\id LAM - Biblica® Open Indian Tamil Contemporary Version \ide UTF-8 \h புலம்பல் \toc1 எரேமியாவின் புலம்பல் \toc2 புலம்பல் \toc3 புல. \mt1 எரேமியாவின் புலம்பல் \c 1 \q1 \f + \fr 1 \fr*\ft இந்த அதிகாரம் ஒரு அகரவரிசை கவிதை, இதன் வசனங்கள் எபிரெய எழுத்துக்களின் அடுத்தடுத்த எழுத்துக்களுடன் தொடங்குகின்றன.\ft*\f* \v 1 ஒருகாலத்தில் மக்களால் நிறைந்திருந்த எருசலேம் பட்டணம், \q2 இப்பொழுது எவ்வளவு பாழாய்க் கிடக்கிறது! \q1 ஒருகாலத்தில் நாடுகளின் மத்தியில் மிகவும் பெரியவளாய் இருந்தவள், \q2 இன்று ஒரு விதவையைப் போலானாளே! \q1 நாடுகளின் மத்தியில் அரசியாய் இருந்தவள் \q2 இப்பொழுது அடிமையானாளே. \b \q1 \v 2 இரவில் அவள் மனங்கசந்து அழுகிறாள், \q2 அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வடிகிறது. \q1 அவளுக்குப் பிரியமானவர்களில் அவளை \q2 ஆறுதல் செய்வதற்கு ஒருவரும் இல்லை. \q1 அவளுடைய நண்பர்கள் அவளுக்கு துரோகம் செய்தார்கள்; \q2 அவர்கள் அவளின் விரோதிகளானார்கள். \b \q1 \v 3 துன்பத்தையும், கொடுமையான அடிமை வேலையையும் அனுபவித்தபின், \q2 யூதா நாடுகடத்தப்பட்டுப் போனாள். \q1 பிறநாடுகளின் மத்தியில் அவள் குடியிருக்கிறாள்; \q2 ஆனால் அவளுக்கோ இளைப்பாறும் இடம் இல்லை. \q1 அவளுடைய துன்பத்தின் மத்தியில் \q2 அவளைப் பின்தொடர்ந்த யாவரும் அவளைப் பிடித்துக்கொண்டார்கள். \b \q1 \v 4 நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்கு ஒருவரும் வராததால், \q2 சீயோனின் தெருக்கள் துக்கங்கொண்டாடுகின்றன. \q1 அவளுடைய வாசல்கள் யாவும் பாழாய்க் கிடக்கின்றன. \q2 அவளுடைய ஆசாரியர்கள் புலம்புகிறார்கள். \q1 அவளுடைய இளம்பெண்கள் துயரப்படுகிறார்கள், \q2 அவள் கசப்பான வேதனையில் இருக்கிறாள். \b \q1 \v 5 அவளுடைய பகைவர்கள் அவளுக்கு தலைவர்களாகி விட்டார்கள்; \q2 அவளுடைய பகைவர்கள் சுகவாழ்வு அடைந்திருக்கிறார்கள். \q1 அவளுடைய அநேக பாவங்களின் நிமித்தம் \q2 யெகோவா அவளுக்கு துக்கத்தைக் கொடுத்தார். \q1 அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன் \q2 கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர். \b \q1 \v 6 சீயோன் மகளின் \q2 சீர்சிறப்பெல்லாம் அவளைவிட்டு நீங்கிற்று. \q1 அவளுடைய இளவரசர்கள் மேய்ச்சலை காணாத \q2 மான்களைப் போலானார்கள்; \q1 அவர்கள் தங்களை துரத்துகிறவர்களுக்கு முன்பாக \q2 பலவீனமுற்று தப்பி ஓடினார்கள். \b \q1 \v 7 எருசலேம் துன்பப்பட்டு அலைந்த நாட்களில், \q2 முற்காலத்தில் தனக்குச் சொந்தமாயிருந்த \q2 செல்வங்களையெல்லாம் நினைவுகூருகிறாள். \q1 அவளுடைய மக்கள் பகைவரின் கையில் விழுந்தபோது, \q2 அவளுக்கு உதவிசெய்ய ஒருவருமே இருந்ததில்லை. \q1 மக்களுக்கு ஏற்பட்ட அழிவைக் கண்டு, \q2 அவளுடைய பகைவர் அவளைப் பார்த்து நகைத்தார்கள். \b \q1 \v 8 எருசலேம் பெரும் பாவம் செய்து அசுத்தமடைந்தாள். \q2 அவளை கனம்பண்ணின யாவரும் \q1 அவளுடைய நிர்வாணத்தைக் கண்டதினால், \q2 அவளை அவமதிக்கிறார்கள்; \q1 அவள் தனக்குள் அழுது, \q2 தன் முகத்தை மறைத்துக் கொள்கிறாள். \b \q1 \v 9 அவளுடைய அசுத்தம் அவளுடைய உடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது; \q2 அவள் தன்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவில்லை. \q1 ஆகையினால் அவளுடைய வீழ்ச்சி அதிர்ச்சியாயிருந்தது; \q2 அவளை தேற்றுவார் ஒருவரும் இல்லை. \q1 “யெகோவாவே, என்னுடைய துன்பத்தைப் பாரும்; \q2 என்னுடைய பகைவன் என்னை வெற்றி கொண்டானே” என்று அழுகிறாள். \b \q1 \v 10 பகைவன் எருசலேமின் இன்பமான \q2 எல்லாவற்றின்மேலும் தன் கைகளை வைத்தான். \q1 அவளுடைய பரிசுத்த இடத்திற்குள் \q2 பிறநாட்டினர் நுழைவதை அவள் கண்டாள். \q1 யெகோவா தடைசெய்தவர்கள் \q2 அவருடைய சபைக்குள் நுழைவதை அவள் கண்டாள். \b \q1 \v 11 அவளுடைய மக்கள் யாவரும் \q2 அப்பத்தைத் தேடித் தவிக்கிறார்கள். \q1 அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்கள் திரவியங்களை \q2 உணவுக்காக