\id 1CH - Biblica® Open Indian Tamil Contemporary Version \ide UTF-8 \h 1 நாளாகமம் \toc1 நாளாகமத்தின் முதலாம் புத்தகம் \toc2 1 நாளாகமம் \toc3 1 நாளா. \mt1 நாளாகமத்தின் முதலாம் புத்தகம் \c 1 \s1 ஆதாமிலிருந்து ஆபிரகாம்வரை \s2 நோவாவின் மகன்கள் \li1 \v 1 ஆதாம், சேத், ஏனோஸ், \li1 \v 2 கேனான், மகலாலெயேல், யாரேத், \li1 \v 3 ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, \li1 நோவா ஆகியோர். \b \li4 \v 4 நோவாவின் மகன்கள்: சேம், காம், யாப்பேத். \s2 யாபேத்தியர்கள் \li1 \v 5 யாப்பேத்தின் மகன்கள்: \li2 கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ். \li1 \v 6 கோமரின் மகன்கள்: \li2 அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா. \li1 \v 7 யாவானின் மகன்கள்: \li2 எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், ரொதானீம். \s2 காமியர்கள் \li1 \v 8 காமின் மகன்கள்: \li2 கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான். \li1 \v 9 கூஷின் மகன்கள்: \li2 சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். \li1 ராமாவின் மகன்கள்: \li2 சேபா, திதான். \li1 \v 10 கூஷின் மகன் நிம்ரோத்; \li2 இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான். \li1 \v 11 மிஸ்ராயீமின் சந்ததிகள்: \li2 லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர், \v 12 பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர். \li1 \v 13 கானானின் சந்ததிகள்: \li2 மூத்த மகன் சீதோன், கேத்து, \v 14 எபூசியர், எமோரியர், கிர்காசியர், \v 15 ஏவியர், அர்கீயர், சீனியர், \v 16 அர்வாதியர், செமாரியர், காமாத்தியர். \s2 சேமியர்கள் \li1 \v 17 சேமின் மகன்கள்: \li2 ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம். \li1 ஆராமின் மகன்கள்: \li2 ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக்கு. \li1 \v 18 அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா \li2 ஏபேரின் தகப்பன். \li1 \v 19 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு,\f + \fr 1:19 \fr*\fq பேலேகு \fq*\ft என்றால் எபிரெயத்தில் \ft*\fqa பிரித்தல் \fqa*\ft என்று பொருள்.\ft*\f* \li2 ஏனெனில் அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான். \li1 \v 20 யொக்தான் என்பவன் அல்மோதாத், செலேப், \li2 அசர்மாவேத், யேராகு, \v 21 அதோராம், ஊசால், திக்லா, \v 22 ஏபால், அபிமாயேல், சேபா, \v 23 ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள். \b \li1 \v 24 சேம், அர்பக்சாத், சேலா; \li1 \v 25 ஏபேர், பேலேகு, ரெகூ, \li1 \v 26 செரூகு, நாகோர், தேராகு, \li1 \v 27 ஆபிராமாகிய ஆபிரகாம். \s1 ஆபிரகாமின் குடும்பம் \li4 \v 28 ஆபிரகாமின் மகன்கள்: ஈசாக்கு, இஸ்மயேல் என்பவர்கள். \s2 ஆகாரின் சந்ததி \li1 \v 29 அவர்களின் சந்ததிகள் இதுவே: \li2 நெபாயோத் இஸ்மயேலின் மூத்த மகன், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்; \v 30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, \v 31 யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள். \li4 இவர்கள் இஸ்மயேலின் மகன்கள். \s2 கேத்தூராளின் சந்ததி \li1 \v 32 ஆபிரகாமின் மறுமனையாட்டி கேத்தூராள் பெற்ற மகன்கள்: \li2 சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா. \li1 யக்க்ஷானின் மகன்கள்: \li2 சேபா, தேதான். \li1 \v 33 மீதியானின் மகன்கள்: \li2 ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா. \li4 இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள். \s2 சாராளின் சந்ததி \li4 \v 34 ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன், \li1 ஈசாக்கின் மகன்கள்: \li2 ஏசா, இஸ்ரயேல். \s1 ஈசாக்கின் மகன்கள் \li1 \v 35 ஏசாவின் மகன்கள்: \li2 எலிப்பாஸ், ரெகுயேல், எயூஷ், யாலாம், கோராகு. \li1 \v 36 எலிப்பாஸின் மகன்கள்: \li2 தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ்; \li2 திம்னா என்பவளுக்கு அமலேக்கு பிறந்தான். \li1 \v 37 ரெகுயேலின் மகன்கள்: \li2 நாகாத், செராகு, சம்மா, மீசா. \s2 ஏதோமில் சேயீரின் மக்கள் \li1 \v 38 சேயீரின் மகன்கள்: \li2 லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான். \li1 \v 39 லோத்தானின் மகன்கள்: \li2 ஓரி, ஓமாம் என்பவர்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி. \li1 \v 40 சோபாலின் மகன்கள்: \li2 அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம். \li1 சிபியோனின் மகன்கள்: \li2 அயா, ஆனாகு. \li1 \v 41 ஆனாகின் மகன்: \li2 திஷோன். \li1 திஷோனுடைய மகன்கள்: \li2 எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான். \li1 \v 42 ஏசேருடைய மகன்கள்: \li2 பில்கான், சகவான், யாக்கான். \li1 திஷானுடைய மகன்கள்: \li2 ஊத்ஸ், அரான். \s2 ஏதோமின் ஆளுநர்கள் \li4 \v 43 இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்: \li1 பேயோரின் மகன் பேலா; அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது. \li1 \v 44 பேலா இறந்தபின்பு போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான். \li1 \v 45 யோபாப் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான். \li1 \v 46 உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது. \li1 \v 47 ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான். \li1 \v 48 சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான். \li1 \v 49 சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான். \li1 \v 50 பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள். \v 51 ஆதாத்தும் இறந்தான். \b \li4 ஏதோமின் பிரதானமானவர்கள்: \li1 திம்னா, அல்வா, ஏதேத், \v 52 அகோலிபாமா, ஏலா, பினோன், \v 53 கேனாஸ், தேமான், மிப்சார், \v 54 மக்தியேல், ஈராம். \li4 இவர்களே ஏதோமின் வம்சத்தலைவர்கள். \c 2 \s1 இஸ்ரயேலின் சந்ததிகள் \li4 \v 1 இஸ்ரயேலின் மகன்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், \v 2 தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள். \s1 யூதா \s2 எஸ்ரோனின் மகன்கள் \li1 \v 3 யூதாவின் மகன்கள்: \li2 ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூவரும் சூவாவின் மகளான கானானிய பெண்ணின் மகன்கள். \li2 யூதாவின் மூத்த மகன் ஏர் என்பவன் யெகோவாவின் பார்வையில் கொடுமையானவனாய் இருந்தான். அதனால் யெகோவா அவனைக் கொன்றுபோட்டார். \li2 \v 4 யூதாவின் மருமகள் தாமார் என்பவள் யூதாவுக்கு பேரேஸ், சேரா என்பவர்களைப் பெற்றாள். \li4 யூதாவிற்கு மொத்தம் ஐந்து மகன்கள் இருந்தார்கள். \b \li1 \v 5 பேரேஸின் மகன்கள்: \li2 எஸ்ரோன், ஆமூல். \li1 \v 6 சேராவின் மகன்கள்: \li2 சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர். \li1 \v 7 கர்மீயின் மகன்: \li2 ஆகார், இவன் யெகோவாவுக்கென விலக்கப்பட்ட பொருட்களை எடுத்ததால், இஸ்ரயேலுக்குக் கேட்டை உண்டுபண்ணினான். \li1 \v 8 ஏத்தானின் மகன்: \li2 அசரியா. \li1 \v 9 எஸ்ரோனின் மகன்கள்: \li2 யெராமியேல், ராம், காலேப். \s2 எஸ்ரோனின் மகனான ராமின் சந்ததி \li1 \v 10 ராம் அம்மினதாபின் தகப்பன், \li1 அம்மினதாப் யூதா மக்களுக்குத் தலைவனாக இருந்த நகசோனின் தகப்பன். \li1 \v 11 நகசோன் சல்மாவின் தகப்பன், \li1 சல்மா போவாஸின் தகப்பன், \li1 \v 12 போவாஸ் ஓபேத்தின் தகப்பன், \li1 ஓபேத் ஈசாயின் தகப்பன். \b \li1 \v 13 ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: \li2 மூத்த மகன் எலியாப், இரண்டாவது மகன் அபினதாப், \li2 மூன்றாவது மகன் சிமெயா, \v 14 நான்காவது மகன் நெதனெயேல், \li2 ஐந்தாவது மகன் ரதாயி, \v 15 ஆறாவது மகன் ஓத்சேம், \li2 ஏழாவது மகன் தாவீது. \li2 \v 16 அவர்களின் சகோதரிகள் செருயாள், அபிகாயில். \li3 செருயாளின் மூன்று மகன்கள் அபிசாய், யோவாப், ஆசகேல் என்பவர்கள். \li3 \v 17 அபிகாயில் அமாசாயின் தாய்; அமாசாவின் தகப்பன் இஸ்மயேலியனாகிய யெத்தேர் என்பவன். \s2 எஸ்ரோனின் மகன் காலேப் \li1 \v 18 எஸ்ரோனின் மகன் காலேப்\f + \fr 2:18 \fr*\ft அல்லது காலேபிற்கு அவரது மனைவி அசுபாளிடம் இருந்து எரீயோத் என்ற மகள் இருந்தாள்.\ft*\f* எரீயோத் எனப்பட்ட தன் மனைவியாகிய அசுபாளின்மூலம் பெற்ற மகன்கள்: \li2 ஏசேர், ஷோபாப், அர்தோன். \li1 \v 19 அசுபாள் இறந்தபின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு ஊர் என்பவனைப் பெற்றாள். \li2 \v 20 ஊர் ஊரியின் தகப்பன், ஊரி பெசலெயேலின் தகப்பன். \b \li1 \v 21 பின்பு எஸ்ரோன் அறுபது வயதானபோது கீலேயாத்தின் தகப்பன் மாகீரின் மகளைத் திருமணம் செய்து அவளுடன் உறவுகொண்டான். அவள் அவனுக்கு செகூப்பைப் பெற்றாள். \li2 \v 22 செகூப் யாவீரின் தகப்பன்; இவன் கீலேயாத்திலே இருபத்துமூன்று பட்டணங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். \li2 \v 23 ஆனால் கேசூர், ஆராம் என்பவர்கள் யாவீரின் கிராமங்களையும், கேனாத்தையும் அதைச் சூழ்ந்திருந்த குடியிருப்புகளான அறுபது ஊர்களையும் கைப்பற்றினார்கள். \li4 இவர்கள் எல்லோரும் கீலேயாத்தின் தகப்பனான மாகீரின் சந்ததிகள். \li1 \v 24 எஸ்ரோன் காலேபின் ஊரான எப்பிராத்தாவில் இறந்தபின், அவனுடைய மனைவி அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தலைவனான அசூரைப் பெற்றாள். \s2 எஸ்ரோனின் மகன் யெராமியேல் \li1 \v 25 எஸ்ரோனின் முதற்பேறான யெராமியேலின் மகன்கள்: \li2 முதற்பேறானவன் ராம், மற்றவர்கள் பூனா, ஓரேன், ஓத்சேம், அகியா. \v 26 யெராமியேலுக்கு அத்தாராள் என்னும் வேறோரு மனைவியும் இருந்தாள்; இவள் ஓனாம் என்பவனின் தாய். \li1 \v 27 யெராமியேலின் முதற்பேறானவனான ராமின் மகன்கள்: \li2 மாஸ், யாமின், எக்கேர். \li1 \v 28 ஓனாமின் மகன்கள்: \li2 சம்மாய், யாதா. \li1 சம்மாயின் மகன்கள்: \li2 நாதாப், அபிசூர். \v 29 அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல். அவள் அவனுக்கு அக்பான், மோளித் என்பவர்களைப் பெற்றாள். \li1 \v 30 நாதாபின் மகன்கள்: \li2 சேலேத், அப்பாயிம். சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனான். \li1 \v 31 அப்பாயிமின் மகன்: \li2 இஷி, அவன் சேசானின் தகப்பன், சேசான் அக்லாயின் தகப்பன். \li1 \v 32 சம்மாயின் சகோதரனான யாதாவின் மகன்கள்: \li2 யெத்தெர், யோனத்தான். யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனான். \li1 \v 33 யோனத்தானின் மகன்கள்: \li2 பெலெத், சாசா. \li4 இவர்கள் யெராமியேலின் சந்ததிகள். \b \li1 \v 34 சேசானுக்கு மகன்கள் இல்லை; மகள்கள் மட்டுமே இருந்தார்கள். \li2 சேசானுக்கு எகிப்தைச் சேர்ந்த யர்கா என்னும் வேலைக்காரன் ஒருவன் இருந்தான். \v 35 சேசான் தனது மகளை அவனுடைய வேலைக்காரனாகிய யர்காவுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். அவர்களுக்கு அத்தாயி என்ற மகன் இருந்தான். \li1 \v 36 அத்தாயி நாத்தானின் தகப்பன்; \li1 நாத்தான் சாபாதின் தகப்பன். \li1 \v 37 சாபாத் எப்லாலின் தகப்பன்; \li1 எப்லால் ஓபேத்தின் தகப்பன். \li1 \v 38 ஓபேத் ஏகூவின் தகப்பன்; \li1 ஏகூ அசரியாவின் தகப்பன். \li1 \v 39 அசரியா ஏலேஸின் தகப்பன்; \li1 ஏலேஸ் எலெயாசாவின் தகப்பன். \li1 \v 40 எலெயாசா சிஸ்மாயின் தகப்பன். \li1 சிஸ்மாய் சல்லூமின் தகப்பன். \li1 \v 41 சல்லூம் எக்கமியாவின் தகப்பன்; \li1 எக்கமியா எலிஷாமாவின் தகப்பன். \s2 காலேபின் வம்சங்கள் \li1 \v 42 யெராமியேலின் சகோதரனான காலேபின் மகன்கள்: \li2 சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பேறானவனும், \li2 எப்ரோனின் தகப்பனாகிய மரேஷாவின் மகன்களுமே. \li1 \v 43 எப்ரோனின் மகன்கள்: \li2 கோராகு, தப்புவா, ரெகெம், செமா. \li1 \v 44 செமா ரேகேமின் தகப்பன்; \li2 ரேகேம் யோர்க்கேயாமின் தகப்பனான ரெக்கேமின் தகப்பன். \li1 ரெகெம் சம்மாயின் தகப்பன். \li1 \v 45 சம்மாயின் மகன் மாகோன்; \li2 மாகோன் பெத்சூரின் தகப்பன். \li1 \v 46 காலேபின் மறுமனையாட்டி எப்பா என்பவள் \li2 ஆரான், மோசா, காசேஸ் என்பவர்களின் தாய். \li2 ஆரான் காசேஸின் தகப்பன். \li1 \v 47 யாதாயின் மகன்கள்: \li2 ரேகேம், யோதாம், கேசான், பெலெத், எப்பா, சாகாப். \li1 \v 48 காலேபின் மறுமனையாட்டி மாக்காள் என்பவள் \li2 சேபேர், திர்கானா ஆகியோரின் தாய். \li2 \v 49 அதோடு அவள் மத்மன்னாவின் தகப்பன் சாகாபையும், மக்பேனாவினதும் \li2 கிபியாவினதும் தகப்பனான சேவாவையும் பெற்றாள். \li1 அக்சாள் என்பவள் காலேபின் மகள். \li4 \v 50 இவர்கள் எல்லோரும் காலேபின் சந்ததிகளாவர். \b \li1 எப்ராத்தாளின் முதற்பேறானவனான ஊரின் மகன்கள்: \li2 கீரியாத்யாரீமின் தகப்பனான சோபால், \v 51 பெத்லெகேமின் தகப்பனான சல்மா, பெத்காதேரின் தகப்பனான ஆரேப். \li1 \v 52 கீரியாத்யாரீமின் தகப்பனான சோபாலின் சந்ததிகளாவன: \li2 ஆரோயேயும், மெனுகோத்தியரின் அரைப்பகுதியினரும். \v 53 கீரியாத்யாரீமின் குடும்பங்களாவன: இத்திரியர், பூகியர், சுமாத்தியர், மிஸ்ராவியர் ஆகியோரே. இவர்களில் இருந்தே சோராத்தியர், எஸ்தாவோலியர் ஆகிய சந்ததிகள் வந்தனர். \li1 \v 54 சல்மாவின் சந்ததிகள்: \li2 பெத்லெகேமியர், நெத்தோபாத்தியர், அதரோத் பெத்யோவாப்பியர், மானாத்தியரின் அரைப்பகுதியினர், சோரியர் ஆகியோரே. \v 55 அத்துடன் யாபேஸில் குடியிருந்த எழுத்தாளரின் வம்சங்கள்: திராத்தியர், சிமாத்தியர், சுக்காத்தியர். இவர்கள் ஆமாத்திலிருந்து வந்த ரேகாப்பின் தகப்பனின் சந்ததியான கேனியர். \c 3 \s2 தாவீதின் மகன்கள் \li4 \v 1 தாவீது எப்ரோனில் இருக்கும்போது பிறந்த மகன்கள் இவர்களே: \b \li1 யெஸ்ரியேலைச் சேர்ந்த அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் மூத்த மகன்; \li1 கர்மேலைச் சேர்ந்த அபிகாயிலினிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாவது மகன். \li1 \v 2 கேசூரின் அரசன் தல்மாயின் மகள் மாக்காளிடத்தில் பிறந்த அப்சலோம் மூன்றாவது மகன்; \li1 ஆகீத் பெற்ற அதோனியா நான்காவது மகன். \li1 \v 3 அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாவது மகன்; \li1 தாவீதின் மனைவி எக்லாளின் பெற்ற இத்ரேயாம் ஆறாவது மகன். \b \li4 \v 4 இந்த ஆறுபேரும் தாவீதிற்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே அவன் ஏழு வருடமும் ஆறு மாதமும் ஆட்சிசெய்தான். \b \b \li4 தாவீது எருசலேமில் முப்பத்துமூன்று வருடம் ஆட்சிசெய்தான். \v 5 எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள்: \b \li1 சிமீயா, ஷோபாப், நாத்தான், சாலொமோன்; இவர்கள் நால்வரும், அம்மியேலின் மகள் பத்சேபாளுக்குப் பிறந்தார்கள். \li1 \v 6 அங்கே இன்னும் இப்கார், எலிசூவா, எலிப்பேலேத், \v 7 நோகா, நெப்பேக், யப்பியா, \v 8 எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்ற ஒன்பதுபேரும் தாவீதின் மகன்கள். \b \li4 \v 9 தாவீதின் மறுமனையாட்டியின் மகன்களைத் தவிர இவர்கள் எல்லோரும் தாவீதின் மகன்கள். தாமார் இவர்களின் சகோதரி. \s2 யூதாவின் அரசர்கள் \li1 \v 10 சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; \li1 அவனுடைய மகன் அபியா; \li1 அவனுடைய மகன் ஆசா, \li1 அவனுடைய மகன் யோசபாத். \li1 \v 11 அவனுடைய மகன் யோராம், \li1 அவனுடைய மகன் அகசியா, \li1 அவனுடைய மகன் யோவாஸ், \li1 \v 12 அவனுடைய மகன் அமத்சியா, \li1 அவனுடைய மகன் அசரியா, \li1 அவனுடைய மகன் யோதாம், \li1 \v 13 அவனுடைய மகன் ஆகாஸ், \li1 அவனுடைய மகன் எசேக்கியா, \li1 அவனுடைய மகன் மனாசே, \li1 \v 14 அவனுடைய மகன் ஆமோன், \li1 அவனுடைய மகன் யோசியா. \li1 \v 15 யோசியாவின் மகன்கள்: \li2 மூத்த மகன் யோகனான், \li2 இரண்டாவது மகன் யோயாக்கீம், \li2 மூன்றாவது மகன் சிதேக்கியா. \li2 நான்காவது மகன் சல்லூம். \li1 \v 16 யோயாக்கீமின் மகன்கள்: \li2 அவன் மகன் எகொனியாவும், \li2 அவன் மகன் சிதேக்கியாவும். \s2 நாடுகடத்தப்பட்டபின் அரச வம்சாவழி \li1 \v 17 சிறைபட்ட எகொனியாவின் சந்ததிகள்: \li2 அவனுடைய மகன் செயல்தியேல், \v 18 மல்கிராம், பெதாயா, சேனாசார், எக்கமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள். \li1 \v 19 பெதாயாவின் மகன்கள்: \li2 செருபாபேல், சிமேயி. \li1 செருபாபேலின் மகன்கள்: \li2 மெசுல்லாம், அனனியா; இவர்களின் சகோதரி செலோமித். \v 20 இவர்களோடு இன்னும் ஐந்துபேர் இருந்தனர்: அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊஷாபேசேத். \li1 \v 21 அனனியாவின் சந்ததிகள்: \li2 பெலத்தியாவும், எசாயாவும், ரெபாயாவினதும், அர்னானினதும், ஒபதியாவினதும், செக்கனியாவின் மகன்களும் ஆவர். \li1 \v 22 செக்கனியாவின் சந்ததிகள்: \li2 செமாயாவும், அவனுடைய மகன்களுமான அத்தூஸ், எகெயால், பாரியா, நெயெரியா, செப்பாத் என்பவர்களான ஆறுபேர். \li1 \v 23 நெயெரியாவின் மகன்கள்: \li2 எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் ஆகிய மூவர். \li1 \v 24 எலியோனாயின் மகன்கள்: \li2 ஓதாவியா, எலியாசீப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி ஆகிய ஏழுபேர். \c 4 \s2 யூதாவின் மற்ற வம்சங்கள் \li1 \v 1 யூதாவின் சந்ததிகள்: \li2 பேரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள். \li1 \v 2 சோபாலின் மகன் ராயா என்பவன் யாகாத்தின் தகப்பன்; யாகாத், அகுமாய், லாகாத் என்பவர்களின் தகப்பன். இவர்கள் சோராத்தியரின் வம்சங்கள். \li1 \v 3 ஏத்தாமின் மகன்கள்: \li2 யெஸ்ரியேல், இஸ்மா, இத்பாஸ் என்பவர்கள். இவர்களுடைய சகோதரியின் பெயர் அத்செலெல்போனி. \v 4 பெனுயேல் கேதோரின் தகப்பன்; எசேர் உஷாவின் தகப்பன். \li1 இவர்களே பெத்லெகேமின் தலைவனான எப்ராத்தாவின் முதற்பேறானவனான ஊரின் சந்ததிகள். \li1 \v 5 தெக்கோவாவின் தகப்பன் அசூர் என்பவனுக்கு ஏலாள், நாராள் என்ற இரு மனைவிகள் இருந்தார்கள். \li1 \v 6 நாராள் அவனுக்கு அகுசாம், ஏப்பேர், தெமனி, ஆகாஸ்தாரி ஆகியோரைப் பெற்றாள்; இவர்கள் நாராளின் சந்ததிகள். \li1 \v 7 ஏலாளின் மகன்கள்: \li2 சேரேத், சோகார், எத்னான், \v 8 கோஸ் என்பவர்கள். கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாவையும், ஆருமின் மகன் அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான். \b \p \v 9 யாபேஸ் தனது சகோதரர்களைவிட மதிப்பிற்குரியவனாக இருந்தான். அவனுடைய தாய், “நான் இவனை வேதனையுடன் பெற்றேன்” என்று சொல்லி யாபேஸ் என்ற பெயரை வைத்தாள். \v 10 யாபேஸ் இஸ்ரயேலின் இறைவனிடம் கதறி அழுது, “நீர் என்னை ஆசீர்வதியும், எனது எல்லையையும் விரிவுபடுத்தும்! உமது கரம் என்னோடிருந்து தீமையிலிருந்து காப்பாற்றட்டும். அப்போது எனது வேதனை நீங்கும்” என வேண்டிக்கொண்டான். இறைவன் அவன் வேண்டுதலுக்குப் பதில் கொடுத்தார். \b \li1 \v 11 சூகாவின் சகோதரன் கேலூப் என்பவன் மேகீரின் தகப்பன்; மேகீர் எஸ்தோனின் தகப்பன். \v 12 எஸ்தோன் பெத்ராபாவுக்கும், பசேயாவுக்கும், இர்நாகாஷ் பட்டணத்தின் தலைவனாகிய தெகினாவுக்கும் தகப்பன். இவர்கள் ரேகா ஊரைச் சேர்ந்தவர்கள். \b \li1 \v 13 கேனாசின் மகன்கள்: \li2 ஒத்னியேல், செராயா. \li1 ஒத்னியேலின் மகன்கள்: \li2 ஆத்தாத், மெயோனத்தாய். \v 14 மெயோனத்தாய் ஒப்ராவின் தகப்பன். \li1 செராயா கராஷிம் பள்ளத்தாக்கின் தலைவனான யோவாபின் தகப்பன். \li2 அங்குள்ள மக்கள் கைவினைஞராய் இருந்தபடியால் அது கராஷிம் என்று அழைக்கப்பட்டது. \li1 \v 15 எப்புன்னேயின் மகன் காலேபின் மகன்கள்: \li2 ஈரு, ஏலா, நாகாம். \li1 ஏலாவின் மகன்: \li2 கேனாஸ். \li1 \v 16 எகலெலேலின் மகன்கள்: \li2 சீப், சீப்பா, திரியா, அசாரேயேல் என்பவர்கள். \li1 \v 17 எஸ்றாவின் மகன்கள்: \li2 யெத்தெர், மேரேத், ஏப்பேர், யாலோன். \li1 மேரேத்தின் மனைவிகளில் ஒருத்தி மிரியாம், சம்மாயியையும், எஸ்தெமோவாவின் தகப்பனான இஸ்பாவையும் பெற்றாள். \v 18 அவனுடைய யூத மனைவி, கேதோரின் தகப்பன் யாரேத்தையும், சோக்கோவின் தகப்பன் ஏபேரையும், சனோவாவின் தகப்பன் எக்குத்தியேலையும் பெற்றாள். \li1 இவர்கள் மேரேத் திருமணம் செய்திருந்த பார்வோனின் மகள் பித்தையாளின் பிள்ளைகள். \li1 \v 19 நாகாமின் சகோதரியான ஒதியாவின் மனைவியின் மகன்கள்: \li2 கர்மியனான கேயிலாவின் தகப்பனும், மாகாத்தியனான எஸ்தெமோவாவின் தகப்பனும். \li1 \v 20 ஷீமோனின் மகன்கள்: \li2 அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன். \li1 இஷியின் சந்ததிகள்: \li2 சோகேது, பென்சோகேது. \li1 \v 21 யூதாவின் மகனான சேலாக்கின் மகன்கள்: \li2 லேகாவின் தகப்பன் ஏர், மரேஷாவின் தகப்பன் லாதா என்பவர்களும், பெத் அஸ்பெயாவிலுள்ள மென்பட்டு புடவைத் தொழிலாளிகளின் வம்சங்களும், \li2 \v 22 யோக்கீமும், கோசேபாவின் மனிதர்களும், மோவாபிலும், ஆட்சி செய்த யோவாஸ், சாராப் ஆகியோரும், யசுபிலேகேமுமே; இவை யாவும் பூர்வகாலத்தில் பதிவு செய்யப்பட்டவை. \v 23 நெத்தாயீம், கெதேராவிலும் வாழ்ந்த இவர்கள் எல்லோரும் குயவர்கள்; இவர்கள் அங்கு தங்கி அரசனுக்கு வேலை செய்துவந்தனர். \s1 சிமியோன் \li1 \v 24 சிமியோனின் சந்ததிகள்: \li2 நெமுயேல், யாமின், யாரீப், சேரா, சாவூல்; \li2 \v 25 சாவூலின் மகன் சல்லூம், இவனது மகன் மிப்சாம் இவனது மகன் மிஸ்மா என்பவர்கள். \li1 \v 26 மிஸ்மாவின் சந்ததிகள்: \li2 அவனுடைய மகன் அம்முயேல், இவனது மகன் சக்கூர், இவனது மகன் சீமேயி. \b \p \v 27 சீமேயிக்கு பதினாறு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தனர். ஆனால் இவனது சகோதரர்களுக்கு அநேகம் பிள்ளைகள் இருக்கவில்லை; அதனால் யூதா மக்களைப்போல் இவர்களது முழு வம்சமும் பெருகியிருக்கவில்லை. \v 28 அவர்கள் பெயெர்செபா, மொலாதா, ஆத்சார்சூவால், \v 29 பில்கா, ஏத்சேம், தோலாத், \v 