\id HAB - Biblica® Open Indian Tamil Contemporary Version \ide UTF-8 \h ஆபகூக் \toc1 ஆபகூக் \toc2 ஆபகூக் \toc3 ஆப. \mt1 ஆபகூக் \c 1 \p \v 1 இறைவாக்கினன் ஆபகூக் என்பவனுக்கு வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு. \b \s1 ஆபகூக்கின் முறைப்பாடு \q1 \v 2 யெகோவாவே, நான் எவ்வளவு காலத்திற்கு உதவிகேட்டு உம்மைக் கூப்பிட வேண்டும்? \q2 நீரோ இன்னும் செவிகொடாமல் இருக்கிறீரே. \q1 எவ்வளவு காலத்திற்கு உம்மிடம், “வன்முறை” எனக் கதறவேண்டும்? \q2 இன்னும் காப்பாற்றாமல் இருக்கிறீரே. \q1 \v 3 நீர் ஏன் என்னை அநீதியைப் பார்க்கும்படி செய்கிறீர்? \q2 ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறீர்? \q1 அழிவும், வன்செயலும் என் முன்னே இருக்கின்றனவே; \q2 போராட்டமும், வாதையும் பெருகுகின்றன. \q1 \v 4 ஆதலால் சட்டம் வலுவிழந்துள்ளது, \q2 நீதி நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. \q1 கொடுமையானவர்கள் நேர்மையானவர்களை ஒடுக்குகிறார்கள். \q2 அதனால் நீதி புரட்டப்படுகிறதே. \s1 யெகோவாவின் பதில் \q1 \v 5 “பிற நாடுகளைக் கவனித்துப் பாருங்கள், \q2 பார்த்து முழுவதுமாய் வியப்படையுங்கள். \q1 உங்களுக்குச் சொன்னாலும், \q2 உங்களால் நம்பமுடியாத ஒரு செயலை, \q2 உங்கள் நாட்களிலேயே நான் செய்யப்போகிறேன். \q1 \v 6 இரக்கமற்றவர்களும், \q2 மூர்க்கம் கொண்டவர்களுமான பாபிலோனியரை\f + \fr 1:6 \fr*\fq பாபிலோனியரை \fq*\ft அல்லது \ft*\fqa கல்தேயர்கள்\fqa*\f* நான் எழுப்புகிறேன். \q1 அவர்கள் தங்களுக்குச் சொந்தமல்லாத இருப்பிடங்களைக் கைப்பற்றும்படி, \q2 பூமியெங்கும் அணியணியாய் செல்வார்கள். \q1 \v 7 அவர்கள் பயமும் திகிலும் ஊட்டும் மக்கள்; \q2 அவர்கள் தாங்கள் செய்வதே சரியானதும் சட்டமும் என்று எண்ணுகிறவர்கள். \q2 தங்கள் சொந்த மேன்மையை மாத்திரமே தேடுகிறவர்கள். \q1 \v 8 அவர்களுடைய குதிரைகள் சிறுத்தைப் புலிகளைவிட வேகமானவை, \q2 சாயங்காலத்தில் நடமாடும் ஓநாயிலும் பயங்கரமானவை. \q1 அவர்களுடைய குதிரைப்படை தலைதெறிக்க ஓடிவரும்; \q2 அவர்களுடைய குதிரைவீரர்களோ, தொலைவிலிருந்து வருகிறார்கள். \q1 இரைமேல் பாயும் கழுகைப்போல, அவர்கள் வருகிறார்கள்; \q2 \v 9 அவர்கள் எல்லோரும் வன்முறையை நாடியே வருகிறார்கள். \q1 அவர்களுடைய படைகள், பாலைவனக் காற்றுப்போல் முன்னேறிச் சென்று, \q2 கைதிகளை மணலைப்போல வாரிச் சேர்த்துக்கொள்வார்கள். \q1 \v 10 அவர்கள் அரசர்களை கேலிசெய்து, \q2 ஆளுநர்களை ஏளனம் செய்கிறார்கள். \q1 அரண்செய்த பட்டணங்களையெல்லாம் பார்த்து நகைக்கிறார்கள்; \q2 முற்றுகை அரண்களை மண்ணினால் கட்டி, அவற்றைக் கைப்பற்றுகிறார்கள். \q1 \v 11 காற்றைப்போல் கடந்து போகிறார்கள். \q2 அவர்கள் தங்கள் சுயபெலத்தையே