், தம்புராவை தட்டுங்கள்; \q2 நாதமுள்ள யாழையும் வீணையையும் மீட்டுங்கள். \b \q1 \v 3 நாளிலும், \q2 நமது பண்டிகையின் நாளான பெளர்ணமி நாளிலும் கொம்பு எக்காளத்தை ஊதுங்கள். \q1 \v 4 இது இஸ்ரயேலுக்கு ஒரு விதிமுறையாகவும், \q2 யாக்கோபின் இறைவனுடைய நியமமாகவும் இருக்கிறது. \q1 \v 5 இறைவன் எகிப்திற்கு விரோதமாகப் புறப்பட்டபொழுது, \q2 அதை யோசேப்புக்கான ஒழுங்குவிதியாக ஏற்படுத்தினார். \b \q1 நான் அறியாத ஒரு குரலை இவ்வாறு கேட்டேன்: \b \q1 \v 6 “நான் அவர்களுடைய தோள்களிலிருந்து சுமையை விலக்கினேன்; \q2 கனமான கூடைகளை சுமப்பதிலிருந்து அவர்களுடைய கைகளை விடுவித்தேன். \q1 \v 7 உங்கள் கஷ்டத்தில் நீங்கள் கூப்பிட்டீர்கள், நான் உங்களைத் தப்புவித்தேன்; \q2 முழங்குகிற மேகத்திலிருந்து நான் உங்களுக்குப் பதிலளித்தேன்; \q2 மேரிபாவின் தண்ணீர் அருகில் நான் உங்களைச் சோதித்தேன். \q1 \v 8 என் மக்களே கேளுங்கள், நான் உங்களை எச்சரிக்கிறேன்; \q2 இஸ்ரயேலே, நீங்கள் எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும். \q1 \v 9 உங்கள் மத்தியில் நீங்கள் வேறு தெய்வத்தை வைத்திருக்கக்கூடாது; \q2 வேறு எந்த தெய்வத்தையும் நீங்கள் வணங்கவும் கூடாது. \q1 \v 10 எகிப்திலிருந்து உங்களைக் கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே; \q2 உங்கள் வாயை விரிவாய்த் திறவுங்கள்; \q1 நானே அதை நிரப்புவேன். \b \q1 \v 11 “ஆனால் என் மக்களோ, எனக்குச் செவிகொடுக்க மறுத்துவிட்டார்கள்; \q2 இஸ்ரயேல் மக்கள் எனக்குப் அடங்கியிருக்கவில்லை. \q1 \v 12 எனவே நான் அவர்களை தங்கள் சொந்தத் திட்டங்களிலேயே நடக்கும்படி, \q2 அவர்களை அவர்களுடைய பிடிவாதமான இருதயங்களுக்கே ஒப்புவித்தேன். \b \q1 \v 13 “என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், \q2 இஸ்ரயேலர் என் வழிகளைப் பின்பற்றியிருந்தால், \q2 எவ்வளவு நலமாயிருந்திருக்கும். \q1 \v 14 நான் எவ்வளவு விரைவில் அவர்களுடைய பகைவர்களை அடக்குவேன், \q2 என் கரம் அவர்களின் எதிரிகளுக்கு விரோதமாய் திரும்பும்! \q1 \v 15 யெகோவாவை வெறுக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஒடுங்கி விழுவார்கள்; \q2 அவர்களுக்குரிய தண்டனை என்றென்றைக்குமாய் நீடித்திருக்கும். \q1 \v 16 ஆனால் நீங்களோ, மிகச்சிறந்த கோதுமையினால் உணவளிக்கப்படுவீர்கள்; \q2 மலைத் தேனினால் நான் உங்களைத் திருப்தியாக்குவேன்.” \c 82 \cl சங்கீதம் 82 \d ஆசாபின் சங்கீதம். \q1 \v 1 மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்; \q2 “கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்: \b \q1 \v 2 “நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி, \q2 கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்? \q1 \v 3 பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்; \q2 ஏழைகளுடைய ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள். \q1 \v 4 பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்; \q2 அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள். \b \q1 \v 5 “அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்; \q2 அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்; \q2 பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன. \b \q1 \v 6 “ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்; \q2 நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன். \q1 \v 7 ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்; \q2 மற்ற எல்லா ஆளுநர்களையும் போலவே நீங்களும் விழுவீர்கள்.” \b \q1 \v 8 இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்; \q2 ஏனெனில் எல்லா நாட்டு மக்களும் உமது உரிமைச்சொத்தே. \c 83 \cl சங்கீதம் 83 \d ஆசாபின் பாட்டாகிய சங்கீதம். \q1 \v 1 இறைவனே, மவுனமாய் இருக்கவேண்டாம்; \q2 செவிகொடாமல் இருக்கவேண்டாம்; \q2 இறைவனே, அமைதியாய் இருக்கவேண்டாம். \q1 \v 2 பாரும், உமது பகைவர் எவ்வளவாய் கொந்தளித்திருக்கிறார்கள்; \q2 உமது எதிரிகள் எவ்வளவாய்த் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள். \q1 \v 3 அவர்கள் உமது மக்களுக்கு விரோதமாகத் தந்திரமாய் சூழ்ச்சி செய்கிறார்கள்; \q2 நீர் காக்கிறவர்களுக்கு விரோதமாய் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். \q1 \v 4 “அவர்கள், வாருங்கள், ஒரு நாடாக அவர்கள் இல்லாதவாறு அழிப்போம்; \q2 இஸ்ரயேலின் பெயரை இனி எவரும் நினைக்காதவாறு செய்திடுவோம்” என்று சொல்கிறார்கள். \b \q1 \v 5 அவர்கள் ஒரே மனதுடன் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டுகிறார்கள்; \q2 அவர்கள் உமக்கு விரோதமாக தங்களிடையே ஒரு நட்புடன்படிக்கை ஏற்படுத்துகிறார்கள். \q1 \v 6 அந்த உடன்படிக்கையிலே ஏதோமின் கூடாரத்தாரும், \q2 இஸ்மயேலர், மோவாபியர், ஆகாரியர், \q1 \v 7 கேபாலர், அம்மோனியர், அமலேக்கியர், பெலிஸ்தியர் ஆகியோரும், \q2 தீருவின் மக்களும் இணைந்திருக்கிறார்கள். \q1 \v 8 லோத்தின் சந்ததியினருக்குப் பக்கபலமாய் இருக்க \q2 அசீரியாவும் அவர்களோடு சேர்ந்துகொண்டது. \b \q1 \v 9 இறைவனே, நீர் மீதியானியருக்குச் செய்தது போலவும், \q2 கீசோன் நதியருகே சிசெராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போலவும் \q2 அவர்களுக்கும் செய்யும். \q1 \v 10 அவர்கள் எந்தோரில் \q2 அழிந்து நிலத்தின் குப்பைபோல் ஆனார்களே. \q1 \v 11 அவர்களுடைய தலைவர்களை ஓரேபையும், சேபையும் போலாக்கும். \q2 அவர்களுடைய இளவரசர்கள் எல்லோரையும் சேபாவையும், சல்முனாவையும் போலாக்கும். \q1 \v 12 “அவர்கள் இறைவனின் மேய்ச்சல் நிலங்களை எங்கள் உடைமையாக்குவோம்” \q2 என்று சொன்னார்களே. \b \q1 \v 13 என் இறைவனே, அவர்களைக் காய்ந்த சருகைப் போலவும், \q2 காற்றில் பறக்கும் பதரைப்போலவும் ஆக்கும். \q1 \v 14 காட்டை நெருப்பு எரித்து அழிப்பது போலவும், \q2 நெருப்புச் சுவாலை மலைகள் முழுவதையும் கொழுந்துவிட்டெரியச் செய்வதுபோலவும், \q1 \v 15 அவர்களை உமது புயலினால் பின்தொடர்ந்து துரத்தும்; \q2 உமது சூறாவளியினால் திகிலடையச் செய்யும். \q1 \v 16 யெகோவாவே, மனிதர்கள் உமது பெயரைத் தேடும்படி, \q2 அவர்களுடைய முகங்களை வெட்கத்தால் மூடும். \b \q1 \v 17 அவர்கள் எப்பொழுதும் வெட்கமடைந்து, மனம்சோர்ந்து போவார்களாக; \q2 அவர்கள் அவமானத்தால் அழிவார்களாக. \q1 \v 18 யெகோவா என்ற பெயருள்ள நீர் ஒருவரே, \q2 பூமியெங்கும் மகா உன்னதமானவர் என்பதை அவர்கள் அறிவார்களாக. \c 84 \cl சங்கீதம் 84 \d கித்தீத் என்னும் இசையில் வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். \q1 \v 1 சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, \q2 உமது தங்குமிடம் எவ்வளவு அழகானது! \q1 \v 2 என் ஆத்துமா யெகோவாவினுடைய ஆலய முற்றங்களுக்காக \q2 ஏங்கித் தவிக்கிறது; \q1 என் உடலும் உள்ளமும் \q2 உயிருள்ள இறைவனை நோக்கி மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறது. \q1 \v 3 என் அரசரும் என் இறைவனுமாய் இருக்கிற சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, \q2 உம்முடைய பீடத்தினருகே \q2 அடைக்கலான் குருவிக்கு வீடும், \q1 இரட்டைவால் குருவிக்குத் \q2 தன் குஞ்சுகளை வைத்துக்கொள்ள கூடும் கிடைத்ததே. \q1 \v 4 உம்முடைய வீட்டில் வசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; \q2 அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டே இருப்பார்கள். \b \q1 \v 5 உம்மில் பெலன் கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், \q2 தங்கள் உள்ளத்தை சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகள்மேல் பதித்துள்ளார்கள். \q1 \v 6 அவர்கள் பாக்கா என்னும் வறண்ட பள்ளத்தாக்கைக் கடந்து போகையில், \q2 அதை நீரூற்றுகளின் இடமாக்குகிறார்கள்; \q2 முன்மாரி மழையும் அதை நீர்நிலைகளால் நிரப்புகின்றது. \q1 \v 7 அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனின் இறைவனுக்கு முன்பாக வரும்வரைக்கும், \q2 பலத்தின்மேல் பலம் அடைகிறார்கள். \b \q1 \v 8 சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; \q2 யாக்கோபின் இறைவனே, எனக்குச் செவிகொடும். \q1 \v 9 எங்கள் கேடயமாகிய இறைவனே, எங்களை நோக்கிப்பாரும்; \q2 நீர் அபிஷேகம் பண்ணியவரின் முகத்தை தயவுடன் பாரும். \b \q1 \v 10 உமது ஆலய முற்றங்களில் ஒரு நாளைக் கழிப்பது, \q2 வேறெங்காவது ஆயிரம் நாட்களைக் கழிப்பதைவிட சிறந்தது; \q1 கொடியவர்களின் கூடாரங்களில் குடியிருப்பதைவிட, \q2 என் இறைவனுடைய வீட்டில் வாசல் காவலனாக இருப்பதை நான் அதிகமாய் விரும்புவேன். \q1 \v 11 ஏனெனில் இறைவனாகிய யெகோவா சூரியனும் கேடயமுமாய் இருக்கிறார்; \q2 யெகோவா கிருபையையும் மகிமையையும் கொடுப்பார்; \q1 குற்றமற்றோராய் நடப்போருக்கு \q2 அவர் நன்மையானவற்றைக் கொடாமல் இருப்பதில்லை. \b \q1 \v 12 சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, \q2 உம்மில் நம்பிக்கையாயிருக்கிற மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவர். \c 85 \cl சங்கீதம் 85 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட கோராகின் மகன்களின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, நீர் உமது நாட்டுக்குத் தயவு காட்டினீர்; \q2 யாக்கோபின் மக்கள் இழந்த நல்ல நிலையை அவர்களுக்குத் திரும்பக் கொடுத்தீர். \q1 \v 2 நீர் உமது மக்களின் அநியாயத்தை மன்னித்து, \q2 அவர்களுடைய பாவங்களையெல்லாம் மூடிவிட்டீர். \q1 \v 3 நீர் உமது கடுங்கோபத்தையெல்லாம் விலக்கிவிட்டு, \q2 உமது பெருங்கோபத்திலிருந்தும் திரும்பினீர். \b \q1 \v 4 எங்கள் இரட்சகராகிய இறைவனே, மறுபடியும் எங்களைப் புதுப்பியும்; \q2 எங்கள் மேலுள்ள உமது கோபத்தை அகற்றும். \q1 \v 5 நீர் எங்களுடன் என்றென்றும் கோபமாய் இருப்பீரோ? \q2 உமது கோபத்தைத் தலைமுறைகள்தோறும் நீடிக்கச் செய்வீரோ? \q1 \v 6 உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி \q2 நீர் எங்களை மீண்டும் உயிர்ப்பிக்கமாட்டீரோ? \q1 \v 7 யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பை எங்களுக்குக் காண்பித்து, \q2 உமது இரட்சிப்பை எங்களுக்குத் தாரும். \b \q1 \v 8 யெகோவாவாகிய இறைவன் சொல்வதை நான் கேட்பேன்; \q2 அவர் தமது மக்களுக்கும் தமது பரிசுத்தவான்களுக்கும் சமாதானத்தை வாக்குப் பண்ணுகிறார்; \q2 ஆனால் அவர்கள் மதியீனத்துக்குத் திரும்பாதிருக்கட்டும். \q1 \v 9 அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு, \q2 அவருடைய இரட்சிப்பு நிச்சயமாகவே சமீபமாய் இருப்பதால், \q2 அவருடைய மகிமையும் நமது நாட்டில் தங்கியிருக்கும். \b \q1 \v 10 அன்பும் உண்மையும் ஒன்றாய்ச் சந்திக்கின்றன; \q2 நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தம் செய்கின்றன. \q1 \v 11 உண்மை பூமியிலிருந்து முளைத்தெழும்புகிறது, \q2 நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கிறது. \q1 \v 12 யெகோவா உண்மையாகவே நன்மையானதைத் தருவார்; \q2 நம்முடைய நாடும் அதின் விளைச்சலைக் கொடுக்கும். \q1 \v 13 நீதி அவருக்கு முன்சென்று, \q2 அவருடைய காலடிகளுக்காக வழியை ஆயத்தப்படுத்துகிறது. \c 86 \cl சங்கீதம் 86 \d தாவீதின் மன்றாட்டு. \q1 \v 1 யெகோவாவே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும், \q2 ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன். \q1 \v 2 நான் உமக்கு உண்மையாயிருப்பதால் என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; \q2 உம்மில் நம்பிக்கை வைத்திருக்கும் உமது அடியேனைக் காப்பாற்றும். \q1 நீரே என் இறைவன்; \v 3 என்மேல் இரக்கமாய் இரும், யெகோவாவே, \q2 நான் நாளெல்லாம் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். \q1 \v 4 யெகோவாவே உமது அடியேனுக்கு மகிழ்ச்சியைத் தாரும்; \q2 ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மேல் வைக்கிறேன். \b \q1 \v 5 யெகோவாவே, நீர் மன்னிக்கிறவரும் நல்லவருமாய் இருக்கிறீர்; \q2 உம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் அன்பு மிகுந்தவராயும் இருக்கிறீர். \q1 \v 6 யெகோவாவே என் மன்றாட்டுக்குச் செவிகொடும்; \q2 இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும். \q1 \v 7 என் துன்ப நாளிலே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; \q2 ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுப்பீர். \b \q1 \v 8 யெகோவாவே, தெய்வங்களில் உம்மைப் போன்றவர் ஒருவரும் இல்லை; \q2 உமது செயல்களை யாராலும் செய்யமுடியாது. \q1 \v 9 யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும் \q2 உமக்கு முன்பாக வந்து வழிபடுவார்கள்; \q2 அவர்கள் உமது பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவார்கள். \q1 \v 10 நீர் பெரியவராய் இருக்கிறீர், மகத்துவமான செயல்களைச் செய்கிறீர்; \q2 நீர் ஒருவரே இறைவன். \b \q1 \v 11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; \q2 அதினால் நான் உமது உண்மையைச் சார்ந்திருப்பேன்; \q1 நான் உமது பெயரில் பயந்து நடக்கும்படி \q2 ஒரே சிந்தையுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். \q1 \v 12 என் இறைவனாகிய யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; \q2 உமது பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன். \q1 \v 13 நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; \q2 நீர் என்னை ஆழங்களிலிருந்தும் \q2 பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர். \b \q1 \v 14 இறைவனே, அகங்காரிகள் என்னைத் தாக்குகிறார்கள்; \q2 கொடூரமான கூட்டத்தார் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர், \q2 அவர்கள் உம்மை மதிக்காதவர்கள். \q1 \v 15 ஆனாலும் யெகோவாவே, நீரோ கருணையும் கிருபையுமுள்ள இறைவனாய் இருக்கிறீர்; \q2 கோபப்படுவதில் தாமதிப்பவராயும், அன்பும் உண்மையும் நிறைந்தவராயும் இருக்கிறீர். \q1 \v 16 என் பக்கமாய்த் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்; \q2 உமது அடியேனுக்கு உமது பெலத்தைக் காண்பியும்; \q1 என்னைக் காப்பாற்றும், \q2 ஏனெனில் என் தாயைப்போலவே நானும் உமக்கு சேவை செய்கிறேன். \q1 \v 17 என் பகைவர் கண்டு வெட்கப்படும்படியாக, \q2 உமது நன்மைக்கான ஓர் அடையாளத்தை எனக்குத் தாரும்; \q2 ஏனெனில் யெகோவாவே, நீர் எனக்கு உதவிசெய்து, என்னைத் தேற்றியிருக்கிறீர். \c 87 \cl சங்கீதம் 87 \d கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம். \q1 \v 1 யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார். \q1 \v 2 யெகோவா யாக்கோபிலுள்ள எல்லா வாழ்விடங்களைப் பார்க்கிலும், \q2 சீயோனின் வாசல்களை நேசிக்கிறார். \b \q1 \v 3 இறைவனின் நகரமே, \q2 உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன: \q1 \v 4 “என்னை ஏற்றுக்கொள்ளுகிறவர்களோடு \q2 நான் ராகாபையும் பாபிலோனையும் குறித்து, \q1 ‘இவர்கள் சீயோனிலே பிறந்தவர்கள்’ என்று சொல்வேன்; \q2 பெலிஸ்தியாவையும் தீருவையும் எத்தியோப்பியாவையும் குறித்தும் அப்படியே சொல்வேன்.” \q1 \v 5 உண்மையாகவே சீயோனைக் குறித்து, \q2 “இன்னார் இன்னார் அங்கே பிறந்தார்கள் என்றும், \q2 மகா உன்னதமானவர் தாமே அதை நிலைநிறுத்துவார்” என்றும் சொல்லப்படும். \q1 \v 6 “இன்னார் சீயோனிலே பிறந்தார்” \q2 என்பதாக யெகோவா மக்களின் பதிவேட்டில் எழுதுவார். \b \q1 \v 7 அவர்கள் இசை மீட்டும்பொழுது, \q2 “எங்கள் ஊற்றுகள் எல்லாம் உம்மிலேயே இருக்கிறது” என்று பாடுவார்கள். \c 88 \cl சங்கீதம் 88 \d மகலாத் லேயனோத் என்னும் இசையில் வாசிக்க, எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம். பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது. \q1 \v 1 யெகோவாவே, நீர் என்னைக் காப்பாற்றுகிற இறைவன்; \q2 இரவும் பகலும் நான் உமக்கு முன்பாகக் கதறுகிறேன். \q1 \v 2 என்னுடைய மன்றாட்டு உமக்குமுன் வருவதாக; \q2 என் கூப்பிடுதலுக்கு செவிகொடுத்துக் கேளும். \b \q1 \v 3 என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்திருக்கிறது; \q2 என் உயிர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. \q1 \v 4 நான் பிரேதக்குழிக்குப் போகிறவர்கள்போல் எண்ணப்படுகிறேன்; \q2 நான் பெலனற்ற மனிதனைப்போல் இருக்கிறேன். \q1 \v 5 நான் மரித்தவர்களுடன் ஒதுக்கப்பட்டிருக்கிறேன்; \q2 நீர் இனி எப்போதும் உம்மால் நினைவுகூரப்படாமல் \q1 உமது கவனத்திலிருந்து அகற்றப்பட்டு, \q2 பாதாளத்தில் அழிக்கப்பட்டவர்கள்போல் ஆனேன். \b \q1 \v 6 நீர் என்னை மிகுந்த இருளில், \q2 ஆழம் மிகுந்த படுகுழியில் போட்டுவிட்டீர். \q1 \v 7 உமது கோபம் என்மீது மிகவும் பாரமாய் இருக்கிறது; \q2 உமது அலைகள் எல்லாவற்றினாலும் நீர் என்னை மூடிவிட்டீர். \q1 \v 8 என் நெருங்கிய நண்பர்களை நீர் என்னைவிட்டு விலக்கி, \q2 என்னை அவர்களின் வெறுப்புக்கு உள்ளாக்கினீர்; \q1 நான் அடைபட்டு தப்பமுடியாமல் இருக்கிறேன். \q2 \v 9 என் கண்கள் துக்கத்தினால் மயங்கி இருக்கின்றன. \b \q1 யெகோவாவே, நான் ஒவ்வொரு நாளும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். \q2 உம்மை நோக்கியே என் கைகளை நீட்டுகிறேன். \q1 \v 10 இறந்தவர்களுக்கு நீர் உமது அதிசயங்களைக் காட்டுவீரோ? \q2 இறந்தவர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? \q1 \v 11 பிரேதக்குழியில் உமது அன்பும், \q2 அழிவில் உமது சத்தியமும் அறிவிக்கப்படுகிறதோ? \q1 \v 12 உமது அதிசயங்கள் இருள் நிறைந்த இடத்திலும், \q2 மறதியின் நாட்டில் உமது நீதியான செயல்களும் அறியப்படுமோ? \b \q1 \v 13 ஆனாலும் யெகோவாவே, நான் உதவிகேட்டு உம்மை நோக்கிக் கதறுகிறேன்; \q2 காலையிலே எனது மன்றாட்டு உமக்கு முன்பாக வருகிறது. \q1 \v 14 யெகோவாவே, நீர் ஏன் என்னைப் புறக்கணிக்கிறீர்? \q2 உமது முகத்தை ஏன் எனக்கு மறைக்கிறீர்? \b \q1 \v 15 என் இளமையிலிருந்தே நான் துன்புறுத்தப்பட்டு மரணத்திற்குச் சமீபமானேன்; \q2 நான் உம்மால் வரும் திகிலை அனுபவித்து மனமுடைந்து போயிருக்கிறேன். \q1 \v 16 உமது கோபம் என்மேல் வந்து என்னை மூடியது; \q2 உமது திகில் என்னைத் தாக்குகிறது. \q1 \v 17 அவை நாள்தோறும் வெள்ளத்தைப்போல் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன; \q2 என்னை அவை முழுமையாய் வளைத்துக்கொண்டன. \q1 \v 18 நீர் என் கூட்டாளிகளையும் என் அன்புக்குரியவர்களையும் \q2 என்னைவிட்டு அகற்றினீர்; \q2 இருளே என் நெருங்கிய நண்பனாய் இருக்கிறது. \c 89 \cl சங்கீதம் 89 \d எஸ்ராகியனாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பை நான் என்றென்றும் பாடுவேன்; \q2 எல்லாத் தலைமுறைகளுக்கும் \q2 உமது சத்தியத்தை என் வாயினால் தெரியப்படுத்துவேன். \q1 \v 2 உமது உடன்படிக்கையின் அன்பு \q2 என்றென்றைக்கும் உறுதியாய் நிலைக்கிறது என்று அறிவிப்பேன்; \q2 நீர் உமது சத்தியத்தை வானத்தில் நிறுவினீர் என்பதையும் நான் அறிவிப்பேன். \q1 \v 3 “நான் தெரிந்துகொண்டவனோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறேன்; \q2 என் அடியவனாகிய தாவீதுக்கு ஆணையிட்டிருக்கிறேன். \q1 \v 4 ‘உன் வம்சத்தை என்றென்றும் நிலைநிறுத்தி, \q2 எல்லாத் தலைமுறைகளிலும் உன் சிங்காசனத்தை உறுதிப்படுத்துவேன்’ ” \q2 என்று நீர் சொன்னீர். \b \q1 \v 5 யெகோவாவே, வானங்கள் உமது அதிசயங்களைப் புகழ்கின்றன; \q2 அவை பரிசுத்தவான்களின் சபையிலே உமது சத்தியத்தைப் புகழ்கின்றன. \q1 \v 6 மேலே ஆகாயத்தில் உள்ளவர்களில் யெகோவாவுடன் ஒப்பிடத்தக்கவர் யார்? \q2 பரலோக தூதர்களின் மத்தியில் யெகோவாவைப் போன்றவர் யார்? \q1 \v 7 பரிசுத்தவான்களின் சபையில் இறைவனே மிகவும் பயத்திற்கு உரியவராயிருக்கிறார்; \q2 தம்மைச் சுற்றியுள்ள எல்லாரைப்பார்க்கிலும் அவரே பிரமிக்கத்தக்கவர். \q1 \v 8 சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? \q2 யெகோவாவே, நீர் வல்லவர்; உமது சத்தியம் உம்மைச் சூழ்ந்திருக்கிறது. \b \q1 \v 9 பொங்கியெழும் கடலின்மேல் நீர் ஆளுகை செய்கிறீர்; \q2 அதின் அலைகள் பயங்கரமாக எழும்பும்போது நீர் அவற்றை அமைதியாக்குகிறீர். \q1 \v 10 நீர் ராகாபை அழிந்தவர்களில் ஒருவரைப்போல் நொறுக்கினீர்; \q2 உமது பலமுள்ள புயத்தினால் உமது பகைவரைச் சிதறடித்தீர். \q1 \v 11 வானங்கள் உம்முடையவை, பூமியும் உம்முடையதே; \q2 உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே நிலைநிறுத்தினீர். \q1 \v 12 வடக்கையும் தெற்கையும் நீர் ஏற்படுத்தினீர்; \q2 தாபோரும் எர்மோனும் உமது பெயரில் மகிழ்ந்து பாடுகின்றன. \q1 \v 13 உமது புயம் வலிமைமிக்கது; \q2 உமது கரம் பலமுள்ளது, உமது வலதுகரம் உயர்த்தப்பட்டுள்ளது. \b \q1 \v 14 நீதியும் நியாயமும் உமது சிங்காசனத்தின் அடித்தளம்; \q2 அன்பும் சத்தியமும் உமக்குமுன் செல்கின்றன. \q1 \v 15 யெகோவாவே உம்மை ஆர்ப்பரித்துத் துதிக்க அறிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; \q2 அவர்கள் உமது பிரசன்னத்தின் வெளிச்சத்திலே நடப்பார்கள். \q1 \v 16 அவர்கள் நாள்தோறும் உமது பெயரில் களிகூருகிறார்கள்; \q2 அவர்கள் உமது நீதியில் மேன்மை அடைவார்கள். \q1 \v 17 நீரே அவர்களின் மகிமையும் பெலனுமாய் இருக்கிறீர்; \q2 நீர் உமது தயவினால் எங்கள் பலத்தை உயரப்பண்ணினீர். \q1 \v 18 உண்மையாகவே எங்கள் கேடயம் யெகோவாவுக்குரியது; \q2 எங்கள் அரசர் இஸ்ரயேலின் பரிசுத்தருக்குரியவர். \b \q1 \v 19 நீர் ஒருமுறை தரிசனத்தில், \q2 உமக்கு உண்மையான மக்களுடன் பேசிச் சொன்னதாவது: \q1 “நான் ஒரு வீரனைப் பலத்தால் நிறைத்தேன்; மக்கள் மத்தியிலிருந்து நான் \q2 ஓர் இளைஞனை உயர்த்தியிருக்கிறேன். \q1 \v 20 நான் என் பணியாளனான தாவீதைக் கண்டுபிடித்தேன்; \q2 என் பரிசுத்த எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன். \q1 \v 21 என் கரம் அவனைத் தாங்கும்; \q2 நிச்சயமாகவே என் புயம் அவனைப் பலப்படுத்தும். \q1 \v 22 பகைவன் அவனைக் கீழ்ப்படுத்தமாட்டான்; \q2 கொடியவன் அவனை ஒடுக்கவுமாட்டான். \q1 \v 23 நான் அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்குவேன், \q2 அவனுடைய விரோதிகளை அடித்து வீழ்த்துவேன். \q1 \v 24 என் உடன்படிக்கையின் அன்பும் சத்தியமும் அவனோடிருக்கும்; \q2 என் பெயரால் அவன் பலம் உயரும். \q1 \v 25 நான் அவனுடைய ஆளுகையை கடலுக்கு மேலாகவும், \q2 அவனுடைய ஆட்சியை ஆறுகளுக்கு மேலாகவும் பரப்புவேன். \q1 \v 26 அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தகப்பன், \q2 என் இறைவன், என் இரட்சகராகிய கன்மலை’ என்று கூப்பிடுவான். \q1 \v 27 நான் அவனை எனது முதற்பேறான மகனாகவும், \q2 பூமியின் அரசர்களிலெல்லாம் மிக உயர்ந்தவனாகவும் நியமிப்பேன். \q1 \v 28 நான் எப்பொழுதும் அவனுக்கு என் உடன்படிக்கையின் அன்பை வழங்குவேன்; \q2 நான் அவனோடு செய்யும் உடன்படிக்கை ஒருபோதும் மாறாது. \q1 \v 29 நான் அவனுடைய வம்சத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன்; \q2 அவனுடைய சிங்காசனத்தை வானங்கள் உள்ளமட்டும் நிலைப்படுத்துவேன். \b \q1 \v 30 “அவனுடைய மகன்கள் என் சட்டத்தைக் கைவிட்டு, \q2 என் நியமங்களைப் பின்பற்றாது போனால், \q1 \v 31 என் விதிமுறைகளை மீறி, \q2 எனது கட்டளைகளைக் கைக்கொள்ளத் தவறினால், \q1 \v 32 நான் அவர்களுடைய பாவத்தைத் தடியினாலும், \q2 அவர்களுடைய அநியாயத்தை சவுக்கடியினாலும் தண்டிப்பேன்; \q1 \v 33 ஆனாலும் நான் என் உடன்படிக்கையின் அன்பை அவனைவிட்டு அகற்றமாட்டேன்; \q2 என் வாக்குறுதியை ஒருபோதும் மாற்றவுமாட்டேன். \q1 \v 34 நான் என் உடன்படிக்கையை மீறமாட்டேன்; \q2 என் உதடுகள் சொன்னதை மாற்றவுமாட்டேன். \q1 \v 35 ஒரேதரமாக நான் என் பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டிருக்கிறேன்; \q2 தாவீதுக்கு நான் பொய்சொல்லமாட்டேன்: \q1 \v 36 அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைக்கும், \q2 அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்; \q1 \v 37 அது ஆகாயத்தின் உண்மையான சாட்சியாக \q2 சந்திரனைப்போல என்றென்றைக்கும் நிலைநிறுத்தப்படும்.” \b \q1 \v 38 ஆனாலும், இப்பொழுது நீர் அவனைத் தள்ளி, \q2 அவனைப் புறக்கணித்து விட்டிருக்கிறீர்; \q2 நீர் அபிஷேகம் பண்ணியவன்மேல் கோபமாயிருக்கிறீர். \q1 \v 39 உமது பணியாளனுடன் செய்த உடன்படிக்கையை கைவிட்டு, \q2 அவனுடைய கிரீடத்தைத் தூசியில் தள்ளி