30 பெத்துயேல், ஓர்மா, சிக்லாகு, \v 31 பெத்மார்காபோத், ஆத்சார்சூசிம், பெத்பிரி, சாராயிம் ஆகிய இடங்களில் வாழ்ந்துவந்தனர். தாவீது அரசனாகும்வரை இந்தப் பட்டணங்களெல்லாம் அவர்களுக்குரியதாகவே இருந்தன. \v 32 அவற்றுடன் ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆஷான் ஆகிய ஐந்து பட்டணங்களைச் சுற்றியிருந்த கிராமங்களும் ஆகும். \v 33 இந்தப் பட்டணங்களைச் சுற்றியிருந்த கிராமங்கள் பாகால்வரை பரந்திருந்தது. இந்த இடங்களே அவர்களுடைய குடியிருப்புகள். \b \li4 இவர்கள் தங்கள் வம்சாவழி அட்டவணையும் வைத்திருந்தார்கள்: \b \li1 \v 34 மெசோபாபு, யம்லேக், \li1 அமத்சியாவின் மகன் யோஷா, \v 35 யோயேல், \li1 ஆசியேலின் மகனான செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் மகன் யெகூ, \li1 \v 36 அத்துடன் எலியோனாய், யாக்கோபா, யெசொகாயா, \li1 அசாயா, ஆதியேல், யெசிமியேல், பெனாயா, \li1 \v 37 செமாயாவின் மகன் சிம்ரி, அவனுடைய மகன் யெதாயா, அவனுடைய மகன் அல்லோன், அவனுடைய மகன் சிப்பி, சிப்பியின் மகனான சீசா ஆகியோருமே. \b \li4 \v 38 இப்பெயர்களையுடையவர்கள் வம்சங்களில் தலைவர்களாயிருந்தார்கள். \b \p இவர்களின் குடும்பங்கள் அதிகமதிகமாய்ப் பெருகின. \v 39 அவர்கள் தங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சலைத் தேடி கேதோரின் எல்லையான பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதிக்குச் சென்றனர். \v 40 அங்கே அவர்கள் மிகச் செழிப்பான மேய்ச்சலுக்குரிய இடத்தைக் கண்டனர். அந்த நிலம் விசாலமானதும், சமாதானமும் அமைதியுமுடையதுமாக இருந்தது. அங்கே காமியர் சிலர் முற்காலத்தில் வாழ்ந்திருந்தனர். \p \v 41 மேற்கூறப்பட்ட பெயர்களையுடைய இவர்கள், யூதாவில் எசேக்கியா அரசன் ஆட்சி செய்த காலத்தில் அங்கு வந்தார்கள். அவர்கள் அங்கு குடியிருந்த காமியர்களை அவர்களுடைய இடங்களில் தாக்கி, மெயூனியரையும் இன்றுவரை இருப்பதுபோல் முழுவதும் அழித்துவிட்டார்கள். பின்பு அவர்கள் அங்கே தங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சலுக்கு உகந்த வளமான இடம் இருந்ததினால் குடியேறினர். \v 42 பின்பு சிமியோனியரில் ஐந்நூறு பேரும், இஷியின் மகன்களான பெலத்தியா, நெயெரியா, ரெப்பாயா, ஊசியேல் ஆகியோரின் தலைமையின்கீழ் போய் சேயீர் மலைநாட்டைத் தாக்கினார்கள். \v 43 அங்கே தப்பி ஓடிப்போய் மறைந்திருந்த அமலேக்கியரை அவர்கள் கொன்று, அவர்கள் இந்நாள்வரைக்கும் அங்கேயே வாழ்கிறார்கள். \c 5 \s1 ரூபன் \li4 \v 1 இஸ்ரயேலின் முதற்பேறான மகன் ரூபன். இவன் தன் தகப்பனின் திருமணப்படுக்கையைக் கறைப்படுத்தினபடியினால், அவனுடைய மூத்த மகனுக்குரிய பிறப்புரிமை இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் மகன்களுக்குக் கொடுக்கப்பட்டது. எனவே உரிமையின்படி இவன் வம்ச அட்டவணையில் முதற்பேறானவனாக இடம்பெறவில்லை. \v 2 யூதா தன் சகோதரரில் வலிமையுடையவனாய் இருந்தும், ஆளுநர் ஒருவனும் அவனிலிருந்து தோன்றியும் யோசேப்பிற்கே மூத்த மகனுக்குரிய பிறப்புரிமை கொடுக்கப்பட்டது. \v 3 இஸ்ரயேலின் மூத்த மகனான ரூபனின் மகன்கள்: \b \li2 ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ. \li1 \v 4 யோயேலின் சந்ததிகள்: \li2 யோயேலின் மகன் செமாயா, இவனது மகன் கோக், \li2 இவனது மகன் சிமேயீ; \v 5 சீமேயின் மகன் மீகா, \li2 இவன் மகன் ராயா, இவன் மகன் பாகால், \li2 \v 6 பாகாலின் மகன் பேரா; பேரா ரூபனியரின் தலைவன். இவனை அசீரியாவின் அரசனான தில்காத்பில்நேசர் சிறைப்பிடித்துப் போனான். \li1 \v 7 அவர்கள் வம்ச ஒழுங்கின்படி, உறவினர்களின் வம்சங்களாகக் கணக்கிடப்பட்டனர்: \li2 அவர்கள் பிரதான தலைவன் ஏயேல், சகரியா, \v 8 யோயேலின் மகனான சேமாவுக்குப் பிறந்த ஆசாஸின் மகன் பேலா. \b \p இவர்கள் அரோயேரில் தொடங்கி, நேபோவுக்கும், பாகால் மெயோனில் உள்ள பகுதிகளில் வாழ்ந்தனர். \v 9 இவர்கள் கிழக்கே யூப்ரட்டீஸ் நதிவரைக்கும் பரந்திருந்து, பாலைவனத்துக்கு அருகே உள்ள நிலத்தில் வாழ்ந்துவந்தனர். ஏனெனில் கீலேயாத்தில் அவர்களுடைய வளர்ப்பு மிருகங்கள் மிகவும் பெருகியிருந்தன. \p \v 10 இவர்கள் சவுலின் ஆட்சிக்காலத்தில் ஆகாரியருடன் போரிட்டு, அவர்களைத் தோற்கடித்தார்கள். பின் இவர்கள் கீலேயாத்தின் முழு கிழக்குப்பகுதி பிரதேசத்திலும் இருந்த ஆகாரியரின் இடங்களில் குடியேறினர். \s1 காத் \li4 \v 11 காத் மக்கள் அவர்களுக்கு அடுத்தாற்போல் பாசான் நாட்டில் சல்காவரை வாழ்ந்தனர். \b \li1 \v 12 அவர்களில் பாசானில் யோயேல் முதன்மையாகவும், சாப்பாம் இரண்டாவதாகவும் இருந்தனர். அவர்களுக்குப்பின் யானாய், சாப்பாத் ஆகியோர் தலைவர்களாயிருந்தனர். \li1 \v 13 அவர்களுடைய குடும்பங்களின்படி அவர்களின் உறவினர்கள் \li2 மிகாயேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என மொத்தம் ஏழுபேர் இருந்தனர். \li2 \v 14 இவர்கள் அபியேலின் மகன்கள். அபியேல் ஊரியின் மகன்; ஊரி யெரொவாவின் மகன்; யெரொவா கீலேயாத்தின் மகன், கீலேயாத் மிகாயேலின் மகன், மிகாயேல் எசிசாயின் மகன், எசிசாய் யாதோவின் மகன், யாதோ பூஸின் மகன். \li2 \v 15 மேலும் கூனியின் மகனான அப்தியேலின் மகன் அகி அவர்களுடைய குடும்பத்தின் தலைவன். \b \p \v 16 காத் மக்கள் கீலேயாத்தைச் சேர்ந்த பாசானிலும், அடுத்திருந்த கிராமங்களிலும் சாரோனைச் சேர்ந்த வளமிக்க மேய்ச்சல் நிலங்களின் எல்லைவரைக்கும் வாழ்ந்தனர். \p \v 17 இந்த வம்ச அட்டவணைகள் எல்லாம் யூதாவின் அரசன் யோதாமின் ஆட்சிக்காலத்திலும், இஸ்ரயேலின் அரசன் யெரொபெயாமின் நாட்களிலும் வரிசைப்படுத்தப்பட்டது. \b \p \v 18 ரூபனியர், காத்தியர், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரில் போர் செய்யக்கூடியவர்கள் 44,760 பேர் இருந்தார்கள். இவர்கள் கேடயமும் வாளும் ஏந்தியும், வில்கொண்டும் போரிடுவதற்கும் பயிற்றுவிக்கப்பட்ட பலமிக்க மனிதராயிருந்தார்கள். \v 19 இவர்கள் ஆகாரியரோடும், யெத்தூர், நாபீஸ், நோதாப் நாட்டினரோடும் போரிட்டனர். \v 20 இறைவன் தன் மக்களுக்கு இந்த யுத்தங்களில் உதவி செய்தார். அவர் ஆகாரியரையும் அவர்களுடைய எல்லா பகைவர்களையும் இவர்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார். ஏனெனில் இந்த யுத்தம் நடக்கும்போது அவர்கள் இறைவனிடம் கதறி அழுதனர். அவர்கள் யெகோவாவை நம்பியிருந்தபடியினால், அவர்களுடைய விண்ணப்பத்திற்கு அவர் பதிலளித்தார். \v 21 அவர்கள் ஆகாரியரின் வளர்ப்பு மிருகங்களான ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டுலட்சத்து ஐம்பதாயிரம் செம்மறியாடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும் கைப்பற்றினர். அத்துடன் ஒரு இலட்சம் மக்களையும் சிறைபிடித்தனர். \v 22 போர் இறைவனால் நடத்தப்பட்டதால், அநேகம்பேர் விழுந்து மடிந்தனர். இவர்கள் நாடுகடத்தப்படும்வரை அங்கேயே வாழ்ந்தனர். \s1 மனாசேயின் பாதிக் கோத்திரம் \p \v 23 மனாசேயின் பாதிக் கோத்திரம் எண்ணிக்கையில் பெருகியிருந்தது. இவர்கள் பாசான் தொடங்கி பாகால் எர்மோன் வரையும், அதாவது சேனீர் எர்மோன் வரையும் குடியிருந்தனர். இவை எர்மோன் மலையென்றும் அழைக்கப்பட்டன. \p \v 24 அவர்களுடைய குடும்பங்களின் தலைவர்கள் ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸ்ரியேல், எரேமியா, ஓதாவியா, யாதியேல் என்பவர்கள். இவர்கள் தைரியமிக்க போர்வீரர்களும், புகழ்ப்பெற்ற மனிதர்களும், குடும்பத் தலைவர்களுமாய் இருந்தனர். \v 25 ஆனால் அவர்கள் இறைவன் தங்கள் கண்களுக்கு முன்பாக அழித்துவிட்ட நாட்டு மக்களின் தெய்வங்களைப் பின்பற்றிய வேசித்தனத்தினால், அவர்கள் தங்கள் முற்பிதாக்கள் வழிபட்டுவந்த இறைவனுக்கு உண்மையற்றவர்களாய் நடந்து, துரோகம் செய்தனர். \v 26 எனவே இஸ்ரயேலின் இறைவன், தில்காத்பில்நேசர் என அழைக்கப்படும் அசீரிய அரசனான பூலின் ஆவியைத் தூண்டிவிட்டார். அவன் ரூபனியர், காத்தியர், மனாசேயின் பாதிக்கோத்திரத்தினர் ஆகியோரை நாடுகடத்தினான். அவன் அவர்களை ஆலா, ஆபோர், ஆரா, கோசான் நதிக்கரை ஆகிய இடங்களுக்குக் கொண்டுசென்றான். அவர்கள் இன்னும் அங்கேயே வாழ்கின்றனர். \c 6 \s1 லேவி \li1 \v 1 லேவியின் மகன்கள்: \li2 கெர்சோன், கோகாத், மெராரி. \li1 \v 2 கோகாத்தின் மகன்கள்: \li2 அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல். \li1 \v 3 அம்ராமின் பிள்ளைகள் \li2 ஆரோன், மோசே, மிரியாம். \li1 ஆரோனின் மகன்கள்: \li2 நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார். \li2 \v 4 எலெயாசார் பினெகாசின் தகப்பன்; \li2 பினெகாஸ் அபிசுவாவின் தகப்பன், \li2 \v 5 அபிசுவா புக்கியின் தகப்பன், \li2 புக்கி ஊசியின் தகப்பன். \li2 \v 6 ஊசி செரகியாவின் தகப்பன். \li2 செரகியா மெராயோத்தின் தகப்பன், \li2 \v 7 மெராயோத் அமரியாவின் தகப்பன், \li2 அமரியா அகிதூபின் தகப்பன், \li2 \v 8 அகிதூப் சாதோக்கின் தகப்பன், \li2 சாதோக் அகிமாஸின் தகப்பன், \li2 \v 9 அகிமாஸ் அசரியாவின் தகப்பன், \li2 அசரியா யோகனானின் தகப்பன், \li2 \v 10 யோகனான் அசரியாவின் தகப்பன். \li2 எருசலேமில் சாலொமோன் கட்டிய ஆலயத்தில் ஆசாரியனாக இருந்தவன் இவனே. \li2 \v 11 அசரியா அமரியாவின் தகப்பன், \li2 அமரியா அகிதூபின் தகப்பன், \li2 \v 12 அகிதூப் சாதோக்கின் தகப்பன், \li2 சாதோக் சல்லூமின் தகப்பன். \li2 \v 13 சல்லூம் இல்க்கியாவின் தகப்பன்; \li2 இல்க்கியா அசரியாவின் தகப்பன், \li2 \v 14 அசரியா செராயாவின் தகப்பன், \li2 செராயா யோசதாக்கின் தகப்பன். \li2 \v 15 யெகோவா நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதாவையும், எருசலேமையும் நாடுகடத்தியபோது, யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டான். \b \li1 \v 16 லேவியின் மகன்கள்: \li2 கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்கள். \li1 \v 17 கெர்சோமின் மகன்கள்: \li2 லிப்னி, சீமேயி. \li1 \v 18 கோகாத்தின் மகன்கள்: \li2 அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல். \li1 \v 19 மெராரியின் மகன்கள்: \li2 மகேலி, மூஷி. \b \li4 இவர்கள் தங்கள் முற்பிதாக்களின் வழித்தோன்றலின்படி உண்டான லேவிய வம்சங்கள். \li1 \v 20 கெர்சோமின் மகன்கள்: \li2 கெர்சோமின் மகன் லிப்னி, அவனுடைய மகன் யாகாத்; \li2 அவனுடைய மகன் சிம்மா, \v 21 அவனுடைய மகன் யோவா; \li2 அவனுடைய மகன் இத்தோ; அவனுடைய மகன் சேரா; \li2 அவனுடைய மகன் யாத்திராயி. \li1 \v 22 கோகாத்தின் சந்ததிகள்: \li2 கோகாத்தின் மகன் அம்மினதாப், \li2 அவனுடைய மகன் கோராகு, அவனுடைய மகன் ஆசீர், \v 23 அவனுடைய மகன் எல்க்கானா, \li2 அவனுடைய மகன் எபியாசாப், அவனுடைய மகன் ஆசீர், \li2 \v 24 அவனுடைய மகன் தாகாத், அவனுடைய மகன் ஊரியேல், \li2 அவனுடைய மகன் உசியா, அவனுடைய மகன் சாவூல் என்பவர்கள். \li1 \v 25 எல்க்கானாவின் சந்ததிகள்: \li2 அமசாயி, அகிமோத். \li2 \v 26 அகிமோத்தின் மகன் எல்க்கானா, அவனுடைய மகன் சோபாய், \li2 அவனுடைய மகன் நாகாத், \li2 \v 27 அவனுடைய மகன் எலியாப், \li2 அவனுடைய மகன் எரோகாம், அவனுடைய மகன் எல்க்கானா, அவனுடைய மகன் சாமுயேல். \li1 \v 28 சாமுயேலின் மகன்கள்: \li2 முதற்பேறானவன் யோயேல்\f + \fr 6:28 \fr*\ft சில எபிரெய வேதத்தின் கிரேக்க பதிவுகளில் \ft*\fq யோயேல் \fq*\ft என உள்ளது. \ft*\fqa வஷ்னீ \fqa*\ft என எபிரெய மொழி வேதத்தில் உள்ளது.\ft*\f*, \li2 இரண்டாம் மகன் அபியா. \li1 \v 29 மெராரியின் சந்ததிகள்: \li2 மகேலி, இவனது மகன் லிப்னி, \li2 இவனது மகன் சிமேயி, இவனது மகன் ஊசா; \li2 \v 30 இவனது மகன் சிமெயா, இவனது மகன் அகியா, \li2 இவனது மகன் அசாயா. \s2 ஆலய இசைக் கலைஞர்கள் \p \v 31 யெகோவாவின் ஆலயத்திற்குள் உடன்படிக்கைப்பெட்டி தங்கியிருக்க வந்தபின், இசைக்குப் பொறுப்பாகச் சிலரை தாவீது நியமித்தான். \v 32 இவர்களே சாலொமோன் எருசலேமிலுள்ள யெகோவாவினுடைய ஆலயத்தைக் கட்டிமுடிக்கும்வரை, சபைக் கூடாரமான ஆசரிப்புக்கூடாரத்தின் முன்னிலையில் சங்கீத சேவையுடன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒழுங்குமுறையின்படி தங்கள் கடமைகளைச் செய்துவந்தனர். \b \li4 \v 33 தங்கள் மகன்களுடன் அங்கு பணிசெய்த மனிதர்கள் இவர்களே: \b \li1 கோகாத்தியரில்: \li2 இசைக் கலைஞன் ஏமான், \li2 இவன் யோயேலின் மகன், இவன் சாமுயேலின் மகன், \li2 \v 34 இவன் எல்க்கானாவின் மகன், இவன் எரோகாமின் மகன், \li2 இவன் எலியேலின் மகன், இவன் தோவாக்கின் மகன், \li2 \v 35 இவன் சூப்பின் மகன், இவன் எல்க்கானாவின் மகன், \li2 இவன் மாகாத்தின் மகன், இவன் அமசாயின் மகன், \li2 \v 36 இவன் எல்க்கானாவின் மகன், இவன் யோயேலின் மகன், \li2 இவன் அசரியாவின் மகன், இவன் செப்பனியாவின் மகன், \li2 \v 37 இவன் தாகாத்தின் மகன், இவன் ஆசீரின் மகன், \li2 இவன் எபியாசாப்பின் மகன், இவன் கோராகுவின் மகன், \li2 \v 38 இவன் இத்சாரின் மகன், இவன் கோகாத்தின் மகன், \li2 இவன் லேவியின் மகன், இவன் இஸ்ரயேலின் மகன். \li1 \v 39 ஏமானின் வலதுபக்கத்தில் நின்று அவனுடன் பணிசெய்தவனான அவன் சகோதரன் ஆசாப்: \li2 ஆசாப் பெரகியாவின் மகன், இவன் சிமெயாவின் மகன், \li2 \v 40 இவன் மிகாயேலின் மகன், இவன் பாசெயாவின் மகன், \li2 இவன் மல்கியாவின் மகன், \v 41 இவன் எத்னியின் மகன், \li2 இவன் சேராயின் மகன், இவன் அதாயாவின் மகன், \li2 \v 42 இவன் ஏத்தானின் மகன், இவன் சிம்மாவின் மகன், \li2 இவன் சீமேயின் மகன், \v 43 இவன் யாகாத்தின் மகன், \li2 இவன் கெர்சோமின் மகன், இவன் லேவியின் மகன். \li1 \v 44 மெராரியராகிய இவர்களது சகோதரர்கள் அவர்களுடைய இடதுபக்கத்தில் நிற்பார்கள்: \li2 அவர்களில் ஏத்தான் கிஷியின் மகன், இவன் அப்தியின் மகன், \li2 இவன் மல்லூக்கின் மகன், \v 45 இவன் அசபியாவின் மகன், \li2 இவன் அமத்சியாவின் மகன், இவன் இல்க்கியாவின் மகன், \li2 \v 46 இவன் அம்சியின் மகன், இவன் பானியின் மகன், \li2 இவன் சாமேரின் மகன், \v 47 இவன் மகேலியின் மகன், \li2 இவன் மூஷியின் மகன், இவன் மெராரியின் மகன், \li2 இவன் லேவியின் மகன். \b \p \v 48 இவர்களோடிருந்த மற்ற லேவியர்கள் இறைவனது ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் மற்ற வேலைகளைக் கவனிக்க நியமிக்கப்பட்டார்கள். \v 49 ஆனால் இறைவனின் ஊழியன் மோசே கட்டளையிட்டபடியே, ஆரோனும் அவனுடைய சந்ததிகளும் மட்டுமே மகா பரிசுத்த இடத்திலுள்ள தகன பலிபீடங்களில் இஸ்ரயேலின் பாவநிவிர்த்திக்காக பலியிட்டு, தூப மேடைகளில் தூபங்காட்டும் வேலையையும் செய்வதற்கென நியமிக்கப்பட்டிருந்தனர். \b \li1 \v 50 ஆரோனின் சந்ததிகள் இவர்களே: \li2 அவன் மகன் எலெயாசார், அவன் மகன் பினெகாஸ், \li2 அவன் மகன் அபிசுவா, \v 51 அவன் மகன் புக்கி, \li2 அவன் மகன் ஊசி, அவன் மகன் செரகியா, \li2 \v 52 அவன் மகன் மெராயோத், அவன் மகன் அமரியா, \li2 அவன் மகன் அகிதூப், \v 53 அவன் மகன் சாதோக், \li2 அவன் மகன் அகிமாஸ். \b \li4 \v 54 அவர்களுக்கென பிரதேசமாக நியமிக்கப்பட்ட குடியிருப்புகளின் இடங்களாவன: முதல் சீட்டு கோகாத் வம்சத்தைச் சேர்ந்த ஆரோனின் சந்ததிகளுக்கு விழுந்தபடியால், அவர்களுக்கு அவ்விடங்கள் கொடுக்கப்பட்டன. \li1 \v 55 அதன்படி அவர்களுக்கு யூதாவிலுள்ள எப்ரோனும், அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன. \v 56 ஆனால் பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களும், கிராமங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குக் கொடுக்கப்பட்டன. \v 57 ஆரோனின் சந்ததிகளுக்கு எப்ரோன் என்ற அடைக்கலப் பட்டணங்களில் லிப்னா, யாத்தீர், எஸ்தெமோவா, \v 58 ஈலேன், தெபீர், \v 59 ஆஷான், யூத்சா, பெத்ஷிமேஷ் ஆகிய பட்டணங்களோடு அவற்றைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன. \li1 \v 60 பென்யமீன் கோத்திரத்திற்கு கிபியோன், கேபா, அலெமேத், ஆனதோத் ஆகிய பட்டணங்களும், அவற்றைச் சேர்ந்த மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன. \li4 எல்லாமாக பதின்மூன்று பட்டணங்கள் கோகாத்திய வம்சங்களுக்குள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. \b \li1 \v 61 மீதமிருந்த மற்ற கோகாத்தியருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தின் பத்துப் பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. \li1 \v 62 கெர்சோமின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கேற்ப இசக்கார், ஆசேர், நப்தலி, பாசானில் இருக்கிற மனாசேயின் மற்ற பாதிக் கோத்திரங்களிலுமிருந்து பதின்மூன்று பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. \li1 \v 63 மெராரியின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கும் ஏற்ப ரூபன், காத், செபுலோன் கோத்திரங்களிலுமிருந்து பன்னிரண்டு பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. \b \li4 \v 64 இவ்வாறு இஸ்ரயேலர் இந்தப் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் லேவியர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். \b \li1 \v 65 யூதா, சிமியோன், பென்யமீன் ஆகிய கோத்திரங்களிலிருந்தும் முன்குறிப்பிடப்பட்ட பட்டணங்களையும் கொடுத்தார்கள். \b \li4 \v 66 சில கோகாத்திய வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து பட்டணங்கள் அவர்கள் பிரதேசமாகக் கொடுக்கப்பட்டன. \li1 \v 67 எப்பிராயீமின் மலைநாட்டில் அடைக்கலப் பட்டணமான சீகேமும், அத்துடன் கேசேர், \v 68 யோக்மேயாம், பெத் ஓரோன், \v 69 ஆயலோன், காத்ரிம்மோன் ஆகியவை அவற்றோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன. \li1 \v 70 எஞ்சியிருந்த கோகாத்தியரின் வம்சங்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து, ஆனேரும், பீலியாமும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் இஸ்ரயேலரால் கொடுக்கப்பட்டன. \b \li4 \v 71 கெர்சோமியர் பெற்ற நிலங்களாவன: \li1 மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து பாசானிலிருக்கிற கோலானையும், அஸ்தரோத்தையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர். \li1 \v 72 இசக்கார் கோத்திரத்திலிருந்தும் கெதெஷ், தாபேராத், \v 73 ராமோத், ஆனேம் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர். \li1 \v 74 ஆசேர் கோத்திரத்திலிருந்தும் மாஷால், அப்தோன், \v 75 ஊக்கோக், ரேகோப் பட்டணங்களையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள். \li1 \v 76 நப்தலி கோத்திரத்திலிருந்தும் கலிலேயாவிலிருக்கிற கேதேசையும், அம்மோன், கீரியாத்தாயீம் பட்டணங்களையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர். \b \li4 \v 77 லேவியர்களில் எஞ்சியிருந்த மெராரியின் மற்றவர்கள் \li1 செபுலோன் கோத்திரத்திலிருந்து யொக்னெயாம், காட்டா, ரிம்மோனோ, தாபோர் ஆகிய பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள். \li1 \v 78 யோர்தானின் அக்கரையிலே எரிகோவின் கிழக்கேயிருக்கிற ரூபனின் கோத்திரத்திலிருந்தும் பாலைவனத்திலிருக்கிற பேசேரையும், யாத்சா, \v 79 கெதெமோத், மேபாகாத் ஆகிய பட்டணங்களோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள். \li1 \v 80 காத் கோத்திரத்திலிருந்து, கீலேயாத்திலுள்ள ராமோத், மக்னாயீம், \v 81 எஸ்போன், யாசேர் ஆகிய பட்டணங்களோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள். \c 7 \s1 இசக்கார் \li1 \v 1 இசக்காரின் மகன்கள்: \li2 தோலா, பூவா, யாசுப், சிம்ரோன் ஆகிய நால்வர். \li1 \v 2 தோலாவின் மகன்கள்: \li2 ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுயேல் என்பவர்கள். இவர்கள் தங்கள் குடும்பங்களுக்குத் தலைவர்கள். தாவீதின் ஆட்சிக்காலத்தில் தோலாவின் வழித்தோன்றலில் கணக்கிடப்பட்ட இராணுவவீரர்கள் 22,600 பேராயிருந்தனர். \li1 \v 3 ஊசியின் மகன்: \li2 இஸ்ரகியா. \li1 இஸ்ரகியாவின் மகன்கள்: \li2 மிகாயேல், ஒபதியா, யோயேல், இஷியா. இவர்கள் ஐந்துபேரும் தலைவர்களாயிருந்தனர். \v 4 இவர்களில் குடும்ப வம்சாவழியில் போருக்கு ஆயத்தமாக இருந்த மனிதர்கள் 36,000 பேர். இவர்களுக்கு அநேகம் மனைவிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள். \li4 \v 5 இசக்காருடைய எல்லா வம்சங்களையும் சேர்ந்த இராணுவவீரர்களான உறவினர்கள் அவர்களுடைய வம்சாவழியின்படி 87,000 பேராயிருந்தார்கள். \s1 பென்யமீன் \li1 \v 6 பென்யமீனின் மகன்கள்: \li2 பேலா, பெகேர், யெதியாயேல் என மூன்றுபேர் இருந்தனர். \li1 \v 7 பேலாவின் மகன்கள்: \li2 எஸ்போன், ஊசி, ஊசியேல், எரிமோத், இரி. இவர்கள் ஐந்துபேரும் குடும்பங்களின் தலைவர்களாயிருந்தனர். அவர்களின் வம்சாவழியின்படி இராணுவவீரர்களின் எண்ணிக்கையாக 22,034 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர். \li1 \v 8 பெகேரின் மகன்கள்: \li2 செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, எரேமோத், அபியா, ஆனதோத், அலமேத். இவர்கள் எல்லோரும் பெகேரின் மகன்கள். \v 9 வம்சாவழியின்படி குடும்பத்தலைவர்களும், 20,200 இராணுவ வீரர்களும் பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். \li1 \v 10 யெதியாயேலின் மகன்: \li2 பில்கான். \li1 பில்கானின் மகன்கள்: \li2 எயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிசாகார். \v 11 யெதியாயேலின் ஆண் பிள்ளைகளான இவர்கள் எல்லோரும் குடும்பங்களின் தலைவர்கள். இவர்களில் யுத்தத்திற்குச் செல்ல ஆயத்தமாயிருந்த வீரர்கள் 17,200 பேர். \li1 \v 12 சுப்பீமியரும், உப்பீமியரும் ஈரின் வழித்தோன்றல்கள். ஊசிமியர் ஆகேரின் வழித்தோன்றல்கள். \s1 நப்தலி \li1 \v 13 நப்தலியின் மகன்கள்: \li2 யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம். இவர்கள் பில்காளின் பேரப்பிள்ளைகள். \s1 மனாசே \li1 \v 14 மனாசேயின் சந்ததிகள்: \li2 அரமேய