தெய்வமாகக் கொண்டிருக்கும் குற்றவாளிகள்.” \s1 ஆபகூக்கின் இரண்டாவது முறைப்பாடு \q1 \v 12 யெகோவாவே, என் இறைவனே, என் பரிசுத்தமானவரே, \q2 நீர் நித்தியத்தில் இருந்தே உள்ளவர் அல்லவோ? \q2 நாங்களும் அழிக்கப்பட்டுப் போவோமா? \q1 யெகோவாவே, எங்கள் நலனுக்காகத்தானே நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற \q2 நீர் பாபிலோனியரை நியமித்திருக்கிறீர்; \q2 கன்மலையே, எங்களைத் தண்டிக்க நீர் அவர்களை அமர்த்தியிருக்கிறீர். \q1 \v 13 உம்முடைய கண்கள் அதிக தூய்மையானதால், \q2 அவை தீமையைப் பார்ப்பதில்லை; \q1 அநியாயத்தை சகிக்க உம்மால் முடியாது. \q2 அப்படியானால் துரோகிகளை நீர் ஏன் சகிக்கிறீர்? \q1 கொடியவர்களான பாபிலோனியர் தங்களைவிட நீதியானவர்களை விழுங்கும்போது \q2 நீர் ஏன் மவுனமாய் இருக்கிறீர்? \q1 \v 14 நீர் எங்களை கடலில் உள்ள மீன்களைப் போலவும், \q2 தலைவனில்லாத கடல் பிராணிகளைப் போலவுமா காண்கிறீர்? \q1 \v 15 பாபிலோனியனான கொடிய எதிரிகள் எல்லோரையும் தூண்டிலினால் இழுக்கிறான். \q2 தனது வலையினால் அவர்களைப் பிடிக்கிறான். \q1 தனது இழுவை வலையினால் அவர்களை ஒன்றாய் அள்ளிச் சேர்க்கிறான். \q2 இவ்விதம் அவன் மகிழ்ச்சிகொண்டு களிகூருகிறான். \q1 \v 16 ஆதலினால் அவன் தனது வலைகளுக்குப் பலியிட்டு, \q2 தனது இழுவை வலைக்கு தூபங்காட்டுகிறான். \q1 ஏனெனில் தனது வலையினால் அவன் செல்வச் சிறப்புடன் வாழ்ந்து \q2 சிறந்த உணவைச் சாப்பிட்டு மகிழ்கிறான். \q1 \v 17 அப்படியாயின் அவன் நாடுகளை இரக்கமின்றி அழிக்க இடங்கொடுப்பீரோ? \q2 அவன் தனது வலையை தொடர்ந்து நிரப்பிக்கொண்டே இருக்கவேண்டுமோ? \b \c 2 \q1 \v 1 நான் போய் என் காவல் கோபுரத்தில் நிற்பேன். \q2 காவல் அரண்கள்மேல் நான் நிலைகொள்வேன், \q1 யெகோவா எனக்கு என்ன சொல்வார் என்று அறியும்படி நான் பார்த்திருப்பேன். \q2 நான் கண்டிக்கப்பட்டால், என்ன மறுமொழி சொல்வேன் \q2 எனவும் சிந்தித்துக் கொண்டிருப்பேன். \s1 யெகோவாவின் பதில் \p \v 2 அப்பொழுது யெகோவா பதிலளித்துச் சொன்னதாவது: \q1 “இந்த வெளிப்படுத்துதலை எழுதிவை, \q2 அதை கற்பலகையில் தெளிவாய் பொறித்து வை. \q2 தூதுவன் அதனுடன் விரைவாய் ஓடி அறிவிக்கக்கூடியதாக இருக்கட்டும். \q1 \v 3 இந்த வெளிப்படுத்தல், அதற்கு நியமிக்கப்பட்ட காலத்தில் \q2 நிறைவேறக் காத்திருக்கிறது. \q1 அது முடிவு காலத்தைப்பற்றிச் சொல்கிறது, \q2 அது பொய்யாய் போகமாட்டாது. \q1 அது வருவதற்குக் காலம் தாழ்த்தினாலும், \q2 அதற்காகக் காத்திரு, அது நிச்சயமாய் வரும், \q2 அது தாமதிக்காது. \b \b \q1 \v 4 “பார், தற்பெருமை கொண்டிருக்கிறானே, \q2 அவனுடைய ஆசைகள் நேர்மையானவை அல்ல; \q2 ஆனால் நீதிமானோ விசுவாசத்தினாலே வாழ்வான். \q1 \v 5 