அவமானப்படுத்தினீர். \q1 \v 40 நீர் அவனுடைய மதில்களைத் தகர்த்து, \q2 அவனுடைய அரண்களையெல்லாம் இடித்துத் தூளாக்கினீர். \q1 \v 41 கடந்து செல்லும் அனைவருமே அவனைக் கொள்ளையிட்டார்கள்; \q2 அவன் தனது அயலவர்களின் இகழ்ச்சிக்குள்ளானான். \q1 \v 42 நீர் அவனுடைய எதிரிகளின் வலதுகையை உயர்த்தினீர்; \q2 அவனுடைய பகைவர் அனைவரும் மகிழும்படி செய்தீர். \q1 \v 43 நீர் அவனுடைய வாளின் முனையை மழுங்கப்பண்ணி, \q2 யுத்தத்தில் அவனுக்குத் துணைசெய்யாதிருந்தீர். \q1 \v 44 நீர் அவனுடைய சிறப்புக்கு முடிவை ஏற்படுத்தி, \q2 அவனுடைய சிங்காசனத்தை தரையிலே தள்ளினீர். \q1 \v 45 நீர் அவனுடைய வாலிப நாட்களை குறுகப்பண்ணி, \q2 அவனை வெட்கத்தின் உடையால் மூடினீர். \b \q1 \v 46 யெகோவாவே, நீர் எவ்வளவு காலத்திற்கு மறைந்திருப்பீர்? \q2 நீர் என்றென்றுமாய் மறைந்திருப்பீரோ? \q2 எவ்வளவு காலத்திற்கு உமது கோபம் நெருப்பைப்போல் பற்றியெரியும்? \q1 \v 47 என் வாழ்வு எவ்வளவு துரிதமாய் முடிவடைகிறது என்பதை நினைத்துக்கொள்ளும்; \q2 பயனற்ற நோக்கத்திற்காகவா நீர் எல்லா மக்களையும் படைத்தீர்! \q1 \v 48 மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்? \q2 அல்லது யார் பாதாளத்தின் வல்லமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வான்? \q1 \v 49 யெகோவாவே, நீர் உமது சத்தியத்தில் தாவீதுக்கு ஆணையிட்ட \q2 உமது முந்தைய உடன்படிக்கையின் அன்பு எங்கே? \q1 \v 50 யெகோவாவே, உமது அடியவன் எவ்வளவாய் ஏளனம் செய்யப்பட்டிருக்கிறேன் என்பதையும் \q2 எல்லா நாட்டு மக்களின் நிந்தைகளை நான் என் இருதயத்தில் \q2 எவ்வாறு சகிக்கிறேன் என்பதையும் நினைத்துக்கொள்ளும். \q1 \v 51 யெகோவாவே, உமது பகைவர் ஏளனம் செய்த நிந்தனை வார்த்தைகளையும், \q2 நீர் அபிஷேகித்தவரின் ஒவ்வொரு காலடிகளையும் \q2 அவர்கள் ஏளனம் செய்ததையும் நினைத்துக்கொள்ளும். \b \b \q1 \v 52 யெகோவாவுக்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக! \qc ஆமென், ஆமென். \c 90 \ms பகுதி iv \mr சங்கீதம் 90–106 \cl சங்கீதம் 90 \d இறைவனின் மனிதனாகிய மோசேயின் மன்றாட்டு. \q1 \v 1 யெகோவாவே, தலைமுறைதோறும் \q2 நீரே எங்கள் வாழ்விடமாய் இருக்கிறீர். \q1 \v 2 மலைகள் தோன்றுமுன்னும், பூமியையும் \q2 உலகத்தையும் நீர் உருவாக்குமுன்னும், \q2 நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் நீரே இறைவனாய் இருக்கிறீர். \b \q1 \v 3 நீர் மனிதனை மீண்டும் தூசிக்குத் திருப்பி, \q2 “மனுமக்களே, தூசியாகுங்கள்” என்கிறீர். \q1 \v 4 உமது பார்வையில் ஆயிரம் வருடங்கள் \q2 கழிந்துபோன ஒரு நாளைப் போலவும், \q2 இரவின் ஒரு சாமத்தைப் போலவும் இருக்கின்றன. \q1 \v 5 ஆனாலும் மரண நித்திரையில் நீர் மானிடரை வெள்ளம்போல வாரிக்கொண்டு போகிறீர்; \q2 அவர்கள் காலையில் முளைக்கும் பசும்புல்லைப்போல் இருக்கிறார்கள்: \q1 \v 6 அது காலையில் புதிதாக முளைத்துப் பூத்தாலும், \q2 மாலையாகும்போது உலர்ந்து வாடிப்போகும். \b \q1 \v 7 நாங்கள் உமது கோபத்தால் சோர்ந்துபோகிறோம், \q2 உமது கடுங்கோபத்தால் திகிலடைகிறோம். \q1 \v 8 நீர் எங்கள் அநியாயங்களை உமக்கு முன்பாகவும், \q2 எங்கள் இரகசிய பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். \q1 \v 9 எங்கள் நாட்கள் எல்லாம் உமது கடுங்கோபத்தால் கடந்துபோய்விட்டது; \q2 நாங்கள் எங்களுடைய வருடங்களைப் புலம்பலோடே முடிக்கின்றோம். \q1 \v 10 எங்கள் வாழ்நாட்கள் எழுபது வருடங்களே; \q2 நாங்கள் பெலனுள்ளவர்களாய் இருந்தால், அது எண்பது வருடங்களாகவும் இருக்கலாம், \q1 ஆனாலும் அவை கஷ்டமும் துன்பமும் நிறைந்தவையாகவே இருக்கின்றன; \q2 எங்கள் வாழ்நாட்கள் விரைவாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம். \q1 \v 11 உமது கோபத்தின் வல்லமையை யார் அறிவார்? \q2 உமக்குப் பயப்படத்தக்கதாய் உமது கோபத்தை யார் அறிவார்? \q1 \v 12 எங்கள் நாட்களை சரியாகக் கணக்கிட எங்களுக்குப் போதியும், \q2 அதினால் நாங்கள் ஞானமுள்ள இருதயத்தைப் பெற்றுக்கொள்வோம். \b \q1 \v 13 யெகோவாவே, மனமிரங்கும்; எவ்வளவு காலத்திற்கு இந்த நிலை? \q2 உமது பணியாளர்கள்மேல் கருணையாய் இரும். \q1 \v 14 காலையிலே எங்களை உமது உடன்படிக்கையின் அன்பினால் திருப்தியாக்கும்; \q2 அப்பொழுது நாங்கள் இன்பமாய்ப் பாடி, \q2 எங்கள் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாய் இருப்போம். \q1 \v 15 நீர் எங்களைத் துன்புறுத்திய நாட்களுக்கும், \q2 நாங்கள் துன்பங்களைக் கண்ட வருடங்களுக்கும் ஈடாக எங்களை மகிழச் செய்யும். \q1 \v 16 உமது செயல்கள் உம்முடைய பணியாளர்களுக்கும், \q2 உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் காண்பிக்கப்படுவதாக. \b \q1 \v 17 எங்கள் இறைவனாகிய யெகோவாவின் தயவு எங்கள்மேல் இருப்பதாக; \q2 எங்கள் கைகளின் வேலையை நிலைப்படுத்தும்; \q2 ஆம், எங்கள் கைகளின் வேலையை நிலைப்படுத்தும். \c 91 \cl சங்கீதம் 91 \q1 \v 1 மகா உன்னதமானவரின் அடைக்கலத்தில் வாழ்கிறவன், \q2 எல்லாம் வல்லவரின் நிழலில் இளைப்பாறுவான். \q1 \v 2 நான் யெகோவாவைக் குறித்து, “அவரே என் புகலிடம், என் கோட்டை, \q2 நான் நம்பியிருக்கிற என் இறைவன்” என்று சொல்வேன். \b \q1 \v 3 நிச்சயமாகவே அவர் உன்னை \q2 வேடனுடைய கண்ணியிலிருந்தும், \q2 கொன்றழிக்கும் கொள்ளைநோயிலிருந்தும் தப்புவிப்பார். \q1 \v 4 யெகோவா தமது சிறகுகளால் உன்னை மூடுவார்; \q2 அவருடைய சிறகுகளின் கீழே நீ புகலிடம் காண்பாய்; \q2 அவருடைய சத்தியம் உனது கேடயமும் கவசமுமாயிருக்கும். \q1 \v 5 நீ இரவின் பயங்கரத்திற்கும், \q2 பகலில் பறக்கும் அம்புக்கும் பயப்படாதிருப்பாய். \q1 \v 6 இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும், \q2 நடுப்பகலில் பாழாக்கும் கொடிய வாதைக்கும் நீ பயப்படாதிருப்பாய். \q1 \v 7 உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், \q2 உன் வலதுபக்கத்தில் பத்தாயிரம்பேரும் வீழ்ந்தாலும், \q2 அது உன்னை நெருங்காது. \q1 \v 8 உன் கண்களால் மட்டுமே நீ அதைப் பார்த்து, \q2 கொடியவர்களுக்கு வரும் தண்டனையைக் காண்பாய். \b \q1 \v 9 “யெகோவா எனக்குப் புகலிடம்” என்று நீ சொல்வாயானால், \q2 மகா உன்னதமானவரை உனது வாழ்விடமாகக் கொள்வாயானால், \q1 \v 10 அப்பொழுது ஒரு தீங்கும் உன்மேல் வராது; \q2 கொள்ளைநோய் உன் கூடாரத்தை நெருங்காது. \q1 \v 11 அவர் உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, \q2 உன்னைக்குறித்து தமது தூதர்களுக்குக் கட்டளையிடுவார்; \q1 \v 12 உன் பாதம் கல்லில் மோதாதபடி, \q2 அவர்கள் உன்னைத் தங்கள் கரங்களில் தாங்கிக்கொள்வார்கள். \q1 \v 13 நீ சிங்கத்தின்மேலும் விரியன்பாம்பின்மேலும் நடப்பாய்; \q2 இளஞ்சிங்கத்தையும் பாம்பையும் மிதிப்பாய். \b \q1 \v 14 யெகோவா இப்படியாக சொல்கிறார்: \q2 “அவன் என்னை நேசிக்கிறபடியால், நான் அவனை விடுவிப்பேன்; \q2 அவன் என் பெயரை அறிந்திருக்கிறபடியால், நான் அவனைப் பாதுகாப்பேன். \q1 \v 15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்; \q2 துன்பத்தில் நான் அவனோடிருந்து, \q2 அவனை விடுவித்து, அவனைக் கனப்படுத்துவேன். \q1 \v 16 நீண்ட ஆயுளால் நான் அவனைத் திருப்தியாக்கி, \q2 என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.” \c 92 \cl சங்கீதம் 92 \d ஓய்வுநாளுக்கான பாடலாகிய சங்கீதம். \q1 \v 1 யெகோவாவைத் துதிப்பதும், உன்னதமானவரே, \q2 உமது பெயரைப் புகழ்ந்து பாடுவதும் நல்லது. \q1 \v 2 காலையிலே உமது அன்பையும் \q2 இரவிலே உமது உண்மையையும் அறிவிப்பது நல்லது. \q1 \v 3 பத்து நரம்பு வீணையின் இசையினாலும், \q2 யாழின் ஓசையினாலும் அதை அறிவிப்பது நல்லது. \b \q1 \v 4 யெகோவாவே, நீர் உமது செயல்களினால் என்னை மகிழ்ச்சியாக்குகிறீர்; \q2 உமது கைகளின் வேலைகளினிமித்தம் நான் மகிழ்ந்து பாடுகிறேன். \q1 \v 5 யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு பெரிதானவை, \q2 உம்முடைய யோசனைகள் எவ்வளவு ஆழமானவை! \q1 \v 6 உணர்வற்ற மனிதன் அறியாததும், \q2 மூடர் விளங்கிக்கொள்ளாததும் இதுவே, \q1 \v 7 கொடியவர்கள் புல்லைப்போல் முளைத்தாலும், \q2 தீங்கு செய்கிறவர்கள் எல்லோரும் செழித்தாலும், \q2 என்றென்றைக்கும் அழிந்துபோவார்கள். \b \q1 \v 8 ஆனாலும் யெகோவாவே, நீர் என்றென்றுமாய் புகழ்ந்து உயர்த்தப்படுகிறீர். \b \q1 \v 9 யெகோவாவே, உமது பகைவர், \q2 நிச்சயமாகவே உம்முடைய பகைவர் அழிந்தேபோவார்கள்; \q2 தீமை செய்வோர் எல்லோருமே சிதறடிக்கப்படுவார்கள். \q1 \v 10 காட்டெருதின் பெலத்தைப்போல் நீர் என் பெலத்தை உயர்த்துவீர்; \q2 சிறந்த எண்ணெய் என்மேல் ஊற்றப்பட்டன. \q1 \v 11 என் விரோதிகளின் தோல்வியைக் கண்ணாரக் கண்டேன்; \q2 என் செவிகள் என் கொடிய எதிரிகள் முறியடிக்கப்படுவதைக் காதாரக் கேட்டேன். \b \q1 \v 12 நீதிமான்கள் பனைமரத்தைப்போல் செழிப்பார்கள், \q2 அவர்கள் லெபனோனின் கேதுரு மரம்போல் வளர்வார்கள்; \q1 \v 13 அவர்கள் யெகோவாவினுடைய வீட்டிலே நாட்டப்பட்டு, \q2 நமது இறைவனுடைய ஆலய முற்றங்களில் செழிப்பார்கள். \q1 \v 14 அவர்கள் செழுமையும் பசுமையுமாயிருந்து, \q2 தங்கள் முதிர்வயதிலும் கனி கொடுப்பார்கள். \q1 \v 15 “யெகோவா நீதியுள்ளவர்; அவரே என் கன்மலை; \q2 அவரிடத்தில் அநீதி இல்லை” என்று அவர்கள் பிரசித்தப்படுத்துவார்கள். \c 93 \cl சங்கீதம் 93 \q1 \v 1 யெகோவா ஆட்சி செய்கிறார், அவர் மாட்சிமையை அணிந்திருக்கிறார்; \q2 யெகோவா மாட்சிமையை அணிந்து பெலத்தைத் தரித்துக்கொண்டிருக்கிறார்; \q2 உண்மையில், உலகம் நிலைபெற்று உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. \q1 \v 2 உமது சிங்காசனம் பூர்வகாலத்திலே ஏற்படுத்தப்பட்டது; \q2 நீர் நித்தியத்தில் இருந்தே இருக்கிறீர். \b \q1 \v 3 யெகோவாவே, கடல்கள் எழும்பின; \q2 கடல்கள் தங்கள் குரலை எழுப்பின; \q2 கடல்கள் மோதியடிக்கும் தங்கள் அலைகளை எழுப்பின. \q1 \v 4 பெருவெள்ளத்தின் முழக்கத்தைப் பார்க்கிலும், \q2 கடல்களின் அலைகளைப் பார்க்கிலும் \q2 உன்னதத்தில் இருக்கும் யெகோவா வல்லமையுள்ளவர். \b \q1 \v 5 யெகோவாவே, உமது நியமங்கள் உறுதியாய் நிற்கின்றன; \q2 பரிசுத்தம் உமது ஆலயத்தை \q2 என்றென்றும் அலங்கரிக்கிறது. \c 94 \cl சங்கீதம் 94 \q1 \v 1 அநீதிக்கு பழிவாங்குகிற இறைவனாகிய யெகோவாவே, \q2 அநீதிக்கு பழிவாங்குகிற இறைவனே, பிரகாசியும். \q1 \v 2 பூமியின் நீதிபதியே, எழுந்தருளும்; \q2 பெருமை உள்ளவர்களுக்குத் தக்கபடி பதிலளியும். \q1 \v 3 எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, கொடியவர்கள், \q2 எவ்வளவு காலத்திற்கு கொடியவர்கள் களிகூர்ந்திருப்பார்கள்? \b \q1 \v 4 அவர்கள் அகங்காரமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்; \q2 தீமை செய்வோர் யாவரும் பெருமை நிறைந்து பேசுகிறார்கள். \q1 \v 5 யெகோவாவே, அவர்கள் உமது மக்களை தாக்குகிறார்கள்; \q2 உமது உரிமைச்சொத்தை ஒடுக்குகிறார்கள். \q1 \v 6 விதவைகளையும் வேறுநாட்டைச் சேர்ந்தவரையும் அவர்கள் அழிக்கிறார்கள்; \q2 அவர்கள் தந்தையற்றவர்களைக் கொலைசெய்கிறார்கள். \q1 \v 7 “யெகோவா இவற்றைக் காண்பதில்லை, \q2 யாக்கோபின் இறைவன் இவற்றைக் கவனிப்பதில்லை” என்று சொல்கிறார்கள். \b \q1 \v 8 மக்கள் மத்தியில் அறிவற்றவர்களாய் இருப்பவர்களே, கவனமாயிருங்கள்; \q2 மூடரே, நீங்கள் எப்பொழுது அறிவு பெறுவீர்கள்? \q1 \v 9 காதைப் படைத்தவர் கேட்கமாட்டாரோ? \q2 கண்ணை உருவாக்கியவர் பார்க்கமாட்டாரோ? \q1 \v 10 மக்களைத் தண்டிக்கிறவர் உங்களையும் தண்டிக்கமாட்டாரோ? \q2 மனிதருக்குப் போதிக்கிறவர் அறிவில் குறைந்தவரோ? \q1 \v 11 மனிதரின் சிந்தனைகளை யெகோவா அறிந்திருக்கிறார்; \q2 அவை பயனற்றவை என்பதையும் அவர் அறிவார். \b \q1 \v 12 யெகோவாவே, நீர் தண்டித்து, \q2 உமது சட்டத்திலிருந்து போதிக்கிற நபர் ஆசீர்வதிக்கப்பட்டவர். \q1 \v 13 கொடியவர்களுக்கோ குழிவெட்டப்படும் வரை \q2 கஷ்ட நாட்களிலிருந்து அவர்களுக்கு நீர் விடுதலை வழங்குகிறீர். \q1 \v 14 ஏனெனில் யெகோவா தமது மக்களைப் புறக்கணிக்கமாட்டார்; \q2 தமது உரிமைச்சொத்தை ஒருபோதும் கைவிடமாட்டார். \q1 \v 15 நீதியின்மேல் நியாயத்தீர்ப்பு திரும்பவும் கட்டப்படும்; \q2 அதை இருதயத்தில் நேர்மையுள்ளோர் அனைவரும் பின்பற்றுவார்கள். \b \q1 \v 16 எனக்காக கொடியவனுக்கு விரோதமாய் எழும்புகிறவன் யார்? \q2 தீமை செய்வோருக்கு எதிராய் எனக்குத் துணைநிற்பவன் யார்? \q1 \v 17 யெகோவா எனக்கு உதவி செய்திருக்காவிட்டால், \q2 நான் சீக்கிரமாய் மரணத்தின் மவுனத்தில் குடிகொண்டிருந்திருப்பேன். \q1 \v 18 “என் கால் சறுக்குகிறது” என்று நான் சொன்னபோது, \q2 யெகோவாவே உமது உடன்படிக்கையின் அன்பே என்னைத் தாங்கியது. \q1 \v 19 கவலை எனக்குள் பெரிதாய் இருக்கையில், \q2 உமது ஆறுதல் என் ஆத்துமாவுக்கு மகிழ்வைத் தந்தது. \b \q1 \v 20 தான் பிறப்பிக்கும் விதிமுறைகளினாலேயே துன்பத்தைக் கொண்டுவரும், \q2 ஊழல் நிறைந்த ஆட்சியாளர்கள் உமக்கு கூட்டாளிகளாயிருக்க முடியுமோ? \q1 \v 21 அந்தக் கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி, \q2 குற்றமற்றவர்களுக்கு மரணத்தீர்ப்பு அளிக்கிறார்கள். \q1 \v 22 ஆனால் யெகோவாவோ என் கோட்டையும், \q2 நான் தஞ்சமடையும் கன்மலையான என் இறைவனுமானார். \q1 \v 23 அவர் அவர்களுடைய பாவங்களுக்காகப் பதில்செய்து, \q2 அவர்கள் கொடுமைகளினிமித்தம் அவர்களை தண்டிப்பார்; \q2 எங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை தண்டிப்பார். \c 95 \cl சங்கீதம் 95 \q1 \v 1 வாருங்கள், யெகோவாவை மகிழ்ச்சியோடு பாடுவோம்; \q2 நம்முடைய இரட்சிப்பின் கன்மலையை சத்தமிட்டுத் துதிப்போம். \q1 \v 2 நன்றியுடன் அவர்முன் வருவோம்; \q2 இசையினாலும் பாட்டினாலும் அவரைப் புகழ்ந்து உயர்த்துவோம். \b \q1 \v 3 யெகோவாவே மகா இறைவனாய் இருக்கிறார்; \q2 எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான மகா அரசருமாய் இருக்கிறார். \q1 \v 4 பூமியின் ஆழங்கள் அவருடைய கரத்தில் இருக்கின்றன; \q2 மலை உச்சிகளும் அவருக்கே உரியவை. \q1 \v 5 கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; \q2 வறண்ட நிலத்தையும் அவருடைய கரங்களே உருவாக்கின. \b \q1 \v 6 வாருங்கள், நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக \q2 நாம் குனிந்து, பணிந்து, வழிபடுவோம்; \q2 நாம் முழங்காலிடுவோம். \q1 \v 7 அவரே நம் இறைவன்; \q2 நாம் அவருடைய மேய்ச்சலின் மக்களும் \q2 அவருடைய பராமரிப்புக்குள்ளான மந்தையுமாய் இருக்கிறோம். \b \q1 இன்று நீங்கள் அவருடைய குரலைக் கேட்பீர்களானால், \q1 \v 8 “அன்று மேரிபாவில் விவாதம் செய்தது போலவும், \q2 பாலைவனத்திலே மாசாவில் சோதனை செய்தது போலவும், \q2 உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம். \q1 \v 9 அங்கே உங்கள் முன்னோர்கள் என்னைச் சோதித்தார்கள்; \q2 நான் செய்தவைகளைக் கண்டிருந்தும் என்னைப் பரீட்சை பார்த்தார்கள். \q1 \v 10 நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்; \q2 ‘அவர்கள் என்னைவிட்டு விலகிப்போகும் இருதயமுள்ள மக்கள் என்றும், \q2 என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’ என்றும் நான் சொன்னேன். \q1 \v 11 எனவே கோபங்கொண்டு, \q2 ‘அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதில்லை’ என்று, \q2 ஆணையிட்டு அறிவித்தேன்.” \c 96 \cl சங்கீதம் 96 \q1 \v 1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; \q2 பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள். \q1 \v 2 யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், அவர் பெயரைத் துதியுங்கள், \q2 நாள்தோறும் அவருடைய இரட்சிப்பை அறிவியுங்கள். \q1 \v 3 நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும், \q2 மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள். \b \q1 \v 4 ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; \q2 எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே. \q1 \v 5 நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன; \q2 ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார். \q1 \v 6 மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; \q2 வல்லமையும் மகிமையும் அவருடைய பரிசுத்த இடத்தில் இருக்கின்றன. \b \q1 \v 7 நாடுகளின் குடும்பங்களே, மகிமையையும் வல்லமையையும் \q2 யெகோவாவுக்கு செலுத்துங்கள்; \q2 யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள். \q1 \v 8 யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; \q2 காணிக்கையை எடுத்துக்கொண்டு அவருடைய ஆலய முற்றத்திற்கு வாருங்கள். \q1 \v 9 அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்; \q2 பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள். \q1 \v 10 “யெகோவா ஆளுகிறார்” என்று நாடுகளின் மத்தியில் சொல்லுங்கள்; \q2 உலகம் உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அது அசையாது; \q2 அவர் நாடுகளை நீதியாய் நியாயந்தீர்ப்பார். \b \q1 \v 11 வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்; \q2 கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும். \q1 \v 12 வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்; \q2 அப்பொழுது காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும். \q1 \v 13 யெகோவா வருகிறார், அதினால் அவருக்கு முன்பாக \q2 அனைத்துப் படைப்புகளும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்; \q2 ஏனெனில் அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; \q1 அவர் உலகத்தை நீதியுடனும் \q2 மக்களை அவருடைய சத்தியத்தின்படியும் நியாயந்தீர்ப்பார். \c 97 \cl சங்கீதம் 97 \q1 \v 1 யெகோவா ஆட்சி செய்கிறார், பூமி களிகூரட்டும்; \q2 தொலைவில் உள்ள தீவுகள் மகிழட்டும். \q1 \v 2 மேகங்களும் காரிருளும் அவரைச் சூழ்கின்றன; \q2 நேர்மையுடனும் நீதியுடனும் அவர் ஆளுகை செய்கிறார். \q1 \v 3 நெருப்பு அவருக்கு முன்சென்று, \q2 சுற்றிலுமுள்ள அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது. \q1 \v 4 அவருடைய மின்னல் உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கிறது; \q2 பூமி அதைக்கண்டு நடுங்குகிறது. \q1 \v 5 யெகோவாவுக்கு முன்பாக, பூமியனைத்திற்கும் ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாகவே \q2 மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன. \q1 \v 6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கிறது; \q2 எல்லா நாடுகளும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள். \b \q1 \v 7 உருவச்சிலைகளை வணங்குகிற அனைவரும், \q2 விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்கள்; \q2 தெய்வங்களே, நீங்களெல்லோரும் யெகோவாவையே வழிபடுங்கள். \b \q1 \v 8 யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகளினால் \q2 சீயோன் கேட்டுக் களிகூருகிறது; \q2 யூதாவின் கிராமங்களும் மகிழ்கின்றன. \q1 \v 9 யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்; \q2 எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக நீரே உயர்த்தப்பட்டிருக்கிறீர். \q1 \v 10 யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்; \q2 ஏனெனில் அவர் தமக்கு உண்மையுள்ளோரின் உயிர்களைக் காப்பாற்றி, \q2 கொடியவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறார். \q1 \v 11 நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது, \q2 இருதயத்தில் நீதி உள்ளவர்களுக்குக் களிப்புண்டாகிறது. \q1 \v 12 நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள், \q2 அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள். \c 98 \cl சங்கீதம் 98 \d சங்கீதம். \q1 \v 1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; \q2 ஏனெனில் அவர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்; \q1 அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமுமே \q2 இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறது. \q1 \v 2 யெகோவா தமது இரட்சிப்பைத் தெரியப்படுத்தி, \q2 தமது நீதியைப் பிறநாடுகளின் கண்முன்னே வெளிப்படுத்தினார். \q1 \v 3 அவர் இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் கொண்டிருந்த \q2 தமது அன்பையும் உண்மையையும் நினைவில்கொண்டார்; \q1 பூமியின் எல்லைகள் எல்லாம் \q2 நமது இறைவனுடைய இரட்சிப்பைக் கண்டன. \b \q1 \v 4 பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் \q2 யெகோவாவை மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்; \q2 முழக்கமிட்டு களிப்புடன் இசையோடு பாடுங்கள். \q1 \v 5 யாழோடு யெகோவாவுக்கு இசை பாடுங்கள்; \q2 யாழோடும், கீதசத்தத்தோடும், \q1 \v 6 எக்காளங்களோடும், கொம்பு வாத்திய முழக்கங்களோடும் \q2 யெகோவாவாகிய அரசரின்முன் மகிழ்ந்து பாடுங்கள். \b \q1 \v 7 கடலும் அதிலுள்ள அனைத்தும், \q2 உலகமும் அதிலுள்ள அனைவரும் ஆர்ப்பரிப்பார்களாக. \q1 \v 8 ஆறுகள் தங்கள் கைகளைத் தட்டட்டும்; \q2 மலைகள் மகிழ்ச்சியுடன் ஒன்றுசேர்ந்து பாடட்டும். \q1 \v 9 அவை யெகோவாவுக்கு முன்பாகப் பாடட்டும்; \q2 ஏனெனில், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; \q1 அவர் உலகத்தை நீதியுடனும், \q2 நாடுகளை நேர்மையுடனும் நியாயந்தீர்ப்பார். \c 99 \cl சங்கீதம் 99 \q1 \v 1 யெகோவா ஆட்சி செய்கிறார், \q2 நாடுகள் நடுங்கட்டும்; \q1 அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; \q2 பூமி அதிரட்டும். \q1 \v 2 சீயோனிலே யெகோவா பெரியவர்; \q2 அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார். \q1 \v 3 பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்; \q2 அவர் பரிசுத்தமானவர். \b \q1 \v 4 அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்; \q2 நீர் நியாயத்தை நிலைநாட்டியிருக்கிறீர்; \q1 நீர் யாக்கோபில் \q2 நீதியையும் நேர்மையானதையும் செய்திருக்கிறீர். \q1 \v 5 நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி, \q2 அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்; \q2 அவர் பரிசுத்தமானவர். \b \q1 \v 6 அவருடைய ஆசாரியருள் மோசேயும் ஆரோனும் இருந்தார்கள்; \q2 அவருடைய பெயரைச் சொல்லி வழிபடுகிறவர்களில் சாமுயேலும் இருந்தான்; \q1 அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; \q2 அவர் அவர்களுக்குப் பதிலளித்தார். \q1 \v 7 அவர் மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; \q2 அவர் அவர்களுக்குக் கொடுத்த \q2 அவருடைய நியமங்களையும் விதிமுறைகளையும் கைக்கொண்டார்கள். \b \q1 \v 8 எங்கள் இறைவனாகிய யெகோவாவே, \q2 நீர் அவர்களுடைய வேண்டுதலுக்குப் பதிலளித்தீர்; \q1 இஸ்ரயேலருடைய தீயசெயல்களுக்காக நீர் அவர்களைத் தண்டித்த போதிலும், \q2 நீர் அவர்களுக்கு மன்னிக்கிற இறைவனாகவே இருந்தீர். \q1 \v 9 நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி \q2 அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்; \q2 ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர். \c 100 \cl சங்கீதம் 100 \d நன்றியுணர்வை வெளிப்படுத்தும் சங்கீதம். \q1 \v 1 பூமியிலுள்ளவர்களே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் யெகோவாவை ஆர்ப்பரியுங்கள். \q2 \v 2 மகிழ்ச்சியுடன் யெகோவாவை வழிபடுங்கள், \q2 மகிழ்ச்சிப் பாடல்களோடு அவர்முன் வாருங்கள். \q1 \v 3 யெகோவாவே இறைவன் என்று அறியுங்கள். \q2 அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடையவர்கள்; \q2 நாம் அவருடைய மக்கள், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள். \b \q1 \v 4 அவருடைய வாசல்களில் நன்றியோடும், \q2 அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள் \q2 அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள். \q1 \v 5 யெகோவா நல்லவர், அவருடைய அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது; \q2 அவருடைய உண்மை எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருகிறது. \c 101 \cl சங்கீதம் 101 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; \q2 உமக்கே நான் துதி பாடுவேன். \q1 \v 2 நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்; \q2 