மறுமனையாட்டியினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவள் கீலேயாத்தின் தகப்பனான மாகீரையும் பெற்றாள். \v 15 மாகீர் உப்பீமியர், சுப்பீமியரின் சகோதரியாகிய மாக்காள் என்பவளை மணந்தான். மனாசேயின் இரண்டாம் மகன் செலொப்பியாத்; அவனுக்கு மகள்கள் மட்டுமே இருந்தனர். \v 16 மாகீரின் மனைவி மாக்காள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு பேரேஸ் என்று பெயரிட்டாள். அவனுடைய சகோதரன் சேரேஸ் என்று பெயரிடப்பட்டான். அவனுடைய மகன்கள் ஊலாம், ரேகேம். \li1 \v 17 ஊலாமின் மகன்: \li2 பேதான். \li1 இவர்களே மனாசேயின் மகன் மாகீரின் மகனான கீலேயாத்தின் மகன்கள். \li1 \v 18 அவனுடைய சகோதரி அம்மொளெகேத் என்பவள் இஸ்கோத், அபியேசர், மாகலா ஆகியோரை பெற்றாள். \li1 \v 19 செமிதாவின் மகன்கள்: \li2 அகியான், செகெம், லிக்கி, அனியாம். \s1 எப்பிராயீம் \li1 \v 20 எப்பிராயீமின் சந்ததிகள்: \li2 சுத்தெலா, அவனுடைய மகன் பேரேத், \li2 அவனுடைய மகன் தாகாத், அவனுடைய மகன் எலாதா, \li2 அவனுடைய மகன் தாகாத், \v 21 அவனுடைய மகன் சாபாத், \li2 அவனுடைய மகன் சுத்தெலாக். \li2 எப்பிராயீமின் மகன்கள் எத்சேர், எலியாத் என்பவர்கள் காத் ஊரைச் சேர்ந்தவர்களின் வளர்ப்பு மிருகங்களைப் பிடிக்கச் சென்றபோது, அவர்கள் இவர்களை கொலைசெய்தார்கள். \v 22 ஆகையால் இவர்களுடைய தகப்பன் எப்பிராயீம் அவர்களுக்காக அநேக நாட்கள் துக்கங்கொண்டாடினான். அவனுடைய உறவினர்கள் வந்து அவனை ஆறுதல்படுத்தினர். \v 23 பின்பு எப்பிராயீம் தனது மனைவியுடன் உறவுகொண்டதால், அவள் கருவுற்று அவனுக்கு வேறு ஒரு மகனைப் பெற்றாள். அந்தக் குடும்பத்தில் பெருந்துன்பம் ஏற்பட்டிருந்ததால் அவனுக்குப் பெரீயா என்று பெயரிட்டனர். \v 24 எப்பிராயீமின் மகள் ஷேராள். இவள்மேல் பெத் ஓரோனின் கீழ்ப்புறத்தையும் மேற்புறத்தையும், ஊசேன்சேராவையும் கட்டினாள். \li2 \v 25 பெரீயாவின் மகன் ரேப்பாக், அவனுடைய மகன் ரேசேப், \li2 அவனுடைய மகன் தேலாக், அவனுடைய மகன் தாகான், \li2 \v 26 அவனுடைய மகன் லாதான், அவனுடைய மகன் அம்மியூத், \li2 அவனுடைய மகன் எலிஷாமா. \v 27 அவனுடைய மகன் நூன், \li2 அவனுடைய மகன் யோசுவா. \li4 \v 28 பெத்தேலையும் அதைச் சுற்றியிருந்த கிராமங்களும் அவர்களுடைய நிலங்களும், குடியிருப்புகளும் உள்ளடக்கியிருந்தன. கிழக்கே நாரானும், மேற்கே கேசேரும் அதன் கிராமங்களும், ஆயாவும் அதன் கிராமங்களும் வழிநெடுகிலுமுள்ள சீகேமும் அதன் கிராமங்களுமாக இருந்தன. அவை அவர்களுடைய நிலமும் குடியிருப்புமாயிருந்தன. \v 29 அதோடு மனாசேயின் எல்லையிலிருந்து பெத்ஷான் முழுவதும் தானாகு, மெகிதோ, தோர் ஆகிய இடங்களும், அவற்றுடன் அவற்றின் கிராமங்களும் அவர்களின் குடியிருப்பாயிருந்தன. இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் சந்ததிகள் இந்தப் பட்டணங்களில் வாழ்ந்துவந்தார்கள். \s1 ஆசேர் \li1 \v 30 ஆசேரின் மகன்கள்: \li2 இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா. இவர்களின் சகோதரி செராக்கு. \li1 \v 31 பெரீயாவின் மகன்கள்: \li2 ஏபேர், மல்கியேல்; இவன் பிர்ஸாவித்தின் தகப்பன். \li1 \v 32 ஏபேர் என்பவன் யப்லேத், சோமேர், ஒத்தாம் மற்றும் இவர்களுடைய சகோதரி சூகாளுடைய தகப்பன். \li1 \v 33 யப்லேத்தின் மகன்கள்: \li2 பாசாக், பிம்கால், அஸ்வாத். \li4 இவர்களே யப்லேத்தின் மகன்கள். \li1 \v 34 சோமேரின் மகன்கள்: \li2 அகி, ரோகா, எகூபா, ஆராம். \li1 \v 35 அவனுடைய சகோதரன் ஏலேமின் மகன்கள்: \li2 சோபாக், இம்னா, சேலேஸ், ஆமல். \li1 \v 36 சோபாக்கின் மகன்கள்: \li2 சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா, \v 37 பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா. \li1 \v 38 யெத்தேரின் மகன்கள்: \li2 எப்புனே, பிஸ்பா, ஆரா. \li1 \v 39 உல்லாவின் மகன்கள்: \li2 ஆராக், அன்னியேல், ரித்சியா. \li4 \v 40 ஆசேரின் வழித்தோன்றலாகிய இவர்கள் எல்லோரும் குடும்பங்களின் தலைவர்களும், சிறந்த மனிதர்களும், தைரியமிக்க இராணுவ வீரர்களும், புகழ்பெற்ற தலைவர்களுமாயிருந்தனர். போருக்கு ஆயத்தமாக இருந்தவர்கள் அவர்களுடைய வம்சங்களின்படி கணக்கிடப்பட்டபோது 26,000 பேராயிருந்தனர். \c 8 \s1 பென்யமீனியனான சவுலின் வம்சாவழி \li1 \v 1 பென்யமீனின் மகன்கள்: \li2 பேலா முதற்பேறானவன், \li2 இரண்டாவது மகன் அஸ்பேல், மூன்றாவது மகன் அகராக், \li2 \v 2 நான்காவது மகன் நோகா, ஐந்தாவது மகன் ரப்பா. \li1 \v 3 பேலாவின் மகன்கள்: \li2 ஆதார், கேரா, அபியூத்; \v 4 அபிசுவா, நாமான், அகோவா, \v 5 கேரா, செப்புப்பான், ஊராம். \li1 \v 6 ஏகூத்தின் சந்ததிகள்: இவர்கள் மனாகாத்திற்கு நாடுகடத்தப்பட்டு கேபாவின் குடிகளின் தலைவர்களாயிருந்தவர்கள்: \li2 \v 7 நாமான், அகியா, கேரா. ஊசா, அகியூத் என்பவர்களின் தகப்பன் கேரா இவர்களை நாடுகடத்திக் கொண்டுபோனான். \li1 \v 8 சகராயீம் தனது மனைவிகளான ஊசிம், பாராள் என்பவர்களை விவாகரத்துச் செய்தபின் மோவாப் நாட்டிலே அவனுக்கு மகன்கள் பிறந்தார்கள். \v 9 அவனுடைய மனைவி ஒதேசாள் என்பவள் யோவாப், சிபியா, மேசா, மல்காம், \v 10 எயூஸ், சாகியா, மிர்மா ஆகியோரைப் பெற்றாள். இவர்களே குடும்பங்களின் தலைவர்களான அவனுடைய மகன்கள். \v 11 அவனுடைய மனைவி ஊசிம் மூலம் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான். \li1 \v 12 எல்பாலின் மகன்கள்: \li2 ஏபேர், மீஷாம், ஷேமேத்; ஷேமேத் ஓனோவையும், லோதையும் அதன் கிராமங்களையும் கட்டினான். \v 13 எல்பாலின் மற்ற பிள்ளைகள் பெரீயா, சேமா என்பவர்கள். இவர்கள் ஆயலோனில் இருந்த குடும்பங்களுக்குத் தலைவர்களாயிருந்து, காத்தின் குடிகளைத் துரத்திவிட்டனர். \li1 \v 14 அகியோ, சாஷாக், எரேமோத் \v 15 செபதியா, அராத், ஏதேர், \v 16 மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள். \li1 \v 17 செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர், \v 18 இஸ்மெராயி, இஸ்லியா, யோவாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள். \li1 \v 19 யாக்கீம், சிக்ரி, சப்தி \v 20 எலியேனாய், சில்தாய், எலியேல், \v 21 அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சீமேயியின் மகன்கள். \li1 \v 22 இஸ்பான், ஏபேர், ஏலியேல், \v 23 அப்தோன், சிக்ரி, ஆனான், \v 24 அனனியா, ஏலாம், அந்தோதியா, \v 25 இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள். \li1 \v 26 சம்செராய், செகரியா, அத்தாலியா, \v 27 யாரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரோகாமின் மகன்கள். \li4 \v 28 இவர்கள் எல்லோரும் வம்சங்களுக்கேற்ப பதிவு செய்யப்பட்டபடி குடும்பங்களின் தலைவர்களாகவும், முதன்மையானவர்களாகவும் எருசலேமில் வாழ்ந்தார்கள். \b \li1 \v 29 கிபியோனின் தலைவனான யெகியேல் கிபியோனில் வாழ்ந்தான். \li2 இவனது மனைவியின் பெயர் மாக்காள். \v 30 இவனது மூத்த மகன் அப்தோன்; அவனுக்குப்பின் பிறந்தவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப், \v 31 கேதோர், அகியோ, சேகேர், \v 32 மிக்லோத் என்பவர்கள். மிக்லோத் சிமியாவின் தகப்பன். இவர்களும் தங்கள் உறவினர்களுக்கு அருகில் எருசலேமில் வாழ்ந்தார்கள். \li1 \v 33 நேர் என்பவன் கீஷின் தகப்பன்; கீஷ் சவுலின் தகப்பன்; சவுல் யோனத்தான், மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தகப்பன். \li1 \v 34 யோனத்தானின் மகன்: \li2 மேரிபால்; இவன் மீகாவின் தகப்பன். \li1 \v 35 மீகாவின் மகன்கள்: \li2 பித்தோன், மெலெக், தரேயா, ஆகாஸ். \li2 \v 36 ஆகாஸ் யோகதாவின் தகப்பன்; யோகதா அலெமேத், அஸ்மாவேத், சிம்ரி ஆகியோரின் தகப்பன். சிம்ரி மோசாவின் தகப்பன். \v 37 மோசா பினியாவின் தகப்பன்; அவன் மகன் ரப்பா, அவன் மகன் எலியாசா, அவன் மகன் ஆத்சேல், \li1 \v 38 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தனர்; \li2 அவர்களின் அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மயேல், சேராயா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் யாவரும் ஆத்சேரின் மகன்கள். \li1 \v 39 அவனுடைய சகோதரனான ஏசேக்கின் மகன்கள்: \li2 முதற்பேறானவன் ஊலாம், இரண்டாவது மகன் எயூஷ், மூன்றாவது மகன் எலிபேலேத். \v 40 ஊலாமின் மகன்கள் தைரியமுள்ள வில் ஏந்தும் வீரர்களாயிருந்தனர். இவர்களுக்கு மகன்களும், பேரப்பிள்ளைகளுமாக நூற்றைம்பதுபேர் இருந்தனர். \li1 இவர்கள் எல்லோரும் பென்யமீனின் சந்ததிகள். \b \c 9 \p \v 1 அப்படியே எல்லா இஸ்ரயேலின் வம்சாவழியும், இஸ்ரயேலின் அரசர்களின் பதிவேட்டில் எழுதப்பட்டன. யூதா மக்கள் உண்மையற்றவர்களாய் இருந்தபடியால் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர். \s1 எருசலேமில் உள்ள மக்கள் \li4 \v 2 தங்கள் சொந்த இடங்களில் உள்ள தங்கள் சொந்தப் பட்டணங்களுக்குத் திரும்பி வந்தவர்கள் சில இஸ்ரயேலரும், ஆசாரியரும், லேவியரும், ஆலய பணிவிடைக்காரருமே. \b \li4 \v 3 யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே கோத்திரங்களிலிருந்து வந்து எருசலேமில் வாழ்ந்தவர்களின் பெயர்களாவன: \li1 \v 4 யூதாவின் மகன் பேரேஸின் வழித்தோன்றலில் வந்த பானியின் மகனான இம்ரியின் மகனான உம்ரி பெற்ற அம்மியூத்தின் மகன் ஊத்தாய். \li1 \v 5 சீலோனியரைச் சேர்ந்தவர்கள்: \li2 முதற்பேறானவன் அசாயாவும் அவனுடைய மகன்களும். \li1 \v 6 சேராவியரைச் சேர்ந்தவர்கள்: \li2 யெகுயேலும், \li4 யூதாவின் 690 மக்களும். \b \li4 \v 7 பென்யமீனியரைச் சேர்ந்தவர்கள்: \li1 சல்லு என்பவன் அசெனுவாவின் மகனான ஓதாவியாவின் மகனான மெசுல்லாமின் மகன். \li1 \v 8 எரோகாமின் மகனான இப்னேயா; \li1 மிக்கிரியின் மகனான ஊசியின் மகன் ஏலா; \li1 இப்னியாவின் மகனான ரேகுயேலுக்குப் பிறந்த செபத்தியாவின் மகன் மெசுல்லாம். \li4 \v 9 பென்யமீனியர் அவர்களின் வம்சங்களின்படி, கணக்கிடப்பட்டபோது 956 பேராயிருந்தனர். இவர்கள் எல்லோரும் தங்கள் குடும்பங்களின் தலைவர்களாயிருந்தனர். \b \li4 \v 10 ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: \li1 யெதாயா, யோயாரீப், யாகின். \li1 \v 11 அசரியா இல்க்கியாவின் மகன், இல்க்கியா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் சாதோக்கின் மகன், சாதோக் மெராயோத்தின் மகன், மெராயோத் அகிதூபின் மகன், அகிதூப் இறைவனுடைய ஆலயத்திற்கு அதிகாரியாயிருந்தான். \li1 \v 12 அதாயா எரோகாமின் மகன், எரோகாம் பஸ்கூரின் மகன், பஸ்கூர் மல்கியாவின் மகன். \li1 மாசாய் ஆதியேலின் மகன், ஆதியேல் யாசெராவின் மகன், யாசெரா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் மெசில்லேமித்தின் மகன், மெசில்லேமித் இம்மேரின் மகன் என்பவர்களே. \li4 \v 13 குடும்பங்களின் தலைவர்களாயிருந்த ஆசாரியர்கள் 1,760 பேர் இருந்தனர். இவர்கள் இறைவனுடைய ஆலயத்தில் பணிவிடைக்குத் திறமையுடையவர்களும் பொறுப்புடையவர்களுமாய் இருந்தனர். \b \li4 \v 14 லேவியரைச் சேர்ந்தவர்கள்: \li1 செமாயா அசூபின் மகன், அசூப் அஸ்ரீகாமின் மகன், அஸ்ரீகாம் மெராரி வம்சத்தைச் சேர்ந்த அசபியாவின் மகன். \li1 \v 15 லேவிய வம்சாவழியில் பக்பக்கார், ஏரேஸ், காலால், மத்தனியா ஆகியோரும் அடங்குவர். மத்தனியா மீகாவின் மகன், மீகா சிக்கிரியின் மகன், சிக்ரி ஆசாபின் மகன். \li1 \v 16 ஒபதியா செமாயாவின் மகன், செமாயா காலாலின் மகன், காலால் எதுத்தூனின் மகன்; \li1 பெரகியா ஆசாவின் மகன், ஆசா எல்க்கானாவின் மகன், எல்க்கானா நெத்தோபாத்தியரின் கிராமங்களில் வாழ்ந்து வந்தான். \b \li4 \v 17 வாசல் காவலரைச் சேர்ந்தவர்கள்: \li1 சல்லூம், அக்கூப், தல்மோன் அகீமான் என்பவர்களும், இவர்களின் சகோதரர்களும். சல்லூம் அவர்களுடைய தலைவன். \v 18 அவனே கிழக்கிலுள்ள அரச வாசலை இந்நாள்வரை காவல் செய்பவன். இவர்களே லேவிய முகாமைச் சேர்ந்த வாசல் காவலர். \li1 \v 19 கோராகின் மகனாகிய எபியாசாப்புக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவனுடைய சகோதரர்களுமான கோராகியர்கள் பணிவிடை வேலையை விசாரித்தார்கள். அவர்கள் தந்தையர்கள் யெகோவாவின் ஆலய வாசலைக் காவல்செய்வதற்குப் பொறுப்பாயிருந்தது போலவே, கூடாரத்திற்குப் போகிற வழியைக் காவல் காப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர். \li1 \v 20 முற்காலத்தில் எலெயாசாரின் மகன் பினெகாஸ் வாசல் காப்போருக்குப் பொறுப்பாய் இருந்தான். யெகோவா அவனுடன் இருந்தார். \li1 \v 21 மெசெல்மியாவின் மகன் சகரியா சபைக் கூடாரத்திற்கு வாசல் காவலனாயிருந்தான். \li4 \v 22 வாசல்களிலெல்லாம் காவலிருக்க தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் 212 பேர். அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களில் வம்சாவழியின்படியே பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். \b \p தாவீதும் தரிசனக்காரனான சாமுயேலும் இவர்களை நம்பிக்கைக்குரிய பதவிகளுக்கு அமர்த்தினர். \v 23 அவர்களும் அவர்களுடைய சந்ததிகளும் கூடாரம் என்று அழைக்கப்பட்ட யெகோவாவினுடைய ஆலயத்தின் வாசலைக் காவல் காப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர். \v 24 வாசல் காவலர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளிலும் இருந்தார்கள். \v 25 அவர்களுடைய சகோதரர் தங்கள் கிராமங்களிலிருந்து காலத்திற்குக் காலம் ஏழுநாட்களுக்கு கடமைகளைப் பகிர்ந்துகொள்ள வரவேண்டிருந்தது. \v 26 ஆனால் லேவியர்களான நான்கு பிரதான வாசல் காவலர்களிடம் இறைவனின் ஆலயத்தின் பண்டகசாலைகளுக்கும், பொக்கிஷ சாலைகளுக்கும் காவல்காப்பதற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. \v 27 இறைவனது ஆலயத்தைச் சுற்றிக் காவல் காக்கவேண்டியிருந்ததால் இரவு முழுவதும் அவர்கள் அங்கேயே தங்கவேண்டும். அதோடு ஒவ்வொருநாள் காலையிலும் ஆலயத்தைத் திறக்கும் திறப்புக்கும் அவர்களே பொறுப்பாயிருந்தனர். \p \v 28 அவர்களில் சிலர் ஆலயத்தின் பணிக்கு பயன்படுத்துவதற்குத் தேவையான பொருட்களுக்குப் பொறுப்பாயிருந்தனர். அவர்கள் பொருட்களை உள்ளே கொண்டுவரும்போதும், வெளியே கொண்டுபோகும் போதும் அவற்றைக் கணக்கிட்டார்கள். \v 29 மற்றவர்கள் பரிசுத்த இடத்தின் பாத்திரங்களையும், மெல்லிய மாவு, திராட்சை இரசம், எண்ணெய், சாம்பிராணி மற்றும் நறுமணப் பொருட்களையும் மேற்பார்வை செய்வதற்கு நியமிக்கப்பட்டார்கள். \v 30 அத்துடன் சில ஆசாரியர்கள் நறுமணப் பொருட்களைக் கலப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர். \v 31 கோராகியனான சல்லூமின் மூத்த மகனான மத்தித்தியா என்ற லேவியனிடம் காணிக்கை அப்பங்களைச் சுடும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. \v 32 அவர்களின் சகோதரரான கோகாத்தியரில் சிலர், ஒவ்வொரு ஓய்வுநாளுக்கும் தேவையான அப்பங்களை மேஜையில் ஒழுங்குபடுத்துவதற்குப் பொறுப்பாயிருந்தனர். \p \v 33 லேவிய குடும்பத் தலைவர்களான இசைக் கலைஞர்கள் இரவும் பகலும் இடைவிடாது பணிசெய்ய வேண்டியிருந்ததால், மற்ற வேலைகளிலிருந்து விடுபட்டு ஆலயத்தின் அறைகளிலேயே தங்கியிருந்தனர். \p \v 34 இவர்கள் எல்லோரும் லேவியக் குடும்பத் தலைவர்கள். இவர்கள் தங்கள் வம்சங்களின்படி பதிவு செய்யப்பட்ட தலைவர்கள். இவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர். \s1 சவுலின் வம்ச அட்டவணை \li1 \v 35 கிபியோனின் தலைவனான யெகியேல் கிபியோனில் வாழ்ந்தான். \li2 இவனது மனைவியின் பெயர் மாக்காள். \v 36 இவனது மூத்த மகன் அப்தோன். அவனுக்குப்பின் பிறந்தவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப், \v 37 கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்கள். \v 38 மிக்லோத் சிமியாமின் தகப்பன்; இவர்களும் தங்கள் உறவினர்களுக்கு அருகில் எருசலேமில் வாழ்ந்தார்கள். \li1 \v 39 நேர் என்பவன் கீஷின் தகப்பன்; கீஷ் சவுலின் தகப்பன்; சவுல் யோனத்தான், மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தகப்பன். \li1 \v 40 யோனத்தானின் மகன்: \li2 மேரிபால்; இவன் மீகாவின் தகப்பன். \li1 \v 41 மீகாவின் மகன்கள்: \li2 பித்தோன், மெலெக், தரேயா, ஆகாஸ். \li2 \v 42 ஆகாஸ் யாராக்கின் தகப்பன். யாராக் அலெமேத், அஸ்மாவேத், சிம்ரி ஆகியோரின் தகப்பன், சிம்ரி மோசாவின் தகப்பன், \v 43 மோசா பினியாவின் தகப்பன், அவன் மகன் ரப்பாயா, அவன் மகன் எலியாசா, அவன் மகன் ஆத்சேல். \li1 \v 44 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தனர்; \li2 அவர்கள் அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மயேல், சேராயா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் யாவரும் ஆத்சேலின் மகன்கள். \c 10 \s1 சவுலின் மரணம் \p \v 1 பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்; இஸ்ரயேல் மக்கள் அவர்களுக்கு முன்பாக தப்பியோடினர். அநேகர் கில்போவா மலையில் வெட்டப்பட்டு விழுந்தனர். \v 2 பெலிஸ்தியர் சவுலையும், அவனுடைய மகன்களையும் பின்தொடர்ந்து துரத்திச்சென்று அவர்களில் யோனத்தானையும், அபினதாபையும், மல்கிசூவாவையும் கொன்றார்கள். \v 3 சவுலைச் சுற்றிலும் யுத்தம் தீவிரமடைந்தது. வில்வீரர்கள் நெருங்கிவந்து அவனைக் காயப்படுத்தினர். \p \v 4 அப்பொழுது சவுல் தனது யுத்த ஆயுதங்களைச் சுமப்பவனிடம், “அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடிக்கு உனது வாளினால் என்னை உருவக்குத்து” என்றான். \p ஆனால் அவனுடைய யுத்த ஆயுதங்களைச் சுமப்பவன் பயத்தினால் அப்படிச் செய்யவில்லை. எனவே சவுல் தன் சொந்த வாளை எடுத்து அதன்மேல் விழுந்தான். \v 5 யுத்த ஆயுதம் சுமப்பவன் சவுல் இறந்ததைக் கண்டதும் தானும் தனது வாள்மேல் விழுந்து இறந்தான். \v 6 இவ்வாறு சவுலும் அவனுடைய மூன்று மகன்களும் இறந்தனர்; அவனுடைய முழுக் குடும்பமும் ஒருமித்து அழிந்துபோயிற்று. \p \v 7 பள்ளத்தாக்கிலே இருந்த இஸ்ரயேல் மக்கள் போர்வீரர் ஓடிப்போவதையும், சவுலும் அவன் மகன்களும் இறந்துபோனதையும் கண்டபோது, அவர்களும் தாங்கள் இருந்த பட்டணங்களைவிட்டு தப்பியோடினர். உடனே பெலிஸ்தியர் அங்கே வந்து குடியேறினர். \p \v 8 மறுநாள் இறந்தவர்களின் உடைமைகளை எடுத்துக்கொள்ள பெலிஸ்தியர் வந்தபோது, சவுலும் அவனுடைய மகன்களும் கில்போவா மலையில் இறந்துகிடக்கக் கண்டார்கள். \v 9 எனவே அவர்கள் அவனுடைய உடையைக் கழற்றி, தலையை வெட்டி அவனுடைய யுத்த கவசங்களையும் எடுத்துக்கொண்டார்கள். பின்பு அச்செய்தியை தங்கள் தெய்வங்களுக்கும் தங்கள் மக்களுக்கும் அறிவிக்கும்படி, தூதுவர்களை பெலிஸ்திய நாடு எங்கும் அனுப்பினார்கள். \v 10 அவர்கள் அவனுடைய ஆயுதங்களை தங்கள் தெய்வங்களின் கோவிலில் வைத்தனர். அவனுடைய தலையையோ தாகோனின் கோவிலில் கட்டித் தொங்கவிட்டனர். \p \v 11 பெலிஸ்தியர் சவுலுக்குச் செய்த எல்லாவற்றையும் கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டண மக்கள் கேள்விப்பட்டார்கள். \v 12 அப்பொழுது அவர்களின் வலிமைவாய்ந்த மனிதர்கள் சென்று, சவுலின் உடலையும், அவனுடைய மகன்களின் உடல்களையும் யாபேசுக்குக் கொண்டுவந்தார்கள். அங்கே யாபேசிலுள்ள ஒரு கர்வாலி மரத்தின் கீழே எலும்புகளை அடக்கம்பண்ணி ஏழு நாட்கள் உபவாசம் இருந்தார்கள். \p \v 13 சவுல் யெகோவாவுக்கு முன்பாக உண்மையற்றவனாகக் காணப்பட்டதால் இறந்தான்; அதோடு அவன் யெகோவாவினுடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல் குறிபார்ப்பவர்களிடத்திலும் ஆலோசனை பெற்றான். \v 14 அவன் யெகோவாவிடம் விசாரிக்கவில்லை. எனவே யெகோவா அவனைக் கொன்று, அரசாட்சியை ஈசாயின் மகனான தாவீதிற்குக் கொடுத்தார். \c 11 \s1 தாவீது அரசனாதல் \p \v 1 இஸ்ரயேலர் யாவரும் ஒன்றுகூடி, எப்ரோனில் இருந்த தாவீதினிடத்திற்கு வந்து, “நாங்கள் உமது எலும்பும் உமது சதையுமாயிருக்கிறோம். \v 2 கடந்த நாட்களில் சவுல் அரசனாயிருந்தபோதும், இஸ்ரயேலர்களைப் போரில் வழிநடத்தியவர் நீரே. உமது இறைவனாகிய யெகோவா உம்மிடம், ‘நீ எனது மக்களாகிய இஸ்ரயேலரை மேய்த்து, அவர்களுடைய ஆளுநனாகவும் இருப்பாய்’ என்று சொன்னாரே” என்றார்கள். \p \v 3 இஸ்ரயேலின் முதியவர்கள் எல்லோரும் தாவீது அரசனிடம் எப்ரோனுக்கு வந்தபோது, தாவீது யெகோவா முன்னிலையில் எப்ரோனில் அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்தான். சாமுயேலுக்கு யெகோவா கொடுத்திருந்த வாக்குப்படியே அவர்கள் தாவீதை இஸ்ரயேலுக்கு அரசனாக அபிஷேகம் பண்ணினார்கள். \s1 தாவீது எருசலேமை வெல்லுதல் \p \v 4 தாவீதும் இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் எபூசு எனப்பட்ட எருசலேமுக்கு அணிவகுத்துப் போனார்கள். \v 5 அங்கு வாழ்ந்த எபூசியர் தாவீதிடம், “நீ இதற்குள் நுழையமாட்டாய்” எனச் சொன்னார்கள். ஆயினும், தாவீது சீயோனின் கோட்டையைக் கைப்பற்றினான். அதுவே தாவீதின் நகரம் எனப்பட்டது. \p \v 6 எபூசியரை முதலில் தாக்குகிறவன் எவனோ அவனே பிரதம படைத்தளபதியாய் இருப்பான் என தாவீது சொல்லியிருந்தான். செருயாவின் மகன் யோவாப் முதலில் போனதால் அவனே படைத்தளபதி ஆனான். \p \v 7 பின்பு தாவீது அந்த கோட்டையில் குடியமர்ந்தான். ஆகையால் அது தாவீதின் நகரம் என அழைக்கப்பட்டது. \v 8 அவன் அந்த கோட்டையைச் சுற்றி மில்லோவிலிருந்து சுற்றியிருக்கும் மதில்வரை நகரத்தைக் கட்டினான். யோவாப் மிகுதியான நகரத்தைப் புதுப்பித்துக் கட்டினான். \v 9 சேனைகளின் யெகோவா தாவீதுடன் இருந்ததால் அவன் மென்மேலும் வலிமையடைந்தான். \s1 தாவீதின் வலிமைவாய்ந்த வீரர் \p \v 10 எல்லா இஸ்ரயேல் மக்களோடும் சேர்ந்து தாவீதுடன் இருந்த வலிமைமிக்க தலைவர்கள் இவர்களே. இவர்கள் இஸ்ரயேலைக் குறித்து யெகோவா கொடுத்த வாக்குத்தத்தத்திற்கு ஏற்றபடி, தாவீதின் அரசை விரிவடையச் செய்தார்கள். \v 11 தாவீதின் வலிமைமிக்க மனிதர்களின் பட்டியல் இதுவே: \p அக்மோனியனான யாஷோபியாம் அதிகாரிகளுக்குத் தலைவனாயிருந்தான்; இவனே தனக்கு எதிர்பட்ட முந்நூறுபேரை ஒரே நேரத்தில் தன் ஈட்டியால் கொன்றான். \p \v 12 அவனுக்கு அடுத்ததாக அகோகியனான தோதோவின் மகன் எலெயாசார் வலிமைமிக்க மூவரில் ஒருவனாயிருந்தான். \v 13 இவன் பெலிஸ்தியர் பாஸ்தம்மீம் என்னும் இடத்தில் போருக்குக் கூடியிருந்தபோது, தாவீதுடன் இருந்தான். அந்த இடத்திலிருந்த வயல், வாற்கோதுமையினால் நிறைந்திருந்தது; இராணுவவீரரோ பெலிஸ்தியருக்குமுன் தப்பி ஓடினார்கள். \v 14 ஆனாலும் அவர்கள் வயலின் நடுவில் நின்று அந்த வயலைப் பாதுகாத்து பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினார்கள். யெகோவா இவ்வாறு அவர்களுக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தார். \p \v 15 ஒருமுறை பெலிஸ்தியர் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் வந்து முகாமிட்டிருந்தார்கள். அவ்வேளை வலிமைமிக்க முப்பதுபேரில் மூன்றுபேர் அதுல்லாமிலுள்ள கற்குகையில் இருந்த தாவீதினிடத்திற்கு வந்தார்கள். \v 16 அந்த நேரத்தில் தாவீது அரணான இடத்தில் இருந்தான்; பெலிஸ்தியரின் படையோ பெத்லெகேமில் இருந்தது. \v 17 தாவீது, “பெத்லெகேமின் வாசலில் இருக்கும் கிணற்றிலிருந்து எனக்கு யாராவது குடிக்க தண்ணீர் கொண்டுவந்தால் எவ்வளவு நல்லது!” என ஆவலுடன் கூறினான். \v 18 எனவே அந்த மூவரும் பெலிஸ்தியரின் முகாமின் உள்ளே சென்று பெத்லெகேமின் வாசலின் அருகில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளி, கொண்டுவந்து தாவீதுக்குக் கொடுத்தார்கள். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்து அதை யெகோவாவுக்கு முன்பாக வெளியே ஊற்றினான். \v 19 அவன், “இறைவனே, நான் இதைச் செய்வதற்கு எண்ணியும் பார்க்கமாட்டேன். தங்கள் உயிரையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் தண்ணீர் கொண்டுவந்த இந்த மனிதர்களின் இரத்தத்தை நான் குடிப்பேனோ?” என்றான். \p இவர்கள் தங்கள் உயிருக்கு வர இருந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அதைக் கொண்டுவந்ததால் தாவீது அதைக் குடிக்கவில்லை. \p இத்தகைய துணிகரமான செயல்களை இந்த மூன்று வலிமைமிக்க மனிதர்களும் செய்தார்கள். \p \v 20 யோவாபின் சகோதரன் அபிசாய் இந்த மூன்றுபேருக்கு தலைவனாயிருந்தான். இவன் தன் ஈட்டியை உயர்த்தி முந்நூறுபேரைக் கொன்றதினால், அந்த மூன்றுபேரைப் போல புகழ் பெற்றவனாயிருந்தான். \v 21 அவன் அந்த மூன்று பேருக்கும் மேலாக இரண்டு மடங்கு கனப்படுத்தப்பட்டு, அவர்களோடு சேர்க்கப்படாதபோதும், அவர்களுக்குத் தளபதியானான். \p \v 22 கப்சேயேல் ஊரைச்சேர்ந்த யோய்தாவின் மகன் பெனாயா, மிகவும் பலமுள்ள போர்வீரனாயிருந்தான்; அவன் பல துணிச்சலான செயல்களைச் செய்திருந்தான். இவன் மோவாபியரில் இரண்டு சிறந்த வீரர்களை கொலைசெய்திருந்தான். அதோடு உறைபனி காலத்தில் ஒரு குழிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தையும் கொன்றான். \v 23 அதோடு ஏழரை அடி உயரமான ஒரு எகிப்தியனையும் வெட்டிக்கொன்றான். அந்த எகிப்தியன் நெசவாளனின் கோலைப்போலுள்ள ஈட்டியைக் கையில் பிடித்திருந்தான். ஆனால் பெனாயாவோ கையில் ஒரு கம்புடன் அவனுக்கெதிராகச் சென்று, அவனுடைய கையில் இருந்த ஈட்டியைப் பறித்து, அதனாலேயே எகிப்தியனைக் கொன்றான். \v 24 இவ்விதமான வீரச்செயலை யோய்தாவின் மகன் பெனாயா செய்ததினால் அவன் அந்த மூன்று மாவீரர்களைப் போல புகழ் பெற்றவனாயிருந்தான். \v 25 இவன் அந்த முப்பது பேரிலும் மேன்மையுள்ளவனாக எண்ணப்பட்டான். ஆயினும் முன்கூறிய அந்த மூவருள் ஒருவனாகவில்லை. தாவீது அவனைத் தனது மெய்க்காவலருக்குப் பொறுப்பாக நியமித்தான். \b \li4 \v 26 படையின் மற்ற மாவீரர்கள்: \b \li1 யோவாபின் சகோதரன் ஆசகேல், \li1 பெத்லெகேமைச் சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான், \li1 \v 27 ஆரோதியனான சம்மோத், \li1 பெலோனியனான ஏலேஸ், \li1 \v 28 தெக்கோவாவைச் சேர்ந்த இக்கேசின் மகன் ஈரா, \li1 ஆனதோத்தியனான அபியேசர், \li1 \v 29 ஊஷாத்தியனான சிபெக்காய், \li1 அகோகியனான ஈலாய், \li1 \v 30 நெத்தோபாத்தியனான மகராயி, \li1 நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேத், \li1 \v 31 பென்யமீனியரின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, \li1 பிரத்தோனியனான பெனாயா, \li1 \v 32 காயாஸ் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவனான ஊராயி, \li1 அர்பாத்தியனான அபியேல், \li1 \v 33 பகரூமியனான அஸ்மாவேத், \li1 சால்போனியனான எலியாபா, \li1 \v 34 கீசோனியனாகிய ஆசேமின் மகன்கள், \li1 ஆராரியனான சாகியின் மகன் யோனத்தான், \li1 \v 35 ஆராரியனான சாக்காரின் மகன் அகியாம், \li1 ஊரின் மகன் ஏலிபால், \li1 \v 36 மெகராத்தியனான ஏப்பேர், \li1 பெலோனியனான அகியா, \li1 \v 37 கர்மேலியனான ஏஸ்ரோ, \li1 ஏஸ்பாயின் மகன் நாராயி, \li1 \v 38 நாத்தானின் சகோதரன் யோயேல், \li1 அகரியின் மகன் மிப்கார். \li1 \v 39 அம்மோனியனான சேலேக், \li1 செருயாவின் மகனும் யோவாபின் யுத்த ஆயுதங்களைச் சுமக்கிறவனுமான பேரோத்தியனான நகராய், \li1 \v 40 இத்திரியனான ஈரா, \li1 இத்திரியனான காரேப், \li1 \v 41 ஏத்தியனான உரியா, \li1 அக்லாயின் மகன் சாபாத், \li1 \v 42 ரூபனியனான சீசாவின் மகன் அதினா ரூபனியருக்குத் தலைவனாயிருந்தான். அவனுடன் அந்த முப்பது பேரும் இருந்தனர். \li1 \v 43 மாகாவின் மகன் ஆனான், \li1 மிதினியனான யோசபாத், \li1 \v 44 அஸ்தராத்தியனான உசியா, \li1 அரோயேரியனான ஒத்தாமின் மகன்கள் சாமா, ஏயேல் என்பவர்கள், \li1 \v 45 சிம்ரியின் மகன் ஏதியாயேல், \li1 தித்சியனான அவன் சகோதரன் யோகா, \li1 \v 46 மகாவியனான எலியேல், \li1 ஏல்நாமின் மகன்கள் ஏரிபாயும் யொசவியாவும், \li1 மோவாபியனான இத்மா, \li1 \v 47 மெசோபாயா ஊரைச்சேர்ந்த எலியேல், ஓபேத், யாசியேல் என்பவர்களே. \c 12 \s1 தாவீதுடன் வீரர் \li4 \v 1 தாவீது கீஷின் மகன் சவுலினால் துரத்தப்பட்டு, சிக்லாத் என்னுமிடத்தில் ஒளித்திருந்தபோது யுத்தத்தில் அவனுக்கு உதவிசெய்ய வந்த வீரர்கள் இவர்களே. \v 2 இவர்கள் வில்வீரராயும், வலதுகையாலும் இடதுகையாலும் அம்பையும் கவணையும் எறிவதற்கு ஆற்றல் உள்ளவர்களாயும் இருந்தனர். இவர்கள் பென்யமீன் கோத்திரத்தானான சவுலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்: \b \li1 \v 3 அகிசேயர் என்னும் தலைவனும் யோவாஸும் கிபேயா ஊரைச்சேர்ந்த சேமாவின் மகன்கள்; \li1 அஸ்மாவேத்தின் மகன்கள் எசியேலும் பெலெத்தும்; \li1 பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ, \v 4 முப்பதுபேரில் ஆற்றல்மிக்கவனும் முப்பதுபேருக்குத் தலைவனுமான கிபியோனியனான இஸ்மாயா, \li1 எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரூரைச் சேர்ந்த யோசபாத், \v 5 எலுசாயி, எரிமோத், பிகலியா, ஷெமரியா அருப்பியனான செபத்தியா, \li1 \v 6 எல்க்கானா, இஷியா, அசாரியேல், யொவேசேர், கோராகியரைச் சேர்ந்த யாஷோபியாம், \li1 \v 7 கேதோர் ஊரைச்சேர்ந்த எரோகாமின் மகன்கள் யொயேலா செபதியா என்பவர்கள். \b \p \v 8 அதோடு பாலைவனத்தில் அரணான இடத்தில் இருந்த தாவீதிடம் சில காத்தியர்கள் வந்தார்கள். இவர்கள் ஆற்றல்மிக்க போர்வீரரும், சண்டையிடப் பயிற்றுவிக்கப்பட்டவர்களும், கேடயமும் ஈட்டியும் பயன்படுத்தத் தெரிந்தவர்களுமாய் இருந்தார்கள். இவர்கள் சிங்கம் போன்ற முகத்தை உடையவர்களும் மலையில் வாழும் மானைப்போல் வேகமாக ஒடக்கூடியவர்களுமாவர். அவர்கள் பெயர்களாவன: \b \li1 \v 9 பிரதான தலைவனான எத்சேர், \li1 இரண்டாவது ஒபதியா, மூன்றாவது எலியாப், \li1 \v 10 நான்காவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா, \li1 \v 11 ஆறாவது அத்தாயி, ஏழாவது எலியேல், \li1 \v 12 எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சபாத், \li1 \v 13 பத்தாவது எரேமியா, பதினோராவது மக்பன்னாயி. \b \p \v 14 காத்தியரான இவர்கள் படைத்தளபதிகளாய் இருந்தவர்கள்; இவர்களில் சிறியவன் நூறுபேருக்கும், பெரியவன் ஆயிரம்பேருக்கும் நிகராயிருந்தான். \v 15 யோர்தான் நதிக்கரை புரண்டோடும் முதலாம் மாதத்தில் அதைக் கடந்துவந்து, மேற்கிலும் கிழக்கிலும் பள்ளத்தாக்குகளிலும் வாழ்ந்துவந்த யாவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே. \p \v 16 பென்யமீன் மக்களிலிருந்தும், யூதா மக்களிலிருந்தும் சிலர் அரணான இடத்தில் இருந்த தாவீதிடம் வந்தனர். \v 17 தாவீது வெளியில் வந்து அவர்களைச் சந்தித்து அவர்களிடம், “நீங்கள் எனக்கு உதவி செய்வதற்காக சமாதானத்துடன் வந்தீர்களானால் நான் உங்களுடன் சேர ஆயத்தமாயிருக்கிறேன். ஆனால் நான் வன்செயல்களில் இருந்து விலகியிருக்கும்போது, என்னை என் எதிரிகளிடம் காட்டிக்கொடுக்க வந்தால், நம்முடைய முற்பிதாக்களின் இறைவன் அதைப் பார்த்து உங்களை நியாயந்தீர்பாராக” என்றான். \p \v 18 அப்பொழுது முப்பதுபேரில் ஒருவனும் தலைவர்களில் ஒருவனுமான அமசாயிற்கு இறைவனின் ஆவியானவர் வந்ததினால் அவன் சொன்னதாவது: \q1 “தாவீதே, நாங்கள் உன்னுடையவர்கள்; \q2 ஈசாயின் மகனே, நாங்கள் உன்னுடனே இருக்கிறோம். \q1 வெற்றி! உனக்கே வெற்றி! \q2 உனக்கு உதவி செய்பவர்களுக்கும் வெற்றி! \q3 உனது இறைவன் உனக்கு உதவி செய்வார்.” \p எனவே தாவீது அவர்களை ஏற்றுக்கொண்டு தன் அதிரடிப் படைகளுக்கு தலைவர்களாக்கினான். \p \v 19 தாவீது பெலிஸ்தியருடன் சேர்ந்து சவுலுக்கெதிராகச் சண்டையிடப் போகையில், மனாசேயின் மனிதர்களில் சிலரும் வந்து சேர்ந்துகொண்டார்கள். ஆனால் தாவீதும் அவனுடைய மனிதரும் பெலிஸ்தியருக்கு உதவிசெய்யவில்லை. ஏனெனில் பெலிஸ்தியர்களின் தலைவர்கள் கலந்தாலோசித்து தங்களிடமிருந்து தாவீதை அனுப்பிவிட்டார்கள். “தாவீது தமது தலைவன் சவுலுடன் சேர்ந்துகொண்டால், நமது உயிருக்குத்தான் ஆபத்து” என எண்ணியே அப்படிச் செய்தார்கள். \v 20 பின்பு தாவீது சிக்லாசுக்குப் போகையில் மனாசேயைவிட்டு அவனுடன் சேர்ந்துகொண்ட மனாசேயின் மனிதர்கள்: அத்னாக், யோசபாத், எதியாயேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்தாய் என்பவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் மனாசேயில் ஆயிரம்பேருக்குத் தலைவர்களாயிருந்தனர். \v 21 அவர்களோ எதிரிகளான அதிரடிப் படைகளைத் தாக்குவதற்கு தாவீதுக்கு உதவி செய்தார்கள். அவர்கள் எல்லோரும் தைரியமிக்க வீரர்களும் அவர்களுடைய படையில் தளபதிகளாயும் இருந்தார்கள். \v 22 இவ்வாறு தாவீதின் இராணுவம் இறைவனின் இராணுவத்தைப் போன்று மகா பெரிய இராணுவமாகும் வரைக்கும், நாளுக்குநாள் மனிதர்கள் வந்துசேர்ந்து தாவீதுக்கு உதவினார்கள். \s1 மற்றவர்கள் எப்ரோனில் தாவீதுடன் சேருதல் \li4 \v 23 யெகோவா சொன்னபடி சவுலின் அரசாட்சியை தாவீதுக்கு கொடுப்பதற்காக, எப்ரோனில் இருந்த தாவீதிடம் வந்த இராணுவவீரர்களின் எண்ணிக்கைகள்: \b \li1 \v 24 யூதாவின் மனிதரில் கேடயமும் ஈட்டியும் பிடித்து, போருக்கு வந்தவர்கள் 6,800 பேர்; \li1 \v 25 சிமியோனின் மனிதரில் போருக்கு ஆயத்தமாக வந்த வீரர்கள் 7,100 பேர். \li1 \v 26 லேவியரின் மனிதரில் 4,600 பேர். \v 27 இவர்களுடன் ஆரோன் குடும்பத்தின் தலைவனான யோய்தாவோடு சேர்த்து 3,700 மனிதர்கள் ஆவர். \v 28 அதோடு சாதோக் என்னும் வலிமைமிக்க வாலிபனான வீரனும், அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த இருபத்திரண்டு அதிகாரிகளும் ஆவர். \li1 \v 29 பென்யமீனியரில் சவுலின் குடும்பத்தில் 3,000 மனிதர்கள். அவர்களில் பலர் அதுவரை சவுலின் குடும்பத்திற்கே உண்மையாயிருந்தனர். \li1 \v 30 எப்பிராயீமின் மனிதரில் வலிமைமிக்க வீரர்களும், தங்கள் சொந்த வம்சத்தில் புகழ் பெற்றவர்களும் 20,800 பேர். \li1 \v 31 மனாசேயின் பாதிக்கோத்திரத்து மனிதரில் தாவீதை அரசனாக்குவதற்கு வரும்படி பெயர் குறிக்கப்பட்டவர்கள் 18,000 பேர். \li1 \v 32 இசக்காரின் மனிதரிலிருந்து வந்த தலைவர்கள் 200 பேர். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த உறவினருடன் வந்தார்கள். அவர்கள் காலத்தை விளங்கி இஸ்ரயேல் மக்கள் எதைச் செய்யவேண்டும் என்பதையும் அறிந்திருந்தனர். \li1 \v 33 செபுலோன் மனிதர்களில் போருக்கு ஆயத்தமாக எல்லாவித ஆயுதங்களையும் உபயோகித்து, அணிவகுத்து நிற்க அனுபவம் பெற்றிருந்தவர்களும், அரசன் தாவீதுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தவர்களும் 50,000 பேர். \li1 \v 34 நப்தலியின் மனிதரில் 1,000 அதிகாரிகளும், அவர்களுடன் கேடயமும் ஈட்டியும் வைத்திருக்கும் 37,000 பேரும், \li1 \v 35 தாண் மனிதரில் போருக்கு ஆயத்தமாய் இருந்தவர்கள் 28,600 பேர், \li1 \v 36 ஆசேரின் மனிதர்களில் அனுபவம் வாய்ந்த போர்வீரர்களும், போருக்கு ஆயத்தமாக இருந்தவர்களும் 40,000 பேர். \li1 \v 37 யோர்தானுக்குக் கிழக்கே ரூபன், காத், மனாசேயின் பாதிக்கோத்திரத்து மனிதரில் எல்லாவித ஆயுதங்களையும் தாங்கியவர்கள் 1,20,000 பேர். \b \li4 \v 38 இவர்கள் எல்லோரும் தாவீதின் படையில் பணிசெய்ய தாமாகவே முன்வந்த இராணுவவீரர்கள். \b \p இவர்கள் தாவீதை முழு இஸ்ரயேலரின் அரசனாக்குவதற்காக முழுமனதுடன் எப்ரோனுக்கு வந்தவர்கள். மற்ற இஸ்ரயேல் மக்களும் தாவீதை அரசனாக்குவதற்கு ஒரே மனதுடையவர்களாயிருந்தனர். \v 39 அந்த மனிதர்கள் தாவீதுடன் தங்கி மூன்று நாட்களுக்கு சாப்பிட்டுக் குடித்தனர். அவர்களின் குடும்பத்தினர்களே தேவையான பொருட்களை ஆயத்தம் செய்திருந்தனர். \v 40 அதோடு தூரத்திலிருந்து இசக்கார், செபுலோன், நப்தலி மக்களும் கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், மாடுகள்மேல் உணவு வகைகளை எல்லாம் ஏற்றிக்கொண்டு வந்தனர். மாவு, அத்திப்பழ அடைகள், கொடிமுந்திரிகை வற்றல்கள், திராட்சை இரசம், எண்ணெய் போன்ற உணவு வகைகளுடன் ஆடுமாடுகள், செம்மறியாடுகளும் அதிகமாகக் கொண்டுவரப்பட்டன. அதனால் இஸ்ரயேலில் மகிழ்ச்சியுண்டாயிற்று. \c 13 \s1 உடன்படிக்கைப்பெட்டி \p \v 1 தாவீது தனது ஆயிரம்பேருக்குத் தளபதிகளோடும், நூறுபேருக்குத் தளபதிகளோடும், ஒவ்வொரு அதிகாரிகளோடும் கலந்து ஆலோசனை பண்ணினான். \v 2 பின்பு தாவீது கூடியிருந்த எல்லா இஸ்ரயேலரிடமும், “இது உங்களுக்கு நல்லதாகவும், யெகோவாவாகிய இறைவனின் திட்டமாயும் இருந்தால், இஸ்ரயேல் எங்கும் வாழும் மீதமுள்ள எனது சகோதரர்களை எங்களுடன் வந்து சேரும்படி செய்தி அனுப்புவோம். அவர்களுடன் அவர்களுடைய பட்டணங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழும் ஆசாரியருக்கும், லேவியர்களுக்கும் செய்தி அனுப்புவோம். \v 3 அத்துடன் இறைவனது பெட்டியை திரும்பவும் நம்மிடம் கொண்டுவருவோம். ஏனெனில் சவுலின் ஆட்சிக்காலத்தில் நாம் புறக்கணித்தோம்” என்றான். \v 4 இவை எல்லா மக்களுக்கும் சரியானதாகத் தெரிந்ததால் கூடியிருந்தவர்கள் எல்லோரும் அப்படியே செய்யச் சம்மதித்தார்கள். \p \v 5 எனவே தாவீது கீரியாத்யாரீமிலுள்ள இறைவனது பெட்டியைக் கொண்டுவருவதற்காக எகிப்திலுள்ள சீகார் ஆறுதொடங்கி, லேபோ ஆமாத் வரையுள்ள இஸ்ரயேலின் எல்லா மக்களையும் கூடிவரச் செய்தான். \v 6 கேருபீன்களின் நடுவில் அமர்ந்திருக்கும் யெகோவாவாகிய இறைவனின் பெயர் விளங்கும் பெட்டியை எடுத்து வருவதற்கு, தாவீதும் கூடியிருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் யூதேயாவிலிருந்த கீரியாத்யாரீமுக்கடுத்த பாலாவுக்கு போனார்கள். \p \v 7 ஊசாவும் அகியோவும் வழிகாட்ட அவர்கள் இறைவனின் பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள். \v 8 தாவீதும் எல்லா இஸ்ரயேல் மக்களும் பாடல்களோடும், யாழோடும், மத்தளங்களோடும், கைத்தாளத்தோடும், எக்காளத்தோடும் இறைவனுக்கு முன்பாக தங்கள் முழு பலத்தோடும் பாடிக் கொண்டாடினார்கள். \p \v 9 அவர்கள் கீதோனிலுள்ள சூடடிக்கும் களத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டதினால், ஊசா தனது கையை நீட்டி பெட்டி விழுந்துவிடாதபடி பிடித்தான். \v 10 ஊசா பெட்டியைத் தன் கையினால் தொட்டபடியினால் யெகோவாவின் கோபம் அவனுக்கு எதிராகப் பற்றியெரிந்தது. அதனால் அவர் ஊசாவை அடித்தார். அவன் அந்த இடத்திலே இறைவனுக்கு முன்பாக இறந்தான். \p \v 11 அவ்வாறு யெகோவாவின் கோபம் ஊசாவை அடித்ததினால் தாவீது கோபப்பட்டு, அந்த இடத்திற்கு இந்நாள்வரை வழங்கிவருகிறபடி, பேரேஸ் ஊசா\f + \fr 13:11 \fr*\fq பேரேஸ் ஊசா \fq*\ft என்றால் \ft*\fqa ஊசாவுக்கு எதிரான கோபம் \fqa*\ft எனப்படும்.\ft*\f* என்று பெயரிட்டான். \p \v 12 தாவீது அன்றையதினம் இறைவனுக்குப் பயந்து, “நான் எப்படி இறைவனின் பெட்டியை என்னிடத்திற்குக் கொண்டுவருவேன்” எனக் கூறினான். \v 13 எனவே அவன் பெட்டியைத் தாவீதின் நகரத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. அதற்குப் பதிலாக கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டிற்குக் கொண்டுபோனான். \v 14 இறைவனது பெட்டி ஓபேத் ஏதோமின் குடும்ப இல்லத்தில் மூன்று மாதங்கள் இருந்தது. யெகோவா ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும், அவனுக்குள்ள எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார். \c 14 \s1 தாவீதின் வீடும் குடும்பமும் \p \v 1 தீருவின் அரசன் ஈராம் தாவீதுக்கு ஒரு அரண்மனையைக் கட்டுவதற்காக தச்சர்களோடும், மேசன்மார்களோடும் தூதுவர்களை அனுப்பினான்; கேதுரு மரங்களும் அனுப்பப்பட்டன. \v 2 யெகோவா தன்னை இஸ்ரயேலுக்கு அரசனாக உறுதிப்படுத்தியிருக்கிறார் என்பதையும், தனது மக்களான இஸ்ரயேலுக்காக தனது ஆட்சியை மிகவும் உயர்த்தி மேன்மைப்படுத்தியுள்ளார் என்பதையும் தாவீது அறிந்துகொண்டான். \p \v 3 எருசலேமிலே தாவீது இன்னும் பல பெண்களைத் திருமணம் செய்து, பல மகன்களுக்கும் மகள்களுக்கும் தகப்பனானான். \v 4 எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்: சம்மூவா, ஷோபாப், நாத்தான், சாலொமோன், \v 5 இப்கார், எலிசூவா, எல்பெலேத், \v 6 நோகா, நெப்பேக், யப்பியா, \v 7 எலிஷாமா, பெலியாதா, எலிப்பேலேத். \s1 தாவீது பெலிஸ்தியரை முறியடித்தல் \p \v 8 தாவீது இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டதை பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, அவர்கள் அனைவரும் தங்கள் எல்லா படைப்பலத்தோடும் அவனைத் தேடிச்சென்றார்கள். அதைக் கேள்விப்பட்ட தாவீதோ அவர்களை எதிர்கொள்ள அங்கே போனான். \v 9 அந்நேரத்தில் பெலிஸ்தியர் ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே திடீர் தாக்குதல் செய்ய வந்தார்கள். \v 10 எனவே தாவீது இறைவனிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்க்கப் போகலாமா? அவர்களை எனது கையில் ஒப்புக்கொடுப்பீரா?” எனக் கேட்டான். \p அதற்கு யெகோவா, “போ, அவர்களை நான் உன் கையில் ஒப்படைப்பேன்” எனப் பதிலளித்தார். \p \v 11 எனவே தாவீதும் அவனுடைய மனிதர்களும் பாகால் பிராசீமுக்குப் போனார்கள். அங்கே தாவீது அவர்களை முறியடித்து, “தண்ணீர் மடை திறந்தோடுவதுபோல, என் கைகளினால் இறைவன் என் பகைவரை முறிந்தோடப்பண்ணினார்” எனச் சொன்னான். எனவே அந்த இடம், பாகால் பிராசீம் என அழைக்கப்பட்டது. \v 12 பெலிஸ்தியர் தங்கள் தெய்வங்களை அங்கே கைவிட்டு ஓடிப்போனார்கள். தாவீது அவற்றை சுட்டெரிக்கக் கட்டளையிட்டான். \p \v 13 பெலிஸ்தியர் மீண்டும் வந்து அப்பள்ளத்தாக்கிலே திடீர் தாக்குதல் செய்தார்கள். \v 14 எனவே திரும்பவும் தாவீது இறைவனிடம் விசாரித்து கேட்டபோது இறைவன், “நீ நேரடியாகப் போகாமல் சுற்றிவளைத்து குங்கிலிய மரங்களின் முன்னால் சென்று அவர்களைத் தாக்கு. \v 15 குங்கிலிய மரங்களின் உச்சியில் சலசலக்கும் இரைச்சலைக் கேட்டதும் நீ யுத்தத்திற்கு புறப்படு. ஏனெனில் இறைவன் உனக்கு முன்பாக பெலிஸ்திய படையைத் தாக்குவதற்காக போயிருக்கிறார் என்பதே அந்தச் சத்தத்தின் விளக்கம்” என்றார். \v 16 இறைவன் கட்டளையிட்டபடியே தாவீது செய்தான். அவர்கள் பெலிஸ்திய இராணுவத்தை கிபியோன் தொடங்கி கேசேர்வரை வெட்டி வீழ்த்தினார்கள். \p \v 17 அவ்வாறு தாவீதின் புகழ் எல்லா நாடுகளுக்கும் பரவிற்று. யெகோவா எல்லா மக்களையும் தாவீதுக்குப் பயப்படும்படி செய்தார். \c 15 \s1 பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவருதல் \p \v 1 அதன்பின் தாவீது தனக்கென தாவீதின் நகரத்திலே வீடுகளைக் கட்டினான், அதன்பின் அவன் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கென ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கென ஒரு கூடாரத்தையும் அமைத்தான். \v 2 பின்னர் தாவீது, “லேவியரைத்தவிர வேறு யாரும் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கக்கூடாது. ஏனெனில் யெகோவா தனது உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்காகவும், தனக்கு முன் எப்பொழுதும் பணி செய்தவற்காகவும் அவர்களையே தெரிந்தெடுத்திருக்கிறார்” எனச் சொன்னான். \p \v 3 தாவீது யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைத் தான் ஆயத்தப்படுத்தியிருந்த இடத்திற்கு கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலர் எல்லோரையும் எருசலேமில் ஒன்றுகூட்டினான். \b \li4 \v 4 அத்துடன் தாவீது ஆரோனுடைய, லேவியருடைய சந்ததிகளையும் ஒன்றுகூடும்படி அழைத்தான். \b \li1 \v 5 கோகாத்தின் சந்ததிகளிலிருந்து ஊரியேல் என்னும் தலைவனும், \li2 அவனுடைய உறவினர்கள் 120 பேரும்; \li1 \v 6 மெராரியின் சந்ததிகளில் இருந்து அசாயா என்னும் தலைவனும், \li2 அவனுடைய உறவினர்கள் 20 பேரும்; \li1 \v 7 கெர்சோமின் சந்ததிகளிலிருந்து \li2 யோயேல் என்னும் தலைவனும் அவனுடைய உறவினர்கள் 130 பேரும்; \li1 \v 8 எலிசாபானின் சந்ததிகளிலிருந்து \li2 செமாயா என்னும் தலைவனும் அவனுடைய உறவினர்கள் 200 பேரும்; \li1 \v 9 எப்ரோனின் சந்ததிகளிலிருந்து \li2 எலியேல் என்னும் தலைவனும், அவனுடைய உறவினர்கள் 80 பேரும்; \li1 \v 10 ஊசியேலின் சந்ததிகளிலிருந்து அம்மினதாப் என்னும் தலைவனும், \li2 அவனுடைய உறவினர்கள் 122 பேரும் அங்கு அழைக்கப்பட்டனர். \b \p \v 11 பின்பு தாவீது ஆசாரியர்களாகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியர்களாகிய