பண்டம் மாற்றம் செய்கிறார்கள். \q1 அவள், “யெகோவாவே கவனித்துப் பாரும்! \q2 நான் அவமதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று துக்கிக்கிறாள். \b \q1 \v 12 “இந்த வழியாய் கடந்துபோகிறவர்களே, \q2 உங்களுக்கு இது ஒரு பொருட்டாய் தோன்றவில்லையோ? \q1 சுற்றிலும் நோக்கிப்பாருங்கள். \q2 யெகோவா தமது கடுங்கோபத்தின் நாளில், \q1 என்மேல் கொண்டுவந்த வேதனையைப்போன்ற \q2 வேதனை ஏதும் உண்டோ? \b \q1 \v 13 “யெகோவா உயரத்திலிருந்து நெருப்பை அனுப்பினார். \q2 அதை எனது எலும்புகளுக்குள் இறங்கப் பண்ணினார். \q1 அவர் என்னுடைய கால்களுக்கு ஒரு வலையை விரித்து, \q2 என்னைப் பின்னோக்கி திருப்பிவிட்டார். \q1 அவர் என்னைப் பாழாக்கி, \q2 நாள்தோறும் மயக்கமடையச் செய்தார். \b \q1 \v 14 “என்னுடைய பாவங்கள் ஒரு நுகமாக கட்டப்பட்டிருக்கின்றன; \q2 அவை அவருடைய கைகளால் ஒன்றாக்கப்பட்டு, \q1 என் கழுத்தின்மேல் போடப்பட்டுள்ளன. \q2 யெகோவா என் பெலனை குன்றப்பண்ணினார். \q1 என்னால் எதிர்க்க முடியாதவர்களிடத்தில் \q2 என்னை ஒப்புக்கொடுத்து விட்டார். \b \q1 \v 15 “என் மத்தியிலிருந்த இராணுவவீரர்களையெல்லாம் \q2 யெகோவா புறக்கணித்துவிட்டார்; \q1 என்னிடமுள்ள என்னுடைய வாலிபரை நசுக்கும்படி, \q2 எனக்கெதிராக ஒரு படையை அழைத்திருக்கிறார். \q1 யூதாவின் கன்னிகையை யெகோவா \q2 தம் திராட்சை ஆலையில் மிதித்துப்போட்டார். \b \q1 \v 16 “இதனால்தான் நான் அழுகிறேன். \q2 என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது. \q1 என்னைத் தேற்ற என் அருகில் யாரும் இல்லை. \q2 என் ஆவிக்கு புத்துயிர் அழிக்கவும் ஒருவரும் இல்லை. \q1 பகைவன் வெற்றிகொண்டபடியினால், \q2 என்னுடைய பிள்ளைகள் ஆதரவற்றுப் போனார்கள்.” \b \q1 \v 17 சீயோன் தன் கைகளை உதவிக்காக நீட்டுகிறாள், \q2 அவளை ஆறுதல்படுத்த ஒருவரும் இல்லை. \q1 யாக்கோபின் அயலவர் அவனுக்குப் \q2 பகைவர்களாகும்படி யெகோவா நியமித்திருக்கிறார்; \q1 அவர்கள் மத்தியில் எருசலேம் \q2 ஒரு அசுத்தப் பொருளாயிற்று. \b \q1 \v 18 “யெகோவா நேர்மையுள்ளவர், \q2 இருந்தாலும் நான் அவருடைய கட்டளைக்கு எதிராகக் கலகம் செய்தேன். \q1 மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள்; \q2 என்னுடைய துன்பத்தைப் பாருங்கள். \q1 என் இளைஞரும், இளம்பெண்களும் \q2 நாடுகடத்தப்பட்டுப் போனார்கள். \b \q1 \v 19 “நான் என் கூட்டாளிகளை கூப்பிட்டேன், \q2 அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள். \q1 என்னுடைய ஆசாரியரும், \q2 முதியோரும் தங்கள் உயிரைக் காக்க \q1 உணவு தேடுகையில், \q2 பட்டணத்தில் அழிந்துபோனார்கள். \b \q1 \v 20 “யெகோவாவே பாரும்! நான் எவ்வளவாய் துயரப்பட்டிருக்கிறேன். \q2 நான் எனக்குள்ளே கடும் வேதனைப்படுகிறேன். \q1 என் இருதயத்தில் கலக்கமுற்றிருக்கிறேன். \q2 ஏனெனில் நான் அதிகமாய் கலகம் பண்ணினேன். \q1 வெளியே, வாள் அழிக்கிறது; \q2 உள்ளே, மரணம் மட்டுமே இருக்கிறது. \b \q1 \v 21 “என்னுடைய புலம்பலை மக்கள் கேட்டிருக்கிறார்கள், \q2 ஆனால் என்னைத் தேற்றுவதற்கோ ஒருவரும் இல்லை. \q1 என் பகைவர்கள் யாவரும் எனக்கு வந்த துயரத்தைக் கேள்விப்பட்டு, \q2 நீர் அதை செய்தபடியால் மகிழ்ச்சியடைகிறார்கள். \q1 அவர்களும் என்னைப் போலாகும்படி நீர் \q2 அறிவித்த நாளை வரப்பண்ணும். \b \q1 \v 22 “அவர்களுடைய கொடுமைகள் எல்லாம் உமக்கு முன்பாக வரட்டும்; \q2 என்னுடைய எல்லா பாவங்களுக்காக \q1 நீர் எனக்குச் செய்ததுபோலவே, \q2 அவர்களுக்கும் செய்யும். \q1 என் புலம்பல்கள் அநேகம், \q2 என் இருதயமும் சோர்ந்துபோகிறது.” \b \b \c 2 \q1 \f + \fr 2 \fr*\ft இந்த அதிகாரம் ஒரு அகரவரிசை கவிதை, இதன் வசனங்கள் எபிரெய எழுத்துக்களின் அடுத்தடுத்த எழுத்துக்களுடன் தொடங்குகின்றன.