நீர் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்? \b \q1 நான் குற்றமற்ற இருதயத்துடன் \q2 என் வீட்டின் விவகாரங்களை நடத்துவேன். \q1 \v 3 தீங்கான செயல்களை \q2 நான் என் கண்முன் வைக்கமாட்டேன். \b \q1 உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்; \q2 அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது. \q1 \v 4 வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்; \q2 நான் தீமையோடு எவ்வித தொடர்பும் வைக்கமாட்டேன். \b \q1 \v 5 தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரை \q2 நான் தண்டிப்பேன்; \q1 கர்வமான கண்களையும் பெருமையான இருதயத்தையும் கொண்ட மனிதரை \q2 நான் சகிக்கமாட்டேன். \b \q1 \v 6 நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும், \q2 அவர்கள் என்னோடு வாழ்வார்கள்; \q1 குற்றமற்றவனாய் நடப்பவர்களே \q2 எனக்கு ஊழியம் செய்வார்கள். \b \q1 \v 7 வஞ்சனை செய்யும் யாரும் \q2 என் வீட்டில் வாழமாட்டார்கள்; \q1 பொய்ப் பேசுபவர் யாரும் \q2 என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள். \b \q1 \v 8 நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும் \q2 காலைதோறும் தண்டிப்பேன்; \q1 தீங்குசெய்யும் ஒவ்வொருவரையும் \q2 யெகோவாவினுடைய நகரத்திலிருந்து அகற்றிவிடுவேன். \c 102 \cl சங்கீதம் 102 \d பலவீனமடைந்து யெகோவாவுக்கு முன்பாக புலம்பலை ஊற்றும் ஒரு சிறுமைப்பட்டவனின் மன்றாட்டு. \q1 \v 1 யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; \q2 உதவிக்காக என் கதறுதல் உம்மிடம் வந்துசேர்வதாக. \q1 \v 2 நான் துன்பத்தில் இருக்கும்போது \q2 உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்; \q1 நான் கூப்பிடும்போது உமது செவியை என் பக்கமாய்த் திருப்பி, \q2 விரைவாய் எனக்குப் பதிலளியும். \b \q1 \v 3 என் நாட்கள் புகையைப்போல் மறைந்துபோகின்றன; \q2 என் எலும்புகள் தகதகக்கும் தணல்கள்போல் எரிகின்றன. \q1 \v 4 என் இருதயம் புல்லைப்போல் உலர்ந்து கருகிப்போயிற்று; \q2 நான் என் உணவைச் சாப்பிடவும் மறக்கிறேன். \q1 \v 5 என் உரத்த பெருமூச்சினால் \q2 நான் எலும்பும் தோலுமானேன்; \q1 \v 6 நான் ஒரு பாலைவன ஆந்தையைப்போல் இருக்கிறேன்; \q2 பாழிடங்களில் உள்ள ஓர் ஆந்தையைப்போல் இருக்கிறேன். \q1 \v 7 நான் நித்திரையின்றிப் படுத்திருக்கிறேன்; \q2 நான் வீட்டுக்கூரைமேல் தனித்திருக்கும் ஒரு பறவைபோல் ஆனேன். \q1 \v 8 என் பகைவர் நாள்முழுவதும் என்னை நிந்திக்கிறார்கள்; \q2 எனக்கு விரோதமாக வசை கூறுகிறவர்கள் என் பெயரைச் சாபமாகப் பயன்படுத்துகிறார்கள். \q1 \v 9 நான் சாம்பலை உணவாகச் சாப்பிட்டு, \q2 என் பானத்தைக் கண்ணீரோடு கலக்கிறேன். \q1 \v 10 உமது கடுங்கோபத்திற்கு உள்ளானேன். \q2 நீர் என்னை தூக்கி, ஒரு பக்கமாய் வைத்துவிட்டீர். \q1 \v 11 என் வாழ்நாட்கள் மாலைநேர நிழலைப் போன்றது; \q2 நான் புல்லைப்போல் வாடிப் போகின்றேன். \b \q1 \v 12 ஆனால் நீரோ யெகோவாவே, என்றென்றும் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறீர்; \q2 உமது கீர்த்தி எல்லாத் தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கும். \q1 \v 13 நீர் எழுந்து சீயோன்மேல் கருணை காட்டும்; \q2 இதுவே நீர் அதற்கு தயை காட்டும் காலம், \q2 நியமிக்கப்பட்ட காலமும் வந்துவிட்டது. \q1 \v 14 சீயோனின் கற்கள் உமது பணியாளர்களுக்கு அருமையாய் இருக்கின்றன; \q2 அதின் தூசியின்மேலும் அவர்கள் அனுதாபம் கொள்கிறார்கள். \q1 \v 15 நாடுகள் யெகோவாவினுடைய பெயருக்குப் பயப்படுவார்கள்; \q2 பூமியின் அரசர்கள் எல்லோரும் உமது மகிமைக்கு மரியாதை செலுத்துவார்கள். \q1 \v 16 யெகோவா திரும்பவும் சீயோனைக் கட்டியெழுப்பி, \q2 தம் மகிமையில் காட்சியளிப்பார். \q1 \v 17 ஆதரவற்றவர்களின் மன்றாட்டிற்கு அவர் பதிலளிப்பார்; \q2 அவர்களுடைய வேண்டுதல்களை அவர் புறக்கணிக்கமாட்டார். \b \q1 \v 18 இனிமேல் உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிக்கும்படி, \q2 இனிவரப்போகும் தலைமுறையினருக்காக இது எழுதப்படுவதாக: \q1 \v 19 “யெகோவா தமது உயர்ந்த பரிசுத்த இடத்திலிருந்து கீழே பார்த்தார்; \q2 அவர் பரலோகத்திலிருந்து பூமியை நோக்கி, \q1 \v 20 அவர் சிறையிருப்பவர்களின் வேதனைக் குரலைக் கேட்கவும், \q2 மரணத்தீர்ப்பிற்கு உள்ளானவர்களை விடுதலையாக்கவுமே பார்க்கிறார்.” \q1 \v 21 ஆகையால் மக்களும் அரசுகளும் \q2 யெகோவாவை வழிபடுவதற்கு கூடிவரும்போது, \q1 \v 22 சீயோனில் யெகோவாவினுடைய பெயரும் \q2 எருசலேமில் அவருடைய துதியும் அறிவிக்கப்படும். \b \q1 \v 23 யெகோவா என் வாழ்க்கைப் பாதையிலே என் பெலனை குறையப்பண்ணினார்; \q2 என் நாட்களையும் குறுகச்செய்தார். \q1 \v 24 அப்பொழுது நான் அவரிடம் உரைத்தது, \q1 “இறைவனே, என் வாழ்நாட்களின் இடையிலேயே என்னை எடுத்துக் கொள்ளாதிரும்; \q2 உமது வருடங்கள் எல்லாத் தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கின்றனவே. \q1 \v 25 நீர் ஆதியிலே பூமிக்கு அஸ்திபாரங்களை அமைத்தீர்; \q2 வானங்களும் உமது கரங்களின் வேலையாய் இருக்கின்றன. \q1 \v 26 அவை அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; \q2 அவையெல்லாம் உடையைப்போல பழமையாய்ப்போகும்; \q1 உடையைப்போல் நீர் அவைகளை மாற்றுவீர்; \q2 அவைகளெல்லாம் ஒதுக்கித் தள்ளப்படும். \q1 \v 27 நீரோ மாறாதவராய் நிலைத்திருக்கிறீர், \q2 உம்முடைய வருடங்கள் ஒருபோதும் முடிந்து போவதில்லை. \q1 \v 28 உமது அடியாரின் பிள்ளைகள் உமது சமுதாயத்தில் குடியிருப்பார்கள்; \q2 அவர்களுடைய சந்ததியும் உமக்கு முன்பாக நிலைகொண்டிருக்கும்.” \c 103 \cl சங்கீதம் 103 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி; \q2 என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைத் துதி. \q1 \v 2 என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி; \q2 அவர் செய்த நன்மைகள் யாவற்றையும் மறவாதே. \q1 \v 3 அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கிறார்; \q2 உன்னுடைய நோய்களையெல்லாம் சுகமாக்குகிறார். \q1 \v 4 அவர் உன் உயிரை மரணக் குழியிலிருந்து மீட்கிறார், \q2 உடன்படிக்கையின் அன்பினாலும், இரக்கங்களினாலும் உன்னை முடிசூட்டுகிறார்\f + \fr 103:4 \fr*\fq முடிசூட்டுகிறார் \fq*\ft அல்லது \ft*\fqa ஆசீர்வதிக்கிறார்.\fqa*\f*. \q1 \v 5 அவர் உன் வாழ்வை நன்மையான காரியங்களால் திருப்தியாக்குகிறார்; \q2 அதினால் உன் இளமை கழுகின் இளமையைப்போல் புதுப்பிக்கப்படுகிறது. \b \q1 \v 6 ஒடுக்கப்படுகிற யாவருக்கும் யெகோவா \q2 நியாயத்தையும் நீதியையும் செய்கிறார். \b \q1 \v 7 அவர் தமது வழியை மோசேக்கு வெளிப்படுத்தினார், \q2 தமது செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படிச் செய்தார். \q1 \v 8 யெகோவா கருணையும் கிருபையும் உள்ளவர், \q2 அவர் கோபிக்கிறதில் தாமதிப்பவரும் \q2 உடன்படிக்கையின் அன்பு நிறைந்தவருமாய் இருக்கிறார். \q1 \v 9 அவர் எப்பொழுதும் நம்மேல் குற்றம் சுமத்துகிறவரல்ல; \q2 தமது கோபத்தை என்றென்றும் வைத்திருக்கவுமாட்டார். \q1 \v 10 நமது பாவங்களுக்கு ஏற்றபடி அவர் நமக்கு செய்யவில்லை, \q2 நமது அநியாயங்களுக்குத் தக்கதாக நம்மைத் தண்டிப்பதும் இல்லை. \q1 \v 11 ஏனெனில் பூமிக்கு மேலாய் வானங்கள் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, \q2 அவருக்குப் பயபக்தியாய் இருக்கிறவர்கள்மேல் \q2 அவருடைய உடன்படிக்கையின் அன்பும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது. \q1 \v 12 மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ, \q2 அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய மீறுதல்களை நம்மைவிட்டு விலக்கிவிட்டார். \b \q1 \v 13 தகப்பன் தன் பிள்ளைகளுக்குத் தயை காட்டுவதுபோல், \q2 யெகோவாவும் தம்மிடத்தில் பயபக்தியாய் இருக்கிறவர்களுக்கு தயை காட்டுகிறார்; \q1 \v 14 ஏனெனில் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவர் அறிவார்; \q2 நாம் தூசி என்பதையும் அவர் நினைவுகூருகிறார். \q1 \v 15 மனிதர்களுடைய வாழ்க்கை புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; \q2 அவர்கள் வயல்வெளியின் பூவைப்போல் பூக்கிறார்கள். \q1 \v 16 காற்று அதின்மேல் வீசுகிறது, அது உதிர்ந்து விழுகிறது; \q2 அது இருந்த இடமும் அதை நினைவில் கொள்ளாது. \q1 \v 17 ஆனால் யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பு \q2 அவர்மேல் பயபக்தியாய் இருக்கிறவர்களோடும், \q2 அவருடைய நீதி அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளோடும் என்றைக்கும் இருக்கிறது; \q1 \v 18 அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, \q2 அவருடைய ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிய கவனமாயிருப்பவர்கள் மேல், \q2 அவருடைய உடன்படிக்கையின் அன்பு நிலைத்திருக்கும். \b \q1 \v 19 யெகோவா தமது சிங்காசனத்தை பரலோகத்தில் நிலைப்படுத்தியிருக்கிறார்; \q2 அவருடைய அரசு அனைத்தையும் ஆளுகை செய்கிறது. \b \q1 \v 20 யெகோவாவினுடைய தூதர்களே, \q2 அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, \q2 அவர் கட்டளையிடுகிறதைச் செய்கிற பலவான்களே, அவரைத் துதியுங்கள். \q1 \v 21 பரலோகத்தில் உள்ள யெகோவாவினுடைய சேனைகளே, \q2 அவருடைய திட்டத்தைச் செய்கிற அவருடைய பணியாளர்களே, அவரைத் துதியுங்கள். \q1 \v 22 யெகோவா ஆளுகை செய்கிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய படைப்புகளே, \q2 அவரைத் துதியுங்கள். \b \q1 என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. \c 104 \cl சங்கீதம் 104 \q1 \v 1 என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. \b \q1 என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எவ்வளவு பெரியவர்; \q2 மேன்மையையும், மகத்துவத்தையும் நீர் அணிந்திருக்கிறீர். \b \q1 \v 2 யெகோவா ஆடையைப்போல ஒளியை அணிந்துள்ளார்; \q2 அவர் வானங்களை ஒரு கூடாரத்தைப்போல் விரித்துள்ளார். \q2 \v 3 அவர் தமது மேலறைகளை மழைமேகங்களின் மேலாக அமைக்கிறார்; \q1 அவர் மேகங்களைத் தமது தேராக்கி, \q2 காற்றின் சிறகுகள்மேல் செல்கிறார். \q1 \v 4 அவர் காற்றுகளைத் தமது இறைத்தூதுவர்களாவும், \q2 நெருப்பு ஜூவாலைகளைத் தம்முடைய ஊழியர்களாகவும் ஆக்குகிறார். \b \q1 \v 5 அவர் பூமியை அதின் அடித்தளங்கள்மீது அமைத்தார்; \q2 அது ஒருபோதும் அசைக்கப்படாது. \q1 \v 6 உடையினால் மூடுவது போல் நீர் அதை ஆழ்கடலினால் மூடினீர்; \q2 வெள்ளம் மலைகளுக்கு மேலாய் நின்றது. \q1 \v 7 ஆனாலும் உமது கண்டிப்பின்முன் வெள்ளம் விலகி ஓடியது; \q2 உமது முழக்கத்தின் சத்தத்தைக் கேட்டு அது விரைந்து ஓடியது. \q1 \v 8 அவைகள் மலைகளுக்கு மேலாய் ஓடி, \q2 பள்ளத்தாக்குகளில் இறங்கி, \q2 நீர் அவைகளுக்கு ஏற்படுத்திய இடத்தில் நின்றன. \q1 \v 9 அவைகள் கடக்கமுடியாத ஓர் எல்லையை நீர் ஏற்படுத்தினீர்; \q2 அவை இனி ஒருபோதும் பூமியை மூடிக்கொள்ளாது. \b \q1 \v 10 அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்; \q2 அது மலைகளுக்கிடையே ஓடுகின்றது. \q1 \v 11 அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன; \q2 காட்டுக் கழுதைகளும் அங்கே தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றன. \q1 \v 12 ஆகாயத்துப் பறவைகள் நீர்நிலைகளின் அருகே கூடு கட்டுகின்றன; \q2 கிளைகளின் மத்தியிலே அவை பாடுகின்றன. \q1 \v 13 அவர் தமது மேலறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்; \q2 பூமி அவருடைய செய்கையின் பலனால் திருப்தியடைகிறது. \q1 \v 14 அவர் மந்தைகளுக்காகப் புல்லையும், \q2 மனிதன் பயிரிடும் தாவரங்களையும் வளரச்செய்கிறார், \q2 அவர் பூமியிலிருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கிறார்: \q1 \v 15 மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும், \q2 அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், \q2 அவர்களைப் பெலப்படுத்தும் உணவையும் விளைவிக்கிறார். \q1 \v 16 யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்கு \q2 நல்ல நீர்ப்பாய்ச்சலை கொடுக்கிறார். \q1 \v 17 அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன; \q2 கொக்குகள் தேவதாரு மரங்களில் குடியிருக்கின்றன. \q1 \v 18 உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும், \q2 செங்குத்தான பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாயும் இருக்கின்றன. \b \q1 \v 19 காலங்களைக் குறிக்க அவர் நிலவைப் படைத்தார்; \q2 சூரியன் தான் எப்போது மறையவேண்டும் என்பதை அறியும். \q1 \v 20 நீர் இருளைக் கொண்டுவருகிறீர், அப்பொழுது இரவாகின்றது; \q2 காட்டு மிருகங்கள் எல்லாம் பதுங்கித் திரிகின்றன. \q1 \v 21 சிங்கங்கள் தங்கள் இரைக்காகக் கர்ஜிக்கின்றன; \q2 இறைவனிடமிருந்து அவை தங்களுடைய உணவைத் தேடுகின்றன. \q1 \v 22 சூரியன் உதித்ததும் அவை ஒளிந்து ஓடுகின்றன; \q2 அவை திரும்பிப்போய் தங்கள் குகைகளில் படுத்துக் கொள்கின்றன. \q1 \v 23 அப்பொழுது மனிதன் தன் வேலைக்குப் போகிறான்; \q2 மாலையாகும்வரை தன் தொழிலில் ஈடுபடுகின்றான். \b \q1 \v 24 யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை! \q2 அவை அனைத்தையும் நீர் ஞானத்தில் படைத்திருக்கிறீர்; \q2 பூமி நீர் படைத்த உயிரினங்களால் நிறைந்திருக்கின்றது. \q1 \v 25 அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு; \q2 பெரிதும் சிறிதுமான எண்ணிலடங்கா \q2 வாழும் உயிரினங்கள் அங்கே உண்டு. \q1 \v 26 அங்கே கப்பல்கள் இங்குமங்கும் போகின்றன; \q2 நீர் உருவாக்கிய லிவியாதானும் அங்கே துள்ளி விளையாடும். \b \q1 \v 27 நீர் அவைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பீர் என்று \q2 அவைகளெல்லாம் உம்மையே பார்த்திருக்கின்றன. \q1 \v 28 நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது, \q2 அவை சேகரித்துக்கொள்கின்றன; \q1 நீர் உமது கரத்தைத் திறக்கும்போது, \q2 அவை நன்மைகளால் திருப்தியடைகின்றன. \q1 \v 29 நீர் உமது முகத்தை மறைக்கும்போது, \q2 அவை திகைக்கின்றன; \q1 நீர் அவைகளின் சுவாசத்தை எடுத்துவிட, \q2 அவை இறந்து தூசிக்குத் திரும்புகின்றன. \q1 \v 30 நீர் உமது ஆவியை அனுப்புகையில், \q2 அவை படைக்கப்படுகின்றன; \q2 நீர் பூமியின் மேற்பரப்பைப் புதுப்பிக்கிறீர். \b \q1 \v 31 யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருப்பதாக; \q2 யெகோவா தமது செயல்களில் மகிழ்வாராக. \q1 \v 32 அவர் பூமியைப் பார்க்கும்போது அது நடுங்குகின்றது; \q2 மலைகளைத் தொடும்போது அவை புகைகின்றன. \b \q1 \v 33 நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்; \q2 நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன். \q1 \v 34 நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது, \q2 என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக. \q1 \v 35 ஆனால் பாவிகள் பூமியிலிருந்து இல்லாமல் போவார்களாக; \q2 கொடியவர்கள் இனி இல்லாமல் போவார்கள். \b \q1 என் ஆத்துமாவே யெகோவாவைத் துதி. \b \q1 அல்லேலூயா. \c 105 \cl சங்கீதம் 105 \q1 \v 1 யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; \q2 அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள். \q1 \v 2 அவரைப் பாடுங்கள், அவருக்குத் துதி பாடுங்கள்; \q2 அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். \q1 \v 3 அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்; \q2 யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. \q1 \v 4 யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்; \q2 எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள். \b \q1 \v 5 அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், \q2 அவர் கொடுத்த நியாயத்தீர்ப்புகளையும் நினைவிற்கொள்ளுங்கள். \q1 \v 6 அவருடைய ஊழியராம் ஆபிரகாமின் சந்ததிகளே, \q2 அவர் தெரிந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே, நீங்கள் இவற்றை நினைவிற்கொள்ளுங்கள். \q1 \v 7 அவரே நமது இறைவனாகிய யெகோவா; \q2 அவரது நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் உள்ளன. \b \q1 \v 8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருகிறார், \q2 ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் செய்த வாக்குறுதியையும், \q1 \v 9 ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், \q2 ஈசாக்கிற்கு அவர் இட்ட ஆணையையும் நினைவுகூருகிறார். \q1 \v 10 அவர் அதை யாக்கோபுக்கு ஒரு விதிமுறையாகவும், \q2 இஸ்ரயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்திச் சொன்னதாவது: \q1 \v 11 “உங்களுடைய உரிமைச்சொத்தாக, \q2 கானான் நாட்டை நான் உனக்குக் கொடுப்பேன்.” \b \q1 \v 12 அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாய், \q2 உண்மையிலேயே மிகச் சிலராகவும், வேற்று நாட்டினராகவும் இருந்தபோது, \q1 \v 13 அவர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், \q2 ஒரு அரசிலிருந்து இன்னொரு அரசிற்கும் அலைந்து திரிந்தார்கள். \q1 \v 14 அவர்களை ஒடுக்குவதற்கு அவர் யாரையும் அனுமதிக்கவில்லை; \q2 அவர்களுக்காக அவர் அரசர்களைக் கண்டித்துச் சொன்னதாவது: \q1 \v 15 “நான் அபிஷேகம் செய்தவர்களைத் தொடவேண்டாம்; \q2 என் இறைவாக்கினருக்குத் தீமை செய்யவேண்டாம்.” \b \q1 \v 16 எகிப்து நாட்டிலே அவர் பஞ்சத்தை வரும்படிச் செய்து, \q2 அவர்களுடைய உணவு விநியோகத்தை நிறுத்தினார்; \q1 \v 17 அவர் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பை என்ற ஒரு மனிதனை, \q2 அவர்களுக்குமுன் எகிப்திற்கு அனுப்பிவைத்தார். \q1 \v 18 எகிப்தியர் அவனுடைய கால்களை விலங்கிட்டு காயப்படுத்தினார்கள்; \q2 அவனுடைய கழுத்து இரும்புகளால் பிணைக்கப்பட்டது. \q1 \v 19 அவன் முன்பு சொன்னவை நிறைவேறுமளவும், \q2 யெகோவாவினுடைய வார்த்தை அவனை உண்மையானவன் என்று \q2 நிரூபிக்கும் வரைக்கும் அவ்வாறு நடந்தது. \q1 \v 20 எகிப்திய அரசன் ஆள் அனுப்பி அவனை விடுவித்தான்; \q2 மக்களின் அதிகாரி அவனை விடுதலை செய்தான். \q1 \v 21 அரசன் அவனைத் தன் வீட்டிற்குத் தலைவனாக்கி, \q2 தன் உடைமைகளுக்கு எல்லாம் அதிபதியாக்கினான். \q1 \v 22 தான் விரும்பியபடி இளவரசர்களுக்கு அறிவுறுத்தவும், \q2 ஆலோசகர்களுக்கு ஞானத்தைப் போதிக்கவும் அரசன் யோசேப்பை நியமித்தான். \b \q1 \v 23 அப்பொழுது இஸ்ரயேல் எகிப்திற்கு வந்தான்; \q2 யாக்கோபு காமின் நாட்டில் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனைப்போல் வாழ்ந்தான். \q1 \v 24 யெகோவா தம் மக்களை பலுகிப் பெருகச்செய்தார்; \q2 அவர்களுடைய பகைவரைப் பார்க்கிலும், அதிக வலிமை உள்ளவர்களாக்கினார். \q1 \v 25 அவர் எகிப்தியர்கள் இஸ்ரயேலரை வெறுக்கவும், \q2 அவருடைய ஊழியருக்கு விரோதமாக சூழ்ச்சி செய்யவும், \q2 எகிப்தியரின் இருதயங்களை மாற்றினார். \q1 \v 26 அவர் தமது அடியானாகிய மோசேயையும், \q2 தாம் தெரிந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார். \q1 \v 27 இவர்கள் எகிப்தியர் மத்தியில் அற்புத அடையாளங்களையும், \q2 காமின் நாட்டிலே அதிசயங்களையும் செய்தார்கள். \q1 \v 28 யெகோவாவினுடைய வார்த்தைகளுக்கு விரோதமாக \q2 எகிப்தியர் கலகம் செய்தார்கள் அல்லவோ? \q2 அதினால் அவர் இருளை அனுப்பி நாட்டை இருளாக்கினார். \q1 \v 29 அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார், \q2 அவர்களுடைய மீன்கள் மாண்டுபோனது. \q1 \v 30 அவர்களுடைய நாடு தவளைகளால் நிறைந்தது; \q2 அவை அவர்களுடைய ஆளுநர்களின் படுக்கை அறைகளுக்குள்ளும் சென்றன. \q1 \v 31 இறைவன் கட்டளையிட, ஈக்கள் கூட்டமாக அங்கே திரண்டு வந்தன; \q2 கொசுக்கள் எகிப்திய நாடெங்கும் நிறைந்தன. \q1 \v 32 அவர் அவர்களுக்கு மழைக்குப் பதிலாக கல்மழையை மின்னலுடன் \q2 அவர்களுடைய நாடெங்கிலும் வரச்செய்தார். \q1 \v 33 அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும், அத்திமரங்களையும் வீழ்த்தி, \q2 அவர்களுடைய நாட்டிலிருந்த மரங்களை முறித்தார். \q1 \v 34 அவர் கட்டளையிட, கணக்கற்ற வெட்டுக்கிளிகளும், \q2 பச்சைப்புழுக்களும் வந்தன. \q1 \v 35 அவை அவர்களுடைய நாட்டிலிருந்த பசுமையான எல்லாவற்றையும் \q2 அவர்களுடைய நிலத்தின் விளைச்சல்களையும் தின்று போட்டது. \q1 \v 36 பின்பு அவர் எகிப்து நாட்டின் முதற்பிறந்த எல்லாவற்றையும், \q2 அவர்களுடைய ஆண்மையின் முதற்பேறான மகன்களையும் மரிக்கச் செய்தார். \q1 \v 37 அவர் இஸ்ரயேலரை நிறைய வெள்ளியோடும் தங்கத்தோடும் புறப்படச் செய்தார், \q2 அவர்களுடைய கோத்திரங்களில் ஒருவரும் தளர்ந்து போகவில்லை. \q1 \v 38 இஸ்ரயேலரைப் பற்றிய பயம் எகிப்தியரைப் பிடித்திருந்ததால், \q2 இஸ்ரயேலர் புறப்பட்டபோது எகிப்தியர் அகமகிழ்ந்தார்கள். \b \q1 \v 39 யெகோவா ஒரு மேகத்தை தன் மக்களுக்கு நிழலாகப் பரப்பினார்; \q2 இரவிலே வெளிச்சம் கொடுப்பதற்கு நெருப்பையும் தந்தார். \q1 \v 40 அவர்கள் கேட்டபோது, அவர்களுக்குக் காடைகளை வரச்செய்தார்; \q2 பரலோகத்தின் அப்பத்தினால் அவர்களைத் திருப்தியாக்கினார். \q1 \v 41 அவர் கற்பாறையைத் பிளந்தார், தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது; \q2 அது ஒரு நதியைப்போல் பாலைவனத்தில் ஓடியது. \b \q1 \v 42 ஏனெனில் அவர் தமது அடியானாகிய ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த, \q2 தமது பரிசுத்த வாக்குத்தத்தத்தை நினைவிற்கொண்டார். \q1 \v 43 அவர் தமது மக்களைக் களிப்போடு வெளியே கொண்டுவந்தார்; \q2 தாம் தெரிந்துகொண்டவர்களை மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு வெளியே கொண்டுவந்தார். \q1 \v 44 அவர் பிற நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தார்; \q2 அவர்கள் மற்றவர்களின் கடின உழைப்பின் பலனுக்கு உரிமையாளர்கள் ஆனார்கள். \q1 \v 45 அவருடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொண்டு, \q2 அவருடைய சட்டங்களைக் கடைப்பிடிக்கும்படியாகவே, \q2 யெகோவா இப்படிச் செய்தார். \b \q1 அல்லேலூயா. \c 106 \cl சங்கீதம் 106 \q1 \v 1 யெகோவாவைத் துதியுங்கள்\f + \fr 106:1 \fr*\fq துதியுங்கள் \fq*\ft என்பது எபிரெய மொழியில் \ft*\fqa அல்லேலூயா \fqa*\ft எனப்படும்.