ஊரியேல், அசாயா, யோயேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்தான். \v 12 அவன் அவர்களிடம், “நீங்கள் லேவிய குடும்பங்களின் தலைவர்கள்; நீங்களும் உங்களுடன் ஒத்த மற்ற லேவியர்களும் உங்களைச் சுத்திகரித்துக்கொண்டு, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை அதற்காக நான் ஆயத்தப்படுத்திய இடத்திற்குக் கொண்டுவாருங்கள். \v 13 முதல்முறை லேவியராகிய நீங்கள் அதைக் கொண்டுவராததினால்தான், எங்கள் இறைவனாகிய யெகோவா தனது கோபத்தை நம்மேல் வரப்பண்ணினார். நாம் முறையான வழியில் எப்படிச் செய்வதென அவரிடம் விசாரியாது போனோம்” என்றான். \v 14 எனவே ஆசாரியர்களும் லேவியர்களும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவதற்காகத் தங்களைத் பரிசுத்தப்படுத்திக் கொண்டார்கள். \v 15 லேவியர்கள் யெகோவாவின் வார்த்தைப்படி, மோசே கட்டளையிட்டவாறு இறைவனின் பெட்டியைத் தாங்கும் கம்புகளைத் தோளில் வைத்துப் பெட்டியைச் சுமந்து வந்தார்கள். \p \v 16 தாவீது லேவியர்களின் தலைவர்களிடம், “உங்கள் சகோதரர்களை வீணை, யாழ், கைத்தாளங்களை இசைப்பதற்கும் மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவதற்கும் பாடகர்களாகவும் நியமியுங்கள்” என்றான். \p \v 17 அதன்படியே லேவியர்கள் யோயேலின் மகன் ஏமானையும், தன் சகோதரரிலிருந்து பெரகியாவின் மகன் ஆசாப்பையும், தங்கள் சகோதரரான மெராரியரிலிருந்து குஷாயாவின் மகன் ஏத்தானையும் நியமித்தார்கள். \v 18 அவர்களோடு அவர்களுடைய சகோதரர்களான சகரியா, யாசியேல், செமிராமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தத்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத் ஏதோம், ஏயேல் என்பவர்களை வரிசையில் வாசல் காவலர்களாக நிறுத்தினார்கள். \p \v 19 பாடகர்களாகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும் வெண்கல கைத்தாளங்களை இசைக்க நியமிக்கப்பட்டார்கள். \v 20 சகரியா, ஆசியேல், செமிராமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் \tl அல்மோத்\tl* என்ற இராகத்தில் யாழ் மீட்டார்கள். \v 21 மத்தத்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத் ஏதோம், ஏயேல், அசசியா என்பவர்கள், “செமனீத்” என்னும் இராகத்தில் யாழ் வாசிக்க நியமிக்கப்பட்டார்கள். \v 22 லேவியரின் தலைவனாயிருந்த கெனானியா பாடகர்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். அவன் மிகவும் தேர்ச்சி பெற்றவனாயிருந்தபடியினால், அவனுக்கு இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. \p \v 23 பெரெகியாவும், எல்க்கானாவும் உடன்படிக்கைப்பெட்டி இருந்த கூடார வாசலைக் காவல்செய்ய நியமிக்கப்பட்டார்கள். \v 24 ஆசாரியர்களாகிய செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் இறைவனின் பெட்டிக்கு முன்னால் எக்காளம் ஊதுவதற்கென நியமிக்கப்பட்டார்கள். ஓபேத் ஏதோமும், எகியாவும்கூட உடன்படிக்கைப் பெட்டிக்கு வாசல் காவலாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். \p \v 25 அப்பொழுது தாவீதும், இஸ்ரயேலர்களின் தலைவர்களும், ஆயிரம்பேரின் தளபதிகளும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து கொண்டுவருவதற்காக மிக மகிழ்ச்சியுடன் சென்றார்கள். \v 26 யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துவந்த லேவியர்களுக்கு இறைவன் உதவியபடியால் அவர்கள் ஏழு காளைகளையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் பலியிட்டனர். \v 27 தாவீதும் பெட்டியைச் சுமக்கும் எல்லா லேவியர்களும், பாடகர்களும், பாடகர் குழுவுக்குப் பொறுப்பான கெனனியாவும் மென்பட்டு மேலங்கியை உடுத்தியிருந்தனர். மெல்லிய நூலினால் நுட்பமாகச் செய்யப்பட்ட உடையை அணிந்திருந்தனர். அதோடு தாவீது நார்பட்டு ஏபோத்தையும் அணிந்திருந்தான். \v 28 இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை, கொம்பு வாத்தியங்களையும், எக்காளங்களையும் ஊதிக்கொண்டும், கைத்தாளங்களினால் ஒலி எழுப்பிக்கொண்டும், யாழையும் வீணையையும் மீட்டுக்கொண்டும் மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு கொண்டுவந்தார்கள். \p \v 29 யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி தாவீதின் நகரத்தினுள் வரும்போது, சவுலின் மகள் மீகாள் ஜன்னலின் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். தாவீது அரசன் நடனமாடி மகிழ்ச்சிக் களிப்புடன் வருவதைக் கண்டபோது அவனைத் தனது இருதயத்தில் இகழ்ந்தாள். \c 16 \s1 பேழைக்குமுன் சேவை \p \v 1 அவர்கள் இறைவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்து, தாவீது அதற்கென அமைத்த கூடாரத்திற்குள் வைத்தார்கள். பின்பு அவர்கள் இறைவனுக்குமுன் தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினார்கள். \v 2 தாவீது தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தி முடித்தபின்பு, அவன் மக்களை யெகோவாவினுடைய பெயரில் ஆசீர்வதித்தான். \v 3 பின்பு அவன் ஒவ்வொரு இஸ்ரயேலின் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியே ஒரு அப்பத்தையும், ஒரு பேரீச்சம்பழ அடையையும், ஒரு திராட்சைப்பழ அடையையும் கொடுத்தான். \p \v 4 தாவீது சில லேவியர்களை யெகோவாவின் பெட்டிக்குமுன் பணிசெய்யவும், வேண்டுதல் செய்யவும், நன்றி செலுத்தவும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைத் துதிப்பதற்குமென நியமித்தான். \v 5 அவர்களுக்கு தலைவனாக ஆசாப்பும், இரண்டாவதாக சகரியாவும், அவனுக்கு அடுத்ததாக ஏயேல், செமிராமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத் ஏதோம், ஏயேல் ஆகியோரும் இருந்தார்கள். இவர்கள் யாழ், வீணை வாசிக்க நியமிக்கப்பட்டார்கள். கைத்தாளம் போடுவதற்காக ஆசாப் நியமிக்கப்பட்டான். \v 6 அத்துடன் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் ஒழுங்காக எக்காளம் ஊதுவதற்காக ஆசாரியர்களான பெனாயாவும், யாகாசியேலும் நியமிக்கப்பட்டார்கள். \p \v 7 அன்றையதினம் தாவீது யெகோவாவுக்கு நன்றி செலுத்தும்படி ஆசாப்பிடமும், அவனுடைய உதவியாளர்களிடமும் முதன்முதலாக கொடுத்த பாடல் இதுவே: \q1 \v 8 யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; \q2 அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள். \q1 \v 9 அவரைப் பாடுங்கள். அவருக்குத் துதி பாடுங்கள்; \q2 அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். \q1 \v 10 அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்; \q2 யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. \q1 \v 11 யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்; \q2 எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள். \b \q1 \v 12 அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், \q2 அவர் கொடுத்த நியாயத்தீர்ப்புகளையும் நினைவிற்கொள்ளுங்கள். \q1 \v 13 அவருடைய ஊழியராம் இஸ்ரயேலின் சந்ததிகளே, \q2 அவர் தெரிந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே, \q1 \v 14 அவரே நமது இறைவனாகிய யெகோவா; \q2 அவரது நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் உள்ளன. \b \q1 \v 15 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருகிறார்; \q2 ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் செய்த வாக்குறுதியையும், \q1 \v 16 ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், \q2 ஈசாக்கிற்கு அவர் இட்ட ஆணையையும் நினைவுகூருகிறார். \q1 \v 17 அவர் அதை யாக்கோபுக்கு ஒரு விதிமுறையாகவும், \q2 இஸ்ரயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி சொன்னதாவது: \q1 \v 18 “உங்களுடைய உரிமைச்சொத்தாக, \q2 கானான் நாட்டை நான் உனக்குக் கொடுப்பேன்.” \b \q1 \v 19 அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாய், \q2 உண்மையிலேயே மிகச் சிலராகவும் வேற்று நாட்டினராகவும் இருந்தபோது, \q1 \v 20 அவர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், \q2 ஒரு அரசிலிருந்து இன்னொரு அரசிற்கும் அலைந்து திரிந்தார்கள். \q1 \v 21 அவர்களை ஒடுக்குவதற்கு அவர் யாரையும் அனுமதிக்கவில்லை; \q2 அவர்களுக்காக அவர் அரசர்களைக் கண்டித்துச் சொன்னதாவது: \q1 \v 22 “நான் அபிஷேகம் செய்தவர்களைத் தொடவேண்டாம்; \q2 என் இறைவாக்கினருக்குத் தீமை செய்யவேண்டாம்.” \b \q1 \v 23 பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், \q2 நாள்தோறும் அவருடைய இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்துங்கள். \q1 \v 24 நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும், \q2 மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள். \b \q1 \v 25 ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; \q2 எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே. \q1 \v 26 நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன; \q2 ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார். \q1 \v 27 மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; \q2 வல்லமையும் மகிழ்ச்சியும் அவரது உறைவிடத்தில் இருக்கின்றன. \b \q1 \v 28 நாடுகளின் குடும்பங்களே, \q2 யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; \q2 யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள். \q1 \v 29 யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; \q2 காணிக்கையை எடுத்துக்கொண்டு அவர்முன் வாருங்கள். \q1 அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள். \q2 \v 30 பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள்; \q2 உலகம் உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசையாது. \b \q1 \v 31 வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்; \q2 அவைகள், “யெகோவா ஆளுகை செய்கிறார்!” என்று நாடுகளுக்குள்ளே சொல்லட்டும். \q1 \v 32 கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும்; \q2 வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்! \q1 \v 33 காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும், \q2 அவை யெகோவாவுக்கு முன்பாக மகிழ்ந்து பாடட்டும், \q2 ஏனெனில் யெகோவா பூமியை நியாயந்தீர்க்க வருகிறார். \b \q1 \v 34 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர். \q2 அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. \q1 \v 35 “இறைவனே, எங்கள் இரட்சகரே, எங்களைக் காப்பாற்றும்; \q2 பிற நாடுகளிடமிருந்து எங்களை விடுவித்து சேர்த்துக்கொள்ளும். \q1 அப்பொழுது நாங்கள் உமது பரிசுத்த பெயருக்கு நன்றி செலுத்தி, \q2 உம்மைத் துதிப்பதில் மேன்மைபாராட்டுவோம்” என்று சொல்லுங்கள். \q1 \v 36 இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு \q2 நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் துதி உண்டாகட்டும். \m அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென், யெகோவாவுக்கு துதி உண்டாவதாக” என்று சொன்னார்கள். \b \p \v 37 பின்பு தாவீது ஆசாப்பையும், அவனுடைய உதவியாளர்களையும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியின் முன்னே, அன்றாட தேவைகளுக்கேற்றபடி ஒழுங்காகப் பணிசெய்யும்படி விட்டான். \v 38 அவர்களோடு சேர்த்து ஓபேத் ஏதோமையும், அவனுடைய உதவியாளர்கள் அறுபத்தெட்டுபேரையும் பணிசெய்யும்படி விட்டான். எதுத்தூனின் மகன் ஓபேத் ஏதோமும் அவனோடு ஓசாவும் வாசல் காவலர்களாக இருந்தார்கள். \p \v 39 தாவீது ஆசாரியன் சாதோக்கையும் அவனுடைய உதவி ஆசாரியர்களையும், கிபியோனிலுள்ள உயர்ந்த மேட்டிலே யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்திற்கு முன்பாக விட்டான். \v 40 இஸ்ரயேலுக்கு யெகோவா எழுதிக்கொடுத்த சட்டத்தின்படியெல்லாம், காலையிலும் மாலையிலும் ஒழுங்காக பலிபீடங்களில் யெகோவாவுக்கு தகன காணிக்கைகளைச் செலுத்தும்படி இவர்கள் எல்லோரையும் விட்டான். \v 41 அவர்களோடு ஏமானும், எதுத்தூனும், பெயரின்படி தெரிந்துகொள்ளப்பட்டு நியமிக்கப்பட்ட மற்றவர்களும், “அவரது அன்பு என்றைக்கும் நிலைத்திருக்கிறது” என்று யெகோவாவுக்கு நன்றி செலுத்தும்படி இருந்தார்கள். \v 42 இறைவனைப் பாடும் பரிசுத்த பாடல்களுக்காக எக்காளங்களையும் கைத்தாளங்களையும் ஒலிக்கவும், மற்ற வாத்தியங்களை மீட்டவும் ஏமானும் எதுத்தூனும் பொறுப்பாக இருந்தார்கள். எதுத்தூனின் மகன்கள் வாசலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். \p \v 43 பின்பு ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள், தாவீது தன் குடும்பத்தை ஆசீர்வதிப்பதற்காக தன் வீட்டிற்குப் போனான். \c 17 \s1 தாவீதுக்கு இறைவனின் வாழ்த்து \p \v 1 தாவீது தன் அரண்மனையில் குடியமர்ந்த பின்பு இறைவாக்கினன் நாத்தானிடம், “நான் கேதுரு மரத்தினால் செய்யப்பட்ட அரண்மனையில் குடியிருக்கிறேன்; யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியோ இன்னும் கூடாரத்தின் கீழேயே இருக்கிறது” என்றான். \p \v 2 அதற்கு நாத்தான் தாவீதிடம், “இறைவன் உன்னோடிருக்கிறபடியால், உன் மனதில் என்ன இருக்கிறதோ நீ அதைச் செய்” என்று சொன்னான். \p \v 3 அன்று இரவே நாத்தானுக்கு இறைவனின் வார்த்தை வந்தது: \pm \v 4 “நீ போய் என் அடியவன் தாவீதிடம் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா சொல்வது இதுவே: நான் குடியிருக்க ஒரு வீட்டைக் கட்டுவது நீ அல்ல. \v 5 நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து அழைத்துவந்த நாளிலிருந்து, இன்றுவரை ஒரு வீட்டில் குடியிருக்கவில்லை. நான் ஒரு கூடாரத்திலிருந்து இன்னொரு கூடாரத்திலும், ஒரு இருப்பிடத்திலிருந்து இன்னொரு இருப்பிடத்திலுமாக மாறிமாறி வசித்தேன். \v 6 நான் இஸ்ரயேல் மக்களுடன் போன இடங்களிலெல்லாம், மக்களை வழிநடத்தும்படி நான் கட்டளையிட்ட இஸ்ரயேலின் தலைவர்கள் யாரிடமாவது, “எனக்கு கேதுரு மரத்தால் ஒரு வீட்டை ஏன் கட்டவில்லை என எப்போதாவது கேட்டதுண்டா?” ’ \pm \v 7 “இப்பொழுது எனது அடியவன் தாவீதிடம் சொல்லவேண்டியதாவது: ‘சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஆளுநனாயிருக்கும்படி வயல்வெளியின் ஆடுகளை மேய்ப்பதிலிருந்தும் உன்னைத் தெரிந்தெடுத்தேன். \v 8 நீ போன இடமெல்லாம் உன்னோடுகூட நான் இருந்தேன். நான் உனது எல்லாப் பகைவர்களையும் உனக்கு முன்பாக வெட்டிப் போட்டேன். இப்பொழுது பூமியிலுள்ள மேன்மையானவர்களின் பெயருக்கு ஒப்பாக உனது பெயரை மேன்மைப்படுத்துவேன். \v 9 அதோடு எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஒரு இடத்தைக் கொடுப்பேன். அந்த இடத்தை தங்களுக்கு சொந்தமாக்கும்படியும், அவர்கள் இனி அலையாமலும் நான் அவர்களை நிலைநாட்டுவேன். தொடக்கத்தில் செய்ததுபோல் கொடியவர்கள் இனி ஒருபோதும் அவர்களை ஒடுக்கமாட்டார்கள். \v 10 இஸ்ரயேல் மக்களுக்கு மேலாக நான் தலைவர்களை நியமித்த காலந்தொடங்கி நடந்ததுபோல, அந்தக் கொடியவர்கள் அவர்களை இனிமேலும் ஒடுக்கமாட்டார்கள். நான் உனது பகைவர்கள் எல்லோரையும் அடக்குவேன். \pm “ ‘அத்துடன், யெகோவாவே உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என அறிவிக்கிறேன்: \v 11 உனது காலம் முடிந்து நீ உனது முற்பிதாக்களுடன் சேரும்போது, உனது சந்ததியில் ஒருவனை எழுப்பி உனது சொந்த மகன் ஒருவனுக்கு உனது அரியணையைக் கொடுப்பேன். நான் அவனுடைய அரசாட்சியை நிலைநிறுத்துவேன். \v 12 அவனே எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; நான் அவனுடைய அரியணையை என்றென்றும் நிலைக்கப்பண்ணுவேன். \v 13 நான் அவனுடைய தகப்பனாயிருப்பேன்; அவன் எனது மகனாயிருப்பான். உனக்குமுன் ஆட்சியிலிருந்தவர்களிடமிருந்து எனது அன்பை அகற்றினதுபோல, நான் எனது அன்பை ஒருபோதும் அவனைவிட்டு அகற்றமாட்டேன். \v 14 நான் அவனை என் ஆலயத்திலும், என் அரசாட்சியிலும் என்றென்றைக்குமாக அமர்த்துவேன்; அவனுடைய அரியணை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.’ ” \p \v 15 இவ்வாறு நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லா வெளிப்படுத்தலின்படியும் தாவீதுக்குச் சொன்னான். \s1 தாவீதின் மன்றாடல் \p \v 16 அப்பொழுது தாவீது அரசன் உள்ளே போய், யெகோவாவுக்கு முன்னால் உட்கார்ந்து சொன்னதாவது: \pm “யெகோவாவாகிய இறைவனே, இதுவரைக்கும் நீர் என்னை வழிநடத்துவதற்கு நான் யார்? எனது குடும்பத்திற்கு என்ன அருகதை உண்டு? \v 17 இறைவனே, உமது பார்வையில் இதுவும் போதாதென்று அடியவனின் குடும்பத்தின் எதிர்காலத்தைப்பற்றியும் பேசியிருக்கிறீர். யெகோவாவாகிய இறைவனே, எல்லா மனிதரிலும் மேன்மையுள்ளவனாக என்னைக் கணித்தீரே. \pm \v 18 “இவ்வாறு உமது அடியவனைக் கனப்படுத்தியதற்கு இதைவிட வேறு எதை தாவீது உமக்குச் சொல்வான்? உமது அடியவனைப்பற்றி உமக்கே தெரியும். \v 19 யெகோவாவே, உமது அடியவனுக்காக உமது திட்டத்தின்படி இப்பெரிய செயலைச் செய்து, இந்த எல்லா மேன்மையான வாக்குத்தத்தங்களையும் தெரியப்படுத்தியிருக்கிறீர். \pm \v 20 “யெகோவாவே, நாங்கள் எங்கள் சொந்த காதுகளால் கேட்டவற்றின்படி உமக்கு இணையானவர் யாரும் இல்லை. உம்மைத்தவிர வேறொரு இறைவனும் இல்லை. \v 21 உமது மக்களாகிய இஸ்ரயேலரைப்போல வேறு யாரும் உண்டோ? இறைவனாகிய நீர், பூமியில் உமக்காக மீட்டுக்கொண்ட இந்த நாட்டைப்போல், வேறு ஒரு நாடு உண்டோ? இந்த மக்களை உமக்கு உரியவர்களாகவும் உமக்கு பெயர் உண்டாகும்படியும் நீர் எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தீர். உமது மக்களுக்கு முன்பாக பிற நாடுகளை வெளியே துரத்தி, ஆச்சரியமும் பயங்கரமுமான அதிசயங்களைச் செய்தீரே. \v 22 நீர் உமது மக்களாகிய இஸ்ரயேலரை என்றென்றும் உமக்குச் சொந்த மக்களாக ஏற்படுத்தினீர். யெகோவாவே! நீரே அவர்களின் இறைவனானீர். \pm \v 23 “இப்பொழுது யெகோவாவே, உம்முடைய அடியானையும், அவன் குடும்பத்தையும் குறித்து நீர் கொடுத்த வாக்குறுதி என்றென்றைக்கும் நிலைப்பதாக. நீர் வாக்களித்தபடியே செய்யும். \v 24 அதனால் அது உறுதிப்பட்டு, உமது பெயர் என்றென்றும் மேன்மை அடைந்திருக்கும். அப்பொழுது மனிதர்கள், ‘இஸ்ரயேலின்மேல் இறைவனாயிருக்கிற சேனைகளின் யெகோவாவே இஸ்ரயேலின் இறைவன்!’ என்று சொல்வார்கள். உமக்கு முன்பாக உமது அடியவனாகிய தாவீதின் குடும்பமும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும். \pm \v 25 “என் இறைவனே, நீரே உமது அடியவனாகிய என்னிடம் ஒரு வீட்டைக் கட்டுவதாக வெளிப்படுத்தினீர். எனவே உமது அடியவன் உம்மிடம் விண்ணப்பம் செய்ய துணிவு கிடைத்தது. \v 26 யெகோவாவே, நீரே இறைவன். நீர் உமது அடியவனுக்கு இந்த நல்ல செயல்களை வாக்களிக்கிறீர். \v 27 இப்பொழுதும் உமது அடியவனின் குடும்பத்தை ஆசீர்வதிக்க நீர் விருப்பங்கொண்டீர். அதனால் உமது பார்வையில் அது தொடர்ந்து இருக்கும். யெகோவாவே இந்த வீட்டை நீர் ஆசீர்வதித்ததால், அது என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்” என தாவீது விண்ணப்பித்தான். \c 18 \s1 தாவீதின் வெற்றிகள் \p \v 1 சிறிது காலத்தின்பின் தாவீது பெலிஸ்தியரை முறியடித்து அவர்களைக் கீழ்ப்படுத்தினான். அவன் பெலிஸ்தியரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த காத் பட்டணத்தையும், அதைச் சேர்ந்த கிராமங்களையும் கைப்பற்றினான். \p \v 2 அதோடு தாவீது மோவாபியரையும் தோற்கடித்தான். எனவே அவர்கள் தாவீதின் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டு காணிக்கை செலுத்திவந்தார்கள். \p \v 3 மேலும் சோபாவின் அரசன் ஆதாதேசர் தனது அதிகாரத்தை யூப்ரட்டீஸ் நதி பிரதேசத்தில் நிலைநாட்ட போனபோது, தாவீது அவனுடன் ஆமாத்வரை போரிட்டான். \v 4 தாவீது அவனிடமிருந்த ஆயிரம் தேர்களையும், ஏழாயிரம் தேர் ஓட்டிகளையும், இருபதாயிரம் காலாட்படையினரையும் கைப்பற்றினான். அவன் நூறு தேர்க்குதிரைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றெல்லாக் குதிரைகளின் பின்தொடை நரம்புகளை வெட்டி முடமாக்கினான். \p \v 5 சோபாவின் அரசன் ஆதாதேசருக்கு உதவும்படி தமஸ்குவைச் சேர்ந்த சீரியர் வந்தபோது, தாவீது அவர்களில் இருபத்திரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டான். \v 6 அவன் தமஸ்குவிலுள்ள சீரியரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் கோட்டை காவலாளர்களை நிறுத்தினான். சீரியர்கள் தாவீதின் ஆட்சிக்குட்பட்டு காணிக்கை செலுத்தினார்கள். இவ்வாறு யெகோவா தாவீது போன இடமெல்லாம் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார். \p \v 7 ஆதாதேசரின் அதிகாரிகளிடமிருந்து தனது தங்கக் கேடயங்களை தாவீது எடுத்து எருசலேமுக்குக் கொண்டுவந்தான். \v 8 ஆதாதேசருக்குச் சொந்தமான திபாத், கூன் பட்டணங்களிலிருந்து தாவீது அதிக அளவு வெண்கலங்களைக் கொண்டுவந்தான். இவற்றிலிருந்துதான் பின்னர் சாலொமோன் வெண்கல பெருந்தொட்டியையும், தூண்களையும், இன்னும் பலரகமான வெண்கலப் பொருட்களையும் செய்தான். \p \v 9 தாவீது சோபாவின் அரசன் ஆதாதேசரின் படையனைத்தையும் முறியடித்த செய்தியை ஆமாத்தின் அரசன் தோயூ கேள்விப்பட்டான். \v 10 அப்பொழுது தாவீது அரசன் ஆதாதேசருடன் சண்டையிட்டு வெற்றிபெற்றமைக்காக, தோயூ அரசன் தன் மகன் அதோராமை தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும்படி அனுப்பினான். எனவே அதோராம் தங்கத்தினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு வந்தான். \p \v 11 தாவீது அரசன் தான் ஏதோமியர், மோவாபியர், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர் ஆகிய எல்லா நாட்டினரிடமிருந்து கொண்டுவந்த வெள்ளியையும் தங்கத்தையும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்தான். அதுபோலவே இந்தப் பொருட்களையும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தான். \p \v 12 செருயாவின் மகன் அபிசாயி உப்புப் பள்ளத்தாக்கிலே பதினெட்டாயிரம் ஏதோமியரை வெட்டிப்போட்டான். \v 13 அவன் ஏதோமிலே காவல் படைகளை நிறுத்தினான். எல்லா ஏதோமியரும் தாவீதுக்குக் கீழ்ப்பட்டு இருந்தார்கள். தாவீது சென்ற இடமெல்லாம் யெகோவா அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார். \s1 தாவீதின் அதிகாரிகள் \p \v 14 தாவீது தனது எல்லா மக்களுக்கும் நீதியும் நியாயமும் செய்து, இஸ்ரயேலர் அனைவரையும் ஆட்சிசெய்தான். \b \li1 \v 15 செருயாவின் மகன் யோவாப் படைகளுக்குத் தலைவனாயிருந்தான்; \li1 அகிலூதின் மகன் யோசபாத் பதிவாளனாயிருந்தான். \li1 \v 16 அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அபிமெலேக்கும் ஆசாரியர்களாய் இருந்தார்கள். \li1 சவிஷா என்பவன் செயலாளராக இருந்தான். \li1 \v 17 யோய்தாவின் மகன் பெனாயா கிரேத்தியருக்கும், பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான். \li1 தாவீதின் மகன்கள் அரசனின் பிரதான அதிகாரிகளாய்\f + \fr 18:17 \fr*\ft ஆசாரியத் தலைவர்களாய் இருந்தார்கள். \+xt 2 சாமு. 