\ft*\f* \v 1 யெகோவா தமது கோபத்தின் மேகத்தால் \q2 சீயோன் மகளை எப்படி மூடிப்போட்டார்; \q1 இஸ்ரயேலின் சீர்சிறப்பை \q2 வானத்திலிருந்து பூமிக்குத் தள்ளிவிட்டார்; \q1 அவர் தமது கோபத்தின் நாளில் \q2 தமது பாதபீடத்தை நினைவுகூரவில்லை. \b \q1 \v 2 யாக்கோபின் எல்லா குடியிருப்புகளையும் \q2 யெகோவா இரக்கமின்றி விழுங்கிவிட்டார்; \q1 யூதா மகளின் கோட்டைகளை \q2 தமது கோபத்தில் தகர்த்து வீழ்த்திப்போட்டார். \q1 அரசுகளையும், அதன் இளவரசர்களையும் \q2 அவமானப்படுத்தி தரையிலே தள்ளினார். \b \q1 \v 3 அவருடைய கோபத்தினால் \q2 இஸ்ரயேலின் முழு பலத்தையும்\f + \fr 2:3 \fr*\ft மூல மொழியில் \ft*\fqa கொம்பு \fqa*\ft என எழுதப்பட்டுள்ளது.\ft*\f* இல்லாமல் பண்ணினார். \q1 அவர் தமது வலது கரத்தை, பகைவர்கள் நெருங்கி வருகையில், விலக்கிக்கொண்டார். \q2 அவர் யாக்கோபின் நாட்டில், \q1 தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எரிக்கிற, \q2 கொழுந்துவிட்டெரிகிற நெருப்பைப்போல எரிந்தார். \b \q1 \v 4 அவர் ஒரு பகைவனைப்போல வில்லை நாணேற்றினார்; \q2 அவரது வலதுகரம் ஆயத்தமாயிருக்கிறது. \q1 அவர் பகைவனைப்போல \q2 கண்ணுக்கு இனியவர்களையெல்லாம் வெட்டிப்போட்டார்; \q1 சீயோன் மகளின் கூடாரத்தில் \q2 தமது கடுங்கோபத்தை நெருப்பைப்போல் ஊற்றிவிட்டார். \b \q1 \v 5 ஆண்டவர் ஒரு பகைவனைப் போலிருக்கிறார்; \q2 அவர் இஸ்ரயேலை விழுங்கிவிட்டார்; \q1 அவளுடைய எல்லா அரண்மனைகளையும் விழுங்கி, \q2 அவளுடைய கோட்டைகளை அழித்துவிட்டார். \q1 யூதாவின் மகளுக்கு புலம்பலையும், \q2 துக்கங்கொண்டாடலையும் அதிகரிக்கச் செய்தார். \b \q1 \v 6 அவர் தமது ஆலயத்தை ஒரு தோட்டத்தின் குடிசையைப்போல பாழாக்கிவிட்டார்; \q2 அவர் தமது சபைக்கூடும் இடத்தையும் அழித்துப்போட்டார். \q1 யெகோவா, சீயோனுக்கு நியமித்த பண்டிகைகளையும், \q2 ஓய்வுநாட்களையும் அவள் நினைவிலிருந்தே எடுத்துப்போட்டார்; \q1 தமது கடுங்கோபத்தில் அரசனையும், \q2 ஆசாரியனையும் புறக்கணித்துப் போட்டார். \b \q1 \v 7 யெகோவா தமது சொந்த பலிபீடத்தை புறக்கணித்து, \q2 தமது பரிசுத்த இடத்தையும் கைவிட்டார். \q1 அவளுடைய அரண்மனைகளின் சுவர்களை \q2 பகைவரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; \q1 அவர்கள் நியமித்த பண்டிகை நாளிலிருப்பதுபோல் \q2 யெகோவாவின் ஆலயத்தில் ஆரவாரம் செய்தார்கள். \b \q1 \v 8 யெகோவா சீயோன் மகளைச் சுற்றியுள்ள சுவரை \q2 அழிப்பதற்குத் தீர்மானித்துவிட்டார். \q1 அவர் ஒரு அளவு நூலை நீட்டி அளந்தார். \q2 அவர் அழிப்பதிலிருந்து தமது கையை விலக்கிக் கொள்ளவில்லை. \q1 அதனால் அவர் அரண்களையும், மதில்களையும் புலம்பச் செய்தார்; \q2 அவை ஒன்றாக பாழாய்ப்போயின. \b \q1 \v 9 எருசலேமின் வாசல்கள் நிலத்திற்குள்ளே புதைந்து கிடக்கின்றன; \q2 அவைகளின் தாழ்ப்பாள்களை அவர் உடைத்து அழித்துவிட்டார். \q1 அவளுடைய அரசனும், அவளுடைய இளவரசர்களும் \q2 நாடுகளுக்கு நடுவே நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள். \q2 சட்டம் இல்லாமற்போயிற்று. \q1 அவளுடைய இறைவாக்கு உரைப்போருக்கு \q2 யெகோவாவிடமிருந்து தரிசனங்கள் கிடைப்பதில்லை. \b \q1 \v 10 சீயோன் மகளின் முதியோர் \q2 மவுனமாய் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்; \q1 அவர்கள் தங்கள் தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டு, \q2 துக்கவுடையை உடுத்திக்கொண்டார்கள். \q1 எருசலேமின் இளம்பெண்கள் \q2 தங்கள் தலைகளை தரைமட்டும் தாழ்த்தியிருக்கிறார்கள். \b \q1 \v 11 அழுகிறதினால் என் கண்கள் மங்கிப்போயிற்று. \q2 நான் எனக்குள் வேதனையடைகிறேன். \q1 என் இருதயம் தரையிலே ஊற்றப்படுகிறது. \q2 ஏனெனில் என் மக்கள் அழிக்கப்படுகிறார்கள். \q1 பிள்ளைகளும் குழந்தைகளும் \q2 பட்டணத்துத் தெருக்களில் மயங்கி விழுந்து கிடக்கிறார்கள். \b \q1 \v 12 அப்பிள்ளைகள் காயமுற்ற மனிதரைப்போல், \q2 பட்டணத்து வீதிகளில் மயங்கிக் கிடக்கிறார்கள். \q1 அவ்வேளையில் அவர்கள் தங்கள் தாயாரிடம், \q2 “அப்பமும், பானமும் எங்கே?” \q1 எனக்கேட்டு தாயாரின் கைகளில் \q2 உயிரை விடுகிறார்கள். \b \q1 \v 13 எருசலேம் மகளே! \q2 உனக்கு என்ன சொல்வேன்? \q2 உன்னை நான் எதனோடு ஒப்பிடுவேன்? \q1 சீயோன் கன்னி மகளே, \q2 நான் உன்னைத் தேற்றும்படி \q2 எதனுடன் உன்னை ஒப்பிட முடியும்? \q1 உன் காயம் கடலைப்போல் ஆழமாயிருக்கிறதே. \q2 யார் உன்னைக் குணமாக்க முடியும்? \b \q1 \v 14 உனது இறைவாக்கு உரைப்போரின் \q2 தரிசனங்கள் பொய்யும் பயனற்றவையுமே; \q1 உனது சிறையிருப்பைத் தடுக்கும்படி, \q2 அவர்கள் உன் பாவங்களை சுட்டிக்காட்டவில்லை. \q1 அவர்கள் உனக்குக் கொடுத்த இறைவாக்குகள் பொய்யும், \q2 வழிதவறச் செய்வதுமே. \b \q1 \v 15 உன் வழியாய்க் கடந்து போகிறவர்கள் எல்லோரும், \q2 உன்னைப் பார்த்து தங்கள் கைகளைத் தட்டுகிறார்கள்; \q1 எருசலேம் மகளைப் பார்க்கிறவர்கள் \q2 கேலிசெய்து தங்கள் தலைகளை அசைத்துச் சொல்கிறதாவது: \q1 “அழகின் நிறைவு என்றும், \q2 பூமி முழுவதற்கும் மகிழ்ச்சி என்றும் \q2 அழைக்கப்பட்ட நகரம் இதுதானா?” \b \q1 \v 16 உன் பகைவர்கள் எல்லோரும், \q2 உனக்கெதிராகத் தங்கள் வாய்களை விரிவாகத் திறந்து வசைமொழி கூறுகிறார்கள்; \q1 அவர்கள் கேலிசெய்து தங்களுடைய பற்களைக் கடித்துச் சொல்கிறதாவது: \q2 “நாங்கள் அவளை விழுங்கிவிட்டோம். \q1 இந்த நாளுக்காகவே நாங்கள் காத்திருந்தோம். \q2 அதைக் காணவே நாங்கள் உயிரோடிருந்தோம்.” \b \q1 \v 17 யெகோவா தாம் திட்டமிட்டதைச் செய்துவிட்டார்; \q2 அவர் நீண்ட நாட்களுக்குமுன் நியமனம் செய்த தமது வார்த்தையை, \q2 நிறைவேற்றிவிட்டார். \q1 எருசலேமை அவர் இரக்கமின்றி கவிழ்த்துப் போட்டார், \q2 பகைவன் உன்மேல் இழிவுபடுத்தி மகிழ அவர் இடமளித்தார். \q2 அவர் உன் பகைவரின் பெலத்தை ஓங்கச் செய்தார். \b \q1 \v 18 மக்களின் இருதயங்கள் \q2 ஆண்டவரை நோக்கிக் கதறுகின்றன. \q1 சீயோன் மகளின் மதிலே, \q2 உனது கண்ணீர் இரவும் பகலும் \q2 ஒரு நதியைப்போல் ஓடட்டும்; \q1 உனக்கு ஓய்வு கொடாதே, \q2 கண்ணீர்விடாமல் இருக்காதே. \b \q1 \v 19 எழும்பு, இரவிலே \q2 முதற்சாமத்தில் கதறி அழு, \q1 யெகோவாவினுடைய சமுகத்தில் \q2 உன் இருயத்தைத் தண்ணீரைப்போல் ஊற்று. \q1 ஒவ்வொரு தெருவின் முனையிலும், \q2 பசியினால் மயங்கி விழும் \q1 உனது பிள்ளைகளின் உயிருக்காக \q2 அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து. \b \q1 \v 20 “யெகோவாவே, கவனித்துப் பாரும்: \q2 நீர் யாரையாகிலும் இவ்விதமாய் எப்பொழுதாவது நடத்தியிருக்கிறீரோ? \q1 பெண்கள் தாம் பெற்றெடுத்த பிள்ளைகளை உண்ண வேண்டுமோ? \q2 தாங்கள் பராமரித்த வழித்தோன்றல்களை உண்ண வேண்டுமோ? \q1 ஆண்டவரின் பரிசுத்த இடத்தில் \q2 ஆசாரியரும் இறைவாக்கினரும் கொல்லப்பட வேண்டுமோ? \b \q1 \v 21 “வாலிபரும், முதியோரும் ஒன்றாய் வீதிகளின் \q2 புழுதியில் விழுந்து கிடக்கிறார்கள்; \q1 வாலிபரும், கன்னிப்பெண்களும் \q2 வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். \q1 உமது கோபத்தின் நாளிலே அவர்களை வெட்டிப் போட்டீர்; \q2 இரக்கமின்றி அவர்களை வெட்டிக் கொன்றீர். \b \q1 \v 22 “ஒரு விருந்து நாளுக்கு அழைப்பதுபோல, \q2 திகிலுண்டாகும்படி எல்லாப் பக்கங்களிலும் எதிரிகளை வரவழைத்தீர். \q1 யெகோவாவின் கோபத்தின் நாளில் ஒருவனாகிலும் தப்பவுமில்லை, \q2 பிழைக்கவுமில்லை; \q1 நான் பராமரித்து வளர்த்தவர்களை, \q2 என் பகைவன் அழித்துவிட்டான்.” \b \b \c 3 \q1 \f + \fr 3 \fr*\ft இந்த அதிகாரம் ஒரு அகரவரிசை கவிதை; இதன் வசனங்கள் எபிரெய எழுத்துக்களின் அடுத்தடுத்த எழுத்துக்களுடன் தொடங்குகின்றன.\ft*\f* \v 1 அவருடைய கோபத்தின் பிரம்பினால் \q2 உண்டான வேதனையைக் கண்ட மனிதன் நானே. \q1 \v 2 அவர் என்னை வெளியே துரத்தி, \q2 வெளிச்சத்தில் அல்ல, இருளிலேயே நடக்கச் செய்தார். \q1 \v 3 உண்மையாக, திரும்பதிரும்ப நாள்முழுவதும் \q2 அவர் தமது கையை என்மேல் திருப்பினார். \b \q1 \v 4 எனது தசையையும் தோலையும் முதுமையடையும்படி செய்தார், \q2 என் எலும்புகளையும் உடைத்துவிட்டார். \q1 \v 5 அவர், கசப்பும் கஷ்டமும் \q2 முற்றுகையிட்டு என்னைச் சூழும்படி செய்தார். \q1 \v 6 வெகுகாலத்திற்குமுன் இறந்தவர்களைப்போல், \q2 என்னை இருளில் குடியிருக்கப் பண்ணினார். \b \q1 \v 7 நான் தப்பிவிடாதபடி