\ft*\f*. \b \q1 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; \q2 அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \b \q1 \v 2 யெகோவாவின் வல்லமையான செயல்களைப் பிரசித்தப்படுத்தவும், \q2 அவருடைய புகழை முழுமையாக அறிவிக்கவும் யாரால் முடியும்? \q1 \v 3 நியாயமாய் செயல்படுகிறவர்கள், \q2 எப்பொழுதும் நீதியானதைச் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். \b \q1 \v 4 யெகோவாவே, நீர் உமது மக்களுக்குத் தயவு காண்பிக்கும்பொழுது, \q2 என்னையும் நினைவில்கொள்ளும், \q2 நீர் அவர்களை மீட்கும்போது, எனக்கும் உதவிசெய்யும். \q1 \v 5 அதினால் நீர் தெரிந்துகொண்ட மக்களின் நல்வாழ்வை \q2 அவர்களோடு சேர்ந்து நானும் அனுபவிப்பேன். \q1 உமது நாட்டுக்குரிய மகிழ்ச்சியில் நான் பங்குகொள்வேன்; \q2 உமது உரிமைச்சொத்தாய் இருக்கிறவர்களுடன் இணைந்து உமக்குத் துதி செலுத்துவேன். \b \q1 \v 6 எங்கள் முன்னோர்கள் செய்ததுபோலவே, நாங்களும் பாவம்செய்தோம், \q2 நாங்கள் அநியாயம் செய்து, கொடுமையாய் நடந்தோம். \q1 \v 7 எங்கள் முன்னோர்கள் எகிப்தில் இருந்தபோது, \q2 அவர்கள் உமது அற்புதங்களைக் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை; \q1 அவர்கள் உம்முடைய உடன்படிக்கையின் அன்பின் கிரியைகளையும் நினைவில்கொள்ளவில்லை; \q2 கடலின், செங்கடலின் ஓரத்திலே அவர்கள் கலகம் செய்தார்கள். \q1 \v 8 ஆனாலும் யெகோவா தமது மகத்தான வல்லமையை அறியப்பண்ணும்படி, \q2 தமது பெயரின் நிமித்தம் அவர்களைக் இரட்சித்தார். \q1 \v 9 அவர் செங்கடலை அதட்டினார், அது வறண்டுபோயிற்று; \q2 அவர்களை ஒரு காய்ந்த தரையில் நடத்திச் செல்வதுபோல் அதின் வழியே நடத்தினார். \q1 \v 10 அவர் அவர்களை எதிரிகளின் கைகளிலிருந்து காப்பாற்றினார்; \q2 பகைவரின் கையிலிருந்து அவர்களை மீட்டுக்கொண்டார். \q1 \v 11 அவர்களுடைய எதிரிகளை வெள்ளம் மூடிக்கொண்டது; \q2 அவர்களில் ஒருவனும் உயிர் தப்பவில்லை. \q1 \v 12 அப்பொழுது அவருடைய மக்கள் அவருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்து, \q2 அவருடைய துதியைப் பாடினார்கள். \b \q1 \v 13 ஆனாலும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவாய் மறந்தார்கள்; \q2 அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்கவில்லை. \q1 \v 14 பாலைவனத்தில் இருக்கும்போதே, அவர்கள் தங்கள் இச்சைக்கு இடங்கொடுத்தார்கள்; \q2 பாழ்நிலத்திலே அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள். \q1 \v 15 எனவே அவர்கள் கேட்டதை அவர் அவர்களுக்குக் கொடுத்தார்; \q2 ஆனாலும் மனச்சோர்வை அவர்கள்மேல் அனுப்பினார். \b \q1 \v 16 அவர்கள் முகாமில் இருக்கும்போது மோசேயின்மீதும், \q2 யெகோவாவுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஆரோன் மீதும் பொறாமை கொண்டார்கள். \q1 \v 17 பூமி பிளந்தது, தாத்தானை விழுங்கியது; \q2 அபிராமோடு சேர்ந்திருந்தவர்களையும் புதைத்துப் போட்டது. \q1 \v 18 அவர்களைப் பின்பற்றியவர்களின் மத்தியில் நெருப்புப் பற்றியெரிந்தது; \q2 கொடியவர்களை ஒரு சுவாலை எரித்து அழித்துப்போட்டது. \q1 \v 19 அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, \q2 உலோகத்தால் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை வழிபட்டார்கள். \q1 \v 20 அவர்கள் தங்கள் மகிமையான இறைவனைவிட்டு, \q2 புல்லைத் தின்னும் மாட்டின் உருவத்தைப் பற்றிக்கொண்டார்கள். \q1 \v 21 எகிப்திலே பெரிய காரியங்களைச் செய்து, \q2 தங்களைக் காப்பாற்றிய இறைவனை அவர்கள் மறந்தார்கள். \q1 \v 22 காமின் நாட்டிலே அற்புதங்களையும், \q2 செங்கடலிலே பிரமிக்கத்தக்க செயல்களையும் செய்தவரை மறந்தார்கள். \q1 \v 23 ஆதலால் அவர் அவர்களை அழிக்கப்போவதாகக் கூறினார்; \q2 யெகோவாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, \q1 யெகோவாவுக்கும் மக்களுக்கும் இடையில் நின்று \q2 அவருடைய கோபம் அவர்களை அழிக்காதபடிக்கு கெஞ்சினான். \b \q1 \v 24 அதின்பின் அவர்கள் நலமான அந்நாட்டை அலட்சியம் செய்தார்கள்; \q2 அவருடைய வாக்குத்தத்தத்தை அவர்கள் விசுவாசிக்கவில்லை. \q1 \v 25 தங்கள் கூடாரங்களில் அவர்கள் முறுமுறுத்து, \q2 யெகோவாவுக்குக் கீழ்ப்படியாதிருந்தார்கள். \q1 \v 26 ஆகையால் அவர் அவர்களைப் பாலைவனத்திலேயே இறந்துபோகும்படி \q2 தமது கையை உயர்த்தி அவர்களுக்கு ஆணையிட்டார். \q1 \v 27 அவர்களுடைய சந்ததிகளை பிற நாடுகளிலே சிதறடித்து, \q2 அவர்களை நாடெங்கும் பரவச்செய்தார். \b \q1 \v 28 அப்பொழுது அவர்கள் தங்களைப் பேயோரிலுள்ள பாகாலுடன் இணைத்துக் கொண்டு, \q2 உயிரற்ற தெய்வங்களுக்குப் படைக்கப்பட்ட பலிகளைச் சாப்பிட்டார்கள். \q1 \v 29 இப்படி அவர்கள் தங்கள் கொடுமையான செயல்களினால் \q2 யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்; \q2 அதினால் அவர்களுக்குள்ளே ஒரு கொள்ளைநோய் பரவியது. \q1 \v 30 ஆனால் பினெகாஸ் எழுந்து தலையிட்டதால், \q2 அந்தக் கொள்ளைநோய் நிறுத்தப்பட்டது. \q1 \v 31 அந்த செயல் என்றென்றும் தலைமுறை தலைமுறையாக \q2 அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. \q1 \v 32 மேரிபாவின் தண்ணீர் அருகேயும் அவர்கள் யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்; \q2 மோசேக்கும் அதினால் துன்பம் ஏற்பட்டது. \q1 \v 33 இறைவனுடைய ஆவியானவருக்கு எதிராக அவர்கள் கலகம் செய்தபடியால், \q2 மோசேயின் உதடுகளிலிருந்து கடுமையான வார்த்தைகள் வெளிவந்தன. \b \q1 \v 34 யெகோவா தாம் கட்டளையிட்டபடி \q2 அந்த மக்களை அவர் அழிக்கவில்லை. \q1 \v 35 மாறாக, அந்த பிற மக்களுடன் கலந்து உறவாடி, \q2 அவர்களுடைய பழக்கவழக்கங்களைத் தாங்களும் கைக்கொண்டார்கள். \q1 \v 36 அவர்களுடைய விக்கிரகங்களையே தாங்களும் வழிபட்டார்கள்; \q2 அது இஸ்ரயேலருக்கு ஒரு கண்ணியாகியது. \q1 \v 37 அவர்கள் தங்கள் மகன்களையும் \q2 மகள்களையும் விக்கிரகங்களுக்குப் பலியிட்டார்கள். \q1 \v 38 இவ்வாறு தங்கள் மகன் மகள்களுடைய, \q2 குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; \q1 அவர்கள் கானானிய விக்கிரகங்களுக்குப் பலியிட்டார்கள்; \q2 அதினால் நாடு அவர்களுடைய இரத்தத்தால் தூய்மைக்கேடு அடைந்தது. \q1 \v 39 அவர்கள் தங்கள் செயல்களினாலே தங்களைக் கறைப்படுத்தினார்கள்; \q2 அவர்கள் தங்களுடைய செயல்களின் மூலம் விபசாரம் செய்தனர். \b \q1 \v 40 ஆதலால், யெகோவா தமது மக்கள்மேல் கோபங்கொண்டார், \q2 தமது உரிமைச் சொத்தானவர்களை வெறுத்தார். \q1 \v 41 அவர்களைப் பிற நாட்டினரிடம் ஒப்புக்கொடுத்தார்; \q2 அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஆளுகை செய்தார்கள். \q1 \v 42 அவர்களுடைய பகைவர்கள் அவர்களை ஒடுக்கி, \q2 தங்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்படுத்தினார்கள். \q1 \v 43 ஆனாலும், யெகோவா பலமுறை அவர்களை விடுவித்தார்; \q2 அவர்களோ அவருக்கு எதிராக தொடர்ந்து கலகத்திலே நாட்டம் கொண்டு, \q2 பாவஞ்செய்து விழுந்து போனார்கள். \q1 \v 44 ஆனாலும் அவர்களுடைய கதறுதலை யெகோவா கேட்டபோதோ, \q2 அவர்களுடைய துன்பத்தைக் கவனத்தில் கொண்டார். \q1 \v 45 அவர்களுக்காக யெகோவா தமது உடன்படிக்கையை நினைத்து, \q2 தமது உடன்படிக்கையின் அன்பினால் மனமிரங்கினார். \q1 \v 46 அவர்களைச் சிறைப்பிடித்தவர்கள் அனைவரும், \q2 அவர்களுக்கு அனுதாபம் காட்டும்படி செய்தார். \b \q1 \v 47 எங்கள் இறைவனாகிய யெகோவாவே, எங்களைக் இரட்சியும், \q2 பிற நாடுகளிடமிருந்து எங்களைச் சேர்த்துக்கொள்ளும்; \q1 அப்பொழுது நாங்கள் உமது பரிசுத்த பெயருக்கு நன்றி செலுத்தி, \q2 உம்மைத் துதிப்பதில் மேன்மைபாராட்டுவோம். \b \b \q1 \v 48 இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு நித்தியத்திலிருந்து \q2 நித்தியம் வரைக்கும் துதி உண்டாகட்டும். \b \q1 மக்கள் அனைவரும் சொல்லட்டும்: “ஆமென்!” \b \q1 யெகோவாவைத் துதி. \c 107 \ms பகுதி v \mr சங்கீதம் 107–150 \cl சங்கீதம் 107 \q1 \v 1 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; \q2 அவர் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \b \q1 \v 2 யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள், \q2 எதிரிகளின் கையிலிருந்து அவரால் விடுதலையாக்கப்பட்டவர்கள், \q1 \v 3 கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் \q2 தெற்கிலுமிருக்கும் பல நாடுகளிலிருந்தும் சேர்க்கப்பட்டவர்கள் இதைச் சொல்லட்டும். \b \q1 \v 4 சிலர் தாங்கள் குடியிருக்கத்தக்க பட்டணத்திற்குப் போகும் வழியைக் காணாமல், \q2 பாலைவனத்தின் பாழ்நிலங்களிலே அலைந்து திரிந்தார்கள். \q1 \v 5 அவர்கள் பசியாயும் தாகமாயும் இருந்தார்கள், \q2 அவர்களுடைய ஆத்துமா சோர்ந்துபோயிற்று. \q1 \v 6 அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், \q2 அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை விடுவித்தார். \q1 \v 7 குடியிருக்கத்தக்க ஒரு பட்டணத்திற்கு \q2 அவர் அவர்களை பாதுகாப்பாக வழிநடத்தினார். \q1 \v 8 யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், \q2 அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களின் நிமித்தமும் \q2 நன்றி செலுத்துவார்களாக. \q1 \v 9 ஏனெனில் தாகமுள்ளவர்களை அவர் திருப்தியாக்குகிறார்; \q2 பசியாய் இருப்பவர்களை நன்மையினால் நிரப்புகிறார். \b \q1 \v 10 சிலர் இருளிலும் காரிருளிலும் உட்கார்ந்தார்கள், \q2 சிறைக் கைதிகள் இரும்புச் சங்கிலிகளில் கட்டுண்டு வேதனைப்பட்டார்கள். \q1 \v 11 ஏனெனில், அவர்கள் இறைவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாய்க் கலகம்செய்து, \q2 மகா உன்னதமான இறைவனின் ஆலோசனையை அசட்டைபண்ணினார்கள். \q1 \v 12 ஆகவே அவர் அவர்களைக் கடினமான வேலைக்குட்படுத்தினார்; \q2 அவர்கள் இடறி விழுந்தார்கள்; அவர்களுக்கு உதவிசெய்ய ஒருவருமே இருக்கவில்லை. \q1 \v 13 அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; \q2 அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார். \q1 \v 14 அவர் அவர்களை, இருட்டிலிருந்தும் \q2 ஆழ்ந்த இருளிலிருந்தும் வெளியே கொண்டுவந்து, \q2 அவர்களுடைய சங்கிலிகளை அறுத்தெறிந்தார். \q1 \v 15 யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், \q2 அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் \q2 நன்றி செலுத்துவார்களாக. \q1 \v 16 ஏனெனில் யெகோவா வெண்கல வாசல்களை உடைத்தெறிகிறார்; \q2 இரும்புத் தாழ்ப்பாள்களை வெட்டிப் பிளக்கிறார். \b \q1 \v 17 சிலர் தங்களுடைய கலக வழிகளின் காரணமாக மூடராகி, \q2 தங்கள் அநியாயத்தினிமித்தம் உபத்திரவத்தை அனுபவித்தார்கள். \q1 \v 18 அவர்கள் எல்லா உணவையும் அருவருத்து, \q2 மரண வாசல்களை நெருங்கினார்கள். \q1 \v 19 அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; \q2 அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார். \q1 \v 20 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவர்களைச் சுகப்படுத்தினார்; \q2 அவர் அவர்களை மரணக் குழிகளிலிருந்து தப்புவித்தார். \q1 \v 21 யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், \q2 அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் \q2 நன்றி செலுத்துவார்களாக. \q1 \v 22 அவர்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிட்டு, \q2 மகிழ்ச்சியின் பாடல்களால் அவருடைய செயல்களை அறிவிக்கட்டும். \b \q1 \v 23 சிலர் கப்பல்களில் ஏறிக் கடல்மேல் போனார்கள்; \q2 அவர்கள் கடலின் திரளான தண்ணீரின்மேல் தொழில் செய்தார்கள். \q1 \v 24 அவர்கள் யெகோவாவினுடைய செயல்களையும், \q2 ஆழத்தில் அவர் செய்த புதுமையான செயல்களையும் கண்டார்கள். \q1 \v 25 ஏனெனில் அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல்காற்று எழும்பிற்று; \q2 அது அலைகளை உயர எழச்செய்தது. \q1 \v 26 அவர்கள் வானங்கள்வரை ஏறி, ஆழங்கள்வரை இறங்கிச் சென்றனர்; \q2 அவர்களுடைய ஆபத்தில் அவர்களுடைய தைரியம் பயனற்றுப்போனது. \q1 \v 27 அவர்கள் வெறியரைப்போல் உருண்டு புரண்டார்கள்; \q2 அவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போயிற்று. \q1 \v 28 அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; \q2 அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார். \q1 \v 29 அவர் புயல்காற்றை தென்றல்போல் அமைதியாக்கினார்; \q2 கடலின் அலைகள் அடங்கிப்போயின. \q1 \v 30 அது அமைதியானபோது அவர்கள் மகிழ்ந்தார்கள்; \q2 அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்குப் போக அவர் அவர்களுக்கு வழிகாட்டினார். \q1 \v 31 யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், \q2 அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் \q2 நன்றி செலுத்துவார்களாக. \q1 \v 32 மக்களின் சபையில் அவர்கள் அவரை புகழ்ந்துயர்த்தி, \q2 தலைவர்களின் ஆலோசனை சபையிலே அவரைத் துதிக்கட்டும். \b \q1 \v 33 யெகோவா ஆறுகளைப் பாலைவனமாகவும், \q2 சுரக்கும் நீரூற்றுகளை வறண்ட தரையாகவும் மாற்றினார், \q1 \v 34 செழிப்பான நாட்டை உவர் நிலமாக மாற்றினார்; \q2 அங்கே வசித்தவர்களின் கொடுமையின் நிமித்தமே அவ்வாறு செய்தார். \q1 \v 35 அவர் பாலைவனத்தை நீர்த்தடாகங்களாகவும், \q2 வறண்ட நிலத்தை சுரக்கும் நீரூற்றாகவும் மாற்றினார். \q1 \v 36 பசியுள்ளவர்களை அங்கே குடியிருக்கும்படி கொண்டுவந்தார்; \q2 அங்கே அவர்கள் தாங்கள் குடியிருக்கத்தக்க ஒரு பட்டணத்தைக் கட்டினார்கள். \q1 \v 37 அவர்கள் வயல்வெளிகளில் விதைத்து, திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினார்கள்; \q2 அவை செழிப்பான அறுவடையைக் கொடுத்தன. \q1 \v 38 யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார், அவர்கள் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது; \q2 அவர்களுடைய மந்தைகள் குறைந்துபோக அவர் விடவில்லை. \b \q1 \v 39 பின்பு இறைவனது மக்களின் எண்ணிக்கை குறைந்தது, \q2 அவர்கள் ஒடுக்குதலினாலும் இடுக்கணினாலும் கவலையினாலும் சிறுமையடைந்தார்கள்; \q1 \v 40 பெருமையான அதிகாரிகளின்மேல் இகழ்வை வரப்பண்ணும் அவரே, \q2 அவர்களைப் பாதையற்ற பாழ்நிலத்தில் அலையப்பண்ணினார். \q1 \v 41 ஆனால் எளியவர்களை அவர்களுடைய துன்பத்திலிருந்து தூக்கியெடுத்து, \q2 அவர்களுடைய குடும்பங்களை மந்தையைப்போல் பெருகப்பண்ணினார். \q1 \v 42 நீதிமான்கள் அதைக்கண்டு மகிழ்கிறார்கள்; \q2 ஆனால் கொடியவர்கள் அனைவரும் வாயடைத்துப் போய்விடுவார்கள். \b \q1 \v 43 ஞானமுள்ளவன் எவனோ அவன் இதைக் கவனித்துக் கொள்ளட்டும்; \q2 யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பின் செயல்களைப்பற்றி சிந்திக்கட்டும். \c 108 \cl சங்கீதம் 108 \d தாவீதின் சங்கீதமாகிய பாடல். \q1 \v 1 இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; \q2 நான் என் முழு ஆத்துமாவோடும் இசையமைத்துப் பாடுவேன். \q1 \v 2 யாழே, வீணையே, விழித்தெழுங்கள், \q2 நான் அதிகாலையை விழித்தெழச் செய்வேன். \q1 \v 3 யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; \q2 மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன். \q1 \v 4 ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, \q2 அது வானங்களைப் பார்க்கிலும் உயர்ந்தது; \q2 உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது. \q1 \v 5 இறைவனே, வானங்களுக்கு மேலாக புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; \q2 உமது மகிமை பூமியெங்கும் இருக்கட்டும். \b \q1 \v 6 நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, \q2 உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும். \q1 \v 7 இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: \q2 “நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்; \q2 சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன். \q1 \v 8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; \q2 எப்பிராயீம் என் தலைக்கவசம், \q2 யூதா என் செங்கோல். \q1 \v 9 மோவாப் என் கழுவும் பாத்திரம், \q2 நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்; \q2 நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.” \b \q1 \v 10 அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? \q2 யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்? \q1 \v 11 இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், \q2 எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா? \q1 \v 12 பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; \q2 ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது. \q1 \v 13 இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; \q2 அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார். \c 109 \cl சங்கீதம் 109 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 இறைவனே, நான் துதிக்கும் இறைவனே, \q2 நீர் மவுனமாய் இருக்கவேண்டாம். \q1 \v 2 கொடுமையும், வஞ்சனையும் உள்ளவர்கள், \q2 தங்கள் வாய்களை எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறார்கள்; \q2 பொய் நாவுகளால் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். \q1 \v 3 அவர்கள் பகைமை நிறைந்த சொற்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்; \q2 காரணமின்றி என்னைத் தாக்குகிறார்கள். \q1 \v 4 அவர்கள் என் நட்புக்குப் பதிலாக என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள், \q2 நானோ மன்றாடும் மனிதனாகவே இருக்கிறேன். \q1 \v 5 அவர்கள் நன்மைக்குப் பதிலாக, எனக்குத் தீமை செய்கிறார்கள்; \q2 என் நட்புக்குப் பதிலாக என்னை வெறுக்கிறார்கள். \b \q1 \v 6 என் பகைவனை எதிர்ப்பதற்கு ஒரு தீயவனை ஏற்படுத்தும்; \q2 அவன் வலதுபக்கத்தில் நின்று அவனைக் குற்றஞ்சாட்டுவானாக. \q1 \v 7 அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாய் காணப்படட்டும்; \q2 அவன் மன்றாட்டுகளும் அவனையே குற்றவாளியாய்த் தீர்ப்பதாக. \q1 \v 8 அவன் வாழ்நாட்கள் கொஞ்சமாவதாக; \q2 அவனுடைய பதவியை மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்களாக. \q1 \v 9 அவன் பிள்ளைகள் தந்தையற்றவர் ஆகட்டும், \q2 அவன் மனைவி விதவையாகட்டும். \q1 \v 10 அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுக்கட்டும்; \q2 அவர்கள் தங்கள் பாழடைந்த வீடுகளிலிருந்தும் துரத்தப்படுவார்களாக. \q1 \v 11 கடன் கொடுத்தவன் அவனுக்குரிய எல்லாவற்றையும் பறித்துக் கொள்வானாக; \q2 அவனுடைய பிரயாசத்தின் பலனை பிறர் கொள்ளையிடுவார்களாக. \q1 \v 12 ஒருவருமே அவனுக்கு தயவுகாட்டாமலும், \q2 அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்கு அனுதாபப்படாமலும் இருப்பார்களாக. \q1 \v 13 அவன் சந்ததிகள் மறைந்துபோவார்களாக; \q2 அவன்\f + \fr 109:13 \fr*\fq அவன் \fq*\ft அல்லது \ft*\fqa அவர்களுடைய\fqa*\f* பெயர் அடுத்த தலைமுறையிலிருந்து இல்லாமல் போவதாக. \q1 \v 14 அவன் முற்பிதாக்களின் அநியாயம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படுவதாக; \q2 அவர்களுடைய தாயின் பாவம் ஒருபொழுதும் நீங்காதிருப்பதாக. \q1 \v 15 ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் எப்பொழுதுமே \q2 யெகோவாவுக்கு முன்பாக நிலைத்திருக்கட்டும்; \q2 அவர் அவர்களுடைய நினைவையும் பூமியிலிருந்து அகற்றட்டும். \b \q1 \v 16 ஏனெனில் அவன் ஒருபோதும் நன்மை செய்வதைப்பற்றி நினைத்ததில்லை; \q2 மாறாக ஏழைகளையும், எளியவர்களையும், \q2 உள்ளம் உடைந்தவர்களையும் கொலைசெய்யத் தேடினான். \q1 \v 17 சாபம் இடுவதையே அவன் விரும்பினான்; \q2 அவன் இட்ட சாபம் அவன் மேலேயே வருவதாக; \q1 ஆசீர்வதிப்பதை அவன் விரும்பவில்லை, \q2 ஆசீர்வாதம் அவனுக்குத் தூரமாவதாக. \q1 \v 18 அவன் சாபத்தையே தன் உடையாக அணிந்துகொண்டான்; \q2 அது அவன் உடலுக்குள் தண்ணீரைப்போலவும், \q2 அவன் எலும்புகளுக்குள் எண்ணெயைப்போலவும் புகுந்தது. \q1 \v 19 சாபம் அவனைப் போர்த்தும் மேலங்கியைப்போல் இருப்பதாக; \q2 அது அவனைச்சுற்றி கட்டப்பட்ட இடைக்கச்சையைப் போலவும் எப்போதும் இருப்பதாக. \q1 \v 20 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கும், \q2 என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசுகிறவர்களுக்கும் \q2 இதுவே யெகோவாவினால் கொடுக்கப்படும் தண்டனையாய் இருப்பதாக. \b \q1 \v 21 ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, \q2 நீர் உமது பெயரினிமித்தம் என்னை நன்றாய் நடத்தும்; \q2 உமது அன்பின் நன்மையினிமித்தம் என்னை விடுவியும். \q1 \v 22 ஏனெனில் நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன், \q2 என் இருதயம் எனக்குள் காயப்பட்டிருக்கிறது. \q1 \v 23 நான் ஒரு மாலை நிழல்போல் மங்கிப்போகிறேன்; \q2 ஒரு வெட்டுக்கிளியைப்போல் உதறிப் போடப்படுகிறேன். \q1 \v 24 உபவாசத்தினால் என் முழங்கால்கள் சோர்ந்துபோகின்றன; \q2 என் உடல் மெலிந்து போயிருக்கிறது. \q1 \v 25 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு நான் ஓர் இகழ்ச்சிப் பொருளானேன்; \q2 அவர்கள் என்னைப் பார்க்கும்போது, ஏளனமாய் தங்கள் தலைகளை அசைக்கிறார்கள். \b \q1 \v 26 யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்; \q2 உமது அன்பின்படியே என்னைக் காப்பாற்றும். \q1 \v 27 யெகோவாவே, உமது கரமே அதைச் செய்தது என்றும், \q2 நீரே அதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறியட்டும். \q1 \v 28 அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் என்னை ஆசீர்வதிப்பீர்; \q2 அவர்கள் என்னைத் தாக்கும் வேளையில் அவர்கள் வெட்கத்திற்குட்படுவார்கள்; \q2 ஆனால் உமது அடியானாகிய நான் களிகூருவேன். \q1 \v 29 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் அவமானத்தால் மூடப்படுவார்கள்; \q2 ஓர் அங்கியினால் போர்த்தப்படுவதுபோல் அவர்கள் வெட்கத்தால் போர்த்தப்படுவார்கள். \b \q1 \v 30 நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்; \q2 பெருங்கூட்டத்தில் நான் அவரைத் துதிப்பேன். \q1 \v 31 ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்; \q2 அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்து \q2 அவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார். \c 110 \cl சங்கீதம் 110 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது: \b \q1 “நான் உமது பகைவரை \q2 உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை \q2 நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.” \b \q1 \v 2 யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்; \q2 “நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!” \q1 \v 3 உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில், \q2 தாங்களாகவே முன்வருவார்கள்; \q1 அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல் \q2 உமது வாலிபர்கள் \q2 பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள். \b \q1 \v 4 “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, \q2 நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்”\f + \fr 110:4 \fr*\ft \+xt எபி. 