8:18\+xt*.\ft*\f* அரசனின் பக்கத்தில் இருந்தார்கள். \c 19 \s1 அம்மோனியருக்கெதிரான சண்டை \p \v 1 சிறிது காலத்திற்கு பின்பு அம்மோனியரின் அரசன் நாகாஸ் இறந்தான். அவனுக்குப்பின் அவன் மகன் அவனுடைய இடத்தில் அரசனானான். \v 2 அப்பொழுது தாவீது, ஆனூனின் தகப்பன் நாகாஸ் எனக்கு தயவு காட்டியதனால் நானும் அவனுக்குத் தயவுகாட்டுவேன் என்று எண்ணினான். எனவே ஆனூனின் தகப்பன் இறந்ததற்கு அனுதாபத்தைத் தெரிவிக்க ஒரு குழுவை அனுப்பினான். \p தாவீதின் மனிதர்கள் அனுதாபச் செய்தியுடன் அம்மோனியரின் நாட்டிற்கு ஆனூனிடம் வந்தார்கள். \v 3 அப்பொழுது அம்மோனியரின் அதிகாரிகள் ஆனூனிடம், “தாவீது இந்த அனுதாபச் செய்தியை அனுப்பி உனது தகப்பனைக் கனப்படுத்துகிறான் என்று நீ நினைக்கிறாயா? இல்லை; இந்த நாட்டை ஆராய்ந்து உளவுபார்த்து இந்நாட்டை கவிழ்க்க அல்லவா இந்த மனிதர்கள் வந்திருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். \v 4 எனவே ஆனூன் தாவீதின் மனிதர்களைப் பிடித்து, அவர்களின் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய உடைகளின் பின்பக்கத்தில், இடுப்பிலிருந்து கீழ்வரையுள்ள பகுதியை கத்தரித்துவிட்டு, அவர்களை அனுப்பிவிட்டான். \p \v 5 அப்பொழுது அவர்களுக்கு நடந்ததை ஒருவன் தாவீதிற்கு அறிவித்தான். அவர்கள் மிகவும் அவமானத்திற்கு உட்பட்டிருந்ததால் அவர்களைச் சந்திக்க தாவீது அரசன் தூதுவரை அனுப்பி, “உங்கள் தாடி வளரும்வரை நீங்கள் எரிகோவில் தங்கியிருந்து, பின்பு திரும்புங்கள்” என்று சொல்லும்படி சொன்னான். \p \v 6 அம்மோனியர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதை உணர்ந்தபோது, ஆனூனும் அம்மோனியரும் மெசொப்பொத்தாமியாவின் வடமேற்குப் பகுதிக்கும், ஆராம் மாக்காவுக்கும், சோபாவுக்கும் தங்களுக்குத் தேர்களையும், தேரோட்டிகளையும் கூலிக்கு அனுப்பும்படி கிட்டத்தட்ட ஆயிரம் தாலந்து நிறையுள்ள வெள்ளியை அனுப்பிவைத்தார்கள். \v 7 அவ்வாறு அவர்கள் முப்பத்திரண்டாயிரம் தேர்களையும், தேரோட்டிகளையும், மாக்காவின் அரசனையும், அவனுடைய படைகளையும் கூலிக்கு அமர்த்தினார்கள். அவர்கள் மேதேபாவுக்கு அருகே வந்து முகாமிட்டனர். அம்மோனியர்கள் தங்கள் பட்டணங்களிலிருந்து கூட்டமாக திரண்டு போருக்குப் புறப்பட்டார்கள். \p \v 8 இதைக் கேள்விப்பட்ட தாவீது யோவாபையும், போர்த் திறமையுள்ள முழு இராணுவத்தையும் அனுப்பினான். \v 9 அம்மோனியர் வெளியே வந்து தங்கள் பட்டண வாசலில் அணிவகுத்து நின்றனர். அப்பொழுது வந்திருந்த அரசர்களோ நாட்டின் திறந்தவெளியில் ஆயத்தமாக நின்றார்கள். \p \v 10 படைவீரர் தனக்கு முன்னும் பின்னும் அணிவகுத்து நிற்பதை யோவாப் கண்டபோது, அவன் இஸ்ரயேலில் திறமைமிக்க படைவீரர் சிலரைத் தெரிந்தெடுத்து, அவர்களை சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிற்கச் செய்தான். \v 11 மற்ற படைவீரரை தன் சகோதரன் அபிசாயின் தலைமையின்கீழ் அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான். \v 12 பின்பு யோவாப் தன் சகோதரனிடம், “சீரியர் என்னைவிட வலிமைமிக்கவர்களாய் இருந்தால், நீ வந்து என்னைத் தப்புவிக்கவேண்டும். அம்மோனியர்கள் உன்னைவிட வலிமையுடையவர்களாய் இருந்தால், நான் வந்து உன்னைத் தப்புவிப்பேன். \v 13 தைரியமாயிருங்கள், நாம் நமது மக்களுக்காகவும், நமது இறைவனின் பட்டணங்களுக்காகவும் தைரியமாய் போரிடுவோம். யெகோவா தன் பார்வைக்கு நலமானபடி செய்வார்” என்றான். \p \v 14 பின்பு யோவாப்பும் அவனோடிருந்த வீரர்களும் சீரியருடன் போரிட முன்னேறிச் சென்றனர். அவர்கள் இவர்களுக்கு முன்பாகத் தப்பி ஓடினார்கள். \v 15 சீரியர் தப்பியோடுவதை அம்மோனியர் கண்டபோது, அவர்களும் யோவாப்பின் சகோதரன் அபிசாயிக்கு முன்பாக தப்பியோடி பட்டணத்திற்குள் நுழைந்தார்கள். எனவே யோவாப் எருசலேமுக்குத் திரும்பிப்போனான். \p \v 16 தாங்கள் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டதைக் கண்ட சீரியர், யூப்ரட்டீஸ் நதிக்கு அப்புறத்தில் தூதுவர்களை அனுப்பி அங்கிருந்த சீரியரைக் கொண்டுவந்தார்கள். ஆதாதேசரின் படைத்தளபதியாகிய சோப்பாக் அவர்களுக்குத் தலைமை தாங்கினான். \p \v 17 இது தாவீதிற்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரயேலர் எல்லோரையும் ஒன்றுதிரட்டி யோர்தான் நதியைக் கடந்து சென்றான். அங்கே சீரியருக்கு எதிராக முன்னேறி அவர்களின் முன்பாகத் தனது படையை அணிவகுத்து நிறுத்தினான். அவ்வாறு அவன் அணிவகுத்து நிற்கையில் அவர்கள் அவனுக்கெதிராகப் போரிட்டனர். \v 18 ஆனால் சீரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகத் தப்பி ஓடினார்கள்; தாவீது ஏழாயிரம் தேரோட்டிகளையும், நாற்பதாயிரம் காலாட்களையும் கொன்று, அவர்களுடைய படைத்தளபதி சோப்பாக்கையும் கொன்றான். \p \v 19 தாங்கள் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டதைக் கண்ட ஆதாதேசருக்குத் காணிக்கை செலுத்துபவர்கள் தாவீதுடன் சமாதானம்பண்ணி, அவனுக்கு அடிபணிந்தார்கள். \p அதன்பின்பு சீரியர் ஒருபோதும் அம்மோனியருக்கு உதவிசெய்ய விரும்பவில்லை. \c 20 \s1 ரப்பாவைப் பிடித்தல் \p \v 1 அரசர்கள் போருக்குச் செல்லும் வசந்தகாலத்தில் யோவாப் தனது ஆயுதம் தாங்கிய படைக்குத் தலைமை தாங்கிச் சென்றான். அவன் அம்மோனியரின் நாட்டை பாழாக்கி ரப்பாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டான். ஆனால் தாவீது எருசலேமில் இருந்து விட்டான். யோவாப் ரப்பாவைத் தாக்கி அதைப் பாழிடமாக்கினான். \v 2 அவர்களுடைய அரசனின் தலையில் இருந்த கிரீடத்தைத் தாவீது எடுத்துப்போட்டான். அது ஒரு தாலந்து எடையுள்ள தங்கமும், விலையுயர்ந்த மாணிக்கக் கற்களும் பதிக்கப்பட்டதாய் இருந்தது. அது தாவீதின் தலையில் வைக்கப்பட்டது. பட்டணத்திலிருந்து பெருந்தொகையான கொள்ளைப்பொருட்களையும் அவன் கொண்டுவந்தான். \v 3 அவன் அங்கிருந்த மக்களை வெளியே கொண்டுவந்து, அவர்களை வாள்கள், இரும்பு ஆயுதங்கள், கோடரிகள் முதலியவற்றால் வேலைசெய்வதற்கு நியமித்தான். இவ்வாறே தாவீது அம்மோனியரின் எல்லா பட்டணங்களுக்கும் செய்தான். பின்பு தாவீதும் அவனுடைய எல்லாப் படைவீரர்களும் எருசலேமுக்குத் திரும்பினார்கள். \s1 பெலிஸ்தியருடன் யுத்தம் \p \v 4 சில காலத்திற்குபின் கேசேரில் பெலிஸ்தியருடன் யுத்தம் தொடங்கியது; அந்நேரத்தில் ஊஷாத்தியனான சிபெக்காய், அரக்கனான ரெப்பாயீமின் வழித்தோன்றலில் வந்த சிப்பாயி என்பவனைக் கொன்றான். பெலிஸ்தியர்கள் கீழ்படுத்தப்பட்டார்கள். \p \v 5 பெலிஸ்தியருடன் மூண்ட இன்னுமொரு யுத்தத்தில் யாயீரின் மகன் எல்க்கானான், கித்தியனாகிய கோலியாத்தின் சகோதரன் லாகேமியைக் கொலைசெய்தான். லாகேமி வைத்திருந்த ஈட்டியின் பிடியானது நெசவாளர்களின் தடியைப் போலிருந்தது. \p \v 6 அதன்பின்பு காத் என்னுமிடத்திலும் இன்னுமொரு யுத்தம் மூண்டது. அங்கே மிகப்பெரிய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய கைகளிலும், கால்களிலும் ஆறு, ஆறு விரல்களாக மொத்தம் இருபத்து நாலு விரல்கள் இருந்தன. அவனும் ரப்பாவின் அரக்க சந்ததியைச் சேர்ந்தவன். \v 7 இவன் இஸ்ரயேலை நிந்தித்தபோது, தாவீதின் சகோதரனான சிமெயாவின் மகன் யோனத்தான் அவனைக் கொலைசெய்தான். \p \v 8 இவர்களும் காத் என்னும் இடத்தில் இருந்த ரப்பாவின் இராட்சத சந்ததியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தாவீதின் கையினாலும் அவனுடைய மனிதர்களின் கைகளினாலும் கொல்லப்பட்டார்கள். \c 21 \s1 சண்டையிடும் மனிதர்களைத் தாவீது கணக்கெடுத்தல் \p \v 1 சாத்தான் இஸ்ரயேலருக்கு எதிராக எழும்பி, இஸ்ரயேலரைக் கணக்கிடும்படி தாவீதைத் தூண்டினான். \v 2 எனவே தாவீது யோவாபிடமும், படைத் தலைவர்களிடமும், “நீங்கள் போய் பெயெர்செபா தொடங்கி தாண்வரை இருக்கும் இஸ்ரயேலரைக் கணக்கிடுங்கள். எத்தனைபேர் அங்கேயிருக்கிறார்கள் என்பதை நான் அறிந்துகொள்வதற்காக எனக்கு அதை அறிவியுங்கள்” என்றான். \p \v 3 ஆனால் யோவாப் அவனிடம், “யெகோவா தனது இராணுவவீரரை இப்போது இருப்பதைவிட நூறுமடங்காகப் பெருகச்செய்வாராக. என் தலைவனாகிய அரசனே, அவர்கள் எல்லோரும் எனது தலைவரின் குடிமக்கள் அல்லவா? எனது தலைவர் ஏன் இதைச் செய்ய விரும்புகிறீர்? இஸ்ரயேலின்மேல் இந்தக் குற்றப்பழியை ஏன் கொண்டுவருகிறீர்?” என்று பதிலளித்தான். \p \v 4 ஆனால் அரசனின் வார்த்தையோ யோவாப்பை மேற்கொண்டது. எனவே யோவாப் அவ்விடத்தை விட்டுப்போய் இஸ்ரயேல் முழுவதும் சுற்றித்திரிந்து எருசலேமுக்குத் திரும்பிவந்தான். \v 5 யோவாப் தாவீதிடம் போர்செய்யும் வீரர்களின் எண்ணிக்கையைத் தெரிவித்தான். இஸ்ரயேலில் வாளேந்தும் வீரர்கள் பதினொரு இலட்சம்பேரும், யூதாவில் நாலு இலட்சத்து எழுபதாயிரம்பேரும் இருந்தனர். \p \v 6 அரசனின் கட்டளை யோவாபுக்கு வெறுப்பூட்டியதனால், அவன் லேவியரையும், பென்யமீனியரையும் கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளவில்லை. \v 7 இக்கட்டளை இறைவனுக்கு ஏற்காததாய் இருந்தபடியால் அவர் இஸ்ரயேலைத் தண்டித்தார். \p \v 8 அப்பொழுது தாவீது இறைவனிடம், “நான் இதைச் செய்தபடியால் பெரும் பாவம் செய்தேன். இப்பொழுதும் உமது அடியவனின் இந்தக் குற்றத்தை நீக்கிவிடும். நான் மகா புத்தியீனமான செயலைச் செய்தேன்” என மன்றாடினான். \p \v 9 யெகோவா தாவீதின் தரிசனக்காரனான காத்திடம், \v 10 “நீ போய் தாவீதிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: நான் உனக்கு மூன்று காரியங்களை உனக்குமுன் வைக்கிறேன். நான் உனக்கு எதிராகச் செயல்படுத்தும்படி அவற்றில் ஒன்றைத் தெரிந்துகொள்’ என்று சொல்” என்றார். \p \v 11 எனவே காத் தாவீதிடம்போய், “யெகோவா சொல்வது இதுவே: யெகோவா உனக்குமுன் வைக்கும் இந்த மூன்றிலிருந்து ஏதாவது ஒன்றைத் தெரிந்துகொள். \v 12 அதாவது, மூன்று வருடங்கள் பஞ்சம் வரும்; அல்லது மூன்று மாதங்கள் எதிரிகளினால் துரத்தப்பட்டு, அவர்களுடைய வாள் உங்களை மேற்கொள்ளும்; அல்லது மூன்று நாட்கள் யெகோவாவின் வாள், கொள்ளைநோயான இது இஸ்ரயேலின் ஒவ்வொரு பகுதியிலும் யெகோவாவின் வாளேந்தும் தூதனால் அழிவாக வரும். எனவே இப்பொழுது என்னை அனுப்பினவருக்கு நான் பதில்சொல்வதற்கு நீ தீர்மானித்துச் சொல்” என்றான். \p \v 13 தாவீது காத்திடம், “நான் இப்பொழுது பெரிய இக்கட்டில் அகப்பட்டிருக்கிறேன்; யெகோவா மிகவும் இரக்கமுடையவராகையால் நான் அவர் கையில் சரணடைவதையே விரும்புகிறேன். நான் மனிதர் கையில் விழாமல் இருக்கவேண்டும்” என்றான். \p \v 14 எனவே யெகோவா இஸ்ரயேலில் கொள்ளைநோயை வரப்பண்ணினார். அதனால் எழுபதாயிரம் இஸ்ரயேல் மக்கள் இறந்தனர். \v 15 அதோடு எருசலேமையும் அழிப்பதற்கு இறைவன் ஒரு தூதனை அனுப்பினார். ஆனாலும் தூதன் அழிக்கத் தொடங்கினவுடனேயே அவர்களுக்கேற்பட்ட அந்த பேரழிவைக்கண்டு யெகோவா மனதுருகினார். எனவே யெகோவா அழிக்கும் தூதனிடம், “போதும்! உன் கையை எடு” என்று சொன்னார். அப்பொழுது யெகோவாவினுடைய தூதன் எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்தில் நின்றான். \p \v 16 தாவீது மேலே பார்த்தபோது, யெகோவாவின் தூதன் தனது உருவிய வாளை எருசலேமுக்கு மேலாக நீட்டியபடி, வானத்திற்கும் பூமிக்கும் இடையில் நிற்கக் கண்டான். அப்பொழுது தாவீதும், முதியவர்களும் துக்கவுடை உடுத்தி, யெகோவாவுக்குமுன் தரையில் முகங்குப்புற விழுந்தனர். \p \v 17 தாவீது இறைவனிடம், “இராணுவவீரரைக் கணக்கிடும்படி கட்டளையிட்டவன் நான் அல்லவா? செய்யத்தகாததைச் செய்து பாவம் செய்தவன் நான்தானே! இந்த ஆடுகள் செய்தது என்ன? என் இறைவனாகிய யெகோவாவே, உம்முடைய கை எனக்கும் என் குடும்பத்திற்கும் விரோதமாய் இருக்கட்டும். இந்தக் கொள்ளைநோய் உமது மக்கள்மேல் இராதபடி செய்யும்” என மன்றாடினான். \s1 தாவீது ஒரு பலிபீடத்தை உருவாக்குதல் \p \v 18 அப்பொழுது யெகோவாவின் தூதன், எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்திற்குப் போய் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி தாவீதுக்கு சொல் என காத்திற்குக் கட்டளையிட்டார். \v 19 எனவே யெகோவாவின் பெயரால் காத் கூறியவற்றிக்குத் தாவீது கீழ்ப்படிந்தான். \p \v 20 அந்நேரத்தில் ஒர்னான் கோதுமையை சூடடித்துக் கொண்டிருந்தான். ஒர்னான் திரும்பிப் பார்த்தபோது தூதனைக் கண்டான்; அவனோடிருந்த அவனுடைய நான்கு மகன்களும் ஒளிந்துகொண்டனர். \v 21 தாவீது தன்னிடம் வருவதை ஒர்னான் கண்டபோது, உடனே அவன் சூடடிக்கும் களத்தை விட்டுப்போய் தாவீதுக்கு முன்னால் முகங்குப்புற விழுந்து வணங்கினான். \p \v 22 தாவீது ஒர்னானிடம், “கொள்ளைநோய் மக்களைவிட்டு நீங்கும்படியாக, நான் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டுவதற்கு உன்னுடைய சூடடிக்கும் களத்தை கொடு. அதன் முழு விலையையும் நான் உனக்குத் தருகிறேன்” என்றான். \p \v 23 அதற்கு ஒர்னான் தாவீதிடம், “எனது தலைவனாகிய அரசர் அதை எடுத்து அவரது விருப்பப்படியெல்லாம் செய்வாராக. நான் தகனபலிக்குக் காளையையும், விறகிற்கு மரத்தாலான சூடடிக்கும் உருளைகளையும், தானிய காணிக்கைக்காக கோதுமையையும் தருவேன். இவை எல்லாவற்றையும் நான் தருவேன்” என்றான். \p \v 24 ஆனால் தாவீது அரசன் ஒர்னானிடம், “அப்படியல்ல, நான் முழு விலையையும் தருவேன். நான் யெகோவாவுக்கு உன்னிடத்திலிருந்து உன்னுடைய எதையும் எடுக்கவோ, நான் செலவு செய்யாமல் ஒரு காணிக்கையைப் பலியிடவோ மாட்டேன்” என்றான். \p \v 25 எனவே, தாவீது அந்த இடத்தின் மதிப்புக்குரிய அறுநூறு சேக்கல் நிறையுள்ள தங்கத்தை ஒர்னானுக்குக் கொடுத்தான். \v 26 அங்கே தாவீது அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதில் யெகோவாவுக்கு தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினான். அவன் யெகோவாவைக் கூப்பிட்டான். அப்போது யெகோவா வானத்திலிருந்து நெருப்பை தகனபலிபீடத்தில் இறங்கப்பண்ணி அவனுக்குப் பதிலளித்தார். \p \v 27 அப்போது யெகோவா தூதனிடம் பேசினார். அவன் தனது வாளை உறையில் போட்டான். \v 28 அந்த நேரத்தில் எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்தில் தனக்கு யெகோவா பதிலளித்ததால், தாவீது அங்கேயே பலிகளைச் செலுத்தினான். \v 29 மோசே பாலைவனத்தில் கட்டிய யெகோவாவின் கூடாரமும், தகன பலிசெலுத்தும் பலிபீடமும் அந்நாட்களில் கிபியோனின் மேட்டில் இருந்தது. \v 30 யெகோவாவின் தூதனின் வாளுக்குத் தாவீது பயந்ததினால், இறைவனிடம் விசாரிக்கும்படி அந்த பலிபீடத்திற்குமுன் போகமுடியவில்லை. \c 22 \p \v 1 அப்பொழுது தாவீது, “யெகோவாவாகிய இறைவனின் ஆலயமும், இஸ்ரயேலுக்கான தகன பலிபீடமும் இருக்கவேண்டிய இடம் இதுவே” என்றான். \s1 ஆலயத்திற்கான ஆயத்தம் \p \v 2 பின்பு தாவீது இஸ்ரயேலில் வாழ்கிற அந்நியர்களை ஒன்றுகூட்டும்படி கட்டளையிட்டு, அவர்களிலிருந்து இறைவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குரிய பொழிந்த கற்களை ஆயத்தப்படுத்துபவர்களை நியமித்தான். \v 3 தாவீது வாசல் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளையும், கீல்களையும் செய்வதற்கு ஏராளமான இரும்பையும், அளவிடமுடியாத வெண்கலத்தையும் சேர்த்துவைத்தான். \v 4 அதோடு தாவீது எண்ணிலடங்கா கேதுரு மரங்களை சேர்த்துவைத்தான். சீதோனியரும், தீரியரும் தாவீதுக்கு இவற்றை ஏராளமாகக் கொண்டுவந்தார்கள். \p \v 5 அப்பொழுது தாவீது, “எனது மகன் சாலொமோன் வாலிபனும் அனுபவமற்றவனுமாய் இருக்கிறான். யெகோவாவுக்காகக் கட்டப்படப்போகும் ஆலயமோ எல்லா நாடுகளின் பார்வையிலும் மிகப் பிரமாண்டமானதாகவும், புகழ் பெற்றதாகவும், மேன்மையுள்ளதாகவும் இருக்கவேண்டும். எனவே அதற்கான ஆயத்தங்களை நான் செய்வேன்” என்றான். அவ்வாறே தாவீது தான் இறப்பதற்கு முன்பு அதிக அளவான ஆயத்தங்களையெல்லாம் செய்துவைத்திருந்தான். \p \v 6 பின்பு அவன் தன் மகன் சாலொமோனை அழைத்து, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான். \v 7 தாவீது சாலொமோனிடம், “என் மகனே, நான் என் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நினைத்திருந்தேன். \v 8 ஆனால் யெகோவாவின் இந்த வார்த்தை எனக்கு வந்தது. ‘நீ பல யுத்தங்களைச் செய்து போர்முனையில் அதிகமான இரத்தத்தைச் சிந்தினாய். எனது பெயருக்கு ஆலயத்தைக் கட்டுவது நீயல்ல. ஏனெனில் என் பார்வையில் பூமியில் நீ அதிக இரத்தத்தைச் சிந்தியிருக்கிறாய். \v 9 ஆனால் உனக்கு ஒரு மகன் பிறப்பான்; அவன் சமாதானமும் அமைதியும் உள்ளவனாய் இருப்பான். நான் எல்லா பகுதிகளிலுமுள்ள பகைவர்களிடமிருந்து அவனுக்கு ஆறுதல் கொடுப்பேன். அவனுடைய பெயர் சாலொமோன் எனப்படும். அவனுடைய ஆட்சிக்காலத்தில் இஸ்ரயேலுக்கு சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவேன். \v 10 அவனே என் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனது மகனாயிருப்பான். நான் அவனுக்குத் தகப்பனாயிருப்பேன். நான் அவனுடைய ஆட்சியின் சிங்காசனத்தை இஸ்ரயேலுக்கு மேலாக என்றென்றும் நிலைத்திருக்கப் பண்ணுவேன்’ என்று என்னிடம் சொன்னார் என்றான். \p \v 11 “இப்பொழுதும் என் மகனே, யெகோவா உன்னோடு இருப்பாராக. அவர் கூறியதுபோல யெகோவாவாகிய உன் இறைவனுக்கு ஆலயத்தைக் கட்டுவதில் நீ வெற்றியடைவாயாக. \v 12 அவர் உன்னை இஸ்ரயேலுக்கு மேலாக ஆளுநனாக நியமிப்பார். அப்போது யெகோவா உனக்கு நீ உன் யெகோவாவாகிய இறைவனின் சட்டங்களைக் கைக்கொள்ளும்படி விவேகத்தையும், அறிவையும் கொடுப்பாராக. \v 13 யெகோவா மோசேயின் மூலம் இஸ்ரயேலுக்குக் கொடுத்த சட்டங்களையும், விதிமுறைகளையும் மிகக் கவனமாக கைக்கொள்வாயானால் உனக்கு வெற்றி கிடைக்கும். திடன்கொண்டு தைரியமாயிரு. பயப்படாதே, கலங்காதே. \p \v 14 “யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவதற்கென நான் ஒரு இலட்சம் தாலந்து நிறையுள்ள தங்கத்தையும், பத்துலட்சம் தாலந்து நிறையுள்ள வெள்ளியையும், ஏராளமான வெண்கலத்தையும், அளவிடமுடியாத இரும்பையும், மரங்களையும், கற்களையும் மிகவும் சிரமத்துடன் ஆயத்தப்படுத்தி வைத்துள்ளேன். அத்துடன் நீயும் வேண்டியதைச் சேர்த்துக்கொள். \v 15 கல் வெட்டுவதற்கும், மேசன் வேலை செய்வதற்கும், தச்சுவேலை செய்வதற்கும் உன்னிடம் தேர்ச்சிபெற்ற தொழில் வல்லுநர்கள் அதிகம்பேர் இருக்கிறார்கள். \v 16 தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றில் கைவேலை செய்யக்கூடிய கைவினைஞர்கள் எண்ணற்றவர்கள் உன்னிடம் இருக்கிறார்கள். இப்பொழுது நீ வேலையைத் தொடங்கு; யெகோவா உன்னோடு இருப்பாராக” என்றான். \p \v 17 பின்னர் தாவீது தனது மகன் சாலொமோனுக்கு உதவிசெய்யும்படி, இஸ்ரயேலின் தலைவர்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான். \v 18 அவன் அவர்களிடம், “உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களோடு இல்லையா? அவர் உங்களுக்கு எல்லாப் பக்கங்களிலும் அமைதியைத் தரவில்லையா? நாட்டின் குடிகளை எனது கையில் ஒப்படைத்துள்ளார். நாடு யெகோவாவுக்கும், அவருடைய மக்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறது. \v 19 உங்கள் இறைவனாகிய யெகோவாவைத் தேடும்படி உங்கள் இருதயத்தையும் ஆத்துமாவையும் இப்பொழுதே அர்ப்பணியுங்கள். இறைவனாகிய யெகோவாவின் பரிசுத்த இடத்தைக் கட்டத் தொடங்குங்கள். அப்பொழுது யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியையும், இறைவனுக்குச் சொந்தமான பரிசுத்த பொருட்களையும் யெகோவாவினுடைய பெயரில் கட்டப்படப்போகும் ஆலயத்திற்குள் கொண்டுவந்து வைக்கலாம்” என்று சொன்னான். \c 23 \s1 லேவியர்கள் \p \v 1 தாவீது வயதுசென்று முதியவனானபோது, தனது மகன் சாலொமோனை இஸ்ரயேலுக்கு அரசனாக்கினான். \p \v 2 அதோடு இஸ்ரயேலரின் எல்லாத் தலைவர்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் ஒன்றுகூட்டினான். \v 3 லேவியர்களுள் முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்கள் எண்ணப்பட்டபோது, அவர்களுடைய எண்ணிக்கை முப்பத்தெட்டாயிரமாயிருந்தது. \v 4 அப்பொழுது தாவீது, “இவர்களில் இருபத்து நாலாயிரம்பேர் யெகோவாவினுடைய ஆலயத்தின் வேலைகளை மேற்பார்வை செய்பவர்களாகவும், ஆறாயிரம்பேர் அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் இருக்கட்டும். \v 5 அதோடு நாலாயிரம்பேர் வாசல் காவலர்களாகவும், மற்ற நாலாயிரம்பேர் நான் யெகோவாவைத் துதிப்பதற்கென செய்துவைத்திருந்த இசைக்கருவிகளுடன் யெகோவாவைத் துதிக்கவும் வேண்டும்” என்றான். \b \li4 \v 6 பின்பு தாவீது லேவியர்களின் மகன்களான கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி அவர்களைக் குழுக்களாகப் பிரித்தான். \s1 கெர்சோனியர் \li1 \v 7 கெர்சோனியரில் \li2 லாதானும் சீமேயியும் இருந்தார்கள். \li1 \v 8 லாதானின் மகன்கள்: \li2 மூத்தவனான யெகியேல், சேத்தாம், யோயேல் ஆகிய மூன்றுபேர். \li1 \v 9 சீமேயியின் மகன்கள்: \li2 செலோமோத், ஆசியேல், ஆரான் ஆகிய மூன்றுபேர்; \li2 இவர்கள் லாதானின் குடும்பங்களில் தலைவர்களாய் இருந்தார்கள். \li1 \v 10 சீமேயியின் மற்ற மகன்கள்: \li2 யாகாத், சீனா, எயூஷ், பெரீயா \li2 ஆகிய இவர்களும் சீமேயியின் நான்கு மகன்கள். \li2 \v 11 இவர்களில் யாகாத் மூத்தவன்; சீசா இரண்டாம் மகன். ஆனால் எயூஷூக்கும், பெரீயாவுக்கும் அதிக மகன்கள் இல்லாதபடியினால் அவர்கள் ஒரே முற்பிதாவின் குடும்பமாகக் கணக்கிடப்பட்டு, ஒரே பொறுப்புகளும் வழங்கப்பட்டன. \s1 கோகாத்தியர் \li1 \v 12 கோகாத்தின் மகன்கள்: \li2 அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர். \li1 \v 13 அம்ராமின் மகன்கள்: \li2 ஆரோன், மோசே. \li2 ஆரோனும், அவனுடைய வழித்தோன்றல்களும் என்றென்றைக்கும் மகா பரிசுத்த இடத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கும், யெகோவாவுக்கு பலியிடுவதற்கும், அவருக்குப் பணிசெய்வதற்கும், அவருடைய பெயரில் ஆசீர்வதிப்பதற்குமென வேறுபிரிக்கப்பட்டனர். \v 14 இறைவனின் மனிதனாகிய மோசேயின் மகன்கள் லேவி கோத்திரத்தோடு சேர்த்துக் கணக்கிடப்பட்டனர். \li1 \v 15 மோசேயின் மகன்கள்: \li2 கெர்சோம், எலியேசர். \li1 \v 16 கெர்சோனின் சந்ததிகள்: \li2 செபுயேல் மூத்தவனாயிருந்தான். \li1 \v 17 எலியேசரின் சந்ததிகள்: \li2 ரெகேபியா மூத்தவன். \li2 எலியேசருக்கு வேறு மகன்கள் இருக்கவில்லை. ஆனால் ரெகபியாவுக்கு அநேகம் மகன்கள் இருந்தனர். \li1 \v 18 இத்சாரின் மகன்கள்: \li2 செலோமித் மூத்தவனாயிருந்தான். \li1 \v 19 எப்ரோனின் மகன்கள்: \li2 யெரியா மூத்தவன், இரண்டாவது அமரியா, \li2 மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம். \li1 \v 20 ஊசியேலின் மகன்கள்: \li2 மூத்த மகன் மீகா, இரண்டாவது மகன் இஷியா. \s1 மெராரியர் \li1 \v 21 மெராரியின் மகன்கள்: \li2 மகேலி, மூஷி. \li1 மகேலியின் மகன்கள்: \li2 எலெயாசார், கீஸ். \li2 \v 22 எலெயாசாருக்கு மகன்கள் இல்லாமலே அவன் இறந்துபோனான். அவனுக்கு மகள்கள் மாத்திரமே இருந்தார்கள். அவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களான கீஸின் மகன்கள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். \li1 \v 23 மூஷியின் மகன்கள்: \li2 மகேலி, ஏதேர், எரேமோத். \b \li4 \v 24 இவர்கள் குடும்பங்களின்படி பிரிக்கப்பட்ட லேவியின் சந்ததிகள். குடும்பத் தலைவர்கள் தனித்தனியே கணக்கிடப்பட்டு, குடும்பப் பட்டியலின்கீழ் பதிவு செய்யப்பட்டார்கள். இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான இவர்கள் யெகோவாவின் ஆலயத்தில் பணிசெய்தனர். \v 25 அப்பொழுது தாவீது, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா தனது மக்களுக்கு அமைதியைக் கொடுத்து எருசலேமில் என்றென்றைக்கும் வசிக்க வந்திருக்கிறார்\f + \fr 23:25 \fr*\ft அல்லது அவர்கள் எருசலேமில் என்றென்றைக்கும் வசிப்பார்கள்.