அவர் என்னைச் சுற்றி வேலியடைத்தார்; \q2 அவர் பாரமான சங்கிலிகளை என்மேல் சுமத்தினார். \q1 \v 8 நான் உதவிக்காகக் கூப்பிடும்போதோ, \q2 கதறி அழுகிறபோதோ அவர் என் மன்றாட்டைக் கேட்க மறுக்கிறார். \q1 \v 9 செதுக்கிய கற்களால் அவர் என் வழியைத் தடைசெய்திருக்கிறார்; \q2 அவர் என் பாதைகளைக் கோணலாக்கியிருக்கிறார். \b \q1 \v 10 பதுங்கியிருக்கும் கரடியைப்போலவும், \q2 மறைந்திருக்கும் சிங்கத்தைப் போலவும், \q1 \v 11 அவர் என்னைப் பாதையிலிருந்து இழுத்து, \q2 என்னை உருக்குலைத்து உதவியின்றிக் கைவிட்டார். \q1 \v 12 அவர் தம்முடைய வில்லை வளைத்து, \q2 தமது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார். \b \q1 \v 13 அவர் தன்னுடைய அம்புக் கூட்டிலிருந்த \q2 அம்புகளினால் என் இருதயத்தைக் குத்தினார். \q1 \v 14 நான் என்னுடைய எல்லா மக்களுக்கும் ஒரு சிரிப்புக்குரிய பொருளானேன்; \q2 அவர்கள் நாள்முழுவதும் பாடலினால் என்னை ஏளனம் செய்கிறார்கள். \q1 \v 15 அவர் என்னை கசப்பினால் நிரப்பி, \q2 காடியின் கசப்பினால் என்னை வெறுப்படையச் செய்தார். \b \q1 \v 16 அவர் என் பற்களைச் சரளைக் கல்லினால் உடைத்தார்; \q2 அவர் என்னைப் புழுதியில் மிதித்துவிட்டார். \q1 \v 17 நான் சமாதானத்தை இழந்திருக்கிறேன்; \q2 சுகவாழ்வு என்ன என்பதையும் மறந்துவிட்டேன். \q1 \v 18 ஆகையால் நான் கூறினதாவது, “என் சீர்சிறப்பும், யெகோவாவிடம் நான் கொண்டிருந்த \q2 எல்லா எதிர்பார்ப்பும் இல்லாமல் போயிற்று.” \b \q1 \v 19 நான் எனது துன்பத்தையும், அலைச்சலையும், \q2 அதன் மனக் கசப்பையும், காடியையும் நினைவுகூருகிறேன். \q1 \v 20 நான் அவைகளை நன்கு நினைவுகூருகிறேன், \q2 அப்பொழுது என் ஆத்துமா எனக்குள்ளே சோர்ந்துபோயிற்று. \q1 \v 21 ஆயினும் நான் இதை மனதில் கொண்டேன். \q2 அதனால் எனக்கு நம்பிக்கை உண்டு: \b \q1 \v 22 அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம். \q2 ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை. \q1 \v 23 உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன; \q2 உமது உண்மை பெரியது. \q1 \v 24 நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு; \q2 ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்.” \b \q1 \v 25 யெகோவாவிடம் எதிர்பார்ப்பு வைக்கிறவருக்கும், \q2 அவரைத் தேடுகிறவர்களுக்கும் அவர் நல்லவர். \q1 \v 26 எனவே யெகோவாவின் இரட்சிப்புக்காக \q2 அமைதியாய் காத்திருப்பது நல்லது. \q1 \v 27 இளைஞனாய் இருக்கும்போதே \q2 அவரது கண்டனத்தின் நுகத்தைச் சுமப்பது ஒரு மனிதனுக்கு நல்லது. \b \q1 \v 28 யெகோவா தாமே அதை அவன்மேல் வைத்தபடியால், \q2 அவன் மவுனமாய் தனிமையாய் அனுபவிக்கட்டும். \q1 \v 29 அவன் புழுதியில் தன் முகத்தைப் புதைக்கட்டும், \q2 ஒருவேளை இன்னமும் அவனுக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம். \q1 \v 30 அவன் தன்னை அடிப்பவனுக்குத் தன் மறு கன்னத்தைக் கொடுக்கட்டும், \q2 பகைவன் கொடுக்கும் அவமானங்களை ஏற்றுக்கொள்ளட்டும். \b \q1 \v 31 ஏனென்றால், ஆண்டவரால் ஒருவரும் \q2 என்றென்றும் கைவிடப்படுவதில்லை. \q1 \v 32 அவர் துக்கத்தை வருவித்தாலும், அவர் இரக்கம் காண்பிப்பார். \q2 அவரது நேர்மையான அன்பு அவ்வளவு பெரியது. \q1 \v 33 அவர் துன்பத்தையோ துக்கத்தையோ \q2 மனிதரின் பிள்ளைகள்மேல் விருப்பத்துடன் வருவிப்பதில்லை. \b \q1 \v 34 நாட்டிலுள்ள சிறைக் கைதிகளையெல்லாம் \q2 கால்களின்கீழ் மிதிப்பதையும், \q1 \v 35 ஒருவனின் மனித உரிமைகளை \q2 மகா உன்னதமானவரின் முன்னிலையில் மறுப்பதையும், \q1 \v 36 ஒரு மனிதனுக்கு நீதி வழங்கப்படாதிருப்பதையும் \q2 யெகோவா காணாதிருப்பாரோ? \b \q1 \v 37 யெகோவா உத்தரவிடாவிட்டால், \q2 எதையாவது பேசி அதை நிகழப்பண்ண யாரால் முடியும்? \q1 \v 38 பேரழிவு, நல்ல காரியங்கள் ஆகிய இரண்டும் \q2 மகா உன்னதமான இறைவனுடைய வாயிலிருந்தல்லவோ வருகின்றன. \q1 \v 39 வாழ்கிற எந்த மனிதனும், \q2 