5:6\+xt*\ft*\f* \q1 என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்; \q2 அவர் தமது மனதை மாற்றமாட்டார். \b \q1 \v 5 யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்; \q2 அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார். \q1 \v 6 அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்; \q2 இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார். \q1 \v 7 வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்; \q2 ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார். \c 111 \cl சங்கீதம் 111 \q1 \v 1 அல்லேலூயா, \b \q1 நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும் \q2 நான் முழு இருதயத்தோடும் யெகோவாவைப் புகழ்வேன். \b \q1 \v 2 யெகோவாவின் செயல்கள் மகத்தானவை; \q2 அவைகளால் மகிழ்ச்சியடையும் எல்லோராலும் அவை சிந்திக்கப்படுகின்றன. \q1 \v 3 அவருடைய செயல்கள் மகிமையும், மகத்துவமுமானவை; \q2 அவருடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது. \q1 \v 4 அவர் தமது அதிசய செயல்களை நமது நினைவை விட்டு விலகாதபடிச் செய்திருக்கிறார்; \q2 யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவராய் இருக்கிறார். \q1 \v 5 அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்; \q2 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் வைத்திருக்கிறார். \b \q1 \v 6 அவர் பிற நாடுகளைத் தம் மக்களுக்குக் கொடுத்து, \q2 தமது வல்லமையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார். \q1 \v 7 அவருடைய கரங்களின் செயல்கள் உண்மையும் நீதியுமானவை; \q2 அவருடைய ஒழுங்குவிதிகள் அனைத்தும் நம்பத்தகுந்தவை. \q1 \v 8 அவை என்றென்றும் உறுதியானவை; \q2 உண்மையுடனும், நேர்மையுடனும் கொடுக்கப்பட்டவை. \q1 \v 9 அவர் தமது மக்களுக்கு மீட்பைக் கொடுத்தார்; \q2 அவர் தம் உடன்படிக்கையை என்றென்றுமாய் நியமித்திருக்கிறார்; \q2 பரிசுத்தமும் மற்றும் பயபக்தி என்பது அவருடைய பெயராயிருக்கிறது. \b \q1 \v 10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; \q2 அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு. \q2 நித்தியமான துதி அவருக்கே உரியது. \c 112 \cl சங்கீதம் 112 \q1 \v 1 அல்லேலூயா. \b \q1 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும், \q2 அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன். \b \q1 \v 2 அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்; \q2 நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். \q1 \v 3 செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்; \q2 அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது. \q1 \v 4 நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்; \q2 ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள். \q1 \v 5 தாராள மனதுடன் கடன்கொடுத்து, \q2 தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும். \b \q1 \v 6 நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்; \q2 நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள். \q1 \v 7 துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது; \q2 அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது. \q1 \v 8 அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது; \q2 கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான். \q1 \v 9 அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்; \q2 அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது; \q2 அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான். \b \q1 \v 10 கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்; \q2 அவன் தன் பற்களை கடித்துக்கொண்டு அழிந்துபோவான்; \q2 கொடுமையுள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறாமற் போகும். \c 113 \cl சங்கீதம் 113 \q1 \v 1 அல்லேலூயா, \b \q1 யெகோவாவின் பணியாட்களே, துதியுங்கள்; \q2 யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள். \q1 \v 2 யெகோவாவின் பெயர் இப்பொழுதும், \q2 எப்பொழுதும் துதிக்கப்படட்டும். \q1 \v 3 சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை \q2 யெகோவாவினுடைய பெயர் துதிக்கப்படட்டும். \b \q1 \v 4 யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்; \q2 அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாக இருக்கிறது. \q1 \v 5 நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு? \q2 உன்னதத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவரைப்போல் யார் உண்டு? \q1 \v 6 வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி \q2 தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு? \b \q1 \v 7 அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார், \q2 எளியவர்களைச் சாம்பற் குவியலில் இருந்து தூக்கிவிடுகிறார். \q1 \v 8 அவர் தமது மக்களைப் பிரபுக்களோடு அமரப்பண்ணுகிறார். \q1 \v 9 அவர் பிள்ளைப்பேறற்ற பெண்ணை பிள்ளைகளைப் பெறும் மகிழ்ச்சியுள்ள தாயாக்கி, \q2 அவளுடைய வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். \b \q1 அல்லேலூயா. \c 114 \cl சங்கீதம் 114 \q1 \v 1 இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, \q2 யாக்கோபின் குடும்பத்தார் வேறுநாட்டைச் சேர்ந்த மக்களிடமிருந்து வெளியே வந்தபோது, \q1 \v 2 யூதா, இறைவனின் பரிசுத்த இடமாயிற்று; \q2 இஸ்ரயேல் அவருடைய அரசாட்சி ஆயிற்று. \b \q1 \v 3 கடல் அவர்களைக் கண்டு ஓடி ஒதுங்கியது; \q2 யோர்தான் நதி அதின் வழியை மாற்றியது. \q1 \v 4 மலைகள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், \q2 குன்றுகள் ஆட்டுக்குட்டிகள்போலவும் துள்ளின. \b \q1 \v 5 கடலே, நீ விலகி ஒதுங்கியது ஏன்? \q2 யோர்தான் நதியே, நீ ஓடாமல் நின்றது ஏன்? \q1 \v 6 மலைகளே, நீங்கள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், \q2 குன்றுகளே, நீங்கள் செம்மறியாட்டுக் குட்டிகளைப் போலவும் துள்ளியது ஏன்? \b \q1 \v 7 பூமியே, யெகோவாவின் சமுகத்தில் நடுங்கு, \q2 யாக்கோபின் இறைவனின் சமுகத்தில் நடுங்கு. \q1 \v 8 அவர் கற்பாறையைக் குளமாகவும், \q2 கடினமான கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றினாரே. \c 115 \cl சங்கீதம் 11 5 \q1 \v 1 எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, \q2 உமது அன்பின் நிமித்தமும், \q2 உமது சத்தியத்தின் நிமித்தமும் உமது பெயருக்கே மகிமை உண்டாகட்டும். \b \q1 \v 2 பிற நாடுகளோ, “அவர்களுடைய இறைவன் எங்கே?” \q2 என்று ஏன் கேட்கிறார்கள். \q1 \v 3 நம்முடைய இறைவன் பரலோகத்தில் இருக்கிறார்; \q2 அவர் தமக்கு விருப்பமானதையே செய்கிறார். \q1 \v 4 ஆனால் பிற மக்களின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும், \q2 மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது. \q1 \v 5 அவைகளுக்கு வாய்கள் உண்டு, ஆனாலும் அவைகளால் பேசமுடியாது; \q2 கண்கள் உண்டு, அவைகளால் பார்க்க முடியாது. \q1 \v 6 அவைகளுக்குக் காதுகள் உண்டு, ஆனால் அவைகளால் கேட்கமுடியாது; \q2 மூக்கிருந்தும், அவைகளால் முகரமுடியாது. \q1 \v 7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொட்டுப் பார்க்க முடியாது; \q2 கால்கள் உண்டு, ஆனால் அவைகளால் நடக்க முடியாது; \q2 தங்கள் தொண்டைகளால் சத்தமிடக்கூட அவைகளால் முடியாது. \q1 \v 8 அவைகளைச் செய்கிறவர்களும், \q2 அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள். \b \q1 \v 9 இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்; \q2 அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார். \q1 \v 10 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்; \q2 அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார். \q1 \v 11 அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்; \q2 அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார். \b \q1 \v 12 யெகோவா நம்மை நினைவில் வைத்திருக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்; \q2 அவர் இஸ்ரயேலின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்; \q2 அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். \q1 \v 13 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற \q2 பெரியோரையும், சிறியோரையும் அவர் ஆசீர்வதிப்பார். \b \q1 \v 14 யெகோவா உங்களைப் பெருகப்பண்ணுவாராக, \q2 உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பெருகப்பண்ணுவாராக. \q1 \v 15 வானத்தையும் பூமியையும் படைத்தவராகிய \q2 யெகோவாவினால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக. \b \q1 \v 16 மிக உயர்ந்த வானங்கள் யெகோவாவினுடையவை; \q2 பூமியையோ அவர் மனிதனுக்குக் கொடுத்திருக்கிறார். \q1 \v 17 இறந்தவர்கள் யெகோவாவைத் துதிப்பதில்லை, \q2 மரணத்தின் மவுனத்தில் இறங்குகிறவர்களும் துதியார்கள். \q1 \v 18 இன்றுமுதல் என்றைக்கும் யெகோவாவைத் துதிப்போம். \q2 யெகோவாவுக்குத் துதி. \b \q1 அல்லேலூயா. \c 116 \cl சங்கீதம் 11 6 \q1 \v 1 நான் யெகோவாவிடம் அன்பாயிருக்கிறேன், ஏனெனில் அவர் என் குரலைக் கேட்டார்; \q2 இரக்கத்திற்காக நான் கதறியதை அவர் கேட்டார். \q1 \v 2 அவர் எனக்குச் செவிகொடுத்தபடியால், \q2 நான் என் வாழ்நாளெல்லாம் அவரை வழிபடுவேன். \b \q1 \v 3 மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன; \q2 பாதாளத்தின் வேதனைகள் என்மீது வந்தன; \q2 கஷ்டமும் கவலையும் என்னை மேற்கொண்டன. \q1 \v 4 அப்பொழுது நான் யெகோவாவின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டுச் சொன்னதாவது: \q2 “யெகோவாவே, என்னைக் காப்பாற்றும்!” \b \q1 \v 5 யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர்; \q2 நம்முடைய இறைவன் கருணை நிறைந்தவர். \q1 \v 6 யெகோவா கற்றுக்கொள்ளவிருக்கும் இருதயமுள்ளவர்களைப் பாதுகாக்கிறார்; \q2 நான் தாழ்த்தப்பட்டபோது, அவர் என்னை இரட்சித்தார். \b \q1 \v 7 என் ஆத்துமாவே, மீண்டும் நீ இளைப்பாறு; \q2 யெகோவா உனக்கு எவ்வளவு நல்லவராய் இருக்கிறார். \b \q1 \v 8 யெகோவாவே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து விடுவித்தீர்; \q2 என் கண்களைக் கண்ணீர் சிந்துவதிலிருந்தும், \q2 என் கால்களை இடறுவதிலிருந்தும் விடுவித்தீர். \q1 \v 9 நான் உயிருள்ளோரின் நாட்டிலே \q2 யெகோவாவுக்கு முன்பாக நடப்பேன். \b \q1 \v 10 “நான் மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன்” என்று நான் சொன்னபோதிலும், \q2 நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன். \q1 \v 11 ஆனாலும் என் மனச்சோர்வினாலே, \q2 “எல்லா மனிதரும் பொய்யர்” என்று நான் சொன்னேன். \b \q1 \v 12 யெகோவா எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும் பதிலாக, \q2 நான் அவருக்கு எதைத்தான் கொடுப்பேன்? \b \q1 \v 13 நான் இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திக்கொண்டு\f + \fr 116:13 \fr*\ft என்னை விடுவித்த யெகோவாவுக்கு பானபலி செலுத்துவேன்.\ft*\f* \q2 யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன். \q1 \v 14 நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக் கடன்களை \q2 அவருடைய மக்கள் எல்லாருக்கும் முன்பாக நிறைவேற்றுவேன். \b \q1 \v 15 யெகோவாவினுடைய பரிசுத்தவான்களின் மரணம் \q2 அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றது. \q1 \v 16 யெகோவாவே, உண்மையாகவே நான் உமது பணியாளனாய் இருக்கிறேன்; \q2 நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாய் இருக்கிறேன்; \q2 என்னைக் கட்டியிருந்த சங்கிலியிலிருந்து நீர் என்னை விடுதலையாக்கினீர். \b \q1 \v 17 நான் உமக்கு ஒரு நன்றிக் காணிக்கையைப் பலியிட்டு, \q2 யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன். \q1 \v 18 நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக்கடனை, \q2 அவருடைய மக்கள் எல்லோருக்கும் சமுகத்தில் நிறைவேற்றுவேன். \q1 \v 19 எருசலேமே உன் நடுவில் \q2 யெகோவாவினுடைய ஆலய முற்றங்களில், நான் எனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவேன். \b \q1 அல்லேலூயா. \c 117 \cl சங்கீதம் 117 \q1 \v 1 நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்; \q2 மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள். \q1 \v 2 ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது; \q2 யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். \b \q1 யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா. \c 118 \cl சங்கீதம் 118 \q1 \v 1 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; \q2 அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \b \q1 \v 2 “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று \q2 இஸ்ரயேலர் சொல்வார்களாக. \q1 \v 3 “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று \q2 ஆரோன் குடும்பத்தவரான ஆசாரியர்கள் சொல்வார்களாக. \q1 \v 4 “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று \q2 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் சொல்வார்களாக. \b \q1 \v 5 நான் நெருக்கத்திலிருந்து யெகோவாவைக் கூப்பிட்டேன் எனக்குப் பதிலளித்து, \q2 விசாலமான இடத்தில் என்னை நடத்தினார். \q1 \v 6 யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; \q2 மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்? \q1 \v 7 யெகோவா என்னோடு இருக்கிறார், அவரே என் உதவியாளர்; \q2 என்னைப் பகைக்கிறவர்களுக்கு நேரிடுவதை நான் காண்பேன். \b \q1 \v 8 மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், \q2 யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே மேலானது. \q1 \v 9 அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், \q2 யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே சிறந்தது. \q1 \v 10 எல்லா மக்களும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; \q2 ஆனாலும் யெகோவாவின் பெயரில் நான் அவர்களை மேற்கொண்டேன். \q1 \v 11 அவர்கள் எல்லாப் பக்கங்களிலும் என்னை வளைத்துக்கொண்டார்கள்; \q2 ஆனாலும் யெகோவாவின் பெயரிலேயே நான் அவர்களை மேற்கொண்டேன். \q1 \v 12 அவர்கள் தேனீக்களைப்போல என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; \q2 ஆனாலும் அவர்கள் எரியும் முட்செடிகளைப்போல் விரைவாக மறைந்துபோனார்கள்; \q2 யெகோவாவின் பெயரால் நான் அவர்களை மேற்கொண்டேன். \q1 \v 13 நான் பின்னோக்கித் தள்ளப்பட்டு, விழப்போனேன்; \q2 ஆனால் யெகோவாவோ எனக்கு உதவி செய்தார். \q1 \v 14 யெகோவா என் பெலமும், என் பாடலுமாய் இருக்கிறார்; \q2 அவரே எனக்கு இரட்சிப்புமானார். \b \q1 \v 15 நீதிமான்களின் கூடாரங்களில், \q2 வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் திரும்பத்திரும்ப ஒலிக்கின்றன: \q1 “யெகோவாவின் வலதுகரம் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறது. \q2 \v 16 யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; \q2 யெகோவாவின் வலதுகரம் வல்லமையான காரியங்களைச் செய்திருக்கிறது.” \q1 \v 17 நான் வாழுவேன், சாகமாட்டேன். \q2 நான் வாழ்ந்து யெகோவா செய்தவற்றை அறிவிப்பேன். \q1 \v 18 யெகோவா என்னைக் கடுமையாகத் தண்டித்தார், \q2 ஆனாலும் அவர் என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கவில்லை. \q1 \v 19 நீதியின் வாசல்களை\f + \fr 118:19 \fr*\fq நீதியின் வாசல்களை \fq*\ft அல்லது \ft*\fqa இறைவனுடைய மக்கள் செல்லும் ஆலய வாசல்.\fqa*\f* எனக்காகத் திறவுங்கள்; \q2 நான் உள்ளே சென்று யெகோவாவுக்கு நன்றி செலுத்துவேன். \q1 \v 20 இதுவே யெகோவாவின் வாசல்; \q2 நீதிமான்கள் அதின் உள்ளே செல்வார்கள். \q1 \v 21 நீர் எனக்குப் பதிலளித்தபடியால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; \q2 என் இரட்சிப்பு நீரே. \b \q1 \v 22 வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல்லே \q2 மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. \q1 \v 23 யெகோவாவே இதைச் செய்தார், \q2 இது நமது கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. \q1 \v 24 யெகோவா உண்டாக்கின நாள் இதுவே; \q2 இதிலே நாம் மகிழ்ந்து களிகூருவோம். \b \q1 \v 25 யெகோவாவே, எங்களை இரட்சியும்; \q2 யெகோவாவே, எங்களுக்கு வெற்றியைத் தாரும். \b \q1 \v 26 யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்; \q2 யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். \q1 \v 27 யெகோவாவே இறைவன், \q2 அவர் தமது ஒளியை நம்மேல் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்; \q1 பண்டிகை பலியைக் கையில் எடுத்துக்கொண்டு, \q2 பலிபீடத்தின் கொம்புகளில் கயிற்றைக் கட்டி \q2 ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள். \b \q1 \v 28 நீரே என் இறைவன், நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; \q2 நீரே என் இறைவன், நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன். \b \q1 \v 29 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; \q2 அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \c 119 \cl சங்கீதம் 119 \qa א ஆலெப் \q1 \v 1 குற்றமற்றவர்களாய் வாழ்ந்து, \q2 யெகோவாவினுடைய சட்டத்தின்படி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். \q1 \v 2 அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு, \q2 தங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். \q1 \v 3 அவர்கள் தவறு செய்யாமல் \q2 அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். \q1 \v 4 நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே \q2 நீர் அவைகளைக் கொடுத்தீர். \q1 \v 5 ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி, \q2 என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும். \q1 \v 6 உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது, \q2 நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன். \q1 \v 7 உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, \q2 நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன். \q1 \v 8 நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்; \q2 என்னை முற்றிலும் கைவிடாதேயும். \qa ב பேத் \q1 \v 9 வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்? \q2 உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே. \q1 \v 10 நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்; \q2 உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும். \q1 \v 11 நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி, \q2 உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன். \q1 \v 12 யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்; \q2 உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். \q1 \v 13 உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும் \q2 என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன். \q1 \v 14 ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல், \q2 நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன். \q1 \v 15 நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து, \q2 உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன். \q1 \v 16 நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்; \q2 உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன். \qa ג கிமெல் \q1 \v 17 உமது அடியேனுக்கு நன்மை செய்யும்; \q2 அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன். \q1 \v 18 உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி, \q2 என் கண்களைத் திறந்தருளும். \q1 \v 19 பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்; \q2 உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும். \q1 \v 20 உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால், \q2 என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது. \q1 \v 21 அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்; \q2 அவர்கள் உமது கட்டளைகளிலிருந்து விலகிப்போகிறவர்கள். \q1 \v 22 நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால், \q2 பிறரின் ஏளனத்தையும், அவமதிப்பையும் என்னிலிருந்து விலக்கும். \q1 \v 23 ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும், \q2 உமது அடியேன் உமது விதிமுறைகளையே தியானிப்பேன். \q1 \v 24 உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன; \q2 அவைகளே எனக்கு ஞானமுள்ள ஆலோசனையைத் தருகின்றன. \qa ד டாலெத் \q1 \v 25 நான் தூசியில் வீழ்ந்து கிடக்கிறேன்; \q2 உமது வார்த்தையின்படி என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும். \q1 \v 26 நான் என் வாழ்வின் வழிகளை உமக்கு விவரித்துச் சொன்னேன், \q2 நீர் எனக்குப் பதிலளித்தீர்; \q2 உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். \q1 \v 27 உமது ஒழுங்குவிதிகளின் அர்த்தத்தை எனக்கு விளங்கச்செய்யும்; \q2 அப்பொழுது நான் உம்முடைய அற்புதமான போதனைகளைத்\f + \fr 119:27 \fr*\fq போதனைகளை \fq*\ft அல்லது \ft*\fqa செயல்களை\fqa*\f* தியானிப்பேன். \q1 \v 28 என் ஆத்துமா துயரத்தால் இளைத்துப் போயிருக்கிறது; \q2 உமது வார்த்தையின்படி என்னைப் பெலப்படுத்தும். \q1 \v 29 என்னை ஏமாற்றும் வழிகளிலிருந்து காத்துக்கொள்ளும்; \q2 என்னில் கிருபையாயிருந்து, உமது சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். \q1 \v 30 மெய்வழியை நான் தேர்ந்தெடுத்தேன்; \q2 நான் உமது சட்டங்களின்படி வாழத் தீர்மானித்திருக்கிறேன். \q1 \v 31 யெகோவாவே, உமது நியமங்களை நான் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறேன்; \q2 என்னை வெட்கப்பட விடாதேயும். \q1 \v 32 நீர் என் புரிந்துகொள்ளுதலை விரிவாக்கியிருக்கிறதினால், \q2 உமது கட்டளைகளின் பாதையிலேயே நான் ஓடுவேன். \qa ה ஹெ \q1 \v 33 யெகோவாவே, உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்; \q2 அப்பொழுது நான் அவைகளைக் கடைசிமட்டும் கைக்கொள்வேன். \q1 \v 34 விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்; \q2 அதினால் நான் உமது சட்டத்தைக் கைக்கொள்வேன். \q2 என் முழு இருதயத்தோடும் அதற்குக் கீழ்ப்படிவேன். \q1 \v 35 உமது கட்டளைகளின் பாதையில் என்னை நடத்தும்; \q2 ஏனெனில் அதில் நான் மகிழ்ச்சியைக் காண்கிறேன். \q1 \v 36 என் இருதயத்தைச் சுயலாபத்தின் பக்கம் சாயவிடாமல், \q2 உமது நியமங்களின் பக்கமாய்த் திருப்பும். \q1 \v 37 பயனற்ற காரியங்களிலிருந்து என் கண்களைத் திருப்பும்; \q2 உமது வார்த்தையின்படியே என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும். \q1 \v 38 உமக்குப் பயந்து நடக்கும்படி நீர் கொடுத்த வாக்குத்தத்தத்தை \q2 உமது அடியேனாகிய எனக்கு நிறைவேற்றும். \q1 \v 39 நான் பயப்படுகின்ற அவமானத்தை என்னைவிட்டு அகற்றும்; \q2 ஏனெனில், உமது சட்டங்கள் நல்லவை. \q1 \v 40 நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் விரும்புகிறேன்! \q2 உமது நியாயத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். \qa ו வெள \q1 \v 41 யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பும், \q2 உம்முடைய வாக்குத்தத்தத்தின்படி உமது இரட்சிப்பும் எனக்குக் கிடைப்பதாக; \q1 \v 42 அப்பொழுது நான் என்னை நிந்திக்கிறவனுக்குப் பதில் சொல்வேன்; \q2 ஏனெனில் நானோ உமது வார்த்தையிலேயே நம்பிக்கையை வைத்திருக்கிறேன். \q1 \v 43 சத்திய வார்த்தையை என் வாயிலிருந்து பறித்துக் கொள்ளாதிரும்; \q2 ஏனெனில், நான் உமது சட்டங்களிலேயே என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். \q1 \v 44 நான் எப்பொழுதும் \q2 உமது சட்டத்துக்குக் கீழ்ப்படிவேன். \q1 \v 45 உமது ஒழுங்குவிதிகளில் நடப்பதினால், \q2 நான் சுதந்திரமாக நடந்துவருவேன். \q1 \v 46 நான் அரசர்களுக்கு முன்பாக உமது நியமங்களைக் குறித்துப்பேசுவேன்; \q2 நான் வெட்கத்திற்கு உள்ளாகமாட்டேன். \q1 \v 47 ஏனெனில், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன், \q2 அவற்றில் மகிழ்ச்சியடைகிறேன். \q1 \v 48 நான் நேசிக்கும் உம்முடைய கட்டளைகளை மதிக்கிறேன்; \q2 உம்முடைய விதிமுறைகளைத் தியானிப்பேன். \qa ז சயின் \q1 \v 49 உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வார்த்தையை நினைவிற்கொள்ளும்; \q2 அதினால் எனக்கு நம்பிக்கையை தந்திருக்கிறீர். \q1 \v 50 இதுவே என் துன்பத்தில் எனக்கு ஆறுதல்: \q2 உம்முடைய வாக்குத்தத்தம் என் வாழ்வைக் காத்துக்கொள்வது. \q1 \v 51 அகங்காரம் கொண்டவர்கள் தயக்கமின்றி என்னை ஏளனம் செய்கிறார்கள்; \q2 ஆனாலும் நான் உமது சட்டத்திலிருந்து விலகுவதில்லை. \q1 \v 52 யெகோவாவே, உமது பூர்வகாலத்து சட்டங்களை நான் நினைவிற்கொள்கிறேன்; \q2 நான் அவைகளில் ஆறுதல் பெறுகிறேன். \q1 \v 53 உமது சட்டத்தைக் கைவிட்டுவிட்ட கொடியவர்களின் நிமித்தம், \q2 கடுங்கோபம் என்னைப் பற்றிக்கொள்கிறது. \q1 \v 54 நான் எங்கு தங்கினாலும், \q2 உமது விதிமுறைகளே எனது பாடலின் கருப்பொருளாயிற்று. \q1 \v 55 யெகோவாவே, இரவிலே நான் உமது பெயரை நினைவிற்கொண்டு, \q2 உமது சட்டத்தைக் கைக்கொள்வேன். \q1 \v 56 உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதே \q2 என் வழக்கமாயிற்று. \qa ח கேத் \q1 \v 57 யெகோவாவே, நீரே என் பங்கு; \q2 உமது வார்த்தைகளுக்கு நான் கீழ்ப்படிவதாக வாக்களித்திருக்கிறேன். \q1 \v 58 நான் என் முழு இருதயத்தோடும் உமது முகத்தைத் தேடியிருக்கிறேன்; \q2 உமது வாக்குத்தத்தத்தின்படி என்மீது கிருபையாயிரும். \q1 \v 59 நான் என் வாழ்வின் பாதையை சிந்தித்து, \q2 உம்முடைய நியமங்களைப் பின்பற்ற முடிவு செய்துள்ளேன். \q1 \v 60 உமது கட்டளைகளுக்கு விரைவாய்க் கீழ்ப்படிவேன், \q2 தாமதிக்கமாட்டேன். \q1 \v 61 கொடியவர்கள் என்னைக் கயிறுகளினால் கட்டினாலும், \q2 நான் உமது சட்டத்தை மறவேன். \q1 \v 62 உமது நியாயமான சட்டங்களுக்காக உமக்கு நன்றி செலுத்தும்படி, \q2 நான் நள்ளிரவில் விழித்தெழுகிறேன். \q1 \v 63 உமக்குப் பயந்து நடக்கிற, \q2 உமது ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுகிற எல்லோருக்கும் நான் நண்பனாய் இருக்கிறேன். \q1 \v 64 யெகோவாவே, பூமி உமது அன்பினால் நிறைந்திருக்கிறது; \q2 உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். \qa ט தேத் \q1 \v 65 யெகோவாவே, உம்முடைய வார்த்தையின்படி \q2 உமது அடியேனுக்கு நன்மை செய்யும். \q1 \v 66 உம்முடைய கட்டளைகளை நான் நம்புவதால், \q2 அறிவையும் நல்ல நிதானிப்பையும் எனக்குப் போதியும். \q1 \v 67 நான் துன்பப்படுவதற்கு முன்பு வழிவிலகிப் போனேன், \q2 ஆனால் இப்பொழுதோ உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறேன். \q1 \v 68 நீர் நல்லவர், நீர் நன்மையானதையே செய்கிறீர்; \q2 உம்முடைய விதிமுறைகளை எனக்குப் போதியும். \q1 \v 69 அகங்காரம் கொண்டவர்கள் என்னைப்பற்றிப் பொய்களைப் பரப்பினார்கள், \q2 ஆனாலும் நான் முழு இருதயத்தோடும், உம்முடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொள்கிறேன். \q1 \v 70 அவர்களுடைய இருதயங்கள் கடினமானவைகளும், உணர்வற்றவைகளுமாய் இருக்கின்றன; \q2 நானோ உம்முடைய சட்டத்தில் மகிழ்கிறேன். \q1 \v 71 நான் துன்பப்பட்டது எனக்கு நன்மையாகவே இருந்தது; \q2 அதினால் நான் உம்முடைய விதிமுறைகளைக் கற்றுக்கொள்கிறேன். \q1 \v 72 ஆயிரமாயிரமான பொன் வெள்ளியைப் பார்க்கிலும், \q2 உம்முடைய வாயிலிருந்து வருகிற சட்டம் எனக்கு அதிக விலையேறப்பெற்றது. \qa י யோத் \q1 \v 73 உம்முடைய கரங்கள் என்னைப் படைத்து உருவாக்கின; \q2 உம்முடைய கட்டளைகளைக் கற்று விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும். \q1 \v 74 நான் உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறபடியால், \q2 உமக்குப் பயந்து நடப்பவர்கள் என்னைக் காணும்போது, மகிழ்ச்சியடைவார்களாக. \q1 \v 75 யெகோவாவே, உமது சட்டங்கள் நியாயமானவை என்பதை நான் அறிவேன்; \q2 நீர் என்னைத் துன்பப்படுத்தியது சரிதான். \q1 \v 76 நீர் உம்முடைய அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, \q2 உம்முடைய உடன்படிக்கையின் அன்பு என்னைத் தேற்றுவதாக. \q1 \v 77 நான் வாழ்வடையும்படி உம்முடைய கருணை எனக்குக் கிடைக்கட்டும்; \q2 உமது சட்டம் என் மனமகிழ்ச்சி. \q1 \v 78 காரணமின்றி எனக்கு அநியாயம் செய்யும் \q2 அகங்காரம் கொண்டவர்கள் வெட்கம் அடைவார்களாக; \q2 நானோ, உம்முடைய ஒழுங்குவிதிகளைத் தியானிப்பேன். \q1 \v 79 உமது நியமங்களை விளங்கிக்கொண்டு, \q2 உமக்குப் பயந்து நடக்கிறவர்கள் என் பக்கம் திரும்பட்டும். \q1 \v 80 நான் வெட்கப்பட்டுப் போகாதபடி என் இருதயம் \q2 உம்முடைய விதிமுறைகளைக் குறித்து குற்றமற்றதாய் இருக்கட்டும். \qa כ காஃப் \q1 \v 81 உம்முடைய இரட்சிப்பின் மேலுள்ள வாஞ்சையினால் என் ஆத்துமா ஏங்குகிறது; \q2 நான் உமது வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன். \q1 \v 82 உம்முடைய வாக்குத்தத்தத்திற்காக காத்திருந்து, என் கண்கள் மங்கிப்போகின்றன; \q2 “நீர் என்னை எப்பொழுது தேற்றுவீர்?” என்று கேட்க விரும்புகிறேன். \q1 \v 83 நான் புகைக்குள்ளிருந்து சுருங்கிப்போகும் \q2 திராட்சைக் குடுவையைப்போல் இருந்தாலும், \q2 உமது விதிமுறைகளை மறவாமல் இருக்கிறேன். \q1 \v 84 உமது அடியேன் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்கவேண்டும்? \q2 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களை நீர் எப்பொழுது தண்டிப்பீர்? \q1 \v 85 அகங்காரம் கொண்டவர்கள் நான் விழுவதற்குக் குழி தோண்டுகிறார்கள்; \q2 அது உமது சட்டத்திற்கு முரணானது. \q1 \v 86 உம்முடைய கட்டளைகளெல்லாம் நம்பத்தகுந்தவை; \q2 காரணமின்றி மனிதர் என்னைத் துன்பப்படுத்துவதால், எனக்கு உதவிசெய்யும். \q1 \v 87 அவர்கள் என்னைப் பூமியிலிருந்து ஏறக்குறைய அழித்துவிட்டார்கள்; \q2 ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைவிடவில்லை. \q1 \v 88 உம்முடைய உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்\f + \fr 119:88 \fr*\fq காத்துக்கொள்ளும் \fq*\ft அல்லது \ft*\fqa உயிர்வாழச் செய்யும்.