\ft*\f*. \v 26 ஆதலால் லேவியர்கள் இனிமேல் பரிசுத்த வழிபாட்டுக் கூடாரங்களையோ, அதன் பணிக்குப் பயன்படுத்தத் தேவையான பொருட்களையோ தூக்கிச் சுமக்க வேண்டியதில்லை” எனச் சொன்னான். \v 27 தாவீதின் இறுதி அறிவுறுத்தலின்படி கணக்கிடப்பட்ட லேவியர் இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமே. \b \p \v 28 யெகோவாவின் பரிசுத்த ஆலயத்தில் பணிசெய்யும் ஆரோனின் சந்ததிகளுக்கு உதவி செய்வதே, லேவியர்களாகிய இவர்களின் கடமையாயிருந்தது. அவையாவன: வெளிமுற்றத்திற்கும், அருகிலுள்ள அறைகளுக்கும் பொறுப்பாயிருத்தல், இறைவனுடைய ஆலயத்தில் பரிசுத்த பொருட்களை சுத்திகரிப்பதற்கும், மற்றும் அங்கு செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் செய்வதற்கும் பொறுப்பாயிருத்தல், \v 29 அதோடு மேஜையில் வைக்கும் அப்பங்கள், தானிய காணிக்கைக்குத் தேவையான மிருதுவான மாவு, புளிப்பற்ற அப்பங்கள் ஆகியவற்றைப் பிசையவும், சுடவும், நிறுக்கவும், அத்துடன் அதன் தொகையையும், பருமனையும் கவனிப்பதற்கும் பொறுப்பாயிருத்தல். \v 30 அவர்கள் ஒவ்வொருநாள் காலையிலும் யெகோவாவுக்கு நன்றிகூறி துதிக்கவேண்டும். அப்படியே மாலையிலும் செய்யவேண்டும். \v 31 அத்துடன் ஓய்வுநாட்களிலும், அமாவாசை நாட்களிலும் குறிப்பிட்ட பண்டிகை நாட்களிலும் யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளைச் செலுத்தும் போதெல்லாம் அவ்வாறே துதிக்கவேண்டும். அவர்கள் யெகோவாவுக்கு முன்குறிப்பிட்ட எண்ணிக்கையின்படியும், கட்டளைப்படியும் ஒழுங்காக பணிசெய்ய வேண்டும். \p \v 32 எனவே லேவியரான இவர்கள் ஆரோனின் சந்ததிகளான தங்கள் சகோதரர்களின் தலைமையின்கீழ், யெகோவாவின் ஆலயப் பணியில் நியமிக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்திற்கும், மகா பரிசுத்த இடத்திற்கும் பொறுப்புகளைச் செய்தார்கள். \c 24 \s1 ஆசாரியர்களின் பிரிவு \p \v 1 ஆரோனின் மகன்களின் பிரிவுகள் இவையே: \p ஆரோனின் மகன்கள்: நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர். \v 2 நாதாப்பும், அபியூவும் தங்கள் தகப்பன் இறப்பதற்கு முன்னே இறந்துவிட்டார்கள். அவர்களுக்கு மகன்கள் இருக்கவில்லை. அதனால் எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரியர்களாகப் பணிபுரிந்தனர். \v 3 எலெயாசாரின் வழித்தோன்றலான சாதோக்கின் உதவியுடனும், இத்தாமாரின் வழித்தோன்றலான அகிமெலேக்கின் உதவியுடனும் நியமிக்கப்பட்ட பணியைச் செய்வதற்கென, தாவீது அவர்களைப் பிரிவுகளாகப் பிரித்தான். \v 4 இத்தாமாரின் வழித்தோன்றலைவிட எலெயாசாரின் வழித்தோன்றலில் தலைவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். அதற்கேற்ப எலெயாசாரின் சந்ததியிலிருந்து பதினாறுபேர் தங்கள் குடும்பத் தலைவர்களாகவும், இத்தாமாரின் சந்ததியிலிருந்து எட்டுபேர் குடும்பத் தலைவர்களாகவும் பிரிக்கப்பட்டனர். \v 5 எலெயாசாரின் சந்ததியிலும், இத்தாமாரின் சந்ததியிலும் பரிசுத்த இடத்து அலுவலர்களும், இறைவனுக்குப் பணிசெய்யும் அலுவலர்களும் இருந்தபடியால், அவர்களைப் பாரபட்சமின்றி சீட்டுப்போட்டுப் பிரித்தார்கள். \p \v 6 லேவியனும் எழுத்தாளனுமான நெதனெயேலின் மகன் செமாயா அரசன், அதிகாரிகள், ஆசாரியன் சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலேக்கு, ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் குடும்பத் தலைவர்கள் ஆகியோர் முன்பாக அவர்களுடைய பெயர்களைப் பதிவுசெய்தான். எலெயாசாரின் குடும்பத்திலிருந்து ஒருவனும், இத்தாமாரின் குடும்பத்திலிருந்து ஒருவனுமாக சீட்டின் மூலம் மாறிமாறி தெரிவு செய்யப்பட்டனர். \b \li1 \v 7 முதலாவது சீட்டு யோயாரீபுக்கும், \li1 இரண்டாவது யெதாயாவுக்கும், \li1 \v 8 மூன்றாவது ஆரீமுக்கும், \li1 நான்காவது செயோரீமுக்கும் விழுந்தன. \li1 \v 9 ஐந்தாவது சீட்டு மல்கியாவிற்கும், \li1 ஆறாவது மியாமீனுக்கும், \li1 \v 10 ஏழாவது அக்கோத்ஸிற்கும், \li1 எட்டாவது அபியாவிற்கும் விழுந்தன. \li1 \v 11 ஒன்பதாவது சீட்டு யெசுவாவிற்கும், \li1 பத்தாவது செக்கனியாவிற்கும் விழுந்தன. \li1 \v 12 பதினோராவது எலியாசீபிற்கும், \li1 பன்னிரண்டாவது யாக்கீமினுக்கும், \li1 \v 13 பதிமூன்றாவது சீட்டு உப்பாவிற்கும், \li1 பதினான்காவது எசெபெயாபிற்கும் விழுந்தன. \li1 \v 14 பதினைந்தாவது சீட்டு பில்காவிற்கும், \li1 பதினாறாவது இம்மேருக்கும் விழுந்தன. \li1 \v 15 பதினேழாவது சீட்டு ஏசீரினுக்கும், \li1 பதினெட்டாவது அப்சேஸிற்கும் விழுந்தன. \li1 \v 16 பத்தொன்பதாவது சீட்டு பெத்தகியாவிற்கும், \li1 இருபதாவது எகெசெக்கியேலிற்கும் விழுந்தன. \li1 \v 17 இருபத்தோராவது சீட்டு யாகினிற்கும், \li1 இருபத்திரெண்டாவது காமுலிற்கும் விழுந்தன. \li1 \v 18 இருபத்துமூன்றாவது சீட்டு தெலாயாவிற்கும், \li1 இருபத்துநான்காவது மாசியாவிற்கும் விழுந்தன. \b \p \v 19 யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் அவர்கள் போய், பணிசெய்வதற்கான ஒழுங்குமுறை இதுவே: இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அவர்கள் முற்பிதாவான ஆரோனுக்குக் கட்டளையிட்டபடியே, பணிசெய்வதற்கென நியமிக்கப்பட்டார்கள். \s1 மிகுதியாயிருந்த லேவியர்கள் \li4 \v 20 லேவியின் வழித்தோன்றலில் மிகுதியாயிருந்தோர் யாரெனில்: \b \li1 அம்ராமின் மகன்களில் சூபயேல், \li2 சூபயேலின் மகன்களில் எகேதியா, \li1 \v 21 ரெகேபியாவின் மகன்களில் மூத்தவனான இஷியா, \li1 \v 22 இத்சாரியரில் செலெமோத்து, \li2 செலெமோத்தின் மகன்களில் யாகாத், \li1 \v 23 எப்ரோனின் மகன்களில் \li2 மூத்தவன் யெரியா, இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம், \li1 \v 24 ஊசியேலின் மகன்களில் மீகா, \li2 மீகாவின் மகன்களில் சாமீர், \li1 \v 25 மீகாவின் சகோதரன் இஷியா, \li2 இஷியாவின் மகன்களில் சகரியா, \li1 \v 26 மெராரியின் மகன்களில் மகேலி, மூஷி என்பவர்கள் ஆவர். \li2 யாசியாவின் மகன் பேனோவா, \li1 \v 27 மெராரியின் மகன்களில் யாசியாவின் மகன்களிலிருந்து பேனோ, \li2 சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்கள். \li1 \v 28 மகேலியின் மகன்களில் எலெயாசார், இவனுக்கு மகன்கள் இருக்கவில்லை. \li1 \v 29 கீஸின் மகன்களில் யெராமியேல், \li1 \v 30 மூஷியின் மகன்களில் மகேலி, ஏதேர், எரிமோத் என்பவர்கள் ஆவர். \b \li4 இவர்களும் தங்களுடைய குடும்பங்களின்படியே லேவியர்கள் ஆவர். \b \p \v 31 இவர்களும் ஆரோனின் சந்ததிகளான தங்கள் சகோதரர் செய்ததுபோல, அரசன் தாவீது முன்பும், சாதோக்குக்கும், அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களின் குடும்பத் தலைவர்களுக்கும், லேவியருக்கும் முன்பாகத் தங்கள் பணிகளுக்காக சீட்டுப்போட்டார்கள். மூத்த சகோதரனின் குடும்பங்களும், இளைய சகோதரனின் குடும்பங்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டன. \c 25 \s1 பாடகர்கள் \p \v 1 மேலும் தாவீது தனது படைத் தளபதிகளுடன் ஒன்றுசேர்ந்து ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை யாழ், வீணை, கைத்தாளம் ஆகியவற்றை இசைப்பதற்கும், இறைவாக்கு உரைக்கிற பணிக்குமென வேறுபிரித்தான். இந்த பணியைச் செய்த மனிதரின் பெயர் பட்டியல் இதுவே: \b \li1 \v 2 ஆசாப்பின் மகன்களில் \li2 சக்கூர், யோசேப்பு, நெதானியா, அசரேலா என்பவர்கள், ஆசாப்பின் மகன்கள் ஆசாப்பின் மேற்பார்வையின்கீழ் இருந்தனர். இவர்கள் அரசனின் மேற்பார்வையின்கீழ் இறைவாக்கு உரைத்தனர். \li1 \v 3 எதுத்தூனின் மகன்களில் \li2 கெதலியா, செரீ, எஷாயா, சீமேய், அஷாபியா, மத்தத்தியா என்னும் ஆறுபேர் தங்கள் தகப்பன் எதுத்தூனின் மேற்பார்வையின்கீழ் இருந்தனர். இவர்கள் யாழ் மீட்டி நன்றியுடன் யெகோவாவைத் துதித்து இறைவாக்கு உரைத்தனர். \li1 \v 4 ஏமானின் மகன்கள் \li2 புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுயேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பேக்காஷா, மலோத்தி, ஒத்தீர், மகாசியோத் ஆகியோர். \v 5 இவர்கள் எல்லோரும் அரசனின் தரிசனக்காரனான ஏமானின் மகன்கள். இவர்களை இறைவன் தம்மை மகிமைப்படுத்தும்படி, தமது வாக்குத்தத்தத்தின் மூலம் அவனுக்குக் கொடுத்தார். இறைவன் ஏமானுக்கு பதினான்கு மகன்களையும், மூன்று மகள்களையும் கொடுத்தார். \b \p \v 6 இவர்கள் எல்லோரும் யெகோவாவினுடைய ஆலயத்தின் இசைக்காகத் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் யாழ், வீணை, கைத்தாளம் போன்ற இசைக்கருவிகளை மீட்பதற்காக இறைவனுடைய ஆலயப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். \p ஆசாப்பும், எதுத்தூனும், ஏமானும் அரசனின் மேற்பார்வையின்கீழ் இருந்தார்கள். \v 7 இவர்கள் யாவரும் யெகோவாவின் பாடல்களைப் பாடுவதில் பயிற்றுவிக்கப்பட்டவர்களும், திறமைசாலிகளுமாக இருந்தார்கள். தங்கள் உறவினர்களுடன் அவர்கள் இருநூற்று எண்பத்தெட்டுபேராய் இருந்தனர். \v 8 அவர்கள் சிறியவர்கள், பெரியவர்கள், ஆசிரியர், மாணவர்கள் என்ற வேறுபாடின்றி ஒவ்வொருவரும் தங்களுடைய கடமைகளுக்கென சீட்டுப்போட்டார்கள். \b \li1 \v 9 முதலாவது சீட்டு ஆசாபின் வம்சமான யோசேப்பிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 இரண்டாவது சீட்டு கெதலியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கு விழுந்தது. \li1 \v 10 மூன்றாவது சீட்டு சக்கூருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 11 நான்காவது சீட்டு இஸ்ரிக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 12 ஐந்தாவது சீட்டு நெதானியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 13 ஆறாவது சீட்டு புக்கியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 14 ஏழாவது சீட்டு எசரேலாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 15 எட்டாவது சீட்டு எஷாயாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 16 ஒன்பதாவது சீட்டு மத்தனியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 17 பத்தாவது சீட்டு சீமேயிவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 18 பதினோராவது சீட்டு அசாரியேலுக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 19 பன்னிரெண்டாவது சீட்டு அஷாபியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 20 பதிமூன்றாவது சீட்டு சுபயேலிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 21 பதினான்காவது சீட்டு மத்தத்தியாவிற்கும் அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 22 பதினைந்தாவது சீட்டு எரிமோத்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 23 பதினாறாவது சீட்டு அனனியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 24 பதினேழாவது சீட்டு யோஸ்பேக்காஷாவிற்கும் அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 25 பதினெட்டாவது சீட்டு அனானிக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 26 பத்தொன்பதாவது சீட்டு மலோத்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 27 இருபதாவது சீட்டு எலியாத்தாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 28 இருபத்தோராவது சீட்டு ஒத்தீருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 29 இருபத்திரெண்டாவது சீட்டு கிதல்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 30 இருபத்துமூன்றாவது சீட்டு மகாசியோத்திற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \li1 \v 31 இருபத்துநான்காவது சீட்டு ரொமந்தியேசருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. \c 26 \s1 வாசல் காவலர்கள் \li4 \v 1 ஆலய வாசல் காவலர்களின் பிரிவுகள்: \b \li4 கோராகியரிலிருந்து \li1 ஆசாப்பின் மகன்களில் ஒருவனான கோரேயின் மகன் மெஷெலேமியா. \v 2 மெஷெலேமியாவிற்கு மகன்கள் இருந்தார்கள்: \li2 மூத்தவன் சகரியா, இரண்டாவது எதியாயேல், \li2 மூன்றாவது செபதியா, நான்காவது யதனியேல். \li2 \v 3 ஐந்தாவது ஏலாம், ஆறாவது யோகனான், \li2 ஏழாவது எலியோனாய் என்பவர்கள். \li1 \v 4 ஓபேத் ஏதோமுக்கும் மகன்கள் இருந்தார்கள்: \li2 மூத்தவன் செமாயா, இரண்டாவது யெகோசபாத், \li2 மூன்றாவது யோவாக், நான்காவது சாக்கார், \li2 ஐந்தாவது நெதனெயேல், \v 5 ஆறாவது அம்மியேல், \li2 ஏழாவது இசக்கார், எட்டாவது பெயுள்தாயி என்பவர்கள். \li2 ஏனெனில் இறைவன் ஓபேத் ஏதோமை ஆசீர்வதித்திருந்தார். \li1 \v 6 ஓபேத் ஏதோமின் மகன் செமாயாவுக்கும்கூட மகன்கள் இருந்தார்கள். அவர்கள் ஆற்றல்மிக்கவர்களாய் இருந்தபடியால், தங்கள் தகப்பன் குடும்பத்தில் தலைவர்களாயிருந்தனர். \v 7 செமாயாவின் மகன்கள்: \li2 ஒத்னி, ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத் என்பவர்கள். \li2 அவர்களுடைய உறவினர்களான எலிகூ, செமகியா என்பவர்களும் ஆற்றல்மிக்கவர்களாய் இருந்தார்கள். \li4 \v 8 இவர்கள் எல்லோரும் ஓபேத் ஏதோமின் வம்சங்களாயிருந்தார்கள்; இவர்களும் இவர்களது மகன்களும், உறவினர்களும் வேலைசெய்வதற்கு பலமும் ஆற்றலும் உடையவர்களாயிருந்தனர். ஓபேத் ஏதோமின் சந்ததிகள் எல்லாம் அறுபத்திரண்டுபேர். \li4 \v 9 மெஷெலேமியாவுக்கு மகன்களும் உறவினர்களும் எல்லாமாக பதினெட்டுப்பேர் இருந்தார்கள். அவர்களும் ஆற்றல்மிக்க மனிதராயிருந்தார்கள். \b \li1 \v 10 மெராரியனான ஓசாவுக்கும் மகன்கள் இருந்தார்கள்: \li2 மூத்த மகன் சிம்ரி. இவன் முதல் பிறந்தவனல்லாதபோதிலும் அவன் தகப்பன் ஓசா இவனை மூத்தவனாக நியமித்திருந்தான். \li2 \v 11 இரண்டாம் மகன் இல்க்கியா, மூன்றாம் மகன் தெபலியா, \li2 நான்காம் மகன் சகரியா. \li4 ஓசாவின் மகன்களும், அவனுடைய உறவினர்களும் மொத்தம் பதிமூன்றுபேர். \b \li4 \v 12 இந்த வாசல் காவலர்களின் பிரிவினரும், அவர்களுடைய உறவினர்களுக்கிருந்தது போலவே யெகோவாவின் ஆலயத்தில் பணியாற்றும் கடமைகளைத் தலைவர்களுக்கு வழியாகப் பெற்றிருந்தார்கள். \v 13 அவர்களுடைய குடும்பங்களுக்கேற்றவாறு இளைஞர், முதியவர் என்ற வேறுபாடின்றி, ஒவ்வொரு வாசலுக்குமென சீட்டுபோடப்பட்டது. \li1 \v 14 கிழக்கு வாசலுக்குரிய சீட்டு செலேமியாவிற்கு விழுந்தது. \li1 வடக்கு வாசலுக்குரிய சீட்டு அவனுடைய மகனான சகரியாவிற்கு விழுந்தது. அவன் ஞானமுள்ள ஆலோசனை கூறுபவன். \li1 \v 15 தெற்கு வாசலுக்குரிய சீட்டு ஓபேத் ஏதோமிற்கும், பண்டகசாலைக்குரிய சீட்டு அவனுடைய மகன்களுக்கும் விழுந்தன. \li1 \v 16 மேற்கு வாசலுக்குரிய சீட்டும், மேல்தெருவிலுள்ள சலேகேத் வாசலுக்குரிய சீட்டும் சுப்பீமுக்கும், ஓசாவுக்கும் விழுந்தன. \b \li4 வாசல் காவலர்களுக்குரிய இடங்கள் முறைப்படி அடுத்தடுத்து அமைந்திருந்தன. \li1 \v 17 நாள்தோறும் கிழக்கில் ஆறு லேவியர்களும், \li1 வடக்கில் நான்கு லேவியர்களும், \li1 தெற்கில் நான்கு லேவியர்களும் இருந்தனர். \li1 களஞ்சியத்திற்கு ஒரே தடவையில் இரண்டு லேவியர்கள் இருந்தார்கள். \li1 \v 18 மேற்கில் இருந்த முற்றத்தின் வீதியில் நான்கு லேவியர்களும், முற்றத்திற்கு இரண்டு லேவியர்களும் நிறுத்தப்பட்டனர். \b \li4 \v 19 கோராகு, மெராரி ஆகியோரின் வழித்தோன்றல்களிலிருந்து வாசல் காவலர்களின் பிரிவுகள் இவையே. \s1 மற்ற அலுவலர்கள் \p \v 20 அவர்களுடைய உடனொத்த லேவியர்கள் இறைவனின் ஆலயத்திலிருந்த திரவியக் களஞ்சியங்களுக்கும், அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களின் களஞ்சியங்களுக்கும் பொறுப்பாயிருந்தனர். \p \v 21 லாதான் கெர்சோனியரின் சந்ததிகளில் ஒருவன். கெர்சோனியனான லாதானைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள் யெகியேலியும், \v 22 யெகியேலியின் மகன்களான சேத்தாமும், அவன் சகோதரன் யோயேலுமே. அவர்கள் யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சியத்துக்குப் பொறுப்பாயிருந்தார்கள். \b \li4 \v 23 மேலும் அம்ராமியர், இத்சாரியர், எப்ரோனியர், ஊசியேலியரிலிருந்து பொறுப்பு கொடுக்கப்பட்டவர்கள்: \b \li2 \v 24 மோசேயின் மகன் கெர்சோமின் வழித்தோன்றலில் வந்த செபுயேல் என்பவன் திரவிய களஞ்சியங்களுக்குப் பொறுப்பதிகாரியாயிருந்தான். \v 25 எலியேசர் மூலமாய் அவனுக்கிருந்த உறவினர்கள்: எலியேசரின் மகன் ரெகேபியா, அவனுடைய மகன் எஷாயா, அவனுடைய மகன் யோராம், அவனுடைய மகன் சிக்ரி, அவனுடைய மகன் செலோமித் என்பவர்கள். \li2 \v 26 செலோமித்தும், அவனுடைய உறவினர்களும் தாவீது அரசனால் அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களின் களஞ்சியங்களுக்குப் பொறுப்பாயிருந்தனர். இவை குடும்பங்களின் தலைவர்களாயிருந்த ஆயிரம்பேரின் தளபதிகளினாலும், நூறுபேரின் தளபதிகளினாலும், மற்ற தளபதிகளினாலும் அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களும் இருந்தன. \v 27 இவர்கள் போர்க்களத்திலிருந்து கொண்டுவந்த கொள்ளைப்பொருட்களில் சிலவற்றை யெகோவாவின் ஆலயத்தைத் திருத்துவதற்காக அர்ப்பணித்தார்கள். \v 28 இவ்வாறு தரிசனக்காரனான சாமுயேல், கீஷின் மகன் சவுல், நேரின் மகன் அப்னேர், செருயாவின் மகன் யோவாப் ஆகியோரால் அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களும் மற்ற அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களும் செலோமித்தின் பராமரிப்பிலும் அவனுடைய உறவினர்களுடைய பராமரிப்பிலும் இருந்தன. \li2 \v 29 இத்சாரியரைச் சேர்ந்தவர்கள்: \li2 கெனனியாவும், அவனுடைய மகன்களும் ஆலயத்தின் வெளியே வேலைகளைக் கவனிப்பதற்கும், இஸ்ரயேலருக்கு மேலாக நீதிபதிகளாகவும், அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டார்கள். \li2 \v 30 எப்ரோனியரைச் சேர்ந்தவர்கள்: \li2 அஷபியாவும், அவனுடைய உறவினருமாக 1,700 ஆற்றல்மிக்க மனிதர்கள் இருந்தனர். இவர்கள் யோர்தானின் மேற்கேயிருந்த இஸ்ரயேலரில் எல்லா வேலைகளுக்கும், யெகோவாவின் பணிக்கும், அரசனின் பணிக்கும் பொறுப்பாயிருந்தனர். \v 31 எப்ரோனியருக்கு அவர்களுடைய குடும்ப வம்சவரலாற்று பதிவேட்டின்படி யெரியா தலைவனாயிருந்தான். \li2 தாவீதின் அரசாட்சியின் நாற்பதாவது வருடத்தில் பதிவேடுகள் ஆராயப்பட்டன. அப்போது எப்ரோனியர் மத்தியில் கீலேயாத்திலுள்ள யாசேர் என்னும் இடத்தில் ஆற்றல்மிக்க மனிதர்கள் இருப்பதைக் கண்டனர். \v 32 எரியாவுக்கு ஆற்றல்மிக்க குடும்பத் தலைவர்களான உறவினர் 2,700 பேர் இருந்தனர். இவர்களைத் தாவீது அரசன் ரூபனியர், காத்தியர், மனாசேயின் பாதிக்கோத்திரத்தினர் ஆகியோருக்கும், இறைவனோடு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கும், அரசனுடைய விவகாரங்களுக்கும் பொறுப்பாக வைத்தான். \c 27 \s1 படைப் பிரிவுகள் \li4 \v 1 இராணுவப் பிரிவு சம்பந்தமான எல்லாப் பணிகளிலும் அரசனுக்கு உதவிய இஸ்ரயேலரின் பட்டியல் இதுவே: குடும்பத் தலைவர்கள், ஆயிரம்பேரின் தளபதிகள், நூறுபேரின் தளபதிகள், அவர்களின் அதிகாரிகள் அனைவரும் அவரவர் பிரிவின்படி வருடம் முழுவதும் மாதந்தோறும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஒவ்வொரு