உண்மையாகவே, மதுபானமும், செல்வமும் அவனுக்கு துரோகம் செய்கிறது; \q2 அவன் அகந்தையாய் இருப்பதனால், அமைதியற்று இருக்கிறான். \q1 ஏனெனில் அவன் பாதாளத்தைப்போல் பேராசை உள்ளவனாயும், \q2 சாவைப்போல் திருப்தி அற்றவனாயும் இருக்கிறான். \q1 அதனால் அவன் எல்லா நாடுகளையும் தனக்கெனச் சேர்த்துக்கொள்கிறான். \q2 எல்லா மக்கள் கூட்டங்களையும் கைதிகளாகக் கொண்டுபோகிறான். \p \v 6 “அவர்கள் எல்லோரும் அவனை நிந்தித்து அவதூறு செய்து, \q1 “ ‘இவ்வாறு பழிசொல்லமாட்டார்களோ: \q2 ஐயோ, களவாடிய பொருட்களைக் குவித்து, \q1 பலவந்தமாய் பணம் பறித்து செல்வந்தனாகிற உனக்குக் கேடு, \q2 எவ்வளவு காலத்துக்கு இது நடக்கப்போகிறது?’ \q1 \v 7 உன் கடன்காரர்கள் திடீரென்று எழும்பமாட்டார்களோ? \q2 அவர்கள் எழுந்து உன்னை நடுங்கவைக்கமாட்டார்களோ? \q2 அப்பொழுது நீ அவர்களுடைய தண்டனைக்கு ஆளாவாயே. \q1 \v 8 பல நாடுகளை நீ கொள்ளையடித்ததினால், \q2 மீந்திருக்கும் மக்கள் கூட்டங்கள் உன்னைக் கொள்ளையடிப்பார்கள். \q1 ஏனெனில் நீ மனிதர்களின் இரத்தத்தைச் சிந்தினாய்; \q2 நாடுகளையும், நகரங்களையும் அங்குள்ள அனைவரையும் அழித்தாயே. \b \q1 \v 9 “ஐயோ, அநியாயமான ஆதாயத்தினால் தன் வீட்டைக் கட்டுகிறவனுக்குக் கேடு, \q2 அவன் அழிவின் பிடியிலிருந்து தப்பும்படி \q2 தன் கூட்டை உயரத்தில் கட்டப் பார்க்கிறானே! \q1 \v 10 நீ அநேக மக்கள் கூட்டங்களை அழிக்கும்படி சூழ்ச்சி செய்தாய். \q2 அதனால் உன் வீட்டிற்கு வெட்கத்தையும், உன் உயிருக்கு ஆபத்தையும் தேடிக் கொண்டாய். \q1 \v 11 உன் வீட்டுச் சுவரின் கற்கள் கூக்கூரலிடும். \q2 மரவேலைப்பாடுகள் உள்ள உத்திரங்கள் எதிரொலிக்கும். \b \q1 \v 12 “ஐயோ, இரத்தம் சிந்துவதினால் ஒரு நகரத்தைக் கட்டியெழுப்பி, \q2 குற்றச் செயலால் ஒரு பட்டணத்தை நிலைநிறுத்துகிற பாபிலோனுக்குக் கேடு! \q1 \v 13 சேனைகளின் யெகோவா, \q2 மக்களின் உழைப்பு நெருப்புக்கான விறகாகும் என்றும், \q2 நாடுகளின் முடிவில்லாத உழைப்பு பயனற்றதாய் போகும் என்றும் அறிவிக்கிறாரே. \q1 \v 14 கடல் தண்ணீரினால் நிறைந்திருப்பதுபோல, \q2 பூமி யெகோவாவின் மகிமையைப்பற்றிய அறிவினால் நிறைந்திருக்கும். \b \q1 \v 15 “ஐயோ, தன் அயலவர்களுக்கு அவர்கள் வெறிக்கும்வரை \q2 தோல் குடுவையிலிருந்து மதுவை ஊற்றிக் கொடுக்கிறவனுக்குக் கேடு, \q2 அவன் அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படி இப்படிச் செய்கிறானே! \q1 \v 16 நீ மகிமைக்குப் பதிலாய் வெட்கத்தினால் நிரப்பப்படுவாய். \q2 இப்பொழுது உன்னுடைய முறை வந்துவிட்டது! \q2 நீயும் குடித்து உன் நிர்வாணத்தை வெளியே காட்டு! \q1 யெகோவாவின் வலதுகையிலுள்ள தண்டனையின் கிண்ணம் உன்மேல் வருகிறது, \q2 அப்பொழுது உன் மகிமையை அவமானம் மூடிவிடும். \q1 \v 17 நீ லெபனோனுக்குச் செய்த கொடுமைகள் உன்னை மேற்கொள்ளும். \q2 நீ மிருகங்களுக்குச் செய்த பேரழிவு உனக்குத் திகிலூட்டும். \q1 ஏனெனில் நீ மனிதனுடைய இரத்தத்தைச் சிந்தினாய்; \q2 நாடுகளையும், நகரங்களையும் அங்குள்ள அனைவரையும் அழித்தாயே. \b \q1 \v 18 “ஒரு விக்கிரகத்திற்கு என்ன மதிப்பு உண்டு, அதை மனிதன்தானே செதுக்கினான்? \q2 பொய்களை போதிக்கும் ஒரு உருவச்சிலைக்கு என்ன மதிப்பு உண்டு? \q1 ஏனென்றால் அதை செய்பவன், தான் உருவாக்கியதிலேயே நம்பிக்கையை வைக்கிறான்; \q2 அவன் பேசமுடியாத விக்கிரகங்களைச் செய்கிறான். \q1 \v 19 ஐயோ, மரத்தால் செய்யப்பட்ட விக்கிரகத்தைப்பார்த்து, ‘உயிர் பெறு’ என்றும், \q2 உயிரற்ற சிலையைப்பார்த்து, ‘எழுந்திரு’ என்றும் சொல்கிற பாபிலோனுக்குக் கேடு! \q1 இவற்றினால் வழிகாட்ட முடியுமா? \q2 இவை தங்கத்தினாலும் வெள்ளியினாலும் மூடப்பட்டிருக்கின்றன; \q2 இவற்றிலே சுவாசம் இல்லை.” \b \q1 \v 20 ஆனால் யெகோவாவோ தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; \q2 பூமி முழுவதும் அவருக்குமுன் மவுனமாய் இருப்பதாக. \c 3 \s1 ஆபகூக்கின் மன்றாட்டு \d \v 1 இறைவாக்கினன் ஆபகூக், பாடிய மன்றாட்டு. \q1 \v 2 யெகோவாவே, உம்முடைய புகழைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், \q2 யெகோவாவே, நீர் நடப்பித்த உம்முடைய செயல்களின் நிமித்தம் \q2 நான் வியப்படைந்து நிற்கிறேன். \q1 எங்கள் நாட்களிலும் அவற்றைப் புதுப்பியும், \q2 எங்கள் காலத்திலும் அவற்றை அனைவரும் அறியும்படி செய்யும்; \q2 உமது கோபத்திலும், எங்களுக்கு இரக்கத்தை நினைத்தருளும். \b \q1 \v 3 இறைவன் தேமானிலிருந்தும்\f + \fr 3:3 \fr*\ft யூதான் தெற்கு திசையில் இருந்த ஏதோம் நாட்டின் ஒரு மாவட்டம் தேமன்\ft*\f*, \q2 பரிசுத்தர் பாரான் மலையிலிருந்தும்\f + \fr 3:3 \fr*\ft பரான் மலை சீனாயின் பிரதேசத்தில் ஒரு தரிசு இடமாக இருந்தது\ft*\f* வந்தார். \q1 அவரது மகிமை, வானங்களை மூடியது; \q2 அவரது துதி, பூமியை நிரப்பியது. \q1 \v 4 அவரின் மாட்சிமை சூரிய உதயத்தைப்போல் இருந்தது; \q2 அவரது கையிலிருந்து ஒளிக்கதிர்கள் சுடர் வீசின, \q2 அங்கே அவரது மகத்துவ வல்லமை மறைந்திருந்தது. \q1 \v 5 கொள்ளைநோய் அவருக்கு முன்பாகச் சென்றது; \q2 வாதைநோய் அவரது அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்தது. \q1 \v 6 அவர் நின்று பூமியை அளந்தார்; \q2 அவருடைய பார்வையைக் கண்டு நாடுகள் நடுங்கின. \q1 பூர்வீக மலைகள் நொறுங்கின, \q2 என்றுமுள்ள குன்றுகள் வீழ்ந்தன; \q2 அவருடைய வழிகளோ நித்தியமானவை. \q1 \v 7 கூசானின் கூடாரங்கள் துன்பத்திற்குள்ளானதையும், \q2 மீதியானியரின் குடியிருப்புகள் துயரத்திற்குள்ளானதையும் நான் கண்டேன். \b \q1 \v 8 யெகோவாவே ஆறுகளின்மேல், கோபங்கொண்டீரோ? \q2 நீரோடைகளுக்கெதிராகவும் உமது கடுங்கோபமாக இருந்ததோ? \q1 உமது குதிரைகள்மேலும், \q2 உமது வெற்றிகொண்ட தேரின்மேலும் நீர் சென்றபோது, \q2 கடலுக்கு எதிராய் நீர் விரோதமாயிருந்தீரோ? \q1 \v 9 நீர் உமது வில்லை உறையிலிருந்து எடுத்து, \q2 அநேக அம்புகளை எய்வதற்காகத் தொடுத்தீர். \q1 நீர் ஆறுகளைக் கொண்டு பூமியைப் பிளந்தீர்; \q2 \v 10 மலைகள் உம்மைக் கண்டு துடித்தன. \q1 பெருவெள்ளம் அடித்துக் கொண்டோடியது; \q2 ஆழம் குமுறியது, \q2 அது தன் கைகளை அலைகளுக்கு மேலே உயர்த்தியது. \b \q1 \v 11 உமது அம்புகள் பறக்கும் மின்னொளியிலும், \q2 உமது ஈட்டிகள் வீசும் வெளிச்சத்திலும், \q2 சூரியனும் சந்திரனும் வானங்களில் அசைவற்று நின்றன. \q1 \v 12 கடுங்கோபத்துடன் பூமியில் நீர் விரைந்து சென்றீர். \q2 கோபத்தில் பிற நாட்டு மக்களை மிதித்தீர். \q1 \v 13 உமது மக்களை விடுதலை செய்யவும், \q2 அபிஷேகம் செய்யப்பட்டவரை காப்பாற்றவுமே நீர் வந்தீர். \q1 நீர் கொடுமை நிறைந்த நாட்டின் தலைவனை தாக்கினீர். \q2 நீர் அவனைத் தலையிலிருந்து கால்வரைக்கும் தண்டித்தீர். \q1 \v 14 மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் நிர்கதியானவர்களை விழுங்க வருவதுபோல, \q2 அவனுடைய இராணுவவீரர் எங்களைச் சிதறடிக்கும்படி புயலைப்போல் வந்தார்கள். \q1 அப்பொழுது நீர் அவனுடைய சொந்த ஈட்டியினாலேயே \q2 அவனுடைய சேனைகளின் அதிபதிகளை உருவக் குத்தினீர். \q1 \v 15 கடலை உமது குதிரைகளினால் மிதித்து, \q2 ஆற்றின் பெருவெள்ளத்தை பொங்கியெழப் பண்ணினீர். \b \q1 \v 16 நான் அந்த சத்தங்களைக் கேட்டபோது என் இருதயம் படபடத்தது. \q2 அந்தச் சத்தத்தில் என் உதடு துடித்தது; \q1 என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது; \q2 என் கால்கள் நடுங்கின. எனினும் எங்கள்மேல் படையெடுத்த, \q1 நாட்டின்மேல் வரப்போகும் பேரழிவின் நாளுக்காக, \q2 நான் பொறுமையுடன் காத்திருப்பேன். \q1 \v 17 அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், \q2 திராட்சைக்கொடிகளில் பழங்கள் இல்லாமல் போனாலும், \q1 ஒலிவமரம் பலன் அற்றுப்போனாலும், \q2 வயல்கள் தானியத்தை விளைவியாமல் போனாலும், \q1 ஆட்டுத் தொழுவத்திலே செம்மறியாடுகள் இல்லாமல் போனாலும், \q2 மாட்டுத் தொழுவத்திலே மாடுகள் இல்லாமல் போனாலும், \q1 \v 18 நானோ என் யெகோவாவிடம் மகிழ்ந்திருப்பேன், \q2 என் இரட்சகராகிய இறைவனில் களிகூருவேன். \b \q1 \v 19 ஆண்டவராகிய யெகோவாவே என் பெலன்; \q2 என் கால்களை அவர் மானின் கால்களைப் போலாக்குகிறார், \q2 என்னை உயர்ந்த இடங்களில் நடக்கப் பண்ணுகிறார். \d எனது கம்பியிசைக் கருவிகளில், இசை இயக்குனருக்காக இசைக்கப்பட்டது.