தன் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படும்போது, ஏன் முறையிடவேண்டும்? \b \q1 \v 40 ஆகவே நாங்கள் எங்கள் வழிகளை ஆராய்ந்து சோதிப்போம், \q2 யெகோவாவிடம் திரும்புவோம். \q1 \v 41 எங்கள் இருதயங்களையும், கைகளையும் \q2 பரலோகத்திலிருக்கும், இறைவனுக்கு நேராக உயர்த்தி: \q1 \v 42 “நாங்கள் பாவம் செய்து கலகம் பண்ணினோம், \q2 நீர் எங்களை மன்னிக்கவில்லை. \b \q1 \v 43 “நீர் கோபத்தினால் உம்மை மூடிக்கொண்டு எங்களைப் பின்தொடர்ந்தீர்; \q2 இரக்கமின்றி எங்களைக் கொன்றுபோட்டீர். \q1 \v 44 மேகத்தினால் நீர் உம்மை மூடிக்கொண்டிருப்பதால், \q2 மன்றாட்டு எதுவும் உம்மிடத்தில் வராது. \q1 \v 45 நீர் எங்களை நாடுகளுக்குள் \q2 குப்பையும் கூழமுமாக ஆக்கியிருக்கிறீர். \b \q1 \v 46 “எங்கள் பகைவர்கள் யாவரும் தங்கள் வாயை விரிவாகத் திறந்து \q2 எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள். \q1 \v 47 எங்கள்மேல் பயங்கரமும் கண்ணியும், \q2 பாழும் அழிவும் வந்தன.” \q1 \v 48 என் மக்கள் அழிக்கப்பட்டதனால் \q2 என் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஓடுகிறது. \b \q1 \v 49 என் கண்கள் ஓய்வின்றி, \q2 கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும். \q1 \v 50 பரலோகத்திலிருந்து யெகோவா \q2 கண்ணோக்கிப் பார்க்கும் வரைக்கும். \q1 \v 51 என் நகரத்திலுள்ள பெண்களின் நிலைமையை நான் காண்கையில், \q2 என் ஆத்துமா துக்கிக்கிறது. \b \q1 \v 52 காரணமின்றி எனக்குப் பகைவர்களாயிருந்தவர்கள், \q2 என்னை ஒரு பறவையைப்போல் வேட்டையாடினார்கள். \q1 \v 53 அவர்கள் என் வாழ்வை முடிக்க முயன்று, \q2 குழியில் தள்ளி என்மேல் கற்களை எறிந்து மூடினார்கள்; \q1 \v 54 வெள்ளம் என் தலையை மூடிக்கொண்டது. \q2 நான் அழிந்து போகப்போகிறேன் என்று நினைத்தேன். \b \q1 \v 55 யெகோவாவே, குழியின் ஆழத்திலிருந்து, \q2 உமது பெயரைச்சொல்லிக் கூப்பிட்டேன். \q1 \v 56 “ஆறுதலுக்காகக் கதறும் என் சத்தத்திற்கு உமது செவியை மூடிக்கொள்ளாதேயும்” \q2 என்ற என் விண்ணப்பத்தை நீர் கேட்டீர். \q1 \v 57 நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, நீர் என் அருகே வந்து, \q2 “நீ பயப்படாதே” என்றீர். \b \q1 \v 58 யெகோவாவே, நீரே என் வழக்கை பொறுப்பேற்றீர்; \q2 என் உயிரை மீட்டுக்கொண்டீர். \q1 \v 59 யெகோவாவே! எனக்குச் செய்யப்பட்ட தீமைகளை நீர் கண்டிருக்கிறீர். \q2 நீர் எனக்காக வாதாடும்! \q1 \v 60 அவர்களுடைய பழிவாங்குதலின் ஆழத்தையும், \q2 அவர்கள் எனக்கெதிராகப் போட்ட சதித்திட்டங்களையும் கண்டிருக்கிறீர். \b \q1 \v 61 யெகோவாவே, அவர்களுடைய எல்லா அவமதிப்புகளையும், \q2 எனக்கெதிரான அவர்களுடைய எல்லா சதிகளையும் கேட்டீர்; \q1 \v 62 அதை என் பகைவர்கள் நாள்முழுவதும் இரகசியமாய்ப் பேசி, \q2 எனக்கு எதிராய் முணுமுணுக்கிறார்கள். \q1 \v 63 அவர்களைப் பாரும்! உட்கார்ந்தாலும் நின்றாலும், \q2 அவர்கள் தங்கள் பாடல்களால் என்னை கேலி செய்கிறார்கள். \b \q1 \v 64 யெகோவாவே, அவர்களுக்குத் தகுந்த பதில் செய்யும். \q2 அவர்களின் கைகள் செய்தவற்றுக்காக பதில் செய்யும். \q1 \v 65 அவர்களுடைய இருதயத்தின்மேல் திரைபோடும், \q2 உமது சாபம் அவர்கள்மேல் இருக்கட்டும். \q1 \v 66 கோபத்தோடு அவர்களைப் பின்தொடர்ந்து, \q2 யெகோவாவின் வானங்களின் கீழ் இருந்து அவர்களை அழித்துப்போடும். \b \b \c 4 \q1 \f + \fr 4 \fr*\ft இந்த அதிகாரம் ஒரு அகரவரிசை கவிதை, இதன் வசனங்கள் எபிரெய எழுத்துக்களின் அடுத்தடுத்த எழுத்துக்களுடன் தொடங்குகின்றன.