\fqa*\f*, \q2 அதினால் நான் உமது வாயின் நியமங்களுக்குக் கீழ்ப்படிவேன். \qa ל லாமேத் \q1 \v 89 யெகோவாவே, உம்முடைய வார்த்தை நித்தியமானது; \q2 அது வானங்களில் உறுதியாய் நிற்கின்றது. \q1 \v 90 உம்முடைய சத்தியம் தலைமுறை தலைமுறைக்கும் தொடர்கிறது; \q2 நீர் பூமியை நிலைநிறுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. \q1 \v 91 உம்முடைய சட்டங்கள் இன்றுவரை நிலைத்திருக்கின்றன; \q2 ஏனெனில் எல்லாம் உமக்குப் பணி செய்கின்றன. \q1 \v 92 உம்முடைய சட்டம் என் மனமகிழ்ச்சியாய் இராதிருந்தால், \q2 நான் என் துன்பத்திலே அழிந்து போயிருப்பேன். \q1 \v 93 நான் உமது ஒழுங்குவிதிகளை ஒருபோதும் மறவேன்; \q2 ஏனெனில் அவைகளால் நீர் என் வாழ்வைக் காத்துக்கொண்டீர். \q1 \v 94 நான் உம்முடையவனாய் இருப்பதால் என்னைக் காப்பாற்றும்; \q2 நான் உம்முடைய ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிய முயற்சித்தேன். \q1 \v 95 கொடியவர்கள் என்னை அழிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்; \q2 ஆனாலும் நான் உமது நியமங்களை ஆழ்ந்து சிந்திப்பேன். \q1 \v 96 பரிபூரணத்திற்கும் ஓர் எல்லையை நான் காண்கிறேன்; \q2 ஆனால் உமது கட்டளைகளோ எல்லையற்றவை. \qa מ மேம் \q1 \v 97 ஆ, உமது சட்டத்தை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்! \q2 நாள்முழுவதும் நான் அதை தியானிக்கிறேன். \q1 \v 98 உமது கட்டளைகள் எப்பொழுதும் என்னுடன் இருப்பதால், \q2 அவை எனது பகைவரைப் பார்க்கிலும், என்னை ஞானியாக்கியது. \q1 \v 99 நான் உமது நியமங்களைத் தியானிப்பதினால், \q2 எனது ஆசிரியர்கள் எல்லோரைப் பார்க்கிலும் நான் அதிக அறிவுள்ளவனாக இருக்கிறேன். \q1 \v 100 நான் உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதினால், \q2 முதியவர்களைவிட அதிக புரிந்துகொள்ளுதல் உள்ளவனாயிருக்கிறேன். \q1 \v 101 உமது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படி நான் என் நடைகளை, \q2 எல்லாத் தீய வழிகளிலுமிருந்து விலக்கிக் காத்துக்கொண்டேன்; \q1 \v 102 நான் உமது சட்டங்களைவிட்டு விலகிப் போகாமலிருக்கிறேன்; \q2 ஏனெனில் நீர் தாமே அவைகளை எனக்கு போதித்திருக்கிறீர். \q1 \v 103 உமது வார்த்தைகள் எனக்கு எவ்வளவு இனிமையானவை! \q2 என் வாய்க்கு அவை தேனைவிட இனிமையானவை. \q1 \v 104 உமது ஒழுங்குவிதிகளால் நான் விளங்கும் ஆற்றலைப் பெறுகிறேன்; \q2 ஆகவே எல்லாத் தவறான வழிகளையும் நான் வெறுக்கிறேன். \qa נ நூன் \q1 \v 105 உமது வார்த்தை எனது கால்களுக்கு விளக்காகவும் \q2 என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது. \q1 \v 106 உமது நீதியான சட்டங்களை நான் பின்பற்றுவேன் என்று \q2 நான் ஒரு சத்தியப் பிரமாணம் எடுத்தேன்; \q2 அதை உறுதிப்படுத்தியும் இருக்கிறேன். \q1 \v 107 நான் அதிகமாய் துன்பமடைந்திருக்கிறேன்; \q2 யெகோவாவே, உமது வார்த்தையின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். \q1 \v 108 யெகோவாவே, நான் மனப்பூர்வமாக செலுத்தும் என் வாயின் துதிகளை ஏற்றுக்கொள்ளும்; \q2 உமது நீதிநெறிகளை எனக்குப் போதியும். \q1 \v 109 என் உயிர் எப்போதும் ஆபத்தில் இருந்தாலும், \q2 உமது சட்டத்தையோ மறக்கமாட்டேன். \q1 \v 110 கொடியவர்கள் எனக்குக் கண்ணிவைத்தார்கள்; \q2 ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைவிட்டு விலகவில்லை. \q1 \v 111 உமது நியமங்களே என்றென்றுமாய் எனது பரம்பரைச் சொத்து; \q2 அவைகள் என் இருதயத்தின் மகிழ்ச்சி. \q1 \v 112 உமது விதிமுறைகளை கடைசிவரைக்கும் கைக்கொள்ள \q2 என் இருதயம் ஆயத்தமாய் இருக்கிறது. \qa ס சாமெக் \q1 \v 113 இருமனம் கொண்டவர்களை நான் வெறுக்கிறேன். \q2 நானோ உமது சட்டத்தை நேசிக்கிறேன். \q1 \v 114 நீரே என் புகலிடமும் என் கேடயமுமாய் இருக்கிறீர்; \q2 உமது வார்த்தையில் எனது நம்பிக்கையை வைத்திருக்கிறேன். \q1 \v 115 அக்கிரம செய்கைக்காரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள், \q2 நான் என் இறைவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்! \q1 \v 116 உமது வாக்குத்தத்தத்தின்படி என்னைக் காப்பாற்றும்; \q2 அப்பொழுது நான் வாழ்வடைவேன்; \q2 என் நம்பிக்கை வீண்போக விடாதேயும். \q1 \v 117 என்னைத் தாங்கிக்கொள்ளும். அப்பொழுது நான் விடுவிக்கப்படுவேன்; \q2 நான் எப்பொழுதும் உமது விதிமுறைகளை மதிப்பேன். \q1 \v 118 உமது விதிமுறைகளிலிருந்து விலகிப்போகிற \q2 எல்லோரையும் நீர் புறக்கணிக்கிறீர். \q2 அவர்களுடைய வஞ்சனை வெறுமையானது. \q1 \v 119 பூமியிலுள்ள கொடியவர்கள் அனைவரையும் நீர் களிம்பைப்போல் நீக்கிவிடுகிறீர்; \q2 ஆகையால் நான் உமது நியமங்களை நேசிக்கிறேன். \q1 \v 120 உம் மீதுள்ள பயபக்தியால் எனது தசை நடுங்குகிறது; \q2 நான் உமது சட்டங்களுக்குப் பயப்படுகிறேன். \qa ע அயின் \q1 \v 121 நான் நியாயமும், நீதியுமானதைச் செய்திருக்கிறேன்; \q2 என்னை ஒடுக்குகிறவர்களிடத்தில் என்னை விட்டுவிடாதேயும். \q1 \v 122 உமது பணியாளனின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும்; \q2 அகந்தையுள்ளவர்கள் என்னை ஒடுக்குவதற்கு இடமளியாதேயும். \q1 \v 123 உமது இரட்சிப்பைக் காண்பதற்கும், \q2 உமது நீதியான வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கும் காத்திருந்து, \q2 என் கண்கள் மங்கிப்போகின்றன. \q1 \v 124 உமது உடன்படிக்கையின் அன்பின்படியே உமது அடியேனுக்கு செய்தருளி, \q2 உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். \q1 \v 125 நான் உமது பணியாளன்; \q2 உமது நியமங்களை விளங்கிக்கொள்ளும்படி எனக்கு பகுத்தறிவைத் தாரும். \q1 \v 126 யெகோவாவே, நீர் செயலாற்றும் வேளை வந்தது; \q2 உமது சட்டம் மீறப்பட்டுவிட்டது. \q1 \v 127 உமது கட்டளைகளை தங்கத்தைவிட, \q2 சுத்தத் தங்கத்தைவிட அதிகமாய் விரும்புகிறதினாலும், \q1 \v 128 உமது ஒழுங்குவிதிகளெல்லாம் நியாயமானவை என்று நான் எண்ணுவதாலும், \q2 நான் தவறான வழிகளையெல்லாம் வெறுக்கிறேன். \qa פ பெ \q1 \v 129 உமது நியமங்கள் ஆச்சரியமானவை, \q2 ஆகையால் நான் அவைகளுக்குக் கீழ்ப்படிகிறேன். \q1 \v 130 உமது வார்த்தைகளின் வெளிப்படுத்தல் வெளிச்சத்தைக் கொடுக்கின்றன; \q2 அவை எளியவர்களுக்கு புரிந்துகொள்ளும் ஆற்றலைக் கொடுக்கின்றன. \q1 \v 131 நான் உமது கட்டளைகளை விரும்பி, \q2 என் வாயைத் திறந்தவன்னம் ஏங்குகிறேன். \q1 \v 132 உமது பெயரை நேசிக்கிறவர்களுக்கு நீர் எப்பொழுதும் செய்கிறபடியே, \q2 என் பக்கம் திரும்பி என்மேல் இரக்கமாயிரும். \q1 \v 133 உமது வார்த்தையின்படியே என் காலடிகளை வழிநடத்தி, \q2 ஒரு பாவமும் என்னை ஆளுகைசெய்ய விடாதேயும். \q1 \v 134 மனிதரின் அடக்கு முறையிலிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்; \q2 அதினால் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைக்கொள்வேன். \q1 \v 135 உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்; \q2 உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். \q1 \v 136 மனிதர் உமது சட்டத்திற்குக் கீழ்ப்படியாதபடியால், \q2 எனது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்கிறது. \qa צ த்சாதெ \q1 \v 137 யெகோவாவே, நீர் நீதியுள்ளவர்; \q2 உமது சட்டங்கள் நியாயமானவை. \q1 \v 138 நீர் ஏற்படுத்திய நியமங்கள் நீதியானவை; \q2 அவை முற்றும் நம்பத்தகுந்தவை. \q1 \v 139 என் பகைவர்கள் உமது வார்த்தைகளை உதாசீனம் செய்வதால், \q2 எனது தீவிர ஆர்வம் என்னை சுட்டெரிக்கிறது. \q1 \v 140 உமது வாக்குத்தத்தங்கள் முற்றிலும் சோதித்து நிரூபிக்கப்பட்டிருக்கின்றன; \q2 உமது அடியேன் அவற்றை நேசிக்கிறேன். \q1 \v 141 நான் அற்பமானவனும் வெறுக்கப்பட்டவனுமாய் இருந்தாலும், \q2 உமது ஒழுங்குவிதிகளை நான் மறக்கமாட்டேன். \q1 \v 142 உமது நீதி நித்தியமானது, \q2 உமது சட்டம் உண்மையானது. \q1 \v 143 கஷ்டமும் துன்பமும் என்மேல் வந்தன; \q2 ஆனாலும், உமது கட்டளைகள் என் மகிழ்ச்சியாய் இருக்கின்றன. \q1 \v 144 உமது நியமங்கள் என்றென்றும் நீதியானவை; \q2 அவற்றை விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும், அதினால் நான் பிழைப்பேன். \qa ק கோஃப் \q1 \v 145 யெகோவாவே, என் முழு இருதயத்துடனும் கூப்பிடுகிறேன்; \q2 எனக்குப் பதில் தாரும், \q2 நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன். \q1 \v 146 நான் உம்மைக் கூப்பிடுகிறேன், என்னைக் காப்பாற்றும்; \q2 நான் உமது நியமங்களைக் கைக்கொள்வேன். \q1 \v 147 விடிகிறதற்கு முன்னே நான் எழுந்து உதவிக்காகக் கூப்பிடுகிறேன்; \q2 உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன். \q1 \v 148 உமது வாக்குத்தத்தங்களை நான் தியானிக்கும்படி, \q2 இராமுழுவதும் என் கண்கள் விழித்திருக்கின்றன. \q1 \v 149 நீர் என்மீது உடன்படிக்கையின் அன்புகூறுகிறபடியால் என் குரலைக் கேளும்; \q2 யெகோவாவே, உமது சட்டங்களின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். \q1 \v 150 கொடுமையான திட்டங்களைத் தீட்டுகிறவர்கள் எனக்கு அருகே இருக்கிறார்கள்; \q2 ஆனால், அவர்கள் உமது சட்டத்திற்குத் தூரமாய் இருக்கிறார்கள். \q1 \v 151 என்றாலும் யெகோவாவே, நீர் அருகே இருக்கிறீர்; \q2 உமது கட்டளைகள் எல்லாம் உண்மை. \q1 \v 152 உமது நியமங்கள் நித்தியமாய் இருக்க நீர் அவைகளை நிலைநாட்டினீர் என்பதை \q2 வெகுகாலத்திற்கு முன்பே நான் அறிந்திருக்கிறேன். \qa ר ரேஷ் \q1 \v 153 என் வேதனையைப் பார்த்து என்னை விடுவியும்; \q2 ஏனெனில், நான் உமது சட்டத்தை மறந்துவிடவில்லை. \q1 \v 154 எனக்காக வாதாடி என்னை மீட்டுக்கொள்ளும்; \q2 உமது வாக்குத்தத்தத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். \q1 \v 155 இரட்சிப்பு கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறதினால், \q2 அவர்கள் உமது விதிமுறைகளைத் தேடுவதில்லை. \q1 \v 156 யெகோவாவே, உமது இரக்கம் பெரிதானது; \q2 உமது சட்டங்களின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். \q1 \v 157 என்னை உபத்திரவப்படுத்துகிற எதிரிகள் அநேகராயிருக்கிறார்கள்; \q2 ஆனாலும் நான் உம்முடைய நியமங்களை விட்டு விலகவில்லை. \q1 \v 158 துரோகிகளை நான் அருவருப்புடன் பார்க்கிறேன்; \q2 ஏனெனில் அவர்கள் உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறதில்லை. \q1 \v 159 நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் நேசிக்கிறேனென்று பாரும்; \q2 யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். \q1 \v 160 உமது வார்தைகள் எல்லாம் உண்மையானவை; \q2 நீதியான உமது சட்டங்கள் எல்லாம் நித்தியமானவை. \qa ש ஷீன் \q1 \v 161 ஆட்சியாளர்கள் காரணமில்லாமல் என்னை உபத்திரவப்படுத்துகிறார்கள்; \q2 ஆனாலும் என் இருதயம் உமது வார்த்தைக்கு நடுங்குகிறது. \q1 \v 162 பெரும் கொள்ளைப்பொருளைக் கண்டுபிடித்து மகிழ்வதுபோல், \q2 உமது வாக்குத்தத்தத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். \q1 \v 163 நான் பொய்யை வெறுத்து அருவருக்கிறேன்; \q2 ஆனால் உமது சட்டத்தையோ நான் நேசிக்கிறேன். \q1 \v 164 நீதியான உமது சட்டங்களுக்காக \q2 நான் ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன். \q1 \v 165 உமது சட்டத்தை நேசிக்கிறவர்களுக்குப் பெரிதான சமாதானம் உண்டு; \q2 அவர்களுக்கு இடறலில்லை. \q1 \v 166 யெகோவாவே, உமது இரட்சிப்புக்காக நான் காத்திருக்கிறேன்; \q2 உமது கட்டளைகளை நான் பின்பற்றுகிறேன். \q1 \v 167 நான் உமது நியமங்களுக்குக் கீழ்ப்படிகிறேன்; \q2 ஏனெனில் நான் அவற்றை அதிகமாய் நேசிக்கிறேன். \q1 \v 168 நான் உமது ஒழுங்குவிதிகளுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிகிறேன்; \q2 எனது எல்லா செயல்களும் உமக்குத் தெரிந்திருக்கின்றன. \qa ת தெள \q1 \v 169 யெகோவாவே, எனது வேண்டுதலை நீர் கேட்பீராக; \q2 உமது வார்த்தையின்படியே எனக்கு விளங்கிக்கொள்ளும் ஆற்றலைத் தாரும். \q1 \v 170 என் விண்ணப்பத்தை நீர் கேட்பீராக; \q2 உமது வாக்குத்தத்தத்தின்படியே என்னை விடுவியும். \q1 \v 171 எனது உதடுகள் துதிகளினால் நிரம்பி வழிகிறது; \q2 ஏனெனில், நீர் உமது விதிமுறைகளை எனக்குப் போதிக்கிறீர். \q1 \v 172 எனது நாவு உமது வார்த்தையைக் குறித்துப் பாடட்டும்; \q2 ஏனெனில், உமது கட்டளைகள் எல்லாம் நியாயமானவை. \q1 \v 173 உமது கரம் எனக்கு உதவிசெய்ய ஆயத்தமாய் இருப்பதாக; \q2 ஏனெனில் நான் உமது ஒழுங்குவிதிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். \q1 \v 174 யெகோவாவே, நான் உமது இரட்சிப்புக்கு வாஞ்சையாயிருக்கிறேன்; \q2 உமது சட்டம் எனது மகிழ்ச்சி. \q1 \v 175 நான் உம்மைத் துதிக்கும்படி வாழ்ந்திருப்பேனாக; \q2 உமது சட்டங்கள் என்னைத் தாங்குவதாக. \q1 \v 176 காணாமற்போன ஆட்டைப்போல் நான் வழிவிலகிப் போய்விட்டேன்; \q2 உமது அடியேனைத் தேடுவீராக; \q2 ஏனெனில் நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை. \c 120 \cl சங்கீதம் 120 \d சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். \q1 \v 1 நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்; \q2 அவர் எனக்குப் பதிலளிக்கிறார். \q1 \v 2 யெகோவாவே, \q2 பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும், \q2 வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும். \b \q1 \v 3 வஞ்சக நாவே, \q2 இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன? \q2 அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்? \q1 \v 4 போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும், \q2 சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார். \b \q1 \v 5 ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே \q2 வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே; \q2 கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே! \q1 \v 6 சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில் \q2 நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று. \q1 \v 7 நான் சமாதானத்தை நாடுகிறேன்; \q2 அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள். \c 121 \cl சங்கீதம் 121 \d சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். \q1 \v 1 மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன். \q2 எங்கிருந்து எனக்கு உதவி வரும்? \q1 \v 2 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே, \q2 எனக்கு உதவி வரும். \b \q1 \v 3 அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்; \q2 உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார். \q1 \v 4 இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர், \q2 உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. \b \q1 \v 5 யெகோவா உன்னைக் காக்கிறவர்; \q2 யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். \q1 \v 6 பகலில் சூரியனோ, \q2 இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது. \b \q1 \v 7 யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்; \q2 அவர் உன் வாழ்வைக் காப்பார். \q1 \v 8 யெகோவா உன் போக்கையும் வரத்தையும் \q2 இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார். \c 122 \cl சங்கீதம் 122 \d சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். \q1 \v 1 “யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்” \q2 என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன். \q1 \v 2 எருசலேமே, எங்கள் கால்கள் \q2 உன் வாசல்களில் நிற்கின்றன. \b \q1 \v 3 நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல், \q2 எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது. \q1 \v 4 யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு, \q2 கோத்திரங்கள் அங்கு போவார்கள்; \q1 இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்தின்படி, \q2 யெகோவாவினுடைய கோத்திரங்கள் அங்கு போவார்கள். \q1 \v 5 தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன; \q2 அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள். \b \q1 \v 6 எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்: \q2 “உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள். \q1 \v 7 உன் மதில்களுக்குள் சமாதானமும், \q2 உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக.” \q1 \v 8 என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும் \q2 “உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் வாழ்த்துகிறேன். \q1 \v 9 எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால், \q2 நான் உன் செழிப்பைத் தேடுவேன். \c 123 \cl சங்கீதம் 123 \d சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். \q1 \v 1 பரலோகத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே, \q2 நான் உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தி மன்றாடுகிறேன். \q1 \v 2 அடிமைகளின் கண்கள் தங்கள் எஜமானுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும், \q2 அடிமைப்பெண்ணின் கண்கள் தன் எஜமாட்டியினுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும், \q1 எங்கள் கண்களும் எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கம் காண்பிக்கும்வரை, \q2 அவரையே நோக்கிப்பார்க்கின்றன. \b \q1 \v 3 எங்கள்மேல் இரக்கமாயிரும், யெகோவாவே, எங்கள்மேல் இரக்கமாயிரும்; \q2 அதிகமான அவமதிப்பை நாங்கள் சகித்துக்கொண்டோம். \q1 \v 4 பெருமைக்காரரின் ஏளனத்தையும், \q2 அகங்காரம் கொண்டவர்களின் அதிகமான அவமதிப்பையும் \q2 நாங்கள் சகித்துக்கொண்டோம். \c 124 \cl சங்கீதம் 124 \d சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். \q1 \v 1 யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், \q2 இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்: \q1 \v 2 மனிதர் நம்மை தாக்கும்போது \q2 யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால், \q1 \v 3 அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, \q2 அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே; \q1 \v 4 வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே, \q2 நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே, \q1 \v 5 பொங்கி வந்த வெள்ளம் \q2 நம்மீது பாய்ந்தோடியிருக்குமே. \b \q1 \v 6 அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத \q2 யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். \q1 \v 7 வேடனுடைய கண்ணியிலிருந்து \q2 தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்; \q1 கண்ணி அறுந்தது, \q2 நாம் தப்பினோம். \q1 \v 8 வானத்தையும் பூமியையும் படைத்தவரான \q2 யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு. \c 125 \cl சங்கீதம் 125 \d சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். \q1 \v 1 யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல் \q2 என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள். \q1 \v 2 மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல், \q2 யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும் \q2 தமது மக்களைச் சுற்றியிருக்கிறார். \b \q1 \v 3 நீதிமான்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்டின்மேல், \q2 கொடியவர்களின் ஆட்சி நீடிக்காது; \q1 இல்லையெனில், நீதியற்றவர்களும் தீமைசெய்யத் \q2 தங்கள் கைகளை நீட்டலாம். \b \q1 \v 4 யெகோவாவே, நல்லவர்களுக்கு, \q2 இருதயத்தில் நேர்மையாய் இருப்போருக்கு நன்மை செய்யும். \q1 \v 5 குறுக்கு வழிகளுக்குத் திரும்புகிறவர்களையோ, \q2 யெகோவா தீயவரோடேகூட தண்டிப்பார். \b \q1 இஸ்ரயேலின்மீது சமாதானம் உண்டாவதாக. \c 126 \cl சங்கீதம் 126 \d சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். \q1 \v 1 நாடு கடத்தப்பட்டவர்களை யெகோவா திரும்பவும் சீயோனுக்குக் கொண்டுவந்தபோது, \q2 நாங்கள் கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். \q1 \v 2 எங்கள் வாய்கள் சிரிப்பினாலும், \q2 எங்கள் நாவுகள் மகிழ்ச்சிப் பாடல்களினாலும் நிறைந்திருந்தன. \q1 அப்பொழுது, “யெகோவா அவர்களுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்” \q2 என்று நாடுகளுக்கிடையே சொல்லப்பட்டது. \q1 \v 3 யெகோவா நமக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்; \q2 அதினால் நாம் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கிறோம். \b \q1 \v 4 யெகோவாவே, நீரோடைகள் நெகேவ் பாலைவனத்தை புதுப்பிப்பதுபோல, \q2 எங்கள் நல்வாழ்வை எங்களுக்குத் திருப்பித்தாரும். \q1 \v 5 கண்ணீருடன் விதைக்கிறவர்கள், \q2 மகிழ்ச்சியின் பாடல்களுடன் அறுவடை செய்வார்கள். \q1 \v 6 விதைப்பதற்கான விதைகளை \q2 அழுதுகொண்டு சுமந்து போகிறவன், \q1 மகிழ்ச்சியின் பாடல்களுடன் \q2 கதிர்க்கட்டுகளைச் சுமந்துகொண்டு திரும்பிவருவான். \c 127 \cl சங்கீதம் 127 \d சீயோன் மலை ஏறும்போது