பிரிவிலும் 24,000 மனிதர்கள் இருந்தனர். அவர்கள்: \b \li1 \v 2 முதலாவது மாதத்திற்குரிய பிரிவுக்கு சப்தியேலின் மகன் யாஷோபியாம் பொறுப்பாளனாய் இருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். \v 3 பேரேஸின் வழித்தோன்றலான இவன், முதலாம் மாதத்துக்குரிய இராணுவ அதிகாரிகளுக்குத் தளபதியாயிருந்தான். \li1 \v 4 இரண்டாம் மாதத்திற்குரிய பிரிவுக்கு அகோகியனான தோதாய் பொறுப்பாளனாயிருந்தான். அந்தப் பிரிவிற்கு மிக்லோத் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். \li1 \v 5 மூன்றாம் மாதத்திற்குரிய பிரிவுக்கு ஆசாரியனான யோய்தாவின் மகன் பெனாயா, இராணுவ தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இவனே முதன்மையானவனாய் இருந்தான். \v 6 மாவீரர்களான முப்பது பேருக்குள்ளும் வலிமை வாய்ந்தவனாகவும், அந்த முப்பது பேருக்கும் தளபதியாகவும் இருந்த பெனாயா இவனே. இவனது மகனான அமிசபாத் அவனுடைய பிரிவிற்கு பொறுப்பாய் இருந்தான். \li1 \v 7 நான்காம் மாதத்திற்குரிய பிரிவுக்கு தளபதியாக யோவாப்பின் சகோதரன் ஆசகேல் இருந்தான். அவனுக்குப்பின் அவனுடைய இடத்தில் அவன் மகன் செபதியா தளபதியாய் இருந்தான். அவர்களுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். \li1 \v 8 ஐந்தாம் மாதத்துக்குரிய பிரிவுக்கு இராணுவ தளபதியாய் இஸ்ராகியனான சம்கூத் இருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். \li1 \v 9 ஆறாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். \li1 \v 10 ஏழாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு எப்பிராயீமைச் சேர்ந்த பெலோனியனான ஏலேஸ் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 பேர்கள் இருந்தார்கள். \li1 \v 11 எட்டாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு சேராரியரைச் சேர்ந்த ஊஷாத்தியனான சிபெக்காயி தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். \li1 \v 12 ஒன்பதாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு பென்யமீனியரைச் சேர்ந்த ஆனதோத்தியனான அபியேசர் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். \li1 \v 13 பத்தாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு சேராரியரைச் சேர்ந்த நெத்தோபாத்தியனான மகராயி தளபதியாயிருந்தான். அங்கே அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தனர். \li1 \v 14 பதினோராம் மாதத்துக்குரிய பிரிவுக்கு எப்பிராயீமியரைச் சேர்ந்த பிரத்தோனியனான பெனாயா தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். \li1 \v 15 பன்னிரண்டாம் மாதத்துக்குரிய பிரிவுக்கு ஒத்னியேல் குடும்பத்திலிருந்து நெத்தோபாத்தியனான எல்தாய் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். \s1 கோத்திரங்களின் அதிகாரிகள் \li4 \v 16 இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு மேலாக இருந்த அதிகாரிகள்: \b \li1 ரூபனியருக்கு சிக்ரியின் மகன் எலியேசர்; \li1 சிமியோனியருக்கு மாக்காவின் மகன் செபத்தியா; \li1 \v 17 லேவியருக்கு கேமுயேலின் மகன் அஷாபியா \li1 ஆரோனுக்கும்: சாதோக்; \li1 \v 18 யூதாவுக்கு தாவீதின் சகோதரருள் ஒருவனான எலிகூ; \li1 இசக்காருக்கு மிகாயேலின் மகன் ஒம்ரி; \li1 \v 19 செபுலோனுக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா; \li1 நப்தலிக்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத்; \li1 \v 20 எப்பிராயீமியருக்கு அசசியாவின் மகன் ஓசெயா; \li1 மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு பெதாயாவின் மகன் யோயேல்; \li1 \v 21 கீலேயாத்திலுள்ள மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு சகரியாவின் மகன் இத்தோ; \li1 பென்யமீனியருக்கு அப்னேரின் மகன் யாசியேல்; \li1 \v 22 தாணுக்கு எரோகாமின் மகன் அசாரியேல். \b \li4 இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு இவர்களே அதிகாரிகளாயிருந்தார்கள். \b \p \v 23 “இஸ்ரயேலரை வானத்து நட்சத்திரங்களைப்போல பெருகப்பண்ணுவேன்” என்று யெகோவா வாக்குக் கொடுத்திருந்தபடியால் தாவீது இருபது வயதும் அதற்குக் கீழ்ப்பட்டவர்களையும் எண்ணிக் கணக்கிடாமல் விட்டுவிட்டான். \v 24 செருயாவின் மகன் யோவாப் கணக்கெடுக்கத் தொடங்கினான். ஆனால் அதை முடிக்கவில்லை. இக்கணக்கெடுப்பினால் இறைவனின் கோபம் இஸ்ரயேலின்மேல் வந்தது. ஆகவே தாவீது அரசனின் வரலாற்றுப் புத்தகத்தில் எடுக்கப்பட்ட கணக்கின் விவரம் குறிக்கப்படவில்லை. \s1 அரசனின் மேற்பார்வையாளர் \li1 \v 25 அரச அரண்மனையின் களஞ்சியங்களுக்கு ஆதியேலின் மகன் அஸ்மாவேத் பொறுப்பாய் இருந்தான். \li1 சுற்றுப்புறங்களிலும், மாவட்டங்களிலும், பட்டணங்களிலும், கிராமங்களிலும், காவற்கோபுரங்களிலும் இருந்த களஞ்சியங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் பொறுப்பாய் இருந்தான். \li1 \v 26 நிலத்தைப் பயிரிடுகிறவர்களான வயல்வெளியின் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் மகன் எஸ்ரி பொறுப்பாய் இருந்தான். \li1 \v 27 ராமாத்தியனான சீமேயி திராட்சைத் தோட்டங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். \li1 திராட்சைத் தோட்டங்களின் விளைச்சலைத் திராட்சைத் தொட்டிகளுக்கு சேர்ப்பதற்கு சிப்மியனான சப்தி பொறுப்பாய் இருந்தான். \li1 \v 28 மேற்கு மலையடிவாரத்தில் இருந்த ஒலிவ தோப்புக்கும், அத்திமரங்களுக்கும், கெதேரியனான பாகால்கானான் பொறுப்பாய் இருந்தான். \li1 ஒலிவ எண்ணெய் விநியோகிப்பதற்கு யோவாஸ் பொறுப்பாய் இருந்தான். \li1 \v 29 சாரோனில் மேயும் மந்தைகளுக்கு சாரோனியனான சித்ராய் பொறுப்பாய் இருந்தான். \li1 பள்ளத்தாக்குகளிலுள்ள மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாப்பாத் பொறுப்பாய் இருந்தான். \li1 \v 30 இஸ்மயேலனான ஓபில் ஒட்டகங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். \li1 கழுதைகளுக்கு மெரொனோத்தியனான எகெதியா பொறுப்பாய் இருந்தான். \li1 \v 31 ஆட்டு மந்தைகளுக்கு ஆகாரியனான யாசீஸ் பொறுப்பாய் இருந்தான். \li4 இவர்கள் எல்லோரும் தாவீது அரசனின் உடைமைகளுக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரிகளாவர். \b \li1 \v 32 தாவீதின் சிறிய தகப்பனான யோனத்தான் தாவீது ராஜாவுக்கு புத்தியுள்ள ஆலோசகராயும், நுண்ணறிவாளராயும், எழுத்தாளராயும் இருந்தான். \li1 அக்மோனியின் மகன் யெகியேல், அரசனுடைய மகன்களைப் பராமரித்தான். \li1 \v 33 அகிதோப்பேல் அரசனின் ஆலோசனைக்காரனாய் இருந்தான். \li1 அர்கியனான ஊசாய் அரசனின் சிநேகிதனாய் இருந்தான். \li4 \v 34 அகிதோப்பேலுக்குப் பிறகு அவனுடைய இடத்தில் பெனாயாவின் மகன் யோய்தாவும், அபியத்தாரும் அரச ஆலோசகர்களாய் இருந்தனர். \li1 யோவாப் அரச படைக்குத் தளபதியாயிருந்தான். \c 28 \s1 ஆலயத்திற்கான தாவீதின் திட்டங்கள் \p \v 1 தாவீது இஸ்ரயேலின் அதிகாரிகள் எல்லோரையும் எருசலேமில் கூடிவரச் செய்தான். கோத்திரங்களின்மேல் அதிகாரிகளாய் இருந்தவர்களையும், அரச இராணுவப் பிரிவுகளின் தளபதிகளையும், ஆயிரம்பேருக்குத் தளபதிகளையும் கூடிவரச் செய்தான். அத்துடன் நூறுபேருக்குத் தளபதிகளையும், அரசனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் உண்டான உடைமைகளுக்கும், வளர்ப்பு மிருகங்களுக்கும் பொறுப்பதிகாரிகளையும், அரண்மனைக்குப் பொறுப்பதிகாரிகளையும் வலிமைமிக்க மனிதர்களையும், தைரியமான வீரர்களையும் கூடிவரச் செய்தான். \p \v 2 அப்பொழுது அரசன் தாவீது எழுந்து நின்று, “எனது சகோதரரே, எனது மக்களே, எனக்கு செவிகொடுங்கள். நான் ஒரு வீட்டைக் கட்டி அதை யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கான தங்குமிடமாகவும், இறைவனின் பாதபடியாகவும் செய்ய என் மனதில் நினைத்திருந்தேன். அதைக் கட்டவேண்டும் என திட்டமிட்டிருந்தேன். \v 3 ஆனால் இறைவன் என்னிடம், ‘என்னுடைய பெயருக்கான ஆலயத்தைக் கட்டுவது நீயல்ல; ஏனெனில் நீ இரத்தம் சிந்திய இராணுவவீரனாயிருக்கிறாய்’ என்றார். \p \v 4 “ஆயினும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா என்றென்றைக்கும் இஸ்ரயேலின் அரசனாயிருக்கும்படி, எனது முழுக் குடும்பத்திலிருந்தும் என்னையே தேர்ந்தெடுத்தார். அவர் யூதாவைத் தலைமையாகத் தெரிந்துகொண்டார். யூதா கோத்திரத்திலிருந்து எனது குடும்பத்தை தெரிந்தெடுத்தார். அதோடு எனது தகப்பனின் மகன்களுக்குள் என்னையே இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாக்க பிரியங்கொண்டார். \v 5 யெகோவா எனக்கு அநேக மகன்களைத் தந்தார். ஆனாலும் அவர்களெல்லோரிலும் எனது மகன் சாலொமோனையே இஸ்ரயேலின்மேல் யெகோவாவினுடைய அரசாட்சியின் அரியணையில் அமரும்படி தெரிந்துகொண்டார். \v 6 அவர் என்னிடம், ‘உனது மகன் சாலொமோனே எனக்கு ஆலயத்தையும், ஆலயமுற்றங்களையும் கட்டப்போகிறவன். ஏனெனில், அவனை நான் எனது மகனாக தெரிந்தெடுத்திருக்கிறேன். நான் அவனுக்குத் தகப்பனாயிருப்பேன். \v 7 அவன் எனது கட்டளைகளையும், சட்டங்களையும் இந்நாட்களில் நடப்பதைப்போல் நடைமுறைப்படுத்துவதில் உறுதியாய் இருந்தால், நான் அவனுடைய ஆட்சியை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்படி செய்வேன்’ என்றார். \p \v 8 “எனவே இப்பொழுது எல்லா இஸ்ரயேலருடைய பார்வையிலும், இறைவனின் சபையின் பார்வையிலும், இறைவனின் செவிகேட்கவும் நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்கிறதாவது: இறைவனாகிய யெகோவாவின் எல்லாக் கட்டளைகளையும் பின்பற்றக் கவனமாய் இருங்கள். அப்பொழுது இந்த நல்ல நாட்டை நீங்கள் உரிமையாக்கி, உங்களுக்குப்பின் உங்கள் வழித்தோன்றலுக்கும் என்றென்றுமான உரிமைச்சொத்தாக விட்டுச்செல்வீர்கள். \p \v 9 “என் மகனாகிய சாலொமோனே, நீ உன் தகப்பனின் இறைவனை ஏற்றுக்கொண்டு, முழு இருதய அர்ப்பணிப்புடனும் முழு மனதுடனும் அவருக்குப் பணிசெய். ஏனெனில், யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்கிறவரும், சிந்தனைகளுக்குப் பின்னுள்ள நோக்கங்களை விளங்கிக்கொள்கிறவருமாய் இருக்கிறார். நீ அவரைத் தேடினால் அவர் உனக்குக் காணப்படுவார். நீ அவரைக் கைவிட்டுவிட்டால், அவரும் உன்னை என்றென்றைக்கும் தள்ளிவிடுவார். \v 10 இப்பொழுதும் யோசித்துப்பார். யெகோவா தமது பரிசுத்த இடமான ஆலயத்தைக் கட்டுவதற்கு உன்னையே தெரிந்தெடுத்திருக்கிறார். மனவுறுதியோடு வேலையைச் செய்” என்றான். \p \v 11 பின்பு தாவீது தன் மகன் சாலொமோனிடம், ஆலயத்தின் முன்மண்டபம், அதற்கான கட்டடங்கள், களஞ்சியங்கள், மேல்பகுதிகள், உள்ளறைகள், பாவநிவிர்த்திக்கான இடம் ஆகியவற்றின் வரைபடங்களைக் கொடுத்தான். \v 12 அத்துடன் யெகோவாவின் ஆலய முற்றங்கள், சூழ உள்ள எல்லா அறைகள், இறைவனின் ஆலயத்தின் அர்ப்பணிப்பு காணிக்கைகளை வைக்கும் திரவியக் களஞ்சியம் போன்றவற்றைக் குறித்து, இறைவனின் ஆவியானவர் தன் மனதில் வெளிப்படுத்திய எல்லா திட்டங்களையும் கொடுத்தான். \v 13 அவன் ஆசாரியர்கள், லேவியர்கள் ஆகியோரின் பிரிவுகளைப்பற்றியும், யெகோவாவின் ஆலயத்தின் பணியின் எல்லா வேலைகளைப்பற்றியும், வழிபாட்டிற்குப் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களைப்பற்றியும் எல்லா அறிவுறுத்தல்களையும் அவனுக்குக் கொடுத்தான். \v 14 பலவிதமான வழிபாடுகளில் பயன்படுத்த தங்கப் பாத்திரங்களுக்குத் தேவையான தங்கத்தின் அளவையும், வெள்ளிப் பாத்திரத்திற்குத் தேவையான வெள்ளியின் நிறையையும் குறிப்பிட்டான்: \v 15 ஒவ்வொரு விளக்கிற்கும் அதன் தாங்கிக்கும் தேவையான தங்கத்தையும் குறிப்பிட்டான். அத்துடன் வெள்ளி விளக்குகளுக்கும் அதன் தாங்கிகளுக்கும் தேவையான வெள்ளியையும் குறிப்பிட்டு ஒவ்வொரு விளக்கின் பாவனைக்கேற்ப கொடுத்தான். \v 16 இறைவனுக்கு அர்ப்பணிக்கும் அப்பங்களை வைக்கும் ஒவ்வொரு மேஜைகளுக்கும் தேவையான தங்கத்தையும் குறிப்பிட்டான். அத்துடன் மேஜைகளுக்குத் தேவையான வெள்ளியையும் குறிப்பிட்டான். \v 17 இன்னும் முள்ளுக் கரண்டிகள், தெளிப்புக் கிண்ணங்கள், பெரிய ஜாடிகள் ஆகியவற்றுக்கு வேண்டிய சுத்தத் தங்கத்தையும், ஒவ்வொரு தங்கப் பாத்திரத்திற்கும் தேவையான தங்கத்தையும் வெள்ளிப் பாத்திரத்திற்குத் தேவையான வெள்ளியையும் குறிப்பிட்டான். \v 18 தூபபீடத்திற்குத் தேவையான சுத்தமான தங்கத்தையும் குறிப்பிட்டான். அத்துடன் யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தங்கள் செட்டைகளை விரித்துப் பாதுகாக்கும் தங்க கேருபீன்களின் தேருக்கான வரைபடத்தையும் கொடுத்தான். \p \v 19 “இவையெல்லாவற்றையும் யெகோவா தமது கரத்தின் எழுத்தாக எனக்குத் தந்திருக்கிறார். அவர் இந்த வரைபடத்தின் எல்லா விவரங்களையும் எனக்கு விளக்கியிருக்கிறார்” என்று தாவீது சொன்னான். \p \v 20 தாவீது தன் மகன் சாலொமோனிடம், “நீ திடன்கொண்டு தைரியத்துடன் இந்த வேலையைச் செய். பயப்படாதே, மனந்தளராதே; என் இறைவனாகிய யெகோவா உன்னோடிருக்கிறார். யெகோவாவின் ஆலயத்தில் வேலைகளெல்லாம் முடியும்வரை அவர் உன்னைக் கைவிடமாட்டார்; நீ அசைக்கப்படவுமாட்டாய். \v 21 இறைவனுடைய ஆலயத்தின் எல்லா வேலைகளுக்கும் ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் பிரிவுகள் ஆயத்தமாக இருக்கின்றன. எல்லாத் தொழிலிலும் திறமையாயிருக்கிற ஆர்வம் உடையவர்கள் எல்லோரும் உனக்கு வேலைகளில் உதவி செய்வார்கள். எல்லா அதிகாரிகளும், எல்லா மக்களும் உனது ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்ப்படிந்து நடப்பார்கள்” என்றும் சொன்னான். \c 29 \s1 ஆலயம் கட்டுவதற்கான அன்பளிப்புகள் \p \v 1 அதன்பின்பு அரசன் தாவீது கூடியிருந்த எல்லா சபையாரிடமும், “இறைவன் தெரிந்துகொண்ட என் மகன் சாலொமோன் வாலிபனும் அனுபவமில்லாதவனுமாய் இருக்கிறான். வேலையோ பெரியது. ஏனெனில், இந்த சிறப்பான கட்டடம் மனிதனுக்கல்ல, இறைவனாகிய யெகோவாவுக்கே. \v 2 நான் எனது இறைவனின் ஆலயம் கட்டுவதற்கு எனது எல்லாச் செல்வங்களிலுமிருந்து தங்க வேலைகளுக்குத் தங்கத்தையும், வெள்ளி வேலைகளுக்கு வெள்ளியும், வெண்கல வேலைகளுக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைகளுக்கு இரும்பையும், மரவேலைகளுக்கு மரத்தையும் கொடுத்திருக்கிறேன். அத்துடன் பதிப்பதற்குத் தேவையான மாணிக்கக் கற்கள், படிகப்பச்சைக் கற்கள், பலநிறம்கொண்ட கற்கள், பளபளப்பான எல்லாவித கற்கள், பளிங்குக் கற்கள் இவை எல்லாவற்றையும் ஏராளமாகக் கொடுத்து வைத்திருக்கிறேன். \v 3 அத்துடன் நான் எனது இறைவனின் ஆலயத்தின்மீது கொண்ட வாஞ்சையினால், இப்பொழுது பரிசுத்த ஆலயத்திற்கென நான் ஏற்கெனவே கொடுத்தவற்றைவிட, எனது சொந்த தங்கமும் வெள்ளியுமான திரவியங்களை அதிகமாகவும், மேலாகவும் இறைவனின் ஆலயத்திற்கென கொடுக்கிறேன். \v 4 ஆயிரம் தாலந்து ஓப்பீரின் தங்கத்தையும், ஏழாயிரம் தாலந்து சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியையும் கட்டடத்தின் சுவரை மூடுவதற்கும், \v 5 அத்துடன் தங்க வேலைக்காகவும், வெள்ளி வேலைக்காகவும், கைவினைஞர் செய்யும் எல்லா வேலைகளுக்காகவும் கொடுக்கிறேன். இப்பொழுதும் உங்களில் யார் யெகோவாவுக்கு அர்ப்பணிக்க ஆயத்தமாயிருக்கிறீர்கள்” என்றான். \p \v 6 அப்பொழுது குடும்பங்களின் தலைவர்களும், இஸ்ரயேல் கோத்திரங்களின் அதிகாரிகளும், ஆயிரம்பேருக்குத் தளபதிகளும், நூறுபேருக்குத் தளபதிகளும் அரசனின் வேலைகளுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகளும் மனப்பூர்வமாகக் கொடுத்தார்கள். \v 7 அவர்கள் இறைவனின் ஆலய வேலைக்கென ஐயாயிரம் தாலந்து\f + \fr 29:7 \fr*\ft அதாவது, சுமார் 190 டன் தங்கம்\ft*\f* தங்கத்தையும், பத்தாயிரம் தங்கக் காசுகளையும், பத்தாயிரம் தாலந்து\f + \fr 29:7 \fr*\ft அதாவது, சுமார் 380 டன் தங்கம்\ft*\f* வெள்ளியையும், பதினெட்டாயிரம்\f + \fr 29:7 \fr*\ft அதாவது, சுமார் 675 டன் தங்கம்\ft*\f* தாலந்து வெண்கலத்தையும் ஒரு இலட்சம் தாலந்து\f + \fr 29:7 \fr*\ft அதாவது, சுமார் 3800 டன் இரும்பு\ft*\f* இரும்பையும் கொடுத்தார்கள். \v 8 அத்துடன் யார் கையில் இரத்தினக் கற்கள் இருந்தனவோ அவர்கள் அவற்றையும் யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சிய பொறுப்பிலுள்ள கெர்சோனியனான யெகியேலிடம் கொடுத்தார்கள். \v 9 தங்கள் தலைவர்கள் அவர்களின் முழு இருதயத்தோடும் தாராளமாய் யெகோவாவுக்குக் கொடுத்ததற்காக அவர்களுடைய மக்கள் சந்தோஷப்பட்டார்கள். தாவீது அரசனும் மிகவும் சந்தோஷப்பட்டான். \s1 தாவீதின் மன்றாட்டு \p \v 10 அங்கிருந்த மக்கள் சபைக்கு முன்னிலையில் தாவீது யெகோவாவைத் துதித்தான். அவன், \q1 “யெகோவாவே, நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் \q2 எங்கள் முற்பிதாவான இஸ்ரயேலின் இறைவனாய் இருப்பவரே, \q2 உமக்கே துதி உண்டாவதாக. \q1 \v 11 யெகோவாவே, மேன்மையும், வல்லமையும், \q2 மகிமையும், மாட்சிமையும், சிறப்பும் உம்முடையதே. \q2 வானத்திலும், பூமியிலும் உள்ள அனைத்தும் உம்முடையதே. \q1 யெகோவாவே! அரசாட்சியும் உம்முடையதே. \q2 நீர் எல்லாவற்றிற்கும் தலைவராக உயர்த்தப்பட்டிருக்கிறீர். \q1 \v 12 செல்வமும், கனமும் உம்மிடமிருந்தே வருகின்றன; \q2 எல்லாவற்றையும் ஆளுபவர் நீரே. \q1 எல்லோரையும் உயர்த்தவும் பெலப்படுத்தவும் \q2 பெலமும் வல்லமையும் உம்முடைய கரங்களிலேயே இருக்கின்றன. \q1 \v 13 எங்கள் இறைவனே, இப்பொழுது உமக்கு நன்றி செலுத்துகிறோம். \q2 உமது மகிமையுள்ள பெயருக்கும் துதி செலுத்துகிறோம். \p \v 14 “இவ்வாறு தாராளமாய் காணிக்கை கொடுக்கும்படி தகுதி உண்டாவதற்கு நான் யார்? எனது மக்கள் யார்? எல்லாம் உம்மிடமிருந்தே வருகின்றன. உமது கரத்திலிருந்து பெற்றதையே உமக்குக் கொடுக்கிறோம். \v 15 நாங்கள் உமக்கு முன்பாக எங்களுடைய முற்பிதாக்களைப் போலவே அந்நியரும், வழிப்போக்கருமாய் இருக்கிறோம். பூமியிலே எங்கள் நாட்கள் எதிர்பார்பற்ற நிழலைப்போல இருக்கிறது. \v 16 யெகோவாவாகிய எங்கள் இறைவனே, உமது பரிசுத்த பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, நாங்கள் ஏராளமாய் கொடுத்திருக்கும் இந்த நிறைவு உமது கரத்திலிருந்தே வருகின்றன; இவை எல்லாம் உமக்கே சொந்தமானவை. \v 17 என் இறைவனே, நீர் இருதயத்தை சோதிக்கிறவர் என்றும், உத்தமத்தில் மகிழ்ச்சிகொள்பவர் என்றும் நான் அறிவேன். இப்பொருட்கள் எல்லாவற்றையும் நான் விருப்பத்துடனும், உண்மையான நோக்கத்துடனும் கொடுத்திருக்கிறேன். இங்கிருக்கும் உமது மக்கள் எவ்வளவு விருப்பத்துடன் கொடுத்தார்கள் என்பதைக் கண்டு மகிழ்ந்தேன். \v 18 எங்கள் முற்பிதாவாகிய ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் ஆகியோரின் இறைவனாகிய யெகோவாவே, உமது மக்களின் உள்ளத்தில் இந்த ஆசையை என்றென்றைக்கும் வைத்திரும். அவர்கள் இருதயத்தை உமக்கு உண்மையுள்ளதாக வைத்திரும். \v 19 எனது மகன் சாலொமோன் உம்முடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும், நியமங்களையும் முழுமனதுடன் செய்யும் எல்லா ஆற்றலைக் கொடும். நான் ஆயத்தம் செய்த, இந்தப் பெரிய ஆலயத்தைக் கட்டும்படி வேண்டிய எல்லாவற்றையும் செய்ய மனப்பக்குவத்தைக் கொடும்.” \p \v 20 அதன்பின்பு தாவீது கூடியிருந்தவர்கள் எல்லோரிடமும், “யெகோவாவாகிய உங்கள் இறைவனைத் துதியுங்கள்” என்றான். எனவே மக்கள் எல்லோரும் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைத் துதித்தார்கள். அவர்கள் யெகோவாவுக்கும், அரசனுக்கும் முன்பாக முகங்குப்புற விழுந்து குனிந்து வணங்கினார்கள். \s1 சாலொமோன் அரசனாக ஏற்றுக்கொள்ளப்படல் \p \v 21 அடுத்தநாள் அவர்கள் யெகோவாவுக்கு பலிகளைச் செலுத்தினர். அதோடு தகன காணிக்கைகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் செம்மறியாட்டுக் கடாக்களையும், ஆயிரம் கடாக்குட்டிகளையும் செலுத்தினர். அத்துடன் பானகாணிக்கையையும், வேறு பலிகளையும் இஸ்ரயேல் அனைவருக்காகவும் செலுத்தினார்கள். \v 22 அந்த நாளிலே அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகப் பெருமகிழ்ச்சியுடன் சாப்பிட்டு குடித்தார்கள். \p அதன்பின் அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகத் தாவீதின் மகன் சாலொமோனை ஆளுநனாய் இருக்கும்படியும், சாதோக்கை ஆசாரியனாக இருக்கும்படியும் இரண்டாம் முறையாக அபிஷேகம்பண்ணி ஏற்றுக்கொண்டார்கள். \v 23 எனவே சாலொமோன் தன் தகப்பன் தாவீதின் இடத்தில் யெகோவாவின் அரியணையில் அரசனாய் அமர்ந்திருந்தான். அவன் செழிப்படைந்தான்; எல்லா இஸ்ரயேலரும் அவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள். \v 24 எல்லா அதிகாரிகளும், செல்வாக்குள்ளவர்களும் தாவீதின் மற்ற எல்லா மகன்களும்கூட அரசன் சாலொமோனுக்கு கீழ்ப்படிவதாக வாக்குக்கொடுத்தனர். \p \v 25 யெகோவா சாலொமோனை எல்லா இஸ்ரயேலரின் பார்வையிலும் மிகவும் உயர்த்தினார். இஸ்ரயேலில் ஒரு அரசனும் முன் ஒருபோதும் பெற்றிருக்காத அரச மகத்துவத்தையும் அவனுக்குக் கொடுத்தார். \s1 தாவீதின் மரணம் \p \v 26 இவ்விதமாக ஈசாயின் மகன் தாவீது இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாயிருந்தான். \v 27 அவன் இஸ்ரயேலை நாற்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். எப்ரோனில் ஏழு வருடமும் எருசலேமில் முப்பத்துமூன்று வருடமும் ஆட்சிசெய்தான். \v 28 அவன் நீடித்த வாழ்வையும், செல்வத்தையும், கனத்தையும் அனுபவித்தவனாக நல்ல முதிர்வயதில் இறந்தான். அவனுடைய இடத்தில் அவன் மகன் சாலொமோன் அரசனாக இருந்தான். \p \v 29 தாவீது அரசனின் ஆட்சிக்காலத்தில் தொடக்கமுதல் முடிவுவரை நடந்த நிகழ்ச்சிகள் யாவும் தரிசனக்காரனான சாமுயேலின் பதிவேடுகளிலும், இறைவாக்கினன் நாத்தானின் பதிவேடுகளிலும், தரிசனக்காரனான காத்தின் பதிவேடுகளிலும் எழுதப்பட்டுள்ளன. \v 30 அத்துடன் அவனுடைய ஆட்சியைப்பற்றிய விபரமும், அவனுடைய வல்லமையும், இஸ்ரயேலையும், மற்ற எல்லா நாட்டு அரசுகளையும் சுற்றியிருந்த சூழ்நிலைகளும் எழுதப்பட்டுள்ளன.