\ft*\f* \v 1 தங்கம் எவ்வளவாய் தன் ஒளியை இழந்து, \q2 சுத்தத் தங்கமும் எவ்வளவாய் மங்கிப்போயிற்றே! \q1 பரிசுத்த இடத்தின் இரத்தினக் கற்கள் \q2 தெருவின் முனைகளிலும் சிதறுண்டு கிடக்கின்றன. \b \q1 \v 2 ஒருகாலத்தில் சுத்தத் தங்கத்தின் மதிப்பிற்கு ஒப்பாயிருந்த, \q2 விலைமதிப்புமிக்க சீயோன் மகன்கள், \q1 இப்போது மண் பாத்திரங்களாய் எண்ணப்படுகிறார்கள். \q2 குயவனின் கைவேலையாக மதிக்கப்படுகிறார்கள். \b \q1 \v 3 நரிகளும் தங்கள் குட்டிகளுக்கு \q2 பால் கொடுக்கும். \q1 ஆனால் என் மக்களோ பாலைவனத்திலுள்ள தீக்கோழிகளைப்போல, \q2 கொடூர மனமுள்ளவர்களானார்கள். \b \q1 \v 4 தாகத்தினால் குழந்தையின் நாவு \q2 அதன் மேல்வாய் அண்ணத்துடன் ஒட்டிக்கொள்கிறது; \q1 பிள்ளைகள் உணவுக்காக கெஞ்சுகின்றனர், \q2 ஆனால் அதைக் கொடுப்பவர் ஒருவருமில்லை. \b \q1 \v 5 சுவையான உணவை ஒருகாலத்தில் உண்டவர்கள் \q2 வீதிகளில் ஆதரவற்றுத் திரிகிறார்கள். \q1 மென்பட்டு உடை அணிந்து முன்பு வாழ்ந்தவர்கள் \q2 இப்போது சாம்பல் மேடுகளில் இருக்கிறார்கள். \b \q1 \v 6 உதவும் கரம் எதுவுமின்றி \q2 ஒரு நொடியில் கவிழ்க்கப்பட்ட சோதோமின் \q1 தண்டனையைவிட, என் மக்களின் \q2 தண்டனை பெரிதாயிருக்கிறது. \b \q1 \v 7 அவர்களின் இளவரசர்கள்\f + \fr 4:7 \fr*\fq இளவரசர்கள் \fq*\ft அல்லது \ft*\fqa நசரேயர்கள். \+xt நியா. 13:5.\+xt*\fqa*\f* உறைபனியைப் பார்க்கிலும் பிரகாசமாயும், \q2 பாலைவிட வெண்மையாயும் இருந்தார்கள். \q1 அவர்களின் உடல்கள் பவளத்தைவிட சிவப்பாகவும், \q2 அவர்களின் தோற்றம் நீல மாணிக்கக் கற்களைப்போலவும் இருந்தன. \b \q1 \v 8 ஆனால் இப்பொழுதோ அவர்கள் அடுப்புக்கரியைவிடக் கறுப்பாயிருக்கிறார்கள்; \q2 வீதிகளில் அவர்கள் இன்னார் என அறியப்படாதிருக்கிறார்கள். \q1 அவர்களுடைய தோல், எலும்புகளின்மேல் சுருங்கி \q2 காய்ந்த மரத்திற்கு ஒப்பானது. \b \q1 \v 9 பஞ்சத்தால் சாகிறவர்களைவிட, \q2 வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களின் நிலை மேலானது; \q1 பஞ்சத்தால் சாகிறவர்களோ வயல்களின் விளைச்சல் குறைவுபட்டதால் \q2 பசியினால் துன்பப்பட்டு உருக்குலைந்து போகிறார்கள். \b \q1 \v 10 இரக்கமுள்ள பெண்களும் தங்கள் சொந்தக் கைகளால் \q2 தங்கள் சொந்தப் பிள்ளைகளைச் சமைத்தனரே, \q1 என் மக்கள் அழிக்கப்படுகையில் \q2 பிள்ளைகள் அவர்களுக்கு உணவானார்களே! \b \q1 \v 11 யெகோவா தமது கோபத்தை முழுமையாய் வெளிப்படுத்தினார்; \q2 அவர் தமது கடுங்கோபத்தை ஊற்றிவிட்டார். \q1 அவர் சீயோனில் நெருப்பை மூட்டினார். \q2 அது அவளின் அஸ்திபாரங்களை எரித்துப்போட்டது. \b \q1 \v 12 பகைவர்களும் எதிரிகளும், \q2 எருசலேமின் வாசல்களுக்குள் புகுவார்கள் என்று, \q1 பூமியின் அரசர்களோ \q2 உலகத்தின் எந்த மக்களோ நம்பவில்லை. \b \q1 \v 13 ஆனால் அது நடந்தது. \q2 அவளுடைய இறைவாக்கு உரைப்போரின் பாவங்களினாலும், \q1 ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இது நடந்தது. \q2 அவர்களால் எருசலேமுக்குள் நேர்மையானவர்களின் இரத்தம் சிந்தப்பட்டது. \b \q1 \v 14 இப்பொழுதோ அவர்கள் குருடரான \q2 மனிதரைப்போல் வீதிகளில் அலைந்து திரிகிறார்கள். \q1 அவர்கள் இரத்தத்தினால் கறைப்பட்டிருப்பதால், \q2 அவர்களுடைய உடைகளைத் தொடுவதற்குக்கூட ஒருவரும் துணியவில்லை. \b \q1 \v 15 “விலகிப்போங்கள். நீங்கள் அசுத்தமானவர்கள். \q2 விலகுங்கள்! விலகுங்கள்! எங்களைத் தொடாதிருங்கள்” \q1 என்று மனிதர் அவர்களைப் பார்த்து கத்துகிறார்கள். \q2 அவர்கள் தப்பியோடி அலையும்போது அங்குள்ள மக்கள், \q2 “இவர்கள் இனிமேலும் இங்கே இருக்கமுடியாது” என்கிறார்கள். \b \q1 \v 16 யெகோவாவே அவர்களைச் சிதறடித்தார்; \q2 அவர் அவர்கள்மேல் கண்காணிப்பாய் இருப்பதில்லை. \q1 ஆசாரியரைக் கனம்பண்ணுவதுமில்லை, \q2 முதியோருக்கு தயவு காண்பிப்பதுமில்லை. \b \q1 \v 17 அத்துடன் உதவிக்காக வீணாய் பார்த்திருந்தும் \q2 எங்கள் கண்கள் மங்கிப்போயின; \q1 எங்கள் காவல் கோபுரங்களிலிருந்து, \q2 எங்களைக் காப்பாற்ற முடியாத ஒரு நாட்டிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோமே! \b \q1 \v 18 மனிதர் எங்கள் ஒவ்வொரு அடிச்சுவடையும் பதுங்கிப் பின்தொடர்ந்தார்கள், \q2 அதனால் வீதிகளில் எங்களால் நடக்க முடியவில்லை. \q1 எங்கள் முடிவு நெருங்கியிருந்தது, \q2 ஏனெனில் எங்களுக்கு எண்ணப்பட்ட நாட்கள் முடிந்தன, எங்கள் முடிவும் வந்துவிட்டது. \b \q1 \v 19 எங்களைப் பின்தொடர்ந்தவர்கள், \q2 