பாடும் சாலொமோனின் பாடல். \q1 \v 1 யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால், \q2 அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; \q1 யெகோவா நகரத்தின்மேல் கண்காணிப்பாய் இருக்கவில்லையென்றால், \q2 காவலர் அதைக் காவல் செய்வதும் வீண். \q1 \v 2 நீங்கள் சாப்பிடும் உணவுக்காக அதிகாலையில் எழுந்து, \q2 நித்திரையின்றி நீண்டநேரம் உழைப்பதும் வீண்; \q1 ஏனெனில் அவர் தாம் நேசிக்கிறவர்களுக்கு \q2 அவர்கள் தூங்கும்போதும்கூட தேவையைத் தருகிறார். \b \q1 \v 3 பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் உரிமைச்சொத்து; \q2 பிள்ளைகள் அவரிடமிருந்து கிடைக்கும் வெகுமதியே. \q1 \v 4 ஒருவன் தன் வாலிபப் பருவத்தில் பெற்றெடுக்கும் பிள்ளைகள் \q2 போர்வீரனின் கைகளில் இருக்கும் அம்புகளைப்போல் இருக்கிறார்கள். \q1 \v 5 இவ்வித அம்புகளால் தன் அம்புக்கூட்டை நிரப்பிய \q2 மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; \q1 நீதிமன்றத்தில் தங்கள் பகைவரோடு வாதாடும்போது, \q2 அவர்கள் வெட்கப்படமாட்டார்கள். \c 128 \cl சங்கீதம் 128 \d சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். \q1 \v 1 யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும் \q2 அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். \q1 \v 2 உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்; \q2 ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும். \q1 \v 3 உன் மனைவி உன் வீட்டிற்குள் \q2 கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்; \q1 ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல், \q2 உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள். \q1 \v 4 ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன் \q2 இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான். \b \q1 \v 5 யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக; \q2 உன் வாழ்நாட்களெல்லாம் \q2 எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக. \q1 \v 6 நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக; \q2 இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக. \c 129 \cl சங்கீதம் 129 \d சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். \q1 \v 1 “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று \q2 இஸ்ரயேலர் சொல்லட்டும்; \q1 \v 2 “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள், \q2 ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை. \q1 \v 3 உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, \q2 தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். \q1 \v 4 ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்; \q2 அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.” \b \q1 \v 5 சீயோனை வெறுக்கிற அனைவரும் \q2 வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும். \q1 \v 6 அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்; \q2 அது வளரும் முன்பு வாடிப்போகுமே. \q1 \v 7 அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது; \q2 அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது. \q1 \v 8 வழிப்போக்கர்கள் அவர்களிடம், \q2 “யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்; \q1 யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” \q2 என்றும் சொல்லாதிருக்கட்டும். \c 130 \cl சங்கீதம் 130 \d சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். \q1 \v 1 யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். \q2 \v 2 யெகோவாவே, என் குரலைக் கேளும்; \q1 இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை \q2 உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும். \b \q1 \v 3 யெகோவாவே, நீர் பாவங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பீரானால், \q2 யெகோவாவே, யார் உம்முன் நிற்கமுடியும்? \q1 \v 4 ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்ய \q2 உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு. \b \q1 \v 5 நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது; \q2 அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன். \q1 \v 6 விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், \q2 ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், \q2 என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது. \b \q1 \v 7 இஸ்ரயேலே, உன் நம்பிக்கையை யெகோவாவிலேயே இருப்பதாக; \q2 ஏனெனில் யெகோவாவிடத்தில் உடன்படிக்கையின் அன்பும், \q2 அவரிடத்தில் முழுமையான மீட்பும் உண்டு. \q1 \v 8 அவர்தாமே இஸ்ரயேலரை \q2 அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்பார். \c 131 \cl சங்கீதம் 131 \d சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். \q1 \v 1 யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல, \q2 என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல; \q1 பெரிய காரியங்களிலும், \q2 எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை. \q1 \v 2 பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல், \q2 என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்; \q2 என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. \b \q1 \v 3 இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும் \q2 யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு. \c 132 \cl சங்கீதம் 132 \d சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். \q1 \v 1 யெகோவாவே, தாவீதையும் \q2 அவன் சகித்துக்கொண்ட எல்லாத் துன்பங்களையும் நினைவிற்கொள்ளும். \b \q1 \v 2 அவன் யெகோவாவுக்குச் சத்தியத்தை ஆணையிட்டு, \q2 யாக்கோபின் வல்லவருக்கு இப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்தான்: \q1 \v 3 “நான் என் வீட்டிற்குள் நுழையமாட்டேன், \q2 என் படுக்கைக்குப் போகவுமாட்டேன். \q1 \v 4 என் கண்களுக்கு நித்திரையையும், \q2 கண்ணிமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடமாட்டேன். \q1 \v 5 யெகோவாவுக்காக ஒரு இடத்தை, \q2 யாக்கோபின் வல்லவராகிய இறைவனுக்காக ஒரு வாழ்விடத்தைக் கட்டும்வரை \q2 இவற்றைச் செய்யமாட்டேன்.” \b \q1 \v 6 எப்பிராத்தாவிலே நாம் அதைக் கேள்விப்பட்டு, \q2 யாரீமின் வயல்வெளிகளில் நாம் அதைக் கண்டோம்: \q1 \v 7 “நாம் அவருடைய வாழ்விடத்திற்குப் போவோம், \q2 அவருடைய பாதபடியில் வழிபடுவோம். \q1 \v 8 ‘யெகோவாவே, எழுந்து உமது வாழ்விடத்திற்கு வாரும், \q2 உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் வாரும். \q1 \v 9 உம்முடைய ஆசாரியர்கள் நீதியை உடுத்திக்கொள்ளட்டும்; \q2 உமது பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியுடன் பாடட்டும்.’ ” \b \q1 \v 10 உமது அடியவனாகிய தாவீதின் நிமித்தம், \q2 நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும். \b \q1 \v 11 யெகோவா தாவீதுக்கு ஒரு சத்தியத்தை ஆணையிட்டார்; \q2 அது நிச்சயமான வாக்கு; அவர் இதை நிறைவேற்றாமல் விடமாட்டார்: \q1 “உன்னுடைய சொந்த சந்ததியில் ஒருவனை \q2 நான் உன் சிங்காசனத்தில் அமர்த்துவேன். \q1 \v 12 உன் மகன்கள் என் உடன்படிக்கையையும், \q2 நான் அவர்களுக்குப் போதிக்கிற நியமங்களையும் கைக்கொள்வார்களானால், \q1 அவர்களுடைய மகன்களும் \q2 என்றென்றும் உன் சிங்காசனத்தில் அமருவார்கள்.” \b \q1 \v 13 யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்; \q2 அவர் அதையே தமது இருப்பிடமாக்க விரும்பியிருக்கிறார்: \q1 \v 14 “இது என்றென்றைக்கும் நான் தங்குமிடம்; \q2 இவ்விடத்தை நான் விரும்பியிருக்கிறபடியால், \q2 இங்கேயே நான் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பேன். \q1 \v 15 நான் சீயோனை ஏராளமான உணவுப் பொருட்களால் ஆசீர்வதிப்பேன்; \q2 அங்குள்ள ஏழைகளை உணவினால் திருப்தியாக்குவேன். \q1 \v 16 அங்குள்ள ஆசாரியருக்கு நான் இரட்சிப்பை உடுத்துவேன்; \q2 அங்குள்ள பரிசுத்தவான்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள். \b \q1 \v 17 “இங்கே தாவீதுக்காக, ஒரு வல்லமையுள்ள அரசனை வளரப்பண்ணுவேன்; \q2 நான் அபிஷேகம் செய்தவனுக்காக, ஒரு விளக்கையும் ஏற்படுத்துவேன். \q1 \v 18 அவனுடைய பகைவரை வெட்கத்தால் உடுத்துவேன்; \q2 ஆனால் அவனுடைய தலையின் கிரீடமோ பிரகாசிக்கும்.” \c 133 \cl சங்கீதம் 133 \d சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். \q1 \v 1 இறைவனின் மக்கள் ஒற்றுமையுடன் ஒருமித்து வாழ்வது எவ்வளவு நல்லதும், \q2 எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதுமாய் இருக்கிறது! \b \q1 \v 2 அது தலையில் ஊற்றப்பட்டு தாடியில் வடிகின்ற \q2 விலையேறப்பெற்ற எண்ணெய்போல் இருக்கிறது; \q1 ஆரோனின் தாடியில் வடிந்து, \q2 அவனுடைய அங்கிகளின் கழுத்துப்பட்டியில் இறங்கும் எண்ணெய்போல் இருக்கிறது. \q1 \v 3 எர்மோன் மலையின் பனி \q2 சீயோனின் மலைகள்மேல் இறங்குவதைப்போல் அது இருக்கிறது; \q1 ஏனெனில் அங்கே யெகோவா தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறார்; \q2 வாழ்வையும் என்றென்றைக்கும் வழங்குகிறார். \c 134 \cl சங்கீதம் 134 \d சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். \q1 \v 1 யெகோவாவினுடைய ஆலயத்தில் இரவில் ஊழியம் செய்கின்ற யெகோவாவின் பணியாட்களே, \q2 எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள். \q1 \v 2 பரிசுத்த இடத்திலே உங்களுடைய கைகளை உயர்த்தி, \q2 யெகோவாவைத் துதியுங்கள். \b \q1 \v 3 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவா \q2 சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக. \c 135 \cl சங்கீதம் 135 \q1 \v 1 யெகோவாவைத் துதியுங்கள்.\f + \fr 135:1 \fr*\ft எபிரெயத்தில் \ft*\fqa அல்லேலூயா \fqa*\ft \+xt வச 3|link-href="PSA 135:3"\+xt* மற்றும் \+xt 21|link-href="PSA 135:21"\+xt*\ft*\f* \b \q1 யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்; \q2 யெகோவாவின் பணியாட்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள், \q1 \v 2 நமது இறைவனுடைய ஆலய முற்றங்களிலும், \q2 யெகோவாவினுடைய ஆலயத்திலும் ஊழியம் செய்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள். \b \q1 \v 3 யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்; \q2 அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள், அது இனிமையானது. \q1 \v 4 ஏனெனில் யெகோவா யாக்கோபைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்; \q2 இஸ்ரயேலரைத் தமது அருமைச் சொத்தாய் இருக்கும்படி தெரிந்துகொண்டார். \b \q1 \v 5 யெகோவா பெரியவர் என்றும், \q2 நமது யெகோவா எல்லாத் தெய்வங்களைப் பார்க்கிலும், \q2 மேலானவர் என்பதையும் நான் அறிவேன். \q1 \v 6 வானத்திலும் பூமியிலும், \q2 கடல்களிலும், அவைகளின் எல்லா ஆழங்களிலும் \q2 யெகோவா தமக்கு விருப்பமான எதையும் செய்கிறார். \q1 \v 7 அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார்; \q2 மழையுடன் மின்னலையும் அவர் அனுப்புகிறார், \q2 காற்றை தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து வெளியே புறப்படச்செய்கிறார். \b \q1 \v 8 அவர் எகிப்தின் முதற்பேறுகளை அழித்தார், \q2 மனிதரின் முதற்பேறுகளையும் மிருகங்களின் தலையீற்றுகளையும் அழித்தார். \q1 \v 9 எகிப்தே, பார்வோனுக்கும் அவனுடைய எல்லா பணியாட்களுக்கும் விரோதமாக \q2 அவர் தம்முடைய அடையாளங்களையும் அதிசயங்களையும் உன் மத்தியில் அனுப்பினாரே. \q1 \v 10 அவர் அநேக நாடுகளைத் தாக்கினார், \q2 வலிமைமிக்க அரசர்களைக் கொன்றார்; \q1 \v 11 எமோரியரின் அரசன் சீகோனையும், \q2 பாசானின் அரசன் ஓகையும், \q2 கானானின் அரசர்கள் எல்லோரையும் அழித்தார், \q1 \v 12 அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாக, \q2 தமது மக்களாகிய இஸ்ரயேலருக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார். \b \q1 \v 13 யெகோவாவே, உமது பெயர் என்றென்றைக்கும் நிலைக்கிறது; \q2 யெகோவாவே, உமது புகழ் தலைமுறை தலைமுறையாக நிலைக்கும். \q1 \v 14 யெகோவா தம் மக்களின் நியாயத்தை விசாரித்து, \q2 தம் அடியார்கள்மேல் இரக்கங்காட்டுவார். \b \q1 \v 15 பிறநாடுகளின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும், \q2 மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது. \q1 \v 16 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; \q2 அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. \q1 \v 17 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, \q2 அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. \q1 \v 18 அவைகளைச் செய்கிறவர்களும், \q2 அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள். \b \q1 \v 19 இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; \q2 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; \q1 \v 20 லேவி குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; \q2 அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவைத் துதியுங்கள். \q1 \v 21 எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு, \q2 சீயோனிலிருந்து துதி உண்டாகட்டும். \b \q1 யெகோவாவைத் துதியுங்கள். \c 136 \cl சங்கீதம் 136 \q1 \v 1 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர், \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 2 தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள், \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 3 கர்த்தாதி யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \b \q1 \v 4 அவர் மட்டுமே பெரிய அதிசயங்களைச் செய்கிறவர்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 5 அவர் தமது அறிவாற்றலினால் வானங்களைப் படைத்தார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 6 அவர் நீர்நிலைகளுக்கு மேலாகப் பூமியைப் பரப்பினார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 7 அவர் பெரிய வெளிச்சங்களை உண்டாக்கினார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 8 அவர் பகலை ஆளச் சூரியனைப் படைத்தார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 9 இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \b \q1 \v 10 அவர் எகிப்தியருடைய தலைப்பிள்ளைகளை வீழ்த்தினார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 11 அவர்கள் மத்தியிலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவந்தார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 12 அவர் வல்லமையுள்ள கரத்தினாலும் நீட்டிய புயத்தினாலும் அதைச் செய்தார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \b \q1 \v 13 செங்கடலை இரண்டாகப் பிரித்தவருக்கு நன்றி செலுத்துங்கள்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 14 அவர் அதின் நடுவில் இஸ்ரயேலரைக் கொண்டுவந்தார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 15 ஆனால் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் புரட்டித்தள்ளினார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \b \q1 \v 16 தம்முடைய மக்களை பாலைவனத்தில் வழிநடத்தினவருக்கு நன்றி செலுத்துங்கள்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \b \q1 \v 17 அவர் பெரிய அரசர்களை வீழ்த்தியவருக்கு நன்றி செலுத்துங்கள்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 18 அவர் வலிமைமிக்க அரசர்களை வீழ்த்தினார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 19 அவர் எமோரியரின் அரசனாகிய சீகோனை வீழ்த்தினார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 20 அவர் பாசானின் அரசனாகிய ஓகை வீழ்த்தினார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 21 அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 22 தமது அடியவனாகிய இஸ்ரயேலுக்கு அதை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \b \q1 \v 23 அவர் நம்முடைய தாழ்ந்த நிலையில் நம்மை நினைத்தார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 24 நம்முடைய பகைவரிடமிருந்து நம்மை விடுவித்தார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 25 அவர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு கொடுக்கிறார்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \b \q1 \v 26 பரலோகத்தின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்; \qr அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \c 137 \cl சங்கீதம் 137 \q1 \v 1 பாபிலோனின் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, \q2 சீயோனை நினைத்தபோது அழுதோம். \q1 \v 2 அங்கே இருந்த ஆற்றலறிச் செடிகளின்மேல் \q2 எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம். \q1 \v 3 ஏனெனில் எங்களைச் சிறைப்பிடித்தவர்கள், \q2 அங்கே எங்களைப் பாடும்படி கேட்டார்கள்; \q1 எங்களைச் சித்திரவதை செய்தவர்கள் மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடும்படி வற்புறுத்தி, \q2 “சீயோனின் பாடல்களுள் ஒன்றை எங்களுக்காகப் பாடுங்கள்” என்று சொன்னார்கள். \b \q1 \v 4 வேறுநாட்டு மண்ணில் இருக்கையில் \q2 யெகோவாவின் பாடல்களை எங்களால் எப்படிப் பாடமுடியும்? \q1 \v 5 எருசலேமே! நான் உன்னை மறந்தால், \q2 என் வலதுகை அதின் திறமையை மறப்பதாக. \q1 \v 6 நான் உன்னை நினையாவிட்டால், \q2 எருசலேமை எனது மேலான மகிழ்ச்சியாகக் \q1 நான் கருதாவிட்டால், \q2 என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக. \b \q1 \v 7 யெகோவாவே! எருசலேம் கைப்பற்றபட்ட நாளிலே \q2 ஏதோமியர் செய்தவற்றை நினைவுகூரும்; \q1 “அதை இடித்துப்போடுங்கள், \q2 அதின் அஸ்திபாரங்கள்வரை அதை இடித்துப்போடுங்கள்!” என்று சொன்னார்களே. \q1 \v 8 பாபிலோன் மகளே, அழிவுக்கு ஒப்படைக்கப்பட்டவளே, \q2 நீ எங்களுக்குச் செய்தவற்றுக்காக \q2 உனக்குப் பதில் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். \q1 \v 9 உன் குழந்தைகளைப் பிடித்து, \q2 அவர்களைப் பாறைகளின்மேல் மோதியடிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். \c 138 \cl சங்கீதம் 138 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; \q2 “தெய்வங்கள்” முன்னிலையில் நான் உமக்குத் துதி பாடுவேன். \q1 \v 2 நான் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பணிந்து, \q2 உமது உடன்படிக்கையின் அன்புக்காகவும் உம்முடைய சத்தியத்திற்காகவும், \q2 உமது பெயரைத் துதிப்பேன்; \q1 ஏனெனில் எல்லாக் காரியங்களுக்கும் மேலாக \q2 உமது பெயரையும், உமது வார்த்தையையும் உயர்த்தியிருக்கிறீர். \q1 \v 3 நான் கூப்பிட்டபோது நீர் எனக்குப் பதில் கொடுத்தீர்; \q2 நீர் என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை மிகவும் தைரியப்படுத்தினீர். \b \q1 \v 4 யெகோவாவே, பூமியின் அரசர்கள் எல்லோரும் \q2 உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிக்கட்டும். \q1 \v 5 யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், \q2 அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள். \b \q1 \v 6 யெகோவா உயர்ந்தவராக இருந்தும், \q2 தாழ்மையுள்ளவர்களை அக்கறையுடன் நோக்கிப் பார்க்கிறார்; \q2 ஆனால் பெருமையுள்ளவர்களையோ அவர் தூரத்திலிருந்தே அறிகிறார். \q1 \v 7 துன்பத்தின் மத்தியிலே நான் நடக்கின்றபோதிலும், \q2 நீர் என் உயிரைப் பாதுகாக்கிறீர். \q1 என் பகைவரின் கோபத்திற்கு எதிராக நீர் உமது கையை நீட்டுகிறீர்; \q2 உமது வலதுகரத்தினால் என்னைக் காப்பாற்றுகிறீர். \q1 \v 8 யெகோவா என்னைக் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்; \q2 யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது; \q2 உமது கரத்தின் செயல்களைக் கைவிடாதேயும். \c 139 \cl சங்கீதம் 139 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்திருக்கிறீர், \q2 நீர் என்னை அறிந்துமிருக்கிறீர். \q1 \v 2 நான் உட்காரும்போதும் நான் எழும்பும்போதும் நீர் அறிகிறீர்; \q2 நீர் என் எண்ணங்களைத் தூரத்திலிருந்தே அறிகிறீர். \q1 \v 3 நான் வெளியே போவதையும் நான் படுப்பதையும் நீர் கவனித்துக்கொள்கிறீர்; \q2 என்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் நீர் நன்கு அறிவீர். \q1 \v 4 என் நாவில் ஒரு வார்த்தை பிறக்குமுன்பே, \q2 யெகோவாவே, நீர் அதை முற்றிலும் அறிந்திருக்கிறீர். \q1 \v 5 நீர் முன்னும் பின்னுமாய் என்னைச் சூழ்ந்து, \q2 நீர் உமது ஆசீர்வாதத்தின் கரத்தை என்மேல் வைத்திருக்கிறீர். \q1 \v 6 இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், \q2 விளங்கிக்கொள்ள முடியாததுமாயிருக்கிறது. \b \q1 \v 7 உமது ஆவியானவரைவிட்டு என்னால் எங்கே போகமுடியும்? \q2 உமது சந்நிதியைவிட்டு என்னால் எங்கு ஓடமுடியும்? \q1 \v 8 நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்; \q2 என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். \q1 \v 9 அதிகாலையின் சிறகுகளை எடுத்து நான் பறந்து சென்றாலும், \q2 கடல்களின் எல்லைகளுக்கப்பால் போய்த் தங்கினாலும், \q1 \v 10 அங்கேயும் உமது கரம் எனக்கு வழிகாட்டும்; \q2 உமது வலதுகரம் என்னை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும். \q1 \v 11 “நிச்சயமாகவே இருள் என்னை மறைத்துக்கொள்ளும், \q2 ஒளி என்னைச் சுற்றிலும் இரவாகும்” என்று நான் சொன்னாலும், \q1 \v 12 இருளும் உமக்கு இருட்டாய் இருக்காது; \q2 இரவும் பகலைப்போல் பிரகாசிக்கும்; \q2 ஏனெனில் இருள் உமக்கு ஒளியைப் போலவே இருக்கிறது. \b \q1 \v 13 என் உள்ளுறுப்புகளை நீரே உருவாக்கினீர்; \q2 என் தாயின் கருப்பையில் என்னை நீரே ஒன்றாய் இணைத்தீர். \q1 \v 14 நான் மிக ஆச்சரியமாகவும் அதிசயிக்கத்தக்க வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறபடியால், \q2 நான் உம்மைத் துதிக்கிறேன்; \q1 உமது செயல்கள் ஆச்சரியமானவை, \q2 நான் அதை நன்றாய் அறிந்திருக்கிறேன். \q1 \v 15 நான் இரகசியமான இடத்தில் படைக்கப்பட்டபொழுது, \q2 நான் பூமியின் ஆழங்களில் ஒன்றாய் இணைக்கப்பட்ட போது, \q2 என் எலும்புகள் உமக்கு மறைவாய் இருக்கவில்லை. \q1 \v 16 உருவம் பெற்றிராத என் உடலை உம்முடைய கண்கள் கண்டன; \q2 எனக்கு நியமிக்கப்பட்ட எல்லா நாட்களும், \q2 அவை ஒன்றாகிலும் வருமுன்பே உம்முடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன. \q1 \v 17 இறைவனே, என்னைப்பற்றிய உம்முடைய எண்ணங்கள் எவ்வளவு அருமையானவை! \q2 அவைகளின் தொகை எவ்வளவு பெரியது! \q1 \v 18 நான் அவைகளை எண்ணப்போனால், \q2 அவை மணலைப் பார்க்கிலும் அதிகமாயிருக்கும்; \q2 நான் விழிக்கும்போதோ இன்னும் உம்முடனேயே இருக்கிறேன். \b \q1 \v 19 இறைவனே, கொடியவர்களை நீர் கொன்றுபோட்டால் நலமாயிருக்கும்! \q2 இரத்தவெறியரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்! \q1 \v 20 அவர்கள் உம்மைக் குறித்துத் தீயநோக்கத்துடன் பேசுகிறார்கள்; \q2 உம்முடைய விரோதிகள் உமது பெயரைத் தவறாய் பயன்படுத்துகிறார்கள். \q1 \v 21 யெகோவாவே, உம்மை வெறுக்கிறவர்களை நான் வெறுக்காதிருக்கிறேனோ? \q2 உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமல் இருக்கிறேனோ? \q1 \v 22 ஆம், நான் அவர்களை முற்றிலும் வெறுக்கிறேன். \q2 அவர்களை என் பகைவர்களாகவே நான் எண்ணுகிறேன். \q1 \v 23 இறைவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; \q2 என்னை சோதித்து என் வருத்தமான சிந்தனைகளை அறிந்துகொள்ளும். \q1 \v 24 உம்மை வருந்தும்படிச் செய்யும் வழி ஏதாவது என்னில் உண்டோ என்று பார்த்து, \q2 நித்திய வழியிலே என்னை நடத்தும். \c 140 \cl சங்கீதம் 140 \d பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, தீய மனிதரிடமிருந்து என்னைத் தப்புவியும்; \q2 வன்முறையாளர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். \q1 \v 2 அவர்கள் தங்கள் இருதயங்களில் பொல்லாத திட்டங்களைத் தீட்டி, \q2 நாள்தோறும் போரை மூட்டிவிடுகிறார்கள். \q1 \v 3 அவர்கள் தங்கள் நாவுகளைப் பாம்பின் நாவுகளைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்; \q2 அவர்கள் உதடுகளில் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. \b \q1 \v 4 யெகோவாவே, கொடியவர்களுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, \q2 வன்முறையாளர்களுக்கு என்னை விலக்கி இரட்சியும்; \q2 அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். \q1 \v 5 பெருமையுள்ள மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்; \q2 அவர்கள் தங்கள் வலைகளின் கயிறுகளை விரித்து, \q2 என் வழியெல்லாம் எனக்காகக் பொறிகளை வைத்திருக்கிறார்கள். \b \q1 \v 6 யெகோவாவே, “நீரே என் இறைவன்” என்று நான் உம்மிடம் சொல்கிறேன்; \q2 யெகோவாவே, இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும். \q1 \v 7 ஆண்டவராகிய யெகோவாவே, என் இரட்சிப்பின் பெலனே, \q2 நீர் யுத்தநாளில் என் தலையை மறைத்துகொள்ளும். \q1 \v 8 யெகோவாவே, கொடியவர்களின் ஆசைகள் நிறைவேற விடாதேயும்; \q2 அவர்களுடைய திட்டங்களை வெற்றியடைய விடாதேயும். \b \q1 \v 9 என்னைச் சூழ்ந்துள்ளவர்கள் பெருமையுடன் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்; \q2 அவர்கள் உதடுகளின் தீவினைகள் அவர்களை மூடும். \q1 \v 10 எரியும் நெருப்புத் தழல்கள் அவர்கள்மேல் விழட்டும்; \q2 அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க முடியாதபடி நெருப்பிலும், \q2 சேற்றுக் குழிகளிலும் தள்ளப்படட்டும். \q1 \v 11 அவதூறு பேசுகிறவர்கள் நாட்டில் நிலைபெறாதிருக்கட்டும்; \q2 வன்முறையாளர்களை பேராபத்து வேட்டையாடி வீழ்த்தட்டும். \b \q1 \v 12 யெகோவா ஏழைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கிறவர் என்பதையும், \q2 எளியவர்களின் சார்பாக வழக்காடுபவர் என்பதையும் நான் அறிவேன். \q1 \v 13 நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; \q2 நேர்மையுள்ளவர்கள் உமது சமுகத்தில் வாழ்வடைவார்கள். \c 141 \cl சங்கீதம் 141 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடம் விரைந்து வாரும்; \q2 நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என் குரலைக் கேளும். \q1 \v 2 என் மன்றாட்டு உமக்கு முன்பாகத் தூபத்தைப்போல் ஏற்றுக்கொள்ளப்படட்டும்; \q2 என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும். \b \q1 \v 3 யெகோவாவே, என் வாய்க்குக் காவல் வையும்; \q2 என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். \q1 \v 4 தீமைகளைச் செய்யும் மனிதரோடு சேர்ந்து \q2 கொடுமையான செயல்களில் பங்குகொள்ளும்படி \q1 என் இருதயத்தைத் தீமையின் பக்கம் இழுப்புண்டுபோக விடாதேயும்; \q2 அவர்களுடைய ருசியான பண்டங்களை நான் சாப்பிடவும் விடாதேயும். \b \q1 \v 5 நீதிமான் என்னை அடிக்கட்டும், அந்த அடி தயவானது; \q2 நீதிமான் என்னைக் கண்டிக்கட்டும், அது என் தலைக்கு எண்ணெயைப்போல் இருக்கும். \q1 என் தலை அதை புறக்கணிக்காது; \q2 என் மன்றாட்டு எப்பொழுதும் தீயோரின் செய்கைகளுக்கு விரோதமாகவே இருக்கிறது. \b \q1 \v 6 அவர்களுடைய ஆளுநர்கள் செங்குத்தான பாறைகளிலிருந்து \q2 கீழே தள்ளிவிடப்படுவார்கள்; \q1 அப்பொழுது, என் வார்த்தைகள் உண்மையாக இருந்ததை \q2 கொடியவர்கள் புரிந்துகொள்வார்கள். \q1 \v 7 “ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல், \q2 எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன” \q2 என்று அவர்கள் சொல்வார்கள். \b \q1 \v 8 ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, என் கண்கள் உம்மையே நோக்குகின்றன; \q2 நான் உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறேன், என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடாதேயும். \q1 \v 9 தீயவர் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்தும், \q2 அவர்களால் வைக்கப்பட்ட சுருக்குக் கயிறுகளிலிருந்தும் என்னைக் காத்துக்கொள்ளும். \q1 \v 10 நான் அவற்றைப் பாதுகாப்பாய் கடக்க, \q2 கொடியவர்கள் தங்கள் வலைகளிலேயே அகப்படட்டும். \c 142 \cl சங்கீதம் 142 \d தாவீது குகையிலிருந்தபோது செய்த ஜெபமாகிய மஸ்கீல் என்னும் சங்கீதம். \q1 \v 1 நான் யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; \q2 நான் யெகோவாவிடம் இரக்கம் கேட்டு என் குரலை உயர்த்துகிறேன். \q1 \v 2 அவருக்கு முன்பாக என் குறைகளைக் கொட்டுகிறேன்; \q2 என் துன்பத்தையும் அவருக்கு முன்பாக சொல்கிறேன். \b \q1 \v 3 என் ஆவி எனக்குள் சோர்ந்து போகையில், \q2 நீரே என் வழியை அறிகிறவர்; \q1 நான் நடக்கும் பாதையில் \q2 மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள். \q1 \v 4 நோக்கிப்பாரும், உதவிக்காக என் வலதுபக்கத்தில் யாரும் இல்லை; \q2 என்னில் அக்கறை கொள்பவர்கள் யாருமில்லை. \q1 எனக்குப் புகலிடம் இல்லை; \q2 என்னைக் கவனிக்க எவருமில்லை. \b \q1 \v 5 யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கதறுகிறேன்; \q2 “நீரே என் புகலிடம், \q2 வாழ்வோரின் நாட்டில் நீரே என் பங்கு” என்று நான் சொல்கிறேன். \b \q1 \v 6 என் கதறலுக்குச் செவிகொடும்; \q2 நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; \q1 என்னைப் பிடிக்க பின்தொடர்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்; \q2 ஏனெனில் அவர்கள் என்னைவிட பலமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். \q1 \v 7 நான் உமது பெயரைத் துதிக்கும்படி, \q2 என் சிறையிலிருந்து என்னை விடுதலையாக்கும்; \q1 அப்பொழுது நீர் எனக்குச் செய்யும் நன்மையினிமித்தம், \q2 நீதிமான்கள் என்னைச் சுற்றிச் சேர்ந்துகொள்வார்கள். \c 143 \cl சங்கீதம் 143 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும், \q2 இரக்கத்திற்கான என் கதறுதலுக்குச் செவிகொடும்; \q1 உமது உண்மையின்படியும் \q2 நீதியின்படியும் எனக்கு பதில் தாரும். \q1 \v 2 உமது அடியானை நியாயந்தீர்க்காதேயும். \q2 வாழ்கின்ற ஒருவருமே உமக்கு முன்பாக நீதிமான்கள் இல்லையே. \q1 \v 3 பகைவன் என்னைப் பின்தொடர்கிறான், \q2 அவன் என்னை தரையில் போட்டு தாக்குகிறான்; \q1 வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்களைப்போல், \q2 அவன் என்னை இருளில் குடியிருக்கப்பண்ணுகிறான். \q1 \v 4 ஆகவே எல்லா நம்பிக்கையையும் இழந்து என் ஆவி எனக்குள் சோர்ந்துபோகிறது; \q2 பயத்தால் என் இருதயம் கலங்குகிறது. \q1 \v 5 நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்; \q2 உமது செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்; \q2 உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன். \q1 \v 6 நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்; \q2 வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது. \b \q1 \v 7 யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்; \q2 என் உள்ளம் சோர்ந்துபோகிறது; \q1 உமது முகத்தை என்னிடமிருந்து மறையாதேயும்; இல்லாவிட்டால், \q2 நான் மரணக் குழியில் இறங்குகிறவர்களைப் போலாகிவிடுவேன். \q1 \v 8 காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும், \q2 ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்; \q1 நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும், \q2 ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன். \q1 \v 9 யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்; \q2 ஏனெனில் நான் உமக்குள் என்னை மறைத்துக்கொள்கிறேன். \q1 \v 10 நீரே என் இறைவன்; \q2 ஆதலால் உமது சித்தத்தைச் செய்ய எனக்குப் போதியும்; \q1 உமது நல்ல ஆவியானவர் \q2 என்னை நல்வழியில் நடத்துவாராக. \b \q1 \v 11 யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; \q2 உமது நியாயத்தினிமித்தம் வேதனையிலிருந்து என்னை விடுவியும். \q1 \v 12 உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என் பகைவரை அழித்துவிடும்; \q2 என் எதிரிகள் அனைவரையும் ஒழித்துவிடும்; \q2 ஏனெனில் நான் உமது அடியவன். \c 144 \cl சங்கீதம் 144 \d தாவீதின் சங்கீதம். \q1 \v 1 என் கன்மலையாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக, \q2 அவர் என் கைகளை யுத்தத்திற்கும், \q2 என் விரல்களை போர்புரிவதற்கும் பயிற்றுவிக்கிறார். \q1 \v 2 அவர் என் அன்பான இறைவன், என் கோட்டை, \q2 என் அரண், என் மீட்பர், \q1 அவரே நான் தஞ்சம் அடைகிற என் கேடயம், \q2 நாடுகளை\f + \fr 144:2 \fr*\fq நாடுகளை \fq*\ft என பல கையெழுத்துப் பிரதிகளிலும், \ft*\fqa என் மக்கள் \fqa*\ft என எபிரெய மொழி பிரதிகளிலும் உள்ளது.\ft*\f* அவர் எனக்குக் கீழ்படுத்துகிறார். \b \q1 \v 3 யெகோவாவே, மனிதனைக் குறித்து நீர் அக்கறை கொள்வதற்கும், \q2 வெறும் மனிதர்களை நீர் நினைப்பதற்கும் அவர்கள் யார்? \q1 \v 4 மனிதன் ஒரு சுவாசத்தைப்போல் இருக்கிறான்; \q2 அவன் நாட்கள் துரிதமாய் மறையும் நிழலைப்போல் இருக்கின்றன. \b \q1 \v 5 யெகோவாவே, உமது வானங்களைப் பிரித்துக் கீழே வாரும்; \q2 மலைகள் புகையும்படியாக, அவைகளைத் தொடும். \q1 \v 6 மின்னல்களை அனுப்பி, பகைவர்களைச் சிதறடியும்; \q2 உமது அம்புகளை எய்து அவர்களை முறியடியும். \q1 \v 7 உமது கரத்தை உயரத்திலிருந்து கீழே நீட்டும்; \q1 பெருவெள்ளத்திலிருந்தும், பிறநாட்டினரின் கைகளிலிருந்தும் \q2 என்னை விடுவித்துத் தப்புவியும். \q1 \v 8 அவர்களின் வாய்கள் பொய்களினால் நிறைந்திருக்கின்றன; \q2 அவர்களுடைய வலதுகைகள் வஞ்சனை உடையவைகளாய் இருக்கின்றன. \b \q1 \v 9 இறைவனே, நான் உமக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுவேன்; \q2 பத்து நரம்பு வீணையினால் நான் உமக்கு இசை மீட்டுவேன். \q1 \v 10 ஏனெனில் அரசர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவரும் \q2 உமது அடியவனாகிய தாவீதை விடுவிப்பவரும் நீரே. \b \q1 \v 11 கொடிய வாளினின்று என்னை விடுவித்தருளும்; \q2 பொய்பேசும் வாய்களையும், \q1 வஞ்சனையுள்ள வலது கைகளையுமுடைய \q2 வேறுநாட்டைச் சேர்ந்தவரின் கைகளிலிருந்து என்னை விடுவித்துத் தப்புவியும். \b \q1 \v 12 அப்பொழுது எங்கள் மகன்கள் தங்கள் வாலிபத்தில் \q2 நன்றாய்ப் பராமரிக்கப்பட்ட செடிகளைப்போல் இருப்பார்கள்; \q1 எங்கள் மகள்கள் அரண்மனையை அலங்கரிப்பதற்கென \q2 செதுக்கப்பட்ட தூண்களைப்போல் இருப்பார்கள். \q1 \v 13 எங்கள் களஞ்சியங்கள் \q2 சகலவித விளைபொருட்களாலும் நிரப்பப்படும்; \q1 எங்கள் நிலங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரக்கணக்கிலும், \q2 பதினாயிரக்கணக்கிலும் பெருகும். \q2 \v 14 எங்கள் எருதுகள் பாரமான பொதிகளை இழுக்கும்; \q1 எங்கள் நகரத்தின் சுவர்களில் ஒன்றும் உடைக்கப்படுவதில்லை, \q2 கைதிகளாக யாரும் சிறைபிடிக்கப்படுவதில்லை; \q2 எங்கள் வீதிகளில் துன்பத்தின் அழுகையும் கேட்கப்படுவதில்லை. \q1 \v 15 இவற்றை உண்மையாக அடைந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; \q2 யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்ட மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். \c 145 \cl சங்கீதம் 145 \d தாவீதின் ஸ்தோத்திர சங்கீதம். \q1 \v 1 என் அரசராகிய இறைவனே, நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்; \q2 நான் என்றென்றும் உம்முடைய பெயரைத் துதிப்பேன். \q1 \v 2 நாள்தோறும் நான் உம்மைத் துதித்து, \q2 உம்முடைய பெயரை என்றென்றைக்கும் பாராட்டுவேன். \b \q1 \v 3 யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாய் இருக்கிறார்; \q2 அவருடைய மகத்துவத்தை யாராலும் அளவிடமுடியாது. \q1 \v 4 உம்முடைய செயல்களை ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும்; \q2 அவர்கள் உம்முடைய வல்லமையான செயல்களைச் சொல்வார்கள். \q1 \v 5 நான் உம்முடைய மகத்துவத்தின் மாட்சிமையான சிறப்பையும், \q2 உமது அதிசயமான செயல்களையும் பற்றித் தியானிப்பேன். \q1 \v 6 அவர்கள் உமது பிரமிக்கத்தக்க செயல்களின் வல்லமையைச் சொல்வார்கள்; \q2 நான் உம்முடைய மகத்துவமான கிரியைகளைப் பிரசித்தப்படுத்துவேன். \q1 \v 7 அவர்கள் உமது நற்குணத்தின் மகத்துவத்தை நினைத்துக் கொண்டாடுவார்கள்; \q2 உமது நீதியைக் குறித்துச் சந்தோஷமாய்ப் பாடுவார்கள். \b \q1 \v 8 யெகோவா கிருபையும் கருணையும் உள்ளவர்; \q2 அவர் கோபிக்கிறதில் தாமதிப்பவரும் \q2 உடன்படிக்கையின் அன்பு நிறைந்தவருமாய் இருக்கிறார். \b \q1 \v 9 யெகோவா எல்லோருக்கும் நல்லவர்; \q2 தாம் படைத்த அனைத்தின்மேலும் இரக்கமுள்ளவர். \q1 \v 10 யெகோவாவே, நீர் படைத்த எல்லாம் உம்மைத் துதிக்கும்; \q2 உமது உண்மையுள்ள மக்கள் உம்மைப் போற்றுவார்கள். \q1 \v 11 அவர்கள் உமது அரசின் மகிமையைச் சொல்லி, \q2 உம்முடைய வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். \q1 \v 12 அதினால் எல்லா மனிதரும் உம்முடைய வல்லமையான செயல்களையும், \q2 உமது அரசின் மகிமையான சிறப்பையும் அறிந்துகொள்வார்கள். \q1 \v 13 உம்முடைய அரசு ஒரு நித்தியமான அரசு; \q2 உம்முடைய ஆளுகை எல்லாத் தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கிறது. \b \q1 யெகோவா தம்முடைய எல்லா வாக்குத்தத்தங்களிலும் நம்பத்தக்கவர்; \q2 தம்முடைய செயல்கள் அனைத்திலும் உண்மையுள்ளவர். \q1 \v 14 யெகோவா விழுகிற யாவரையும் தாங்கி, \q2 தாழ்த்தப்பட்ட அனைவரையும் உயர்த்துகிறார். \q1 \v 15 எல்லாருடைய கண்களும் உம்மை நோக்குகின்றன; \q2 ஏற்றவேளையில் நீர் அவர்களுக்கு உணவு கொடுக்கிறீர். \q1 \v 16 நீர் உம்முடைய கையைத் திறந்து, \q2 எல்லா உயிரினங்களின் வாஞ்சைகளைத் திருப்தியாக்குகிறீர். \b \q1 \v 17 யெகோவா தமது வழிகள் எல்லாவற்றிலும் நீதியுள்ளவராயும் \q2 தம்முடைய செயல்களிளெல்லாம் உண்மையுள்ளவராயும் இருக்கிறார். \q1 \v 18 யெகோவா தம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோருக்கும், \q2 உண்மையாகவே அவரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அருகே இருக்கிறார். \q1 \v 19 அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறார்; \q2 அவர்களுடைய கூப்பிடுதலைக் கேட்டு அவர்களைக் காப்பாற்றுகிறார். \q1 \v 20 யெகோவா தம்மில் அன்புகூருகிறவர்களைப் பாதுகாக்கிறார்; \q2 ஆனால் கொடியவர்கள் அனைவரையும் தண்டிப்பார். \b \q1 \v 21 என் வாய் யெகோவாவைத் துதிக்கும். \q2 எல்லா உயிரினங்களும் அவருடைய பரிசுத்த பெயரை \q2 என்றென்றும் துதிக்கட்டும். \c 146 \cl சங்கீதம் 146 \q1 \v 1 யெகோவாவைத் துதி\f + \fr 146:1 \fr*\ft எபிரெயத்தில் \ft*\fqa அல்லேலூயா \fqa*\ft \+xt வச 10|link-href="PSA 146:10"\+xt*\ft*\f*. \b \q1 என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. \b \q1 \v 2 நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்; \q2 நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன். \q1 \v 3 உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், \q2 உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே. \q1 \v 4 அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்; \q2 அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும். \q1 \v 5 யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர், \q2 தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம் \q2 நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். \b \q1 \v 6 அவரே வானத்தையும் பூமியையும் \q2 கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்; \q2 யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார். \q1 \v 7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; \q2 பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார். \q1 யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார், \q2 \v 8 யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார், \q1 யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார், \q2 யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார். \q1 \v 9 யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார், \q2 அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார், \q2 ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார். \b \q1 \v 10 யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்; \q2 சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார். \b \q1 யெகோவாவைத் துதி. \c 147 \cl சங்கீதம் 147 \q1 \v 1 யெகோவாவைத் துதியுங்கள். \b \q1 நமது இறைவனுக்குத் துதிகளைப் பாடுவது எவ்வளவு நல்லது, \q2 அவரைத் துதிப்பது எவ்வளவு மகிழ்ச்சியும் தகுதியுமாயிருக்கிறது. \b \q1 \v 2 யெகோவா எருசலேமைக் கட்டியெழுப்புகிறார்; \q2 அவர் நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரை ஒன்றுசேர்க்கிறார். \q1 \v 3 அவர் உள்ளம் உடைந்தவர்களைச் சுகப்படுத்தி, \q2 அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். \q1 \v 4 அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, \q2 அவை ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார். \q1 \v 5 நம்முடைய யெகோவா பெரியவரும், வல்லமை மிகுந்தவருமாய் இருக்கிறார்; \q2 அவருடைய அறிவுக்கு எல்லையே இல்லை. \q1 \v 6 யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆதரிக்கிறார்; \q2 ஆனால் கொடியவர்களையோ தரையில் வீழ்த்துகிறார். \b \q1 \v 7 யெகோவாவை நன்றியுடன் துதி பாடுங்கள்; \q2 யாழினால் நம் இறைவனுக்கு இசை மீட்டுங்கள். \b \q1 \v 8 அவர் ஆகாயத்தை மேகங்களினால் மூடுகிறார்; \q2 பூமிக்கு மழையைக் கொடுத்து, \q2 மலைகளில் புல்லை வளரப்பண்ணுகிறார். \q1 \v 9 மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் \q2 அவர் உணவு கொடுக்கிறார். \b \q1 \v 10 குதிரையின் பலத்தில் அவர் பிரியம் கொள்வதில்லை, \q2 படைவீரனின் கால் வலிமையில் அவர் மகிழ்ச்சி அடைவதுமில்லை; \q1 \v 11 யெகோவா தமக்குப் பயந்து, \q2 தங்கள் நம்பிக்கையை அவருடைய உடன்படிக்கையின் அன்பில் \q2 வைத்திருக்கிறவர்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார். \b \q1 \v 12 எருசலேமே யெகோவாவைப் பாராட்டு; \q2 சீயோனே உன் இறைவனைத் துதி. \b \q1 \v 13 ஏனெனில் அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, \q2 உன்னிடத்திலுள்ள உன் மக்களை ஆசீர்வதிக்கிறார். \q1 \v 14 அவர் உன் எல்லைகளுக்குச் சமாதானத்தைக் கொடுத்து, \q2 சிறந்த கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். \b \q1 \v 15 அவர் பூமிக்குத் தமது கட்டளையை அனுப்புகிறார்; \q2 அவருடைய வார்த்தை விரைந்து செல்கிறது. \q1 \v 16 அவர் மூடுபனியை கம்பளியைப்போல் பரப்புகிறார்; \q2 உறைபனித் துகள்களை சாம்பலைப்போல் தூவுகிறார். \q1 \v 17 அவர் தமது பனிக்கட்டி மழையை சிறு கற்களைப்போல் வீசியெறிகிறார்; \q2 அவருடைய பனியின் குளிர்காற்றை யாரால் தாங்கமுடியும்? \q1 \v 18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; \q2 அவர் தமது தென்றல் காற்றுகளை வீசச்செய்ய, வெள்ளம் ஓடுகிறது. \b \q1 \v 19 அவர் தமது வார்த்தையை யாக்கோபுக்கும், \q2 தமது சட்டங்களையும் விதிமுறைகளையும் இஸ்ரயேலுக்கும் வெளிப்படுத்தியிருக்கிறார். \q1 \v 20 அவர் இப்படி வேறு எந்த மக்களுக்கும் வெளிப்படுத்தவில்லை; \q2 அவர்கள் அவருடைய சட்டங்களை அறியாதிருக்கிறார்கள். \b \q1 யெகோவாவைத் துதி. \c 148 \cl சங்கீதம் 148 \q1 \v 1 யெகோவாவைத் துதியுங்கள். \b \q1 வானங்களிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள்; \q2 மேலே உன்னதங்களில் அவரைத் துதியுங்கள். \q1 \v 2 அவருடைய தூதர்களே, எல்லோரும் அவரைத் துதியுங்கள்; \q2 அவருடைய பரலோக சேனைகளே, எல்லோரும் அவரைத் துதியுங்கள். \q1 \v 3 சூரியனே, சந்திரனே, அவரைத் துதியுங்கள்; \q2 பிரகாசிக்கிற நட்சத்திரங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள். \q1 \v 4 மிக உயர்ந்த வானங்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; \q2 ஆகாயங்களுக்கு மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள். \b \q1 \v 5 அவர் கட்டளையிட அவை படைக்கப்பட்டதால் \q2 அவைகள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும். \q1 \v 6 யெகோவா அவைகளை எப்பொழுதும் என்றென்றைக்கும் நிலைப்படுத்தினார்; \q2 அழிந்துபோகாத ஒரு விதிமுறையை ஏற்படுத்தியிருக்கிறார். \b \q1 \v 7 பூமியிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள், \q2 பெரிய கடல் உயிரினங்களே, கடலின் ஆழங்களே, \q1 \v 8 நெருப்பே, பனிக்கட்டி மழையே, உறைபனியே, மேகங்களே, \q2 அவருடைய கட்டளையை நிறைவேற்றும் புயல்காற்றே, \q1 \v 9 மலைகளே, குன்றுகளே, \q2 பழமரங்களே, அனைத்து கேதுரு மரங்களே, \q1 \v 10 உயிரினங்களே, அனைத்து கால்நடைகளே, \q2 சிறிய உயிரினங்களே, பறக்கும் பறவைகளே, \q1 \v 11 பூமியின் அரசர்களே, சகல நாடுகளே, \q2 இளவரசர்களே, பூமியிலுள்ள சகல ஆளுநர்களே, \q1 \v 12 இளைஞர்களே, இளம்பெண்களே, \q2 முதியவர்களே, பிள்ளைகளே அவரைத் துதியுங்கள். \b \q1 \v 13 அவர்கள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும்; \q2 ஏனெனில் அவருடைய பெயர் மட்டுமே புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறது; \q2 அவருடைய சிறப்பு பூமிக்கும், வானங்களுக்கும் மேலாக இருக்கிறது. \q1 \v 14 அவர் தம் உண்மையுள்ள பணியாளர்களாகிய, \q2 இருதயத்திற்கு உகந்த இஸ்ரயேல் மக்கள் துதிக்கும்படி, \q1 அவர் தம்முடைய மக்களுக்கென ஒரு வல்லமையுள்ள அரசனை உயர்த்தியிருக்கிறார்; \q2 அதற்காக அவரை எல்லா பரிசுத்தவான்களும் இஸ்ரயேலரும் துதிக்கிறார்கள். \b \q1 யெகோவாவைத் துதியுங்கள். \c 149 \cl சங்கீதம் 149 \q1 \v 1 யெகோவாவைத் துதியுங்கள்\f + \fr 149:1 \fr*\fq துதியுங்கள் \fq*\ft என்பது எபிரெயத்தில் \ft*\fqa அல்லேலூயா; \fqa*\ft வசனம் \+xt 9\+xt* லும் உள்ளது.\ft*\f*. \b \q1 யெகோவாவுக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுங்கள், \q2 பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதியைப் பாடுங்கள். \b \q1 \v 2 இஸ்ரயேலர் தங்களைப் படைத்தவரில் மகிழட்டும்; \q2 சீயோனின் மக்கள் தங்கள் அரசரில் களிகூரட்டும். \q1 \v 3 அவர்கள் யெகோவாவினுடைய பெயரை நடனத்தோடு துதிக்கட்டும், \q2 தம்புராவினாலும் யாழினாலும் அவருக்கு இசை மீட்டட்டும். \q1 \v 4 ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்; \q2 தாழ்மையுள்ளவர்களை அவர் இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார். \q1 \v 5 பரிசுத்தவான்கள் இந்த மகிமையில் களிகூர்ந்து \q2 தங்கள் படுக்கைகளில் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள். \b \q1 \v 6 அவர்களுடைய வாய்களில் இறைவனின் துதியும், \q2 கைகளில் இருபக்கமும் கூர்மையுள்ள வாளும் இருப்பதாக. \q1 \v 7 அவைகளினால் நாடுகளைப் பழிவாங்கவும், \q2 மக்கள் கூட்டத்தைத் தண்டிக்கவும், \q1 \v 8 அவர்களுடைய அரசர்களைச் சங்கலிகளாலும், \q2 அவர்களுடைய அதிகாரிகளை இரும்பு விலங்குகளினாலும் கட்டவும், \q1 \v 9 அவர்களுக்கு விரோதமாக எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை \q2 நடைமுறைப்படுத்தவும் அவை இருப்பதாக. \q2 இதுவே அவருடைய எல்லா பரிசுத்தவான்களுக்கும் உரிய மகிமை. \b \q1 யெகோவாவைத் துதியுங்கள். \c 150 \cl சங்கீதம் 150 \q1 \v 1 அல்லேலூயா, \b \q1 இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்; \q2 அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள். \q1 \v 2 அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; \q2 இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். \q1 \v 3 எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; \q2 யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள். \q1 \v 4 தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்; \q2 கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள். \q1 \v 5 கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்; \q2 அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள். \b \q1 \v 6 சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக. \b \q1 அல்லேலூயா.