ஆகாயத்தில் பறக்கும் கழுகுகளைப் பார்க்கிலும் வேகமாய் இருந்தார்கள்; \q1 அவர்கள் மலைகளில் எங்களைத் துரத்தி பாலைவனத்தில் \q2 எங்களுக்காய் பதுங்கியிருக்கிறார்கள். \b \q1 \v 20 யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்ட, எங்கள் உயிர்மூச்சான அரசனும், \q2 அவர்களுடைய கண்ணிகளில் அகப்பட்டுக்கொண்டான். \q1 அவனுடைய நிழலின்கீழ், \q2 நாடுகளின் மத்தியில் நாங்கள் வாழ்வோம் என்று நினைத்திருந்தோம். \b \q1 \v 21 ஊத்ஸ் நாட்டில் வாழுகின்ற ஏதோமின் மகளே, \q2 நீ மகிழ்ந்து சந்தோஷப்படு. \q1 ஆனால் உனக்குங்கூட இறை கோபத்தின் பாத்திரம் கொடுக்கப்படும்; \q2 நீ குடித்து வெறிகொண்டு, ஆடையில்லாமல் கிடப்பாய். \b \q1 \v 22 சீயோன் மகளே, உனது தண்டனை முடிவுறும்; \q2 உன் சிறையிருப்பை அவர் நீடிக்கமாட்டார். \q1 ஆனால் ஏதோமின் மகளே, \q2 அவர் உன் பாவங்களைத் தண்டித்து உன் கொடுமைகளை வெளிப்படுத்துவார். \b \b \c 5 \q1 \v 1 யெகோவாவே, எங்களுக்கு நடந்ததை நினைவுகூரும்; \q2 எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும். \q1 \v 2 எங்கள் உரிமைச்சொத்துக்கள் அந்நியருக்கு கொடுக்கப்பட்டன. \q2 எங்கள் வீடுகள் பிறநாட்டவருக்குக் கொடுக்கப்பட்டன. \q1 \v 3 நாங்கள் அநாதைகளானோம், தகப்பன் இல்லை. \q2 எங்கள் தாய்மார்கள் விதவைகளைப் போலிருக்கிறார்கள். \q1 \v 4 நாங்கள் குடிக்கும் தண்ணீரை விலைகொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது; \q2 எங்கள் விறகும் பணத்திற்கே வாங்கப்படுகிறது. \q1 \v 5 எங்களைப் பின்தொடர்கிறவர்கள் எங்கள் காலடியில் நிற்கிறார்கள்; \q2 நாங்கள் களைத்துப்போனோம். ஆனால் எங்களுக்கு ஓய்வு இல்லை. \q1 \v 6 நாங்கள் உணவு பெறுதவதற்காக எகிப்திற்குக் கீழும், \q2 அசீரியாவுக்குக் கீழும் அடங்கிப்போனோம். \q1 \v 7 எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்து, இல்லாமற்போனார்கள்; \q2 நாங்களோ அவர்களுடைய தண்டனைகளைச் சுமக்கிறோம். \q1 \v 8 அடிமைகள் எங்களுக்கு மேலாக ஆளுகிறார்கள், \q2 அவர்களுடைய கையிலிருந்து எங்களை விடுவிக்க யாருமேயில்லை. \q1 \v 9 பாலைவனத்தில் இருக்கும் வாளின் நிமித்தம், \q2 எங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே, எங்கள் உணவைத் தேடுகிறோம். \q1 \v 10 பசியின் கொடுமையினால், \q2 காய்ச்சல் வந்து எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போயிற்று. \q1 \v 11 பெண்கள் சீயோனிலும், கன்னிகைகள் யூதா பட்டணத்திலும் \q2 மானபங்கம் செய்யப்படுகிறார்கள். \q1 \v 12 இளவரசர்களை அவர்கள் கைகளைக் கட்டி தூக்கிலிட்டார்கள்; \q2 முதியோருக்கு மரியாதை காட்டப்படுவதுமில்லை. \q1 \v 13 இளைஞர்கள் ஆலைகளில் செக்கு இழுக்க கொண்டுசெல்லப்படுகிறார்கள்; \q2 சிறுவர்கள் பாரமான மரங்களைச் சுமந்து தள்ளாடுகிறார்கள். \q1 \v 14 முதியோர் பட்டணத்தின் வாசலிலிருந்து போய்விட்டார்கள்; \q2 வாலிபர் தாங்கள் இசை மீட்பதை நிறுத்திவிட்டார்கள். \q1 \v 15 எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி போய்விட்டது; \q2 எங்கள் நடனம் புலம்பலாக மாறிற்று. \q1 \v 16 எங்கள் தலையிலிருந்த மகுடம் விழுந்து விட்டது. \q2 நாங்கள் பாவம் செய்தோமே; எங்களுக்கு ஐயோ கேடு! \q1 \v 17 இதனால் எங்கள் இருதயம் சோர்ந்துபோயிற்று, \q2 இவைகளினால் எங்கள் கண்கள் மங்கிப்போகின்றன; \q1 \v 18 ஏனெனில், சீயோன் மலை பாழாகிக் கிடக்கிறது; \q2 அங்கே நரிகள் இரைதேடித் திரிகின்றன. \b \q1 \v 19 யெகோவாவே, நீரோ என்றென்றும் அரசாளுபவர்; \q2 உமது சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். \q1 \v 20 ஏன் எங்களை நீர் தொடர்ந்து மறந்துவிடுகிறீர்? \q2 ஏன் எங்களை நெடுங்காலமாய் கைவிடுகிறீர்? \q1 \v 21 யெகோவாவே, எங்களைப் புதுப்பித்து எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும்; \q2 எங்கள் நாட்களை முந்திய நாட்களைப்போல் புதிதாக்கும். \q1 \v 22 அப்படியில்லாவிட்டால், நீர் எங்களை முற்றிலுமாக புறக்கணித்துவிடுவீரோ? \q2 எங்கள்மேல் கடுங்கோபம் கொண்டிருக்கிறீரே!